புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
91 Posts - 61%
heezulia
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
1 Post - 1%
viyasan
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
1 Post - 1%
eraeravi
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
283 Posts - 45%
heezulia
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
19 Posts - 3%
prajai
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
8 Posts - 1%
Guna.D
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
7 Posts - 1%
mruthun
‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_m10‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2020 5:26 am

‘ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி…’ Tamil-Daily-News-Paper_51493036747

மூலவர் ரங்கநாதர் சந்நதிக்குப் பக்கத்தில் கல்வித்
தெய்வங்களான சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர் இருவரும்
தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறார்கள்.

சமீப சில மாதங்களாகத்தான் இந்த தரிசனம் பக்தர்களுக்குக்
கிடைத்திருக்கிறது என்கிறார்கள். இதற்குக் காரணமானவர்,
வாகன மண்டபத்தை, பொது மக்கள் மண்டபமாக்கி, அங்கிருந்து
பக்தர்கள், வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ரத்ன அங்கியோடு
உலா வரும் ரங்கனை தரிசிக்க வழிசெய்து கொடுத்தாரே,
அதே ‘ஸ்ரீரங்கத்து ராமானுஜரான’ ஜெயராமன்தான்.

அதோடு, மாதக் கணக்கில் திறக்கப்படாதிருந்த பல அறைகளை
இவர் திறந்து பார்த்து, அவற்றுக்குள்ளிருந்த பொருட்களுக்கு
விடுதலை கொடுத்ததாகவும் சொல்கிறார்கள். அதாவது
அரங்கனுக்கு பக்தர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வஸ்திரங்கள் மற்றும்
பிற பொருள் காணிக்கைகள் எல்லாம் அங்கே குவிந்திருந்தன என்றும்
அவற்றை ஜெயராமன் வெளியே எடுத்து, பொது ஏலத்தில் விட்டு,
லட்சக்கணக்கான ரூபாய் வருமானத்தை கோயிலுக்கு ஈட்டிக்
கொடுத்திருக்கிறார் என்றும் புகழ்கிறார்கள்.

பணி ஓய்வு பெற்றுவிட்ட இவருக்கு அடுத்தபடியாக பொறுப்பேற்க
வருபவர்களும் இவரைப் போலவே கோயில் மற்றும் பக்தர்கள்
நலனுக்காக மட்டுமே உழைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்,
அரங்கன் அதற்கு ஆசியளிப்பார் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

சரி, இப்போது அரங்கனை தரிசிக்கச் செல்வோம். பள்ளிகொண்ட
இந்தப் பெருமாளைப் பற்றிப் பிறர் சொல்லக் கேட்டவர்கள், பல பு
த்தகங்களில் படித்தவர்கள் யாரேனும் முதல்முறையாக அரங்கனை
தரிசிப்பார்கள் என்றால், நீண்டு, நெடுங்கிடையாய், பிரமாண்ட
வடிவத்தில் அவரை எதிர்பார்க்கக்கூடும்.

ஆனால், 15 அடி நீளத்தில் அவர் சயனித்திருப்பதைப் பார்த்து சற்றே
ஏமாற்றமடையவும் கூடும். ஆனால் 180 டிகிரியில் அரைவட்டப்
பார்வையில் பெருமாளை முழுமையாகப் பார்க்க முடிகிற சந்தோஷம்,
அந்த ஏமாற்றத்தை விரட்டிவிடும்.

திருவனந்தபுரத்தில் உள்ளதுபோல மூன்று வாயில்களின் வழியே
மூன்று பகுதிகளாக அனந்தபத்மநாப சுவாமியை தரிசிப்பது ஒரு
சந்தோஷம் என்றால், இங்கே, இப்படி ஒரே பார்வையில் அவரை
முழுமையாகக் காணக் கிடைப்பது, கொடுத்து வைத்த புண்ணிய
பலன் என்றுதான் சொல்ல வேண்டும்.

இக்ஷ்வாகு வம்சத்தாரால், குறிப்பாக ஸ்ரீராமனால் வணங்கப்பட்ட
தெய்வம் என்ற புராண உண்மை விஸ்வரூபமாக மனசுக்குள் ஓங்கி
நிற்க, நம் பார்வைக்குள்ளும் அடங்காத பிரமாண்டமாகத்தான் இந்த
அரங்கன் தோன்றுகிறார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2020 5:28 am

அர்ச்சகர் காட்டும் தீபாராதனை ஒளியில் ஆதிசேஷன்
குடைபிடிக்க, அதன் தலைகளுக்கடியில் தன் சிரசைக்
கிடத்தி, மலர்ந்த முகம், திருநாபி அதிலிருந்து எழுந்தருளும்
பிரம்மன், இடை, மேற்கால்கள், கணுக்கால்களை
அலங்கரிக்கும் அழகிய கொலுசுகள், பாதங்கள் என்று முழுநீள
தரிசனம் நம் மனதை நிறைவிக்கிறது.

அந்நியரால் இந்த மூலவருக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ
என்று பயந்துதான் இவர் கருவறை முன் சுவர் எழுப்பி
மறைத்திருக்கிறார்கள் என்ற சரித்திரச் சம்பவம் நினைவுக்கு
வருகிறது. கூடவே திருமங்கையாழ்வாரின் பாடல்களில் ஒன்றும்
நினைவில் மலர்கிறது:

இரும்பனன் றுண்ட நீரும்
போதருங் கொள்க, என்றன்
அரும்பிணி பாவ மெல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பமர் சோலை சூழ்ந்த
அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு
கொண்டென்
கண்ணினை களிக்கு மாறே

‘மெல்லிசையாய் வண்டுகள் எந்நேரமும் ரீங்கரிக்கும் வனப்புமிகு
சோலைகள் சூழ, அரங்கத்தில் ஆனந்தமாகப் பள்ளிகொண்டிருக்கும்
எம்பெருமான், கரும்பைப்போல இனிப்பானவன். இந்தப் பேரருளைக்
கண்டவுடனேயே, சூடான இரும்பில் பட்ட நீர்த்துளியானது எப்படி
அப்போதே ஆவியாகி மறைகிறதோ, அதுபோல என் பாவமெல்லாம்
என்னைவிட்டு அக்கணமே நீங்கிவிட்டது’ என்று அனுபவித்து
நெகிழ்கிறார், திருமங்கையாழ்வார்.

திருமால் திருத்தொண்டே தன் பிறப்பின் நோக்கம் என்ற வகையில்,
அவனன்றி வேறு சிந்தனையின்றி வாழ்ந்த இந்த ஆழ்வாரே, தன்
பாவமெல்லாம் ஆவியாகிவிடுவதை உணர்கிறார் என்றால், நாமெல்லாம்
எம்மாத்திரம்!

நம் பாவ-புண்ணிய விவரங்களை அவன் சந்நதி முன்னால் நம்மால்
கணக்கிட்டுக்கொண்டிருக்க முடியாது என்றாலும் அவன் தரிசனம்
கண்டு மெய்யுருகி, கண்களில் நீர் தளும்புவது மட்டும் நிச்சயம்.

உற்சவ விக்ரகம் என்பது வீதி உலா வரும் தெய்வம். தன்னை வந்து
கோயிலில் தரிசிக்க முடியாத பக்தர்களின் பக்தி ஏக்கத்தைத் தீர்க்க
பகவானே வீதி உலா வந்து, தன்னை தரிசிக்க வைத்து, அவர்களை
சந்தோஷப்படுத்தும் முறை. ஆனால் இந்த அரங்கன் உற்சவ விக்ரகமோ,
ஆக்கிரமிப்பாளர் மற்றும் ஆதிக்கம் செலுத்த விழைந்த பிற மதத்தினர்
கண்களில் படாமல் இருப்பதற்காக ஒளித்து, ஒளித்து ஊர், ஊராக
எடுத்துச் செல்லப்பட்டவர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2020 5:30 am


இப்படி எல்லா தடைகளையும் மீறி, பல வருடங்கள் சொந்த
மண்ணைவிட்டு வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று, பக்தர்கள்,
அடியவர்களின் அன்பாலும் பக்தியாலும் பாதுகாக்கப்பட்டு,
தன் வீட்டிற்கே திரும்பி வந்து, தன்னை தரிசிக்க வரும்
பக்தர்களுக்கு ஆறுதலும் ஆசியும் வழங்கிக்கொண்டிருக்கிறார்.

மூலவரின் சுதை உருவம், புனுகு சட்டம் என்ற விசேஷ தைலத்தால்
மெருகு கொண்டு பளபளக்கிறது. ஆண்டுக்கு இரண்டு முறை
இவருக்கு இவ்வாறு தைலகாப்பு நடைபெறுவதாகச் சொல்கிறார்கள்.

ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளன்று பெரிய திருமஞ்சனம்
நடைபெறும்; ஆவணி மாத திருப்பவித்ர திருநாளின்போது
இன்னொரு திருமஞ்சனம்.

இந்த இரு நாட்களிலும் பெருமாளின் மேனி முழுவதும் புனுகுத் தைலம்
பூசுகிறார்கள். பெரிய திருமஞ்சன நாளிலிருந்து 45 நாட்களுக்கும்
திருப்பவித்திர நாளிலிருந்து 45 நாட்களுக்கும் பெருமாளின் திருவடியை
தரிசிக்க இயலாது என்கிறார்கள்.

மற்ற நாட்களில் கொலுசு அணிசெய்ய அரங்கனின் திருப்பாதம் நம்
சரணாகதியை ஏற்றுக்கொள்கிறது. அரங்கனுக்கு தினமும் 33 வகை
உணவுப் பொருட்கள் நிவேதனம் செய்யப்படுகின்றன என்று தகவல்
கிடைத்தது.

தேங்காய்த் துருவலில் வாழைப்பழம் கலந்து செய்யப்பட்ட ஒரு நிவேதனப்
பொருள் இப்போது இந்தப் பட்டியலில் இல்லை என்கிறார்கள்.

அதாவது கிராமங்களிலிருந்து வரும் பக்தர்கள் தம் தோட்டத்தில்
விளைந்த தேங்காய் மற்றும் வாழைப்பழங்களைக் கொண்டு வந்து,
கோயிலில் அமர்ந்து தேங்காயை உடைத்து, துருவி, பழத்தை உரித்துக்
கலந்து அரங்கனுக்குப் படைப்பார்களாம்!

ஏழை, பாழைகளின் பக்திக்கும் ரங்கன் இவ்வாறு மதிப்புக் கொடுப்பது,
ஸ்ரீராமானுஜர் வகுத்துத் தந்த ஒழுங்குமுறைதான் என்கிறார்கள்.
கருவறைக்கு முன் பவித்ர மண்டபத்தில் அரங்கனை நோக்கியபடி
ஆஞ்சநேயர் சந்நதி கொண்டிருக்கிறார்.

பெருமாளுக்கு திருமஞ்சன கைங்கரியம் செய்வதான பக்தர்களின்
வேண்டுதல், இந்த ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம்
நிறைவேற்றப்படுகிறது. கருவறை மண்டபத்தில் ஒரு தூணில்,
விஷ்ணு துர்க்கை அழகுற தரிசனம் தருகிறாள். அன்னைக்குப் பட்டு
உடுத்தி, அலங்காரம் செய்திருக்கிறார்கள்.

பக்தர்களின் பிரார்த்தனை இங்கே சிறுசிறு அகல் விளக்குகளாக,
மலர்களாக வெளிப்படுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2020 5:34 am

மூலவர் சந்நதிக்குப் பின்னால் ஒரு கிணறு இருக்கிறது.
கோடைகாலத்தில் இந்தக் கிணற்றிலிருந்து நீர் இறைத்து,
சந்நதியின் பின்சுவரில் இருக்கும் துவாரம் வழியாக
உள்ளே கொட்டுவார்கள்;

இந்த நீர் அரங்கனை சூழ்ந்துகொண்டு கோடை வெம்மை
தாக்காமல் அவரைக் குளிர்விக்கும். பிறகு நடு இரவில்,
அதே பின் சுவர் வழியாக அந்த நீரை வெளியேற்றுவார்கள்.

இவ்வாறு வெளியே வரும் நீர் ஒரு சிறு அருவிபோல விழ,
அதனடியில் அமர்ந்து பக்தர்கள் குளிக்கவும் செய்கிறார்கள்
என்றும் ஒரு தகவல் கிடைத்தது. ஆனால் இந்த நீராடலுக்கு,
கோடை காலத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும்தான்
அனுமதி என்றும் சொல்கிறார்கள்.


சந்நதியைச் சுற்றி வந்தால் மேலே அண்ணாந்து பார்த்து தங்க
விமானத்தை தரிசிக்கலாம். பளபளவென்று மின்னும் இந்த
விமானத்தையும், அதனடியில் அரங்கனை நம் தரிசனத்துக்காக
விட்டுச் சென்ற விபீஷணனுக்கு நன்றி சொல்ல மனம் விழைகிறது.

அவனை அப்படி நிர்ப்பந்தித்த அரங்கனுக்கு விசேஷ நன்றி!
தமிழகத்திலேயே மிக உயர்ந்த, 13 நிலைகள் கொண்ட கோபுரம்
வழியாகவே கோயிலைவிட்டு வெளியே வரலாம். உள்ளே நுழையும்
போது கண்ணில் படாத சில விஷயங்கள் இப்போது பட்டன.

குறிப்பாக அந்த கோபுரத்தின் கீழ்த்திசை நிலைக்காலில் ஒரு சிற்பம்.
நீண்ட அங்கி, தோளில் துண்டு, கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கும்
அந்தச் சிற்பம், அந்த கோபுரத்தை மட்டுமல்ல, ஸ்ரீரங்கக் கோயிலின்
பெருமையையும் தாங்கி நிற்கிறது.

அந்தச் சிலை, அப்பாவய்யங்கார் என்ற ‘ஸ்ரீகார்யம்’ என்ற, கோயிலின்
மூத்த நிர்வாகியுடையது. கோபுரத்தில் சிலை வைக்குமளவுக்கு அவர்
என்ன செய்தார்? கோயில் நன்மை கருதி அதிகபட்சமாக உயிர்த்தியாகமே
செய்திருக்கிறார்!

இந்த விவரத்தை, இந்த சிலைக்கு மேலே உள்ள கல்வெட்டு விவரிக்கிறது:

‘‘சுபமஸ்து. சௌமிய வருஷம், தை மாதம் நாலாந்தேதி, வெள்ளிக்கிழமை
நாள் ஸ்ரீரங்கநாத சுவாமிக்குப் படித்தனம் ஒன்றும் நடக்காமல் மிகவும்
அன்னியாயம் பண்ணுகையில் குடுக்க மாட்டாதே இந்த திருக்கோவிரத்தில்
ஏறி விழுந்து இறந்த காலம் எடுத்த அழகிய மணவாளதாசன் ஸ்ரீகாரியம்
அப்பாவய்யங்கார். இவருக்கு சுவாமி யெக்காளைகள், திருதேற் புறப்பாட்டு
முதலான அதிய வரிசை பிரசாதித்தருளி பிரம்ம மேத சமஸ்காரம்
பண்ணிவித்தருளி முழுப்படித்தனம் கொண்டருளினார். இப்படி நடந்த முழு
படித்தனத்துக்கு விரோதம் பண்ணினவன் ரெங்கத் துரோகியாய் போகக் கடவன்.
அனுகூலம் பண்ணினவன் ஸ்ரீலட்சுமி பரிபூர்ண கடாட்ச பாக்கியஸ்தனாக
இருக்கக் கடவன்….’’

இந்த அப்பாவய்யங்கார் மட்டுமல்ல, இதே கோயிலின் கிழக்கு கோபுரமான
வெள்ளை கோபுரத்திலிருந்தும் இரண்டு ஜீயர்களும் பெரியாழ்வார்
என்பவரும் கீழே குதித்து ரங்கனுக்காக உயிர் துறந்திருக்கிறார்கள் என்ற
கூடுதல் தகவலும் கிடைத்தது. இவர்களுக்கும் கிழக்கு கோபுரத்தில் சிலைகள்
வைக்கப்பட்டிருக்கின்றன.

இப்படி கோபுரத்திலேறி தம் உடலைத் துறந்த (யுபேக்ஷித்த) இவர்களுக்கு
அப்போதே கோயில் நிர்வாகம் மிக உயர்ந்த மரியாதை செய்திருக்கிறது.
இப்படி உயிர் நீத்தவர்களுக்கு ‘பிரம்ம மேத ஸமஸ்காரம்’ செய்து
வைத்திருக்கிறார்கள். அதாவது, வைகுண்டத்திலிருந்து வந்த பிரம்ம ரதத்தில்
இவர்களுடைய ஆன்மாவை ஏற்றி, வைகுண்டத்துக்கே அனுப்பி வைக்கும்
மரியாதை.

ஒரு தேர் வடிவில் பிரம்ம ரதத்தைத் தயாரித்து அதை கோயிலைச் சுற்றி நான்கு
வீதிகள் வழியாக இழுத்து வந்து, இப்படி இறந்தோர் உடல்களை அந்த ரதத்தின்
ஏற்றி வைத்து, ஊர்வலமாகச் செல்வார்கள். அப்போது கோயிலில் எக்காளம்
ஊதப்படும்.

ஸ்ரீரங்கனின் பிரசாதமாக தீர்த்தம், பரிவட்டம், மாலை ஆகியன கோயிலிலிருந்து
அளிக்கப்படும். மடைப்பள்ளியிலிருந்து கொண்டுவரப்படும் நெருப்பால்
அவர்களுக்கு ஈமக்கிரியை முடித்து திருநாடு (வைகுண்டம்) எழுந்தருளச் செய்வார்கள்!

எத்தனை நாள், எத்தனை முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்தாலும், திரும்பிப்
போகும்போது இன்னும் ஏதோ ஓரிரு பகுதிகளை உள்ளே பார்க்க விட்டுப்
போயிற்றோ என்ற சந்தேகமும் ஏக்கமும் எழுவது தவிர்க்க முடியாதது. அதாவது,
இந்தக் கோயிலுக்குள் நுழைந்துவிட்டால், வெளியே போகவே மனம் விரும்பாது
என்பதுதான் அந்த ஏக்கத்தின் உண்மையான பொருள்.

ஸ்ரீரங்கம் போய் அரங்கத்தானை தரிசனம் செய்யும்வரை கீழ்க்காணும் தியான
ஸ்லோகத்தைச் சொல்லிக்கொண்டிருப்போம்:

ஸ்ரீரங்கே ரங்கநாதஹ பணிபதிசயநோ தக்ஷிணாம் வீக்ஷமாணஹ
க்யாதம் சீதாம்சு தீர்த்தம் ப்ரணவபரிணதம் தத்விமானம் ச திவ்யம்
ஆத்யம் வ்யக்தம் ஸ்வயம் ச ஸ்தலமதி சுபதம் நாயகீ ரங்கபூர்வா
பூமேர் வைகுண்ட மேதத் ஜகதி விஜயதே ஸஹ்யஜேந்து ப்ரஸன்னஹ


பொதுப் பொருள்:

திருவரங்கத்தில் ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்ட கோலத்தில் திகழும்
ரங்கநாதா நமஸ்காரம். தென்திசை நோக்கும் பெருமாளே, புகழ் மிகுந்ததும்
குளிர்ந்தும் விளங்குகின்ற சந்திர புஷ்கரணிக் கரையில் சேவை சாதிப்பவரே
நமஸ்காரம்.

சிறந்த பிரணவாகார விமானத்தின் கீழ் தானாகத் தோன்றி, இத்திவ்ய
தேசத்தைப் புனிதப்படுத்திய, அரங்கநாயகித் தாயார் சமேத பெருமாளே,
நமஸ்காரம். இந்தத் திருவரங்கத்தை பூலோகத்து வைகுந்தமாக்கிய அண்ணலே
நமஸ்காரம்.
-
------------------------------
பிரபுசங்கர்
நன்றி- தினகரன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக