ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்.....

2 posters

Go down

எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்..... Empty எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்.....

Post by சாந்தன் Fri Jan 08, 2010 1:53 pm

எதை எப்படி சாப்பிடலாம்?

மனிதனின்
இயக்கத்துக்கு எரிபொருள், உணவு. அது வெறும் ஆற்றல் தருவது மட்டுமல்லாது,
அதன் சுவை மனதுக்கு மகிழ்ச்சியை, புத்துணர்ச்சியைத் தருகிறது.

சமையல்
எப்படி ஒரு கலையோ... அதேபோல சாப்பிடுவதும் ஒரு கலைதான். எதை, எவ்வளவு,
எப்படி, எந்தப் பொழுதில் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என, உணவு பற்றிய
'டூஸ் அண்ட் டோன்ட்ஸ்'-ஐ வரும் பக்கங்களில் பரிமாறியுள்ளோம்.

சுவையுங்கள்!

வெஜிடேரியனில், நீங்கள் எந்த வகை?!


1.
வெஜிடேரியன்களை மூன்று விதமாகப் பிரிப்பார்கள். லாக்டோ ஓவோ வெஜிடேரியன்கள்
(Lacto-ovo-vegetarian)... இவர்கள் சிக்கன், மட்டன், மீன் எல்லாம் சாப்பிட
மாட்டார்கள். ஆனால்... முட்டையும் பாலும் சேர்த்துக் கொள்வார்கள். லாக்டோ
வெஜிடேரியன்கள் (Lacto vegetarian)... இவர்கள் இறைச்சிக்கும் முட்டைக்கும்
நோ சொல்வார்கள். ஆனால், பால் மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். வேகன்ஸ்
(Vegans)... இவர்கள் அக்மார்க் வெஜிடேரியன்கள்.

எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்..... 135b

2.
வெஜிடேரியன்களின் உணவு, முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், விதைகள்,
உலர் பருப்புகள் (Nuts) எனும் வரிசையில் இருக்க வேண்டும். அதாவது தானியம்
அதிகம், நட்ஸ் ரொம்ப ரொம்ப கம்மி எனும் வரிசையில்.

3. லெகூம்ஸ்
(Legumes) சாப்பிடலாம். 'அதென்னடா லெகூம்ஸ்?' என குழம்ப வேண்டாம். உலர்ந்த
பீன்ஸ் பருப்புகளைத்தான் அப்படி அழைக்கிறார்கள். மிகவும் ஆரோக்கியமான சைவ
உணவு இது.

4. ஒவ்வொரு கலர் காய்கறியிலும் ஒவ்வொரு
வகையான சத்து உண்டு. அதுவும் அடர் நிறங்களை வாங்குவது அதிக பயனளிக்கும்.
எனவே, நிறக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

5.
பழங்களில் இருக்கும் இனிப்பு, அளவோடு சாப்பிட்டால் தீங்கு விளைவிக்காது.
ஆனால், அதனுடன் சர்க்கரை, செயற்கை வண்ணங்கள் எல்லாம் சேர்த்தால் அது
உடலுக்குத் தீயதாகி விடும். எனவே, பழங்கள் சாப்பிடுங்கள்... பழச்சாறை
தவிருங்கள்.

6. கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் சூப்களை ஒதுக்கி, வீட்டிலேயே காய்கறி சூப் செய்து சாப்பிடுங்கள்.

7. இப்போதெல்லாம் ஃபாஸ்ட் ஃபுட் மற்றும்
வெளிநாட்டு இறக்குமதிக் கடைகளில் எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளோடு
சீஸ், பட்டரைத் தொட்டுச் சாப்பிடுவது மிகப் பிரபலமாக இருக்கிறது. ஆனால்,
இந்த சீஸ், பட்டர் போன்றவை சிக்கனுடன் ஒப்பிட்டால்... சுமார் பத்து மடங்கு
அதிக கொழுப்பு உடையவை. இது உடல் எடை அதிகரிக்கவும், கேன்சர் போன்ற நோய்கள்
வந்து குடியேறவும் காரணமாகிவிடும். எனவே, தவிர்க்க வேண்டியது அவசியம்.

8.
குழந்தைகள் பீட்ஸா கேட்டு அடம் பிடிக்கிறார்களா? தவிர்க்க முடியாத அந்த
சந்தர்ப்பத்தில், 'தின் கிரஸ்ட் பீட்ஸா'-வை தேர்ந்தெடுங்கள். எக்ஸ்ட்ரா
சீஸ், அது, இது... என சிக்கலைப் பெரிதாக்கி விடாதீர்கள்.

9. சதா
குளிர்பானங்களையே குடித்துக் கொண்டிருப்பவர்கள், மாபெரும் ஆபத்தை விலைக்கு
வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். செயற்கை நிறமி, இனிப்பு, எக்கச்சக்க கலோரி
என குளிர் பானங்கள் உடலுக்கு சர்வ நிச்சயமாக சிக்கல் உண்டாக்குபவை.
'ஆஸ்டியோபோரோசிஸ்' எனும் எலும்புச் சிதைவு, பற்சிதைவு, உடல்பருமன்
அதிகரித்தல், இதய நோய் என பல நோய்களை இது அழைத்து வரும்.

10.
இப்போது இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் குழந்தைகளைக் குறி வைத்து விற்கப்படுகிறது.
ஆனால், நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவு கிடையாது. ஒரு நாள் ஒரு மனிதனுக்குத்
தேவை 1,200 மில்லி கிராம் சோடியம் மட்டுமே. ஆனால், சில வகை நூடுல்ஸ்களில்
1,560 முதல் 3,000 மில்லி கிராம் வரை சோடியம் இருக்கிறது. கூடவே,
இதிலிருக்கும் 'மோனோசோசியம் குளூடமேட்' எனும் பொருள், அல்ஸீமர் போன்ற
மாபெரும் நோய்களுக்கு வாசலைத் திறந்துவிடக்கூடும் என எச்சரிக்கிறது
எஃப்.டி.ஏ (FDA-Food and Drug Administration).

11. சில வகை
சாக்லேட்களைச் சாப்பிட்டாலே போதும்... வேறு உணவே தேவை-- யில்லை என்று
நினைத்து அடிமையாகிவிடாதீர்கள். அவற்றில் சில வைட்ட--மின்கள் இருந்தாலும்,
அவையும் அதிக இனிப்பு சாக்லேட் போலதான். எனவே ஐஸ்கிரீம், சாக்லேட்...
இவற்றையெல்லாம் ஆசைப்பட்டால் எப்போதேனும் சுவைக்கலாமே, தவிர அடிக்கடி
சாப்பிடக் கூடாது.

எடை குறைய வேண்டுமா?!

12.
நிறைய தண்ணீர் குடியுங்கள். கலோரியே இல்லாத ஒரே பானம் அதுதான். தண்ணீர்
குடிக்க போரடித்தால் மோர், இளநீர், தர்பூசணி என மாறி மாறி சாப்பிடலாம்.

13.
காலை உணவுக்கு அதிக நார்ச்சத்துள்ள உணவுகள் சாப்பிடுங்கள். ஓட்ஸ்
சாப்பிடலாம். சப்பாத்தி, இட்லி, உப்புமா போன்றவையும் நல்ல சாய்ஸ்.

14.
போரடிக்கும்போது சாப்பிடுவதற்கு பக்கத்திலேயே ஒரு பிஸ்கட், சிப்ஸ், ஸ்நாக்
பாக்கெட் வைத்திருக்க வேண்டாம். அதற்குப் பதிலாக நல்ல திராட்சை பழம் நூறு
கிராம் வைத்திருங்கள். நூறு கிராம் திராட்சையில் வெறும் 70 கலோரிதான்
உண்டு. அதற்காக அதை அதிகமாக விழுங்கவும் வேண்டாம். காரணம், அதில் சுகர்
அதிகம்.

15. தக்காளி, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், குடமிளகாய்,
சைனா கோஸ் (Lettuce) வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து, சாலட் செய்து
சாப்பிடுங்கள். கொஞ்சம் தயிர், அல்லது லெமன் சாறு தெளிக்கலாம். இதை வைத்து
சாண்ட்விச் செய்து சாப்பிட்டால் பசியும் பறந்து போகும். முக்கியமான
விஷயம்... சாலட்டில் பட்டர், சீஸ் என வேறு சமாசாரங்களைத் தடவாதீர்கள்.

எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்..... 137a

16.
முளைவிட்ட தானியங்களை அதிகம் சாப்பிடலாம். உடலுக்கு உடனடி சக்தி தருவதில்
இவை சிறப்பானவை. பீன்ஸ் விதைகள், பச்சைப் பட்டாணி போன்றவை சிறந்தது.

17.
தயிர் நல்லதுதான். ஆனால், அது அதிக கொழுப்-பில்லாத பாலிலிருந்து தயாரானதாக
இருப்பது முக்கியம். கொழுப்பு நீக்கிய பாலை வாங்கி, அதில் தயிர்
உண்டாக்கிச் சாப்பிடுங்கள். அது புரோட்டீன், வைட்டமின், கால்சியம் என பல
நன்மைகள் நிறைந்தாக இருக்கும்.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்..... Empty Re: எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்.....

Post by சாந்தன் Fri Jan 08, 2010 1:55 pm

கவனம்... இவை கேன்சர் தரும் உணவுகள்!

18. சிவப்பு இறைச்சிகளை ஒதுக்குங்கள். அவை ஆகவே ஆகாது. தவிர்க்க முடியாத சூழலில் கொஞ்சம் போல் சாப்பிட்டுவிட்டு, நகர்ந்துவிடுங்கள்.

19. சர்க்கரையை முடிந்த மட்டும் குறையுங்கள். அதிலும் வெள்ளை சர்க்கரை (சீனி) என்றால் வேண்டவே வேண்டாம்.

20. அதிக உப்புள்ள ஊறுகாயை நாக்கில் வைத்து சுர்ரென ரசிப்பவர்கள் உஷார். அது வயிற்றில் கேன்சரை தாரை வார்த்துவிடக் கூடும்.

21.
வறுவறு, மொறுமொறு வகையறாக்கள், 'டிரான்ஸ்' கொழுப்பு உடையவை. இவற்றை
எப்போதேனும் சுவைக்கலாமே தவிர, சாப்பிட்டுக் கொண்டே திரியக் கூடாது. அது
ஆபத்தை விரும்பி அழைப்பது போலாகி-விடும்.


குறித்துக் கொள்ளுங்கள்... இவை கேன்சரை தடுக்கும் உணவுகள்!

22.
புரோக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்
கொள்ளுங்கள். இவை உடலின் செல்களைப் பாதுகாக்கும். கேன்சர் வரும்
வாய்ப்பையும் குறைக்கும்.

23. தக்காளி, கேன்சர் வராமல் தடுக்கும்
ஒரு நல்ல உணவு. குறிப்பாக நுரையீரல், வயிறு, தோல், புரோஸ்டேட் சுரப்பி,
கிட்னி போன்ற இடங்களில் கேன்சர் வராமல் இது தடுக்கும். இத்துடன்
ஆப்ரிகாட், கொய்யா, தர்பூசணி, பப்பாளிப்பழம், கறுப்பு திராட்சை இவற்றையும்
சேர்த்துக் கொள்ளலாம்.

24. பூண்டு பற்றி நமக்குத் தெரியாததில்லை.
ஆனால், அது கேன்சரையும் எதிர்க்கும் என்பது அதன் சிறப்பம்சம். பிளட்
பிரஷரைக் குறைப்பதிலும் பூண்டு உதவுகிறது.

25. ஆன்டிஆக்ஸிடன்ட்
உணவுகளை அதிகம் உண்பது முக்கியம். பூசணி, கேரட், அடர் நிற காய்கறிகள்
போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். ஆலிவ் ஆயிலையும் கொஞ்சம்போல் சேர்த்துக்
கொள்வது நல்லது.

26. மிளகு, கேன்சருக்கு எதிரி. காரமான பெப்பர்
உடலின் கொழுப்பைக் கரைப்பதில் கில்லாடி. பெப்பரில் உள்ள 'கேப்ஸைசின்' இந்த
வேலையைச் செய்கிறது.

27. கேன்சரை எதிர்க்கும் ஒரு நல்ல உணவு...
காளான். உடலின் கொலஸ்ட்ராலையும் இது குறைக்கிறது. ஒரு காலத்தில் காளான்
நமது கலாசார உணவு. இப்போது பிளாஸ்டிக் கவர்களில் பெரிய கடைகளில் மட்டுமே
கிடைக்கிறது.
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்..... Empty Re: எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்.....

Post by தாமு Fri Jan 08, 2010 3:36 pm

நன்றி நிர்ஷன் உண்மையில் நல்ல தகவல்.... எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்..... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்..... Empty Re: எதை, எப்படி, எதற்காக சாப்பிடலாம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum