புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
8 Posts - 6%
T.N.Balasubramanian
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
4 Posts - 3%
prajai
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
2 Posts - 1%
Saravananj
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
176 Posts - 40%
ayyasamy ram
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
21 Posts - 5%
prajai
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
திருவருட்பாவின் வரலாறு! I_vote_lcapதிருவருட்பாவின் வரலாறு! I_voting_barதிருவருட்பாவின் வரலாறு! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவருட்பாவின் வரலாறு!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 5:33 pm

திருவருட்பாவின் வரலாறு! 3
சென்னை, புதுச்சேரி, சிதம்பரம், கடலூர், கருங்குழி என்று,
தான் செல்லுமிடமெல்லாம் தரிசிக்கும் ஆலயங்களைப்
பற்றி வள்ளலார் பாடிவிடுவார்.

அவ்வாறு அவர் பாடியவற்றில் சிலவற்றைத் தொகுத்து
சென்னை நகரில் இருந்த பல்வேறு அச்சகத்தார் புத்தகங்கள்
அச்சிட்டு விற்று லாபம் பார்த்து வந்தனர்.
அம்மாதிரி அச்சான நூல்கள் பலவும் தப்பும் தவறுமாக இருந்தன.

புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார்,
இறுக்கம் இரத்தின முதலியார் போன்ற வள்ளலாரின் அன்பர்கள்
இவற்றை ஓர் ஒழுங்குக்குக் கொண்டுவர வேண்டுமென விரும்பினர்.

ஏனெனில் -வள்ளலாரை வாசிப்போர் அச்சுப்பிழைகள் மலிந்த
ஏடுகளை வாசித்து ஏமாற்றம் அடைந்துகொண்டிருந்தனர்.

1860 வாக்கிலிருந்தே வள்ளலாரின் படைப்புகளைத் தொகுக்கும் பணி
தொடங்கியது.ஆனால் -இதில் வள்ளலாருக்கு விருப்பமில்லை.
தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளும் முயற்சியாக இது அமைந்து
விடுமோ என்று சங்கடப்பட்டார்.

இறுக்கம் இரத்தின முதலியார் இதற்காக உண்ணாவிரதமே இருந்தார்.

அவர் வள்ளலாருக்கு எழுதிய கடிதமொன்றில், “உங்கள் பாடல் ஏடுகளை
எனக்கு அனுப்பி வைக்கும் வரை நான் நாளொன்றுக்கு ஒருமுறை
மட்டுமே உணவருந்தி என்னை நானே வருத்திக் கொள்வேன்...”
என்று அன்பாக மிரட்டியிருந்தார்.

அக்கடிதத்தைக் கண்டதுமே வள்ளலாருக்கு மனமிரங்கி விட்டது.
“நான் எழுதியவை ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. போலவே,
நான் பாடியவற்றில் பலதையும் எழுதிக்கூட வைக்கவில்லை.
அவற்றையெல்லாம் தொகுத்து உங்களுக்கு அனுப்ப எனக்கு
இரண்டு மாதங்களாவது தேவைப்படும். நிச்சயமாக அனுப்புகிறேன்.

ஆனால் -நீங்கள் இக்கடிதம் கண்டதுமே உங்கள் உண்ணாவிரதத்தை
நிறுத்திக் கொள்ள வேண்டும்.நிறுத்திக் கொண்டேன் என்று எனக்கு
உங்களது பதில் கடிதம் வந்து சேரும் வரை நானும் நாளொன்றுக்கு
ஒரு முறை மட்டுமே உணவு எடுத்துக் கொள்வேன்...” என்று பதில்
அனுப்பினார்.

ஒருவழியாக வள்ளலாரிடமிருந்து பாடல்கள் இரத்தின முதலியாருக்கு
கொஞ்சம் கொஞ்சமாகக் கிடைக்கத் தொடங்கின. அவையும்
முழுமையானவை அல்ல. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எழுதி
அனுப்புகிறேன் என்று சமாதானம் சொன்னார்.

வள்ளலாரிடம் கிடைக்காதவற்றை மற்றவர்களிடமிருந்தும் கொஞ்சம்
கொஞ்சமாக பெறத் தொடங்கினார்.இம்மாதிரி அடிகளாரின் பாடல்களைத்
தேடித்தேடி சேகரிக்கவே ஐந்து ஆண்டுகள் ஆனது.இருப்பினும் -
பாடல்களைத் தர சம்மதித்தாரே தவிர, அதுநாள் வரை அவற்றை
பதிப்பிக்க வள்ளலார் இசைவு தரவில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 5:33 pm

1865ம் ஆண்டு இறுதியில் வள்ளலாருக்கு அனுப்பிய கடிதத்தில்,
“இன்னமும் உங்களுடைய பல பாடல்கள் எனக்குக் கிட்டவில்லை.
உங்களிடம் கேட்டுக் கேட்டு சோர்ந்துவிட்டேன். மீதிப் பாடல்களை
எப்போதுதான் அனுப்புவீர்கள்?” என்று கேட்டார் இரத்தினம்
முதலியார்.“எவை இருக்கிறதோ, அவற்றை அச்சிட்டுக் கொள்ளுங்கள்...”
என்று பதிலளித்தார் வள்ளலார்.

கிடைத்த பாடல்களை ஆறு திருமுறைகளாக வகுத்து, அதற்கு
‘திருவருட்பா’ என்று பெயரையும் வள்ளலாரின் தலை மாணாக்கரான
தொழுவூர் வேலாயுதம் முதலியார் சூட்டினார்.

திருவருட்பாவை எழுதியவர் இராமலிங்கசாமி என்று அட்டையில்
அச்சிட விரும்பினார் இரத்தின முதலியார்.பதறிப்போனார்
வள்ளலார்.சாமி என்று அழைக்கப்படுவதில் அவருக்கு உடன்பாடில்லை.
“இராமலிங்கசாமி என்று வழங்குவிப்பது என் சம்மதமன்று. அங்ஙனம்
வழங்காமை வேண்டும்...” என்று கண்டிப்பும் காட்டினார்.

தொகுப்புப் பணிகள் நல்லபடியாக சென்றுகொண்டிருப் பதைப் பார்த்த
பின்னரே வள்ளலாருக்கு ‘திருவருட்பா’ மீதுஆர்வம் வந்தது.தானாக
முன்வந்து மேலும் சில பாடல்களைத் தந்து உதவினார்.

தன்னுடைய பாடல்கள் எங்கெங்கு இருக்கிறதோ, அனைவருக்கும்
கடிதம் எழுதி வரவழைத்து இரத்தினம் முதலியாருக்குத் தொடர்ந்து
அனுப்பிக் கொண்டே இருந்தார்.

தனித்தனி நூல்களாக அச்சான ‘திருவடிப் புகழ்ச்சி’,
‘விண்ண கலிவெண்பா’, ‘நெஞ்சறிவித்தல்’ ‘சிவநேச வெண்பா’,
‘மகாதேவ மாலை’, ‘திருவருண்முறையீடு’, ‘வடிவுடைமாணிக்க மாலை’,
‘இங்கித மாலை’ ஆகிய எட்டு நூல்கள் முதல் திருமுறைஆயின.

சென்னையில் இருந்தபோது திருவொற்றியூர், சிதம்பரம், திருவலிதாயம்,
புள்ளிருக்குவேளூர், திருவாரூர் உள்ளிட்ட பதிகங்களும், மற்ற பொதுப்
பதிகங்களும், கீர்த்தனைகளும் இரண்டாம் திருமுறையாகத்
தொகுக்கப்பட்டது.

திருவொற்றியூரைக் குறித்து அவர் பாடிய அகத்துறைப் பதிகங்கள்
பத்தொன்பதும் மூன்றாம் திருமுறையாக வகுக்கப்பட்டன.கருங்குழி
வாசத்தின் போது சிதம்பரம் குறித்து அவர் பாடிய பன்னிரண்டும் நான்காம்
திருமுறை ஆயின.

இந்த முதல் நான்கு திருமுறைகளே 1867ல் ‘திருவருட்பா’வாக முதல்
பதிப்பாக வெளிவந்தது.அடிகளாரின் வேண்டுகோளின்படி சாமியைத்
தவிர்த்து சிதம்பரம் இராமலிங்க பிள்ளை என்றே முகப்பில் அவரது பெயர்
அச்சிடப்பட்டது.

-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 09, 2020 5:36 pm

ஆனால் -நூலைத் தொகுத்த தொழுவூர் வேலாயுத முதலியாரின்
ஆசைப்படி பெயருக்கு முன்பாக ‘திருவருட் பிரகாச வள்ளலார்’
என்கிற பட்டம் சேர்க்கப்பட்டது.

இந்தப் பட்டம் அச்சாவது வள்ளலாருக்குத் தெரியாது. நூல் வந்த
பிறகு முகப்பைப் பார்த்து அவர் வருத்தப்பட்டார்.

முதல் பதிப்பின் விலை அப்போது மூன்று ரூபாய்.வள்ளலார்
பாடிய திருத்தணிகைப் பாடல்கள் ஐந்தாம் திருமுறையாக
சேர்க்கப்பட்டு 1880ல் திருத்திய பதிப்பாக வெளிவந்தது.

இப்போது அச்சிட வேண்டாமென்று வள்ளலார் சுட்டிக் காட்டிய
பாடல்கள் பிற்காலத்தில் ‘திருவருட்பா’வில் இணைக்கப்பட்டு
ஆறாம் திருமுறை ஆகின.

அது 1885ல் அச்சாகி வெளியானது.‘திருவருட்பா’வின்
பின்னிணைப்பாக வள்ளலாரின் வரலாறு, திருவருட்பா உருவான
கதை ஆகியவற்றையெல்லாம் அறுபத்தாறு பாடல்களாக தொழுவூர்
வேலாயுதம் பிள்ளை எழுதினார்.

மேலும் -திருவருட்பாவில் இனியும் சேர்த்துக் கொள்ளப்படக் கூடியவை
என்று சுமார் நாற்பத்தி மூன்று தலைப்புகளை வள்ளலார்
கொடுத்திருக்கிறார். முதல் பதிப்பில் அத்தலைப்புகள்
அச்சிடப்பட்டிருக்கின்றன.அவற்றில் சிலவற்றை பின்னாளில் வள்ளலார்
எழுதிக் கொடுத்தார். சிலவற்றை செய்யும் வாய்ப்பை அவருக்கு இயற்கை
வழங்கவில்லை.
-
-----------------------
-தமிழ்மொழி
ஓவியம் -ஸ்யாம்
அணையா அடுப்பு - கட்டுரையில் ஒரு பகுதி
நன்றி- குங்குமம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக