புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_c10நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_m10நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_c10நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_m10நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_c10 
437 Posts - 55%

298 Posts - 37%
mohamed nizamudeen
நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_c10நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_m10நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி Poll_c10 
25 Posts - 3%
prajai

11 Posts - 1%
T.N.Balasubramanian

5 Posts - 1%
Abiraj_26

சுகவனேஷ்

4 Posts - 1%
mini

vista

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2020 8:34 pm

நீட் தற்கொலைகளுக்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்: அரசுப்பள்ளி முன்னாள் ஆசிரியை சபரிமாலா பேட்டி 577838
-
நீட் தேர்வுக்கு எதிராக தன்னுடைய அரசுப் பள்ளி ஆசிரியர்
பணியைத் துறந்தவர் சபரிமாலா. அனைவருக்கும் சமமான
கல்வி, பெண் விடுதலையை வலியுறுத்தி இயக்கம் நடத்தியவர்,
சமீபத்தில் அதனைக் கட்சியாக மாற்றியிருக்கிறார்.

மதுரையில் இன்று நீட் தேர்வுக்குத் தயாரான மாணவி
தற்கொலை செய்ததைத் தொடர்ந்து, சபரிமாலா இந்து தமிழ்
இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அனிதாவில் தொடங்கி நீட் விவகாரத்தில் இதுவரை மொத்தம்
16 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இவர்களது
மரணங்கள் சொல்லும் செய்தி என்ன?

பிள்ளைகள் நீட் தேர்வுக்குப் பயப்படுகிறார்கள். மருத்துவ
சீட்களின் எண்ணிக்கை வெறுமனே ஆயிரமாக இருந்தபோது
நடக்காத தற்கொலைகள், 4,500 ஆக உயர்ந்த பிறகு நடப்பதற்குக்
காரணம் நீட் தேர்வுதான்.

அந்தளவிற்கு அந்தத் தேர்வு முறையும், அதுபற்றி வருகிற
செய்திகளும் மாணவர்களைப் பயமுறுத்துகின்றன. வெறுமனே
மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டும் தற்கொலை
செய்யவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த கோவை
சுபஸ்ரீ போன்றோரும் தற்கொலை செய்திருக்கிறார்கள்.

இறந்த ஒவ்வொருவரும் தேர்வுக்கெனக் கடுமையாக
உழைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் பயமும்,
நெருக்கடியும் அவர்களை இந்த முடிவை நோக்கித் தள்ளியிருக்கிறது.

மதுரை மாணவிகூட, ஓராண்டாக கோச்சிங் போயிருக்கிறார்.
இரவு 1 மணி வரையில் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தவர்,
"எல்லாருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்க்கறீங்க, ஆனா, எனக்குத்தான்
பயமா இருக்கு" என்று கடிதம் எழுதிவைத்துவிட்டுத் தற்கொலை
செய்திருக்கிறார்.

12-ம் வகுப்பில் 1,176 மதிப்பெண் எடுத்த அனிதாவும் இதே
நெருக்கடிக்குத்தான் ஆளானார். நீட் தேர்வை ரத்து செய்யாமல் இந்தப்
பிரச்சினைக்குத் தீர்வில்லை. ஆனால், இப்போதிருக்கிற அரசு நீட்
தேர்வை ரத்து செய்யவே செய்யாது என்பது பட்டவர்த்தனமாகத்
தெரிகிறபோது, பெற்றோர்கள், ஆசிரியர்களின் பொறுப்பு அதிகமாகிறது.

ஆனால், அவர்கள் தங்கள் கடமையைச் செய்யத் தவறியது மாணவர்களின்
தற்கொலைக்குக் காரணமாகிவிட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83779
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2020 8:38 pm

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களை நிர்பந்தம்
செய்கிறார்கள் என்கிறீர்களா?

ஆமாம். பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளை நிர்பந்தம் செய்கிறார்கள். "டாக்டரானால் நிறைய சம்பாதிக்கலாம்" என்று சொல்லி நிர்பந்திப்பதுகூடக் குறைவுதான். அதுதான் சமூக அந்தஸ்து என்று சொல்கிறார்கள்.

முன்பெல்லாம் தேர்வில் மோசமாகத் தோல்வியடையும் குழந்தைகள்தான் தற்கொலை செய்வார்கள். இப்போது முதல்தர மதிப்பெண் பெறும் மாணவர்கள்தான் தற்கொலை செய்கிறார்கள். காரணம், சின்ன வயதிலிருந்தே "இதுதான் உன்னுடைய லட்சியம்..." என்று சொல்லிச் சொல்லி வளர்க்கிறார்கள்.

பார்ப்பவர்களிடம் எல்லாம் சொல்கிறார்கள். உறவினர்களும், "நீட் பாஸாகிவிடுவாயா?" என்று கேட்டுக் குடைச்சல் கொடுக்கிறார்கள். ஆசிரியர்களும் சேர்ந்து கொள்கிறார்கள்.

நீட் தேர்வு எழுதும் பிள்ளைகளின் பெற்றோர் என்ன செய்ய
வேண்டும் என்கிறீர்கள்?

"நம் ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தமிருக்கிறது. நீயும் விரும்பினாய் என்றுதான் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கிறோம். அதுமட்டும்தான் வாழ்க்கை என்று நினைத்துவிடாதே. நீ டாக்டர் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

என்ன நடந்தாலும் நாங்கள் உன்னோடுதான் இருப்போம்" என்று பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். தப்பான முடிவெடுக்க மாட்டேன் என்று பிள்ளைகளிடம் சத்தியம் கூட வாங்கலாம்.

பத்திரிகையில் குழந்தைகளைப் பற்றிய குற்றச் செய்திகள் வரும்போது, தான் பெற்ற பிள்ளைகளை அழைத்து விழிப்புணர்வு ஊட்டுகிற ஆசிரியர்கள், அதைத் தங்களிடம் படிக்கிற குழந்தைகளிடமும் சொல்ல வேண்டும்.

இறந்த 16 பேரில், பெரும்பாலானவர்கள் பெண்கள்.
அவர்களுக்கு மனோதிடம் இல்லையா?

தற்கொலை செய்த 16 பேரில், மாணவன் விக்னேஷ் தவிர மற்ற அனைவருமே பெண்கள். பெண் பிள்ளைகளின் உளவியலைக் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் ஒன்றை நினைத்தால் அதைச் செய்தே தீர வேண்டும் என்று நினைப்பார்கள்.

லட்சியத்தைத் தேர்வு செய்வதிலும், அதை அடைவதிலும் பெரும் சிரத்தை எடுத்துக்கொள்வது அவர்களின் வழக்கம். கூடவே, பெற்றோரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும், அவர்கள் நினைப்பதைச் செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் மீது தலைமுறை தலைமுறையாக இந்தச் சமூகம் திணித்திருக்கிறது.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரையில் அனிதா சென்றதற்கும்கூட அதுதான் காரணம். நம்முடைய பெண் பிள்ளைகளின் உளவியலை வலிமைப்படுத்த வேண்டியதிருக்கிறது. எனவே, 'பெண்மையே பேராற்றல்' என்று பரப்புரை செய்ய வேண்டிய தேவையிருக்கிறது.

நானும் அதைச் செய்கிறேன் என்றாலும், இன்னும் பல நூறு மடங்கு அதைத் தீவிரப்படுத்த வேண்டிய தேவையை இந்த மரணங்கள் உணர்த்துகின்றன.

இந்தப் பிரச்சினைக்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வு என்ன?

நீட் தேர்வை ரத்து செய்வதுதான் ஒரே தீர்வு. ஆனால், அதை இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் செய்யவே மாட்டார்கள் என்பதை இந்த மூன்று ஆண்டுகளில் தெரிந்துகொண்டேன்.

வருகிற 16-ம் தேதி திருச்செங்கோட்டில் தற்கொலைக்கு எதிராக தூக்குக்கயிறு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறேன். போராட்ட மேடையில் தூக்குக் கயிறுகளைத் தொங்கவிட்டு, ஒரு தற்கொலை உங்கள் குடும்பத்தை எப்படிப் பாதிக்கிறது என்று விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறேன்.

"உங்களால் மருத்துவராக முடியாவிட்டால் உயிரை மாய்க்காதீர்கள். வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டு, உங்கள் தம்பி, தங்கைகளை மருத்துவராக்கப் போராடுங்கள் பாடப்புத்தகத்தோடு அம்பேத்கர், ஜோதிராவ் பூலே போன்றோரின் வாழ்க்கையையும் படியுங்கள். அவர்கள் வாழ்க்கையில் சந்திக்காத துன்பங்களா? அவமானங்களா?" என்று பேசப் போகிறேன்.

திடீரெனக் கட்சி ஆரம்பித்தது ஏன்?

அனிதா மரணத்திற்குப் பிறகு வீட்டிற்கே போகாமல், பள்ளி - கல்லூரி மாணவிகளைச் சந்தித்தேன். தினமும் 4, 5 கூட்டங்கள். நீட் தோல்விக்குத் தற்கொலை தீர்வல்ல. அனிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், அவளது அறிவுக்கும், சமூக அக்கறைக்கும் கலெக்டராகி 100 மருத்துவமனைகளைக் கட்டியிருக்க முடியும் என்று பேசினேன்.

இப்படி ஊர் ஊராகத் தனி ஆளாகச் செல்வதைவிட, ஒரு இயக்கமாக, கட்சியாகப் போனால் இன்னும் நிறையப் பேரைச் சந்திக்கலாமே என்கிற ஆசையில்தான், 'பெண் விடுதலை கட்சி' என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறேன். இந்தக் கட்சியில் அனைத்து பொறுப்புகளுக்கும் பெண்கள் மட்டுமே வர முடியும்.

இந்த பொது முடக்க காலத்தில் மட்டும், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக 15 ஆயிரம் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. வீட்டிற்குள்ளேயே பெண்களுக்கு எதிராக இவ்வளவு பிரச்சினைகள். எனவே, நீட் தேர்வு மட்டுமின்றி பெண்களின் பிற பிரச்சினைகளிலும் அக்கறை செலுத்துவேன்.

இவ்வாறு சபரிமாலா தெரிவித்தார்
-----------------------------
இந்து தமிழ் திசை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2020 9:00 pm

தற்கொலை செய்துகொள்வது ஒரு வித மனோவியாதி.
ஒவ்வொருவருக்கும் தனது திறமை சக்தி தெரியும்.
நீட் எழுத வருபவர்கள் அரிச்சுவடி படிக்கும் ஒன்றாம்/இரண்டாம் வகுப்பு
மாணவ மாணவிகள் இல்லை. நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள்
எப்பிடி தேர்வாகிறார்கள்? குருட்டாம்போக்கில் மார்க் பெற்றா?
இல்லை உழைப்பு /மனோ தைரியம். இம்முறை இல்லாவிட்டால் அடுத்தமுறை.
என்று சிந்திக்கும் குணம். டாக்டர் தொழில் ஒன்றுதான் .அது இல்லாவிட்டால்
குடியே மூழ்கிவிடுமோ?
தூபம் போடும் அரசியல் கட்சிகள். இரக்கப்பட்டு அரசு செய்யும் உதவி .
இன்று டிவி இல் போடப்பட்ட செய்தி. தற்கொலை செய்து கொண்ட மாணவர் உடலை
பெற மறுத்த பெற்றோர்கள். அரசு XX பணம் உதவி செய்ய உத்திரவாதம்
உடன் பிறந்தவருக்கு அரசு பணி .உத்திரவாதம் கொடுக்கவில்லை எனில்
உடலை வாங்கமாட்டோம்.
இது என்ன பேரம்? கேட்கவே அசிங்கமாக இருக்கிறது.
பெற்றோர் அவனுக்கு சமயத்தே அறிவுரை கூறாது கடமையை
மறந்து ,மறைந்த உயிரை ஒரு பேரப்பொருளாக்கி.................
அதற்கு தூபம் போட அரசியல் கட்சிகள் --இதை பார்க்கையில்
யார் அடுத்து தற்கொலை செய்துகொள்வார்கள் --உடனே சென்று
உதவுவது போல் வரப்போகிற தேர்தலுக்கு அச்சாரம் போடுவது போலிருக்கிறது.
என்னத்த சொல்லி அழறது ? எங்கே போய் முட்டிக்கிறது?
டாக்டர் பணி நாடியை பிடித்தோம் , மெடிகல் ரெப் சொன்ன மருந்தை
எழுதினோம் ,பணம் வாங்கி பர்சில் போட்டோம் என்பது இல்லை.
உயிர் சம்பந்தப்பட்டது.சரியான மருந்தை சரியான அளவு சரியான சமயத்தில்
கொடுக்கவேண்டும். அதற்குதான் படிப்பு தேர்வு வேண்டி இருக்கிறது.
புரிந்தால் சரி.
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக