புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுகதை : திசை மாற்றியவள்! – பால் கண்ணன்
Page 1 of 1 •
-
அந்த வாட்ச்சின் நினைவு அவனை விடிய விடிய
கட்டிப்பிடித்தபடி கிடந்ததால் சூரியபிரகாஷுக்கு
அன்று இரவு முழுவதும் சரியாக தூக்கம் வரவில்லை.
கண்கள் இரண்டும் சிகப்பு நிறமாக மாறியிருந்தது.
வழவழப்பான முகம் சிதைந்திருந்தது. அதே மாதிரி
வாட்ச்சை வாங்கியே தீரணுமென்ற வைராக்கியம்
உள்ளுக்குள் அலையடித்துக்கொண்டிருந்தது.
சுறுசுறுப்புடன் எழுந்தவன் அதே எண்ணம் அவனை
ஆக்கிரமித்ததால் முகத்தில் கலக்கமும், குழப்பமும்
தின்று கொண்டிருந்தது. அவனது வித்தியாசமான
நடவடிக்கையை கண்ட அவனது மனைவி சோபியா
கேட்டாள்.
“இன்னைக்கு என்ன உங்க முகம் சரியில்லே,
என்னாச்சு உங்களுக்கு?”
“இங்கேபாரு... அதெல்லாம் உனக்கு தேவையில்லாத
விஷயம். உனக்கு குழந்தைகளை பார்த்துக்கறதும்,
சமையல் பண்றதும்தான் வேலை. என்னுடைய
பெர்ஷனல் விஷயத்திலே தலையிடக்கூடாது.
என் மனசுக்குள்ள இருக்கிறதை உன்கிட்ட பகிர்ந்துக்க
முடியாது.”
“உங்க மனசுக்குள்ள இருக்கிறதை தெரிஞ்சா நான்
என்னாலான உதவிய உங்களுக்கு செய்ய முடியும்ல?
அதான் கேட்டேன்?”
“உன்னால எனக்கு உதவ முடியாது. உனக்கு
அந்தளவுக்கு திறமையும் இல்லை.”
“என்ன, திறமை இல்லையா? கல்யாணமானதிலிருந்து
என்னைப்பத்தி ஏதாவது தெரிஞ்சிக்க நினைச்சீங்களா?
உங்க வேலைதான் உங்களுக்கு பெரிசாபோச்சு.
நான் யாரு? என் குடும்பம் எப்படி என்று மட்டும் தெரிஞ்சிக்க
ஒரு நிமிஷம் கூட நேரம் ஒதுக்காம உங்க வேலையை மட்டும்
இத்தனை வருஷமா பார்த்துக்கிட்டிருக்கீங்க...
உங்க தொழில்தான் உங்களுக்கு அவ்வளவு முக்கியமா
போச்சா?” என்ற லேசாய் கடிந்து கொண்டவள் இரண்டு
இட்லியை எடுத்து வைத்தாள்.
“எனக்கு பசிக்கலே...”
“நான் இப்போ என்ன சொல்லிட்டேன்னு பசிக்கலேன்னு
சொல்றீங்க...? காலையிலே சாப்பிடாம இருந்தா வயிறு
என்னத்துக்கு ஆகும்? வீட்ல பொருளாதாரத்திற்கு எந்த
குறையில்லாம இருந்தாலும் நம்ம கோபத்தை வயித்துக்கு
காட்டக்கூடாது.”
“நீ எதற்கெடுத்தாலும் என் சொந்த விஷயத்திலே
தலையிடுறே. எனக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.
தயவுசெய்து அதை தெரிஞ்சிக்கக்கூடாது.”
“எதுங்க சொந்த விஷயம்? நான் உங்க மனைவி.
கணவனோட நல்லது கெட்டதுல்ல சரிபாதியா
பங்கெடுக்கிறவள்தான் பொண்டாட்டி. உங்களுக்கு வயித்து
வலி, தலைவலி வந்தா மட்டும் என்கிட்ட வர்றீங்க. தைலத்தை
நெத்தியில தடவுங்கிறீங்க.
இப்படி உங்க உடம்பு சரியில்லைன்னா மட்டும் நான் வேணும்.
மனப்பிரச்னைக்கு நான் தேவையில்லே. அப்படித்தானே...?”
“இங்கே பாரு, நீ ரொம்ப பேசுறே... நீயுமாச்சு...
உன் இட்லியுமாச்சு..” என்று கடுகடுன்னு நின்னவன் இட்லியை
சாப்பிடாமல் சென்று விட்டான்.
அவனது செய்கை இது புதிதல்ல. அவனது மனசுக்குள்
இருக்கின்ற விஷயத்தை வேறு யாருக்கிட்டேயும் காட்ட
மாட்டான். முக்கியமாக மனைவிகிட்டேயும் சொல்ல
மாட்டான். கிட்டத்தட்ட ஒரு சைக்கோ மாதிரி. கல்யாணம்
நடந்ததிலிருந்து அவனது கண்ணுக்கும், மனசுக்கும்
பிடிச்சதை அடையாமல் விட்டதில்லை. காரியம்
நிறைவேறியவுடன்தான் மனைவியிடம் சொல்வான்.
பத்து வருடங்களுக்கு முன்பு சோபியாவை ஒரு பஸ்
ஸ்டாப்பில் பார்த்தவன் அவளது அழகு அவனுக்கு பூவாய்
வருட அவளை பின்தொடர்ந்து காதலித்து கல்யாணமும்
பண்ணிக்கிட்டான்.
அவளை கல்யாணம் பண்ணியதும் ஒரு கம்பெனியை
ஆரம்பிக்கணும் என்று விடாப்பிடியாக முயற்சித்து கடும்
உழைப்பால் முன்னேறி நாற்பதுக்கு மேற்பட்டோர்
அவனது கம்பெனியில் வேலை செய்தனர். அவன்தான்
அந்த கம்பெனிக்கு இப்போ முதலாளி.
மிகவும் கஷ்டப்பட்டு அலைந்து நிறைய கஸ்டமர்களை
தன்வசப்படுத்திக்கொண்டான். கொஞ்சம் அசந்தால்
கஸ்டமர்கள் கைவிட்டு போய்விடுவார்கள். அந்தளவுக்கு
மிகவும் கவனமாக கையாண்டான்.
ஆனால் அவனுக்கு ஒரேயொரு கெட்ட பழக்கம். ஏதாவது
ஒரு பொருள் பிடித்து விட்டால் அடையாமல் விடமாட்டான்.
அந்த கெட்டப்பழக்கத்தை மட்டும் மாற்ற முடியவில்லை.
இதனால் பல நஷ்டங்களையும் சந்தித்திருக்கிறான்.
இப்போது அந்த வாட்ச் அவனை இம்சைப்படுத்திக்
கொண்டிருந்தது. அவன் இருக்கும் வசதிக்கு இதெல்லாம்
துரும்பு. அதனால் அலுவலக பொறுப்பை மானேஜரிடம்
விட்டுவிட்டு காரில் பல வாட்ச் கடைகளுக்கு அலைந்தான்.
கிட்டத்தட்ட இரண்டு நாட்களாய் அலைந்து திரிந்து ஒரு
பெரிய வாட்ச் கம்பெனிக்கு சென்று அதே வாட்ச்சை
வாங்கி மனைவியிடம் காட்டினான்.
“அட... இதுக்குத்தான் ரெண்டு நாளா அலைஞ்சீங்களாக்கும்?
என் மாமா பெரிய வாட்ச் கடை வச்சிருக்கார். அவர்கிட்ட
சொன்னால் அடுத்த செகண்ட்ல உங்க முன்னாடி வந்திருக்கும்.
இந்த வாட்ச்சுக்காகவா நேரத்தை விரயமாக்கி கம்பெனிக்கு
ரெண்டு நாளா போகலே. இதனால எவ்வளவு நஷ்டம்” என்று
கோபித்துக்கொண்டாள் சோபியா.
“உங்க மாமா பெரிய வாட்ச் கடை வச்சிருக்காரா? பெரிய
குடும்பமா?”
“என்ன அப்படி கேட்டுட்டீங்க...? உங்க பார்வை உங்க
கம்பெனியை நோக்கி மட்டும்தான் இருக்கு. கொஞ்சம் திரும்பி
பார்த்தால் எல்லாம் தெரியும் – எங்க குடும்பம் எப்படிப்பட்ட
குடும்பம்ன்னு...
கல்யாணம் பண்ணியதோடு சரி. நீங்க என்னைக்காவது
என் உறவினர்கள் வீட்டுக்கு வந்திருக்கீங்களா? இல்லே அவங்க
இங்கே வந்தாலும் ஒழுங்கா மனம் விட்டு பேசியிருக்கீங்களா?
யாராவது வந்தால் உடனே கம்பெனிக்கு கிளம்பிடறது.
என்கிட்டயும் சில திறமை இருக்கு. அதை சொல்ல வாயெடுத்தால்
எரிந்து விழுறீங்க. நம்ம குழந்தைங்க முகத்தையும் இதுவரைக்கும்
ஒழுங்கா பார்த்ததில்லே. இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம வீட்ல
காலையில போறவர் ராத்திரிதான் வர்றாரு. யாரும்மா அவருன்னு
நம்ம குழந்தைங்க கேட்கத்தான் போறாங்க பாருங்க...”
“எனக்கு எதைப்பத்தியும் கவலையில்லே. என் கம்பெனி
இன்னும் விருட்சமாகணும். அதுக்காக நான் எவ்வளவு
கஷ்டப்படுறேன்னு தெரியுமா? ”
“ஆமாம்... அந்த வாட்ச் விஷயத்தை என்கிட்ட சொல்லிருந்தால்
ரெண்டு நாள் ஆபீஸ்ல இருந்திருப்பீங்க. கம்பெனி நிர்வாகத்தை
திறம்பட செய்ய உங்களுக்கு இருக்கிற இன்வால்மெண்ட் ஒரு
மானேஜருக்கு இருக்குமா? ஒரு வாட்ச்சுக்காக எவ்வளவு நஷ்டம்.
இப்படி நஷ்டம் ஏற்பட்டா கம்பெனி எப்படி விருட்சமாகும்?”
அவள் சொன்னதை யோசித்து அலசியவன், ஒரு வேளை
சொல்லிருக்கலாமோ என்ற நினைப்பு லேசாய் எட்டிப்பார்த்தது.
ஒரு மாதம் கழிந்திருந்த வேளையில், மறுபடியும் அன்று இரவு
அவனுக்கு தூக்கம் வரவில்லை. முந்திய நாள் ஒரு புது கஸ்டமர்
பைலில் தெரிந்த ஒரு அழகான ஓவியம் அவன் கண்ணை
கவர்ந்தது. அதை பார்க்கணும்னு நினைச்சவன் அவர் பைலோடு
உடனே கிளம்பிவிட்டார். அந்த கஸ்டமருக்கு போன்
பண்ணினாலும் சுவிட்ச் ஆப் என்று வந்தது.
அந்த ஓவியத்தை மனதில் பதியவிட்டு ரெண்டு நாளாய் ஓவிய
கண்காட்சிக்கு சென்று தேடினான். ஏமாற்றம் அவனைப்பிடித்து
உலுக்க, பைத்தியமே பிடித்து விடும்போல இருந்தான். வேலையை
சரிவர செய்ய முடியவில்லை.
கம்பெனியை சரியாக கவனிக்க முடியவில்லை. டெலிவரி சரிவர
நடக்காததால், இதர கஸ்டமரிடமிருந்து போன் மேல் போன் –
ஒரே டார்ச்சர். அலுவலகமே மூச்சு முட்ட ஆரம்பித்தது.
சில கஸ்டமர்கள் கொதிநிலையை காட்ட... சூரியபிரகாஷ் ஆடிப்
போய் விட்டான். என்ன செய்வது, ஏது செய்வது என்பது புரியாமல்
திண்டாட அன்று பன்னிரண்டு மணிக்கு கடும் டென்ஷனோடு
வீட்டுக்கு வந்தான்.
அவனது டென்ஷனை கவனித்தாள். என்ன பிரச்னை என
கேட்டால் திட்டுவார் என்று ஒதுங்க நினைத்தாலும் மனசு
கேட்கவில்லை சோபியாவிற்கு.
கேட்டே விட்டாள்.
“என்ன இன்னிக்கு லேட்டு...? ”
“.......”
“சொல்லமாட்டீங்களா? என்ன பிரச்னைன்னு என்கிட்ட
சொன்னால் நான் தீர்த்து வைப்பேன்ல...?” என்றதும் மேலும்
கோபப்பட்டான்.
“இங்கே பாரு உனக்கு ஒண்ணுமே தெரியாது.”
“இப்படி ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லி சொல்லி உங்க
கண்ணுக்கு நான் ஒரு பிரயோஜனயில்லாதவளா தெரியுது.
மனசுக்குள்ளே பாரம் அதிகமாக இருந்தால் ஹார்ட் அட்டாக்
வரும். நீங்க ஒவ்வொரு நாளும் உம்முன்னுதான் வர்றீங்க.
என்னிக்காவது சிரிப்போடு வர்றீங்களா? இதுக்குத்தான்
என்னை காதலித்து கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா...?”
“இங்கே பாரு... அந்த வாட்ச் விஷயத்திலே நான் தப்பு
பண்ணிட்டேன். உங்க மாமா வாட்ச் கடை வச்சிருக்காருன்னு
எனக்கு தெரிந்தால் உன்கிட்ட சொல்லியிருப்பேன். ஆனால்
இந்த ரெண்டு நாளா நான் தேடிக்கிட்டிருப்பது வேற.
உனக்கு சம்பந்தம் இல்லாதது.”
“எது சம்மந்தமில்லாதது? சொல்லுங்க...”
“ஓவியம்...”
“ஓவியமா?”
“அதான் சொன்னேனே... உனக்கு தெரியாதுன்னு.
பேசாம சாப்பாடு வை. பசிக்குது.”
“விஷயத்தை சொல்லுங்க...” வற்புறுத்தி கேட்டாள்.
“ஏன் இப்படி தொந்தரவு பண்றே. சொல்லி தொலைக்கிறேன்.
மூணு நாளைக்கு முன்னாடி ஒரு அழகான ஓவியத்தை ஒரு
கஸ்டமர் கையிலிருந்ததை பார்த்தேன். அதை அவர்கிட்ட
கேட்கறதுக்குள்ள அவருக்கு போன் வர வெளியே போயிட்டார்.
அப்புறம் அவரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப்புன்னு
வந்தது. அதை அடையாம என் மனதை ஒருநிலைப்படுத்த
முடியலே. இதனால நாலைந்து கஸ்டமர்கள் என்
கம்பெனியிலிருந்து விலகிட்டாங்க. இப்போ எனக்கு அந்த
ஓவியம் கிடைச்சாகணும்...”
“ஓவியம்தானே? இதோ ஒரு நிமிஷம் இருங்க...” என்றவள் தன்
அறைக்குள் சென்று அதே ஓவியத்தை எடுத்து வந்து காட்டினாள்.
“இதானே நீங்க பார்த்த ஓவியம்...?” என்றதும் அவன் பிரமித்துப்
போனான்.
“இதெப்படி உன் கையிலே வந்தது?” என்று ஆசையாசையாக
அதை தன் முகத்தோடு ஒற்றிக்கொண்டான்.
“எனக்கு திறமை இல்லேன்னு அடிக்கடி சொல்வீங்களே.
இந்த ஓவியத்தை வரைஞ்சதே நான்தான்...”
“என்னது நீதானா? உனக்கு ஓவியமெல்லாம் வரைய தெரியுமா?
இதை ஏன் என்கிட்ட சொல்லலே?”
“என்னை எங்கே பேசவிட்டீங்க? உங்களுக்கு ஒண்ணு பிடிச்சு
போச்சுன்னா அதை அடையாம விட மாட்டீங்க. ஆனால் என்
திறமையை பற்றி என்னைக்காவது தெரிஞ்சுக்க நினைச்சிங்களா?
வீட்டு வேலையையும், குழந்தைகளையும் மட்டும் பார்த்தால்
போதும்னு உங்க மனசுல இருக்கு. என் திறமையை சொல்ல
வாயெடுக்கும்போது அடக்குறீங்க. மனைவின்னா நாலு
சுவத்துக்குள்ள கிடக்கிற ஜடம்ன்னு நினைச்சிட்டீங்களா?
எங்களுக்கும் ஆற்றல், திறமை நிறைய இருக்குதுன்னு ஒவ்வொரு
புருஷனும் நினைக்கணும்.”
“அதை புரிய வைக்கத்தான் நானே ஒரு சொந்தக்காரரை
ஒரு கஸ்டமராக உருவாக்கி என் கையால வரைஞ்ச ஓவியத்தை
உங்க கண்ணுல படுறமாதிரி வெச்சேன். அப்புறம் சுவிட்ச் ஆப்
பண்ணி வச்சேன். நீங்க நொந்து நூலாகி போறதை பார்த்தேன்.
எனக்கு இருக்கிற ஓவிய திறமையை தெரியாம இருந்தது உங்க
மூடத்தனம். ஒரே திசையில் பயணித்த உங்களை திருப்ப, நானே
ஏற்படுத்திக்கிட்ட நாடகம்...” என்றதும் அவனுக்கு சாட்டையால்
அடித்தது போலிருந்தது.
“சோபி... என்னை மன்னிச்சிடு. குடும்பம்ன்னா என்னன்னு
இப்போ நான் புரிஞ்சிக்கிட்டேன். என் கம்பெனியை நல்ல
நிலைக்கு கொண்டு வரணும்னு என்னை சுற்றி இருப்பதை
கவனிக்க தவறிட்டேன்.
ஆனால் என் தேவைகள் தன் பக்கத்திலே கிடப்பதை உணராமல்
தூரமாக இருப்பதாக உணர்ந்து ரொம்ப அவஸ்தைப் பட்டுட்டேன்.
எல்லாத்தையும் மனைவியிடம் கலந்துக்கிட்டால் எத்தனை
லாபம்ன்னு எனக்கு தெள்ளத் தெளிவா புரிய வச்சிட்டே. இனிமேல்
எந்த விஷயமாக இருந்தாலும் உன்கிட்டதான் முதல்ல சொல்லப்
போறேன்.
நீ இன்னும் நிறைய ஓவியத்தை வரையணும். அதைக்
கண்காட்சிக்கு அனுப்பி நிறைய பரிசுகளை வெல்லணும்.
இதற்கு நான் உறுதுணையா இருக்கேன் சோபி...” என்று தெளிந்த
மனதுடன் சொல்லி அவளது இரு தோள்களையும் பற்ற, அவள்
அவனது மார்பில் மலர்ந்த மலராக சாய்ந்தாள்.
-
----------------------------
நன்றி- தினமலர்
* * *
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1