புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_c10வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_m10வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_c10 
92 Posts - 61%
heezulia

38 Posts - 25%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay

1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

284 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_c10வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_m10வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_c10வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_m10வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 8:23 pm

13 Aug 2020
-----------------
வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை 569661
-
'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா'
என்பது, திரையுலக கம்பன் கண்ணதாசனின் கூற்று.

அரசியல், சமூகம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில்
கண்ணதாசனின் கூற்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஆடும்வரை ஆட்டம் என்றவரும் அவர்தான்.
ஆடுபவர்களுக்கு, அழகியல் தெரிந்திருக்க வேண்டும்...
உடல் பலமும் அவசியம். அப்போது, ஆடுபவர்கள்
எல்லாம் பலசாலிகளாக இருக்க வேண்டுமா?.
ஆம். இருக்க வேண்டும்.

ஆனால், ஆடுபவர்களைவிட, ஆட்டுவிப்பவர்கள்
எப்போதும் பலசாலிகளாக இருக்கிறார்கள். தங்கள்
விருப்பப்படி ஆடுபவர்களை, அவர்கள் ஆட்டுவிப்பார்கள்.
நம்மையெல்லாம், இறைவன் என்ற சக்தி இயக்கி,
ஆட்டுவிப்பதாக ஆத்திகர்களின் நம்பிக்கை.

கடவுள் மறுப்பாளர்களான நாத்திகர்களுக்கோ,
இயற்கையின் சக்திதான்.தம்மை இயக்குவதாகக்
கூறிக் கொள்வார்கள். இறைவனா? இயற்கையா? என்ற ச
ர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்க, இறைவனைப்
பற்றியோ, இயற்கையைப் பற்றியோ அலட்டிக்
கொள்ளாமல், 'செய்யும் தொழிலே தெய்வம்' என
தொழில் மீது அக்கறை காட்டுபவர்கள், முன்னேற்றப்
படிக்கட்டுகளில் வேகமாய் ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் ஆடுவதோடு, மக்களையும் மகிழ்ச்சிக்கடலில்
அவர்கள் ஆட்டுவிக்கிறார்கள்.

மக்களை மகிழ்விப்பதற்காக, திரைக்கலைஞர்கள் ஆற்றும்
மகத்தான கலைச் சேவை, மதிக்கப்பட வேண்டியது.
அப்படிப்பட்ட கலைச் சேவையால், தன்னை
மதிப்புக்குள்ளாக்கிக் கொண்டவர்கள் எண்ணற்ற
கலைஞர்கள்.
அந்த கலைஞர்கள் வரிசையில், தனித்துவம் பெற்றவராகத்
திகழ்பவர் வைஜெயந்திமாலா.

தற்போதைய சென்னையில், அப்போதைய மெட்ராஸில்,
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில்
வசித்த வைதீக ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்த பிராமணக்
குடும்பத்தில் M.D. ராமன் - வசுந்தராதேவி ஆகியோருக்கு
மகளாகப் பிறந்தவர் வைஜெயந்திமாலா.

தாயார் வசுந்தராதேவியோ, பிரபலமான நடிகை.
தலைசிறந்த நாட்டியத் தாரகை. சாஸ்திரீய சங்கீதத்தின்
சங்கதிகளை அறிந்த சிறந்த வாய்ப்பாட்டுக் கலைஞர்.
1941-ம் ஆண்டு வெளியான 'ரிஷ்யசிருங்கர்' திரைப்படம்
மூலம் அறிமுகம் ஆனார்.

1943-ம் ஆண்டு வெளிவந்த 'மங்கம்மா சபதம்' திரைப்படம்,
வசுந்தராதேவிக்கு வான் எட்டும் புகழ் தந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 8:30 pm

வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை 15973020381138
-

1933-ம் ஆண்டு பிறந்த வைஜெயந்தி மாலாவின் பள்ளிப்
பருவம் சென்னை 'Sacred Heart' பள்ளியிலும், பின்பு
சர்ச்பார்க் கான்வென்ட்டிலும் அமைந்தது. இளமையிலேயே
கலைகளில் கைவரப்பெற்றவராக வளர்க்கப்பட்ட
வைஜெயந்திமாலா, கவின்மிகு அழகுடன் திகழ்ந்தார்.

தாயைப்போல் பிள்ளை என்பது, பொதுவான சொல்.
அந்தப் பொதுவான சொல்லை, உண்மை என நிரூபித்துக்
காட்டினார் வைஜெயந்திமாலா.

சிறு வயது முதலே, நடனத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட
வைஜெயந்திமாலா, வழுவூர் ராமையா பிள்ளையிடம்
முறைப்படி நடனம் பயின்றார். மேலும், மனக்கல்
சிவராஜா ஐயர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்று
தேர்ச்சி பெற்றார். 13-வது வயதில் தனது அரங்கேற்றத்தை
நிகழ்த்தினார்.

சில அரிய மனிதர்கள் தாங்கள் தோற்றுவிக்கும்
நிறுவனங்களால் அறியப்படுகிறார்கள். ஆனால், நிறுவனமே
அவர்தான். அவர்தான் நிறுவனம். அப்படிப்பட்ட புகழ் ஒரு
சிலருக்குத்தான் வாய்க்கிறது. அந்த அரிய மனிதர்தான்
ஏ.வி.எம் எனப்படும் ஆவிச்சி மெய்யப்ப செட்டியார்.

தமிழ்த் திரைப்படத்துறையின் முன்னோடிகள் என்று
சொல்லப்படுகிற மும்மூர்த்திகளில் ஒருவர். எஸ்.எஸ்.வாசன்,
எல்.வி. பிரசாத், ஏ.வி.மெய்யப்பன். இந்த மூவரில்
திரைப்படத்துறையை ஆண்டவர்களில் முக்கியமானவர்
ஏ.வி. மெய்யப்பச் செட்டியார்.

சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோ அமைந்தவுடன் செட்டியார்
எடுத்த முதல்படம் 'வாழ்க்கை'. திரு. ப. நீலகண்டன்
இப்படத்திற்கான கதையை எழுதியிருந்தார். இந்தப் படத்தில்
சாரங்கபாணியின் பெண்ணாக, ஒரு கல்லூரி மாணவி
வேடத்தில் நடிக்கவேண்டிய கதாநாயகி கதாபாத்திரத்திற்கு
யாரைத் தேர்வு செய்வது என்று ஆலோசனை நடைபெற்றது.

மெய்யப்பச் செட்டியாரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த
எம்.வி. ராமன், விக்டோரியா பப்ளிக் ஹாலில் நடிகை
வசுந்தராவின் மகள் வைஜெயந்திமாலா நடனம் ஆடுவதாகவும்,
அதைப் போய் பார்க்கலாம் என்றும் அழைத்தார். மெய்யப்பச்
செட்டியாரும் சென்று அந்த நடனத்தைப் பார்த்தார்.

பத்தொன்பதே வயதான பருவ மங்கை வைஜெயந்திமாலாவின்
நடனம், ஒரு கவிதையின் அரங்கேற்றம் போல அழகியலை
ஆடையாகச் சூட்டியிருந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 8:39 pm

வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை 15973020501138

வாழ்க்கை கதாபாத்திரத்திற்கு வைஜெயந்திமாலாதான்
சிறந்த தேர்வு எனக் கணித்த ஏ.வி.மெய்யப்பச் செட்டியார்,
அவரைத் தொடர்புகொள்ளும் பணியை படத் தயாரிப்பு
நிர்வாகிகளுக்கு அளித்தார்.
மாதம் 2 ஆயிரத்து 350 ரூபாய் சம்பளம் என ஒப்பந்தம்
செய்யப்பட்டார் வைஜெயந்திமாலா.

‘வாழ்க்கை’ படத்தின் மூலமாகத்தான்
வைஜெயந்திமாலாவின் கலையுலக வாழ்க்கை
தொடங்கியது. படத்தில் இடம்பெற்றிருந்த
‘உன் கண் உன்னை ஏமாற்றினால்’ பாடல் பட்டி
தொட்டியெங்கும் பரவியது. படமும் அமோக வெற்றி
பெற்றது. ‘வாழ்க்கை’ கலையுலகைச் சேர்ந்த பலரது
வாழ்க்கையை வளமாக்கியது.

வாழ்க்கையைத் தொடர்ந்து வைஜெயந்தி மாலாவின்
கலையுலக வாழ்க்கை களைகட்டத் தொடங்கியது.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்
அவரது புகழ் வளர்ந்தது.

1958-ம் ஆண்டு திரையுலக தீர்க்கதரிசி எஸ்.எஸ்.வாசன்
இயக்கத்தில் வெளிவந்த ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’,
வைஜெயந்தி மாலாவின் நடிப்பாற்றலையும், நடன
ஆற்றலையும் நாடெங்கும் பறைசாற்றியது.

இளவரசி மந்தாகினி கதாபாத்திரத்தில் வந்த
வைஜெயந்தி மாலா, ரசிகர்களின் இதயங்களை
எல்லாம் ஆக்கிரமித்துவிட்டார்.

‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தில் கதை அம்சத்தோடு
கைகுலுக்கிய பாடல்கள், நாட்டியப் பேரொளி பத்மினி,
நடன அழகி வைஜெயந்திமாலாவுடன் இணைந்து நடத்திய
நாட்டியாஞ்சலி, ஆகியவை அந்தக்காலந்தொட்டு இந்தக்
காலம் வரை ரசிகர்களை வியந்து பார்க்கவைத்துக்
கொண்டிருக்கிறது.

வைஜெயந்தி மாலா சிறந்த பரதநாட்டியக் கலைஞர்
என்பதால், அவரது நடிப்பில் நடனத்தின் நளினங்கள்
நடனமாடும். உணர்ச்சிகளின் அந்த ஊர்வலம் ரசிகர்களின்
இதயங்களில் நிறைவடையும்போது, எல்லையற்ற இன்பம்
இதயங்களில் ஒட்டிக்கொள்ளும், தரையில் கொட்டிவிட்ட
கண்ணாடி துகள்களை, தண்ணீரில் நனைத்த துணியால்
ஒற்றி எடுப்பது போல.

1959-ம் ஆண்டு ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், தமிழ்,
இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படத்தைத் தயாரித்தார்.
ஹிந்தி திரைப்படத்திற்கு ‘பைகாம்’ (Paigham) எனப்
பெயரிட்டார். தமிழ்ப் படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்
என தனது ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார்.

2 ஆயிரத்து 500 விண்ணப்பங்கள் வந்திருந்தன.
அவற்றைப் பரிசீலித்த வாசன், ‘இரும்புத்திரை’ என்ற பெயரே
பொருத்தமானது எனத் தேர்வு செய்தார்.

எல்லா ஊழியர்களையும் அழைத்து, விருந்து கொடுத்ததோடு,
அந்தப் பெயரை முன்மொழிந்த ஊழியருக்குப் பரிசுத்
தொகையும் அளித்தார். தொழிலாளியின் வியர்வை காயும்
முன்பே, அவனுக்கு ஊதியம் வழங்கிட வேண்டும் என்றார்
நபிகள் நாயகம்.

ஆனால், தொழிலாளிக்கு பரிசுத்தொகையும் கொடுத்து
நபிகள் நாயகத்தின் பொன்மொழியை பொருத்தமான
மொழியாக்கினார், அமரர் எஸ்.எஸ்.வாசன்.

1960-ம் ஆண்டு வாசன் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த ‘
இரும்புத்திரை’ படம், வைஜெயந்திமாலாவின் திரையுலக
வாழ்வை தீர்மானிக்கும் படமாக அமைந்தது.

நிஜ வாழ்வில், தாயும், மகளுமாக இருந்த வசுந்தராதேவி –
வைஜெயந்திமாலா, இந்தப்படத்தில் தாயும், மகளுமாக
நடித்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 8:47 pm

குடகில் பிறந்தாலும், தமிழகத்தில் குடியேறிய காவிரி
போல, தமிழகத்தில் பிறந்த வைஜெயந்திமாலா, இந்தி
திரையுலகில், தனது வலதுகாலை எடுத்து வைத்தார்.

1954-ம் ஆண்டு, பிரதீப் குமாருடன் இணைந்து, ‘நாகின்’
படத்தில், தனது இந்தி திரையுலகத்தில் தனது
வாழ்க்கையைத் தொடங்கினார். 1955-ம் ஆண்டுமுதல்,
இந்தி திரையுலகம், வைஜெயந்திமாலாவைத்
தனதாக்கிக் கொண்டது.

‘மதுமதி’, ‘தேவதாஸ்’, ‘Naya Daur’, ‘சங்கம்’, ‘சூரஜ்’,
‘கங்கா ஜமுனா’ ‘Jewel Thief’, ‘Zindagi’, ‘Bahar’
ஆகிய திரைப்படங்கள் வைஜெயந்திமாலாவின் புகழை,
வானம்வரை கொண்டு சென்றன.

வைஜெயந்திமாலா, ராஜ்கபூர் மற்றும் ராஜேந்திர
கபூருடன் இணைந்து நடித்த ‘சங்கம்’ திரைப்படம்,
அவருக்கு பெரும் புகழ் தந்தது. முக்கோணக் காதல்
கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தில்,
முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தில் நடித்து,
வைஜெயந்திமாலா தனது நடிப்புத்திறனை வெளிப்
படுத்தினார்.

தேவானந்த்துடன் இணைந்து நடித்த ‘Jewel Thief’
படத்தில், ஷாலினி என்ற கதாபாத்திரத்தில்
உணர்ச்சிகளைக் கொட்டி நடித்திருந்தார்
வைஜெயந்திமாலா. S.D. பர்மன் இசையில் உருவான
எல்லா பாடல்களும் உள்ளத்தை உருக்கின.

இந்தி படங்களில், கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தபோது,
தமிழிலும் தனது வெற்றிக்கொடியை தக்க வைத்துக்
கொண்டார் வைஜெயந்திமாலா. பிரபல எழுத்தாளர் கல்கி
எழுதிய ‘பார்த்திபன் கனவு’ புதினத்தை அடிப்படையாகக்
கொண்டு 1960-ம் ஆண்டு, யோகநாத் இயக்கத்தில்
எடுக்கப்பட்ட ‘பார்த்திபன் கனவு’ திரைப்படம் ரசிகர்களை
வெகுவாகக் கவர்ந்தது.

வேதாவின் இசையில் வெளிவந்த அனைத்துப் பாடல்களும்,
‘பார்த்திபன் கனவு’ திரைப்படத்தின் வெற்றிக்கு ஒரு
பக்கபலம்.

1961-ம் ஆண்டு, இளமை இயக்குநர் ஸ்ரீதரின் தயாரிப்பு
இயக்கத்தில் வெளிவந்த ‘தேன்நிலவு’ திரைப்படம்,
ரசிர்களுக்குத் தேன்நிலவாய் இனித்தது. துப்பாக்கிச்
சூடுகளாலும், கண்ணீர் சிந்த வைக்கும் கலவரங்களாலும்
தற்போது சிதைந்து போயிருக்கும் சுற்றுலாப் பயணிகளின்
சொர்க்க பூமியான காஷ்மீரில் தான் படப்படிப்பு முழுவதும்
நடைபெற்றது.

காதல் மன்னன் ஜெமினிகணேசனுடன் வைஜெயந்திமாலா
இணைந்து நடித்த இந்தப்படம் பெரும் வெற்றிபெற்றது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 24, 2020 8:48 pm

வானவில்லா? வண்ணத்துப்பூச்சியா? - நடிகை வைஜெயந்திமாலா பிறந்த நாள் கட்டுரை 15973020621138
-
கல்யாணப்பரிசு’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘தேன்நிலவு’
படத்திற்கும் A.M. ராஜா தான் இசை. பாடல்கள் அனைத்தும்
தேன். சுவைத் தேன்.

திரையுலகப் புகழ் வைஜெயந்திமாலாவை, அரசியல்
அரங்கைத் தொட்டுப் பார்க்க எத்தனித்தது. காங்கிரஸ்
கட்சியில் இணைந்தார். 1984-ம் ஆண்டு, தென்சென்னை
நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராகப்
போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி என போற்றப்படும்
இரா.செழியன், வைஜெயந்திமாலவிடம் தோற்றுப்போனார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொடூர மரணத்திற்குப்
பிறகு, காங்கிரஸிலிருந்து வைஜெயந்திமாலா விலகினார்.

இந்தியத் திரையுலகில் வைஜெயந்தி மாலா, வானவில்லா?
வண்ணத்துப் பூச்சியா? – இரண்டும்தான். மறையாத
வானவில், உயிர்த் துடிப்போடு சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி.

திரையுலகில் வைஜெயந்திமாலா பிரபலமாக இருந்தபோது,
பல பிரபலங்களுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்டார்.
கரிக்கட்டை கிடைத்தால் கூட, கை, கால், கண் எனத்
தொடங்கி உருவம் வரைந்து விடுபவர்கள், எழுதுகோல்
கிடைத்தால் சும்மா இருப்பார்களா?.

சினிமா என்ற வெகுஜன ஊடகத்தில் உள்ளவர்கள் குறித்து,
குறைத்தும் மிகைப்படுத்தியும் எழுதுவது ஒன்றும்
புதியதல்லவே. வைஜெயந்திமாலாவைப் பற்றியும் நிறைய
விமர்சனங்கள். புகழின் உச்சியில் இருந்தபோதே, தனது
திரையுலக வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிட்ட
வைஜெயந்திமாலா, தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத
அங்கம்.

தமிழ்த்திரை ரசிகர்களின் மனங்களில் போற்றிப்
பாதுகாக்கப்பட்டு வரும் தங்கம்.
-
-------------------------
லாரன்ஸ் விஜயன்,
மூத்த பத்திரிகையாளர்,
நன்றி- இந்து தமிழ் திசை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக