Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது
Page 1 of 1
லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது
--
அப்பத்தாவின் பண்புகளையே...
அம்மாவின் பெரும் கருணையையே...
என் மனைவி மீதும் பூசியிருக்கிறேன்!
“ஓவியக் கல்லூரியின் வரலாற்றை மறைத்து, ஓவிய பாடத்
திட்டத்தில் ஆகம விதிகளைச் சேர்க்கவேண்டிய
அவசியமென்ன” என்று மத்திய அரசின் மீது கோபத்தில்
இருக்கிறார் ஓவியர் டிராட்ஸ்கி மருது.
ஓவியம், கலை, மொழி என பண்பாட்டுத் தளங்களில் வேர்
பாய்ச்சி பயணிக்கிறார். ‘அருமையான தம்பதியர்’ என
நண்பர்களிடத்தில் பேசுபொருளாகும் அவரது
இல்வாழ்க்கையின் வடிவம் இது. சொற்களைத் தாண்டிய
அந்த உணர்வுகள் அப்படியே இருக்கட்டும்…
பெண்மையின் அருகாமையை அம்மாவிடமிருந்தே
உணர்ந்தேன். சற்று முன்பு அவர்கள் இறுதிப் பயணத்தை
மேற்கொண்டபோது தூக்கிச் சுமந்த சிறு கனம் கூட இன்னும்
என் கைகளில் இருக்கிறது.
இப்படிப்பட்ட பெண்களிடம் இருந்து வளர்ந்த பிறகே உலகின்
எல்லாப் பெண்களையும் மதிக்கும் இயல்பு வந்திருக்கிறது.
அதுக்கும் முன்னாடி அப்பத்தாவைப் பத்திச் சொல்லணும்.
அது வெறும் உறவுமில்லை. வேற இடத்திலிருந்து பிடுங்கி
வந்து நட்டு வைத்த மாதிரி குடும்பத்திற்குள்ளே வந்து
மொத்தக் குடும்பத்தையும் தூக்கிச் சுமக்கிறது எவ்வளவு
பெரிய வேலை!
-
-------------
Last edited by ayyasamy ram on Wed Sep 09, 2020 6:14 pm; edited 2 times in total
Re: லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது
-
எனக்கு அவங்களோட அருகாமை அவ்வளவு ஆச்சர்யமா
இருக்கும். என் மேல் அவ்வளவு உயிராக இருந்த அப்பத்தா…
என்னோட ஒவ்வொரு வார்த்தையையும், வரைந்து கிறுக்கிப்
போட்டதையும் தூக்கி வைச்சுக் கொண்டாடிய
அப்பத்தாவை முதல் மனுஷியாகக் கொண்டாடுவேன்.
நிலமும் புலமும் விவசாயமும் அறுவடையும் கொண்ட
பெரும் குடும்பம். பண்ணையம் பார்க்கிறதுக்கு சொந்த
பந்தம் மாதிரி கூடியிருந்த மக்கள், உறவினர்கள்னு பெரும்
கூட்டம். விவசாயத்தை அப்படி ஆசையாகப் பார்த்து,
பயிர்களின் வளர்ச்சியையெல்லாம் குழந்தை வளர்ற
மாதிரி ரசிச்ச அப்பத்தாதான் என்னுடைய முதல் பெண்.
அப்படியே நாற்காலி போட்டு காலை மடிச்சுக்கிட்டு
உட்கார்ந்து, பண்ணையம் மக்களோடு சேர்ந்து சாப்பிட்டும்,
சிரிச்சும், அவங்க கண்ணு கசிஞ்சா வேதனைப்பட்டும்,
துயர் துடைச்சும், தட்டிக் கொடுத்திட்டு இருந்த அப்பத்தாவை
மறக்கவே முடியாது.
நானெல்லாம் அன்பை உள்ளும் புறமுமா கத்துக்கிட்டது
அங்கேதான். விவசாயம் பண்ணும் போது வெளியே நின்னு
அதிகாரம் பண்ணாமல், சிரிப்பு சிந்துகிற கனிந்த முகத்தோடு
அப்பத்தா நிக்கிறது அப்படியே மனச்சித்திரமாக இருக்கு.
உடனே அதை ஓவியமாகக் தீட்டி உங்ககிட்டே காட்டிட
முடியும் என்னால். நான் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும்,
குழந்தைத்தனத்திற்கும் நெகிழ்ந்து நின்னு அன்பைக்
கொடுத்த அப்பத்தா.
அவசியமே இல்லாவிட்டாலும், விவசாயம் பார்க்கிற
பெண்களோடு இறங்கி நின்று வேலை பார்த்து, கேலி பேசி
புண்படுத்தாம சிரிக்க வைச்சு, சாயங்காலம் ஆனதும்
‘டேய் பயலே… அந்தச் செம்புத் தண்ணிய ஊத்துடே...’
என கைகளை நீட்டிக்கொண்டு குனிவார்.
காய்ஞ்சு வறண்டுபோன முதுகிற்கு தண்ணீர் ஊற்ற ஊற்ற
கொஞ்சம் கொஞ்சமாக சூடு போய் பச்சை நரம்பு தெரியும்.
பின்பு அப்படியே உப்புமூட்டை தூக்கிக்கொண்டு என்னோடு
பயணம்தான்.
அப்பத்தாவின் பண்புகளையே, அம்மாவின் பெரும்
கருணையையே நான் பிற்பாடு என் மனைவி மீதும்
பூசியிருக்கிறேன். அவர்கள் அதனால் அதில் ஒளிர்கிறார்கள்.
என் அன்பைச் சொல்வது இப்படித்தான்.
ஓவியம் படிக்க சென்னைக்கு வந்திட்டேன். நாடகமும்,
சினிமாவும், கலையும் சேர்ந்து வளர்ந்திருந்த பெருங்
குடும்பத்தில் பிறந்தவனுக்கு வேறு என்ன வரும்!
சோலைமலை தாத்தாவோடு பத்மினி, சாவித்திரி, சந்திரபாபு
போன்ற கலைஞர்களை அவரவர் இயல்போடு
சந்தித்ததெல்லாம் நினைவு மட்டுமல்ல. அப்பத்தாவும், அப்பா,
அம்மாவும் கற்றுக் கொடுத்த பாடங்கள் மறக்க முடியாதவை.
அப்பா நிறைய படிப்பார். எங்களை வளர்த்தெடுத்ததில்
மகன், மகள் என வேறுபாடு காட்டவே மாட்டார்.
அம்மாவிற்கு குடும்பத்தோடு எல்லோரையும் அரவணைப்பதில்
பெரும் விருப்பம் இருந்தது. அவரிடம் பெற்று வளர்ந்ததே இந்த
பெரும் வாழ்வு.
‘யாரும் கைவிடப்படுவதில்லை’ என்கிற கிறிஸ்துவின்
வாக்கியம் அம்மாவின் வீட்டு மேலாண்மைக்கு பொருந்தும்.
இத்தனை பெரிய ஜனக்கட்டு கொண்ட பெரும் குடும்பத்தில்
ஒரு படி அரிசி கூட வெளியே விலைக்கு போனதில்லை.
எல்லோர் பசியையும் விளைந்த தானியம் தீர்த்தே
வைத்திருக்கிறது.
-
Last edited by ayyasamy ram on Wed Sep 09, 2020 6:17 pm; edited 3 times in total
Re: லவ் ஸ்டோரி - ஓவியர் டிராட்ஸ்கி மருது
பசியில் காது அடைத்துப் போய் வருகிறவர்களுக்கு
யாராச்சும் ‘நீ சாப்டியா’னு கேட்க மாட்டாங்களான்னு
மனசு ஏங்கும். அப்படி வருகிறவர்களை அந்த வார்த்தை
கூட கேட்காமல் பெத்த பிள்ளை மாதிரி உட்கார
வைத்து வயிறு நிரப்பி அனுப்பும் அம்மா.
இந்த ஈரத்தைப் பார்த்து வளர்ந்தவன்தான் நான்.
இத்தனை பிரியத்தை தாண்டித்தான் இந்த சென்னைக்கு
வருகிறேன். இங்கே நண்பர்களின் அருகாமை நல்லா
அமையுது. அம்மாவைப் போலான சுசி சின்னம்மாவின்
கவனிப்பும் கிடைக்கிறது.
அப்படியிருக்கும் போது ஒரு நாள் வீட்டிலிருந்து ஒரு கடிதம்
வருது. ‘பொண்ணு பாத்தாச்சு. கல்யாணம் கூடி வருது.
புறப்பட்டு வா’னு தேதி நிர்ணயிச்சு அனுப்புறாங்க.
நான் மறுவார்த்தையில்லாமல் மதுரைக்கு புறப்பட்டுப்
போனேன். தாலி கட்டும்போதுதான் மனைவியாகப் போகும்
ரெத்தினத்தைப் பார்க்கிறேன்.
எங்களைப் போலவே பெரும் தலைக்கட்டாக வேரோடி
நிற்கிற குடும்பம்.
என்னோடு ரெத்தினத்தை சென்னைக்கு அனுப்பும்போது
‘சென்னை நாகரிகத்திற்கு பழக்கமில்லாத கிராமத்துப்
பொண்ணு. நீதான் பார்த்துக்கணும்’ என்று அம்மா அனுப்பி
வைத்தார்கள்.
மாறாக ரெத்தினமே என்னைப் பார்த்துக் கொள்கிறார்.
என் வாழ்வில் சந்தோஷத்தை நிலைநிறுத்திய மனைவி!
என்னிடம் அன்பாய் இருப்பது தவிர அவருக்கு எதுவும்
தெரியாது. ஒரு நாளும் இருவரும் சுடுசொல் பரிமாறியதில்லை.
நம்புவது உங்கள் விருப்பம்.
எல்லோரையும் அரவணைத்து வளர்ந்த மனப்பாங்கும்
அவரிடம் குவிந்திருக்கிறது. நான் நினைப்பதைச் செய்து
முடிக்கிற பக்குவம். இருவர் பார்வைக்கும் எங்களுக்கு
மட்டுமே தெரிந்த பொருளிருக்கிறது. அவருக்கு அன்பு
செய்வது தவிர எதுவும் தெரியாது.
வீட்டிற்கு வரும் நண்பர்களும் எங்களுக்கு மதுரையின்
ஜனக்கட்டு சூழலை நினைவூட்டுகிறார்கள். எனக்கு
ஓவியத்தையும் அவரின் அன்பை உணரவும் மட்டுமே
தெரியும்.
அவர் தனித்த பெண்ணல்ல. வீட்டிற்கு வருகிற நண்பர்களை
பாகுபாடின்றி நேசிக்கவும், மதிக்கவும், அன்பில்
கனியவைக்கவும் அவரால் முடியும்.
ஒரு நாளும் என்னிடம் குறைப்பட்டதில்லை. சேர்ந்திருக்கும்
வாழ்க்கையின் மீதான புகார் ஏதுமில்லை. என் வாழ்க்கையின்
மீதான அத்தனை பிரியமும் அவரையொட்டியே
அமைந்திருக்கிறது. மறந்தும் என் மனம் அலைவுற்றதில்லை.
உலகத்தைச் சுற்றி வந்த போதெல்லாம் அவரோடு இணைந்தே
போயிருக்கிறேன். என்னை அறிந்தவர்கள் ரெத்தினத்தையும்
சேர்த்தே அறிந்திருக்கிறார்கள்.
அக்காவாக, அம்மாவாக, அண்ணியாக மாறியிருக்கிறார்.
ஒரு நாளும் அகந்தையின் கரத்தில் அகப்பட்டதில்லை.
தன்னகங்காரம் இல்லாத அவரின் குழந்தைத் தனத்தை
எப்போதும் ரசிப்பேன். உண்மையான அன்பில் செறிந்து
நிற்கிறோம். அதுவே வாழ்க்கையாகிறது!
--
செய்தி: நா.கதிர்வேலன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
நன்றி- குங்குமம்
யாராச்சும் ‘நீ சாப்டியா’னு கேட்க மாட்டாங்களான்னு
மனசு ஏங்கும். அப்படி வருகிறவர்களை அந்த வார்த்தை
கூட கேட்காமல் பெத்த பிள்ளை மாதிரி உட்கார
வைத்து வயிறு நிரப்பி அனுப்பும் அம்மா.
இந்த ஈரத்தைப் பார்த்து வளர்ந்தவன்தான் நான்.
இத்தனை பிரியத்தை தாண்டித்தான் இந்த சென்னைக்கு
வருகிறேன். இங்கே நண்பர்களின் அருகாமை நல்லா
அமையுது. அம்மாவைப் போலான சுசி சின்னம்மாவின்
கவனிப்பும் கிடைக்கிறது.
அப்படியிருக்கும் போது ஒரு நாள் வீட்டிலிருந்து ஒரு கடிதம்
வருது. ‘பொண்ணு பாத்தாச்சு. கல்யாணம் கூடி வருது.
புறப்பட்டு வா’னு தேதி நிர்ணயிச்சு அனுப்புறாங்க.
நான் மறுவார்த்தையில்லாமல் மதுரைக்கு புறப்பட்டுப்
போனேன். தாலி கட்டும்போதுதான் மனைவியாகப் போகும்
ரெத்தினத்தைப் பார்க்கிறேன்.
எங்களைப் போலவே பெரும் தலைக்கட்டாக வேரோடி
நிற்கிற குடும்பம்.
என்னோடு ரெத்தினத்தை சென்னைக்கு அனுப்பும்போது
‘சென்னை நாகரிகத்திற்கு பழக்கமில்லாத கிராமத்துப்
பொண்ணு. நீதான் பார்த்துக்கணும்’ என்று அம்மா அனுப்பி
வைத்தார்கள்.
மாறாக ரெத்தினமே என்னைப் பார்த்துக் கொள்கிறார்.
என் வாழ்வில் சந்தோஷத்தை நிலைநிறுத்திய மனைவி!
என்னிடம் அன்பாய் இருப்பது தவிர அவருக்கு எதுவும்
தெரியாது. ஒரு நாளும் இருவரும் சுடுசொல் பரிமாறியதில்லை.
நம்புவது உங்கள் விருப்பம்.
எல்லோரையும் அரவணைத்து வளர்ந்த மனப்பாங்கும்
அவரிடம் குவிந்திருக்கிறது. நான் நினைப்பதைச் செய்து
முடிக்கிற பக்குவம். இருவர் பார்வைக்கும் எங்களுக்கு
மட்டுமே தெரிந்த பொருளிருக்கிறது. அவருக்கு அன்பு
செய்வது தவிர எதுவும் தெரியாது.
வீட்டிற்கு வரும் நண்பர்களும் எங்களுக்கு மதுரையின்
ஜனக்கட்டு சூழலை நினைவூட்டுகிறார்கள். எனக்கு
ஓவியத்தையும் அவரின் அன்பை உணரவும் மட்டுமே
தெரியும்.
அவர் தனித்த பெண்ணல்ல. வீட்டிற்கு வருகிற நண்பர்களை
பாகுபாடின்றி நேசிக்கவும், மதிக்கவும், அன்பில்
கனியவைக்கவும் அவரால் முடியும்.
ஒரு நாளும் என்னிடம் குறைப்பட்டதில்லை. சேர்ந்திருக்கும்
வாழ்க்கையின் மீதான புகார் ஏதுமில்லை. என் வாழ்க்கையின்
மீதான அத்தனை பிரியமும் அவரையொட்டியே
அமைந்திருக்கிறது. மறந்தும் என் மனம் அலைவுற்றதில்லை.
உலகத்தைச் சுற்றி வந்த போதெல்லாம் அவரோடு இணைந்தே
போயிருக்கிறேன். என்னை அறிந்தவர்கள் ரெத்தினத்தையும்
சேர்த்தே அறிந்திருக்கிறார்கள்.
அக்காவாக, அம்மாவாக, அண்ணியாக மாறியிருக்கிறார்.
ஒரு நாளும் அகந்தையின் கரத்தில் அகப்பட்டதில்லை.
தன்னகங்காரம் இல்லாத அவரின் குழந்தைத் தனத்தை
எப்போதும் ரசிப்பேன். உண்மையான அன்பில் செறிந்து
நிற்கிறோம். அதுவே வாழ்க்கையாகிறது!
--
செய்தி: நா.கதிர்வேலன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
நன்றி- குங்குமம்
Similar topics
» மதுரை மண்ணின் மைந்தன் ஓவியர் ட்ராட்ஷ்கி மருது அவர்களின் உரை !
» மருது பாண்டியர்கள்
» மருது பாண்டியர்கள்
» மருது சகோதரர்கள்
» மருது - திரைப்பட விமர்சனம்
» மருது பாண்டியர்கள்
» மருது பாண்டியர்கள்
» மருது சகோதரர்கள்
» மருது - திரைப்பட விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|