ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி

4 posters

Go down

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி Empty என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி

Post by ayyasamy ram Fri Aug 14, 2020 12:45 pm

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி 202008131830437462_Tamil_News_Mottai-Rajendran-Says-about-bala_SECVPF
-
என்னுடைய முதல் குரு மற்றும் முதல் தெய்வம்
அவர்தான் என்று நடிகர் மொட்டை ராஜேந்திரன் சமூக
வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து
கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் இதற்கு
முன் ஸ்டண்ட் கலைஞராக இருந்தவர். இயக்குனர்
பாலாவின் ’பிதாமகன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இந்த நிலையில் தனது திரையுலக வாழ்க்கை குறித்து
சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், என்னை மொட்டை ராஜேந்திரன் என்று அனைவரும்
அன்போடு அழைத்து வருகின்றனர். என்னுடைய தந்தை,
பெரிய அண்ணன், சின்ன அண்ணன் ஆகிய மூவருமே
சண்டை கலைஞர்கள்தான்.

எனவே இவர்கள் மூன்று பேர்களின் பாதையில் நானும்
ஒரு சண்டை கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி, தமிழ்,
தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நான்
சண்டை கலைஞராக பணிபுரிந்துள்ளேன்.

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி 202008131830437462_1_mottai-2._L_styvpf

இயக்குனர் பாலாவின் ’பிதாமகன்’ என்ற படத்தில்
சண்டை கலைஞராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு
கிடைத்தது. அந்த படத்தில் அவர் என்னை நன்றாகப்
பயன்படுத்திக் கொண்டதோடு எனக்கு ஒரு கேரக்டரும்
கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அதன் பின்னர் ’நான் கடவுள்’ படத்தில் என்னை
வில்லனாக அறிமுகப்படுத்துவதாக கூறினார்.
எனக்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும்
இன்னொரு பக்கம் வில்லன் கேரக்டரில் நடிக்க முடியுமா?
என்று பயமாகவும் இருந்தது.

ஆனால் பாலா அவர்கள் எனக்கு ஆறுதல் கூறி ’
நான் பார்த்து கொள்கிறேன் நீ நடி’ என்று எனக்கு
தைரியம் கூறினார்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. என்னுடைய
பெயர் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. என்னுடைய
முதல் குரு மற்றும் முதல் தெய்வம் பாலா சார் அவர்கள்
தான்.

அதன் பின்னர் ’பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில்
ஒரு காமெடி கேரக்டரில் நடித்தேன். அந்த படமும் வெற்றி
பெற்றது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

அப்படியே என்னுடைய திரையுலக பயணம், சண்டை
கலைஞராக ஆரம்பித்து வில்லன் மற்றும் காமெடி நடிகர்
என போய்க்கொண்டிருக்கிறது.

என்னை மொட்டை ராஜேந்திரன் என அனைவரும்
அன்போடு கூப்பிடும் அளவுக்கு எனக்கு அங்கீகாரம்
கிடைத்தது, மிகப்பெரிய சந்தோஷம்’ என்று மொட்டை
ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி Empty Re: என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி

Post by SK Fri Aug 14, 2020 2:22 pm

உழைப்புக்கும் திறமைக்கும் கிடைத்த அங்கிகாரம்
என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி 3838410834 என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி 3838410834


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி Empty Re: என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி

Post by heezulia Fri Aug 14, 2020 4:40 pm

14.08.2020
என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி B2ucV12YSMqXiiFFwY0G+mottairajendhiranஎன்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி 25d9ptrZQJatnfEtC2aI+mottairajendran
மொதல்ல மொட்ட ராஜேந்திரனுக்கு சுருள் முடி இருந்துச்சாம். ஆரம்பத்ல மொட்ட ராஜேந்திரன் எந்த ஒரு ஆபத்தான சாகஸத்தையும் ஈஸியா செய்வாராம்.

ஒரு மலையாள பட ஷூட்டிங். ராஜேந்திரன் சண்டை போட்ற ஸீனை ஷூட் செஞ்சாங்க. உயரமான இடத்லயிருந்து கீழ தண்ணீல குதிச்சு சண்ட போடணும். அவரும் தைரியமா, அஸால்ட்டா  குதிச்சார்.

அப்புறம்தான் அந்த தண்ணிய பத்தி அதிர்ச்சியான தகவலை சொன்னாங்க, அது ரசாயன ஆலை கழிவு நீர்னு. ராஜேந்திரன் அதை பெருசா எடுத்துக்கல. கொஞ்ச நாளுக்கப்புறம்தான் அந்த தண்ணீல குதிச்சதுக்கான விளைவு தெரிய ஆரம்பிச்சது. ஆரம்பத்தில தலைல பொடுகு வந்து ஒண்ரெண்டு முடி உதிர ஆரம்பிச்சு. அப்புறம் என்ன, இப்ப உள்ள மொட்டைதான். அந்த தண்ணீரின் காரணத்தால, அவர் உடலும் rough & toughஆ ஆயிருச்சு. அது வில்லன் ரோலுக்கு ப்ளஸ் பாயிண்ட்டானது.

இந்த மொட்டை ரகசியத்தை ராஜேந்திரனே ஒரு பேட்டீல  சொல்லியிருக்காராம்.


பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி Empty Re: என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Aug 15, 2020 12:27 pm

Code:

ஒரு மலையாள பட ஷூட்டிங். ராஜேந்திரன் சண்டை போட்ற ஸீனை ஷூட் செஞ்சாங்க. உயரமான இடத்லயிருந்து கீழ தண்ணீல குதிச்சு சண்ட போடணும். அவரும் தைரியமா, அஸால்ட்டா  குதிச்சார்.

அப்புறம்தான் அந்த தண்ணிய பத்தி அதிர்ச்சியான தகவலை சொன்னாங்க, அது ரசாயன ஆலை கழிவு நீர்னு. ராஜேந்திரன் அதை பெருசா எடுத்துக்கல. கொஞ்ச நாளுக்கப்புறம்தான் அந்த தண்ணீல குதிச்சதுக்கான விளைவு தெரிய ஆரம்பிச்சது. ஆரம்பத்தில தலைல பொடுகு வந்து ஒண்ரெண்டு முடி உதிர ஆரம்பிச்சு. அப்புறம் என்ன, இப்ப உள்ள மொட்டைதான். அந்த தண்ணீரின் காரணத்தால, அவர் உடலும் rough & toughஆ ஆயிருச்சு. அது வில்லன் ரோலுக்கு ப்ளஸ் பாயிண்ட்டானது.
தமிழ் நாட்டில் இது நடந்திருந்தால் ஒரே ஆர்ப்பாட்டம் கொந்தளிப்பு போராட்டம்
நடந்து ராஜேந்திரனுக்கு கையில் சிறிதளவேனும் காசு வந்திருக்கும்.
நன்றி பேபி தகவலுக்கு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி Empty Re: என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி

Post by heezulia Sat Aug 15, 2020 3:58 pm

15.08.2020
பழ.முத்துராமலிங்கம் wrote:தமிழ் நாட்டில் இது நடந்திருந்தால் ஒரே ஆர்ப்பாட்டம் கொந்தளிப்பு போராட்டம் நடந்து ராஜேந்திரனுக்கு கையில் சிறிதளவேனும் காசு வந்திருக்கும்.
 
அப்டியா சொல்றீங்க ? ராஜேந்திரனுக்காக போராட்டம் செய்வாங்களா? அதுவும் ஒரே போராட்டமா? போராட்டம் செய்ற அளவுக்கா ரசிகர்கள் இருக்காங்க? அச்சச்சோ கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்கேனோ? ச்சே, இதுவும் ஒரு கேள்வி.

பேபி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4908
இணைந்தது : 03/12/2017

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி Empty Re: என்னுடைய குரு, தெய்வம் அவர்தான் - மொட்டை ராஜேந்திரன் நெகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum