ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?

4 posters

Go down

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா? Empty காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?

Post by சிவா Wed Jul 01, 2020 9:01 am

பூமி ஒரு நிரந்தர கோடைக் காலத்திற்கு தயாராகி வருகிறது. அலாஸ்காவின் வெப்ப நிலை நியூயார்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள் புலம்புகிறார்கள். நம் நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது? டெல்லியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசை நெருங்குவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. இனி வரும் காலங்களில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியாவில் வெப்பம் கடுமையாக அதிகரிக்கும் என MIT பல்கலைக்கழகம் சென்ற வாரம் எச்சரித்திருந்தது ஞாபகம் இருக்கலாம். இதெற்கெல்லாம் தீர்வு தான் என்ன? நாம் எல்லோரும் அறிந்ததே. மரம் வளர்க்க வேண்டும். அதுவும் எவ்வளவு தெரியுமா? 17 டிரில்லியன் அதாவது 10 லட்சம் கோடி மரங்கள் நட்டால் தான் 2050 ல் நம்மால் பிழைத்திருக்க முடியும்.

எண்கள் மிகப் பெரிதாக தெரிகிறதல்லவா? ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று அதற்கான இடம் பூமியில் இருப்பதாக தெரிவித்துள்ளது. விளை நிலங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகள் தவிர்த்து பூமி முழுவதும் சுமார் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் இடம் காலியாக இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இவை மரம் வளர்க்க தகுந்த இடங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்படி நடும் பட்சத்தில் வளி மண்டலத்தில் உள்ள 25 சதவிகித கார்பன் டை ஆக்சைடை, ஆக்சிஜனாக மாற்ற முடியும். அடுத்த 100 வருடங்களுக்கு இந்த பூமி முந்தைய 100 ஆண்டுகளில் எப்படி இருந்ததோ அப்படி நம்மால் வைத்துக் கொள்ளவும் முடியும்.

இப்படி மரம் வளர்க்க ஏதுவான நாடுகளாக ஆய்வில் பட்டியலிடப்பட்டவை ரஷியா (583,000 சதுர மைல்கள்), அமெரிக்க ஐக்கிய நாடுகள் (397,700 சதுர மைல்கள்), கனடா ( 302,700 சதுர மைல்கள்), ஆஸ்திரேலியா (223,900 சதுர மைல்கள்), பிரேசில் (191,900 சதுர மைல்கள்), சீனா ( 155,200 சதுர மைல்கள்) ஆகும். இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்தால் மொத்த அமெரிக்காவின் பரப்பளவிற்கும் நாம் மரங்களை நட்டாக வேண்டும் என்பது தெளிவாகும்.

இந்த ஆய்வில் பங்கேற்ற ஸ்விஸ் பெடரல் பல்கலைகழக சூழலியல் பேராசிரியர் தாமஸ் கிரவுதர் ( Thomas Crowther ) பேசும்போது, ” காடுகளின் அடர்த்தியை அதிகப் படுத்துவதன் மூலமாக 225 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடை நம்மால் ஆக்சிஜனாக மாற்ற முடியும். கிட்டத்தட்ட நூறாண்டுகளாக மனிதர்கள் உருவாக்கிய மொத்த அளவிலான கார்பன் டை ஆக்சைடையும் இந்த திட்டத்தின் மூலம் வடிகட்டி விடலாம்” என்றார்.

காலநிலை குறித்த அரசுசார் குழு (IPCC- Intergovernmental Panel on Climate Change ) வெளியிட்டுள்ள கருத்தின் படி கூடுதலாக 3.8 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கு மரம் வளர்க்கப்பட்டால் 2050 ஆம் ஆண்டுகளில் இருக்கக் கூடிய வெப்ப நிலையை விட 2.5 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பமே இருக்கும் எனத் தெளிவு படுத்துகிறது.

இந்த ஆய்வுக்குழு கூகுள் எர்த் எஞ்சின் மூலமாக சுமார் 80,000 காடுகளை ஒருங்கிணைத்துள்ளது. இத்தனை மரக் கன்றுகளை நட்டாலும் நம்மால் உடனடியாக அதற்கான பலனை அனுபவிக்க முடியாது என்கிறார் கிரவுதர். ஆனால் நம்மால் செய்யக் கூடிய ஒன்று அது மட்டும் தான் என்பது பேருண்மையாக கன்னத்தில் அறைகிறது.


காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா? Empty Re: காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?

Post by ராஜா Thu Jul 02, 2020 2:13 pm

இதுக்காக தான் ஆண்டவன் கொரோனாவை பூமிக்கு அனுப்பி காற்று மாசுபடுதலை குறைத்து விட்டுள்ளான் போல , இந்த 6 மாதத்தில் பூமியின் காற்று மாசுபாடு சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளதாம். இதை பார்க்கும் பொது இன்னும் கொஞ்சநாள் கொரோனா இருக்கலாம் என்று தோன்றுகிறது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா? Empty Re: காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?

Post by T.N.Balasubramanian Fri Jul 03, 2020 6:39 pm

இந்த மாசற்ற சூழ்நிலை கொரோனா இல்லாமலே வந்தால் வரவேற்போம்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா? Empty Re: காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?

Post by ராஜா Sat Jul 04, 2020 3:42 pm

எப்படியோ வந்தா சரி தானே ஐயா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா? Empty Re: காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?

Post by krishnaamma Sun Jul 05, 2020 1:16 pm

//17 டிரில்லியன் அதாவது 10 லட்சம் கோடி மரங்கள் நட்டால் தான் 2050 ல் நம்மால் பிழைத்திருக்க முடியும்.//

வாவ்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா? Empty Re: காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum