ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விசா, கிரீன் கார்டு' முறைகளில் மாற்றம்: இந்தியர்களுக்கு ஜோ பிடன் உறுதி

Go down

'விசா, கிரீன் கார்டு' முறைகளில் மாற்றம்: இந்தியர்களுக்கு ஜோ பிடன் உறுதி Empty 'விசா, கிரீன் கார்டு' முறைகளில் மாற்றம்: இந்தியர்களுக்கு ஜோ பிடன் உறுதி

Post by ayyasamy ram Mon Aug 17, 2020 7:36 am

'விசா, கிரீன் கார்டு' முறைகளில் மாற்றம்: இந்தியர்களுக்கு ஜோ பிடன் உறுதி Tamil_News_large_2596506
வாஷிங்டன்;
'அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், 'எச் 1பி விசா' முறையில்
மாற்றம் செய்யப்படும்; 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர 'குடியுரிமை
வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்' என, இந்தியர்களை
கவருவதற்காக, அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், பல்வேறு உறுதி
மொழிகளை அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 3ம் தேதி நடக்க
உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், அதிபர் டொனால்டு டிரம்ப்
மீண்டும் போட்டியிட உள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னள்
துணை அதிபர், ஜோ பிடன் போட்டியிடுகிறார்.அமெரிக்க வாழ்
ஆப்ரிக்கர் மற்றும் இந்தியர்களின் ஓட்டுகளை பெறும் வகையில்,
ஆப்ரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, கமலா ஹாரிசை,
துணை அதிபர் வேட்பாளராக, ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், 13 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஓட்டுகள்,
இந்தத் தேர்தலில் முக்கிய பங்கை வகிக்க உள்ளது.அமெரிக்க தேர்தல்
வரலாற்றில், இந்தியர்களை கவரும் வகையிலான தேர்தல் அறிக்கையை,
ஜனநாயகக் கட்சி முதல் முறையாக வெளியிட்டுள்ளது.

இந்தியாவின், 74வது சுதந்திர தினமான, நேற்று முன்தினம் இந்த அறிக்கை
வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:அதிபராக ஜோ பிடன்
தேர்ந்தெடுக்கப்பட்டால், விசா முறைகள் உள்ளிட்டவற்றில் பல சீர்திருத்த
நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பயன்படுத்தும், எச் 1பி விசா வழங்கும்
முறையில் சீர்திருத்தம் செய்யப்படும்.

அதேபோல், விசா பெற்றுள்ளோரின் குடும்பத்தாருக்கு, விசா வழங்குவதில்
உள்ள சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படும். மத ரீதியிலான பணிக்கு
வருவோருக்கு, விசா வழங்குவது வேகப்படுத்தப்படும். மதம், மொழி ரீதியிலான
பாகுபாடுகள் இல்லாமல், அனைவருக்கும் தேவையான உதவிகள் செய்யப்படும்.
கிரீன் கார்டு எனப்படும், நிரந்தர குடியுரிமை அளிப்பதில், தற்போது, ஒவ்வொரு
நாட்டுக்கும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த முறை மாற்றப்படும்.

இதனால், குடியுரிமை கேட்டு இந்தியர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய
நிலை தவிர்க்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

'ஜோ பிடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்திய ஆதரவு நிலைப்பாட்டையே
மேற்கொள்வார்' என, அவருடைய பிரசார குழுவினர் தெரிவித்துள்ளனர்.
வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரியான, டோனி பில்கென், தற்போது
ஜோ பிடனுக்கான வெளியுறவுக் கொள்கையை வகுத்து வரும் குழுவில் இடம்
பெற்றுள்ளனர்.

ஜோ பிடனின் வெளியுறவு கொள்கைகள் குறித்த விவாதத்தின்போது,
டோனி பில்கென் கூறியதாவது:சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்ற
வேண்டும் என்பதே, பிடனின் விருப்பம்.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியாவுக்கு
நிரந்தர இடம் கிடைப்பதற்கு முழு உதவியையும் அளிப்போம்.

அமெரிக்கா - இந்தியா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதே, பிடன்
நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும். பிடன் நிர்வாகத்தின் முக்கிய
கூட்டாளியாக இந்தியா இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்தியர்களிடையே க
மலா பேச்சுதமிழகத்தின் சென்னையை பூர்வீகமாக கொண்ட, ஜனநாயகக் கட்சியின்
துணை அதிபர் வேட்பாளர், கமலா ஹாரிஸ், அமெரிக்க வாழ் இந்தியர்கள்
இடையேயான முதல் கூட்டத்தில் பங்கேற்றார். 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில்
நடந்த இந்த பிரசார கூட்டத்தில், ஜோ பிடனும் பங்கேற்றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'விசா, கிரீன் கார்டு' முறைகளில் மாற்றம்: இந்தியர்களுக்கு ஜோ பிடன் உறுதி Empty Re: 'விசா, கிரீன் கார்டு' முறைகளில் மாற்றம்: இந்தியர்களுக்கு ஜோ பிடன் உறுதி

Post by ayyasamy ram Mon Aug 17, 2020 7:37 am

'விசா, கிரீன் கார்டு' முறைகளில் மாற்றம்: இந்தியர்களுக்கு ஜோ பிடன் உறுதி Gallerye_061436937_2596506
-


அப்போது, கமலா ஹாரிஸ் பேசியதாவது:

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும், முதல்
தெற்காசியாவைச் சேர்ந்தவர் என்ற முறையில், உங்கள் முன் நிற்கிறேன்.
இந்தியாவின், 74வது சுதந்திர தினத்தையொட்டி அனைவருக்கும்
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் பிறந்து வளர்ந்த என்னுடைய தாய் ஷியாமளா, படிப்பதற்காக
அமெரிக்கா வந்தார். அநீதியைக் கண்டால், அதை எதிர்த்து குரல் கொடுக்க
வேண்டும் என்று, என் தாய்க்கு, அவருடைய பெற்றோர் கற்றுத் தந்தனர்.
அது எனக்கும் கற்றுத் தரப்பட்டது.நம்முடைய வேரை நாம் மறக்கக் கூடாது
என்பதற்காக, என்னையும், என் சகோதரியையும் எங்களுடைய தாய்,
சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

எங்களுடைய தாத்தாவின் கைகளை பிடித்து, கடற்கரைகளில் நடந்து
சென்றுள்ளேன். அப்போது, நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள்
பற்றி, அவர் எங்களுக்கு சொல்லித் தந்தார்.சுட சுட இட்லியை விரும்பி
சாப்பிடுவதும், அங்கிருந்து தான் கற்றுக் கொண்டேன்.இவ்வாறு, அவர்
பேசினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum