ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

+4
T.N.Balasubramanian
M.Jagadeesan
Dr.S.Soundarapandian
ayyasamy ram
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by ayyasamy ram Mon Aug 10, 2020 6:34 am

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Tamil_News_large_2592176
-
சென்னை : சென்னை விமான நிலையத்தில், தி.மு.க., மகளிரணி செயலர் கனிமொழி எம்.பி.,யிடம், 'நீங்கள் இந்தியரா' என கேட்ட, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான லோக்சபா நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று மதியம், 1:50 மணி விமானத்தில், கனிமொழி டில்லி சென்றார். அப்போது, விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர், ஹிந்தியில் பேசினார்.

அதற்கு கனிமொழி, 'எனக்கு ஹிந்தி தெரியாத காரணத்தால், ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள்' என, கூறியுள்ளார். அதற்கு அந்த அதிகாரி, 'நீங்கள் இந்தியர் தானா?' என, கேட்டுள்ளார்.

இதுகுறித்து, கனிமொழி, 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: விமான நிலையத்தில், சி.ஐ.எஸ்.எப்., அதிகாரியிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால் தான், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி கேட்டேன். அதற்கு அவர், 'நீங்கள் இந்தியரா' என, என்னை பார்த்து கேட்கிறார். ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்ற நிலை, எப்போது உருவானது என்பதை, நான் அறிய விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

கனிமொழியின் பதிவுக்கு ஆதரவு தெரிவித்தும், அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் எம்.பி.,க்கள் மாணிக் தாகூர், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர், கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., தரப்பில், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியான பதிவில், 'விரும்பத்தகாத இந்த சம்பவம் குறித்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எந்த அதிகாரியிடமும், ஹிந்தியில் தான் பேச வேண்டும் என, எந்த உத்தரவும், எங்கள் தரப்பில் பிறப்பிக்கப்படவில்லை' என, கூறப்பட்டுள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by Dr.S.Soundarapandian Mon Aug 10, 2020 8:43 pm

இடை அதிகாரிகள் , ஆங்காங்கே இருந்துகொண்டு, அவரவர்க்குத் தோன்றிய சட்டத்தை அவர்களாகவே போட்டுக்கொள்கின்றனர்! எதிர்ப்பு இல்லையானால் அதை அப்படியே பழக்கமாக்கிவிடுவர்! இப்படி எத்தனையோ , நம்மை வாட்டிவதைக்கும் எழுதாச் சட்டங்கள் நம் நாட்டில் உள்ளன! சமுதாய ஆய்வாளர்கள் இதைத் தனியாக ஆயவேண்டும்!

என்று தணியும் இந்தத் தான்தோன்றி அட்டகாசம்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by M.Jagadeesan Mon Aug 10, 2020 9:05 pm

வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது .தமிழர்கள் அழகாக ஆங்கிலம் பேசுவது அவர்களுக்குப் பொறாமையாக இருக்கிறது . எனவேதான் அவர்கள் தமிழர்களை வெறுக்கிறார்கள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by T.N.Balasubramanian Mon Aug 10, 2020 9:24 pm

அந்த செக்யூரிட்டி கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

டிக்கெட் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.

வெளிநாடு போகிறது என்றால் பாஸ்ப்போர்ட்டும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.

உள்நாட்டு பயணம் என்றால் ஆதார்/பான்கார்ட்  எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கிறது.

அனுமதிக்கப்பட வேண்டிய நபர் தான் பிரயாணிக்கிறாரா என்பதை ஒரு வார்த்தையில் 

id  என்று கேட்டு சரி பார்க்கலாம்.

தண்டங்கள் ..

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by Muthumohamed Mon Aug 10, 2020 10:55 pm

பொதுவாகவே வட இந்தியர்களுக்கு நம்மை பிடிக்காது இதுவாக கூட இருக்கலாம்



'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை M'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை U'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை T'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை H'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை U'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை M'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை O'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை H'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை A'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை M'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை E'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by T.N.Balasubramanian Tue Aug 11, 2020 4:19 pm

எது எப்பிடி இருந்தாலும் இருவரிடையே நடந்த பேச்சுவார்த்தை.
ஒலிப்பதிவு இல்லாத வரையும் பேசிய வார்த்தைகள் தெரியாது.
பாதுகாப்பு படை அதிகாரி தரப்பு செய்திகள் ஒன்றும் இல்லையே.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by ayyasamy ram Tue Aug 11, 2020 4:31 pm

பிற மாநிலத்திலிருந்து ஐ.ஏ.எஸ் ஆனவர்கள்
தமிழ் நாட்டில் பெரிய பதவிகளில் அமர்த்தப்படும்
பொழுது, தமிழை பேசவும் எழுதவும் கற்றுக்கொள்ள
வேண்டும்.

இதற்கு கால அவகாசம் உண்டு.
-
அதே போல் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களும்
பிற மாநிலத்தில் பணி அமர்த்தப்படும் பொழுது
அந்த மாநில மொழியில் பேசவும் எழுதவும்
கற்றுக் கொள்ள வேண்டும்.

இது நடைமுறையில் உள்ளதுதான்.
-
அதே போல் எம்.பி. -க்களாக இருப்பவர்கள் ஹிந்தியை
கற்றுக் கொள்வதை கௌரவக் குறைச்சலாக நினைக்க
கூடாது.
-
மத்தியில் பெரும்பான்மை பலம் கொண்ட அரசு பதவியில்
இருப்பதால், அவர்கள் நினைத்ததை சாதிக்க இயலும்.
-
நம் அரசியல்வாதிகள் சொத்து சேர்த்த விதத்திலோ
பதிவியை துஷ்பிரயோகம் செய்திருந்தாலே சமயம்
பார்த்து நடவடிக்கை அவர்கள் மீது பாயும்.
-
மத்தியில் ஆளும் அரசை அனுசரித்துப் போவதால்
நன்மைகளே அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள
வேண்டும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by ayyasamy ram Tue Aug 11, 2020 4:40 pm

இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படை தனது அதிகாரபூர்வ
டுவிட்டர் பதிவில்,

“உங்களுடைய விரும்பத்தகாத அனுபவத்துக்காக வருத்தம் தெரிவிக்கிறோம்.
இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட எந்தவொரு
மொழியையும் வலியுறுத்துவது மத்திய தொழில் பாதுகாப்பு படையின்
கொள்கை அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தை பாஜக மூத்த தலைவர்
பி.எல்.சந்தோஷ் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 8 மாதங்கள்தான்
இருக்கிறது. இப்போது இருந்தே தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது”
என்று தெரிவித்துள்ளார்.


தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by T.N.Balasubramanian Tue Aug 11, 2020 4:52 pm

நான் அறிந்த வரையில் கருணாநிதி/மாறன்  குடும்பத்தில் 
பலருக்கு ஹிந்தி தெரியும்.
அவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் ஹிந்தி போதிக்கப்படுகிறது.
சிலருக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் தெரியாது.
இருப்பினும் மு க ரத்தசம்பந்தம் 
பதவி அவர்களே அவர்களுக்குள் வைத்துக்கொள்கிறார்.
அந்த விஷயத்தில் மு க மிக சமயோசிதமாக தன் சமகால 
தி மு க அரசியல்வாதிகளின் வாரிசுகளை ஓரம் கட்டிவிட்டார்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Aug 11, 2020 7:10 pm

T.N.Balasubramanian wrote:அந்த செக்யூரிட்டி கேள்வி கேட்க வேண்டிய அவசியமே இல்லை.

டிக்கெட் ஆங்கிலத்தில்தான் இருக்கிறது.

வெளிநாடு போகிறது என்றால் பாஸ்ப்போர்ட்டும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது.

உள்நாட்டு பயணம் என்றால் ஆதார்/பான்கார்ட்  எல்லாமே ஆங்கிலத்தில் இருக்கிறது.

அனுமதிக்கப்பட வேண்டிய நபர் தான் பிரயாணிக்கிறாரா என்பதை ஒரு வார்த்தையில் 

id  என்று கேட்டு சரி பார்க்கலாம்.

தண்டங்கள் ..

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1327467
அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்க வாய்ப்பு உள்ளதா? ஏன் அப்படி கேட்டார் என்ற விளக்கம் இல்லை . இது கூட ஒரு அரசியல் விளையாட்டாக இருக்குமோ? இருக்கலாம் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை Empty Re: 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum