புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
8 Posts - 2%
prajai
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்


   
   

Page 92 of 100 Previous  1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 92 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 07, 2021 3:06 pm

07.11.2021

நடிகை நந்திதா தாஸ் பிறந்த நாள் [1969]

நடிப்பு பயிற்சி எடுத்துட்டு, நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். குழந்தைகளுக்கான ஆடியோ கதை புத்தங்கள்ல, கதை சொல்பவராகவும், வர்ணனையாளராகவும் வேலை செஞ்சார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, இங்கிலிஷ் போன்ற 10 மொழி படங்கள்ல  நடிச்சிருக்கார். 2 படங்களை டைரக்ட்டினார். 

ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருது, நந்தி விருது இன்னும் சில விருதுகளும் வாங்கினார். 

பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா - சாதனா சர்கம் 

அழகி 2002 / ம்யூஸிக் & வரிகள் : இளையராஜா 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 07, 2021 3:17 pm

07.11.2021

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் பிறந்த நாள் [1954]

டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர், பாடலாசிரியர் & பின்னணி பாடகர், டான்ஸ் மாஸ்ட்டர். குழந்தை நட்சத்திரம். 1960ல களத்தூர் கண்ணம்மா படத்தில குட்டி பையனா நடிக்க ஆரம்பிச்சார். முதல் படத்துக்கே ஜனாதிபதி விருது  வாங்கினார். அஞ்சு தமிழ் படங்கள்லயும், ஒரு மலையாள படத்லயும் சின்ன பையனா ஆக்ட் குடுத்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காள மொழி படங்கள்ல நடிச்சிருக்கார். 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்ட்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் வச்சிருக்கார். நடிகர் சாருஹாசனும், சந்திரஹாசனும் கமலோட அண்ணன்கள். அப்பாவுக்கு கமல் சினிமாவுக்கு வரணும்னு ஆசப்பட்டார். மகள் சுருதிஹாசனும் நடிகை. 

குச்சுப்புடி, கதகளி, பரதம் னு நடனங்களை கத்துக்கிட்டார்.

இவர் டான்ஸ் மாஸ்ட்டரா வேல செஞ்ச சில பழைய படங்கள் : 
நான் ஏன் பிறந்தேன் 1972 - புரட்சி தலைவர் MGRக்கு
சவாலே சமாளி 1971 - நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு  
அன்பு தங்கை 1974 - ஜெயலலிதாவுக்கு
 
தன்னோட ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாத்தி, நெறைய பொதுநல வேலைகளை செஞ்சார். இந்த மன்றத்தில் உள்ளவங்க பத்தாயிரத்துக்கும் மேல கண்களை தானம் செஞ்சிருக்காங்க. தனது உறுப்புகளை தானம் செய்வதாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில தன் பேரை ரெஜிஸ்ட்டர் செஞ்சிருக்கார் கமல். புற்று நோயால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு  2010ல நிதி திரட்டி போரூர் ராமச்சந்திரா யூனிவர்சிட்டிக்கு கொடுத்தார். 

பத்மஸ்ரீ விருது, பத்மபூஷன் விருது, செவாலியர் விருது, கலைமாமணி விருது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் விருது, NTR தேசிய விருது, கௌரவ விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வாங்கியிருக்கார். 

ஆனந்த விகடன் சினிமாவிருதுகள், ஏசியாநெட் சினிமா விருதுகள்,  ஃபிலிம்ஃபேர் விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருதுகள், நந்தி விருதுகள், தேசிய விருதுகள், ஸ்டார் ஸ்க்ரீன் விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், விஜய் விருதுகள், சர்வதேச விருதுகள் இன்னும் பலப்பல விருதுகள் வாங்கியிருக்கார். 

பொன்மானை தேடுதே என் வீணை பாடுதே - கமல்ஹாசன் பாடிய பாட்டு 

ஓ மானே மானே 1984 / இளையராஜா / மு மேத்தா 

தஞ்சாவூரு மேளம் அடிச்சு நடுவே சிங்கார மேடையமச்சு - SPB & மேசியா வாசுதேவன் 

சிம்லா ஸ்பெஷல் 1982 / MS விஸ்வநாதன் / வாலி 

முன்பு ஒரு காலத்தில முருங்கமர காட்டுக்குள்ள - கமல்ஹாசன் 

மூன்றாம் பிறை 1982 / இளையராஜா / வைரமுத்து 

குதிரைக்குட்டி ஒரு கோழியை தின்றதாம் நம்புங்கள் நீங்கள் - KJ ஜேசுதாஸ் 

அந்தரங்கம் 1975 / G தேவராஜன் / கண்ணதாசன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 07, 2021 4:32 pm

07.11.2021

பின்னணி பாடகர் கார்த்திக் பிறந்த நாள் [1980]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஒரியா போன்ற 15  மொழி  படங்கள்ல 8000 பாட்டுக்கு மேலா பாடியிருக்கார்.

ஸ்கூல் படிக்கும்போதே கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். ஆரம்பத்ல AR ரஹ்மான் இசை குழூல கோரஸ் பாடிட்டு இருந்தார். பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் கார்த்திக்கை ரஹ்மான்ட்ட இன்ட்ரோ செஞ்சு வச்சார். 

கார்த்திக் பாடிய முதல் பாட்டு "அடி நேந்துகிட்டேன் நேந்துகிட்டேன்" ஸ்டார் படத்ல [2001] சித்ரா சிவராமன்கூட. 

10வது உலக தமிழ் மாநாட்ல இவர் பாடிய தீம் பாட்டு "யாது ஊரே யாவரும் கேளிர்" ரொம்ப ப்ரபலம். விளம்பரங்களுக்கு கார்த்திக் ம்யூஸிக் போட்டிருக்கார். 'Music I Like' னு இசை தொகுப்பு ரிலீஸ் செஞ்சார். வேற சில இசை தொகுப்புகளும் வெளியிட்டார். ஒரு சில படங்களுக்கும் ம்யூஸிக் போட்டிருக்கார். தனியா ஒரு இசைக்குழு வச்சிருக்கார். TVல பாட்டு போட்டி நிகழ்ச்சிகள்ல ஜட்ஜா இருந்திருக்கார். 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், நந்தி விருது, CeniMAA  விருது, விஜய் விருதுகள், மிர்ச்சி ம்யூஸிக் விருதுகள், கண்டசாலா புரஸ்கார் விருது இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 

ஜூலை மலர்களே ஜூலை மலர்களே உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள் - சாதனா சர்கம் & கார்த்திக்

பகவதி 2002 / தேவா / பா விஜய்

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Nov 07, 2021 4:38 pm

07.11.2021

பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் பிறந்த நாள் [1959]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல 2000 பாட்டுக்கு மேல பாடியிருக்கார். பத்து வருஷம் கெமிக்கல் என்ஜினியராக வேலை பார்த்துட்டு, அதுக்கப்புறம் சினிமால பாட ஆரம்பிச்சார். 1992ல AR ரஹ்மான் ம்யூஸிக்ல சில விளம்பரங்களுக்கு குரல் கொடுத்தார். 

விஜய் TV சூப்பர் சிங்கர் பாட்டு போட்டி ஷோல ஜட்ஜா இருந்திருக்கார்.  சில படங்களுக்கு ம்யூஸிக் போட்டிருக்கார். ம்யூஸிக் ஆல்பங்கள் வெளியிட்டிருக்கார். 

தமிழ்ல பாடிய முதல் பாட்டு நம்மவர் படத்ல [1994] "சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்". நாலு படங்கள்ல நேரடியா வந்திருக்கார். 

கலைமாமணி விருது, தமிழ்நாடு, கேரளா மாநில விருதுகள் வாங்கியிருக்கார். 

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான் - சுவர்ணலதா & ஸ்ரீனிவாஸ் [முதல் பாட்டு]

நம்மவர் 1994 / மகேஷ் மாதவன் / வைரமுத்து

ஸ்ரீனிவாஸ் நேரடியா வந்து பாடியிருக்கார். 
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே - ஸ்ரீனிவாஸ் 

பூவெல்லாம் கேட்டுப்பார் 1999 / யுவன் சங்கர் ராஜா / பழனிபாரதி 

ஸ்ரீனிவாஸ் தமிழ்நாடு மாநில விருது வாங்கிய பாட்டு. 
மின்சார பூவே பெண்பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் - நித்யஸ்ரீ & ஸ்ரீனிவாஸ் 

படையப்பா 1999 / AR ரஹ்மான் / வைரமுத்து

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Nov 08, 2021 6:09 pm

08.11.2021

நடிகர் அசோக் செல்வன் பிறந்த நாள் [1989]

சூது கவ்வும் 2013, பீட்சா 2 [2013], தெகிடி 2014, ஆரஞ்சு மிட்டாய் 2015, சவாலே சமாளி 2015 இவர் நடிச்ச சில படங்கள்.  

ஹாஸ்டல் னு ஒரு தமிழ் படம் முடிச்சிருக்கார். ரிலீசுக்கு ரெடி. புது படத்துக்கு ஒப்பந்தம் ஆயிருக்கு. படத்துக்கு இன்னும் பேர் வைக்கல. 

அஜீத் நடிச்ச 2012ல ரிலீஸ் ஆன பில்லா 2 பட டைட்டில்ல அசோக்செல்வனின்  சின்ன வயசு போட்டோ காட்டியிருக்காங்க. சின்ன வயசு அஜீத்தாம். 
குறும்படங்கள்ல நடிச்சிருக்கார். 

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் - சைந்தவி & அபய் ஜோத்புர்கார் /  

தெகிடி 2014 / நிவாஸ் K ப்ரசன்னா / கபிலன் 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Nov 09, 2021 12:47 pm

09.11.2021

நடிகை ஆர்த்தி கணேஷ்கர் பிறந்த நாள்

TVலயும் நடிச்சிருக்கார். காமெடி நடிகை. சன் TVல அசத்த போவது யாரு காமெடி நிகழ்ச்சியில ஜட்ஜா இருந்திருக்கார்.

இவரோட கணவர் கணேஷ்கரும் காமெடி நடிகர்தான். கலைஞர் TVல மானாட மயிலாட டான்ஸ் போட்டீல ரெண்டு பேரும் கலந்துக்கிட்டு ரெண்டாவது பரிசு வாங்கினாங்க. 

1987ல வண்ணக்கனவுகள் படத்ல ஆர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்கள்ல நடிச்சார். என் தங்க கல்யாணி படத்ல இவரும், கணேஷ்கரும்  சகோதர, சகோதரியாக நடிச்சாங்க. 

ஆர்த்தி திடீர்னு ஒரு ஆம்பள போட்டவ இன்ஸ்ட்டால போட்டு,

"இவர்தான் என்னோட புது காதலர். இவரத்தான் நா கல்யாணம் செஞ்சுக்க போறேன்னு" கணேஷ்க்கு சொல்லிட்டார். 

"My new lover my cute my darling I'm going to marry him.....sorry"

கணேஷ் அத பார்த்து அதிர்ந்து போனார். பின்னே இருக்காதா? 

ஆனா இதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு.

படிச்சா அசந்து போவீங்களா? சொல்றேன்.

ஆர்த்தி இன்ஸ்டரால போட்ட படம் ஆம்பளையே இல்ல. Faceapp மூலமா தன் மூஞ்சியவே ஆம்பள மூஞ்சி மாதிரி மாத்தி போட்டிருந்தார்.

கொரோனா காலத்ல  ஆர்த்தியும், கணேஷ்கரும் வீட்லயே சமச்சு சாப்பாடு எடுத்து போய் சாப்பாடு இல்லாமகஷ்ட்டப்பட்ட நூத்துக்கணக்கானவங்களுக்கு  கொடுத்தாங்க. வாரத்துக்கு நாலு நாள். அப்புறமா கேட்டரிங் செய்ற நண்பர்  ஒருவர் மூலமா சாப்பாடு சப்ளை செஞ்சாங்க. 

ஆர்த்தி கலைமாமணி விருது வாங்கினார். 

சிந்து பைரவி படத்தை ஆர்த்தியும், கணேஷ்கரும் நடிச்ச காமெடி


பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Nov 10, 2021 2:36 pm

10.11.2021

பாடலாசிரியர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் [1910 - 1974]

சொந்த பேர் சுப்பிரமணியம். நடிகை சுந்தரிபாய் இவரோட ரெண்டாவது  மனைவி.
 
பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நடிகர், டைரக்ட்டர், கதை, வசனகர்த்தா, பத்திரிக்கையாளர், துணை ஆசிரியர், நாடக நடிகர். அப்பாடா, எத்தன வேல செஞ்சிருக்கார். இது மட்டுமில்லீங்க, வில்லுப்பாட்டு இசை கலைஞரும்கூட. 

ப்ரபலமான தில்லானா மோகனாம்பாள் கதையை தொடர்கதையாக ஆனந்த விகடன்ல 1957 - 1958ல எழுதியவர் இவர்தான். ஆனா கலைமணிங்கிற பேர்ல. இதுக்கு பத்மஸ்ரீ விருது வாங்கினார். மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை 3500 பாட்ல 'காந்தி மகான் கதை'னு புத்தகமாக வெளியிட்டார். ஆல் இண்டியா ரேடியோல 120 ரேடியோ நாடகங்களை  எழுதினார்.  

கல்யாணத்துக்கு அப்புறம் கொத்தமங்கலம் என்கிற ஊர்ல, கேரளால இருக்கு, ஒரு மரக்கடைல வேல செஞ்சார். ஆனாலும் அவரோட இன்ட்ரெஸ்ட் நாடகம், நடிப்பு, பாட்டுலதான். கவிதைகள், பல நாட்டு பாட்டுக்களை எழுத ஆரம்பிச்சார். நாடக குழூல சேந்து நடிக்க ஆரம்பிச்சார். 

1935ல பட்டினத்தார் படத்தில நடிக்கிற  சான்ஸ் கெடச்சுது. ஆரம்பத்தில  டைட்டில்ல இவர் பேர் சுப்பிரமணியம்னு இருந்துச்சு. 1939ல திருநீலகண்டர் படத்தில கொத்தமங்கலம் சுப்புனு பேர் போட்டாங்க. அந்த சமயத்தில  கொத்தமங்கலம் சீனுனு ஒரு நடிகர், சுப்புவை டைரக்ட்டர்  K சுப்பிரமணியம்ட்ட அறிமுகம் செஞ்சு வச்சார். 

பல விஷயங்கள்ல சுப்புவின் திறமையை பாத்த ஜெமினியின் SS வாசன், அவரை தன்கூடவே வச்சுக்கிட்டார். ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்களாயிட்டாங்க. ஜெமினியின் நடிகர், கதாசிரியர், டைரக்ட்டர், கதை, வசனகர்த்தா சுப்புதான். சுப்பு நடிச்சு, கதை, வசனம், பாட்டு எழுதி, டைரக்ட்டி, KB சுந்தராம்பாள் நடிச்ச ஒளவையார்  படத்தை சினிமாவை வெறுத்த ராஜாஜி விரும்பி பாத்தார். 

ஜெமினி நிறுவனத்தின் பல ஆஹா ஓஹோ படங்களுக்கு இவர்தான் ஆதாரம். 

கலாசிகாமணி விருது வாங்கினார். 

எத்தனை கேள்வி எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன் - P சுசீலா 

வஞ்சிக்கோட்டை வாலிபன் 1958 வசனம் & பாட்டுக்கள் : கொத்தமங்கலம் சுப்பு 
ம்யூஸிக் : C ராமச்சந்திரா

குபுகுபு குபுகுபு நான் என்ஜின் அ டகுடகு டகுடகு நான் வண்டி - LR ஈஸ்வரி & AL ராகவன் 

மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966 
ம்யூஸிக் : MS விஸ்வநாதன் / வரிகள் : கொத்தமங்கலம் சுப்பு

காதல் என்றால் என்ன கல்லூரியிலே கற்றுத் தரவில்லை - P சுசீலா & TMS 

மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966 ம்யூஸிக் : MS விஸ்வநாதன் 
வரிகள் : கொத்தமங்கலம் சுப்பு

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Nov 10, 2021 2:52 pm

10.11.2021

பாடலாசிரியர் தாமரை பிறந்த நாள் [1975]

பாடலாசிரியர், கவிஞர். கவிதை தொகுப்புகளையும், சிறுகதை தொகுப்புகளையும் எழுதியிருக்கார். அதுல நிறைய பரிசுகள் வாங்கினார். அது அவர் சினிமாவுக்கு வர்றதுக்கு காரணமாச்சு. இலக்கிய படைப்புகளுக்காக திருப்பூர் தமிழ் சங்க விருது, சிற்பி விருது, வேற பரிசுகளையும் வாங்கினார். ஆபாசம் இல்லாம, இங்க்லீஷ் வார்த்தை கலக்காம பாட்டு எழுதணும்ங்க்ற  உறுதி எடுத்திருக்கார். 

சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னால ஏழு வருஷம் இஞ்சினீயராக வேல  செஞ்சத விட்டுட்டு சினிமாவுக்கு பாட்டெழுத வந்துட்டார். ப்ரபலமானது  மின்னலே படப்பாட்டு "வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில்  தூங்கினால் போதும்". 

ஹாரிஸ் ஜெயராஜ், கௌதம் மேனன் படங்களுக்கு நெறைய பாட்டு எழுதியிருக்கார். எழுதிய முதல் பாட்டு இனியவளே படத்துக்கு [1998] "தென்றல் எந்தன் நடையை கேட்டது" பாட்டு. அனுராதா ஸ்ரீராம் பாடியது. 

ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள், விஜய் விருதுகள் இன்னும் சில விருதுகளும் வாங்கியிருக்கார். 

தென்றல் எந்தன் நடையை கேட்டது தத்தோம் தகதோம் - அனுராதா ஸ்ரீராம் 

இனியவளே 1998 ம்யூஸிக் : தேவா / வரிகள் : தாமரை [முதல் பாட்டு]

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக - ஹரிணி & உன்னிகிருஷ்ணன் 

மின்னலே 2001 ம்யூஸிக் : ஹாரிஸ் ஜெயராஜ் / வரிகள் : தாமரை 

எந்தன் உயிரே எந்தன் உயிரே கண்கள் முழுதும் உந்தன் கனவே - KS சித்ரா & கிருஷ்ணராஜ்

உன்னருகே நான் இருந்தால் 1999
ம்யூஸிக் : தேவா / வரிகள் : தாமரை

மின்னுது மின்னுது பொன்னென மின்னுது - KS சித்ரா & SPB

நம்ம வீட்டு கல்யாணம் 2002
ம்யூஸிக் : SA ராஜ்குமார் / வரிகள் : தாமரை

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Nov 11, 2021 4:14 pm

11.11.2021

இசையமைப்பாளர் S தட்சிணாமூர்த்தி அவர்கள் பிறந்த நாள் [1921 - 2012]

கர்னாடக சங்கீத வித்வான், பின்னணி பாடகர், ம்யூஸிக் டைரக்ட்டர், வயலின் வாத்திய கலைஞர், இசைத்தட்டு தயாரிப்பாளர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சிங்களம் மொழி படங்களுக்கு ம்யூஸிக் போட்டார். ஜங்கிள் மூன் மென் [1955] உட்பட கொலம்பியா பிக்ச்சாரஸாரின் பல ஹாலிவுட் படங்களுக்கும் ரீரெக்காடிங் செஞ்சார். 

1938ல HMV ரெக்காட் கம்பெனீல ஆர்மோனியம் வாசிப்பவராக வேல செஞ்சார். அப்புறமா ஆல் இந்தியா ரேடியோல 'A' க்ரேட் இசை வித்துவானாக இருந்தார். அதுக்கப்புறமா தென்னிந்திய பகுதிக்கான டைரக்ட்டரா ப்ரமோஷன் கெடச்சுது. அதுக்கப்புறம்தான் சினிமாவுக்கு வந்தார். 

உலகம் சிரிக்கிறது 1959
ம்யூஸிக் : S தட்சிணாமூர்த்தி / வரிகள் : A மருதகாசி 

சந்தோஷந்தான் இனி வாழ்விலே நமது வாழ்விலே இந்த உலகிலே - P சுசீலா & சீர்காழியார் 

மஹாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தர்ராஜன் 
யார் பையன் 1957 
ம்யூஸிக் : S தட்சிணாமூர்த்தி / வரிகள் : A மருதகாசி 

தந்தை யாரோ தாயும் யாரோ நீயும் எந்த ஊரோ ஜாலக்காரா தூங்கடா ஆராரோ நான் யாரோ நீ யாரோ - P சுசீலா
 
யார் பையன் 1957 
ம்யூஸிக் : S தட்சிணாமூர்த்தி / வரிகள் : A மருதகாசி 

அம்மா பொண்ணு ராமக்கா உன் அத்தான் வர்றான் பாத்துக்கோ - பேபி கஸ்தூரி 

மங்கையர் திலகம் 1955
ம்யூஸிக் : S தட்சிணாமூர்த்தி / வரிகள் : A மருதகாசி 

நீலவண்ண கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா - R பாலசரஸ்வதிதேவி 

பேபி

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 6065
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Nov 11, 2021 4:21 pm

11.11.2021

பழம்பெரும் நடிகை TP ராஜலட்சுமி அவர்கள் பிறந்த நாள் [1911 - 1964]

திருவையாறு பஞ்சாபகேச ராஜலட்சுமி. தயாரிப்பாளர், டைரக்ட்டர், பாடகி. 

முதல் நடிகை, முதல் பெண் டைரக்ட்டர் & தயாரிப்பாளர்.

11 வயசிலேயே இவருக்கு பால்ய கல்யாணம் ஆயிருச்சாம். அப்பவே வரதட்சணை கொடுமை இருந்திருக்கு. அதனால ராஜலட்சுமி பிறந்த வீட்டுக்கு வந்துட்டார். அதே வேகத்தில விதவையானார். திருவையாறு விட்டு வெளியேறி, திருச்சி வந்தார். 20 வயசில சக நடிகர் TV சுந்தரத்தை கல்யாணம் கட்டிக்கிட்டார். 

அந்த காலத்ல பெண் குழந்தைகள் பிறந்தா கொன்னு போட்ற பழக்கம் இருந்துச்சு. அப்டி மாட்டின ஒரு பெண் குழந்தையை ராஜலட்சுமி தம்பதியினர் தத்து எடுத்துகிட்டாங்க. அப்புறமா ராஜலட்சுமி ஒரு பெண் பிள்ளைக்கு தாயானார். பெண் பிள்ளைங்களை கொல்றதை எதிர்த்து விழிப்புணர்வு செயல்களை செஞ்சார்.

திருச்சியில் நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள்கிட்ட பயிற்சி எடுத்துகிட்டார். சாமண்ணா நாடக கம்பெனியில சேந்து 11 வயசுல நடிக்க ஆரம்பிச்சார். முதல் நாடகம் பவளக்கொடி. இப்டி வேற வேற நாடக கம்பெனிகள்ல சேந்து, பர்மா, இலங்கை போன்ற ஊர்களுக்கு போய் நடிச்சார். 

SG கிட்டப்பா, தியாகராஜ பாகவதர், VA செல்லப்பா கூட நடிச்சு பாராட்டை பெற்றார். அவர் நடிச்ச நாடகங்கள்ல தேச பக்தி பாட்டுகளையும், கர்னாடக இசை பாட்டுக்களையும் பாடி பிரபலமானார். 

1917ல முதல் ஊமை படம் கீசக வதம் படத்லயும், 1931ல முதல் பேசும் படம் காளிதாஸ்லயும் நடிச்சார். 1929ல கோவலன் படத்ல மாதவியாக நடிச்சார். 1931ல குறத்தி பாட்டும் நடனமும் னு தமிழ் சினிமால முதல் குறும்படத்தில நடிச்சார். முதல் தமிழ் பேசும் படத்தின் கதாநாயகி. அப்போ அவரை சினிமா ராணி னு சொன்னாங்க. 

சென்னைல ஸ்ரீ ராஜம் டாக்கீசு னு கம்பெனியை ஆரம்பிச்சு, 1936ல மிஸ் கமலா னு [அவர் மகள் பேர் கமலா] ஒரு படத்துக்கு கதை, வசனம் எழுதி, தயாரிச்சு, டைரக்ட்டி, நடிச்சார். முதல் பெண் தயாரிப்பாளர் & டைரக்ட்டர். 
தென்னிந்திய நடிகர் சங்கம் அப்போ 'TP ராஜலட்சுமி விருது' னு ஒரு விருதை அறிவிச்சுச்சு. அந்த விருது வாங்கிய முதல் நடிகை MN ராஜம். 

ராஜலட்சுமி கலைமாமணி விருது வாங்கினார். 

பேபி

Sponsored content

PostSponsored content



Page 92 of 100 Previous  1 ... 47 ... 91, 92, 93 ... 96 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக