புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_vote_lcapமத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_voting_barமத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_vote_lcapமத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_voting_barமத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_vote_lcapமத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_voting_barமத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_vote_lcapமத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_voting_barமத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்...

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 11:57 am

இது என்னுடைய முதல் குறுங்கதை.... படித்து உங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள் உறவுகளே ! புன்னகை...படிப்பவர்கள் குறைந்த பக்ஷம் ஒரு ஸ்மைலியாவது பதிலாக போடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.....புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

காலை இல் எழுந்திருக்கும்பொழுதே எங்கோ மெல்லிய அழுகுரல்களும் பேச்சுக்குரல்களும் கேட்டது. ஆனால் கண்களைத் திறந்ததுமே அந்த சப்தங்கள் மெல்ல மெல்ல அடங்கிவிட்டன. ஆழ்ந்து சுவாசித்தேன், இதுவரை நான் நுகர்ந்து அறியாத சுகந்தம். ஆழ்ந்து மூச்சை இழுத்து, அந்த வாசத்தை நன்கு நுகர்ந்து சுவாசத்தை வெளியே விட்டேன். ஆனாலும் என்னால் அது இன்ன வாசனை என்று சொல்லத்தெரியவில்லை. அதே போல குளிரும் அல்லாத வெயிலும் அல்லாத இதமான ஒருவித தட்பவெட்ப நிலை என்னை சூழ்ந்து  இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

நான் எங்கேயோ போவது போல இருந்தது. போவது என்று கூட சொல்ல முடியாது, பறப்பது போலிருந்தது. இது கனவு என்றே எண்ணுகிறேன். நானாவது பறப்பதாவது. போன வாரம் என்னவரின் சதாபிஷேகத்தின் போது நடக்கவே நான் சிரமப்பட்டேன். மேடை இல் நாற்காலி தான் போட்டுக்கொண்டு உட்கார்ந்து கொண்டேன். இதோ நேற்று நடந்த என் பேரனின் ஸீமந்ததிற்கும் என்னால் ஓடியாடி வேலை செய்யமுடியவில்லை. உட்கார்ந்த படிக்கு ஆட்களை ஏவிக்கொண்டிருந்தேன். நானாவது பறப்பதாவது. ஆனாலும் அப்படித்தான் தோன்றியது. கண்களை நன்கு திறந்து பார்த்தேன். என்னுடைய இரண்டு பக்கத்திலும் மிக மிக அழகிய பெண்கள், வெள்ளை  வெளேர்  என்கிற மிக அழகிய உடையுடன்,  கருணை வழியும் கண்களுடன் என்னை பார்த்து புன்சிரிப்பு சிரித்தனர். என் கைகளை அவர்கள் ஆதுரத்துடன்  பிடித்துக்கொண்டிருந்தனர்.

ஓ, இவர்கள் பிடித்துக்கொண்டிருப்பதால் தான் என்னால் வலி இல்லாமல் நடக்க முடிகிறதா... இல்லை இல்லை பறக்க முடிகிறதா என்று எண்ணிக் கொண்டேன். இவர்கள் யாராக இருக்கும் ...கேட்கலாமா என்று நினைத்தேன். ஆனால் சுற்றுப்புறத்தில் நான் பார்த்த காட்சிகள் என்னை கேள்விகேட்க விடாமல் என் வாயை அடைத்து விட்டன. ஆம் அத்தனை அழகான கண் கவர் காட்சிகள். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என மரங்கள். நான் முன்பின் பார்த்திராத பூ மற்றும் காய்கனி வர்க்கங்கள். ஆச்சர்யமான பாதை. ஆனால் வெகு நீளமான பாதை.

பறப்பது என்று சொல்கிறேனே தவிர, அது வான் வெளி இல் பறப்பது போல தோன்றவில்லை. கொஞ்சமும் சிரமம் இல்லாமல் நகர்வது அல்லது ஊர்ந்து செல்வது போல இருந்தது எனக்கு. நன்றாக பராக்கு பார்த்துக்கொண்டே அவர்களுடன் சென்றேன். என் வீட்டு மனிதர்கள் ஏன் என்னுடன் இல்லை என்கிற பிரக்ஞையே எனக்கு அப்பொழுது இல்லை. ஏதோ பிகினிக் செல்லும் குழந்தை யைப் போல குதூகலமான மனத்துடன் சென்றுகொண்டிருந்தேன் அவர்களுடன். முடிவில்லாத பயணமாக அது இருந்தாலும் அதில் எனக்கு சம்மதமே என்று தோன்றியது . அத்தனை அழகான வழி அது.

தொடரும்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 11:57 am

என்றாலும் முடிவில்லாதது எதுவுமே இல்லையே. ஏதாவது ஒன்று ஆரம்பித்தால் அது எப்பொழுதாவது முடித்து தானே ஆகவேண்டும்.அது போல எங்கள் பயணமும் ஒருமுடிவுக்கு வந்தது. வானளாவிய கோபுரங்களைக் கொண்ட ஒரு வினோத நரகத்துக்குள் நாங்கள் வந்தோம். அந்த இரண்டு அழகிகளும் ஒரு முறுவலுடன் என்னை ஒரு மாளிகை இன் வாசலில் விட்டு விட்டு கண் இமைக்கும் நேரத்தில் சென்றுவிட்டார்கள். நான் ஒரு நன்றி சொல்லக் கூட நேரம் தரவில்லை அவர்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இது யார் வீடோ என்னவோ, உள்ளே போகலாமா வேணாமா என்று ஒருக்ஷணம் தான் யோசித்திருப்பேன். அதற்குள் உள்ளிருந்து வேறு இரண்டு அழகிகள் ஓடிவந்து என் கைகளை பிடித்து உள்ளே அழைத்து சென்றார்கள்.

அங்கு விசாலமான ஹால் இருந்தது. அழகழகான நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. ஒரு 100 நாற்காலிகள் இருக்கும். எல்லாம் ஒரு மேடையை நோக்கி போடப்பட்டு இருந்தன. மேடை மேல் மிகவும் சிங்காரமாய் ஒரு அழகி அமர்ந்து இருந்தார். அவர் வரை தரை இல் ரத்தினைக் கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. நிறைய பேர் இந்த நாற்காலிகளில் அமர்ந்து இருந்தனர். அந்த அழகிகள் என்னையும் அமரச்செய்து விட்டு நகர்ந்தனர். நானும் அமைதியாக அமர்ந்து கொண்டேன். கேள்வி எதுவும் கேட்கத்தோன்றவில்லை. ஏதோ மெஸிமரைஸ் ஆனது போல இருந்தேன். அந்த மேடை இல் இருந்த அழகி யாரை நோக்குகிறாரோ அவர் மட்டும் எழுந்து அவரருகில் சென்றார். அவர் சொல்வதை இவர் கேட்டுக்கொண்டார் பிறகு உள் அறைக்கு அழைத்து செல்லப்பட்டார். போனவர்கள் யாரும் மீண்டும் இதேவழி இல் திரும்ப வரவில்லை. பாஸ்போர்ட் ஆபீஸ் போல இருந்தது இந்த நடை முறை.

மேலும் ஒரு வினோதமான நடை முறையையும் அங்கு நான் கவனித்தேன். அங்கு ஆண் பெண் குழந்தைகள் என்று எல்லோருமே கலந்து இருந்தார்கள் என்றாலும் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. மிக மிக நிசப்தமாக இருந்ததால் இங்கும் என்னால் அந்த தேவ கானத்தை கேட்க முடிந்த்தது. மிக மிக மெல்லிய சப்தத்தில் கேட்டது அந்த இசை எனக்கு. அடுத்த ஆச்சர்யம், அங்கு உலவும் நிறைய அழகிகள் வேறு வேறு மாதிரி உடைகளை உடுத்திக் கொண்டு இருந்தார்கள். அதில் சிவப்பு உடை அணிந்த பெண்கள், இங்கு அமர்ந்து இருக்கும் சிலருக்கு சின்ன சின்ன கிண்ணிகளில் உணவு - ஸ்னாக்ஸ்? மற்றும் சிலருக்கு தம்ளரில் ஏதோ திரவம் மற்றும் சிலருக்கு ஒரு தட்டில் விதவிதமான உணவு என்று கொண்டு வந்து கொடுத்தார்கள். எனக்கு அது புரியவில்லை, இது என்ன இத்தனை பேர் இருக்கும்பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று தருகிறார்கள் அதுவும் சிலருக்கு இல்லை. பாவம் அவர்களை பார்த்தால் பட்டினி போல் தெரிகிறது. அவர்களை பார்க்க எனக்கு மிகவும் பாவமாக இருந்தது. ஆனால் அவர்கள் யாரும் இவர்களை கவனித்ததாகவே தெரியவில்லை. மேலும் இவர்களைக் கூப்பிடவும் இல்லை .

தொடரும் ....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 11:58 am

இதையெல்லாம் நான் மௌனமாகவே பார்த்துக் கொண்டு இருந்தேன். எனக்கு இப்பொழுது தான் நினைவுக்கு வந்தது காலை இல் இருந்து நான் எதுவுமே குடிக்கவோ சாப்பிடவோ இல்லை என்று. எனக்கு ஏதாவது குடித்தால் தேவலை என்று நினைத்த மாத்திரத்தில் ஒரு பெண் அழகி (ஆண் அழகர்களும் அங்கு இருந்தார்கள் ) என்னருகில் வந்தாள்.அவள் கை இல் ஒரு உணவு தட்டு இருந்தது, அதில் ஏதோ கொண்டுவந்தாள் . சரி, எனக்குத்தான் தரப்போகிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தபொழுது, அவள் என்னைத்தாண்டி சென்று மற்றும் ஒரு பெண்ணிடம் அதைக் கொடுத்தாள். அதை வைத்துக்கொண்டு சாப்பிட மேஜிக்கால் ஒரு சின்ன டேபிளும் வரவழைத்துக் கொடுத்தாள் .

எனக்கான உணவு அதில்லை என்றதில் எனக்கு ஏமாற்றமே. அதை அந்தப் பெண்ணும் கவனித்து சிரித்தது போல இருந்தது. அதே நேரத்தில் எனக்கு அவளை எங்கோ பார்த்தது போல இருந்தது. யார் இவள், எங்கே பார்த்தோம் இவளை என்று நினைத்ததுமே எனக்கு அவள் யார் என்று புரிந்து விட்டது. 'ஹே , நீயா' என்று நான் குரல் எழுப்புமுன், அந்த பெண்ணழகி என்னை நோக்கி வந்து ஒரு சின்ன கிண்ணி மற்றும் தம்ளரில் குடிக்கவும் ஏதோ கொடுத்தாள். அவைகள் எனக்கு மிகவும் தேவையாக இருந்தது அந்த நேரத்திற்கு. என்ன வென்று கூட பார்க்காமல் முதலில் தம்ளரில் இருந்ததைக் குடித்து என் தாகத்தை தணித்துக் கொண்டேன். பிறகு அந்த கிண்ணி இல் இருந்ததை சாப்பிட்டேன். பிறகு எனக்கு கொஞ்சம் தூரத்தில் இருந்த அந்த பெண்மணியைப் பார்த்தேன்.

அவள் இன்னும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள் .....இவ..இவ....எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் பெண்மணி....இவ இங்கே எப்படி...போனவாரம் தான் இவ செத்து போய்விட்டாளே ....என் எண்ணம் பூரணமாக முடியும் முன்னே ஒரு உண்மை எனக்கு உரைத்தது..... ஐயோ நானும் செத்துட்டேனா ???

தொடரும்......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 12:04 pm

நேற்று கட்டின வாழைமரங்கள் கூட வாட வில்லை அந்த பங்களாவில். அதில் அழுகை சத்தம் கேட்டது காலை இல். அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூடி விட்டனர். போன ஒரு வாரமாக மிகவும் குதூகலத்துடன் இருந்த அந்த பங்களா இன்று சோகமயமாக மாறிவிட்டது. போன வாரம் தான் அந்த வீட்டு மாமா மாமிக்கு சதாபிஷேகம் நடந்தது. இதோ இந்த வாரம் அவங்க பேரனுக்கு ஸீமந்தம். ஒருவாரம் வந்த உறவுகள் திரும்பி ஊருக்கு போகாமல் இங்கு தங்கி இருந்து ஸீமந்தம் கொண்டாடினார்கள். அந்த சந்தோஷத்துடன் இன்று முதல் ஒவ்வொருவராககிளம்ப இருந்தார்கள். ஆனால் அதற்குள் இப்படி.

இரவு எல்லோரும் பேசிவிட்டு படுக்க வெகு நேரம் ஆனபடியால் காலை இல் கொஞ்சம் நேரம் கழித்தது தான் விழிப்பு தட்டி இருக்கு ரங்கராஜன் மாமாவிற்கு. எப்பொழுதும் அவருக்கு முன்பே விழித்துவிடும் மாமி அன்று பக்கத்தில் படுத்திருந்ததைப் பார்த்து ஏதோ இன்று அசந்து தூங்குகிறாள் என்று நினைத்து மாமியை தொந்தரவு செய்யாமல் இவர் சத்தம் போடாமல் அறையை விட்டு எழுந்து வந்து விட்டார். இவர் தன் காலை கடன்களை முடித்துவிட்டு வந்த போதும் மாமி எழுந்திருக்க வில்லை என்று பார்த்ததும் தான் அவர்களை எழுப்ப குரல் கொடுத்திருக்கிறார். மாமி எழுந்திருக்க வில்லை. தூக்கத்திலேயே போய்விட்டாள் புண்ணியவதி. என்ன, அவள் ஆசைப்பட்டது போல பேரனுக்கு பிறக்கும் குழந்தையை பார்த்துவிட்டால், மூன்று தலை முறையை பார்த்தது போல் ஆகி இருக்கும்.
பேரன் சந்தான கோபாலனின் மனைவி மதுவந்திக்கு இரட்டைக் குழந்தைகள் என்று ஸ்கேன் நில் தெரிந்ததுமே ஒன்றாவது ஆண்குழந்தையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் மாமி. அது ஆணாக இருந்தால் இவர்கள் அதாவது மாமாவும் மாமியும் கனகாபிஷேகம் செய்து கொள்ளும் பாக்யம் பெறுவார்கள். அதுவும் மாமி இன் அபிலாஷைகளில் ஒன்றாக இருந்தது. எல்லாவற்றிக்கும் மேலானது ஒன்று நடக்காமல் போய்விட்டது, அது தான் மாமி மிகவும் ஆசையாக பிறக்கப் போகும் தன் கொள்ளு பேரக்குழந்தைக்கு ஆசை ஆசையாக செய்து வைத்துள்ள அரைஞாண் கயிறுகள். அதை அந்த குழந்தைகளுக்கு அணிவித்து பார்க்காமலே போய்விட்டாள் என்று சொல்லி சொல்லி மாமா மருகி விட்டார்.

தொடரும்...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 12, 2020 12:04 pm

எல்லோரும் தான் வாங்கி வைக்கிறார்கள், இதில் என்ன அதிசயம் என்று நீங்கள் நினைக்கலாம். அது அதிசயம்தான். ஏன் என்றால், அது ஒரு ஜோடி கொலுசு. தங்க கொலுசு. மாமியும் மாமாவும் துபாய் இல் இருந்த பொழுது மிகவும் ஆசையாக வாங்கியது. ஆனால் தங்க கொலுசு போடும் வழக்கம் நமக்கு இல்லாததால் அப்படியே உள்ளே வைத்துவிட்டார். பேரன் பிறந்த பொழுது அந்த ஜோடிக்கொலுசை பிரிக்க மனம் இல்லாமல் அப்படியே வைத்தது விட்டார். இப்பொழுது தன் பேரன் மனைவி இரட்டைகொழந்தைகள் பெறப்போகிறாள் என்று அறிந்தவுடன், மிகவும் ஆர்வமாகிவிட்டார் சுந்தரி மாமி. ஆவலுடன் அந்த நாளை எதிர்நோக்கி இருந்தார். அதற்குள் தான் இப்படி ஆகிவிட்டது. மாமாவால் தாங்கவே முடியவில்லை.

மாமி மாமாவிற்கு பெண் குழந்தைகள் இல்லை ஒரே பையன் தான். அவனுக்கு ஒரு பெண்ணும் பிள்ளையும் உண்டு. பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். பையனுக்கு போன வருடம் தான் கல்யாணம் ஆனது, இதோ நிறைமாத கர்பிணி அவன் மனைவி. வந்த நாள் முதலே மது பாட்டி யுடன் ஒட்டிக்கொண்டுவிட்டாள். அவளைத் தேற்றுவது தான் மிகவும் கஷ்டமாகிப் போனது இவர்களுக்கு. நிறைமாத கர்பத்துடன் அழுதவாறு இருந்தாள். கவலைப்படாதே மது, பாட்டி இன் முழு ஆசீர்வாதம் உனக்கும் உன் குழந்தைகளுக்கும் உண்டு. அழுகையை  நிறுத்து, ஏதாவது சாப்பிடு என்று எல்லோரும்சொல்லி, அவளைத் தேற்றி  அவளின் அழுகையை நிறுத்தப் பார்த்தார்கள்.

மாமி இன் ஒரே பிள்ளை இன் நிலைமையும் பார்க்க சகிக்கவில்லை. மாமாவாவது புலம்பி விட்டார். பாவம் இந்த பிள்ளை, அப்படியே உறைந்து போய்விட்டான். அவன் கொஞ்சம் அம்மாக் கொண்டு. அவனுக்கு உலகமே அம்மா தான். மாமியும் அப்படித்தான் இருந்தார். மாமா எப்பவும் அலுவலகம் என்றே இருப்பார், எனவே அம்மாவுக்கும்   பிள்ளைக்கும் மிகவும் ஓட்டுதல் அதிகம். மருமகள் வந்ததும் இது ஒரு சிக்கல் ஆக மாறிவிடக்கூடாது என்பதில் மாமி மிகவும் கவனமாக இருந்தார். அதில் வெற்றியும் கண்டார். வந்த மருமகளும் சும்மா சொல்லக்கூடாது அவள் பங்கை செவ்வனே செய்தாள்.

அவள் தான் இப்பொழுது கணவனின் தோளோடு தோள் நின்று, அவனைத் தேற்றி கொண்டுவந்தாள். ' நீங்களே இப்படியென்றால் , அப்பாவை எப்படித்  தேற்றுவது  யார் தேற்றுவது ' என்று பேசி தெளிவு படுத்தினாள்.

ம்ம்.. என்னதான் அழுது புரண்டாலும் போனவர் திரும்ப வருவதில்லை. எல்லோரும் ஒருவாறாக மனதை தேற்றிக்கொண்டு மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்க ஆரம்பித்தார்கள். உறவுகள் எல்லோருமே அருகே இருந்ததால் சிரமம் எதுவுமே யாருக்குமே இல்லை. மாமி 'ஜாம் ஜாம்' என்று தன் கடைசி ஊர்வலத்தை துவங்கிவிட்டார். கல்யாண சாவு என்பார்களே அப்படி போய் சேர்ந்தார். மேற்கொண்டு ஆகவேண்டியவைகளை வாத்யார் மாமா விளக்கிக் கொண்டு இருந்தார். எந்த குறையும் இல்லாமல் 13 நாள் காரியங்கள் நடக்கவேண்டும் என்று ரங்கராஜன் மாமா கறாராக சொல்லிவிட்டார். ஸ்வர்ண தானம், வெள்ளி தானம், கோதானம் என எல்லாமே ஏற்பாடு செய்தார்கள்.

இங்கு பூ லோகத்தில் நிலைமை இப்படி இருக்க மேல் லோகத்தில் மாமி இன் நிலையை பார்க்கலாம் வாருங்கள். மாமியே சொல்வார் பாருங்கள்.

தொடரும்.......

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2020 2:50 pm

முதல் பதிவை படிக்கும் போதே எப்பிடி பட்ட கதையாக இருக்குமென யோசிக்கமுடிந்தது.
இருப்பினும் வழக்கமான பின்னல்கள் இருக்குமே . தொடருங்கள். 

ரமணியன் 

@krishnaamma
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2020 2:57 pm

குறுங்கதை என்று இருக்கவேண்டும்.
குருங்கதை என்று வார்த்தை இல்லையென என எண்ணுகிறேன்.

மாற்றிவிடவும்.

ரமணியன் 

@krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 12, 2020 4:42 pm

மேடை இல் நாற்காலி

ஒரு மாளிகை இன் வாசலில் விட்டு

கிண்ணி இல் இருந்ததை

-
மேடையில்

மாளிகையின்

கிண்ணியில்
-
என சேர்த்து எழுதுவதே சிறப்பு
-
கதை... மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... 3838410834
-
தொடரவும்

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

lakshmi palani
lakshmi palani
பண்பாளர்

பதிவுகள் : 90
இணைந்தது : 21/10/2018

Postlakshmi palani Sat Sep 12, 2020 7:32 pm

மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... 103459460 மத்யம லோகம் ! By Krishnaamma ! - 'விறு விறு' குறுந்தொடர்... 3838410834

krishnaamma இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 16, 2020 9:18 pm

என்னாச்சு ...  5 நாளாச்சு .....E பாஸ் கிடைக்கவில்லையா? மாமி ஏதாவது சொல்லுவாங்க என்று பார்த்தால் ? 

ரமணியன் 

@krishnaamma

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக