ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
எடை -- Poll_c10எடை -- Poll_m10எடை -- Poll_c10 
heezulia
எடை -- Poll_c10எடை -- Poll_m10எடை -- Poll_c10 
E KUMARAN
எடை -- Poll_c10எடை -- Poll_m10எடை -- Poll_c10 
mohamed nizamudeen
எடை -- Poll_c10எடை -- Poll_m10எடை -- Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை --

3 posters

Go down

எடை -- Empty எடை --

Post by T.N.Balasubramanian Tue Jul 28, 2020 9:08 pm

எடை!      (சிறுகதை)                            

உச்சிவெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்த்து. வாசலில் அமர்ந்து நியுஸ் பேப்பர் வாசித்துக்கொண்டிருந்த மணிவாசகம் காம்பவுண்ட் கேட் திறக்கும் ஓசை கேட்டு நிமிர்ந்தார். கேட்டை திறந்தபடி ஒரு 50ஐ கடந்த நபர் நின்றிருந்தார்.
அழுக்குச்சட்டை, எண்ணெய் காணாத தலை, கிழிசல் லுங்கி அணிந்திருந்த அவர் சிநேகமாய் சிரித்தவாறே ஐயா, பழைய நியுஸ் பேப்பர் எடுக்கறேங்க! அம்மா வரச்சொல்லியிருந்தாங்க என்றார்.
ஊம்.. என்ற மணிவாசகம், ”என்ன விலைக்கு எடுத்துக்கறே?”
”இங்கிலீஷ் பேப்பர்னா 12 ரூபா கிலோ! தமிழ்னா பத்து ரூபாங்க!”
“ரொம்ப கம்மியா யிருக்கே!”
”இல்லீங்க போனமாசம் 10 ரூபா  8 ரூபாதான் எடுத்தேங்க! இப்ப ரெண்டு ரூபா கூடியிருக்கு!”
” ஒரு மாசம் பேப்பர் பில் எவ்வளவு தெரியுமா?”
“நமக்கெதுக்குங்க அதெல்லாம்?”
“230 ரூபா சில சமயம் 250 கூட! ஆனா ஒரு மாசம் பழைய பேப்பரை வித்தா பத்து ரூபாதான் கிடைக்குது..!”
”வேஸ்ட் பேப்பர்தானுங்களே? இதை கொண்டு போய் கடையில போட்டா எங்களுக்கு கிலோவுக்கு ஒரு ரூபா கிடைக்கும் அவ்வளவுதான்!”
”சரி சரி உள்ளே வா! வீடே ஒரே நியுஸ் பேப்பர் அடைசலா இருக்குண்னு எம்பொண்டாட்டி கத்திக்கிட்டிருந்தா அதான் வரச்சொல்லியிருக்கா எடையெல்லாம்  ஒழுங்கா போடுவே இல்லே…!”
”கரெக்டா இருக்கும் சார்!”
அந்த மனிதர்  பழைய இரும்புத் தராசுடன் உள்ளே நுழைய ”லட்சுமி! பழைய பேப்பர் எடுக்க வந்திருக்காங்க சீக்கிரம் வா!”
”நான் கொஞ்சம் அடுப்படியிலே வேலையா இருக்கேன். நீங்களே எடுத்துப்போடக்கூடாதா?”
”அப்ப திருப்பி அனுப்பிச்சரவா?”
”அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நானே வந்து எடுத்து போட்டுத் தொலைக்கிறேன்.”
லட்சுமி முணுமுணுத்தபடி கிச்சனில் இருந்து வந்து  ஹாலில் கப்போர்டில் கிடந்த பேப்பர்களை அள்ளி வராந்தாவில் போட்டாள்.
சிதறிக்கிடந்த பேப்பர்களை அடுக்க ஆரம்பித்தார் அந்த பெரியவர்.
”அப்படியே ஒரு கயிரு போட்டு கட்டி வைச்சிருந்தா எடை போட சுலபமா இருந்திருக்கும்யா…!”
”ஏன் நீ கயிறு கொண்டு வர மாட்டியா? ”
“இருக்குய்யா ! வண்டியிலே இருக்கு! போய் கொண்டு வரனும்!”
” போய் கொண்டு வா!”
”அந்த பெரியவர் எழுந்தார். ரொம்ப தாகமா இருக்குய்யா! குடிக்க கொஞ்சம் தண்ணீ கிடைக்குமா?”
”கேட்டு ஓரமா ஒரு பைப் இருக்கு பாரு…! அதுலே பிடிச்சு குடிச்சுட்டு போய் கயிறு கொண்டுவா!”
பெரியவர்  எழுந்து போய்  அந்த குழாயை திருகினார். வெயிலில் சுடுதண்ணீராய்  கையில் விழுந்த நீரை கொஞ்சம் கீழே விட்டு முகம் கழுவி பின்னர் இரண்டு கை பிடித்து அருந்தினார். முகத்தை தோளில் போட்டிருந்த அழுக்குத்துண்டால் துடைத்துக்கொன்டு வெளியே நிறுத்தியிருந்த அந்த மூன்று சக்கர ட்ரை சைக்கிளை  உள்ளே தள்ளிக் கொண்டு வந்தார்.
”கயிரை எடுத்து வான்னு சொன்னா வண்டியையே கொண்டு வந்திட்டியே?” மணிவாசகம் கேட்க
”பேப்பர் நிறைய இருக்குதுய்யா! அதான் எடை போட்டதும் வண்டியிலே எடுத்துபோக சவுகரியமா இருக்கும்னு கொண்டு வந்தேன்.”


தொடரும்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எடை -- Empty Re: எடை --

Post by T.N.Balasubramanian Tue Jul 28, 2020 9:09 pm

----2

”சரி பெரியவரே…! உங்க பேரு என்ன?”
“முத்து”
“எத்தனை வருஷமா இந்த தொழில் பண்றீங்க?”
”அது ஆகிப்போச்சுங்க முப்பது வருஷம்!”
”ஒருநாளைக்கு எவ்வளோ கிடைக்கும்.?”
”அது வியாபாரத்தை பொருத்துங்க! வீடுங்கள்லே வேண்டாம்னு எவ்ளோ தூக்கிப்போடறீங்களோ  அவ்வளவும் எங்களுக்கு சோறு போடற தெய்வங்கள்!”
பேசிக்கொண்டே இருந்தாலும் பெரியவர் முத்து பேப்பர்களை இரண்டு மூன்று அடுக்குகளாக அடுக்கி கட்டினார்.
அப்புறம் எடை போட ஆரம்பித்தார். இரண்டு கிலோ எடைக்கல் ஒன்றும் ஒருகிலோ எடைக்கல் ஒன்றையும் சேர்த்து  தராசில் வைத்து மறுபக்கம் பேப்பர்களை வைத்தார்.  தூக்க முடியாமல் தராசை தூக்கி நிறுத்த முள் பேப்பர் இருந்த பக்கம் தாழ்ந்தது. கொஞ்சம்  பேப்பர்களை எடுத்துவிட்டு மீண்டும் நிறுத்தார்.
இதற்குள் வார இதழ்கள் சில நாவல் புத்தகங்களையும்  என் மகன் படித்து முடித்த கல்லூரி பாடப்புத்தகங்களையும் கொண்டுவந்து போட்டாள் லட்சுமி.
” பேப்பர் வரைக்கு 5 எடை இருக்குய்யா!  அஞ்சு மூணு 15 கிலோ…”
” புக் எல்லாம் எட்டு கிலோ  இருக்கு.”
”மொத்தம் 23 கிலோ”
”பேப்பருக்கு 150 ரூபா… புக்கு கிலோ பன்னெண்டு ரூபா அப்போ  தொண்ணுத்தாறு  ரூபா”
”மொத்தம்  எரநூத்து நாப்பத்தாறு ரூபா ” என்றவர்..
”ஐயா, எதாவது தக்காளி வெங்காயம் வேணுங்களா?”
”உன் அழுகின தக்காளி  யாருக்கு வேணும்? பணத்தை கொடுத்திட்டு பேப்பரை எடுத்துட்டு கிளம்பு.”
”ஐயா,  அம்பது ரூபா கம்மியா இருக்கு! அதுக்கு எதாவது வெங்காயம் தக்காளி வாங்கிக்குங்க!”
”அதானே பாத்தேன்…! இப்படி எதையாவது சொல்லி அழுகுன தக்காளியை தலையிலே கட்டப் பாக்கறியா?”
”இல்லே சார்…! இன்னைக்கு காலையிலே மார்க்கெட்ல எடுத்த புதுத் தக்காளி நீங்களே பொறுக்கி எடுத்துக்க…

தொடரும்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எடை -- Empty Re: எடை --

Post by T.N.Balasubramanian Tue Jul 28, 2020 9:16 pm

-----3
ரெண்டரை கிலோ 50 ரூபா சார் ------
”மார்க்கெட்ல தக்காளி கிலோ பாஞ்சு ரூபாதான்..!”
”அது நேத்து ரேட்டுங்கய்யா!  இன்னிக்கு கிலோ இருபது ரூபாதான்!  உங்களுக்காக வேனூம்னா மூணு கிலோ போடறேன்..!”
”யாருக்கு வேணும் உன் பிச்சை!  ரூபா இருந்தா கொடுத்துட்டு பேப்பரை எடுத்துக்கோ இல்லேன்னா கிளம்பு. நாங்க வேற ஆளுக்கு போட்டுக்கறோம்!”
” முத போணி ஐயா!  காலையிலே இருந்து வெயில்ல சுத்திட்டு வரேன்!  கடைக்கு இன்னும்  அஞ்சு கிலோமீட்டர் போகணும் ”
”அதுக்கு…!”
”இரு நூரு ரூபா இப்ப வாங்கிக்கிடுங்க! மிச்சம் ஐம்பது ரூபா நாளக்கி வரும்போது கொடுத்துடறேன்!”
”முழுசா அம்பது ரூபாயை ஆட்டையை போட பாக்கிறியே?”
”அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்யா! இந்த ஏரியாவுலேதான் முப்பது வருஷமா வியாபாரம் பண்ணிகிட்டு இருக்கேன்.. உங்க துட்டு எனக்கு வேண்டாம்யா…! ஏமாத்தி துண்ணா உடம்புலே ஒட்டாதுய்யா! நாளைக்கு கண்டிப்பா கொண்டு வந்து கொடுத்துடறேன்யா!”
”அப்ப ஒண்ணூ பண்ணு இருநூரு ரூபாவுக்கு எவ்ளோ பேப்பரோ அதை மட்டும்  எடுத்துட்டு போ!  நாளக்கி வரும்போது மீதி பணம் கொடுத்திட்டு மிச்சத்தை எடுத்துப்போ… ”கறாராக சொன்னார் மணி வாசகம்.
இனி பேசி பிரயோசனம் இல்லை..! என்று அவர் சொன்னபடி இருநூறு ரூபாயை கொடுத்துவிட்டு பேப்பர் பதினைந்து கிலோவையும்  நாலு கிலோ எடை புத்தகத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் முத்து.
”‘பாவங்க அந்தாளு! இப்படி பச்சாதாபமே இல்லாம விரட்டறீங்க!” அந்த அம்பது ரூபாவை அவன் ஏமாத்த மாட்டான். அப்படியே ஏமாத்தினாலும் நாம கொறைஞ்சா போயிருவோம்.”
”ஏன் பேச மாட்டே? ஒவ்வொரு ரூபாவும் நான் உழைச்சு சம்பாதிச்சு  இந்த அளவுக்கு வந்திருக்கேன். யாருகிட்டேயும் நான் ஏமாறத் தயாரா இல்லே!  அவன் நாளக்கி வர மாட்டான் பாரு… இந்த மாதிரி எத்தனை பேரை நான் எடை போட்டு வைச்சிருக்கேன் தெரியுமா?  அந்த ஓட்டை தராசுலே எடை போட்டா எப்படியும் கிலோவுக்கு நூறூ கிராம் லாபம் கிடைக்கும். நம்மகிட்டே பத்து ரூபாய்க்கு எடுத்து பன்னென்டு ரூபாவுக்கு விப்பான். ஏமாந்தா எடையிலே இன்னும் கொள்ளையடிப்பான்.”
”இப்படி ஒரு ரூபா ரெண்டு ரூபா லாபம் வரலைன்னா அவன் தொழில் செஞ்சு பிரயோசனம் இல்லாம போயிருங்க! அவன் வயித்து பொழைப்ப பாக்க வேணாம்”.
”சரிசரி! அவனாலே நமக்குள்ளே எதுக்கு பிரச்சனை? ஆக வேண்டிய வேலையைப்பாரு…!” என்று மனைவியை அடக்கினார் மணிவாசகம்.


தொடரும்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எடை -- Empty Re: எடை --

Post by T.N.Balasubramanian Tue Jul 28, 2020 9:18 pm

------4

மறுநாள் மணி வாசகம் சொன்னபடி  முத்து வரவில்லை! பொழுது சாய்ந்துவிட்ட்து.  “பார்த்தியா! நான் சொல்லை! அவன் வர மாட்டான்னு!” என்று அமர்த்தலாக சொன்னார்.
”இன்னிக்கு வேற லைன்ல போயிருப்பார்… நாளைக்கு வருவார்னு நினைக்கிறேன்.”
”உன் நினைப்பை காயப்போடு…!  நமக்கு  நாலு கிலோ பேப்பர் மிச்சம் ஆச்சு! இல்லேன்னா அம்பது ரூபா நஷ்டம் ஆகியிருக்கும்”.
லட்சுமி தலையில் அடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
மறுநாள்  அதிகாலை வேலையிலேயே கேட் கதவு திறக்கவும்  செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்த மணி வாசகம்  அப்படியே போட்டுவிட்டு கவனித்தார். முத்து உள்ளே நுழையவும் தன் கணிப்பு பொய்யாகிவிட்டதே என்று வருத்தமுடன்
”என்னய்யா! அம்பது ரூபா கொண்டு வந்துட்டியா?”
”இல்லீங்கய்யா.. நான் வந்தது”…
”தான் நினைத்தது சரிதான் என்று உள்ளூக்குள் பெருமிதப்பட்டுக்கொண்டு  அம்பது ரூபா இல்லாம பேப்பர் போட முடியாது,,,! ”என்றார்
”சரிங்கய்யா! நான் அம்பது ரூபா கொடுத்திட்டே பேப்பர் எடுத்துக்கறேன் . ஆனா.”
”என்னய்யா ஆனா?”
”முந்தா நாள் நீங்க போட்ட புக்ஸ்களை எடுத்துட்டு போனேன். அதுல சில பாட புஸ்தகமும் இருந்தது. அதை கடையிலே போடறதை விட  பழைய புத்தக கடையில கொடுத்தா கொஞ்சம் ரூபா அதிகம் கிடைக்கும்னு தனியா எடுத்து வைச்சேன். பேப்பரை மட்டும் கடையிலே போட்டுட்டு வீட்டுக்கு போய் புக்ஸ்களை புரட்டினேன். அப்ப அதிலே இந்த  காசு இருந்துச்சுய்யா  என்று இரண்டு ஐநூறூ ரூபா நோட்டுக்களை நீட்டினார் முத்து.
மணிவாசகம் அதிர்ந்து போனார். ஐம்பது ரூபாயை நம்பாத நான் எங்கே ஆயிரம் ரூபாயை அதுவும் எப்போது வைத்து நான் மறந்து போன அந்த ரூபாயை திருப்பித்தரும் முத்து எங்கே? மிகவும்  எடையில் மிகவும் தாழ்ந்து போய்விட்டோமே என்று வருத்தம் அவர் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
மனம் தெளிவடைந்தவராய்  ”பெரியவரே! புத்தகத்தை எடைக்கு போட்டப்புறம் அது உங்களுக்குத்தான் சொந்தம்.  அதுலே பணம் இருந்தாலும் அது உங்களோடதுதான். நீங்களே வச்சுக்கங்க!”
“நீங்க பெரிய மனசோட  இந்த பணத்தை கொடுத்தாலும் உழைக்காம  இவ்ளோ பணம் கிடைச்சா அப்புறம் அது  என் மனசை மாத்திடும். இதே மாதிரி தினமும் கிடைக்காதான்னு ஏங்க வைக்கும். அப்புறம் என் நேர்மையை கொன்னுடும். வேணாங்கய்யா! இதை நீங்களே வச்சிக்குங்க! ”என்று மணிவாசகம் கையில் ரூபாயை திணித்துவிட்டு  கிளம்பினார் முத்து.
”பெரியவரே ஒரு நிமிஷம்!  நேத்து எடை போட்டு வைச்ச புத்தகத்தையாவது எடுத்துட்டு போங்க!”
”அம்பது ரூபா கிடைச்சதும் கண்டிப்பா வரேன்! ”சொல்லிவிட்டு அவர் நடக்க
அப்படியே உறைந்து போய் நின்றார் மணிவாசகம்....

-----------------------------------------------

நன்றி  வாட்ஸப்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எடை -- Empty Re: எடை --

Post by ayyasamy ram Tue Jul 28, 2020 10:31 pm

எடை -- 3838410834 எடை -- 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எடை -- Empty Re: எடை --

Post by விமந்தனி Tue Jul 28, 2020 11:36 pm

சூப்பருங்க மிக, மிக அருமையான கதை. இதை படிக்கும் போது எனக்கும் ஒரு நிகழ்வு நினைவிற்கு வருகிறது.

ஒரு பேப்பர்காரருடன் ஏற்பட்ட என்னுடைய அனுபவம்;

ஒரு பேங்க் பாஸ்புக் மற்றும் அதன் ATM கார்டு எங்கோ வைத்து விட்டு வெகுநாட்கள் தேடிக்கொண்டிருதேன். கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து வேறு வீடு மாறும் போது சீர்செய்த சில அட்டைபெட்டிகளை பரணில் அடுக்குவதற்கு முன் வேண்டாதவற்றை கழித்து பேப்பர் காரருக்கு போட்டுவிட்டேன். வழக்கமாய் பேப்பர் எடுப்பவர் தான். ஒரே ஆளிடம் பேப்பர் போடுவதை தவிருங்கள் என்ற பாதுகாப்பு பிரச்சாரத்தையும் தாண்டி, பல வருடங்களாகவே அவரிடம் தான் பழைய பேப்பர்களை போடுவேன். எடையில் எல்லாம் கறார் இல்லை. பேப்பரை எடுத்துக்கொண்டு எவ்வளவு ரூபாய் கொடுக்கிறாரோ அதை வாங்கிக்கொள்வேன். அன்றும் அப்படித்தான் நடந்தது. மறுநாளே, அந்த பேப்பர் காரர் நான் வருடக்கணக்கில் தேடிக்கொண்டிருந்த பாஸ்புக்கையும், கார்டையும் கொண்டுவந்து கொடுத்தார். எனக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி, எப்போது அந்த பாஸ்புக் அதில் போனது என்றே தெரியவில்லை. அதைவிட ஆச்சர்யம், அதை அந்த பேப்பர்காரர் கொண்டுவந்து கொடுத்தது.


எடை -- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎடை -- L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எடை -- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எடை -- Empty Re: எடை --

Post by T.N.Balasubramanian Wed Jul 29, 2020 6:01 pm

சில வாடிக்கைக்காரர்கள் வைத்துக்கொள்வதால் நன்மைகள் நிச்சயமாக உள்ளன. மறுக்கமுடியாது.

எப்படி, எப்போது அந்த பாஸ்புக் அதில் போனது என்றே தெரியவில்லை. 


பாஸ் புக் ஆனதால் பாஸ் ஆகி போய்விட்டது--- தலைமை ஆசிரியைக்கு  தெரியவில்லையே  சோகம் சோகம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எடை -- Empty Re: எடை --

Post by விமந்தனி Thu Aug 06, 2020 10:10 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


எடை -- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎடை -- L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எடை -- EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எடை -- Empty Re: எடை --

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum