புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
156 Posts - 79%
heezulia
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
3 Posts - 2%
Pampu
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
1 Post - 1%
prajai
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
321 Posts - 78%
heezulia
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
8 Posts - 2%
prajai
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
3 Posts - 1%
Barushree
உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_m10உங்களுக்கு முதல் பிரசவமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு முதல் பிரசவமா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jan 11, 2010 5:48 am

கர்ப்பகாலத்தின்போது இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் குழந்தை கறுப்பாய் பிறக்கும் என்று சில வீடுகளில் சொல்வார்கள். எங்கே குழந்தை கறுப்பாகப் பிறந்துவிடுமோ என்று பயந்தே பெரும்பாலான பெண்கள் இதனால் இரும்புச் சத்து மாத்திரைகள் சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறார்கள். இது ரொம்பவும் தவறு.


நம்மூர்ப் பெண்களுக்கு - அனீமியா - என்று அழைக்கப்படும் ரத்தசோகை நோய் மிகவும் பரவலாக இருக்கிறது. இது இரும்புச் சத்து குறைவால் ஏற்படுகிறது. வேறு பல வளர்ந்த நாடுகளில் உள்ள பெண்களுக்கு இந்த நோய் ஏற்படுவதில்லை.



காரணம் அவர்கள் தங்கள் உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியே சத்துக் குறைவு இருந்தால் அதற்கான மாத்திரைகள் சாப்பிட்டு அதை உடனடியாக சரி செய்து கொள்கின்றனர்.





எதனால் இந்த இரும்புச் சத்து தேவை என்பதைப் பார்ப்போம்.. நம் உடலில் இரும்புச் சத்து குறையும் போது ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்கிற ஒரு பொருள் குறைந்துவிடுகிறது. இந்த ஹீமோகுளோபின்தான் பிராணவாயுவை உடலில் எல்லா பகுதிகளுக்கும் சமமாக எடுத்துச் செல்வதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் அளவு ஒருவருக்கு குறையும்போது உடலின் பல்வேறு பாகங்களுக்கு பிராணவாயு சரிவர கிடைக்காமல் போகிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில் Heart failier கூட ஆகலாம்.



இரும்புச் சத்து குறைபாடு உள்ள சாதாரண பெண்களுக்கே இப்படியென்றால் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கோ ஹீமோகுளோபின் அளவு குறைவதோடு உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைந்து அவருடைய உடம்பு பலவீனமடைவதோடு உள்ளிருக்கும் குழந்தையும் பலவீனமடைகிறது. மேலும் மேற்சொன்ன மூச்சுத்திணறல் பிரச்னைகளும் ஏற்படும். அதனால் இரும்புச் சத்து குறைவாக உள்ள எல்லாப் பெண்களுமே உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.



மருத்துவரின் ஆலோசனை பெற்று இரும்புச் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு வரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் என்றால் ரத்தசோகை இருக்கிறதோ இல்லையோ.. அவர்கள் பேறு காலம் முழுவதுக்குமே இரும்புச் சத்து மாத்திரைகளைக் கட்டாயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


குழந்தை கறுப்பாகப் பிறந்துவிடுமோ என்று இந்த விஷயத்தில் பயப்பட வேண்டிய அவசியம் ஏதுமில்லை. குழந்தை எந்த நிறத்தில் பிறக்கும் என்பது மரபு வழியாக தீர்மானிக்கப்படுகிறது. சாதாரண இரும்புச் சத்து மாத்திரை சாப்பிடுவதால் எல்லாம் சிவப்பாகப் பிறக்கவேண்டிய குழந்தை தடாலடியாகக் கறுப்பாக மாறிவிடாது. கர்ப்பகாலத்தின் போது மாம்பழம் போன்ற வேறு பல விஷயங்களை சாப்பிட்டாலும் குழந்தை கறுப்பாகிவிடும் என்ற நம்பிக்கையிலும் உண்மை இல்லை. அதேபோல குங்குமப்பூ சாப்பிட்டு வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்ற நம்பிக்கையும் பொய்.



சிலர் இரும்புச் சத்து மாத்திரைகளைப் பேறு காலத்தின் ஆரம்பத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்து எட்டாவது மாதம் போல நிறுத்தி விடுகிறார்கள். கேட்டால் - இதுக்கு மேல மாத்திரை கொடுத்தா குழந்தையோட சைஸ் பெரிசாகி, சிசேரியன் பண்ணி எடுக்க வேண்டியதாகிவிடும்...- என்கிறார்கள். இந்த நம்பிக்கையும் தவறுதான். இவர்கள் முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளவேண்டும். நாம் எடுத்துக் கொள்வது எந்த உணவாகவோ மாத்திரையாகவோ இருந்தாலும் அதில் தனக்குத் தேவையான சத்துக்களை மட்டுமே நம்முடைய உடல் உறிஞ்சுக் கொள்ளும். மீதமுள்ளவை வேறு பல வழிகளில் உடலிலிருந்து வெளியேற்றப் பட்டுவிடும். அதனால் இதில் பயப்பட ஒன்றுமில்லை.



பிரசவத்தின்போது பெண்களுக்கு ரத்த இழப்பு அதிகமாக ஏற்படும். நோர்மல் பிரசவத்தின் போது 500 மில்லி அளவு (அல்லது அதற்கு மேலும்) சிசேரியனின் போது 1000 மில்லி அளவு வரைக்கும் (அல்லது அதற்கு மேலும்) ஒரு பெண்ணுக்கு இரத்த இழப்பு ஏற்படலாம். இது நார்மலான ஒரு விஷயம். இந்த இழப்பை ஈடுசெய்யவும், குழந்தை பிறந்ததும் அதற்கு பாலூட்டவும் தாய்க்கு இரும்புச் சத்து அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. பேறுகாலத்தின்போது தாய் தொடர்ந்து சாப்பிட்டு வந்த இரும்புச் சத்து மாத்திரைகள்தான் இந்த நேரங்களில் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.



கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு இரும்புச் சத்து எவ்வளவு அவசியம் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...



ஓ.கே. இனி பிரசவத்துக்கு நம்மை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது பற்றி பார்ப்போம்...

36 வாரங்கள் ஆனதும் தாய் பிரசவத்துக்குத் தயாராகிவிடவேண்டும். முதலில் பிரசவத்துக்கு மனதளவில் தாய் தன்னைத்தானே தயார்படுத்திக் கொள்ளவேண்டும். இதில் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மருத்துவருக்கு முக்கிய பங்குண்டு. - எந்த சந்தர்ப்பத்திலும் உனக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்..- என்று ஒவ்வொரு கட்டத்திலும் அந்தப் பெண்ணுக்கு நம்பிக்கைக் கொடுக்க இவர்கள் தவறக்கூடாது. இதுவே பாதி பிரச்னையைத் தீர்த்துவிடும்.



சிலர் வேலை காரணமாக தங்கள் குடும்பங்களைவிட்டு வெகுதூரத்தில் செட்டிலாகி இருப்பார்கள். இவர்களுடைய தாயோ அல்லது மாமியாரோ பிரசவத்தின் போதுதான் ஊருக்கே வரமுடியும் என்கிற நிலையில் இருக்கலாம். இப்படி அத்தனை உதவி இல்லாத பெண்களுக்கு உதவுவதற்காகவே சில மருத்துவர்கள் Prenatal வகுப்புகளை நடத்தி வருகின்றனர். பிரசவம் பற்றிய பயத்தைப் போக்குவது தொடங்கி அதற்கு எப்படியெல்லாம் நம்மைத் தயார் படுத்திக் கொள்வது மற்றும் பிரசவத்தை சுலபமாக்க சில பிரத்தியேக பயிற்சிகளைக் கற்றுக் கொடுப்பது என்று இந்த வகுப்புகள் மிக உபயோகமாக இருக்கும். இதுபற்றி நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். வீட்டில் பெரியவர்களின் உதவி இல்லாதவர்கள் இந்த Prenatal வகுப்புகளுக்குத் தொடர்ந்து சென்று வந்தால் பிரசவத்தை positive ஆக எதிர்கொள்ளலாம்.



மழை பெய்வதும், குழந்தை பிறப்பதும் எப்போது என்பது மகேசனுக்கு மட்டுமே தெரியும் என்பார்கள்! உண்மைதான். தாய்க்கு எப்போது பிரசவ வலி ஏற்படும் என்று சொல்வது மிகக் கடினம்! அதனால் பிரசவத்துக்கு தேவையான மெட்டர்னிட்டி பையை கர்ப்பமான பெண்கள் முன்கூட்டியே ரெடி செய்து கொள்ளவேண்டும். அதில் தனக்கான நைட்டி, சோப்பு சீப்பு முதலிய அத்தனை விஷயங்களையும், குழந்தைக்கு ஏற்கனவே வாங்கி வைத்த நாப்கின்கள் முதலானவற்றையும் எடுத்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பையைத் தாய் தயார் செய்வதற்கு முன்னரே ஒரு மினி ஷொப்பிங் சென்று வருவது நல்லது. அப்போதுதான் குழந்தைக்கான சோப்பு, எண்ணெய், ஷாம்பு, சொக்ஸ், உடைகள், கொசுவலை ஆகியவற்றைப் பார்த்துப் பார்த்து தேர்வு செய்து வாங்க முடியும்.



பிரசவத்துக்குப் பிறகு சில மாதங்கள் வரைக்கும் தாய் வெளியே செல்ல முடியாது என்பதால்தான் முன்பாகவே இதுபோல ஷாப்பிங் சென்று வரவேண்டும் என்கிறேன். என்ன இருந்தாலும் தாய் தன் பட்டுக்குட்டிக்காக பார்த்துப் பார்த்து தேர்வு செய்யும் பொருள்களைப் போல மற்றவர்கள் (அது கணவராகவே இருந்தாலும்...) வாங்கி வரும் பொருட்கள் இருக்காதில்லையா..



36 வாரங்களானதும் மருத்துவர், தாய்க்கு பிரசவவலிக்கான அறிகுறிகள் என்னென்ன, எதுபோன்ற வலியெடுத்தால் உடனே தன்னைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் தெளிவாக சொல்லிக்கொடுப்பார்.


முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண்களுக்கு (ஏன் சில சமயங்களில் ஏற்கனவே பிரசவமானவர்களுக்கும் கூட) நிஜ பிரசவவலி எதுவென்று சரியாக சொல்லத்தெரியாது. பிரசவத்துக்கு முன் வரக்கூடிய சில இயல்பான வலிகளை (இதை ஆங்கிலத்தில் false Pain என்போம்) பிரசவ வலி என்று நினைத்துப் பதறிப்போய் மருத்துவமனைக்கு அரக்கப்பரக்க வந்துவிடுவார்கள். பிரசவவலி எது என்பது சரியாகத் தெரியாததால் அந்தப் பெண்களுக்கும் அவஸ்தை. அவருடன் வரும் பிறருக்கும், ஏன், மருத்துவருக்கும் அவஸ்தைதான்.



அப்போ நிஜ வலியை எப்படித்தான் கண்டு பிடிப்பது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குப் பிரசவலி போலவே தெரியக்கூடிய வலிகள் - False Pain - பற்றி முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். இதில் இரண்டு வகையுண்டு.


பேறுகாலம் நெருங்கும் சமயத்தில் குழந்தையின் பின் தலை, தாயின் இடுப்பு எலும்பில் பொதியும். முதல் பிரசவத்தை எதிர் கொள்பவர்களுக்கு இது 34-35 வாரத்துக்குள் நிகழும். மற்றவர்களுக்கு பிரசவவலி எடுக்கும் சமயத்தில் இது பெரும்பாலும் நிகழலாம். இப்படி இடுப்பு எலும்பில் குழந்தையின் தலை பொதியும் போது வலி ஏற்படும். இதை ஆங்கிலத்தில் Head fitting Pain என்போம். முதல் பிரசவத்தை எதிர்கொள்ளும் பெண், இதுதான் பிரசவ வலியோ என்று நினைத்து பயந்துவிடுவார். இது ஒரு வகை false Pain.



இரண்டாம் வகை வலி, பிரசவத்துக்கான நாள் நெருங்க நெருங்க வரலாம். இந்த வகை வலி இடைவெளி விட்டுவிட்டு வரும். இதில் சில நொடி வலிக்குப் பிறகு சாதரணமாகி விடுவார்கள். இதை Practice Contraction என்போம். அதாவது, பிரசவத்துக்கு தன்னைத் தயார் படுத்திக் கொள்ள நம்முடைய கர்ப்பப்பை Practice செய்கிறது என்போம். பேறு காலம் நெருங்கத் தொடங்கியதுமே கர்ப்பமடைந்த பெண்களுக்கு கர்ப்பப்பை இப்படி அடிக்கடி சுருங்கி விரியத் தொடங்கும். அந்த சமயத்தில், பீரியட்ஸின்போது ஏற்படும் வலி போன்றதொரு வலி ஏற்படுவதாக சொல்வார்கள். ஆனால் இதுவும் false Pain தான்.



இதுபோன்ற வலி வரும்போது சம்பந்தப்பட்ட பெண் பதட்டப்படாமல் அமைதியாக தன்னைத்தானே 2-3 மணி நேரத்துக்குக் கண்காணித்துக் கொள்ளவேண்டும். எத்தனை நேர இடைவெளி விட்டு வலி வருகிறது என்பதைப் பார்க்கவேண்டும். நிஜப் பிரசவ வலி ஏற்படும் சமயத்தில் இரண்டு வலிகளுக்கு இடையேயான நேர அளவு குறையத் தொடங்கும். அதேபோல நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக் கொண்டே போகும். கர்ப்பமுற்ற பெண் தன்னைத்தானே அமைதியாகக் கண்காணிக்கும்போதுதான் இது தெரியும்.





by Gayathry உங்களுக்கு முதல் பிரசவமா? 678642

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 11, 2010 10:39 am

நன்றி



உங்களுக்கு முதல் பிரசவமா? Riki
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jan 11, 2010 10:41 am

rikniz wrote:நன்றி

நானும் நீங்க உங்க அனுபவத்த சொல்லப்ரோறீங்க எண்டு நினைத்தேன்

rikniz
rikniz
தளபதி

தளபதி
பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Postrikniz Mon Jan 11, 2010 10:44 am

rifas wrote:
rikniz wrote:நன்றி

நானும் நீங்க உங்க அனுபவத்த சொல்லப்ரோறீங்க எண்டு நினைத்தேன்

இன்னொருத்தருடைய அனுபவத கேட்க ஆசைதான்



உங்களுக்கு முதல் பிரசவமா? Riki
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jan 12, 2010 4:57 am

rikniz wrote:
rifas wrote:
rikniz wrote:உங்களுக்கு முதல் பிரசவமா? 678642

நானும் நீங்க உங்க அனுபவத்த சொல்லப்ரோறீங்க எண்டு நினைத்தேன்

இன்னொருத்தருடைய அனுபவத கேட்க ஆசைதான்


உங்களுக்கு முதல் பிரசவமா? 838572 உங்களுக்கு முதல் பிரசவமா? 56667

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக