ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்

3 posters

Go down

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Empty ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்

Post by bharathichandranssn Tue Aug 18, 2020 6:49 pm

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்
கவிஞர் வீரமணி அவர்களின் ஓர் அருமையான கவிதையை முதலில் நம்மை படிக்கச் சொல்லுகிறார் இக்கட்டுரை ஆசிரியர். அதன்பின் ஒரு கவிதை படிக்கும் போது எத்தகைய தடுமாற்றம் நம்மை ஆட்கொள்கிறது என விளக்குகிறார். இதனை வாசித்தபின் நீங்கள் கவிதையை ரசிக்கும் முறையே மாறிவிடும்.



கண்ணற்றவன்

பார்த்துப் புளித்த பிரபஞ்சம்
யாராரோ மென்று துப்பிய – வார்த்தைகள்
எனதென்று புதிதாய் எழுத எதுவுமில்லை என்பதால்

நான்
வீடற்றவன் ஜன்னல் வழி
கண்ணற்றவன் – கவிதைகளைத் திருடி
முகமற்றவனிடம தந்தேன்…

அவன் வாசிக்காமலேயே
சிலாகிக்கிறான்…

பின் – பூவற்ற
மாலையில்
காற்றைக் கட்டி அணிவிக்கிறான்

சுமக்க முடியாமல் தள்ளாடுகையில்
கையற்றவன்
தாங்கிக் கொள்கிறான்

உடல் அற்ற ஒருவன்
திடீரென்று நெஞ்சைப் பிளந்து
வார்த்தைகளை
திணித்து
மூடுகிறான்

தொண்டைக்குழியில் வார்த்தைகள்
உயிரை அடைத்து நிற்கிறது…

யாரோ என் வீட்டு ஜன்னலை உடைத்து
கதவின் வழியே போயிருக்கிறார்கள்…

வீடு முழுதும் தேடியும்
மூக்குக் கண்ணாடி கிடைக்கவில்லை

பெரும் குடிகாரனின் அதிகாலை வியாதிபோல்
என் விரல்கள் நடுங்குகின்றன…

நான் எழுதத்
தொடங்குகிறேன்
என் கவிதையை
இதுவரை யாரும் கேட்காத வார்த்தைகளுடன்…

– கவிஞர் வீரமணி



கவிதையும் கவிஞரும் எப்பொழுதும் சும்மா இருப்பதில்லை….

வருவதை லபக்கென்று பிடித்தும் அதை லாபகமாய் கடை விரித்தும் விடுகின்றனர் அவர்கள்.

குழந்தை பிறந்தால் கண் காது மூக்கு நிறம் என ஒரு கூட்டம் விமர்சிக்க வரும் தானே?

கவிதை பிறந்தாயிற்று. பொத்தி வைக்க முடியுமா?

பூ மலர்ந்தால் தேனீக்களுக்குச் சொல்லி விடவா வேண்டும்?

ரசிப்போம்; ருசிப்போம்; கொண்டாட்டம்தான் தேனீக்களுக்கு.

கவிதை பிறப்பும் மலர்வும் தனக்கானதா? இல்லை பிறருக்கானதா? என்பதைப் போல் பெரிய தத்துவம் இது…..



தன் நேரங்களைப் பிய்த்துக் கொண்டு போகும் உயிரிகளிடம் இருந்து நேரத்தைக் காக்கப் போராட வேண்டியிருக்கிறது . கிடைத்த நேரங்களில் அந்தப் போராட்டத்தை நினைத்துப் பாதி நேரம் போய்விடுகிறது. அப்படி இப்படி நெளிந்து கவிதை குழிக்குள் தேடினால்…..

நெடுந்தொலைவு செல்ல வேண்டுமா? இல்லை கிளைகள் பிரிந்து பிரிந்து ஓரிடத்தில் நின்று விடுமா ? இல்லை பாறைகள் திடீரென்று விழுந்து வழி மறைக்குமா?

கவிதை படிக்கும் முன் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதே!

அது சொல்ல முடியாத‌து.

கவிதை படிக்கும்போது, படிப்பவரை, தலைப்பு எங்கோ ஒரு பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்.

முதல்வரி, இரண்டாம் வரி, எனத் தொடர்கையில் உள்வெளி திறக்கிறது. வானம் வந்து கைகட்டிக் கிடக்கிறது. வார்த்தைகளும் வார்த்தைகளுக்கு இடையில் உள்ள சொல்லப்படாத பொருள்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னிற்கும்.



வார்த்தைகள் கவிஞரின் வார்த்தைகள் அல்ல. படிக்கும்பொழுது வார்த்தைகள் என் பொருள்களாலே நிறைந்து வழிகின்றன…. புரிதல் வார்த்தைகளைத் தன்வசம் இழுத்துச் செல்லுகிறது.

எனக்குள் சொல்லித் தரப்பட்ட வார்த்தைகள் அதன் நளினத்தை விட்டுக் கொடுக்காமலேயேதான், தன்னை அடையாளப்படுத்துகின்றன.

எங்கோ எதிலோ உணரப்பட்டவை என் உணர்தல்களோடே காட்சிப்படுகின்றன.

இப்பொழுது நான், கவிதைக்குள் என் வார்த்தைகள் சொல்லித் தருவதை உணர்வதா? வார்த்தைகளின் கைகோர்ப்பைக் கொண்டு கவிஞன் என்ன கூற நினைத்தான் எனக் கொள்வதா? தடுமாற்றம் தான்.

ஒவ்வொரு கவிதை படிக்கும் பொழுதும், இந்தத் தடுமாற்றம் இயல்பாய் ஏற்பட்டு விடுகிறது. என்னை அறவே தூக்கி எறிந்துவிட்டு எனக்குப் பதில் கவிஞரை உட்காரவைத்து அவர் வாயினால் அவ்வார்த்தைகளின் பொருளைக் கேட்பதானால் ரொம்ப கஷ்டம் தான்.

கவிதையைப் படிப்பதற்கு ஏன் ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட வேண்டும்? நானா? நீயா? எனக் கவிஞனிடம் ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்?

அவன் ஏன் நாம் படிக்கும்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும்? எழுதியவனுக்கு எழுதியதோடு வேலை முடிந்துவிட்டது. பிறகு ஏன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கு முன்பும் தலை வணங்கி மீண்டும் பொருள் சொல்லத் தொடங்குகிறான்?… கவிஞன் தவிர்த்த வார்த்தைகளோடு பயணம் தொடர்ந்தது; தொடர்கிறது…



கவிதைக்குள் உள்ள வார்த்தைகள் பிரபஞ்சத்தில் சிலருக்குச் சொந்தமானதாகவும் இருக்கின்றன. அவர்கள் அந்த வார்த்தைகளுக்கு உரியவர்கள் தான் என உலகம் இலகுவாய் சொல்லி விடுகிறது. அம்மாதிரி வார்த்தைகள் வந்தால் நெருடுகிறது . ஒன்று, இதில் எதைப் போய்ப் பார்ப்பது….

சொல்லாமல் போன வார்த்தைகள் பெரும் அலங்காரங்களுடன் வரவில்லை என்றாலும் நெளிந்து நின்றன‌ கொஞ்சம் பிசுபிசுப்புடன்,…

அப்படியும் புரிந்து நகர்ந்தால்….

உலக மொழிகளுக்குத் தக வார்த்தைகள் சில இடங்களில் வளர்ந்து நிற்கின்றன. அந்த வார்த்தைகளின் மூலக்கூறுகள் எவை என்றே தெரியாமல் அதனை உணர்தல் முடியாது.

எப்பப் போறது அந்த இடத்துக்கு? புரியத் தாமதமாகும் வார்த்தைகளோடு வளரக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

கவிதையைப் படித்து முடிப்பதற்குள் எத்தனை முறை சலிப்பு வீட்டிற்குள் தான்… சுயம் இருக்கிறதே…. அப்பப்பா…
கவிதையின் முடிப்பு எப்பொழுதும் இப்படியே தான் முடிய வேண்டுமா எனில், சில பொழுதுகளில் மாறும். அப்பொழுது மட்டுமல்ல; கவிதை எப்பொழுதும் இனிது…

பாரதிசந்திரன்


Last edited by T.N.Balasubramanian on Tue Aug 18, 2020 9:26 pm; edited 1 time in total (Reason for editing : எடிட்டிங்)


பாரதிசந்திரன்
9283275782
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Empty Re: ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்

Post by T.N.Balasubramanian Tue Aug 18, 2020 9:25 pm

வருக பாரதிசந்திரன் அவர்களே.

வருட ஆரம்பத்தில் வந்து ------பிறகு இடைவெளி. நலம்தானே?

உங்களை பற்றி யாவரும் அறிய அறிமுகப்பகுதிக்கு உங்களை 

அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஈகரை விதிமுறைகளை படித்து அதன்படி பதிவுகள் செய்யவும்.

உங்கள் வலைப்பூக்கள் முதலியவைகளை உங்களுடைய 

கையெழுத்து பகுதியில் குறிப்பிடவும்.

வேறொரு இணைய தளத்திற்கு எடுத்து செல்லும் வலைப்பூ வரிகளை 

பதிவில் பதிவிடவேண்டாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Empty Re: ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்

Post by bharathichandranssn Tue Aug 25, 2020 3:20 pm

கையெழுத்துப் பகுதியில் உள்ளதை மாற்ற வழி கூறவும் . தளத்தில் எவ்விதம் பதிவிடுவது என்பது குறித்த செய்தி எப்பகுதியில் உள்ளது வலைப்பூ என்றவுடன் என் படைப்புகளையே பதிவிட்டேன். அது பிற வலைத்தளத்தில் வந்தவை. தவறெனின் எடுக்க வழி சொல்லவும்


பாரதிசந்திரன்
9283275782
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Back to top Go down

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Empty Re: ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்

Post by T.N.Balasubramanian Tue Aug 25, 2020 4:53 pm

bharathichandranssn wrote:கையெழுத்துப் பகுதியில் உள்ளதை மாற்ற வழி கூறவும் . தளத்தில் எவ்விதம் பதிவிடுவது என்பது குறித்த செய்தி எப்பகுதியில் உள்ளது வலைப்பூ என்றவுடன் என் படைப்புகளையே பதிவிட்டேன். அது பிற வலைத்தளத்தில் வந்தவை. தவறெனின் எடுக்க வழி சொல்லவும்
மேற்கோள் செய்த பதிவு: 1329339

உங்களுக்கு தனிமடல் ஒன்றில் விளக்கம் தந்துள்ளேன்.
அதற்கு மேலும் சந்தேகம் இருப்பின் கேட்கவும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Empty Re: ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்

Post by bharathichandranssn Wed Aug 26, 2020 1:05 pm

நன்றி
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Back to top Go down

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Empty Re: ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்

Post by Dr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

கவிஞர், கவிதை - பற்றிய ஒரு திறனாய்வு பாரதிசந்திரனது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9760
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Empty Re: ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum