ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்

Go down

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Empty 16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்

Post by ayyasamy ram Wed Sep 16, 2020 9:43 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1
-
தமிழ்த் திரையுலகின் அறிமுக இயக்குநராக பாரதிராஜா
திரைக்குள் வந்து புதிய பாதையை உருவாக்கி, தமிழ்த்
திரைப்படங்களை நாடக ஸ்டூடியோக்களை விட்டு நிஜக்
கிராமங்களைத் தேடி ஓட வைத்த 16 வயதினிலே
திரைப்படம் வெளிவந்த நாள் இன்று.

கடந்த 1977ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தமிழகம் முழுவதும்
வெளியாகி 43 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து பேசப்படும்
திரைப்படங்களின் வரிசையில் கிரீடம் தாங்கி நிற்கும்
திரைப்படம்.

தயாரிப்பாளர் எஸ்.ஏ. ராஜ்கண்ணுவின் அம்மன் கிரியேசன்ஸ்
தயாரிப்பில் புதிய இயக்குநர் பாரதிராஜாவின் கதை, திரைக்கதை,
இயக்கத்தில், இளையராஜாவின் இசையமைப்பில், பி. கலைமணி
வசனத்தில் நிவாஸ் ஒளிப்பதிவில், கமல் ஹாசன், ரஜினிகாந்த்,
ஸ்ரீதேவி, காந்திமதி, சத்யஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்.

இத்திரைப்படத்தில் கே.பாக்யராஜ், பாரதிராஜாவின்
உதவியாளராகவும், படத்தில் வைத்தியராகத் தனது சொந்தக்
குரலில் பேசிக் காட்சியளித்த முதல் திரைப்படம்.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் படம் முழுவதும் வரும்
கவுண்டமணியின் பெயர் கெளண்டன் வீரமணி என்றுதான்
டைட்டில் கார்டில் இடம் பெற்றுள்ளது.

அதேபோல் பாடகர்கள் வரிசையில் மலேசியா வாசுதேவனின்
பெயரும் எம்.வாசுதேவன் என்றுதான் இடம் பெற்றுள்ளது.
பின்னாளில் இவர்கள் கவுண்டமணி என்றும், மலேசியா
வாசுதேவன் என்றும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தில் நடிகர்கள் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரத்தின்
பெயர்களான சப்பாணி, பரட்டையன், மயிலு, குருவம்மாள்
என்பதுடன் அறிமுகப்படுத்தப் பட்டது அதுவரை வெளியான
தமிழ்ப்படங்களில் மிகவும் வித்தியாசமாகவும் புதுமையாகவும்
இருந்தது.

கவலையுடன் சேலை கட்டிய பெண்ணொருவர் ரயில்
நிலையத்திற்கு வரும் ரயிலில் யாரையோ எதிர்பார்த்து
காத்திருப்பது போல் திரைப்படம் தொடங்கி பின்னணி வசன
அறிமுகத்துடன் பின்நோக்கிக் காட்சிகளாக மாறி கதை
சொல்லிக் காட்சிகளாக 16 வயதினிலே படம் திரையில் விரியத்
தொடங்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Empty Re: 16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்

Post by ayyasamy ram Wed Sep 16, 2020 10:25 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1_771
கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் தாயாரின்
பதின்ம வயது அழகுப் பெண்ணொருவர் அந்தக்
கிராமத்தில் 10ம் வகுப்பு படித்து முடித்து ஆசிரியையாக
விருப்பம் தெரிவித்து அதற்கான கனவுகளுடன் இருப்பார்.

அவரது தாய்க்கு ஒத்தாசையாக இருக்கும் அநாதையான
சப்பாணியைத் தன் வீட்டில் வைத்து பராமரித்து தனது
சொந்த வேலைகளுக்குப் பயன்படுத்திடும் போது மருமகனே
என்று விளிப்பதால் அவர் ஒருதலையாக மயிலை விரும்புவார்.

ஆனால் மயிலோ அவரது அன்பை ஒட்டுமொத்தமாக
புறக்கணித்து கேவலப்படுத்துவார். அதே கிராமத்தில்
கும்பலுடன் ஒரு ரெளடி போல் வாழும் பரட்டையன்,
பண்ணையார், திருமண நிகழ்ச்சிகள் உள்பட கிராமம்
முழுவதும் சேவகம் செய்து அதில் கிடைக்கும் வருவாயைக்
கொண்டு வாழ்ந்து வருவார் சப்பாணி.

மயிலு பூப்படையும் போது அங்கு வரும் உறவினர்கள் இவ்வளவு
அழகானவளுக்கு பட்டணத்திலிருந்து கோட்டு சூட்டு
போட்டவன்தான் மயிலைக் கட்டிக்க வருவான் எனக் கூற அதே
ஆசையிலிருக்கும் மயிலுக்கு அந்தக் கிராமத்திற்கு கால்நடை
மருத்துவர் சூட்டு கோட்டுடன் வரவே அவரையே விரும்பி காதல்
கொண்டு காதலருக்காக தனது எதிர்கால ஆசிரியர்
பயிற்சியையும் விட்டு விடுவார்.

இதனிடையே மருத்துவரின் விருப்பத்திற்கு பணியாமல் தப்பும்
மயிலிடம் அவரது 16 வயது ஈர்ப்பைத் தெரிவித்து விட்டு நகருக்குச்
சென்று மனைவியுடன் கிராமத்திற்கு வருவார் கால்நடை
மருத்துவர். இந்த நிலையில் மயிலு மருத்துவரைக் காதலித்து
அவரால் ஏமாற்றப்பட்டதாகக் கிராமம் முழுவதும் பரப்பப்படும்
வீண் வதந்திகள் காரணமாக குருவம்மாள் இறந்து போவார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Empty Re: 16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்

Post by ayyasamy ram Wed Sep 16, 2020 10:40 pm

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் 16_vayathinile1_77112
-
உடல்நிலை சரியில்லாமல் தவிக்கும் மயிலு மீது
பரிதாபப்பட்டு வைத்தியரைக் கூட்டி வந்து குணப்படுத்தும்
சப்பாணியின் உண்மையான அன்பை புரிந்து விருப்பம்
கொள்ளும் மயிலு, சப்பாணிக்கு கோபால் என்று பெயர்
மாற்றி அவர் யாருக்கும் சேவகம் புரியக்கூடாது என்றும்,
கோபால் என்றழைக்காமல் சப்பாணி என்று அழைத்தால்
தயங்காமல் அவர்களை அடிக்கவும் நிர்ப்பந்திப்பார்.

மயிலுவின் வாக்கை வேதவாக்காகப் பின்பற்றும் சப்பாணி
தன்னை சப்பாணி என்றழைக்கும் பரட்டையன் மற்றும்
கால்நடை மருத்துவரை அறைந்து விடுவார். இதனைக் கேட்டு
மகிழ்ச்சியுறும் மயிலு, தன்னை அறைந்து விட்டதற்காக
சப்பாணியைத் தாக்கும் பரட்டையன் முகத்தில் காறித் துப்பி
விடுவார்.

தன் பேச்சைக் கேட்டு தனக்காக மட்டுமே வாழும் சப்பாணியைத்
திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்து அவரைத்
தாலி, சேலை, பட்டு வேட்டி, சட்டை வாங்கி வர சந்தைக்கு அனுப்பி
வைப்பார் மயிலு.

மிகவும் உற்சாகமாகப் பாடலுடன் சந்தைக்குச் செல்லும் சப்பாணி
தனக்கும் மயிலுக்கும் திருமணம் என்பதையும் அதற்காகத்தான்
சந்தைக்குச் செல்வதாகவும் பரட்டையன் குழுவினருக்கும் கிராமம்
முழுமையும் தெரிவித்தபடி செல்வார்.

இந்தச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பரட்டையன் தன்
முகத்தில் காறித் துப்பிய மயிலுவைப் பழிவாங்க மிதமிஞ்சிய
மதுபோதையில் வீட்டுக்குள் நுழைந்து மயிலைக் கெடுக்க முயல்வார்.
அதற்குள் வீடு திரும்பும் சப்பாணி மயிலைக் காப்பாற்ற
மேற்கொள்ளும் முயற்சி பலனளிக்காமல் போகவே வீட்டுக்குள்
இருக்கும் பாறையை எடுத்து பரட்டையன் மீது வீசி கொலை செய்து
விடுவார்.

இதனைத் தொடர்ந்து கொலைக்குற்றத்திற்காகக் காவல்துறையினர்
சப்பாணியை அழைத்துச் செல்ல, சப்பாணி வந்து தனக்கு வாழ்வு
தருவான் என்று மயிலு காத்திருப்பதாகப் படம் முடிவடையும்.

கதையாகப் படிப்பதை விடவும் காட்சிகளாகப் பார்ப்பதைப்
பிரமாதப்படுத்தியிருப்பார்கள் பாரதிராஜாவும் ஒளிப்பதிவாளர்
நிவாஸும். கோபத்தில் மயிலால் வீசப்பட்ட மாங்கொட்டை மாமரச்
செடியாக வளர்ந்து சப்பாணியின் பாசமாக மாறியிருப்பதையும்,
பரட்டையன் மயிலை பழிவாங்கச் செல்லும் போது மாமரச் செடியை
மிதித்து செல்வதும், தான் செய்த தவற்றை உணர்ந்து சப்பாணி
மீது அன்பு வளரும் போது மருத்துவருடனான உறவு நெகட்டிவ்களாக
எரிவது, மயிலு கெட்டுப்போனார் என்பதை குருவம்மாளின் எதிரியான
பெண் காதுகள் வழியாகப் பரப்புவது போன்ற மிக அழகான உத்திகள்
தமிழுக்கு புதிதாகவே அமைந்திருந்தன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம் Empty Re: 16 வயதினிலே வெளிவந்து 43 ஆண்டுகள்: கிராமத்துக் காதல் ஓவியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum