ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
நாட்டுப்புறக் கதைகள் Poll_c10நாட்டுப்புறக் கதைகள் Poll_m10நாட்டுப்புறக் கதைகள் Poll_c10 
heezulia
நாட்டுப்புறக் கதைகள் Poll_c10நாட்டுப்புறக் கதைகள் Poll_m10நாட்டுப்புறக் கதைகள் Poll_c10 
E KUMARAN
நாட்டுப்புறக் கதைகள் Poll_c10நாட்டுப்புறக் கதைகள் Poll_m10நாட்டுப்புறக் கதைகள் Poll_c10 
mohamed nizamudeen
நாட்டுப்புறக் கதைகள் Poll_c10நாட்டுப்புறக் கதைகள் Poll_m10நாட்டுப்புறக் கதைகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுப்புறக் கதைகள்

+3
manikandan.dp
tamilparks
சிவா
7 posters

Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty நாட்டுப்புறக் கதைகள்

Post by சிவா Thu Apr 02, 2009 12:31 am

புத்திசாலி மருமகள்
--------------------------------------------------------------------------------

ஒர் ஊரில் செல்வன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். தன் மகனை அறிவுள்ளவனாகவும் நற்பண்பு உள்ளவனாகவும் வளர்த்தான் அவன்.

நாட்கள் ஓடின. மகனும் வளர்ந்து திருமண வயதை அடைந்தான். பெருஞ்செல்வர்கள் பலர் தன் மகளை அவனுக்குத் திருமணம் செய்து நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தனர்.

ஆனால் செல்வனோ எனக்கு வரும் மருமகள் ஏழையாக இருந்தாலும் கவலையில்லை. என் மகனுக்கு அறிவுள்ளவளாக இருக்கவேண்டும். நான் வைக்கும் சோதனையில் வெற்றி பெறுபவளே என் மருமகள் என்றான்.

வந்தவர்களில் பலர், எனக்கு வரும் மருமகள் ஏழையாக இருந்தாலும் கவலையில்லை. என் மகனுக்கு ஏற்ற அறிவுள்ளவளாக இருக்க வேண்டும். நான் வைக்கும் சோதனையில் வெற்றி பெறுபவளே என் மருமகள் என்றான்.

வந்தவர்களில் பலர், என் மகள் சிறந்த அறிவுள்ளவள். நீங்கள் வைக்கும் சோதனையில் கண்டிப்பாக வெற்றி பெறுவாள். என்ன சோதனை? என்று கேட்டார்கள்.

மணப் பெண்ணின் வீட்டிற்கு நானே வருகிறேன், அங்கேயே சோதனை வைக்கிறேன் என்றான் பணக்காரன்.

ஒவ்வொருர் வீடாகச் சென்ற அவன் அவர்கள் வீட்டுப் பெண்ணை அழைத்தான். அவளிடம் ஒரு பணத்தைத்த தந்தான்.

இந்தப் பணத்தில் நான் சாப்பிடும் பொருளையும் குடிக்கும் பொருளையும் வாங்கி வர வேண்டும். அது மட்டும் அல்ல, மீதிப் பணமும் கொண்டு வர வேண்டும் என்றான் அவன்.

அந்தப் பெண்ணோ, நீங்கள் தரும் ஒரு பணத்தில் வயிறார உண்ணக் கூடிய பொருள் வாங்கலாம். அப்படி வாங்கினால் மீதிச் சில்லறை இருக்காது. யாராலும் செய்ய இயலாத செயலை என்னைச் செய்யச் சொல்கிறீர்களே? என்னால் எப்படி முடியும்? என்று சொல்லி அந்தப் பணத்தைத் திருப்பித் தந்து விட்டாள்.

இப்படியே ஒவ்வொரு வீடாக நடந்தது. யாருமே ஒரு பணத்திற்குள் செல்வன் சொன்ன நான்கையும் செய்ய முன் வரவில்லை.

நாட்கள் ஓடின. தன் மகனுக்குத் திருமணம் செய்யக் கூடாது என்ற எண்ணத்தில்தான் செல்வன் இப்படிப் பட்ட சோதனைகளை வைக்கிறான் என்று ஊரார் பேசத் தொடங்கினார்கள்.

அறிவுள்ள பெண் எப்பொழுது கிடைக்கின்றாளோ அப்பொழுதுதான் என் மகனுக்குத் திருமணம் செய்வேன் என்பதில் உறுதியாக இருந்தான் செல்வன்.

பக்கத்து ஊரில் ஏழைப் பெண் ஒருத்தி அறிவு உள்ளவளாக விளங்குகிறாள் என்று கேள்வி பட்டான் அவன்.

நேராக அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றான் அவன். அவளை அழைத்தான். இந்த ஒரு பணத்தைப் பெற்றுக் கொள். இதற்குள் உண்ணும் பொருளையும் குடிக்கும் பொருளையும் விளையாடும் பொருளையும் வாங்கி வர வேண்டும். மீதி சில்லறையும் கொண்டு வர வேண்டும் என்றான்.

இதைக் கேட்ட அவள் சிரித்துக்கொண்டே நானாக இருந்தால் மேலும் ஒரு சோதனை சேர்த்து இருப்பேன் என்றாள்.

என்ன சோதனை? என்று கேட்டான் செல்வன்.

இந்தப் பணத்திற்குள் மாட்டிற்கும் உணவு வாங்கி வரச் சொல்லி இருப்பேன் என்றாள்.

எல்லாவற்றையும் உன்னால் இந்த ஒரு பணத்திற்குள் செய்ய முடியுமா? என்று கேட்டான் அவன்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட அவள் சிறிது நேரத்தில் பெரிய தர்பூசனிப் பழத்துடன் உள்ளே நுழைந்தாள்.

இதன் விலை ஒரு பணம் தான். இதை நீங்கள் அரிந்து உண்ணலாம். இதிலுள்ள நீரை நீங்கள் அருந்தலாம். விதைகளை எல்லாம் ஒன்று இரண்டு மூன்றாகப் பிரித்து விளையாடலாம். நீங்கள் சாப்பிட்டு எஞ்சியதை பிரித்து மாட்டுக்கு கொடுக்கலாம். இந்தாருங்கள் மீதிப் பணம் என்று சொல்லிச் செல்வனிடம் பணத்தையும் பழத்தையும் தந்தாள் அந்தப் பெண்.

மகிழ்ந்த சம்பத், உன்னைப் போன்ற அறிவுள்ள மருமகளுக்காகத்தான் காத்திருந்தேன். அறிவில் நீ என்னையும் மிஞ்சி விட்டாய் என்று பாராட்டினான்.

சில நாட்களுக்குள் செல்வனின் மகனுக்கும் அந்தப் பெண்ணிற்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by சிவா Thu Apr 02, 2009 12:32 am

செவிடு வைத்தியம்
--------------------------------------------------------------------------------

சோழபுரம் என்ற ஊரில் கணபதி என்றொருவன் வசித்து வந்தான். துடியலூர் என்ற ஊரிலிருந்த விவசாயி ஒருவனின் மகளைத் திருமணம் செய்து கொண்டான்.

சோழபுரத்துக்கும் துடியலூருக்கும் நெடுந்தொலைவு. அதனால் அடிக்கடி அவன் மாமனார் வீட்டுக்குப் போக முடிவதில்லை.

கடைசியாக அவன் போய் வந்த போது அவன் காதுகள் நன்றாக இருந்தன. பின்னர் ஒரு விபத்தில் அகப்பட்டுக் கொண்டபோது அவனுடைய இரண்டு காதுகளும் செவிடாகி விட்டன. இது அவனுடைய மாமனார் வீட்டுக்குத் தெரியாது.

திடீரென்று கணபதியின் மாமனார் நோய் வாய்ப்பட்டார். நோய்வாய்ப்பட்டிருக்கும் மாமனாரைப் பார்ப்பதற்காக துடியலூர் சென்றான் கணபதி. போகும் வழியில் தான் செவிடாகி இருப்பதை அவர்களுக்குக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று நினைத்தான்.

அவ்வாறானால் மாமனார் சொல்வது எப்படிக் கேட்கும்? அவர் சொல்வதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? என்று நினைத்தான் கணபதி.

முதலில் போன உடனேயே நாமே பேச்சை ஆரம்பிப்போம்.

போனதும், இப்போது உங்கள் உடல் நிலை எப்படியிருக்கிறது? என்று கேட்போம்.

அதற்கு அவர், முன்னைவிடச் சற்று பரவாயில்லை என்று சொல்லுவார். நாம் அதற்கு இப்பொழுதுதான் என் மனம் மகிழ்ச்சியைடந்தது என்று சொல்லுவோம்.

அடுத்தபடியாக, இப்போது என்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்போம்.

அவர், ஒரு மருந்தின் பெயரைச் சொல்லுவார்.

அதற்கு , அதுவே சிறந்த மருந்து. அதையே தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லுவோம்.

அதற்கு அடுத்தபடியாக, எந்த வைத்தியரிடம் காட்டுகீறிர்கள்? என்பதற்கு ஒரு வைத்தியரின் பெயரைச் சொல்லுவார்.

அவர் பிரசித்தமான வைத்தியர். நல்ல கைராசிக்காரர். தொடர்ந்து அவரிடமே வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தவறாக மாமனார் வீட்டுக்குச் சென்றான் கணபதி.

நேரே மாமானாரின் படுக்கையருகே சென்றான் கணபதி. மாமனாரைப் பார்த்ததும், மாமா, உங்கள் உடம்பு இப்பொழுது எப்படியிருக்கிறது? என்று கேட்டான்.

மாமனார் மிகவும் சோகத்துடன், என்ன சொல்வது? நாளுக்கு நாள் வியாதி அதிகமாகிக் கொண்டே போகிறது. என்னால் தாங்க முடியவில்லை என்றார்.

அதற்கு செவிட்டுப் மாப்பிள்ளை உடனே, இப்பொழுது தான் என் மனம் மகிழ்ச்சியடைந்தது என்றான்.

இதைக் கேட்டதும் மாமனாருக்குக் கோபமாய் வந்தது.

செவிட்டு மாப்பிள்ளை உடனே, இப்பொழுது என்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்? என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்.

எரிச்சலுடன் இருந்த மாமனார், விஷம் என்றார்.

இதைக் கேட்ட செவிட்டு மாப்பிள்ளை முன்பே தயாரித்து வைத்திருந்த, ஆ, அதுதான் நல்ல மருந்து. அதையே தொடர்ந்து சாப்பிடுஙகள் என்ற பதிலைக் கூறினான்.

இதைக் கேட்டதும் மாமனாரின் கோபம் எல்லை கடந்து போய் விட்டது.

இச்சமயத்தில் செவிட்டு மாப்பிள்ளை மூன்றாவது கேள்வியான யாரிடம் வைத்தியம் பார்த்துக் கொள்கிறீர்கள்? என்று கேட்டான்.

கோபத்தின் எல்லையிலிருந்த மாமனார், எமனிடம் வைத்தியம் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

அதற்கு செவிட்டு மாப்பிள்ளை, ஓ அவரே சிறந்த வைத்தியர். அவரிடமே தொடர்ந்து நீங்கள் வைத்தியம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றான்.

இதற்குமேல் மாமனாரால் பொறுக்க முடியவில்லை.

படுக்கையிலிருந்து எழுந்து மருமகனின் கன்னத்தில் ஓங்கி அடித்தார்.

என்ன ஆச்சரியம்,

மாமனார் அடித்த அடியின் அதிர்ச்சியில் இத்தனை நாட்களாகக் கேட்காமல் இருந்த காது அவனுக்குக் கேட்க ஆரம்பித்தது.

காது கேட்க ஆரம்பித்தவுடன் நடந்த செய்தியை உணர்ந்து கொண்டான் கணபதி.

மாமா, என் காது இரண்டும் ஒரு விபத்தில் செவிடாகிவிட்டன. ஒரு வைத்தியர் இதற்கு அதிர்ச்சி வைத்தியம் செய்ய வேண்டுமென்றார். அதற்காகத் தான் உங்களிடம் இம்மாதிரிக் கேள்விகள் கேட்டேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்களுடைய அதிர்ச்சி வைத்தியத்தால் என் செவிடு குணமாகி விட்டது. அதைப் போல உங்களுடைய நோயும் பூரணமாகக் குணடைய வேண்டும் என்று ஆண்டவனைப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்றான் கணபதி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by சிவா Thu Apr 09, 2009 2:25 am

திருட்டுக் கோழி
--------------------------------------------------------------------------------


குப்பாயி தனது குடிசையில் கோழிகளை வளர்த்து வந்தாள். அவற் றை வளர்த்து நல்ல விலைக்கு விற்று மகளுக்குத் தோடு செய்து போட வேண்டும் என்ற ஆசையில் நன்றாக இறைபோட்டு, கொழு, கொழு என்று வளர்த்து வந்தாள்.

இந்தக் கோழிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவற்றைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் குப்பாயி வீட்டிற்கு அடுத்த வீட்டிலிருந்த மாடசாமி மனதில் வளர்ந்து கொண்டே இருந்தது.

தன் மனைவியிடம் பக்கத்து வீட்டு குப்பாயி வளர்க்கும் கோழிகளில் ஒன்று முட்டையிடும் பருவத்தில் உள்ளது.நன்றாகக் கொழுத்துள்ளது. இரண்டு கிலோ எடையிருக்கும். அதைப் பிடித்து வருகிறேன். இன்றே சமைத்துச் சாப்பிட்டு விடலாம் என்றான் மாடசாமி.

ராத்திரி நேரத்தில் பிடிக்கும் போது கோழிகள் சத்தம் போட்டு காட்டிக் கொடுத்து விடுமே. அகப்பட்டுக் கொண்டால் நம் மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறந்துவிடுமே. வேண்டாம் இந்த விபரீதம் என்று பயத்துடன் கெஞ்சினாள் மாடசாமியின் மனைவி.

கோணியை தண்ணீரில் நனைத்துக் கொண்டு போய் கோழியின் மேல் போட்டு அழுக்கி விட்டால் அது சத்தமே போடாது என்று சொல்லிவிட்டு ஒரு கோணியை எடுத்து தண்ணீரில் நனைத்தான்.

ஈரக் கோணியை எடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டின் பின்புறம் போய் கோழியின் மேல் போட்டு அமுக்கினான். கோழி சத்தமே போடவில்லை. வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தான். அவனது மகனோ வெளித்திண்ணையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

மாடசாமி கோழியை அறுக்க ஆரம்பித்தான். அவன் மனைவி வேக மாக மசால் அறைத்து முடித்திருந்தாள். சமையல் முடிந்தது. சாப்பி டுவதற்கு மகனை எழுப்பி வரும்படி கூறினான்.

அவன் உளறுவாயனாச்சே, எங்க வீட்ல கோழி கறின்னு ஊர் முழு தும் தம்பட்டம் அடிச்சிடுவானே என்று யோசித்த மாடசாமி, ஒரு குவளையில் தண்ணீரைக் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான். தூங்கும் தன் மகன் மேல் தண்ணீரைத் தெளித்தான் அவனை எழுப்பினான்.

டேய், எழுந்திரு. மழை பெய்யுது என்று சொல்லிக் கொண்டே மாட சாமி மகனை இழுத்துக் கொண்டு உள்ளே வந்து கதவைச் சாத்தி னான். மூன்று பேரும் கோழிக் கறியைச் சுவைத்துச் சாப்பிட்டார்கள்.

மறுநாள் அதிகாலையில் குப்பாயின் கூச்சல் கேட்டது.

கோழியை எவனோ பிடிச்சிட்டுப் போயிட்டான். அவன் விளங்குவா னா? என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டித் தீர்த்தாள்.

அவளுக்கு பக்கத்து வீட்டு மாடசாமியின் மேல் சந்தேகம். ஆனால் ஆதாரமில்லாமல குற்றம் சுமத்த முடியாதே.

அன்று மாலை கடைத்தெரு வழியாக குப்பாயி வந்து கொண்டிருந்த போது எதிரே மாடசாமியின் மகன் தனியாக வந்து கொண்டிருந் தான்.

அவனை அன்போடு அழைத்துத் தடவிக் கொடுத்து கடலை உருண் டை வாங்கிக் கொடுத்தாள் குப்பாயி.

கண்ணா, நேற்று கோழிக்கறி சாப்பிட்டாயா? என்று கேட்டாள். அவனும் ஆமாம் என்று கூறினான்.

மாடசாமி திருடியது உறுதியாகிவிட்டது. உடனே ஊர் தலைவரிடம் போய் முறையிட்டாள். உடனே ஊர்க் கூட்டம் கூட்டப்பட்டது. தான் திருடவே இல்லை என்று ஒரேடியாக மறுத்து விட்டான் மாடசாமி. அவன் மகனை அழைத்து விசாரிக்குமாறு கேட்டாள் குப்பாயி.
மாடசாமி மகனிடம் ஊர்த்தலைவர் கோழிக்கறி சாப்பிட்டாயா என்று கேட்டார்.

அவனும் ஆமாம் என்றான். மாடசாமி அகப்பட்டுக் கொண்டான் என்று குப்பாயியும் மற்றவர்களும் மகிழ்ந்தனர்.

ஆனால் மாடசாமி அலட்டிக் கொள்ளவில்லை.

ஐயா, அவன் எப்போதோ சாப்பிட்டதை இப்போது கூறுகிறான் என்றான் மாடசாமி.

தலைவர் சிறுவனிடம், தம்பி கோழிக்கறி எப்போது சாப்பிட்டாய்? என்று கேட்டார்.

மழை பெய்த ராத்திரியில் என்றான்.

எல்லோருக்கும் ஆச்சரியம். கோழி திருட்டுப் போன நேற்றிரவு மழை இல்லையே

அப்படியானல் நேற்றிரவு கோழிக்கறி சாப்பிடவில்லை என்பதால், குப்பாயின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by tamilparks Thu Apr 09, 2009 10:11 am

அருமை
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009

http://tamilparks.50webs.com

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by manikandan.dp Mon Jul 29, 2013 2:26 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by ஜாஹீதாபானு Mon Jul 29, 2013 3:43 pm

கதை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by பூவன் Mon Jul 29, 2013 3:48 pm

கதை நன்று பதிவு ரொம்ப பழையது ஆனால்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by ஜாஹீதாபானு Mon Jul 29, 2013 4:04 pm

பூவன் wrote:கதை நன்று பதிவு ரொம்ப பழையது ஆனால்

அதனால படிக்காம விட்டுட்டிங்களா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by krishnaamma Mon Jul 29, 2013 8:03 pm

மூன்றுமே நல்லா கதைகள் சிவாபுன்னகை சூப்பருங்க 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by Muthumohamed Tue Jul 30, 2013 8:40 am

அனைத்தும் அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி 



நாட்டுப்புறக் கதைகள் Mநாட்டுப்புறக் கதைகள் Uநாட்டுப்புறக் கதைகள் Tநாட்டுப்புறக் கதைகள் Hநாட்டுப்புறக் கதைகள் Uநாட்டுப்புறக் கதைகள் Mநாட்டுப்புறக் கதைகள் Oநாட்டுப்புறக் கதைகள் Hநாட்டுப்புறக் கதைகள் Aநாட்டுப்புறக் கதைகள் Mநாட்டுப்புறக் கதைகள் Eநாட்டுப்புறக் கதைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

நாட்டுப்புறக் கதைகள் Empty Re: நாட்டுப்புறக் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum