ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

4 posters

Go down

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Empty சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

Post by ayyasamy ram Wed Aug 26, 2020 10:42 pm

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 202008261223213450_Tamil_News_Mahabharata-war-krishna_SECVPF
-
மகாபாரதத்தில் அர்ச்சுனன், கர்ணன், பீமன் உள்ளிட்ட
மாவீரர்களைப் போல, எவராலும் வெல்ல முடியாத
ஒரு வீரனும் இருந்தான்.

வில்வீச்சு, வால் வீச்சு, வேல் வீச்சு போன்றவற்றில்
சிறந்தவனாக இருந்த அந்த வீரனுக்கு, அவன்
பெற்றிருந்த வரமும் இணைந்து அப்படியொரு
பெருமையைப் பெற்றுத்தந்தது. அவன்தான் சல்லியன்.
மத்ர தேசத்தின் அரசன்.

பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கு இரண்டு
மனைவியர். ஒருத்தி குந்தி. இவளுடைய பிள்ளைகள்தான்,
தருமன், பீமன், அர்ச்சுனன். மற்றொருத்தி மாத்ரி.
இவளுடைய பிள்ளைகள் நகுலனும், சகாதேவனும்.

மாத்ரியின் உடன்பிறந்த சகோதரன்தான், சல்லியன்.
நகுல-சகாதேவர்களின் தாய்மாமன். பாண்டவர்களுக்கு
இவ்வளவு நெருங்கிய சொந்தமான சல்லியன்,
மகாபாரதப்போரில் கவுரவர்களின் பக்கம் நின்று போர்
புரிந்தான். அதற்கு துரியோ தனனின் சூழ்ச்சியே
காரணமாக அமைந்தது.

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் போர் என்று
முடிவாகிவிட்டது. அந்தப் பேரில் தன்னுடைய
மருமகன்களுக்கு துணையாக நிற்க வேண்டும்
என்பதற்காகவே, தன்னுடைய படைகளைத் திரட்டிக்
கொண்டு வந்துகொண்டிருந்தான், சல்லியன்.

வழியில் ஒரு பாலைவனம் தென்பட்டது. அது நீண்ட நெடுந்
தொலைவு கொண்டதாக இருந்தது. அதைக் கடக்கும்
முன்பாக சல்லியனும், அவனது படைவீரர்களும், குதிரை,
யானை போன்ற போர் விலங்குகளும் சோர்வடைந்து
போயின.

அப்போது அந்த பாலைவனத்தில் ஒரு பெரும் பந்தல்
தென்பட்டது. அது சல்லியனும், அவனது படையினரும்
தங்கும் வகையில் மிகப் பிரமாண்டமாகவே
அமைந்திருந்தது. அந்த பந்தலுக்குள் இருந்து
வெளிப்பட்டவர்கள், சல்லியனையும், அவனது
படையினரையும் வரவேற்று முதலில் தாகம் தணித்தனர்.
பின்னர் அறுசுவை விருந்து படைத்தனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Empty Re: சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

Post by ayyasamy ram Wed Aug 26, 2020 10:58 pm

அதோடு அவர்களுடன் வந்திருந்த குதிரைகளுக்கும்,
யானைகளுக்கும் கூட உணவு பரிமாறப்பட்டது. இதைக்
கண்டு மனம் மகிழ்ந்த சல்லியன்,
“இத்தகைய உதவிகளைச் செய்பவர் யாராக இருந்தாலும்,
அவர் பெரும் புண்ணியவான். நான் அவர்களுக்கு
வேண்டியதைச் செய்யும் கடமைப்பட்டுள்ளேன்” என்று
வாய்விட்டே சத்தமாக கூறினான்.

அதுவரை மறைவாக இருந்த துரியோதனன், இப்போது
வெளிப்பட்டான். “மாமா.. நான்தான் உங்களுக்காக இந்த
ஏற்பாடுகளைச் செய்தேன். நீங்கள் எனக்கு
கடமைப்பட்டுள்ளதாக இப்போதுதான் கூறினீர்கள்.
எனவே இந்தப் போரில் எனக்கு பக்கபலமாக இருந்து
போரிட வேண்டும்” என்று சத்தியம் வாங்கிக்கொண்டான்.
சல்லியனுக்கு இப்போது வேறு வழியில்லை.

தான் நயவஞ்சமாக ஏமாற்றப்பட்டதால், அவ்வப் போது
துரியோதனனையும், அவனது தவறுகளையும்
குத்திக்காட்டி பேசிவந்தான், சல்லியன். இதனால்
துரியோதனனுக்கு சல்லியன் மீது வெறுப்பு உண்டானது.

அதன் காரணமாகத்தான், சல்லியனை போர்புரிய
அனுமதிக்காமல், கர்ணனின் தேருக்கு சாரதியாக
இருக்கும்படி நியமித்தான்.

சல்லியன் மிகப்பெரும் வீரன் என்பது அனை வருக்கும்
தெரியும். ஆனால் அவன் பெற்றிருந்த வரம், கண்ணனைத்
தவிர வேறு யாருக்கும் தெரியாது.

சல்லியனை எதிர்த்து கோபத்தோடு எவராது போரிட்டால்,
அவரது பலம் ஆயிரம் மடங்காக சல்லியனையே போய்ச்
சேரும் என்பது அவன் பெற்ற வரம்.

இது மட்டும் துரியோதனனுக்கு தெரிந்திருந்தால்,
போர்க்களத்தில் சல்லியனைத்தான் முதன்மையானவனாக
இறக்கிவிட்டிருப்பான்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Empty Re: சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

Post by ayyasamy ram Wed Aug 26, 2020 10:58 pm

இதுபற்றி பாண்டவர்களிடம் கண்ணன் தெரிவித்தார்.
பீமன், சல்லியனோடு போரிடுவதாக கூறினாலும்,
அவனை கண்ணன் தேர்வு செய்யவில்லை. ஏனெனில்
பீமனின் கோபம் அனைவரும் அறிந்ததுதான்.

சல்லியனுக்கு எதிராக அது வெளிப்படும்போது,
பாண்டவர்களுக்குத் தான் பேராபத்து. எனவேதான்
கண்ணன், தருமனைத் தேர்வு செய்தார்.

மேலும் ‘சல்லியனோடு போரிடும்போது, சிரித்த
முகத்தோடு யுத்தம் செய்ய வேண்டும்’ என்றும்
தர்மனுக்கு போதித்தார்.

அதன்படியே இறுதிநாள் பேரில், சல்லியனுக்கு எதிராக
போரிட்ட தருமன், தன்னுடைய முகத்தில் எந்தக்
காரணத்தைக் கொண்டு கோபத்தை வெளிக்காட்டவில்லை.

அதனால் தான் சாதாரண ஈட்டியைக் கொண்டு,
ஒரே வீச்சில் சல்லியனை, தருமனால் வீழ்த்த முடிந்தது.

—————————–மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Empty Re: சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

Post by T.N.Balasubramanian Thu Aug 27, 2020 11:22 am

நல்ல தகவல் .அறியாத சங்கதி.

நன்றி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Empty Re: சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

Post by SK Thu Aug 27, 2020 3:41 pm

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 3838410834 சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 103459460 சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. 103459460


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Empty Re: சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Aug 27, 2020 8:10 pm

நல்லதொரு தகவல் தெரியாத ஒன்று
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்.. Empty Re: சல்லியனோடு, தருமன் போரிடக் காரணம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum