ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 65 of 100 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jul 14, 2021 4:50 pm

14.07.2021

சுப்ரீம் ஸ்ட்டார் சரத்குமார் பிறந்த நாள்

நடிகர், டைரக்ட்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். தமிழ் சினிமால சுப்ரீம் ஸ்ட்டார். 
   
நடிகை ராதிகாவின் கணவர். தென்னிந்திய சினிமா கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவர். ஆரம்பத்ல வில்லனாக நடிச்ச ஹீரோக்கள்ல இவரும் ஒருத்தர். 

ராடான் நிறுவனம் TVல தயாரிச்ச கோடீஸ்வரன் ரியாலிட்டி ஷோவை நடத்தினார். இந்த நிறுவனத்தின் ஓனர் நடிகை ராதிகாவை லவ்வி கண்ணாலம் கட்டிக்கினார். 

கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், சினிமா எஸ்ப்ரெஸ் விருதுகள், தினகரன் சினிமா விருதுகள், சிவாஜி கணேசன் விருது, விஜய் விருது,   SIIMA விருது இன்னும் நிறைய விருதுகள் வாங்கியிருக்கார். 

பிறந்த ஊர் டெல்லில இருந்து சென்னைக்கு வந்தார். காலேஜ் படிச்சு முடிச்சுட்டு, Body Builder ஆகி 1974 MR Madras ஆனார். சொந்தமா ஒரு ட்ராவல் ஏஜென்ஸி நடத்தினார். எப்டியோ கவிஞர் கண்ணதாசன் மகன் கலைவாணன் கண்ணதாசனை சந்திக்கும் ச்சான்ஸ் கெடச்சுது. அதன் காரணமா தயாரிப்பாளரானார். 

முதல்ல நடிச்ச படம் கண் சிமிட்டும் நேரம் [1988]. இணை தயாரிப்பாளரும் இவர்தான். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாட்டு & டைரக் ஷன் கலைவாணன் கண்ணதாசன்.

சும்மா சும்மா சும்மா சும்மா மனம் ஏங்குது யம்மா யம்மா யம்மா யம்மா - மனோ

பெரிய கவுண்டர் பொண்ணு 1992 / தேவா / காளிதாசன்

இவர் பாடிய பாட்டு 
தருவீயா தரமாட்டீயா தர்லேன்னா ஓம்பேச்சு க்கா - ஜோஷ் & சரத்குமார் 

சாணக்யா 2005 / ஸ்ரீகாந்த் தேவா / கபிலன் 

பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட - ஜானகி & SPB

சூரியன் 1992 / தேவா / வாலி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jul 14, 2021 4:58 pm

14.07.2021

நடிகை கீதா பிறந்த நாள் [1962]

தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி, மலையாள படங்கள்ல, TV சீரியல்கள்லயும்  நடிச்சிருக்கார். நடிச்ச முதல் தமிழ் படம் 1978ல பைரவி. இந்த படத்ல நடிக்க வரும்போது ஏழாங்க்ளாஸ் படிச்சிட்டு இருந்தார். கொஞ்ச படங்கள் நடிக்க ச்சான்ஸ் கெடச்ச பிறகு படிப்பை  நிறுத்திட்டார். 

1997ல கல்யாணத்துக்கப்புறம் நடிக்கறதை விட்டுட்டார். 2003ல மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சார். 

ரெண்டு ஃபிலிம்ஃபேர் விருது, கர்நாடகா, கேரளா மாநில விருதுகள், சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது  வாங்கியிருக்கார். 

இசை பாடும் பறவை இதோ இந்த மேடை என் கூடு தமிழ் பாடல் என் வாழ்வு என் சந்தோஷம் சங்கீதமே - வாணி ஜெயராம்  

சுமங்கலி 1983 / MS விஸ்வநாதன் /. வாலி 

வான் போலே வண்ணம் கொண்டு வந்தாய் கோபாலனே பூ முத்தம் தந்தவனே ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில் தன் முகம் கொண்டவனே - ஷைலஜா & SPB

சலங்கை ஒலி 1983 / இளையராஜா / வைரமுத்து

யாராரு என்னான்னுதான் சொல்றேண்டா கண்ணா நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா - சுசீலா, ஜானகி & சசிரேகா 

முத்து எங்கள் சொத்து 1983 / இளையராஜா / வாலி 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jul 15, 2021 2:58 pm

15.07.2021

நடிகை அனுஹாஸன் பிறந்த நாள் [1970]

நடிகை, மாடல், TV நிகழ்ச்சி தொகுப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சார். உலக நாயகன் கமல்ஹாசனின் உறவினர். 1996ல இந்திரா படத்ல  சுஹாசினி இவரை  அறிமுகப்படுத்தினார். 

விஜய் TVல 'Coffee With அனு' நிகழ்ச்சி மூலம் இவர் ப்ரபலம். சில ஹிந்தி ஹீரோயின்களுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார். 

ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடி போச்சு கண்ணீர் மிச்சமில்லையே ஏ   ஏ  ஏ  ஏ 

இந்திரா 1995 / இந்திரா / வைரமுத்து 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 16, 2021 12:29 pm

16.07.2021

ப்ரபல தயாரிப்பாளர் TR சுந்தரம் [மாடர்ன் தியேட்டர்ஸ்] அவர்கள் பிறந்த நாள் [1907 - 1963]

தயாரிப்பாளர், டைரக்ட்டர், நடிகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல தன் திறமையை காட்டினார். சேலத்தில 'மாடர்ன் தியேட்டர்ஸ்' னு  தயாரிப்பு அரங்கத்தை ஏற்படுத்தினார். இந்த அரங்கத்தின் மூலம் ரிலீஸ் ஆன முதல் படம் 1937ல சதி அகல்யா. 

இவர் அப்பா திருச்செங்கோடு பகுதியில் முக்கியமான பருத்தி நூல் வியாபாரி. அதனால தன் மகன் சுந்தரத்தை நெசவு தொழிலை பற்றிய நுணுக்கங்களை கத்துக்கிட்டு வர்றதுக்காக 1930ல ப்ரிட்டனுக்கு அனுப்பினார். அங்க ஒரு இங்கிலீஷ்கார குட்டிய லவ்வி  கல்யாணம் செஞ்சுக்கிட்டார். 

1934ல சேலத்தில 'ஏஞ்சல் ஃபிலிம்ஸ்' சினிமா தயாரிப்பு நிறுவனம் இருந்துச்சு. அங்க சுந்தரம் பங்குதாரர் ஆனார். சண்டை படங்கள்னா சுந்தரத்துக்கு பிடிக்கும். அதனால, அப்டி படங்களை தயாரிக்கிறதுக்காக ஜெர்மனிலயிருந்து ரெண்டு ஒளிப்பதிவாளர்களை  வரவழச்சு, சிறந்த ஒளிப்பதிவுல முதல் முதலா மாயா மாயவன் னு ஒரு ஸ்டண்ட் படத்தை ரிலீஸ் செஞ்சார். 

தமிழ் நாட்டிலேயே கடன் வாங்காமல், சொந்த பணத்திலேயே படம் தயாரிச்ச ஒரே நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். படம் எடுக்கிற சமயத்ல வந்திருந்த அந்த படத்தின் சினிமா கலைஞர்கள் எல்லாருக்கும் தங்குறதுக்கு குடியிருப்பு கட்டினார். படகுழுல இருக்கிறவங்ககிட்ட பேசி, ஏதாவது குறை இருந்தா அதை சரி செஞ்சார். 

சுந்தரத்தின் மார்பளவு சிலையை சென்னையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபை வளாகத்தில கலைஞர் கருணாநிதி 2000ல திறந்து வச்சார்.

ஏகப்பட்ட சினிமா கலைஞர்களின் தாய்வீடாக இருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் வளாகம் இப்போ குடியிருப்பு வளாகமாக மாறி இருக்கு. அது இருந்ததுக்கு அடையாளமா 'மாடர்ன் தியேட்டர்ஸ்' னு ஆர்ச்சை மட்டும் விட்டு வச்சிருக்காங்க. 

TR சுந்தரம் தேசிய விருது வாங்கினார். 2013ல இவரோட பேர்ல அஞ்சு ரூபா ஸ்டாம்ப் மத்திய அரசு வெளியிட்டுச்சு. 


சின்னஞ்சிறு சிட்டே எந்தன் சீனா கற்கண்டே என் சீனா கற்கண்டே ஜில்ஜில் என்றே ஆடிக்கொண்டே வா பொன்வண்டே கிட்டே வா பொன்வண்டே - ஜிக்கி & SC கிருஷ்ணன் 

மாடர்ன் தியேட்டர்ஸின் முதல் கலர் படம்.
அலிபாபாவும் 40 திருடர்களும் 1956 / தட்சிணாமூர்த்தி / மருதகாசி 

பா பா பாட்டுத் திக்குதடி பல்லவி சிக்குதடி கேட்டா எரியுமடி லேட்டா புரியுமடி ராகம் பாடிகிட்டு தாளம் போட்டுக்கிட்டு கீழே ஆரம்பிச்சு மேலே பாட்டு எடு - ஈஸ்வரி & SV பொன்னுசாமி 

சி.ஐ.டி. சங்கர் 1970 / வேதா / கண்ணதாசன்

மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது - சுசீலா & TMS

வல்லவனுக்கு வல்லவன் 1965 / வேதா / கண்ணதாசன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

சிவா and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 16, 2021 12:54 pm

16.07.2021

டைரக்ட்டர் TR ரகுநாத் அவர்கள் பிறந்த நாள் [1912 - 1990]

தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியின்  தலைவராக இருந்தவர். 1930, 1940களில் ப்ரபல  டைரக்ட்டர் ராஜா சந்திரசேகரின் சகோதரர். இவரிடம் 1934ல ரகுநாத் உதவியாளராக இருந்தார்.

பம்பாய்ல Filmcity ஸ்டூடியோல வேல செஞ்சு, டைரக் ஷன், எடிட்டிங்னு சினிமா பற்றிய சங்கதிகளை கத்துக்கிட்டார். முதல்ல டைரக்ட்டின படம் 1939ல ஜோதி ராமலிங்க சுவாமிகள். 


ஆளத்தொட்டு தோள தொட்டு அழக பாரு கண்ணா நீ ஆசப்பட்ட வாசமொட்டு மலர்ந்திருக்கு பொண்ணா - LR ஈஸ்வரி & AL ராகவன் 

மாப்பிள்ளை அழைப்பு 1972  / V குமார் / வாலி 

நான் நால்வகை நாடகம் ஆடிடும் பாத்திரம் பூமேடை நீ போட வா பார் நான் தரும் தேன்சுவை போதையில் ஓர் வகை பொன்னூஞ்சல் நீயாட வா - சுசீலா

மாப்பிள்ளை அழைப்பு 1972 / V குமார் / வாலி

ஆடு பதினஞ்சு புலி மூணு இந்த ஆட்டம் ஆட இங்கே அது வேணும் எது மூளையது வேணும் - TA மதுரம் 

வனசுந்தரி 1951 / CR சுப்பாராமன் & SV வெங்கடராமன் / உடுமலையார் 

மணக்கும் ரோஜா மை லேடி எனக்கு நீதான் சரி ஜோடி - ஜமுனாராணி & AL ராகவன்

கவிதா 1962 / KV மகாதேவன் / மருதகாசி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

சிவா, ayyasamy ram and heezulia இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Sat Jul 17, 2021 8:12 am

TR ரகுநாத் இயக்கிய படங்கள் 29
அவற்றில் சில:-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Main-qimg-eac22b774a0f30ecb6c572e561c53c8a
-
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Main-qimg-00b232c01907e1e31aa684ba63145c3c
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 17, 2021 3:07 pm

17.07.2021

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் பிறந்த நாள் [1941]

விளையாடின வயசு போன பிறகு நாடகம் எழுதி, டைரக்ட் செய்ற இன்ட்ரெஸ்ட் வந்துச்சு. ஊர் சிரிக்கிறது, சும்மா ஒரு கதை னு நாடகங்களை எழுதி அப்பப்போ திருவிழா காலத்ல மேடை ஏற்றினார்.

சினிமா மோகத்தில, பாத்துட்டு இருந்த கவர்மெண்ட் வேலைய விட்டுட்டு அம்மா கருத்தம்மா ஆசீர்வாதத்தோட சென்னைக்கு ஓடியாந்துட்டார். 
என் இனிய தமிழ் மக்களே பாரதிராஜா. சில படங்கள்ல நடிச்சிருக்கார். நண்பர் SPBயின் உதவியோடு டைரக்ட்டர்  புல்லையாகிட்ட உதவியாளரா இருந்து சினிமால கால் பதிச்சார். அப்புறமா  கன்னட சினிமா தயாரிப்பாளர் புட்டண்ணா கூட இருந்து சினிமா நுணுக்கங்களை கத்துக்கிட்டார். . வேற சில டைரக்ட்டர்கள்கிட்டயும் உதவியாளராக இருந்தார். 

டைரக்ட்டின முதல் படம் 16 வயதினிலே 1977. அநேகமா இவரோட பங்கள்ல  நாட்டுப்புற கதை இருக்கும். ரெண்டு க்ராமத்து படங்களை எடுத்துட்டு, சிகப்பு ரோஜாக்கள்ன்னு பட்டண படம் எடுத்தார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களை டைரக்ட் செஞ்சிருக்கார். 

எல்லாரும் ஸ்டூடியோக்குள்ளேயேதான் கேமராவை வச்சுட்டு சுத்தி சுத்தி வந்துதான்  அதுவரை எல்லாரும் படம் எடுத்தாங்க. பாரதிராஜாதான் முதல்முதலா கேமராவை தூக்கிட்டு அவுட்டோர் ஷூட்டிங் எடுத்தார். அதான் முதல் படம் 16 வயதினிலே 1977. 

பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, சித்ரா லட்சுமணன், மனோஜ்குமார், பொன்வண்ணன், சீமான் இவங்கல்லாம் பாரதிராஜாவின் உதவியாளர்கள். 
கார்த்திக், ராதா, விஜயசாந்தி, ரேவதி, ராதிகா போன்ற பல நடிகர்கள் பாரதிராஜாவின் அறிமுகங்கள். பல இளம் படத் தயாரிப்பாளர்களை  உற்சாகப்படுத்தினார். பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் of சினிமான்னு ஸ்கூல் நடத்துறார். 

இவரின் முதல்மரியாதை படம் 1986ல தாஷ்கண்ட் சினிமா விழால  திரையிட்டாங்க. தாய் கருத்தம்மா பேர்ல எடுத்த படத்துக்கு கெடச்ச தேசிய விருதை, தாயை வச்சே வாங்க வச்சார். 

பத்மஸ்ரீ விருது, தேசிய விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள் இன்னும் சில விருதுகள் வாங்கியிருக்கார். தமிழ் சினிமாவின் திருப்புமுனைனு இவரை சொன்னாங்க. 

"சந்தக்கி போணும் ஆத்தா வையும் காசு குடு"

16 வயதினிலே 1977 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் / இளையராஜா

வெட்டிவேரு வாசம் வெடலப்புள்ள வேஷம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே - ஜானகி & மலேசியா வாசுதேவன்

முதல் மரியாதை 1985 / இளையராஜா / வைரமுத்து

பொடீ நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாறேன் வேணாய்யா வீராப்பு ஒன நெனச்சு நாம்போட்டேன் மாராப்பு - சித்ரா 

கடலோரக் கவிதைகள் 1986 / இளையராஜா / கங்கை அமரன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 17, 2021 3:13 pm

17.07.2021

நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாள் [1984]

தயாரிப்பாளரும். க்ரிக்கெட் வீரர். 

படபடவென பறந்திட இன்று சிறகுகள் அடடா முளைக்கிறதே கடகடவென கடந்திட இன்று வானவில் வழியாய் விரிகிறதே - கார்த்திக்

வெண்ணிலா கபடி குழு 2009 / செல்வராகவன் / கார்த்திக் நேத்தா

தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே - சைந்தவி & பிரசன்னா

நீர்ப்பறவை 2012 / NR ரகுநாதன் / வைரமுத்து

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sat Jul 17, 2021 3:29 pm

17.07.2021

நடிகர் அசோகன் பிறந்த நாள் [1931 - 1982]

சின்ன வயசிலேயே மேடை நாடகங்கள்ல நடிக்கிறதலயும், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகள்ல  கலந்துகிறதுலயும் இன்ட்ரெஸ்ட் உண்டு.
 
பட்டப்படிப்பு முடிஞ்சவுடனே டைரக்ட்டர் ராமண்ணாவை மீட் பண்ண ச்சான்ஸ் கெடச்சுது. சொந்தபேர் ஆண்டனியை அசோகன்னு மாத்திட்டார். நடிச்ச முதல் படம் 1953ல ஔவையார்.

இவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. ஹீரோ, வில்லன், காமெடி, குணச்சித்திரம் எல்லா ரோல்லயும் கலக்கினார். ஆனா வில்லனாதான்  நிறைய படங்கள்ல நடிச்சார். தன் மூத்த மகன் பேர்ல அமலராஜ் மூவீஸ் னு தயாரிப்பு நிறுவனம் நடத்தினார். 

எல்லார்கூடயும் சீக்கிரமா சகஜமா பழகிருவார். MGR, AVM சரவணன், சின்னப்ப தேவர், தேங்கா சீனிவாசன், ஜெய்சங்கர் இவங்கல்லாம் அசோகனுக்கு நெருக்கமானவங்க.  

புன்னகையில் ஒரு பொருள் வந்தது பூ முகத்தில் தங்க நிறம் வந்தது கன்னியை போல் புது கனி வந்தது கண்களிலே நாணம் ஏன் வந்தது - TMS

பவானி 1967 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

ஆடைய பாரு ஜாடைய பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல அரை வெட்டு தலையுடன் முகவெட்டு பாரு பெண்ணல்ல இவ பெண்ணல்ல - TMS 

வல்லவனுக்கு வல்லவன் 1965 / வேதா / கண்ணதாசன்

கட்டவண்டி கட்டிலாச்சுது எங்க மாப்பிள்ளை கண்ணுறங்கும் மெத்தையாச்சுது - சுசீலா 

தெய்வத் திருமகள் 1964 / PS திவாகர் / கண்ணதாசன் 

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Sun Jul 18, 2021 5:36 pm

18.07.2021

நடிகை பூர்ணிமா பாக்கியராஜ் பிறந்த நாள் [1960]    

மொதல்ல மலையாளத்துல நடிச்சிட்டு இருந்தார். அப்புறமா தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல  நடிச்சார். தயாரிப்பாளரும் கூட.

எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியந்தான், இவர் ப்ரபல நடிகர் பாக்கியராஜின் மனைவி. TV சீரியல்ல நடிச்சிட்டிருக்கார்.  

1985 வரைக்கும் படங்கள்ல நடிச்சார். அதுக்கப்புறமா 2013ல திரும்பவும் நடிக்க ஆரம்பிச்சார். கல்யாணத்துக்கு முன்னால ட்ரெஸ் டிஸைனிங் நிறுவனத்தை ஆரம்பிச்சு இப்போ வரை நடத்திட்டு இருக்கார். 

பூர்ணிமாவின் மகள் சரண்யா, மகன் சாந்தனு ரெண்டு பேருமே நடிகர்கள். சாந்தனு TV தொகுப்பாளர் கீர்த்தியை கல்யாணம் செஞ்சிருக்கார். 

கேரள மாநில விருதும், ஃபிலிம்ஃபேர் விருதுகளும் வாங்கியிருக்கார் பூர்ணிமா. 

ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம் - ஷைலஜா & தீபன் சக்கரவர்த்தி

நெஞ்சில் ஒரு முள் 1981 / GK வெங்கடேஷ் / MG வல்லபன்

அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே ஏ ராதா ஆஹா ஐ லவ் யூ ஆஹா இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய் - வாணி ஜெயராம் & SPB  

Darling டார்லிங்  Darling   1982 / சங்கர்-கணேஷ் / புலமைப்பித்தன்

நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி ஏன் இன்னும் என்னிடம் மௌனமோ கண்மணி - வாணி ஜெயராம் & தீபன் சக்கரவர்த்தி

நெஞ்சில் ஒரு முள் 1981 / GK வெங்கடேஷ் / MG வல்லபன்

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5747
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 65 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 65 of 100 Previous  1 ... 34 ... 64, 65, 66 ... 82 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் காணும் திரு ர‌மணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum