புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஊறுகாய் Poll_c10ஊறுகாய் Poll_m10ஊறுகாய் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊறுகாய்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 28, 2009 12:57 am

பவுன் குளித்துக் கொண்டிருந்தாள். அவள் நெஞ்சை பார்க்க, பார்க்க அவளுக்கே ஆசையாக இருந்தது. ஒரு செவ்விள இளனியைப் போல் அம்சமாக திரண்டிருந்தது. மகளின் நெஞ்சின் அழகை அறியாத ஆத்தா மீது அவளுக்கு கோபம், கோபமாக வந்தது.

உம் முவர இருக்க லச்சணத்துக்கு உன்னை எவன் கட்டிக்க வரப்போறான்? நம்ம அனத்தனுக்குத்தேன் கொடுக்கணும். நீ போற போக்கைப் பாத்தா அவனயும் தொலைச்சிருவே பொலுக்கே என்று தினத்துக்கும் ஒரு தடவையாவது சொல்லா விட்டால் ஆத்தாளுக்கு அடங்காது.

தன் முவரை இருக்கும் லச்சணத்தை பவுனும் ஒத்துக்கொள்கிறாள். அட்டை கரியான நெறம். எடுப்பாய் நீட்டிக் கொண்டிருக்கும் பல். நடுவில் பள்ளம் விழுந்த சப்பையான மூக்கு. கண்ணாடியில் பார்க்கும் போது அசிங்கமாய் தான் இருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் ஈடுகட்டுவது போல் இந்த நெஞ்சு. சீலை மாராப்பை போடவே அவளுக்கு ஆசையாய் இருக்கும். அப்படி கச்சிதமாய் அமைந்திருந்தது. அவள் வயசு பெண்கள்கூட சூச்சகமாய் இந்த விஷயத்தைபேசி அவள் மீது பொறாமை படுவார்கள. ஊரில் உள்ள இளந்தாரிகளுக் கெல்லாம் இவள் மீது ஆசை தான். அதிலும் காரை வீட்டு பாண்டி ராசு இவளையே சுற்றி, சுற்றி வந்தான். இவளுக்காகவே போன புதன்கிழமை சந்தைக்குப் போய் வளையல், ரவிக் கைத்துணி, சீனி மிட்டாய் எல்லாம் வாங்கி வந்திருந்தான்.

அப்போது அவள் அவர்கள் பிஞ்சையில்தான் வெங்காயம் அருத்துக் கொண்டிருந்தாள். பாண்டிராசு வெங்காயம் அருப் பவர்களை மேற்பார்வை பார்ப்பது போல் பிஞ்சைக்கு வந்தான். இவளையே சுற்றி, சுற்றி வந்தான். பிறகு சற்று தள்ளிப் போய் நின்று கொண்டு ஏ... பவுனு என்று கூப்பிட்டான். அவள் நிமிர்ந்து பார்த்தாள். கூடவே வேலை செய்து கொண்டிருந்த அவன் ஆத்தாளும் நிமிர்ந்து பார்த்தாள்.

கூப்பிட்டா ஏன்னு கேக்க மாட்டியா? இந்தா இங்கன கெடக்க தாள்ல்ல நிறைய வெங்காயம் கெடக்கு. அள்ளிட்டுப் போயி அரு. எவளோ மேலு வணங்காதவ தாளோட வெங்கா யத்த உளப்பி வச்சிருக்கா என்றான்.

பவுனு எழுந்து போயி தாளைப் பார்த்தாள். மருந்துக்காவது ஒரு வெங்காயம் இருக்க வேண்டுமே. அவள் குனித்து பார்த்துக் கொண்டிருக்கும் போது அவனும் குனித்து அவளிடம் ரகசியமாய் சொன்னான். உனக்கு வளையலு, ரவிக்க எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன். போவும் போது கொஞ்சம் ஒதுங்கு. நம்ம சேந்தே போவோம்.

கொதிக்கும் மீன் குழம்பின் வாசனையை கண்டுபிடித்த மாதிரி அவன் மனம் சந்தோசத்தால் கும்மரிச்சம் போட்டது. பெருமையும், கர்வமும் அவளுக்குள் அலையடித்தன.

காட்டைச்சுற்றி ஒருமுறை பார்த்துக் கொண்டாள். இது பாண்டி ராசுவின் காடு. இப்போதைக்கு இந்த காட்டையே கேட்டாலும் அவளுக்காக அவன் கொடுத்து விடுவான். அவளும் கேக்கத்தான் போகிறாள். இந்த காட்டை மட்டுமா? அவனையும் சேர்த்துத்தான். இது புரியாத ஆத்தா அனத்தனை இவளுக்கு மாப்பிள்ளையாக்கிக் கொண்டிருக்கிறாள். அவன் ஊர்க்காலி மாடு மேய்ப்பவன். ஊர் பொதுவில் கையளவு குடிசை போட்டு கொடுத்து இருக்கிறார்கள். காலை சாச்சி, சாச்சி நடப்பான். அவனுக்கும் இவள் மீது பிரியம் தான். அப்புரானி இவள் நெஞ்ச ழகை கண்டானா ஒன்னா? ஒன்று விட்ட அம்மான் மகன். இவள் கிடைத்தால் அவனுக்குப் புதையல் மாதிரி.

எம்புட்டு தேரம்தேன் குளிப்பே என்று ஆத்தாவின் குரல் கேட்டு பவுன் நினைவு திரும்பினாள். இன்னைக்கு பாலன் பிஞ்சைக்கு வேலைக்குப் போகிறாள். அவனுக்கும் அவள் மீது ஆசைதான். அவன் மட்டுமென்ன. ஊர் இளவட்டங்கள் முழுதும் இவளைத்தான் சுற்றுகிறார்கள். கொஞ்சம் தனியாக ஓடையில் வரப்பில் அவள் தனியாக வந்தால் போதும் பலா பழத்தின் ஈயாக எங்கிருந்தோ ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் வந்து விடுவார்கள்.

அதற்காகவே இவள் தனியாக வருவாள். யார் சும்மா இருந்தாலும் பூமாரி கண்டு பிடித்து விடுவாள். ஏட்டி இப்ப என்னத்துக்கு நீ தனியாப் போறே?

பவுன் நெஞ்சு நிறைய பொய் சொல்வாள் ஒடையில் நிறைய வெறவும், கத்தாழப்பழமும் கெடக்கு என்பவள் அவள் பதிலுக்காக காத்திருக்க மாட் டாள். இவர்களுக்கெல்லாம் என்ன தெரியும்? இவளைப் போல உடம்பும், நெஞ்சும் கிடையாது. ஒட்டான் குச்சி மாதிரி உடம்பு. அவர்கள் உடம் புக்கு ரவிக்கைத் துணிகூட ஒட்டாமல் தொங்கி கிடக்கும். நெஞ்சி இருந்தால் தானே பொதிந்து சேர்க்கையாய் எடுப்பாக தெரியும்?

என்னடி குளிச்சியா? இல்லையா? ஆத்தா அவசரப்படுத்த ரஞ்சிப்பான நினைவுகளில் நீந்த விடாத ஆத்தா மீது பவுனு எரிந்து விழுந்தாள்.

இப்ப என்னத்துக்கு நீ அவசரப்படுத்துறே?

அடுப்புல களிக்கு உல வச்சிருக்கேன். நீ பாத்துக்கோ. நான் போயி அனந்தன் கிட்ட இந்த மாசக் கடைசியில கல்யாணத்த வச்சிக்கிடலாம்ன்னு கேட்டு வாரேன்.

யாருக்கு கல்யாணம்?

இதென்னடி அக்குரமமா பேசுறே? உனக்குத்தேன் கல்யாணம். பெறவு என்ன எனக்கா?

அனத்தன் கிட்ட கேக்கணு மின்னா உனக்கே கேட்டுக்கோ எனக்கு அவன் புருசனா வர வேண்டாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 28, 2009 12:57 am

பெற்றவள் ஆத்திரத்தோடு கையை ஓங்கினாள். ஏண்டி ரொம்பத்தேன் மண்டக் கொழுப்பு புடிச்சி அலயிறே. அனத்தனுக்கு பொண்ணுதர அடியும், புடியுமா கெடக்கு

ஆத்தா சொன்னதைக் கேட்டதும் பவுனுக்கு சிரிப்பாய் வந்தது. அந்த கோண காலனுக்கும் பொண்ணு வருதா. உன்ன மாதிரி கிறுக்குப் புடிச்சவ ரெண்டு இருக்கத்தேன் செய்வா

பெத்தவளுக்கு சலிப்பாய் இருந்தது. இப்ப நீ என்னதேன் சொல்லுதே?

அனத்தன் வேற பொண்ணு பாத்துக்கிடட்டும்.

அப்போ உனக்கு?

நானே உனக்கு மருமவனக் கொண்டு வாரேன். நீ கல்யாணத்த மட்டும் முடிச்சி வையி.

அது யாருடி உன் பல்லுக்கும், மூக்குக்கும் புருஷனா வரப் போறவன்? என்று கேட்ட ஆத்தாமீது இச்சலாத்தியாய் வந்தது.

இப்ப உனக்கு சொல்ல மாட்டேன். உம் மூக்க அறுக்க மாதிரி இன்னைக்கே மாப் பிள்ளையோட வாரேன் என்ற வன் நல்ல சீலை ரவிக்கை உடுத்தி தலைசீவி, பவுடர் போட்டாள். கண்ணாடியில் ஒரு முறை தன் உடம்பை சின்ன, சின்ன அளவாய் பார்த்துக் கொண்டவள். கோயில் வாசலுக்குப் புறப்பட்டாள். அங்கேதான் பாண்டி ராசு இவளுக்காக உக்காந்து கிடப்பான். இவள் அந்த வழியாக போனால் போதும். அவனும் எழுந்து இவளுக்கு ஒரு துணைபோல் கூடவே வருவான். பவுனுக்கு பெருமை பொங்கி வழியும்.

இருந்தாலும் நீரு இப்பிடி என் பின்னாடி வாரதாப் பாத்தா நாலு பேரு என்னமும் பேசப் போறாக என்பாள்.

பாண்டி ராசுவும் பேசட்டும், பேசட்டும் கவல இல்ல. இப்ப நீ எங்க போற? என்பாள்.

உங்க காட்டுக்குத்தேன் மிளகாப்பழம் எடுக்கப் போறேன்.

மிளகாப்பழம் எடுக்க வேண்டாம். அப்படியே கரும் புக்காட்டுக்குத் திரும்பு.

ஆசைதேன்என்று சொல்லி அவன் வேண்டு மென்றே குலுங்கி, குலுங்கி சிரித்து மாராப்பு சேலையை கொஞ்சமாய் நழுவவிடுவாள். அப்போது பாண்டிராசுவை பார்க்க வேண்டும். உதடு திறந்து கிடக்க கண்களில் மத்தாப்பு வெளிச்சம் போடும்.

அவள் அப்படியே அவனை விட்டு நடப்பாள். அவன் மந்தி ரத்தால் கட்டியவன் போல் பின்னாலயே வருவான்- இன்று அவனிடம் சொல்லி விட வேண்டியதுதேன். இனி கரும்புக்காடு தேவையில்லை. உன் வீட்டுக்கே வாரேன் என்று

பவுனு கோயிலைக் கடந்து நடந்தபோது அவன் நினைத்தது போல் பாண்டி ராசு அவள் பின்னாலேயே வந்தான். சுற்றிலும் கேப்பைக்காடு உச்சந் தலை யில் குஞ்சம் கட்டியிருந்தது. ஊடுவரப்பில் இவள் நின்றாள்.

பாண்டி ராசு கிட்டத்தில் வந்து அவள் தோளை உரசிக் கொண்டே கேட்டான். என்ன பவுனு இன்னைக்கு சில்லெடுத்து செறட்டய கவுத்துறே? உனக்கு எவன் ரவுக்கத்துணி தச்சி தாரான்னு சொல்லு. இருவது துணி எடுத்து அவன்கிட்ட தச்சி தாரேன். தினம் ஒன்னா போட்டு அசத்து.

அரு ரவுக்கத்துணி மட்டும் இப்ப என் கல்யாணத்துக்காக எடுத்து தாரும்.

என்னத்தா சொல்றே உனக்கு கல்யாணமா?

பவுனு சிணுங்கலோடு சொன்னாள். என்ன உனக்கின்னு கேக்கீரு. உமக்கும், எனக்குந்தேன். நீரு என்மேல எம்புட்டு ஆச வச்சிருக்கீரு. உமக்கே வாக்கப்பட்டுக் கிடுவோமின்னு நினைக்கேன்.

பாண்டி ராசு ஒரு எட்டு பின் வாங்கினான். அவன் கண்களுக்குள் தெரிந்த ஆசையும், காமமும் சட்டென மறைந்துப்போக அங்கே ரௌத்தரமும், குரூரமும் அவன் விழிகளை சிவப்பாக்கின.

என்னடி சொன்ன தேவிடியா?

பவுனு அரண்டு நின்றாள். அடிவயிற்றுக்குள் பயம் வெட்டுக்குத்தியாக விழுந்தது.

சொல்லுடி தேவிடியா. சொன்னதை திருப்பிச் சொல்லு. அவன் மூர்க்கமாக அவள் அருகில் வந்தான். பார்வை எரிக்கோடைடையாக அவளை தீய்த் தது.

பாம்பு கண்ட தேரையாக அவள் பயந்து பின் வாங்கு முன்னே அவன் அவளை ஓங்கி அறைந்தான். காலால் ஒரு எத்து எத்தினான்.

நாறமுண்ட கொஞ்சம் மாரும், தோளுமா இருக்காளே. போற போக்குக்கு ஊறுகா மாதிரி தொட்டுக்கலாமின்னா உனக்கு புருசனா ஆவணுமா? உன் லச்சணத்துக்கு தெரு பிச்சைக்காரன் கூட புருசனா வரமாட்டான். இனிமே எங்க வீட்டுப் பக்கம், காட்டுப் பக்கம் உன் தல தெரிஞ்சதோ... பெறவு நானு மனுசனா இருக்க மாட்டேன்.

பாண்டி ராசு எப்போதோ போய்விட்டான். பவுனு அப்படியே நின்றாள். எதிரில் வந்த பூமாரி. அனத்தனுக்கு பரிசம் போட உங்காத்தா போயிருக்கா. இன்னைக்கு வரமாட்டாளாம். தொரவாலு எங்க வீட்டுல இருக்கு வாங்கிக்கோ என்று சொன்ன வளை கட்டிக்கொண்டு பெரிதாக குரலேடுத்து அழுதாள் பவுனு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக