ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by krishnaamma Mon Sep 21, 2020 10:44 pm

First topic message reminder :

திருடனுக்கு கொட்டிய தேள்….செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. ஒரு விழிப்புணைர்வுக்கதை.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

அருணும் அருணாவும் அன்யோன்யமான தம்பதிகள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால் அருணாவைப் பார்த்தால் இரண்டு குழந்தைகள் பெற்றவள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி இளமையாக இருந்தாள், மேலும் தன்னுடைய இளமையைத் தக்கவைத்துக்கொள்ள மெனக்கெடவும் செய்தாள். தான் அழகி என்பதில் கொஞ்சம் கர்வமும் உண்டு அவளுக்கு.

அருணுக்கும் தன் மனைவி அழகி என்பதில் எப்பொழுதுமே கொஞ்சம் கர்வம் உண்டுதான். அதனால் அவன் அவள் தன்னை அழகு படுத்திக்கொள்ள வாங்கும் பொருட்கள் அல்லது அவள் பியூட்டி பார்லர் போவது என்பது போன்ற விஷயங்களில் தலை இடமாட்டான். அவள் தன் சம்பளத்தின் பெரும் பகுதியை தனக்காகவே செலவழிப்பாள், என்றாலும் குடும்பம் நல்லபடியாகவே சென்று கொண்டிருந்தது.

அருண் ஒரு தனியார் கம்பெனியில் மார்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தான். அதனால் அவனால் சம்பளத்தைத்தவிர வேறு விதமாகவும் வருமானம் பார்க்க முடிந்தது. அவளும் வேலை பார்த்து வந்ததால் குடும்பத்தில் பணப்பிரச்சனை எதும் வரவில்லை. இந்த கோவிட் வந்தாலும் வந்தது, எல்லாமே  தலைகீழ் ஆக மாறிப்போனது. ஆம், இந்த கோவிட் நேரத்தில் எத்தனையோ பேருக்கு வேலை போனது போல, இவர்கள் இருவருக்குமே வேலை போய்விட்டது.

வேலை போன நாள் முதலே இருவரும் வேலை தேட ஆரம்பித்தார்கள். வேலை கிடப்பதாக இல்லை. ஏதோ இருந்த சேமிப்பில் சில காலம் ஓடியது. மிகவும் சிரமமாக ஆனதும், குழந்தைகளை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வேலை தேடுவதில் மும்முரமானார்கள். அருண்ஏதாவது தொழில் துவங்கவும் யோசித்தான். ஆனால் அதற்கும் முதல் தேவைப்படுமே….சரி யோசிப்போம், நண்பர்களை கலந்து ஆலோசித்தான். இப்படி ஆளுக்கு ஒரு புறம் அல்லாடினார்கள்.

ஒருவாரம் சென்று இருக்கும், 6 நண்பர்களாக சேர்ந்து ஏதோ புதிதாக செய்யப்போவதாகவும், ஒரிரு மாதங்களில் நல்ல வருமானம் வரும் என்றும் சொன்னான். இவள் என்ன பிஸ்னஸ் என்று கேட்டதற்கு , இப்போதைக்கு ஏதும் சொல்வதற்கு இல்லை, பிறகு சொல்வதாக சொல்லிவிட்டான். அவளும் மேலே அழுத்திக் கேட்க வில்லை. என்றாலும் தான் பாட்டுக்கு எப்பொழுதும் போல வேலை தேடுவதில் மும்முரமாக இருந்தாள்.

அப்போழுதான் அவள் கண்ணில் அந்த விளம்பரம் பட்டது. உடனே போன் செய்தாள். அவர்களும் அவளை மறு நாளே இன்டர்வ்யூக்கு அழைத்தார்கள்.
வெகு நாட்களூக்குப் பிறகு மேக்கப் போட்டுக் கொண்டு, நல்ல புடவை கட்டிக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொண்டு, இவளும் போனாள். அந்த அலுவலகம் ஒரு வீட்டில் இருந்தது. 4 – 5 பேர் ஏற்கனவே காத்திருந்தார்கள். எல்லோருமே இளம் பெண்கள். இவளும் அங்கு சென்று அமர்ந்து கொண்டாள். உள்ளே இருந்தவர்கள் ஒவ்வொருவராக அழைத்தார்கள். இவள் முறை வந்ததும் இவள் உள்ளே போனாள். அங்கு ஒரு இளைஞன் அமர்ந்து இருந்தான்.

தொடரும்............


Last edited by krishnaamma on Tue Sep 29, 2020 8:57 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by krishnaamma Mon Sep 21, 2020 10:55 pm

அருணிடமும் சொல்ல முடியவில்லை, நேரில் வந்துவிட்டாலும் தன்னால் சொல்லமுடியுமா என்கிறது மில்லியன் டாலர் கேள்வியாக மனதை அரித்தது. இன்றும் சுனிலுடன் பேச முடியவில்லை. நாளை எங்கு வரவேண்டும் என்கிற செய்திமட்டுமே வந்தது.

இன்று கண்டிப்பாக அவனைப் பார்க்கமல் திரும்புவது இல்லை , அதுவரை அங்கு போய் எதுவுமே சாப்பிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள். அவனைப்பற்றி எதுவுமே தான் தெரிந்து கொள்ளாதது பற்றி தன்னத்தானே நொந்து கொண்டாள். சட் டென்று ஒரு ஐடியா தோன்றியது அவளுக்கு. சரி, நம்மை இண்டர்வூ செய்த இடத்தில் போய் பார்த்தால் என்ன என்று தோன்றியது. உடனே கிளம்பினாள். போய் பார்த்தால் அங்கு யாரோ குடித்தனம் இருந்தார்கள். அவர்களிடம் இவள் விசாரித்ததில் அது போல இங்கு எந்த இண்டர்வூவும் நடக்கவில்லை என்று சொன்னார்கள். இவள் இல்லை தான் போன வாரம் இங்கு வந்ததாகவும் அப்பொழுது வேறு சில பெண்களும் வந்திருந்தார்கள் எனவும் சொன்னாள். அதற்கு அவர்கள் ஒரே அடியாக மறுத்து, இங்கு தாங்கள் 20 வருடங்களாக குடிருப்பதாக சொன்னர்கள். இது அவளுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் நன்றாகத் திட்டமிட்டுத் தான் அவன் வேலை செய்து இருக்கிறான். இது போல எத்தனை பெண்களை வளைத்துள்ளானோ என்று எண்ணினாள்.

சோர்வுடன் வீடு திரும்பினாள். ஆனாலும் சுனிலுக்கு போன் செய்து பார்ப்பதை விடவில்லை அவள். வந்தவர்களின் முகம் அவளுக்குத்தெரியவே இல்லை.
இன்று அதிசயமாக அவன் போனை எடுத்தான். இவள் ஒரேடியாக அவனைக் கத்தித் தீர்த்தாள். அவன் பொறுமை காத்தான். பிறகு அவன் பேசினான். பேசினானா… அல்லது வார்த்தைகளில் அமிலம் கலந்து ஊற்றினானா என்று அவளால் பிரித்து அறிய முடியவில்லை. அப்படி இருந்தது அவன் பேச்சு, . அதில் காதல் இல்லை, கிறக்கம் இல்லை. இவளை மிரட்டும் விதமாக மிகக் கடுமையக இருந்தது, நக்கலாக இருந்தது. மிகவும் கேவலமாக பேசினான்.

‘என்னவெல்லாம் சொல்லி என்னை வேலைக்கு எடுத்தாய் இப்பொழுது என்னை எப்படி உபயோகிக்கிறாய் என்று கத்தினாள். நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம் எனக்கு. என்று சொன்னாள். நீ மீறி என்னை வற்புறுத்தினால் நான் போலீஸுக்கு போவேன் என்றாள் அவள். அதற்கு அவன் கொஞ்சமும் சளைக்கமல் முதலில் கத்துவதை நிறுத்துடி’ என்று கர்ஜித்தான். நான் சொன்னது போல என் விரல் நுனி கூட உன் மேல் படவில்லை தானே என்று கேட்டான். போலீசுக்கு அப்புறம் போகலாம் முதலில் உன் WHATSAPP க்கு போ என்றான். அப்போழுது தெரியும் உன் வண்டவாளம் என்று அசிங்கமாக சிரித்தான்.

இவள் பதட்டத்துடன் பார்த்தாள். கண்கள் நிலைகுத்திட நின்றாள்

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by krishnaamma Mon Sep 21, 2020 10:56 pm

இவளின் மோசமான போட்டோக்கள் மற்றும் ஒரு 30 செகண்ட் வீடியோவும் இருந்தது அதில். அவர்கள் எல்லோருமே முகமூடி போல போட்டிருந்தார்கள் எனவே இவள் முகம் மட்டுமே தெளிவாகத்தெரிந்தது அந்த வீடியோவில். பார்த்தாயா?...நீ போலீஸுக்கு போ நான் இவை எல்லவற்றையும் நெட் இல் போட்டு காசு பார்த்துக் கொள்கிறேன். என்றான். இவள் முதல் நாள் உடை மாற்றும் போட்டோவில் இருந்து இன்று வந்து போனவர்களுடன் இவள் உறவாடும் போட்டோ வரை இருந்தது.

அந்த இருவருடன் நீ இருக்கும் அந்த சன்விட்ச் போட்டோ தான் டாப் என்றான். நக்கலாக சிரித்தான். உடம்பே கூசியது அவளுக்கு. மிகவும் ஆத்திரம் அடைந்த இவள், சீ, இப்படியெல்லம் ஒரு பிழைப்பா தூ என்று கத்தினாள் அவள். அதை நீ சொல்கிறாயா?, பணம் தருகிறேன் என்றதும் மனைவியாக நடிக்க ஒப்புக்கொண்டவள் தானே நீ?... நானாவது முதல் போட்டேன், அது தான் அந்த ரூம், உன் ட்ரெஸ் எல்லாம். ஆனால் நீ… என்றான்.

நீ அனுபவித்த STAR ஹோட்டல் பில் யார் கட்டுவார்கள், போனாயே சொகுசு கார் ஆடி, அதற்கு யார் பணம் கட்டுவார்கள்?...நீ தானே அந்த கார் ஒனருக்கு நன்றி சொல்ல விரும்பினாய்?..அது தான் ஏற்பாடு செய்தேன் . நீ விருப்பப்பட்ட காரில் உன்னைப் பயணம் செய்ய வைத்தேன், அவர் விரும்பிய உன்னை அவரிடம் அனுப்பினேன். இதில் உங்கள் இருவருக்கும் சந்தோஷம் தானே?.. ஆனால் எனக்கு என்ன?... அதனால் தான் இதை ஏற்பாடு செய்த நான் எனக்கான பீஸை வாங்கிக் கொள்கிறேன். அவ்வளவுதான்.

கணவனுக்கும் குடும்பத்தாருக்கும் தெரியாமல் நீ மனைவியாக நடிக்கலாம் இது மட்டும் கூடாதா?.பெரிய பத்தினி போல பேசுகிறாயே… போடி …நாளை மரியாதையாக காலை கிளம்பி வரும் வழியைப் பார்’ என்று கடினமான குரலில் சொன்னான். இன்னும் 4 நாட்களுக்கு நீ புக் ஆகி இருக்கிறாய். wife Swapping க்கு மரியாதையாக வந்து போ. என்றான். மேலும் சொன்னான், நாளை எங்களின் மாஸ்டர் மைண்ட் வருகிறார், பார்த்து நடந்து கொள்’ என்றான். இல்லாவிட்டால் எப்பொழுதும் போல எதாவது ஒரு ரூபத்தில் மருந்து தர வேண்டி வரும் என்றான்.

wife Swapping ஆ? பாவிகளா… யார் wife ஐ யார் Swapp செய்வது?...இதுக்கு ஒருத்தன் மாஸ்டர் மைண்டாமே, வரட்டும் அந்த ஆள் , இருக்கு அவனுக்கு என்று மனதுக்குள் கறுவினாள். சுத்தமாக அதிர்ந்து போனாள் அவள். கடந்த ஒரு வாரத்தில் என்னவெல்லாம் நடந்துவிட்டது என்று யோசித்து யோசித்து நொந்து போனாள். வழக்கப்படி மறுநாளும் சென்றாள். சோதனையாக டிராபிக்கில் மாட்டிக் கொண்டாள்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by krishnaamma Mon Sep 21, 2020 10:57 pm

அதற்குள் சுனில் இரண்டு முறை போன் செய்துவிட்டான். டிரைவர் சொன்னதும் தான் சமாதானம் ஆனான். ஹோட்டலுக்கு அனைவரும் வந்துவிட்டதாகவும் இவள் தான் லேட்டு என்றும் சொன்னான்.

அதற்குள் அங்கு ஹோட்டலில், இந்த புதிய தொழிலின் (?)  மாஸ்டர் மைண்ட் என்று சொல்லப்படும் ஷெட்டி பந்தாவாக எல்லோருடனும் பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு பரம திருப்தி இந்த wife Swapping இல். அதிக முதலீடு இல்லாமல் இந்த கோவிட் நேரத்தில், இத்தனை சுலபத்தில் இத்தனை பெண்களை வளைக்க முடிந்தது, அவர்களை தங்கள் வலை இல் விழவைத்து சுலபமாக பணம் சம்பாதிப்பது எல்லாமே எதோ தன்னுடைய தனிப்பட்ட சாதனையாக கருதினான்.

தன்னுடைய நண்பர்களுடன் அவன் அளவளாவிக் கொண்டிருந்தான். அதில் ஒருவன் சொன்னான், ஷெட்டி, உன் ஐடியா படு தூள். எத்தனை பேரை இப்படி தொழிலில் இறக்கிவிட்டிருக்கோம் தெரியுமா? அவர்களால் இதைவிட்டு வெளியே வர முடியாது. நாமாக பாவம் பார்த்து அல்லது வயசாகி யாரும் அவர்களைக் கூப்பிடவில்லை என்றால் தான் அவர்களுக்கு விடிவு. அதுவரை அவர்கள்  நமக்கு சம்பாதித்துப் போட்டுத்தான் ஆகவேண்டும். நன்றாக சிக்கிக் கொண்டார்கள். இந்த கோவிட் பொறுத்தவரை  நமக்கு நன்மையே செய்துள்ளது. என்று சிரித்தான்.

சைபர் கிரைம் அல்லது போலீஸ் கூட ஒன்றும் செய்ய முடியாது நம்மை என்று கொக்கரித்தான். அதிலும் அந்த சுனில் பயல், எமகாதகன் பா, இந்த வாரம் தான் வேலைக்கு சேர்ந்தான். பிறப்பிலேயே கிரிமினல் போல. இந்த வாரத்திலேயே 12 பெண்களை சேர்த்து, ரொம்ப காசு பார்த்துவிட்டான் பா. அவனுடைய தொழிலாளிகளைப் பற்றி யாருக்குமே எதுவும் தெரியாது. எல்லாமே பரம ரகசியமாக வைத்திருக்கிறான்.  சரியாக யாருக்கு எப்படி சப்ளை பண்ணுகிறான் என்று அவனுக்கு மட்டுமே தெரியும். அவன் தான் அவளுங்களைத் தொடர்பு கொள்ள முடியுமே தவிர, அவளுங்க …ஹுஹும்… கில்லடி.. சிலந்தி தன்னுடைய உணவு தன் வலை இல் நன்கு சிக்கிக்கொள்ளும் வரை காத்திருக்கும்,பிறகு உண்ணும் ஒருமுறை அதன் வலை இல் சிக்கிக்கொண்ட அதன் உணவால் தப்பிப்பது என்பது துர்லபம் அது போலத்தான் இவன் என்று சொன்னான். .ஆனால் இன்னும் வரவில்லை அவன்.

இன்று கூட ஒருத்தியைத்தான் அழைத்து வருகிறான். , அவள் தான் அவனின் srat  ஆளாம் இன்னும் 1 வாரத்துக்கு அவளுக்கான கியூ இருக்கிறதாம். என்றாலும் நீ வருவதால் இன்று இங்கு அழைத்து வருவதாக சொன்னான். எதோ டிராபிக்கில் மாட்டிக் கொண்டாள் போல இருக்கிறது. அது தான் லேட் ஆகிறது என்றான். அதற்கு இவனும் போகட்டும், நமக்காக உழைக்கிறார்கள்.. நாம் கொஞ்சம் காத்திருந்தால் போகிறது, என்று சிரித்தான்.

சரி, மேலே என்ன செய்யப்போகிறோம் என்று மற்றும் ஒருவன் கேட்டான். அதற்கு இவன், இந்த 10  - 15 நாட்களில் கையில் கணிசமான பணம் சேர்ந்துவிட்டது. இனி அதைக் கொண்டு வேறு தொழில் துவங்கலாம். இதை அண்டர் கிரவுண்டில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னான். அதைக் கேட்ட இவன் நண்பன். சூப்பர் பா நீ என்று சிலாகித்தான்.

ஆமாம் டா, இவர்களில் யார் மாட்டிக் கொண்டாலும் இதற்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல இருக்க வேண்டும். நீ சொல்லும் சுனிலையே தலைவன் போல இதை கையாளச் சொல்லலாம். மாதா மாதம் நமக்கு பணம் மட்டும் அனுப்ப சொல்லி கேட்கலாம். இத்தனை திறமையான ஆள் நம்மைவிட்டுப் போய்விடக்கூடாது அல்லவா? என்றான்.

மற்றவர்களும் ஆம்மாம் போட்டார்கள். இந்த நேரத்தில் வாசலில் சல சலப்பு கேட்டது. சுனில் தான் வேகமாக வந்தான். நேரே ஷெட்டி இடம் வந்து, சாரி சார், கொஞ்சம் நேரம் ஆகிவிட்டது. டிராபிக் என்றான். It is ok … பதட்டப்படாதீர்கள் என்று சொல்லிக் கொண்டே அவனின் கைகளைப் பிடித்து குலுக்கினான் ஷெட்டி. உங்களைப் பற்றி நிறைய கேள்விப்ட்டேன். Keep it up.  என்றான்.

By the by,  யார் அந்த  star?...  நான் பார்க்கலாமா என்றான்.  Why not,  கண்டிப்பாக சர்.. இதோ என்று சொல்லிக் கொண்டே… Please meet my wife Sunithaa என்று சொல்லிக் கொண்டே சுனிதாவைக் காட்டினான். திரும்பிய ஷெட்டியைப் பார்க்க தன் கண்களை உயர்த்தினாள் சுனிதா என்கிற அருணா, அவளை பார்க்கத் திரும்பினான் ஷெட்டி என்கிற அருண்…..


அன்புடன்,
கிருஷ்ணாம்மா😊

பின் குறிப்பு: இந்த கதை, நம் செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டது. பெண்களுக்கு விழிப்புணர்வு தரவே இதை நான் எழுதினேன்.
செய்தி இன் லிங்க் இதோ: The New Indian Express: Job loss during lockdown sucked these women in Tamil Nadu into underbelly of couple swapping.

https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/sep/17/job-loss-during-lockdown-sucked-these-women-in-tamil-nadu-into-underbelly-of-couple-swapping-2197886.html


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by SK Tue Sep 22, 2020 4:18 pm

மா** வேளையை மல்டி நேஷனல் லெவலுக்கு பாக்குறனுங்க.......


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by krishnaamma Tue Sep 22, 2020 6:21 pm

SK wrote:மா** வேலையை மல்டி நேஷனல் லெவலுக்கு பாக்குறனுங்க.......
மேற்கோள் செய்த பதிவு: 1331803

ஆமாம் செந்தில், செய்தியைப் படித்ததும் மிகவும் கோபம் வந்தது எனக்கு... ஒருவரின் நெருக்கடியை எத்தனை மட்டமாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்... கொஞ்சமும் மனசாட்சி இல்லாத மனிதர்கள்.... கோபம் இந்தப் பெண்கள் தான் ஆகட்டும், கணவனுக்குத் தெரியாமல் செய்ய வேண்டும் என்று சொல்லும் போது எப்படி தயார் ஆகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை...எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு .கணவனுக்கும் தனக்கும் நடுவில் யாரையுமே விடக்கூடாது என்று கூடவா தெரியவில்லை இவர்களுக்கு.... என்ன படித்து என்ன பிரயோஜனம்.... ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by krishnaamma Wed Sep 23, 2020 8:45 pm

பின்னூட்டம் எழுதுங்க .............. பின்னூட்டம் எழுதுங்க ............ பின்னூட்டம் எழுதுங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by krishnaamma Sat Jan 15, 2022 11:20 pm

ரமணீயன் ஐயாவிற்காக இந்தக் கதையை மேலே கொண்டுவருகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by T.N.Balasubramanian Sun Jan 16, 2022 10:03 am

krishnaamma wrote:ரமணீயன் ஐயாவிற்காக இந்தக் கதையை மேலே கொண்டுவருகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1356280
எந்தன் வேண்டுகோளுக்கிணங்க மீள்பதிவு செய்ததற்கு நன்றி.[
எப்பிடி படிக்க தவறவிட்டேன்??????
ஆம் கொரோனா என்னை தாக்க ஆரம்பித்த நேரம்.........செப் இறுதியில் இருந்து
ஓமாந்தூரார் ஆசுபத்திரி வாசம் அக்டொபேர் 23 வரை.

நல்லதோர் கதை அமைப்பு ----மூலத்தில் இருந்து நேர்த்தியாக கொண்டு சென்றுள்ளீர்.---முடிவு --நான் எதிர் பார்த்த ஒன்று.

நன்றி,க்ரிஷ்ணாம்மா!


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by krishnaamma Fri Jan 21, 2022 10:03 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:ரமணீயன் ஐயாவிற்காக இந்தக் கதையை மேலே கொண்டுவருகிறேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1356280
எந்தன் வேண்டுகோளுக்கிணங்க மீள்பதிவு செய்ததற்கு நன்றி.[
எப்பிடி படிக்க தவறவிட்டேன்??????
ஆம் கொரோனா என்னை தாக்க ஆரம்பித்த நேரம்.........செப் இறுதியில் இருந்து
ஓமாந்தூரார் ஆசுபத்திரி வாசம் அக்டொபேர் 23 வரை.

நல்லதோர் கதை அமைப்பு ----மூலத்தில் இருந்து நேர்த்தியாக கொண்டு சென்றுள்ளீர்.---முடிவு --நான் எதிர் பார்த்த ஒன்று.

நன்றி,க்ரிஷ்ணாம்மா!
மேற்கோள் செய்த பதிவு: 1356303

மிக்க நன்றி ஐயா... நம் சமூகம் எங்கு போய்க்கொண்டு இருக்கிறது????...நினைத்தாலே பயமாக உள்ளது.....சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) - Page 2 Empty Re: திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum