புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_lcapவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_voting_barவயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :)


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 10:45 pm

வயசு...வயோதிகம்...story  by Krishnaamma புன்னகை

அந்த அபார்ட்மெண்ட் இல் மொத்தம் 32 வீடுகள் இருந்தன.
ஓரளவிற்கு எல்லோரும் ஒற்றுமையாகவே இருந்தார்கள். அதில் ஒரேயொரு வீடு மட்டும் வெகு நாட்களாக யாரும் வாங்காமல் இருந்தது. இப்படி இருக்கும் பொழுது, ஒருநாள் அந்த வீட்டிற்கும் ஆள் வந்தது எல்லோரையும் மகிழ்ச்சி இல் ஆழ்த்தியது.

அஸோஸோயேஷன் செக்ரெட்டரி சொன்னார், ஒரு வயதானவர் வாங்கி உள்ளார் என்றும்,  ஒரு நல்ல நாளில் அவர்கள் வரப்போகிறார்கள் என்றும் சொன்னார்.  எல்லோருக்குமே ஒரு வித குறு குறுப்பு யார் வருகிறார்கள், நாம் தான் அவர்களிடம் முதலில் நண்பராக ஆகணும், அவர்களுக்கு தேவையானதை செய்யவேண்டும் என்று.  இது  இயற்கை தானே.

இவர்கள் ஆர்வமுடன் காத்திருந்த அந்த நாளும் வந்தது. கிருஹப்பிரவேசம் என்றல்லாம் எதுவும் செய்யாமல் ஜஸ்ட் பாலை காய்ச்சிவிட்டு வந்துவிட்டார்கள். வந்தது இரண்டே பேர் தான். ஒரு வயதானவரும் ஒரு இளம் பெண்ணும். பார்த்தவர்கள் சொன்னார்கள்.

சரி நம்மிடம் ஏதாவது கேட்பார்கள் என்று இருந்தவர்களுக்கு ஏமாற்றமே. அவர்கள் எதற்காகவும் யாரையும் எதிர் பார்க்கவில்லை. சாமான்களையும் பொறுமையாக அவர்களே அடுக்கி வைத்துக் கொண்டார்கள். அந்தப் பெண் வெளியே வரவே ஒரு வாரம் ஆனது. கீழே பார்க்கில் அவளை பார்த்தவர்கள் சொன்னார்கள்.

விளையாடிக் கொண்டிருந்த  குழந்தைகளை பார்த்தவாறு அவள் உட்கார்ந்திருந்தாள். யாரோ ஒரு மாமி சிரித்துவிட்டு அவளிடம் பேச்சுக்கு கொடுத்தாள் . உன் பெயர் என்ன , வீடு பிடித்திருக்கிறதா என்று கேட்டாள்.

அதற்கு அவள் சிநேகமாய் சிரித்தாள். அவள் பெயர் காமாட்சி என்று சொன்னாள். வீடு பிடித்திருப்பதாகவும் சொன்னாள் . இவள் உடனே அவ்வப்பொழுது வெளியே வாருங்கள் எல்லோருடனும் கலந்து பழகுங்கள் என்றால் மாமி. அதற்கு அவள்  புன்னகையுடன்  தலை அசைத்தாள் . மேற்கொண்டு ஏதும் பேச்சை வளர்க்காமல் போகவேண்டும் போல எழுந்து கொண்டாள் . இந்த மாமிக்கு அவளை விட மனம் இல்லை என்றாலும் சிரித்து தலையாட்டி வழிஅனுப்பிவிட்டாள்.

...................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 10:46 pm

இவள் முட்டியை பிடித்துக் கொண்டு எழுந்தாள் . மெல்ல நடந்தாள் . அதைப்பார்த்த மாமிக்கு மிக ஆச்சர்யம் ஒரு சின்னப் பெண் இப்படியா நடப்பாள் என்று. சரி ஏதோ கால் வலி போல் இருக்கிறது , வீடு மாற்றி வந்து வேலை அதிகம் என்று எண்ணிக்கொண்டாள் . ஆஹா இவள் வேலைக்கு போகிறாளா, இவள் அப்பா என்ன செய்கிறார் என்றெல்லாம் கேட்கவே இலையே என்று ஆதங்கப் பட்டாள் . சரி எங்கே போகப்போகிறாள், பிறகு விசாரிக்கலாம் என்று அவளும் தன் நடை பயிற்சியை முடித்துக் கொண்டு கிளம்பினாள்.

அடுத்த நாளே எல்லோரிடமும் தான் அந்த புது வீட்டுப் பெண்ணைப் பார்த்ததை பற்றி சொல்லிக்கொண்டாள். என்ன ஒரு கர்நாடகப் பெயர் என்றும் இந்த நாளில் இப்படி யார் வைத்துக் கொள்கிறார்கள் என்றும் பேசிக்கொண்டார்கள். இன்று பார்த்தால் அவள், அது தான் காமாட்சி காலை இல் தோளில் ஹேண்டு பாக் சகிதம் வெளியே புறப்பட்டாள்.

வேலைக்கு போகிறாள் என்று நினைத்துக் கொண்டார்கள். அவள் சாயங்காலம் வரும்பொழுது ஏதோ பை நிறைய வாங்கி வந்திருந்தாள் . தூக்க முடியாமல் தூக்கி வந்தாள். அந்த நேரம் பார்த்து லிப்ட் வேலை செய்ய வில்லை. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு படியேறத் துவங்கினாள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த செக்ரெட்டரி 'பையை வைத்து விட்டு போம்மா, யாரிடமாவது கொடுத்து அனுப்புகிறேன்' என்று கனிவாக சொன்னார்.

அவள் முதலில் கொஞ்சம் தயங்கினாள். பிறகு நிஜமாகவே அவளால் அவைகளைத் தூக்கிக்கொண்டு 3 மாடி ஏற முடியாது என்று தோன்றியது. எனவே, அவருக்கு நன்றி மட்டும் சொல்லிவிட்டு. பையை ஆபீஸ் ரூம் இல் வைத்து விட்டு படியேறினாள் . அதற்கே அவளுக்கு மூச்சு வாங்கியது.

வீட்டுக்கு உள்ளே வந்ததுமே அந்த பெரியவர், 'எதுக்கு காமு இப்படி கஷ்டப்படற, வாலயன்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிக்க லாம் தானே, சொன்னால் கேட்காமல் இப்படி அலைகிறாய். உடம்பு என்னத்துக்கு ஆகும் சொல்லு' என்று அன்பாகக் கேட்டவாறே அவள் பருக தண்ணீர் கொடுத்தார்.

'போறாததற்கு , காலை இல் கிளம்பும் பொழுது ஒரு பெரிய லிஸ்ட் எடுத்துக் கொண்டு போனாயே, எதுவும் வாங்கி வரவில்லையா' என்று நகைத்துக் கொண்டே கேட்டார்.
...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 10:47 pm

‘உங்களுக்கு என்னைப்பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது, வாலயன்டரி ரிட்டயர்மெண்ட் வாங்கிக்க லாம் தான், அப்புறம் வீட்டில் உட்க்கார்ந்து கொண்டு என்ன செய்வது?.... நீங்க பாட்டுக்கு படமா போட்டு தள்ளுவீர்கள்...நான்?' என்று கேட்டாள் .
‘சரி சரி கோபித்துக் கொள்ளாதே காமு, என் செல்லமாச்சே, போ, போய் கை கால் அலம்பிக்கொண்டு வா, சூடா காபி போட்டுத்தருகிறேன்' என்று அன்பாக சொன்னார்.

'ம்ம், என்றவாறு எழுந்தவள், உங்களுக்கு பிடித்த அந்த டுவிஸ்ட் பிஸ்கெட் வாங்கி வந்தேன்' என்று சொல்லிக்கொண்டே போனவள் 'அடாடா, பையை கீழேயே வைத்து விட்டு வந்துவிட்டேன்' என்று சொன்னாள் .

'என்ன கீழே வைத்து விட்டு வந்து விட்டாயா?" என்றார். இவளும் நடந்ததைச் சொன்னாள். 'சரி போகட்டும் , ஏற்கனவே உள்ளதை சாப்பிடுவோம், நீ போய் கை கால் அலம்பிக்கொண்டு வா, சூடா காபி போட்டுத்தருகிறேன்' என்று மீண்டும் சொன்னார்.

'அதில் ராத்திரிக்கு வேண்டும் என்று வாங்கி வந்த தோசை மாவும் இருக்கு' என்று சொல்லியபடியே எழுந்து சென்றாள் அவள் . அவள் கை கால் அலம்பவும் இவர் காபி போடவும் எழுந்து உள்ளே போனார்கள். முகம் அலம்பி வெளியே வந்தவள், தேதி காலண்டரைப் பார்த்து புன்முறுவல் கொண்டாள் . ஆச்சு இன்னும் இரண்டு வாரங்கள் தான், அப்புறம் ஒவ்வொருவராக வர ஆரம்பித்து விடுவார்கள், இந்த வீடு முழுவதும் மகிழ்ச்சி நிரம்பும் என்று எண்ணிக்கொண்டாள் .

அதற்குள் வாசலில் பெல் சப்தம் கேட்டது. சரி யாரோ நம் சாமானைக் கொண்டுவந்து விட்டார்கள் என்று எண்ணிக்க்கொண்டே வாசலுக்கு விரைந்தாள். ஆம் அவள் நினைத்தது சரிதான், யாரோ ஒரு யுவன், இவளின் சாமான்களை எடுத்துக் கொண்டு வந்திருந்தான். செக்ரெட்டரி கொடுக்கச்சொன்னார் என்று சொல்லி பையை கொடுத்தான்
..........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 10:48 pm

இவளைத்தாண்டி உள்ளே பார்த்தான். ' என் பெயர் விமல், நான் எதிர் பிளாட் இல் தான் இருக்கிறேன். உங்க பிளாட் உங்களைப்போலவே மிக அழகாக இருக்கு என்று வழிந்தான். நீங்க எங்கே வேலை செய்கிறீர்கள்? நான் US கம்பெனிக்காக வேலை செய்கிறேன், அல்மோஸ்ட் work from home, எனக்கு சுத்தி வளைத்து பேசத்தெரியாது, அது தான் . உங்களை பார்த்த அன்றே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு ஒரு கெட்ட பழக்கம் கிடையாது, எலிஜிபிள் பாச்சுலர், நீங்க சரி என்று ஒரு வார்த்தை சொன்னால் நான் உங்கள் அப்பாவிடம் கேப்பேன். ... எங்கே உங்க அப்பா வீட்டில் தானே இருக்கிறார்' என்று மூச்சு விடாமல் கேட்டான். அவள் அவனையே வெறிக்கப் பார்த்தாள். யு டூ புரூட்டஸ் என்பது போல. பிறகு மந்திரம்போல சில வார்த்தைகளை உதிர்த்தாள்.. வார்த்தைகளா அவை கனல் துண்டங்கள் போல இருந்தன அவனுக்கு.

அவள் சொன்ன பதிலால் அதிர்ந்து போனான். அவளை ஏற இறங்கப் பார்த்தான் . சரேலென்று எதிரில் இருந்த தன் பிளாட்டுக்கு போய் ,
டமார் என்று கதவை சார்த்திக் கொண்டான்.

இவள் மிகக்கோபமாக தன்னைத்தானே நொந்தவாறு உள்ளே வந்தாள் .
இது எதுவும் தெரியாத பெரியவர்,'காமு, இந்த காபி.. வாசலில் யாரு, அட பிரெஷ் பிஸ்கெட் சாப்பிடலாம் , எடு எடு' என்றார். பிறகு தான் இவளின் முகத்தைப் பார்த்தார். ஏன், என்ன ஆச்சு?' என்றார்.

அவளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது... ' பிரச்சனை இங்கும் ஆரம்பித்து விட்டது, நாமாக போய் யாரிடமும் ஈஷி க்கொள்ளாவிட்டாலும் அவர்களாகவே வந்து தொந்தரவு செய்கிறார்கள். இங்கு வந்தும் என் நிலை மாறவில்லை’ என்று துக்கமாக சொன்னாள் .
...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 10:48 pm

'அவளை அன்புடன் அணைத்துக்கொண்டு அந்த பெரியவர், இதற்குத்தானே நாம் கிரஹபிரேவேசம் கூட செய்யவில்லை, இன்னும் 2 வாரங்கள் தான். குழந்தைகள் வந்ததும் என் சஷ்டியப்த பூர்த்தியை விமரிசையாக கொண்டாடப்போகிறோம், அதை நினைத்து , அந்த வேலைகளில் உன்னை ஈடுபடுத்திக் கொள்.மேலும், நீ தான் அவனுக்கு உண்மையை சொல்லிவிட்டாயே இனி தொல்லை இருக்காது. அவன் அதை சொல்லாமல் இருக்க மாட்டான், அதைக் கேட்டதும்  எல்லோருக்கும்எல்லா குழப்பமும் போய்விடும். வம்புக்கு அலைபவர்கள் ,இது தான் என்று தெரிந்து விட்டால், சிலநாட்கள் பேசுவார்கள், பிறகு விட்டு விடுவார்கள்..எனவே, நீ கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உனக்குத்தான் BP ஏறும். சரியா? "என்று சொன்னார்.

'உனக்கு கஷ்டமாய் இருந்தால் சொல்லு, இப்பொழுதே போய்  செக்ரெட்டரி இடம் சொல்லி, எல்லோரையும் ஒரு மீட்டிங் என்று அழைத்து உண்மையை சொல்வோம் என்றார். எனக்கு நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் அவ்வளவுதான் காமு என்றார். அவளும் கண்ணீரினூடே  தலையை ஆட்டினாள்.

‘வேண்டுமானால் லீவு  போட்டுவிட்டேன்' என்றும் சொன்னார். 'இல்லை இல்லை அது சரிவராது, குழந்தைகள் வந்ததும் போட்டாலாவது ஜாலியாக இருக்கும் என்றாள்.

அந்தப் பெரியவர் சொன்னது போல அவன் சும்மா இல்லை, சில மணித்துளிகளில் அவள் சொன்ன வார்த்தைகள் அந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க பரவி விட்டது.
அந்தப் பெரியவர் சொன்னது போல அவன் சும்மா இல்லை, சில மணித்துளிகளில் அவள் சொன்ன வார்த்தைகள் அந்த அப்பார்ட்மெண்ட் முழுக்க பரவி விட்டது.

அவள் அவனிடம் அப்படியென்ன சொன்னால் என்று தானே யோசிக்கிறீர்கள்..அவள் சொன்னாள் , 'நான் அவர் மகளல்ல மனைவி' என்று.


பலவித விமரிசனங்கள் எழுந்தன.
.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 10:49 pm

'அதான் அவ பார்வையே சரி இல்லை'...'நினைத்தேன் இப்படித்தான் ஏதாவது ஏடாகூடமாக இருக்கும் என்று'...'எந்தப்புத்தில் எந்த பாம்போ'...'நல்ல காலம் அவளுக்கே இது அசிங்கமாய் இருந்திருக்கும் அது தான் யாருடனும் அவ பழங்கலை '...இப்படியாக நீண்டது அந்த விமரிசனங்கள். கன்னிப்பெண்களை தங்கள் வீட்டில் வைத்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் தங்கள் மகளுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவளா பேசினால் கூட நீங்க பேசக்கூடாது என்று. சிலர் ஒரு படி மேலே போய் , செக்ரெட்டரி இடம், ' நீங்க தான் ஏதாவது ஒரு வழி செய்யவேண்டும் இதற்கு' என்றார்கள். அவர் நான் என்ன செய்யமுடியும், அவர்களும் உங்க ளை ப்  போல ஒரு ஓனர் ..என்னால் ஏதும் ஆகாது, அவர்கள் அப்படி என்ன செய்துவிட்டார்கள், இந்தக்காலத்தில் இதெல்லாம் சகஜம்  என்று சொல்லிவிட்டார்.

இது ஏதும் அறியாத அவள் மறுநாள் காலை ஆபீஸ்க்கு கிளம்பினாள். எதிரே பார்த்து புன்னகைத்தவர்கள் கூட இன்று முகத்தை திருப்பிக் கொண்டனர். இது அவளுக்கு சகஜம் தான் என்றாலும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது. முகத்தை திருப்பிக் கொண்டவர்கள் பெண்கள் தான். ஆனால் ஆண்களின் போக்கு வேறு விதமாக இருந்தது, வலிய வந்து வழிந்தார்கள். இவளுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது என்றாலும் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். அவர் சொன்னது போல இன்னும் இரண்டு வாரங்கள் தானே என்று தன்னைத்தானே சமாதனப் படுத்திக்க கொண்டாள். அவர் சொன்னது போல இன்னும் இரண்டு வாரங்கள் தானே என்று தன்னைத்தானே சமாதனப் படுத்திக்க கொண்டாள்.
அடுத்தடுத்த ஏற்பாட்டு வேலைகளில்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டா ள் .

அந்த அபார்ட்மெண்ட் இல் இருந்த கிளப் ஹவுஸ் ஐ 2 நாட்களுக்கு புக் செய்து கொண்டாள். செக்ரெட்டரி  இன் உதவியுடன் மொத்தம் அங்கு எத்தனை பேர் உள்ளார்கள் என்று தெரிந்து கொண்டாள் . அதற்கு ஏற்ப உணவு மட்டும் கிபிட் ஐட்டம்கள் ஆர்டர் செய்தாள். ஆச்சு நாளை முதல் ஒவ்வொருவராக வந்து விடுவார்கள் என்று எண்ணும்பொழுதே அவளுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

காலை இல் முதலில் வரும் தன்  சின்ன மகளுக்கு பிடித்ததை சமைக்கும்படி  பெரியவர் சொன்னார்.

'அவளும் சந்தோஷமாய் அலுத்துக்கொண்டே, நீங்க எனக்கு சொல்ல ணு  மா எனக்கு தெரியாது பாரு' என்றாள். மறுநாள் ஏர்போர்ட்டுக்கு   போய் சின்ன மகள் தீபா, அவள் வீட்டுக்காரர் ராம் மற்றும் பேத்தி சுபாவை அழைத்து வந்தார்கள். வரும் வழி பூராவும் சுபா  திறந்த வாயை மூடவில்லை . காமாட்சியும் அவள் கேட்டதற்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்லிக் கொண்டே வந்தாள். பெரியவர் சிவசா மியை விட காமாட்சிஇடம் அவள் அதிகமாய் ஒட்டிக் கொண்டாள் .
...............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 11:01 pm

அதற்கு மறுநாளே மகன் சுரேஷ், மட்டுப் பெண் சுபா மற்றும் அவர்களின் இரட்டை குழந்தைகள் கமலேஷ் காமேஷ் வந்து சேர்ந்தார்கள். அதற்கும் மறுநாள் பெரிய பெண் வந்தாள். அவள் ஒரே  மகன் அமெரிக்காவில் படிக்கிறான்.கணவர் பொறுப்பான மத்திய சர்க்கார் உத்தியோகத்தில் இருக்கிறார். 60 ம் கல்யாணத்துக்கு முன் தினம் வந்து விடுவதாக சொல்லி இருக்கிறார்.

இவர்கள் இருவரும் மட்டும் இருந்த பொழுது மிகவும் பெரியதாகத் தெரிந்த அந்த  4 பெட் ரூம் பிளாட் போதவில்லை போல இருந்தது இன்று. வேளா வேளைக்கு எல்லோருக்கும் வித விதமாய் சமைத்து போட்டு மகிழ்ந்தாள் காமாட்சி. குழந்தைகள் எல்லோரும்  வரப்போகிறார்கள் என்று பாரிஜாராகரிடம் முன்கூட்டியே சொல்லி, வித விதமான பட்ஷணங்கள் செய்து வைத்திருந்தாள். எல்லோருமாக ஒருநாள் வெளியே சென்று சாப்பிட்டார்கள். குழந்தைகள் பீஸாவுக்காக அடம் பிடித்தார்கள்.

60ம் கல்யாண ஏற்படுகளை கவனித்தார்கள். இந்த கல்யாணத்துக்கு கூட வருபவர்களுக்கு மருதாணி வைத்துவிட, குழந்தைகளுக்கு பாப் கார்ன், பஞ்சுமிட்டாய் ஸ்டால் வேண்டும் என்று கேட்டார்கள் குழந்தைகள். அதற்கும் காமாட்சி ஏற்பாடு செய்தாள். இவர்கள் அனைவரின் அந்நியோன்னியத்தைப்  பார்த்தவர்கள் வியந்தார்கள்.

60ம் கல்யாணத்திற்கு இன்றும் 4 நாட்கள் இருந்தன. 60ம் கல்யாணத்துக்கு எல்லோரையும் அழைக்க வேண்டும். முடிந்தால் முதல் நாள் நடக்க இருக்கும் பெருமாள் சமாராதனைக்கும் அழைக்க வேண்டும். எல்லோரும் வருவார்களா என்று தெரியவில்லை. தவறாமல் அவர்கள் வரவேண்டும் என்றால், என்ன செய்வது என்று யோசித்த காமாட்சி, மருமகளையும்  பெரிய பெண்ணையும் கூப்பிட்டாள். நீங்கள் இருவரும், எண்ணெய் சீக்கா , குங்கும சிமிழ் எடுத்துக் கொண்டு எல்லோர் வீட்டுக்கும் போய், நாளை மறுநாள் நடக்க இருக்கும் சுமங்கலிப் பிரார்த்தனைக்கு பொண்டுகளாய் வரும்படி  அழைத்து விட்டு வாருங்கள், இதை அவர்களால் தட்ட முடியாது . இவர்கள் அன்று இங்கு வந்து விட்டால், மறுநாளும் கல்யாணத்துக்கும் ஆண்கள் குழந்தைகள் என  எல்லோரும் வந்து விடுவார்கள் என்று சொன்னாள். இது மிகவும் சரியாகப் பட்டது அவர்களுக்கு.
..............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2020 11:05 pm

எல்லோரின் வீடுகளுக்கும் சென்று அழைத்து விட்டு வந்தார்கள். சுமங்கலிப் பிரார்த்தனை என்று சொன்னதால், அதை எந்த வீட்டுப் பெண்ணாலும் தட்ட முடியவில்லை. எல்லோரும் வந்தார்கள். வந்தவர்களை சிறப்பாக வரவேற்றனர் இந்த வீட்டுப் பெண்கள். எல்லோரும் வந்ததும், காமாட்சி வந்து பேசத்துவங்கினாள்.

என் அழைப்பு க்கு மதிப்பே கொடுத்து இங்கு வந்ததற்கு ரொம்ப ரொமப் நன்றி. ரொம்ப சந்தோஷம். உங்கள் எல்லோரின் மனத்தில் இருக்கும் சந்தேகத்துக்கு முதலில் நான் பதில் சொல்லி விடுகிறேன். எல்லாம் என் தலை எழுத்து என்று சொல்லியவாறே கண் கலங்கினாள். உடனே சின்னப்ப பெண் , 'அம்மா, ப்ளீஸ் ..' என்று தோளைத்தட்டிக் கொடுத்தாள்.

கொஞ்சம் சுதாதரித்துக் கொண்டு தொடர்ந்தாள் காமாட்சி....எனக்கு , எனக்கு, 58 வயதாகிறது என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டாள். எல்லோருக்கும் அது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது..ஏக குரலில் என்ன? என்று கேட்டார்கள். ஆமாம், நான் இளம் பெண் இல்லை, இவரின் 2ம் தாரமும் இல்லை. நான் பெற்றவர்கள் தான் இந்தப்  பெண்களும் இந்தப் பிள்ளையும்.என்று கொஞ்சம் நிறுத்தினாள். நான் எப்பொழுதும் 27 -28 வயது பெண்ணாகத்தான் காட்ச்சியளிப்பேன்,வெளி இல் உள்ளவர்களுக்கு, ஆனால் எனக்கு என் வயதுக்கு உண்டான, மூப்பு முடியாமல் போவது வியாதி எல்லாம் உண்டு. என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா, எனக்கு  அப்படி ஒரு வியாதி . என்னடி பேர் அதற்கு என்று பெண்ணைக் கேட்டாள் காமாட்சி மாமி.

'ANTI AGING DEFICIENCY  அம்மா.'.. ம்ம்.. அதுதான்...இதனால் நான் படும் துன்பம் கொஞ்சம் இல்லை....பார்க்கும் இளவயதுக்காரர்கள் என்னைக் கல்யாணம் செய்து கொள் என்று கேட்பார்கள். பஸ் இல் போனால் இடிப்பார்கள்... மீறி எனக்கு கல்யாணம் ஆனது தெரிந்தால், நான் கிழவரைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படுவதாக அவர்களாகவே நினைத்துக் கொண்டு என்னிடம் வழிவார்கள் என்று சொல்லி அழுதாள் மாமி.

எல்லோருக்கும் மிகவும் கஷ்டமாகிப் போனது. முதலில் சுதாரித்துக் கொண்டவள் லலிதா மாமி தான். ஓடிப்போய் காமாட்சி மாமியை அனைத்துக் கொண்டாள். 'மன்னிச்சுக்கோங்கோ மாமி, உண்மை தெரியாமல் உங்களை தப்பாக  நினைத்து விட்டேன், மேலும் ஒருமை இல் கூப்பிட்டு விட்டேன்' என்றாள். பின் ஒவ்வொருவராக வந்து , அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்...நீங்க இனி எதுக்கும் கவலைப்படாதீஙங்க மாமி, நாங்க எல்லோரும் இருக்கிறோம் உங்களுக்கு.மாமாவின் 60ம் கல்யாணத்தை ஜமாய்த்துவிடலாம்.' என்று சொன்னார்கள்.

அப்புறம் அந்த பெருமாள் சாமாராதனையும் 60 ம் கல்யாணமும் எப்படி ஜாம் ஜாம் என்று நடந்தன என்று நான் சொல்லவும் வேண்டுமா?

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 01, 2020 6:57 am

வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) 103459460 வயசு...வயோதிகம்..(சிறுகதை -by krishnaamma - கிருஷ்ணாம்மா :) 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2020 9:41 pm

நன்றி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக