புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
91 Posts - 43%
ayyasamy ram
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
7 Posts - 3%
T.N.Balasubramanian
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
2 Posts - 1%
கண்ணன்
திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_lcapதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_voting_barதிருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 5:32 pm

திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் 19

கண்கண்ட தெய்வமாய் விளங்கும் கந்தன் அருளாட்சி
புரிந்து வரும் பல தலங்களுள் திருப்போரூர் பதியும்
ஒன்று. மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பு
பெற்ற இத்தலத்திற்கு யுத்தபுரி என்ற பெயரும் உண்டு.

கடலிலே போர் நடந்த இடம் திருச்செந்தூர் என்றும்,
நிலத்திலே போர் நடந்த இடம் திருப்பரங்குன்றம் என்றும்,
விண்ணிலே போர் நடந்த இடம் திருப்போரூர் என்றும்
புராணங்கள் வாயிலாகத் தெரிய வருகிறது.

மேலும், சமரபுரி, போரியூர், செருவூர், போரிநகர்,
திருஅமரப்பதி, சமதளப்பூர் எனப் பல்வேறு பெயர்களால்
இத்தலம் அழைக்கப்படுகிறது.

பனங்காடாய்க் கிடந்த இப்பகுதியில், பதினேழாம்
நூற்றாண்டின் முற்பகுதியில் தவஞானியாய் விளங்கிய
சிதம்பர சுவாமிகளால் இங்கே ஒரு முருகன் ஆலயமும்,
திருக்குளமும் அமைக்கப்பட்டது.

திருப்போரூர் சந்நதி முறை எனும் 726 பாடல்களை இங்கு
அருளும் கந்தசாமிப்பெருமானின் மீது அவர் பாடியுள்ளார்.
ஆலயத்திற்குச் செல்வதற்கு ஒரு கி.மீ முன்னரே
வேம்படி விநாயகர் எல்லையைக் காத்து அருள்கின்றார்.

விநாயகரை வணங்கி முருகனை தரிசிக்கச் செல்கிறோம்.
ஆலயத்திற்குச் செல்லும் முன் வள்ளலார் ஓடை என்றும்,
சரவணப் பொய்கை என்றும் அழைக்கப்படும் திருக்குளம்
மிகப் பெரிய அளவில் காட்சி தருகிறது.

இத்திருக்குளம் முருகனின் அருளைப் போல என்றுமே
வற்றுவதில்லையாம். இதைத்தவிர பிரணவாம்ருதம் எனும்
தீர்த்தம் இத்தல பிரணவ மலையிலும், வேலாயுத தீர்த்தம்
எனும் தீர்த்தம் கண்ணுவர் பேட்டையில் உள்ள
சிதம்பரசுவாமிகளின் திருமடத்தின் வடக்கிலும் உள்ளது.

ராஜகோபுரத்தைத் தாண்டி ஆலயத்தினுள் நுழைந்தால்
இருபத்துநான்கு கல்தூண் மண்டபம் உள்ளது. அதைத்
தாண்டி உள் மண்டபம் உள்ளது. அதையும் கடந்தால்
தீரா வினை தீர்க்கும் கந்தசாமியின் சந்நதி உள்ளது.

கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும்
கந்தசாமி, பனை மரத்தாலான சுயம்பு மூர்த்தமாக காட்சி
தருகிறார். முருகனின் அருள் வெள்ளம் நம்மை நோக்கிப்
பாய்வதைப் போல் உணர்கிறோம். வந்த வினைகளையும்,
வருகின்ற வினைகளையும் நீக்கும் கந்தசாமியான இவருக்கு
அபிஷேகம் செய்வதில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 5:32 pm

இது முருகனின் திருக்கோலங்களில் ஒன்றான
பிரம்மசாஸ்தாவின் அம்சமாகத் திகழ்கிறது. அவர்
சந்நதியின் முன் மயிலிற்குப் பதிலாக தேவேந்திரனின்
ஐராவத யானை அமர்ந்துள்ளது.

கருவறை பிராகாரத்தை வலம் வரும் போது கோஷ்ட
தெய்வங்களையும், உற்சவ விக்ரகங்களையும் தரிசிக்கிறோம்.
உற்சவ விக்ரகங்களில் வில்லேந்திய வேலவனும், தந்தைக்கு
மந்திர உபதேசம் செய்யும் சுவாமிநாதனின்
உபதேசமூர்த்தியின் திருவுருவமும் மனதைக் கவரும்
வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வலது காலை மயில்மேல் ஊன்றி வில்லேந்திய கோலத்தில்
வேலவன் முத்துக்குமாரசுவாமி என்ற திருநாமத்துடன்
அருளும் மூர்த்தமும், சிவபெருமானது மடியில் அவர்
திருமுகத்தை நோக்கி முருகன் அமர்ந்திருக்க, ஈசன் வாய்
புதைத்துக் குழந்தையிடம் பிரணவப் பொருளை உபதேசம்
பெறும் அற்புதக் காட்சியும் மனதை விட்டு அகல மறுக்கிறது.

மானசாரம் எனும் சிற்ப நூலில் குறிப்பிட்டுள்ளபடி உள்ள
இந்த அமைப்பை தேசிகர் என்கிறார்கள். பிராகார வலம்
முடியும் இடத்தில் சிதம்பர சுவாமிகளால் பிரதிஷ்டை
செய்யப்பட்ட யந்திரம் உள்ள சந்நதி உள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த இதில் சகல தேவதைகளும் வாசம்
புரிவதாக ஐதீகம். இந்த யந்திரம் ஆமைவடிவ பீடத்தில்
எட்டு யானைகள், எட்டு நாகங்கள், கணங்கள் போன்றோரால்
தாங்கப்படும் பெருமை உடையது.

மூல மூர்த்திக்குச் சமமாக இந்த யந்திரத்திற்கும் தினசரி
பூஜைகள் உண்டு. கந்தசஷ்டி ஆறு நாட்களும் விசேஷமாக
வழிபடப்படும் இந்த சந்நதியை தரிசனம் செய்தால்
திருமணத் தடைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
அதன் அருகில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசுவாமி
அருள்கிறார். வெளிமண்டபத்தில் நான்கடி உயரத்தில் வலது
கையில் தாமரையும், இடது கையில் குவளை மலரும் ஏந்தி
நின்ற திருக்கோலத்தில் கருணை பொங்கும்
திருமுக மண்டலத்துடன் தெய்வானை தனிக்கோயிலில்
அருள்கிறாள்.

இத்தலத்தில் உள்ள சர்வ வாத்யமண்டபம் ஓர் ஒப்புயர்வற்ற
கலைக் கோயிலாய் துலங்குகிறது. ஈசனின்
திருவிளையாடல்களும், முருகப்பெருமானின்
திருவிளையாடல்களும் இங்கு அற்புதமான சிலைவடிவங்களாக
வடிக்கப்பட்டுள்ளன. இதைத்தவிர வன்மீகேசர், நவவீரர்கள்,
காருண்ய அம்மையார், பைரவர் போன்றோரும் தனி சந்நதிகளில்
அருள்கின்றனர்.

தலவிருட்சமாக வன்னிமரம் விளங்குகிறது.
மயில்மண்டபத்தில் துலாபார பிரார்த்தனையை பக்தர்கள்
நிறைவேற்றுகின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 5:33 pm

புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படுகிறது. அபிஷேகம்
செய்வதற்காகவே அவர் திருமுன் கருங்கல்லினாலான
முருகன், வள்ளி, தெய்வானை மூர்த்தங்கள் பிரதிஷ்டை
செய்யப்பட்டுள்ளன. முருகப் பெருமான் ஜபமாலை,
கமண்டலம், அபய வரதக் கரங்களுடன் அருள்கிறார்.

இத்தலத்தில் உள்ள அறையில் பனைமரத்தின் அடிப்பாகத்தால்
ஆக்கப்பட்ட நெற்குதிர் போன்ற அமைப்பில் நிவேதன அரிசியைக்
கொட்டி வைத்துள்ளனர். அதை ஆதி பனைமரம் என அ
ழைக்கின்றனர். இத்திருக்கோயிலில் தினமும் நான்கு கால
வழிபாடுகள் நடக்கிறது.

தினசரி பூஜைகள் வன்மீகேஸ்வரரிடம் தொடங்கி பைரவரிடம்
முடிகிறது. அசுரர்களுடன் போர் புரிந்த தோஷத்தை முருகப்
பெருமான் இந்த வன்மீகேசரைப் பூஜித்து நீக்கிக் கொண்டதாக
ஐதீகம்உள்ளது இங்கு முதல் பூஜை இவருக்கே நடத்தப்படுகிறது.

திருப்போரூரில் முதலில் வேம்படி விநாயகர், பிறகு
சிதம்பரசுவாமிகளின் சமாதி, அடுத்து எல்லையம்மன்,
பின் பிரணவ மலையில் அருளும் ஈசன், அம்பிகை என்ற
வரிசையில் வழிபட்டு நிறைவாக கந்தசாமியை வணங்கும்
மரபு உள்ளது.

ஓம் எனும் பிரணவமே முருகப்பெருமானை பூஜித்து, பிறகு இந்த
ஆலயத்தின் பின்னால் மலைவடிவில் துலங்குவதாக ஐதீகம்.
இந்த மலையில் கைலாசநாதர், பாலாம்பிகையோடு அருள்கிறார்.
மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆவணி
பவித்ரோற்சவம், புரட்டாசி நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற
விழாக்கள் இத்தலத்தில் விமரிசையாக நடக்கிறது.

கந்தசஷ்டியின் போது லட்சார்ச்சனை விழா மிகச் சிறப்பாக
நடத்தப்படுகிறது.

இத்தல அர்த்த ஜாம பூஜையின்போது முருகப் பெருமானுக்கு
மிளகு சாதமும், 16 மிளகு வடையும் பிரசாதமாக படைக்கப்படுகிறது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 29, 2020 5:35 pm

திருப்போரூர் பிரணவமே வழிபட்ட பேரழகன் 19a
-
மிளகு சாதம்

தேவையானவை:

அரிசி 1 படி
மிளகு தூள் 50 கிராம்
உப்பு தேவையான அளவு
நெய் 5 இரண்டு தேக்கரண்டி

செய்முறை:
முதலில் அரிசியை பொல பொலவென வேகவைத்துக்
கொள்கிறார்கள். பின்பு, கடாயில் நெய் ஊற்றி
காய்ந்ததும் உப்பு, மிளகு தூள் சேர்த்துக் கலந்து
நிவேதிக்கிறார்கள்.

மிளகுவடை

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு 2 ஆழாக்கு
மிளகு 1 டீஸ்பூன்
அரிசி மாவு 2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்றவாறு
எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:
உளுத்தம் பருப்பை 30 நிமிடங்கள் ஊறவைத்து, கழுவி,
தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, ஒரு வடிகட்டியில் போட்டு
வைக்கிறார்கள்.

மிளகை கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்கிறார்கள்.
உரலில் உளுத்தம் பருப்பைப் போட்டு, தண்ணீர் எதுவும்
சேர்க்காமல், கொரகொரப்பாக அரைத்துக் கொள்கிறார்கள்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன்
அரிசி மாவு, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து
கொள்கிறார்கள் பின் ஈரத்துணியில் மெல்லிய வடைகளாகத்
தட்டி காய்ந்த எண்ணெயில் பொரித்தெடுக்கிறார்கள்.
கர கரவெனும் மிளகுவடை பிரசாதம் தயார்.

சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் பாதையில்
42வது கிலோமீட்டரில் உள்ளது, திருப்போரூர்.
-
----------------------------------
ந பரணிகுமார்
படங்கள்: விவேகானந்தன்
நன்றி- ஆன்மீகம் (குங்குமம்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக