ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம்

Go down

  கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம் Empty கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம்

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 6:36 am

தமிழகத்தில் மேலும் 2,396 பேருக்கு கொரோனா;
பாதிப்பு 56 ஆயிரத்தை தாண்டியது


சென்னை:
தமிழகத்தில் இன்று (ஜூன் 20) ஒரே நாளில் 2,396 பேருக்கு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,
38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு
எண்ணிக்கை 56,845 ஆகவும், பலி எண்ணிக்கை 704 ஆகவும்
அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேருக்கு
கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் 64 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில்
இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 56,845 ஆக
உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 85 பரிசோதனை மையங்கள்
மூலமாக இன்று ஒரே நாளில் 32,186 மாதிரிகள்
சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில்
தமிழகத்தில் 8,61,211 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம்

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 10:58 am


* கோவையில் இ-பாஸ் பெற்று வந்த 18 ஆயிரம் பேரை வீடு,
வீடாகச் சென்று பரிசோதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது.

இதில் காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி
துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கு பொதுமக்களின்
ஒத்துழைப்பு தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் வந்தவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்
கொள்ளாமல் சுற்றித் திரிந்தால் உடனே 1077 என்ற எண்ணுக்கு அழைத்து
புகார் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி-சமயம் செய்திகள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம்

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 10:59 am


* சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்
தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அரசு
அறிவுறுத்தியுள்ளது. காய்கறி மார்க்கெட், மீன், மாமிச விற்பனை
கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனங்களுக்கு
அனுமதிக்கப்பட்டுள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம்

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 11:41 am

சென்னை:
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக
ராயபுரத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை
6,148-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் எந்த பகுதிகளில் எத்தனை பேருக்கு தொற்று எ
ன்பதை மண்டலம் மாறியாக மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

தண்டையார்பேட்டை - 4,963 ,
தேனாம்பேட்டை - 4,785,
கோடம்பாக்கம் - 4,329,
அண்ணாநகர்- 4,142
திருவிக நகர் - 3,440, பேருக்கும் கொரோனா தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம்

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 11:46 am

கொரோனா வைரஸ் பரவல் பீதி: தலைமை செயலக ஊழியர்கள் 25% பேர் மட்டுமே பணிக்கு வருகை: சாவு எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சம்
-
சென்னை:
கொரோனா வைரஸ் பீதி காரணமாக தலைமை செயலகத்துக்கு
25 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வருகிறார்கள். கடந்த
சில நாட்களாக சென்னையில் கொரோனா பலி அதிகரித்து
வருவதால் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனே காணப்படுகிறார்கள்.

சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ்
தொற்றால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகிறது. தினசரி 1000ஐ தாண்டிய நிலையில், தற்போது 1,500ஐ
நெருங்குகிறது. மேலும், கடந்த சில நாட்களாக கொரோனா
நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் மரணம் அடைவது
சென்னையில் மட்டும் தினசரி 40ஐ தொடுகிறது.

அதுவும் 35, 40, 50 வயதுடையவர்களும் கொரோனா தொற்றுக்கு
மரணம் அடையும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை தலைமை செயலகத்திற்கு தினசரி 3,500 பணியாளர்கள்
வேலைக்கு வந்தனர். அவர்களின் பலருக்கு அடுத்தடுத்து
கொரோனா தொற்று பாதிக்கும் நிலை ஏற்பட்டது. கடந்த வார
இறுதியில் மட்டும் தலைமை செயலக ஊழியர்கள் 150க்கும்
மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

அவர்கள் தற்போதும். இதையடுத்து அனைத்து தலைமை செயலக ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு
செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் முதல்வரின் அலுவலகத்தில்
பணிபுரியும் தனி செயலாளர் தாமோதரன் கொரோனா வால்
பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார்.

இதையடுத்து முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் 2 உயர்
அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் 4 பேருக்கு
கொரோனா பாதிக்கப்பட்டு, அவர்களும் சிகிச்சை பெற்று
வருகிறார்கள்.

பின்னர் முதல்வர் அலுவலகத்தில் உள்ள 45 பேருக்கு கொரோனா
பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள்துறை அலுவலகத்திலும்
துணை செயலாளர் உள்ளிட்ட 3 பேருக்கு 2 நாட்களுக்கு முன்
புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுபோன்று தொடர் சம்பவங்களால் தலைமை செயலக ஊழியர்கள்
அச்சத்துடனே பணிக்கு வந்து செல்கிறார்கள். தற்போதுகூட
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று முன்தினம் (19ம் தேதி)
முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால், அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு பதில்
33 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், நேற்று முன்தினம் முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால்
25 சதவீத ஊழியர்கள் மட்டுமே தலைமை செயலகத்துக்கு வந்து
பணிகளை செய்தனர். மற்றவர்கள் கொரோனா பீதி காரணமாக
பணிக்கு வரவில்லை. நேற்று சனிக்கிழமை அலுவலக நாளாக
இருந்தாலும் மிக குறைந்த எண்ணிக்கையில் தான் பணியாளர்கள்
வேலைக்கு வந்தனர்.

தலைமை செயலகத்தில் அதிகளவில் கொரோனா பாதிப்புக்கு
ஏற்பட காரணம் என்ன என்பது குறித்து அங்கு பணியாற்றும்
ஊழியர்கள் கூறியதாவது: தலைமை செயலகத்தில் சுமார்
6 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

மிகவும் குறுகலான அலுவலகத்தில் இவர்கள் நெருக்கமாக உட்கார்ந்து பணியாற்றும் நிலை உள்ளது. ஒரு துறையில் பார்க்கப்படும் பைல்கள்
10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேஜைக்கு சென்று திரும்பும் நிலை
உள்ளது.

இதுவும் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஒரு காரணமாக
இருக்கலாம். இங்குள்ள 10 மாடி கட்டிடத்தில் உள்ள அலுவலகங்களுக்கு
செல்ல ஊழியர்கள், லிப்ட் பயன்படுத்துகிறார்கள்.

அதில் ஒரே நேரத்தில் அதிகம் பேர் மிகவும் நெருக்கமாக நின்று
செல்லும் நிலை உள்ளது. தலைமை செயலகத்தில் வேலை
செய்யும் பலர் கொரோனா அதிகம் பரவி உள்ள ராயபுரம்,
தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை
உள்ளிட்ட மண்டலங்களில் இருந்துதான் பணிக்கு வந்து செல்கிறார்கள்.

இதனால் யாருக்கு வைரஸ் தொற்று இருக்கிறது என்பதே எளிதில்
கண்டுபிடிக்க முடியவில்லை. தொற்று உள்ளவர்கள் மற்றவர்களிடம்
சகஜமாக பேசி பழகும்போது அடுத்தவர்களுக்கும் பரவி விடுகிறது.

தற்போது முதல்வரின் அலுவலகத்திலேயே அதிகம் பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். மூத்த அமைச்சர் அன்பழகனும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளே பயத்தில் தலைமை
செயலகம் வருவதில்லை. ஆரம்பத்தில் கொரோனா வந்து சிகிச்சை
பெற்றவர்கள் எளிதில் குணமாகி வீடு திரும்பும் நிலை இருந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

இது எங்களிடம் அதிக பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
துறை அதிகாரிகள் கண்டிப்பாக வேலைக்கு வர வேண்டும்
என்று கட்டாயப்படுத்துகிறார்கள். வாரத்திற்கு ஒரு நாள்
அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பணிக்கு வர அனுமதிக்க
வேண்டும்.

நாங்கள் விடுமுறை எடுத்த நாட்களையும் வேலை நாட்களாக
கருத வேண்டும் என்றனர்.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம்

Post by ayyasamy ram Sun Jun 21, 2020 4:11 pm

730 போலீசாருக்கும் மேல் பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு கொரோனா
சென்னை:
சென்னையில் பணியில் இருந்து 730 போலீசாருக்கு ஏற்கனவே
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று
பெண் இணை ஆணையருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் உளவுத்துறை
டிஎஸ்பி ஒருவருக்கும், செம்பியம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மற்றும்
விஐபிக்களுக்கு பாதுகாப்பு அளித்து வந்த இன்ஸ்பெக்டர் உட்பட
23 போலீசாருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னை மாநகர காவல் துறையில் கடந்த வாரம் வரை
730 போலீசாருக்கு ெகாரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழக காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் எஸ்பி, 6 டிஎஸ்பி
உட்பட 39 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர்.
250க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பி உள்ளது
குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தென்சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில்
பெண் ஐபிஎஸ் அதிகாரியான இணை கமிஷனர் ஒருவருக்கும் கடந்த
இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா
அறிகுறிகள் இருந்த நிலையில் சோதனை செய்யப்பட்டு வீட்டில்
தனிமைப்படுத்துக் கொண்டார்.

சோதனையின் முடிவுகள் நேற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா
தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றும் பணிபுரிந்தவர்கள்
அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அவர் பணிபுரிந்த இடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தடை
செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 ஐபிஎஸ்
அதிகாரிகள் கொரோனா பாதிக்கப்பட்டு குணமாகி வீட்டிற்கு சென்றுள்ள
நிலையில் தற்போது ெபண் இணை கமிஷனருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது
போலீசார் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

  கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம் Empty Re: கொரோனா பாதிப்பு - ஜூன் 21 - நிலவரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum