புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருடனுக்கு கொட்டிய தேள் - திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) Poll_c10திருடனுக்கு கொட்டிய தேள் - திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) Poll_m10திருடனுக்கு கொட்டிய தேள் - திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :) Poll_c10 
111 Posts - 71%
heezulia

27 Posts - 17%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
prajai

Barushree

2 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
sram_1977

nahoor

இந்த மாத அதிக பதிவர்கள்

165 Posts - 76%

27 Posts - 12%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருடனுக்கு கொட்டிய தேள்….விழிப்புணர்வுக் கதை By Krishnaamma :)

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:44 pm

திருடனுக்கு கொட்டிய தேள்….செய்தித்தாளில் வந்த ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து பின்னப்பட்ட கதை இது. ஒரு விழிப்புணைர்வுக்கதை.

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

அருணும் அருணாவும் அன்யோன்யமான தம்பதிகள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால் அருணாவைப் பார்த்தால் இரண்டு குழந்தைகள் பெற்றவள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படி இளமையாக இருந்தாள், மேலும் தன்னுடைய இளமையைத் தக்கவைத்துக்கொள்ள மெனக்கெடவும் செய்தாள். தான் அழகி என்பதில் கொஞ்சம் கர்வமும் உண்டு அவளுக்கு.

அருணுக்கும் தன் மனைவி அழகி என்பதில் எப்பொழுதுமே கொஞ்சம் கர்வம் உண்டுதான். அதனால் அவன் அவள் தன்னை அழகு படுத்திக்கொள்ள வாங்கும் பொருட்கள் அல்லது அவள் பியூட்டி பார்லர் போவது என்பது போன்ற விஷயங்களில் தலை இடமாட்டான். அவள் தன் சம்பளத்தின் பெரும் பகுதியை தனக்காகவே செலவழிப்பாள், என்றாலும் குடும்பம் நல்லபடியாகவே சென்று கொண்டிருந்தது.

அருண் ஒரு தனியார் கம்பெனியில் மார்கெட்டிங் பிரிவில் வேலை பார்த்து வந்தான். அதனால் அவனால் சம்பளத்தைத்தவிர வேறு விதமாகவும் வருமானம் பார்க்க முடிந்தது. அவளும் வேலை பார்த்து வந்ததால் குடும்பத்தில் பணப்பிரச்சனை எதும் வரவில்லை. இந்த கோவிட் வந்தாலும் வந்தது, எல்லாமே  தலைகீழ் ஆக மாறிப்போனது. ஆம், இந்த கோவிட் நேரத்தில் எத்தனையோ பேருக்கு வேலை போனது போல, இவர்கள் இருவருக்குமே வேலை போய்விட்டது.

வேலை போன நாள் முதலே இருவரும் வேலை தேட ஆரம்பித்தார்கள். வேலை கிடப்பதாக இல்லை. ஏதோ இருந்த சேமிப்பில் சில காலம் ஓடியது. மிகவும் சிரமமாக ஆனதும், குழந்தைகளை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு, வேலை தேடுவதில் மும்முரமானார்கள். அருண்ஏதாவது தொழில் துவங்கவும் யோசித்தான். ஆனால் அதற்கும் முதல் தேவைப்படுமே….சரி யோசிப்போம், நண்பர்களை கலந்து ஆலோசித்தான். இப்படி ஆளுக்கு ஒரு புறம் அல்லாடினார்கள்.

ஒருவாரம் சென்று இருக்கும், 6 நண்பர்களாக சேர்ந்து ஏதோ புதிதாக செய்யப்போவதாகவும், ஒரிரு மாதங்களில் நல்ல வருமானம் வரும் என்றும் சொன்னான். இவள் என்ன பிஸ்னஸ் என்று கேட்டதற்கு , இப்போதைக்கு ஏதும் சொல்வதற்கு இல்லை, பிறகு சொல்வதாக சொல்லிவிட்டான். அவளும் மேலே அழுத்திக் கேட்க வில்லை. என்றாலும் தான் பாட்டுக்கு எப்பொழுதும் போல வேலை தேடுவதில் மும்முரமாக இருந்தாள்.

அப்போழுதான் அவள் கண்ணில் அந்த விளம்பரம் பட்டது. உடனே போன் செய்தாள். அவர்களும் அவளை மறு நாளே இன்டர்வ்யூக்கு அழைத்தார்கள்.
வெகு நாட்களூக்குப் பிறகு மேக்கப் போட்டுக் கொண்டு, நல்ல புடவை கட்டிக் கொண்டு தன்னை அலங்கரித்துக் கொண்டு, இவளும் போனாள். அந்த அலுவலகம் ஒரு வீட்டில் இருந்தது. 4 – 5 பேர் ஏற்கனவே காத்திருந்தார்கள். எல்லோருமே இளம் பெண்கள். இவளும் அங்கு சென்று அமர்ந்து கொண்டாள். உள்ளே இருந்தவர்கள் ஒவ்வொருவராக அழைத்தார்கள். இவள் முறை வந்ததும் இவள் உள்ளே போனாள். அங்கு ஒரு இளைஞன் அமர்ந்து இருந்தான்.

தொடரும்............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:46 pm

தன் பெயர் சுனில் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். இவளைப்பற்றிக் கேட்டான். இவளும் தன்னைப் பற்றியும் கணவன் மற்றும் குழந்தைகள் பற்றியும் கோர்வையாக எடுத்துச் சொன்னாள். கோவிட் ஆல் தனக்கும் தன் கணவனுக்கும் வேலை போனதைப் பற்றியும் , இபொழுது தனக்கு இந்த வேலை மிகவும் முக்கியம் என்றும் சொன்னாள்.
‘நீங்கள் மிக அழகாக மட்டும் இல்லை மிக அழகாகவும் பேசுகிறீர்கள்” என்றான். மேலும், ‘ இந்த வேலைக்கு இந்த இரண்டுமே மிக முக்கியம்” என்றான்.

இவள் என்ன வேலை, நேரம் சம்பளம் என தொடர்ந்து கேட்டதும், புன்னகைத்த வாறே, ‘ஹோல்ட் ஆன் மேடம், நீங்கள் SHORT LIST செய்யப்பட்டால் அவை எல்லாம் சொல்வோம். இப்போழுது நீங்கள் போகலாம். எங்கள் போனுக்காக காத்திருங்கள்’ என்றான்.

சரி என்று இவளும் வந்துவிட்டாள். கணவனிடம் ஒன்றும் சொல்லவில்லை. கிடைக்கட்டும் பார்க்கலாம் என்று இருந்துவிட்டாள். அடுத்த இரண்டாவது நாள் இவளுக்கு அவர்களிடமிருந்து போன் வந்தது. மிகவும் சந்தோஷமாக கிளம்பினாள். எப்போழுதும் போல் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொண்டாள். இன்றும் அந்த சுனில் தான் இருந்தான். இவள் SHORT LIST செய்யப்பட்டதாக சொன்னான்.
இவளுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தனக்கு என்ன வேலை, என்ன சம்பளம் என்று கேட்டாள். அதற்கு அவன், நீங்கள் எத்தனை தூரம் ஒத்துழைக்கிறீர்களோ அத்தனை சம்பளம் பெறலாம் என்று பொடிவைத்து பேசினான்.
அவனுடைய பேச்சு இவளுக்கு வாஸ்தவமாகவே புரியவில்லை. அதனால் விழித்தாள்….உடனே அவன்….’இது இது தான், இந்த இன்னொஸன்ட் லுக் தான் உங்களுக்கு இந்த வேலையைப் பெற்றுத் தந்தது அருணா’ என்றான். இவள் மௌனம் சாதித்தாள். அவனே தொடர்ந்தான். அதாவது, எங்களைப்போல மேல் தட்டு மக்களுக்கு சிலருக்கு வாய்க்கும் மனைவி அழகாக இருப்பதில்லை, அறிவாளியாகவும் இருப்பதில்லை, உறவு விட்டுப்போகக்கூடாது என்றோ அல்லது பிஸ்னஸ்காகவோ நாங்கள் காம்பிரமைஸ் செய்து கொண்டு, கல்யாணம் செய்து கொண்டு விடுகிறோம். ஆனால் பிறகு, ஒரு பார்டி அல்லது ஒரு சொசைட்டி மீட்டிங் என்று வரும்போழுது எங்களுக்கு தகுந்த ஒரு பாட்னர் தேவையாக இருக்கிறது. சில சமயங்களில் எங்களின் காரியதரிசியை அழைத்துப் போவோம் ஆனால் அது எப்போழுதும் வேலைக்கு ஆகாது. அதனால் தான் உன் போன்ற பெண்களின் உதவியை நாடுகிறோம்.’ என்றான்.

இவளுக்கு சுத்தமாக எதுவும் புரியவில்லை. புரியவில்லை என்று மட்டும் சொன்னாள். சரி நான் உடைத்து சொல்லிவிடுகிறேனே.. என்று தொடர்ந்தான் அவன். நீங்கள் என்னுடன் என் மனைவி போல சில பார்ட்டிக்களில் கலந்து கொள்ள வேண்டிவரும். ஆனால் பயப்பட வேண்டாம், என் விரல் கூட உங்கள் மேல் படாது. இது கோவிட் காலம் எனவே, யாருடனும் கை கூட குலுக்க வேண்டாம். ஜஸ்ட், பார்ட்டி அட்டெண்ட் பண்ண வேண்டும், ஜாலியாக சாப்பிட்டுவிட்டு பழக்கம் இருந்தால் மது அருந்தி விட்டு போய்விடவேண்டும். அவ்வளவுதான். ‘ என்றான்.

இதற்கா சம்பளம்? என்றாள் அவள். ஆமாம் என்று தலை அசைத்தான் அவன். அவள் திகைத்தாள். தன் அழகுக்கு இப்படி ஒரு வேலை இருக்கிறதா… அடாடா, இது தெரியாமல் இத்தனை நாட்கள் அந்த கம்பெனியில் அல்லாடி விட்டோமே. என்று தொன்றியது. சரி சம்பளம், என்று இழுத்தாள்.

அதற்கு அவன், ஒவ்வொருமுறை நீங்கள் வந்து போகும் பொழுது உங்களுக்கு 5000 தருவோம். என்றான். அவளுக்கு மயக்கம் வராத குறைதான். என்ன 5000 ஆ என்றாள். ஆமாம், இது தவிர, உங்களுக்கான உடைகளும் நாங்கள் தருவோம். அதை அணிந்து கொண்டு தான் நீங்கள் என்னுடன் வரவேண்டி இருக்கும் என்றான்.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:47 pm

அவனே தொடர்ந்தான், சந்தேகம் வேண்டாம், உடைகளும் கௌரவமானதாகவே இருக்கும். வாரத்தில் 3 நாட்கள் இப்படி வரவேண்டி இருக்கும். அதுவும் பகலில் தான். சம்மதமா என்று சொல்லுங்கள் என்றான். இவள் உடனே ஒப்புக்கொண்டாள். உங்கள் கணவர் இதற்கு சம்மதிப்பாரா, அவரை நீங்கள் கலந்து கொண்டு நாளை கூட பதில் சொல்லலாம் ‘ என்றான்.

இவள் இல்லை இல்லை, நான் அவரை சமாளித்துக் கொள்வேன் என்றாள். உடனே அவனும், ‘ம்ம்.. இத்தனை அழகான பெண்ணுக்கு இது கூட தெரியாதா என்ன ? என்று சிலாகித்தான். இவளும் மகிழ்வாக சிரித்தாள். ‘சரி நீங்கள் எங்கு வரவேண்டும் என்று நான் WHATSAPP இல் தகவல் அனுப்பிவிடுவேன் அது போல வந்து விடுங்கள்’ என்றான். அவளும் ஒப்புக்கொண்டாள்.

மகிழ்வுடன் எழுந்து கொண்டாள். அப்பொழுது அவன் சொன்னான், என் பெயர் சுனில் என்பதால் உங்கள் பெயர் சுனிதா என்று இருக்கட்டும். என்றான். இவள் அதற்கும் ஒப்புக்கொண்டாள். அவன் இதை வைத்துக் கொள் என்று சொல்லி ஒரு கவரை அவளிடம் நகர்த்தினான். என்ன இது என்று அவள் கேட்டாள். அட்வான்ஸ் என்று சொன்னான். நன்றி சொல்லி பெற்றுக்கொண்டாள்.

இப்போழுது ஆட்டோவில் போங்கள், நாளை முதல் உங்களுக்கான CAB வரும் என்றான். தான் எதிர் கொள்ளப்போகும் அபாயத்தை அறியாமல், மிக்க மன நிறைவுடன் கிளம்பினாள் அவள்.

வழிஎங்கும் கணவனிடம் என்ன சொல்வது என்று சிந்தித்த வாறே சென்றாள். ஆனால் அவள் வீட்டை அடையும் போது அருண் மிகவும் பரபரப்பாக எங்கோ கிளம்பிக்கொண்டிருந்தான். இவள் வந்ததும் , வா வா, உனக்ககத்தான் காத்திருந்தேன் நான்….நான் ஒருவாரம் பத்து நாள் பங்களூருக்கு போகவேண்டி இருக்கிறது.’ என்றான். இவள் என்ன ஏது என்று கேட்டாள். நான் முன்பே சொன்னது போல பிஸ்னஸ் சம்பந்தமாக போகிறேன்… இங்கு 3 பேர் பார்த்துக் கொள்கிறார்கள், நானும் இன்னும் இருவரும் அங்கு போகிறோம்’ என்றான்.

அவனும் இன்றய இண்டர்வூஎன்ன ஆனது என்று கேட்கவில்லை, இவளும் ஒன்றும் சொல்லவில்லை. அவன் கிளம்பிவிட்டான். பத்திரம் என்று மட்டும் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக்கொண்டார்கள். தினமும் போன் செய்வதாக அவன் சொன்னான். இவளும் சரி என்றாள்.

அடுத்த நாள் எங்கு வரவேண்டும் என்று இரவு 9 மணிக்கு இவளுக்கு செய்தி வந்தது. அதற்காகவே காத்திருந்தாள் அவள். சந்தோஷமாக படுக்க சென்றாள்.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:47 pm

மறுநாள் காலையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு கிளம்பினாள். அவன் சொன்ன ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தாள். அவள் அந்த ஹோட்டலைப் பார்த்து பிரமித்துப் போனாள்… இத்தனை பெரிய ஹோட்டல் ஒன்று இருப்பதே அவளுக்குத்தெரியாது. ஆஹா… எப்படியெல்லாம் அனுபவிக்கிறார்கள்… என்னவெல்லாம் அனுபவிக்கிறார்கள் பாரேன் என்று இருந்தது அவளுக்கு.

காரிடாரில் கூட மெத் எங்கிற கம்பளங்கள் விரித்து இருந்தார்கள். நடக்கும் போதே அவற்றின் மிருதுத்தன்மை தெரிந்தது. எங்கு பார்த்தாலும் பள பளப்பு செல்வ செழிப்பு தெரிந்தது. மலைத்து நின்றவளை, ரிசப்ஷனில் நின்றிருந்த சுனில் பார்த்தான். இவளைக் கண்களாலேயே அழைத்தான். இவள் வந்ததும் இவளை அழைத்துக் கொண்டு உள்ளே போனான். இவள் எங்கே என்று கேட்டதும், பேசாமல் வரும்படி சைகை காட்டினான்.

இருவரும் லிப்டில் ஏறி ஒரு அறையை அடைந்தார்கள். அந்த லிப்ட் கூட மிக அழகாக இருந்தது. அதில் இருந்த ஒரு வாலிபன் இவர்களுக்கு முகமன் கூறி வரவேற்றான். இவர்கள் இரங்கும் பொழுதும், நன்றி சொன்னான், have a good day Madam, have a good day Sir என்று சொன்னான். இவளுக்கு எல்லாமே ஆச்சர்யமாகவும் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.

இந்த வேலை நிலைத்தால் … பணத்துக்கு பணம், தவிர இது போன்ற புதுப்புது அனுபவங்கள் என்று எண்ணிக்கொண்டாள்.

இவர்கள் அடைந்த அறை மிகப்பெரியது. ‘Suite’ என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய அறை. சொல்லப் போனால் இவர்கள் வாழும் வீட்டை விட பெரியது. அதைப்பார்த்த இவளுக்கு முச்சே நின்று விடும் போல் இருந்தது. அந்த அறைக்குத் தான் கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவள் போலத் தோன்றியது. கொஞ்சம் வெட்கமாக உணர்ந்தாள். கொஞ்சம் வேர்த்தே விட்டது அவளுக்கு.

இதை கவனித்த சுனில்…ஹேய், கம் ஆன்… இதை எல்லாம் நீ பழகிக்கொள்ள வேண்டும்’ என்றான். அங்கிருந்த ஒரு வாட் ரோபைத் திறந்து மிக அழகிய ஒரு உடையை எடுத்தான். அதற்குத் தேவையான நகைகள் மற்றும் கைப்பை செருப்பு வரை எடுத்து வைத்தான். அதையெல்லாம் பார்த்து இவள் அசந்தே போனாள்.

‘இவையெல்லாம் எப்படி’ என்று கேட்டாள். அதெல்லாம் அப்புறம், நீ சீக்கிரம் கிளம்பு. நான் வெளியே போகிறேன். என்று சொல்லிவிட்டு அவளின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் வெளியே சென்று விட்டான். அவனின் இந்த செய்கை இவளுக்கு மிகவும் நிம்மதி அளித்தது, பிடித்திருந்தது.

முடிந்தவரை சீக்கிரம் அலங்காரம் செய்து கொண்டு கிளம்பினாள். இவள் தயாராகவும் அவன் அறை கதவைத்தட்டவும் சரியாக இருந்தது. இவளைப் பார்த்ததும் …வாவ், யூ லுக் கார்ஜியஸ்… என்று சொன்னான், சின்னதாக விசிலும் அடித்தான். அது அவளுக்கு மிகவும் பிடித்தது. இது போல கிறங்கிய குரலில் ஒரு முறை கூட அருண் சொன்னதில்லை என்று மனதில் பட்டது.

தலையை சாய்த்து அவனின் பாராட்டை அங்கீகரித்தாள் அவள். வேறு இடம் போக வேண்டுமா, இங்கில்லையா என்று வினவினாள் அவள். இல்லை என்று சொன்னான் அவன். வெறும் உடை மாற்றவா இந்த இடம் என்று கேட்டாள் இவள். அதற்கு அவன், இல்லை இல்லை, என் போன்ற பிஸ்னஸ் ஆட்கள் இது போன்ற பெரிய பெரிய ஹோட்டல்களில் பர்மனண்டாக ஒரு ரூம் வைத்திருப்போம். என்றான். ஒ, அப்படியா, என்ன பிஸ்னஸ் உங்களது என்று அவள் வினவினாள். எல்லாம் இன்றே சொல்லிவிடவேண்டுமா, ம்ம்.. என்று சிரித்தவாறேகேட்டான் அவன். இவள் அந்த சிரிப்பில் மயங்கினாள். பிறகு இருவருமாக கிளம்பினார்கள். ஹோட்டலை விட்டு வெளியே வந்தார்கள். அவர்கள் வருவதற்காகவே காத்திருந்தது போல ஒரு படகுக் கார் அவர்களை ஒட்டி வந்து நின்றது. இவளுக்கு எல்லாமே மலைப்பாக இருந்தது. இதிலா பயணம் செய்யப்போகிறோம் என்று தோன்றியது. சுனில் மிகவும் அன்புடன், காரின் கதவைத்திறந்து கெட் இன் என்று சொன்னான்.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:48 pm

சே, இது போல ஒருவருக்கு வாழ்க்கப்பட்டிருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. இவள் ஏறினதும் அவனும் ஏறிக்கொண்டான். மாஸ்க் போடுள்ளதால் யாராவது பார்ப்பார்களோ என்கிற கவலை இல்லாமல் இருந்தாள் அவள். காரிலும் எந்தவித அட்வாண்டேஜும் எடுக்கவில்லை சுனில். இது அவளுக்கு மிகுந்த நிம்மதியையும் அவனிடம் அளவு கடந்த நம்பிகையையும் ஏற்படுத்தியது.
இன்று உனக்கு டெஸ்ட் என்று மட்டும் சொன்னான் அவன். இவளுக்கு கொஞ்சம் பட படப்பாக இருந்தது.

அவர்கள் வேறு ஒரு ஹோட்டலை அடைந்தார்கள். அங்கும் இவர்களுக்கு ராஜ மரியாதை போல உணர்ந்தாள் அவள். இவர்களைப் போல நிறைய ஜோடிகள் வந்தார்கள். எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.
வெல்கம் டிரிங்க் பறிமாறப்பட்டது. பிறகு சாப்பிட ஆரம்பித்தார்கள். அங்கிருந்த எல்லாமே இவளுக்கு புதிதாக இருந்தது. மிகவும் ஆச்சரியமாக்கவும் இருந்தது. இத்தனை ஐட்டங்களா சாப்பிட, குடிக்க என்று இருந்தது.

உணவில், பஞ்சபக்ஷ பரமான்னம் என்று சொல்வார்களே அது இதுதானா என்று இருந்தது அவளுக்கு. (அதாவது, உறிஞ்சிக் குடிக்க, கருக்கு மொறுக்கு என்று சாப்பிட, சாதம் போல மென்று உண்ண, பஞ்சாமிருதம் போல நக்கி சாப்பிட, பால் தண்ணிர் போல அண்ணாந்து குடிக்கும் வகைகள், எல்லாம் சேர்ந்தது தான் பஞ்சபக்ஷ பரமான்னம் என்று சொல்வார்கள். )

எதை உண்பது எதை விடுப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. சுனில் தான் இவளின் தவிப்பை உணர்ந்து, உதவினான். ஒருவழியாக சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் கதைத்து விட்டு வெளியே வந்தார்கள். அப்பாடா என்று இருந்தது அவளுக்கு. மீண்டும் காரில் ஏறியதும், இவள் முதலில் கேட்ட கேள்வியே, ‘என் டெஸ்டில் நான் பாஸா?’ என்றுதான். அவனும் முகமலர்ந்து 90% என்று சொன்னான். இன்னும் உனக்கு பட படப்பு அடங்க வில்லை, அதில் தான் அந்த 10% குறைகிறது. மற்றபடி நீ பர்ஃபெக்ட். என்றான்.

அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது நான் வேலைக்கு தகுதியானவளா என்று ஆர்வமாக கேட்டாள்… அவன் ஆமாம் என்று சொன்னான். ‘சந்தோஷ மிகுதியில் ‘எஸ்’ என்று கத்திவிட்டாள். டிரைவர் திரும்பிப் பார்த்தார்.
அதன் பின் தான் அவள் அமைதியானாள். மீண்டும் அதே ஹோட்டலுக்கு போனார்கள். இவள் தன்னுடைய அப்பழைய உடைகளை அணிந்து கொண்டாள். இவள் வீடு திரும்ப cab தயாராக இருந்தது. அதில் பயணித்தாள். அடுத்து எங்கு வரவேண்டும் என்று தான் மெசேஜ் அனுப்புவதாக சொன்னான் சுனில். பிரிய மனம் இல்லாமல் இவள் கிளம்பி வந்தாள்.

வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு சுத்தமாக தன் வீட்டைப் பிடிக்கவே இல்லை. சே, வாழ்ந்தால் அப்படி வாழணும் என்று தோன்றிக்கொண்டே இருந்தது. கைப்பையை தூக்கி வீசினாள். அதிலிருந்து எதோ ஒரு கவர் கீழே விழுந்தது. என்ன அது என்று பார்த்தாள். பார்த்தால்…. To Dear Sunithaa, என்று அதில் எழுதி இருந்தது. ஆர்வமாக பிரித்துப் பார்த்தாள். அதில் புத்தம் புதிய 500 நோட்டுகள் 10 இருந்தன.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:48 pm

இவளுக்கு வாவ் என்று இருந்தது. வானத்தில் பறப்பது போல இருந்தது. இத்தனை நேரம் இருந்த சோர்வு பறந்தது. உடனே உடைகளை மாற்றிக் கொண்டு வெகு நாட்களாக போகாமல் இருந்த, போகமுடியாமல் இருந்த பியூட்டி பார்லருக்கு போனாள்.

அவனின் போனுக்காகக் காத்திருந்தாள். போனும் வந்தது, மறுநாள் காலை உணவிற்கே வரமுடியுமா என்று கேட்டிருந்தான். இவளும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டாள். காலை 8 மணிக்கே புறப்பட்டாள். இன்று வெகுநாட்களுக்குப் பிறகு சுடிதார் அணிந்து கொண்டாள். தலையைப் பின்னாமல் அப்படியே லூஸ் ஆக விட்டாள். ஒரு பெரிய கோ கோ கிளாஸ் அணிந்து கொண்டாள். தயாராக நின்றிருந்த காரில் ஏறிக் கொண்டாள். இன்று வேறு ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள்.
அங்கு இறங்கியதுமே, சுனிலைத் தான் தேடினாள் அவள். உடை மாற்ற வேண்டுமே என்று. ஆனால், அதற்குள் ஒரு ஆடி கார் அவளின் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஜோடி இறங்கினார்கள். அந்தக்காரைப் பார்த்து இவள் மலைத்தாள். இத்தனை அழகான காரா என்று. இவள் மலைத்து நிற்பதைப் பார்த்தும் பார்க்காத வாறு அவர்கள் இறங்கி உள்ளே போனார்கள் அதற்குள் சுனில் வந்து விட்டான். இவளின் பார்வையையும் கவனித்தான். ஆனால் கவனிக்கதவாறு, புன்னைகைத்துக் கொண்டே, 'வாவ்! சுனிதா, இது உன்னுடைய புதிய லுக்கா?... நீ இந்த உடை இல் மிகவும் அழகாகத் தெரிகிறாய்' என்று புகழ்ந்து தள்ளினான்.

'வா, வா, உள்ளே போகலாம், இன்று நீ உடையைக் கூட மாற்றா வேண்டாம், இதுவே மிகவும் அழகாக உள்ளது என்றான். அதில் அவளுக்கு மிகவும் திருப்தி. உள்ளே இவர்களைப் போல பல ஜோடிகள் இருந்தார்கள். நேற்று போல பலவகை உணவுகள். அது காலை உணவானதால் நிறைய பழ சாறுகளும், பிரெட் வகைகளும் இருந்தன. இவள் பலவற்றைப் பார்த்ததே கிடையாது. அது என்ன ஏது என்று கேட்டு எடுத்துக் கொண்டாள்.
சுனில் அவளை பலருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். எல்லோருமே இவளின் அழகை புகழ்ந்தார்கள். அது அவளுக்கு கொஞ்சம் கிறக்கமாக இருந்தது. கிளம்பவேண்டும் என்கிற பொழுது ஆண்கள் எல்லோரும் எதோ கூடிக் கூடி பேசிக்கொண்டார்கள். பிறகு சிரித்த படியே வந்தார்கள். சுனில் இவளிடம் வந்ததும், இவள் என்ன என்று கேட்டாள்.

அதற்கு அவன், நாம் இங்கிருந்து ஒரு ரிசார்ட்டுக்குப் போகப் போகிறோம், அதற்கு முன் ஒரு சின்ன விளையாட்டு என்றான். என்ன அது என்றாள். அதாவது இங்குள்ளவர்களின் கார் சாவிகளை யெல்லாம் ஒரு கூடையில் போடுவார்கள். வரிசையாக ஒவ்வொருவராக அதிலிருந்து ஒரு சாவியை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் அந்த காரிலேயே அந்த ரிசார்ட் வரை வரலாம் என்றான்.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:49 pm

அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்களுக்கு எந்த கார் வரப்போகிறது என்று அறிந்து கொள்ள ஆர்வமானாள். எல்லோரும் கூடி நின்று கொண்டார்கள். ஒவ்வொருவராக ஒவ்வொரு சாவியை எடுத்துக் கொண்டார்கள். இவர்களும் அதாவது சுனிலும் ஒரு சாவியை எடுத்துக் கொண்டான். வாசலுக்கு வந்து எந்த வண்டி என்று பார்த்தார்கள். பார்த்தால், இவள் சொக்கி நின்ற அதே ஆடி கார் தான் அவர்களுக்கு வந்திருந்தது.

‘வாவ்!.. சுப்பர்!” என்று சந்தோஷத்தில் கத்திவிட்டாள். என்ன என்பது போல பார்த்தான் சுனில். இந்தக் கார் தான் இன்று காலை நான் பார்த்தது, மிக அழகாக உள்ளதே என்று நினைத்தேன், பார்த்தால் இப்பொழுது இதுவே நமக்கு வந்துள்ளது’ என்றாள் மகிழ்வுடன். இருவரும் சிரித்தபடி காரில் ஏறினார்கள். காரா அது … சொர்கம் என்று தோன்றியது அவளுக்கு.

கொஞ்சம் கூட அலுங்காமல் குலுங்காமல் சென்றது அந்த கார். தேவை இல்லாமல் தன்னுடைய டூ வீலர் நினைவு வந்தது அவளுக்கு. குண்டும் குழியுமான ரோடுகளில் எத்தனை சிரமமாக ஓட்டி இருக்கிறோம் என்று நினைத்தாள்.
சே, இதை அனுபவிக்காமல் எதற்கு அந்த நினைவு என்று தானே தன்னை அந்த நினவுகளில் இருந்து மீட்டு எடுத்துக் கொண்டாள். நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். இப்படிப்பட்ட வண்டியை எப்படி அடுத்தவரிடம் கொடுக்க அவருக்கு மனம் வந்தது என்று சுனிலைப் பார்த்துக் கேட்டாள்.

இதெல்லாம் ஒரு ஃபன் தானே, எல்லோராலும் இப்படிப்பட்ட காரை வாங்க முடியாது, அப்படியே வாங்கினாலும் மெயின்டைன் செய்ய முடியாது. எனவே இப்படி கிடைத்தால் சந்தோஷமாக ஒரு டிரைவ் போய்விட்டு பத்திரமாக அவர்களிடம் ஒப்படைத்து விடவேண்டும். அது தான் நாம் செய்ய வேண்டியது என்றான். கிட்டத்தட்ட ஒருமணி நேரப்பயணம் அது. ஆனால் நேரம் போனதே தெரியவில்லை அவளுக்கு. காரின் சொகுசு அப்படி அவளைக் கிறங்க அடித்திருந்தது. அதற்குள்ளாகவா வந்து விட்டோம் என்று கேட்டாள்.

ஆமாம் என்று சிரித்தவாறே சொல்லிக்கொண்டுகாரை விட்டு இறங்கினான் சுனில். அவளும் ஆடிக் காரை விட்டு இறங்க மனம் இல்லாமல் இறங்கினாள். அப்படியே நாள் கணக்காக அதில் பயணிக்க மாட்டோமா என்று இருந்தது அவளுக்கு. ஆனால் சுனில், இதைவிட உள்ளே இன்னும் ஃபன் இருக்கிறது சுனிதா, வா என்றான்.

இது போன்ற இடங்களுக்கு வந்திராததால் அது என்ன என்று அவளுக்கு விளங்க வில்லை. சுனில் விளக்கினான். அது ஒரு ஹாலிடே ரிசார்ட். முழு நாள் அல்லது அரைநாளுக்கு பணம் கட்டவேண்டும். குடும்பமாகவோ அல்லது அலுவலத்தின் மூலமாகவோ அல்லது நண்பர்களாகவோ வரலாம். நாள் முழுவதற்கும் உண்வு, தங்குமிடம் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான் பணம் வசூலிப்பார்கள். அதே போல நாள் முழுவதும் விளையாட, நிறைய விளையாட்டுகள் உண்டு. இண்டோர் மற்றும் அவுட் டோர் விளையாட்டுகள் இரண்டும் உண்டு. அவை வேண்டாம் என்றால் ஹாய்யாக ஒய்வெடுக்க முடியும். இல்லையா நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்க முடியும். அங்கு செயற்கை நீரூற்றுகள், செயற்கை அருவிகள், அடர்த்தியான காடுகள், மலையேற்றம் என்று என்னென்னவோ வசதிகள் இருக்கின்றன என்றான்.

இங்கு இருந்தால் நேரம் போவதே தெரியாது’ என்று சொன்னான் சுனில். கேட்க கேட்க ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. எப்படியெல்லாம் அனுபவிக்கிறார்கள் பணம் இருப்பவர்கள் என்று தோன்றியது அவளுக்கு. அவளின் முகத்துக்கு எதிரே சொடக்கு போட்டான் சுனில். என்ன ஆச்சு என்றான்.

அவள் சிரித்தவாறே ஒன்றும் இல்லை என்று சொன்னாள். வா, நாமும் ஜோதி இல் ஐக்கியமாகிவிடலாம் என்று இவளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். இவளுக்கு அந்த ஆடி கார் ஓனருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றியது. சுனிலிடம் அதை வெளிப்படுத்தினாள். அவன் சிறிது யோசித்தான். பிறகு சரி என்று சொன்னான். அவரைப்பார்க்கும் பொழுது சொல்லிக்கொள்ளலாம் என்று சொன்னான். இவளும் சரி என்றாள்.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:51 pm

அங்கு ஹோட்டலில் பார்த்த சில பெண்கள் ஏற்கனவே இங்கு வந்திருந்தார்கள். அவர்கள் இவளைப்பார்த்து புன்னகைத்தார்கள். இவளும் பதிலுக்கு புன்னகைத்தாள். சுனிலும் அவர்களுடன் நீ போய் விளையாடலாம். ஆனால் ரொம்ப பேச்சு வைத்துக் கொள்ளாதே என்று சொன்னான். இவளும் சரி என்று தலை அசைத்தாள். நான் இங்கு சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னான். இவளும் அந்தப் பெண்களுடன் சேர்ந்து கொண்டாள். அவர்கள் நீச்சல் குளத்திற்கு போவதற்காக தயார் ஆகிக் கொண்டிருந்தார்கள். இவளுக்கும் நீச்சல் அடிக்க ஆசையாக இருந்தது.

ஆனால் அதற்கான உடைகள் அவளிடம் இல்லை இப்பொழுது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் அங்கு இருந்த உதவியாளினி, மேம், இங்கு எல்லாமே இருக்கிறது, நீங்கள் அங்கு போய் உடை மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னாள். ஓ, அப்படியா,என்று கேட்டுக்கொண்டு, அந்த அறைக்குப் போய், ஸ்விம்மின் சூட்டில் திரும்பி வந்தாள்.

ஏறக்குறைய அங்கிருந்த எல்லோரின் கண்களும் இவள் பக்கம் திரும்பின. அத்தனை வடிவாக இருந்தாள் அவள். ஆர்வமாக நீச்சல் அடித்தாள். எல்லோரும் பார்க்கிறார்கள் என்பது ஒரு போதையைத்தந்தது அவளுக்கு. நீச்சல் குளத்தை விட்டு  ஒய்யாரமாக எழுந்து நடந்து வந்தாள். எல்லோரும் திரும்பி திரும்பிப் பார்த்தார்கள். யாரோ விசில் கூட அடித்தர்கள். இவளுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. உடை மாற்றிக் கொண்டதும் பசித்தது. சுனிலைக் காணவில்லை. அவளுடன் நீச்சல் அடித்த பெண்களில் ஒருத்தி இவளுடன் உடை மாற்ற வந்தவள் சொன்னாள், உணவு ஒரு பெரிய ஹாலில் பறிமாரப்படும் அல்லது அவரவர்கள் அறை இல் பறிமாறப்படும் என்று சொன்னாள். இவள் சுனில் எங்கு இருக்கிறான் என்று தெரியவில்லை என்று சொன்னதும், ரூமுக்கு போய் பார்க்க சொன்னாள் அவள்.

இவள் ரூம் என்று இழுக்கவே, ரிசப்ஷனில் போய் கேட்டால் உங்கள் அறை பற்றித் தெரியும் என்று சொன்னாள். அவளுக்கு நன்றி தெரிவித்து விட்டு இவள் ரிசப்ஷன் நோக்கி சென்றாள். அங்கு போய் கேட்டதும் அவள் இவள் பெயரைக் கேட்டுக் கொண்டு ரூமின் சாவியைத் தந்தாள். ஸ்னாக் வகைகளை அறைக்கு அனுப்ப சொல்லிவிட்டு இவள் ரூமுக்கு சென்றாள்.

மிக அழகான அறை அது. இவள் நுழைந்து சில நிமிடங்களிலேயே ஒரு பணியாள் ஒரு அழகான தள்ளுவண்டியில் சில பல உணவு வகைகள் மற்றும் பழச் சாறும் கொண்டுவந்தான். இவளுக்கு இருந்த பசிக்கு நன்றாக சாப்பிட்டாள். மனமார சுனிலை வாழ்த்தினாள். இப்படிப்பட்ட வேலை தந்தானே என்று மகிழ்ந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு நீச்சல் அடித்ததாலும், நன்றாக உண்டதாலும் தூக்கம் கண்களை சுழற்றிக்கொண்டு வந்தது. அப்படியே கட்டிலில் சாய்ந்து உறங்கிப்போனாள்.

யாரோ கதவைத்திறந்து கொண்டு உள்ளே வருவது போல இருந்தது அவளுக்கு. ஆனால் அவளால் எழுந்திருக்க முடியவில்லை. கை கால் களில் அப்படி ஒரு ஒத்துழையாத் தன்மை. யாரோ அவளை அள்ளி எடுத்தர்கள். இவள் எத்தனையோ தடுத்தும் தன்னைக் காத்துக்கொள்ள முடியவில்லை அவளால். ஒரு மயக்க நிலையிலேயே எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. எத்தனை நேரம் அப்படியே கிடந்தாளோ தெரியாது. தன் உணர்வு வந்ததும் தான் பார்த்தாள் ஒரு ஒட்டு துணி கூட இல்லை அவள் உடம்பில். பகீர் என்றது அவளுக்கு. அங்கங்கே சிதறிக்கிடந்த தன் உடைகளை எடுத்து அணிந்து கொண்டாள்.

தனக்கு நேர்ந்ததை உணர்ந்து கொண்டாள், ஆனால் என்ன யோசித்தும் யார் என்று தெரியவில்லை அவளுக்கு. சுய இரக்கத்தில் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது அவளுக்கு.  சுனில் வரட்டும் என்று காத்திருந்தாள். ஆனால் அவன் வரவே இல்லை.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:54 pm

மாலை ஆனதும், ரிசப்ஷனில் இருந்து இவளுக்கு போன் வந்தது. அறையை காலி செய்யச் சொல்லி. இவள் சுனிலைப் பற்றிக் கேட்டாள். அதற்கு அவள் சுனில் இவளுக்காக ஒரு காரை விட்டு விட்டு சென்றிருப்பதாக சொன்னாள். எனவே, வேறு வழி இல்லமல் இவள் தன் வீட்டுக்கு கிளம்பினாள்.

வந்ததும் அலுப்பு தீரவும் தன் மனதை ஆற்றிக் கொள்ளவும் குளித்தாள். ஆனாலும் தன் மேல் பட்ட கறை தீராது என்று அவளுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனால் அதைத்தவிர வேறு ஒன்றும் செய்ய இயலாதவளாகவே இருந்தாள் அவள். அழுகையும் ஆத்திரமும் கொண்டாள்.

அவன் முதல் நாளே இவளுக்கு ஒரு சிம் கார்ட் தந்திருந்தான். அந்த எண்ணில் தான் அவன் அவளை தொடர்பு கொள்வது வழக்கம். இவளாக அவனை அழைத்தது இல்லை. இன்று வீட்டுக்கு வந்ததும் அவனைத் தொடர்பு கொண்டாள். ஆனால் அவன் போனை எடுக்கவே இல்லை. சிறிது நேரத்தில் எப்பொழுதும் போல மெஸேஜ் வந்தது அவளுக்கு. அடுத்த நாள் வரவேண்டிய இடம் பற்றிய விவரம் அதில் இருந்தது.

அப்பொழுதும் அவளால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவன் போனை எடுக்கவே இல்லை. WHATS APP இல் CHAT மட்டுமே செய்தான். இவள் தான் உடனடியாக அவனுடன் பேச விரும்புவதாக அடித்தாள். ஆனால் அவன் அதைப் பற்றிக் கவலைப்படாதவன் போல, எல்லாம் காலையில் பார்க்கும் போது பேசிக் கொள்ளலாம் என்று பதில் அடித்தான். கூடவே குட் நைட்டும் அடித்துவிட்டான்.
வேறு வழி இல்லாமல் ,யாரிடம் புலம்புவது என்று தெரியாமல் அப்படியே உட்கார்ந்து விட்டாள். எத்தனை நேரம் அப்படி இருந்தாள் என்று தெரியாது அப்படியே சரிந்து படுத்து தூங்கிவிடாள், சாப்பிடக் கூட இல்லை. அலாரம் அடித்ததும் தான் எழுந்தாள்.

பரக்க பரக்க கிளம்பினாள். இன்று வேறு ஒரு ஹோட்டலை அடைந்தாள். அவசரமாக கிளம்பியதால் அவள் எதுவும் சாப்பிடவில்லை. காபி மட்டுமே குடித்திருந்தாள். எனவே, ரிசப்சனிஸ்டிடம். சுனில் எப்பொழுது வருவான் என்று கேட்டாள். அதற்கு அவள் அவர் உங்களை உணவருந்த சொன்னார். நீங்கள் உணவு அருந்துங்கள் வந்துவிடுவார் என்று அவள் சொன்னாள். இவளும், சரி, அறைக்கே உணவு அனுப்பும்படி கேட்டுக் கொண்டாள்.

சுனில் வந்ததும் நாக்கை பிடுங்கிக் கொள்வது போல நாலு கேள்வி கேட்கவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. வன்மமாக காத்திருந்தாள். அதுவரை உணவு கூட உண்னக்கூடாது என்று தான் தோன்றியது அவளுக்கு. ஆனால், அன்றும் வகைவகையான உணவுகள் வந்தன, பழ சாறும் வந்தது. அதைப்பார்த்ததும் அவள் மனம் மாறியது. காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால், நல்ல பசி என்பதால் நன்கு உண்டாள்.

வரட்டும் சுனில். வந்ததும் இருக்கு அவனுக்கு இன்று என்று எண்ணினாள். ஆனால் வந்தது…..

தொடரும்…….

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 21, 2020 10:55 pm

நேற்று போலவே சிறிது நேரத்தில் ஒருவித மயக்கம் அவளை ஆட்கொண்டது. அதே நேரத்தில் அறைக்கதவு திறந்தது. ஆனால் இன்று வந்தது இரண்டு பேர். அவர்கள் இருவருமே இவளைக் கையாண்டார்கள். எல்லாம் முடிந்து அவர்கள் போகும் வரை இவளால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. அசட்டு சிரிப்பு சிரித்தவாறு இருந்தாள் அவ்வளவுதான்.

மீண்டும் இவள் உணர்வு பெற்ற போது எல்லாம் முடிந்திருந்தது. ஓடிப்போய் உடைகளை எடுத்து அணிந்து கொண்டாள். அழுகையும் ஆத்திரமும் அவமானமும் ஒரு சேரத்தாக்கியது அவளை.
அழுது அழுது ஓய்ந்த போழுது ரிசப்ஷனில் இருந்து இவளுக்கு போன் வந்தது. மீண்டும் உணவு வேண்டுமா அல்லது வீட்டுக்கு போகப் போகிறாளா என்று அறிந்து கொள்ளவே அந்த போன். இவள் வீட்டுக்கு போக விரும்புவதாக சொன்னதும், அவள் சொன்னாள் இவளுக்கான கார் காத்திருப்பதாக. எனவே, இவள் கிளம்பினாள். கீழே வந்ததும் இவள் அவளிடம் சுனிலப் பற்றி விசாரித்தாள். அதற்கு அவள் அவர் இன்று மிகவும் பிசி என்று சொல்லித்தான் நான் உங்களைக் கேட்டேன். காத்திருக்கிறீர்களா அல்லது கிளம்புகிறீர்களா என என்று சொல்லி புன்னகைத்தாள். இவளிடம் வேறு என்ன கேட்பது? என் அறைக்கு வந்தவர்கள் யார் என்றா?...ம்ஹும் முடியாது.. எனவே வாய் மூடி மௌனியாக வீடு திரும்பினாள்.
மிகவும் அவமானமாக இருந்தது. காலை இல் அந்த அவசரத்திலும் அருணுடன் பேசினாள். அவன் இவளின் குரலை வைத்தே என்ன ஆச்சு என்றான். கொஞ்சம் சளி என்று சொல்லி சமாளித்தாள். இன்றும் இப்படி என்றதும் என்ன செய்வது யாரிடம் சொல்வது என்றே தெரியவில்லை அவளுக்கு. அவன் கூப்பிட்டால் இனி போகக்கூடாது என்று முடிவெடுத்தாள். அவன் கொடுத்த சிம்மை தூக்கிப் போட்டுவிட்டால் என்று யோசித்தாள். ஆனால் அவனுக்கு இவள் வீடு தெரியும். இவளின் போன் நம்பர் தெரியும்….ம்ம்.. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே வீடு வந்து விட்டது.
கைப்பையை சோபாவில் போட்டாள். இப்பொழுதுதான் ஒன்று உரைத்தது அவளுக்கு. அதாவது இரண்டு நாட்களாக அவன், அவள் கைப்பையில் பணம் ஏதும் வைக்கவில்லை என்று. அடப்பாவி என்று வாய் விட்டு கத்தினாள். சுனிலை போனில் தொடர்பு கொள்ளப்பார்த்தாள்.

இன்றும் முடியவில்லை. நாளை கண்டிப்பாக அங்கு போய் எதுவும் உண்ணக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள். கீழேயே அவனுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தாள். மறுநாள் இவள் முதல் முதலில் போன ஹோட்டலுக்குத்தான் போக வேண்டி இருந்தது. இவள் போனதுமே அந்த ரிசப்ஷனிஸ்ட் , மேம், உங்கள் அறையை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள், ஒரு 10 நிமிடங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும், சாரி’ என்றாள். இவளுக்கு உள்ளூர சந்தோஷமாகவே இருந்தது. தான் நினைத்தது போலவே நடந்ததில் கொஞ்சம் திருப்தி அவளுக்கு. அதுவும் தான் கேட்காமலேயே.
அங்கு இவளைப் போல பலரும் அமர்ந்து கொண்டிருந்தர்கள். ஒரு பணியாள் எல்லோருக்கும் வெல்கம் டிரிங்க் தந்து கொண்டிருந்தான். இவளிடமும் நீட்டினான். முதலில் வேண்டாம் என்று மறுத்தாள் அவள். அவனோ இது வெறும் பழச்சாறுதான் வேறு ஒன்றும் இல்லை என்று சொல்லவே, இத்தனை பேர் குடிக்கிறார்கள் இதில் தனக்கு மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது என்று எண்ணி வாங்கிக் கொண்டாள்.
இவள் அதை சுவைத்து குடித்து முடிக்கவும், அந்த அழகிய ரிசப்ஷனிஸ்ட் இவளை அடைந்து உங்கள் அறை தயார் மேடம் என்று சொல்லவும் சரியாக இருந்தது. புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு சாவியை வாங்கிக்கொண்டாள். ‘ஆங்’ சுனில் என்று ஆரம்பித்ததுமே அவள் புன்னகையுடன், இப்பொழுதுதான் தொடர்புகொண்டார், வந்து விடுவதாக சொன்னார். உங்களிடம் சொல்லவில்லையா என்று கேட்டாள். இவள் அதற்கு , வழிந்தவாறே, என் போன் சைலண்டில் உள்ளது போல இருக்கு ‘ என்று சொல்லியவாறே நடையைக் கட்டினாள்.

அறைக்கு வரும்பொழுதே கண்களை சொருகியது அவளுக்கு. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அவளுக்கு விளங்கிவிட்டது. ஐயோ இன்றும் மோசம் போனோமே என்று மனதில் மட்டுமே அலர முடிந்தது அவளால். ம்ம்.. எல்லாம் முடிந்து மதியம் தான் அவளால் கண்ணைத் திறக்க முடிந்தது. எப்பொழுதும் போல கையாலாகாத்தனத்துடன் வீடு திரும்பினாள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கப் போகிறோம் என்கிற பயம் அவள் வயிற்றைப் பிசைந்தது.

தொடரும்.....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக