ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
ayyasamy ram
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
mini
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 
mohamed nizamudeen
பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_m10பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

+2
SK
heezulia
6 posters

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Sep 02, 2020 11:49 am

First topic message reminder :

02.09.2020

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Jg6TBOnYQw2fnIta5hr7+anupama

அனுபமா, பின்னணி பாடகி - 02.09.1968
இன்று பிறந்த நாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 1f382 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 1f389 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 1f387 பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 1f386

இவருக்கு கர்னாடக சங்கீதமும் தெரியுமாம். லண்டன்ல உள்ள ட்ரினிட்டி காலேஜ்ல பியானோ வாசிக்க கத்துக்கிட்டார்.

ப்ரபல ஹிந்தி பின்னணி பாடகி ஆஷா போஸ்லேயும், தமிழ் பின்னணி பாடகி KS சித்ராவும் பாட்ற ஸ்டைல் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.

ஆரம்பத்ல AR ம்யூஸிக் போட்ட விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தார். 

AR ரஹ்மான் இவரை மே மாதம் [1993] படத்ல மொதல்ல பாடவச்சாலும், திருடா திருடா  [1993] படத்ல  அவர் ம்யூஸிக்ல  அனுபமா பாடிய "சந்த்ரலேகா' பாட்டு,
அதாங்க "கொஞ்சம் நிலவு கொஞ்சம்  நெருப்பு  ஒன்றாய்ச்  சேர்த்தால் எந்தன் தேகம்" ங்கிற பாட்டுதான் பயங்கரமான ஹிட்டோ ஹிட்டு. 
அனுபமாவை 'சந்த்ரலேகா அனுபமா'னு செல்லமா  கூப்ட்டாங்களாம். இந்த பாட்டுக்கப்புறந்தான் அனுபமா பேர் எங்கேயோ...........  போயிருச்சு. 

பாட்டை செலெக்ட் செஞ்சு பாட ஆரம்பிச்சார். தென்னிந்திய மொழிகள்ல, ஹிந்தியில, இங்கிலீஷ்லல்லாம் பாட்டு பாடியிருக்கார். 


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jul 06, 2021 1:06 pm

06.07.2021

நடிகர் ஜீவன் பிறந்த நாள்  

நிஜ பேர் விஜயபாஸ்கர் ரங்கராஜ். அறிமுகமான படம் 2002ல யுனிவர்சிட்டி. 2003ல காக்க காக்க படத்தில வில்லனாக நடிச்சதுக்கு ஃபிலிம்ஃபேர் விருதும், சர்வதேச தமிழ் திரைப்பட விருதும் வாங்கினார். இப்ப அசரீரி என்கிற படத்ல நடிச்சிட்ருக்கார்.

நடிகர் சூர்யா இவரோட ஸ்கூல் friend. ஹாலிவுட்ல ரெண்ட்ற வருஷம் நடிப்பு கலை படிச்சார்.


தையத்தா தையத்தா தைய தையத்தா பைய தா பைய தா பஞ்சு முத்தம் தா உயிர் வாழுகிற வரைக்கும் உனக்கே மடி கொடுப்பேன் - சாதனா சர்கம் & ரேஷ்மி & அமல்ராஜ்

திருட்டு பயலே 2006 / பரத்வாஜ் / வைரமுத்து

நீ நீ நீ வா என்று இதயம் கூப்பிடுதே நீ நீ நீ நீதான் என்று மௌனம் பேசிடுதே கண்ணோரம் பூக்கும் சந்தோஷ சிரிப்பு - மதுஸ்ரீ

மச்சக்காரன் 2007 / யுவன் சங்கர் ராஜா / தேவேந்திரன்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Tue Jul 06, 2021 1:12 pm

06.07.2021

டைரக்ட்டர் திரு பிறந்த நாள்

தமிழ்ல நாலு படம், தெலுங்குல ஒரே படம். இவ்ளோதான் இவர் டைரக்ட்டின படங்கள்.


ஒரு புன்னகைதானே வீசி சென்றாய் அது நடந்து நடந்து நடந்து நடைபாதை முழுக்க கடந்து அது அலைந்து அலைந்து அலைந்து சில தூர எல்லை திரிந்து - ரஞ்சித்

தீராத விளையாட்டுப் பிள்ளை 2010 / யுவன் சங்கர் ராஜா / பா விஜய்

கார்த்திக்கும், அவர் பையன் கௌதமும் சேந்து நடிச்சிருக்காங்க.
ஏ ஈ உ யாரு கொஞ்சம் பாரேன் எல்லோரும் காதலிக்கும் சூரன் டாடிக்கே காம்ப்பெடிஷன் பாரேன் வந்தாச்சு பேர்ளு பெத்த பேரன் - முகேஷ் & ரஞ்சித் கோவிந்த்

Mr. சந்திரமௌலி 2018 / சாம் CS / விவேக்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Wed Jul 07, 2021 12:51 pm

07.07.2021

நடிகை வடிவுக்கரசி பிறந்த நாள் [1962]

சினிமா, TV நாடக நடிகை. இன்னும் TV நாடகங்கள்ல நடிச்சிட்ருக்கார். ப்ரபல டைரக்ட்டர் AP நாகராஜன் இவரோட பெரியப்பா.

AP நாகராஜன் கதை, வசனம் & டைரக் ஷன் செஞ்ச படம் வடிவுக்கு வளைகாப்பு. இந்த படம் ரிலீஸ் ஆன நாளும், வடிவுக்கரசி பிறந்த நாளும் ஒரே நாள். 07.07.1962. அதனால வடிவுக்கரசி னு பேர் வச்சுட்டார்.

வடிவுக்கரசியின் குடும்பம் கஷ்ட்டப்பட்ட குடும்பம். பண வசதியில்லாததால காலேஜ்ல படிக்க முடியல. பல வேலைகள் செஞ்சார். அப்போ தூர்தர்ஷன்ல கண்மணி பூங்கானு சின்ன பிள்ளைங்க நிகழ்ச்சி வாரந்தோறும் நடத்துற ச்சான்ஸ் கெடச்சு. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். முதல்ல நடிச்ச தமிழ் படம் சிகப்பு ரோஜாக்கள் [1978]. வேலைக்கு போறேன்னு வீட்ல சொல்லிட்டு, இந்த படத்ல மாடர்ன் பொண்ணா, அடாவடி ரோல்ல நடிச்சிருப்பார். அதே வருஷம் கிழக்கே போகும் ரயில் படத்துல நடிக்க ச்சான்ஸ் கெடச்சப்போ, "இந்த பொண்ணு ஒல்லியா இருக்கு வேணாம்"னு பாரதிராஜா சொல்லிட்டார்.


ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம் கண்ணே கல்யாண பெண்ணல்லவோ குடை பிடிக்கும் செவ்வானம் படை எடுக்கும் கொடிமலர்கள் கண்ணா கண்ணோடு கண்ணல்லவா - ஜானகி & ஜெயசந்திரன்

தெய்வீக ராகங்கள் 1980 / MS விஸ்வநாதன் / புலமைப்பித்தன்

மன்மதனின் வீணையில் மயக்கம் எனும் ராகம் உண்டு மாலை எனும் நேரத்திலே மந்திரங்கள் கோடி உண்டு - வாணி ஜெயராம் & ஜெயசந்திரன்

அழைத்தால் வருவேன் 1980 / MS விஸ்வநாதன் / கண்ணதாசன்

அம்மன் கோயில் எல்லாமே எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா உன் அன்புக்கெல்லை சொன்னாலே அது எல்லை இல்லா வானம் அம்மா - அருண்மொழி

ராஜாவின் பார்வையிலே 1995 / இளையராஜா / வாலி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by ayyasamy ram Wed Jul 07, 2021 7:44 pm

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Download
பல படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் பின்னர் குணசித்திர வேடங்களுக்கு மாறினார். நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களது மனைவியாக பாரதி ராஜாவின் முதல் மரியாதை படத்தில் இவர் நடித்த நடிப்பு திரை விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரது பாராட்டையும் இவருக்கு பெற்றுத் தந்தது. அதே போன்று இவருக்கு மாபெரும் பாராட்டைப் பெற்றுத் தந்த இன்னொரு படம் ரஜினிகாந்தின் அருணாச்சலம். அந்தப் படத்தில் இவர் ஏற்ற வேதவல்லி பாத்திரம் இவரது திரை வாழ்க்கையில் இவரால் மறக்க முடியாத ஒரு பாத்திரம்

தொண்ணூற்றி ஐந்து வயதுக் கிழவியாக கூன் முதுகுடன் வந்து, ’’அனாதைப் பயலே… யார் சொத்த யாருக்குடா எழுதுறது’’ என்று அந்த படத்திற்காக இவர் வசனம் பேசி நடித்த போது ரஜினி முதற்கொண்டு அதில் நடித்த 2500 நடிகர்களும் கைதட்டிப் பாராட்டியது சினிமா உலக வாழ்க்கையில் இவரால் என்றும் மறக்க முடியாத ஒரு தருணம்

பாரதிராஜாவின் என் உயிர் தோழன் படத்தில் இவர் ஏற்ற பாத்திரத்தை யாராலும் அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியாது

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள வடிவுக்கரசி ஒரு தயாரிப்பாளரும் கூட .

தனது மந்திராலயா ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் பில்ல கிருஷ்ணமூர்த்தி இயக்கிய அன்னை என் தெய்வம் என்கிற படத்தை தயாரித்தார். இதில் கே.ஆர்.விஜயா பிரதான வேடத்தில் நடிக்க, கதாநாயகனாக விஜயகாந்த், நாயகியாக மாதுரி நடித்திருந்தார்.

வடிவுக்கரசிக்கு ஒரே மகள். பெயர் சண்முகப் ப்ரியா. நடிகை ஸ்ரீப்ரியா இவரது நெருங்கிய தோழி. அவரது பெயரையும், தனது தந்தையின் பெயரையும் சேர்த்து சண்முகப் ப்ரியா என்று பெயர் வைத்தார்.

சண்முகப்ரியா விஷுவல் கம்யூனிகேஷன்
முடித்து ள்ளார். ராஜாராணி, நான் சிகப்பு மனிதன், சமர் போன்ற படங்களின் படத்தொகுப்பாளரான ரூபன் என்பவருக்கு சண்முகப் பிரியாவை திருமணம் செய்து கொடுத்து ள்ளார் வடிவுக்கரசி.

எந்த பாத்திரத்தை ஏற்றுக் கொண்டாலும் அதில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு உயிர் கொடுத்து உலவ வைக்கக் கூடிய ஆற்றல் பெற்ற தமிழ் நடிகைகளில் முக்கியமானவர் இவர்.
-
நன்றி- நாகராஜன் வலைப்பூ
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jul 08, 2021 4:40 pm

08.07.2021

நடிகை நிலா பிறந்த நாள் [1983]


தமிழ் படத்துக்காக SJ சூர்யா நிலானு பேர் மாத்திட்டார். வேற மொழி படங்கள்ல இவர் மீரா சோப்ரா. டில்லில பிறந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்கள்ல நடிச்சிருக்கார்.

2005ல அன்பே ஆருயிரே படத்ல அறிமுகமானார்.


மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா - மதுஸ்ரீ & நரேஷ் அய்யர்

அன்பே ஆருயிரே 2005 / AR ரஹ்மான் / வாலி

ஒரு களவாணி பயல நானு காதல் செஞ்சேனே அவன் நெனைப்பாலே நூலா தேகம் வெந்தேனே - மதுஸ்ரீ & நரேஷ் அய்யர்

லீ 2007 / இமான் / வைரமுத்து


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jul 08, 2021 5:33 pm

08.07.2021

நடிகை ரேவதி பிறந்த நாள் [1966]


கொச்சியில் பிற்ந்தவர். TV சீரியல், சினிமா நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள்ல நடிச்சிருக்கார். ஒரு ஹிந்தி படத்தையும், ஒரு இங்கிலிஷ் படத்தையும் டைரக்ட்டியிருக்கார். பரதநாட்டியம் கத்துகிட்ருக்கார்.

1983ல டைரக்ட்டர் பாரதிராஜா இவரை மண்வாசனை படத்ல இன்ட்ரோ செஞ்சு வச்சார். 20 வயசுக்குள்ளேயே பல சேலஞ்ஜிங் ரோல்ல நடிச்சார். இயக்குனர் சிகரம் பாலசந்தர் படத்ல ரேவதி நடிக்கணும்னு அவங்க அப்பா ஆசைப்பட்டார். புன்னகை மன்னன் படத்ல நடிச்சுட்டார்.

இந்த ஹீரோவோடுதான் நடிக்கணும்னு பாக்கமாட்டார். கதை, டைரக்ட்டரை வச்சுதான் நடிப்பார். டைரக்ட்டர் கதை சொல்லும்போது, கதை பிடிச்சிருந்தா "உம்" சொல்லுவார். படம் ஹிட்டாகுமா இல்லியானுல்லாம் யோசிக்கமாட்டார். இவரோட காஸ்ட்டியூம்லாம் இவரே செலெக்ட்டுவார். சில டைரக்ட்டர்கள் கேட்டுக்கிட்டதால, ஒரு சிலருக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கார்.

மூணு தேசிய விருதுகள், அஞ்சு சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள், ஒம்போது ஃபிலிம்ஃபேர் விருதுகள், இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார். 1980, 1990கள்ல தமிழ், தெலுங்கு, மலையாள படங்களுக்கு, தொடர்ந்து மூணு தமிழ் படங்களுக்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கிய ஒரே தென்னிந்திய நடிகை ரேவதி.

ஸ்கூல் படிச்சிட்டு இருக்கும்போது fashion ஷோல கலந்துக்கிட்டார். அப்போ எடுக்கப்பட்ட ஒரு க்ரூப் போட்டோ, ஒரு தமிழ் இதழில் வந்திருக்கு. அந்த சமயத்தில பாரதிராஜா மண்வாசனை படத்துக்கு புதுமுகங்களை தேடிட்டு இருந்தவர் கண்ணுல அந்த போட்டோ மாட்டிக்கிச்சு. அவ்ளோதான், ரேவதி ஹீரோயின் ஆயிட்டார். சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருதும் வாங்கிட்டார்.


முகம் என்ன மோகம் என்ன விழி சொன்ன பாஷை என்ன வேறென்ன சுகம் என்ன யோகம் என்ன மனம் சொன்ன வேதம் என்ன வேறென்ன - ஜானகி & SPB

சுபாஷ் 1996 / வித்யாசாகர் / RV உதயகுமார்

நான் ஒன்று தேடி உன்னிடம் வந்தேன் அது என்ன அது எங்கே அது எப்போ நீ ஒன்று தேடி என்னிடம் வந்தாய் மலர் எங்கே மது எங்கே வா இங்கே - சித்ரா

மீண்டும் சாவித்திரி 1996 / தேவேந்திரன் / பிறைசூடன்

சுகராகமே என் சுகபோகமே கண்ணே கலைமானே கதை பேச வருவாயோ அன்பே அனல் வீசும் விழிவாசல் குளிராதோ - வாணி ஜெயராம் & மலேசியா வாசுதேவன்

கன்னிராசி 1985 / இளையராஜா / குருவிகரம்பையார்


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Thu Jul 08, 2021 5:44 pm

08.07.2021

நடிகை சுகன்யா பிறந்த நாள் [1969]


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்கள்ல நடிச்சிருக்கார். 1996ல இந்தியன் படத்ல வயசானவரா நடிச்சதை ரசிகர்கள் ரசிச்சாங்க. இதை கேள்விப்பட்ட நடிகர் திலகம் சுகன்யாவுக்கு 'லேடி கமல்ஹாசன்' னு பேர் வச்சார்.

சினிமால நடிக்கிறதுக்கு முன்னால பொதிகை TVல ஒரு பெப்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். TV சீரியல்லயும் நடிச்சிருக்கார். பின்னணி பாடியிருக்கார், பின்னணி குரல் கொடுத்திருக்கார். பாரத நாட்டிய கலைஞர். பல இடங்கள்ல மேடையில் நடனம் ஆடியிருக்கார்.

நடிச்ச முதல் படம் புது நெல்லு புது நாத்து 1991.


ஆசையை சொல்ல நினைக்கிறேன் வார்த்தைகள் இன்றி தவிக்கிறேன் கண்களின் பாஷை புரியுமா - சுகன்யா, ஜெகதீஷ், ப்ரியங்கா, தம்பி ராமையா, Dr நாராயணன், MS பாஸ்கர்

திருமணம் 2019 / சித்தார்த் விப்பின் / யுகபாரதி

மாமாவே ஏ மாமாவே மனசுக்கு பிடிச்ச மாமாவே சும்மாவே சும்மாவே சுத்தி வருதே சும்மாவே - சொர்ணலதா & மனோ

கோபுர தீபம் 1997 / சௌந்தர்யன் / வைரமுத்து

மூணு மொழம் மல்லியப்பூ என்ன முட்ட கண்ணால் பாக்குதடி முட்ட கண்ணு மல்லியப்பூ என்ன முட்டச்சொல்லி கேக்குதடி - சித்ரா & SPB

சேனாதிபதி 1996 / தேவா / வைரமுத்து


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 09, 2021 9:46 pm

09.07.2021

பின்னணி பாடகர் உன்னிகிருஷ்ணன் பிறந்த நாள்
 
   
கேரளாக்காரர். கர்னாடக இசைப்பாடகர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்கள்ல பாடிட்டு இருக்கார். 12 வயசிலேயே கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டார். பாடகராக ஆகணும்னுதான் ஆசப்பட்டார்.

AR ரஹ்மான்தான் இவரை சினிமால பாட அறிமுகப்படுத்தி வச்சார். 1994ல காதலன் படத்ல என்னவளே அடி என்னவளே. இவர் மியூஸிக்ல உன்னிகிருஷ்ணன் நிறைய பாட்டு பாடியிருக்கார்.

,கலைமாமணி விருது, நாதபூஷணம், இசை பேரொளி, யுவ கலாபாரதி, இசைச்செல்வம், சங்கீத கலாசாரதி, சங்கீத சக்கரவர்த்தி விருதுகள் வாங்கியிருக்கார். தமிழ் பாட்டுக்கு தேசிய விருது வாங்கிய முதல் ஆண் பாடகர்.
விஜய் TVல பாட்டு போட்டி நிகழ்ச்சிக்கு பல வருடமா ஜட்ஜா இருந்திருக்கார்.
இவரோட மகள் உத்தராவும் பின்னணி பாடகி. சைவம் படத்ல ,முதல் முதலா "அழகே அழகே எதுவும் அழகே" பாடி தேசிய விருது வாங்கியவர். அப்பாவும், மகளும் முதல் பாட்டிலேயே தேசிய விருது வாங்கியிருக்காங்க.

நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம் நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம் - சித்ரா & உன்னிகிருஷ்ணன்

அற்புதம் 2002 / சிவா / சினேகன்

Butterfly பட்டுப்பூ நெஞ்சுக்குள் லப்டப்பு எனக்கு வேண்டும் உனது கம்பெனி இதயம் இனிக்கும் இளமை கூட்டணி - சொர்ணலதா & உன்னிகிருஷ்ணன்

கும்பகோணம் கோபாலு 1998 / இளையராஜா

சிக்காத சிட்டொண்ணு கையில் வந்தா திக்காம பாட்டு வரும் ஆத்தோரம் தோப்போரம் ரோட்டோரமா நிக்காம ஆடச் சொல்லும் - உன்னிகிருஷ்ணன் & அருண்மொழி

சேது 1999 / இளையராஜா / பழனிபாரதி

தேசிய விருது வாங்கிய பாட்டு.
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்துவிட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம் அந்த இடத்தையும் மறந்துவிட்டேன் - உன்னிகிருஷ்ணன்

காதலன் 1994 / AR ரஹ்மான் / வைரமுத்து


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 09, 2021 10:07 pm

09.07.2021


இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் அவர்கள் பிறந்த நாள் [1930 - 2014] 


சினிமாவின் சிகரம். மேடை நாடகத்திலயிருந்து சினிமாவுக்கு வந்தவர். 1965ல முதல் படம் நீர்க்குமிழி டைரக்ட்டினார். தன் நாடகங்கள்ல ம்யூஸிக் போட்டுட்டு இருந்த V குமாரை இந்த படத்ல ம்யூஸிக் டைரக்ட்டர் ஆக்கினார். இவரோட படங்கள்ல உறவுகள், அதுக்குள்ள இருக்கிற சிக்கல்கள், சமூக ப்ரச்னைகள் கருப்பொருளாய் இருக்கும். TV சீரியலையும் டைரக்ட்டினார்.

நாடங்களை ஆரம்பிக்கும்போது கடவுள் வாழ்த்து பாடி ஆரம்பிப்பாங்க. ஆனா பாலசந்தர் முதல் திருக்குறளை சொல்லி ஆரம்பிச்சு புதுமை செஞ்சார். இதே பழக்கத்தை சினிமாலயும் கொண்டுவந்தார். கதை, திரைக்கதை, வசனம் எழுதுறதில பாலசந்தருக்கு உதவியாக இருந்தவர் அனந்து.

கவிதாலயா இவரோட சினிமா தயாரிப்பு நிறுவனம். நிறைய புதுமுகங்களை சினிமால அறிமுகப்படுத்தினார். வேற மொழில நடிச்சிட்டு இருந்தவர்களை தமிழ் படங்களுக்கு கொண்டு வந்தவர். நாடகங்கள்ல நடத்திட்டு இருந்தவங்க சிலரையும் சினிமால இன்ட்ரோ செஞ்சார்.

இது பாலசந்தர் படம்னு சொல்ற அளவுக்கு இவரோட படங்கள் வித்தியாசமா இருக்கும். ஏகப்பட்ட பேரை சினிமால அறிமுகப்படுத்தி, எல்லார் மனசுலயும் நெலச்சி நிக்கிற மாதிரி செஞ்சவர் இவர் ஒருத்தராத்தான் இருக்க முடியும்.

இவரோட படங்கள்ல அதிகமா நடிச்ச நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமல், முத்துராமன். நாகேஷ் பாலசந்தரின் வாடா போடா நண்பர். சுந்தர்ராஜனுக்கு மேஜர் அடைமொழி வந்ததுக்கு காரணம் பாலசந்தர்தான்.

நடிகையர்கள் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா. நடிகர் திலகத்தை வச்சு டைரக்ட்டின ஒரே படம் எதிரொலி 1971. மக்கள் திலகத்தை வச்சு படம் எடுக்கலேன்னாலும் அவர் நடிச்ச தெய்வத்தாய் படத்துக்கு கதை, வசனம் எழுதினார். பாலசந்தர் சினிமாவுக்கு வந்தது தெய்வத்தாய் படத்தின் மூலமாத்தான்.

பாலசந்தரின் டைரக் ஷன்ல ஜெயலலிதா நடிச்ச ஒரே படம் மேஜர் சந்திரகாந்த். 'பாலசந்தர் டச்'னு இவர் படங்களின் ஸீன் இருக்கும். மலையருவி, ஆடு, மாடு இப்டி படத்ல வர்றது நடிகர்கள் வரிசையில் டைட்டில்ல பேர் இருக்கும்.

தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருது, தாதாசாகேப் பால்கே விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகள், தமிழ்நாடு மாநில விருதுகள், அறிஞர் அண்ணா விருது, கௌரவ டாக்ட்டர் பட்டம் இன்னும் நிறைய விருதுகள் வாங்கினார்.


எழுதுகிறேன் ஒரு கடிதம் வானத்து மலரே வையத்து நிலவே வாழ்க்கையின் பொருளே வா - சித்ரா & அனுராதா ஸ்ரீராம்

கல்கி 1996 - கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு & டைரக் ஷன் - K பாலசந்தர் / தேவா / இளந்தேவன்

ள ள ள இனியவளே இளையவளே ள ள ள அறிந்தவளே தெரிந்தவளே தள்ளி தள்ளி இருந்தவளே எள்ளி எள்ளி சிரித்தவளே துள்ளி துள்ளி நடந்தவளே கள்ளி கள்ளி அவள் இவளே - SPB

பொய் 2006 - கதை, திரைக்கதை & டைரக் ஷன்] - கே பாலசந்தர் / வித்யாசாகர் / பா விஜய்

லாரன்ஸின் அருமையான ஒரு டான்ஸ்
பார்த்தாலே பரவசம் 2001 - கதை, திரைக்கதை & டைரக் ஷன் - K பாலசந்தர்


ஆவாரம்பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு ஏநுனி மூக்கு ஏனுங்க வேத்திருக்கு - சுசீலா & SPB

அச்சமில்லை அச்சமில்லை 1984 - கதை, திரைக்கதை, வசனம் & டைரக் ஷன் - பாலசந்தர் / நரசிம்மன் / வைரமுத்து


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by heezulia Fri Jul 09, 2021 10:15 pm

09.07.2021

பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் பிறந்த நாள் [1970]

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி படங்கள்ல பாடியிருக்கார். ஆறாவது வயசிலேயே ம்யூஸிக் கத்துக்க ஆரம்பிச்சார். 1980ல காளி படத்ல குழந்தை நட்சத்திரமாக நடிச்சார். 12 வயசு வரைக்கும் இந்தியால பல பகுதிகள், அமெரிக்கால, ரேடியோ, TVலல்லாம் கச்சேரில பாடினார்.

பம்பாய் [1995] படத்ல ஒரு க்ரூப் ஸாங் பாடியிருக்கார். முதல்ல பாடிய பாட்டு இந்திரா [1996] படத்ல. 1997ல Chennai Girlனு ஒரு இசை தொகுப்பு வெளியிட்ருக்கார். பல TV ரியாலிட்டி ஷோல கலந்துகிட்ருக்கார், அப்புறமா ஜட்ஜா இருந்திருக்கார். சினிமா பாட்டு மட்டுமில்லாம, கர்னாடக இசையும் கச்சேரியில பாடியிருக்கார்.

ஃபிலிம்ஃபேர் விருது, தமிழ்நாடு மாநில விருது, அஜந்தா விருது, இன்னும் பல விருதுகளும் வாங்கியிருக்கார்.


ஏ அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை நம் காலம் இங்கே கூடி போச்சு கண்ணீர் மிச்சம் இல்லையே ஏ ஏ ஏ - அனுராதா ஸ்ரீராம் & GV பிரகாஷ்

இந்திரா 1995 / AR ரஹ்மான் / வைரமுத்து

மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையில்தான் ஒரு காவியமே - அனுராதா ஸ்ரீராம் & உன்னிகிருஷ்ணன்

ஆசை 1995 / தேவா / வாலி


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5458
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்  - Page 63 Empty Re: பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 62 of 100 Previous  1 ... 32 ... 61, 62, 63 ... 81 ... 100  Next

Back to top

- Similar topics
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum