புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
59 Posts - 58%
heezulia
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
54 Posts - 58%
heezulia
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_m10மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 1:16 am


புண்ணிய நதிகள் ஏழு.

அவற்றில் முதலாவது- கங்கை;

7-வது நதி- காவிரி.


இந்த நதியில் பொன் எனும் உலோகமும் கலந்திருப்பதால், 'பொன்னி' என்றும் பெயர் உண்டு காவிரிக்கு!

புண்ணிய நதிகளான கங்கையையும் காவிரியையும் இணைத்தால், இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னையே இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இரண்டு நதிகளையும் என்றைக்கோ இணைத்து விட்டது புராணம்!


என்ன... ஆச்சரியமாக இருக்கிறதா?

துலா மாதம் எனப்படும் ஐப்பசியில், அதிகாலை வேளையில் எழுந்து வீட்டில் நீராடுவது நல்லது. நதியில் நீராடுவது மிகச் சிறப்பு. அதிலும் குறிப்பாக காவிரியில் அல்லது அதன் உற்பத்தி ஸ்தானமான தலைக்காவிரியில் நீராட வேண்டுமாம். முக்கியமாக, மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடுவது வெகு விசேஷம்!

துலா புராணப்படி, ஐப்பசி மாதத்தில்... காவிரியில் கங்காதேவியும் வாசம் செய்கிறாள்! ஐப்பசி மாதக் கடைசி நாளில், இங்கே நீராடுவதற்கு 'கடை முழுக்கு' என்று பெயர். இந்த நாளில், மயிலாடுதுறையில் உள்ள அனைத்து ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் மூர்த்திகளும் காவிரியில் எழுந்தருளி, தீர்த்தவாரி கண்டருளுவர்!

வான் நதியாம் கங்கையை பூமிக்கு அழைத்தான் பகீரதன்.

''எண்ணற்ற பாவங்களைச் செய்துவிட்டு, எல்லோரும் அதனை என்னிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். நான் வரமாட்டேன்'' என்று தயங்கி மறுத்தாள் கங்காதேவி.

உடனே பகீரதன், ''பாவம் செய்பவர்களை ஏன் சிந்திக்கிறாய்? எத்தனையோ மகான்கள் நீராடுவார்களே...'' என்று சொல்ல, பூமிக்கு வர சந்தோஷத்துடன் சம்மதித்தாளாம் கங்காதேவி! அதன்படியே வடக்கே குடிகொண்டாள். அதுமட்டுமா? தென்னக மக்களும் பயனுறும் வகையில், இங்கே... ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியில் வாசம் செய்கிறாள்!

இதையறிந்த பக்கத்து ஊர்க்காரர் ஒருவர்... பாவம், அவருக்கு கால் ஊனம்... கடைமுழுக்கு நாளன்று மிகவும் கஷ்டப்பட்டு நடந்து வந்தார். கடைமுழுக் கின் மறுநாள்தான் அவரால் துலா கட்டத்துக்கு வந்து சேர முடிந்தது. இதையறிந்து வருந்திய கங்காதேவி, அந்த நாளிலும் காவிரியில் இருந்தாள். இதனால், கடைமுழுக்குக்கு அடுத்த நாளை (கார்த்திகை முதல் நாள்) 'முடவன் முழுக்கு' என்பர்!

காஞ்சி பெரியவாள் ஒருமுறை மயிலாடுதுறையில் முகாமிட்டிருந்தார். காவிரி ஸ்நானம் செய்வதில் லயித்துப் போவார் ஸ்வாமிகள். இந்த வேளையில், கோயில் திருப்பணி விஷயமாக மடத்து ஊழியர் ஒருவரை அழைத்த ஸ்வாமிகள், ஊரில் உள்ள பிரமுகர் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டு, அவரிடம் ஆலயத்துக்கான கைங்கர்யத்தைச் செய்ய முடியுமா என்று கேட்டுவரும்படி பணித்தார்.


மடத்தில் இருந்து எந்தவொரு வேலையாக வெளியே கிளம்பினாலும், விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைத்து வணங்கிவிட்டுச் செல்வதே வழக்கம். இதனை அந்த சிப்பந்தியிடம் நினைவுபடுத்தினார் ஸ்வாமிகள். அப்படியே செய்தார் ஊழியர்!

சிறிது நேரம் கழிந்தது. பிரமுகரைப் பார்த்து விட்டு வந்த மடத்தின் ஊழியர், ''போன காரியம் நிறைவேறவில்லை. அதுமட்டுமின்றி, விக்ன விநாயகருக்கு தேங்காய் உடைத்தேன்; அவர் விக்னத்தைப் போக்குவதற்கு பதிலாக விக்னத்தை உண்டு பண்ணி விட்டார்!'' என்று சொல்ல, மகாபெரியவாளின் முகம் மாறியது. எவருடனும் எதுவும் பேசாமல், அன்றைய பூஜை அனுஷ்டானங்களில் மூழ்கிப்போனார் ஸ்வாமிகள்.

அந்த ஊழியர் ஆடிப்போனார். 'எல்லோரிடமும் பேசுவது போல பெரியவாளிடம் பேசியது தவறுதானே?' என்று வருத்தப்பட்டார். 'குருநாதரின் மனம் நோகும்படி நடந்து கொண்டோமே...' என்று தவித்து மருகினார். சாப்பிடவும் முடியவில்லை; வேறு வேலைகளில் ஈடுபடவும் மனம் ஒத்துழைக்கவில்லை.

ஒருகட்டத்தில், விறுவிறுவென ஸ்வாமிகளிடம் சென்று, அவரை விழுந்து நமஸ்கரித்து மன்னிப்பு கேட்டார் ஊழியர். ஆனால் பெரியவாள், ''ஒரு தப்பும் செய்யலியே நீ? வருத்தப்படாதே! என்ன... 'விக்னத்தை களையறதுக்கு பதிலா உண்டு பண்ணிட்டார்'னு நீ சொன்னதுதான் தப்பு. இன்னொரு விஷயம்... நீ தேங்காயை உடைச்சதுமே, 'இந்த வேலை இந்த பிரமுகரால நடக்காது; வேற ஒரு பிரமுகரை அனுப்பி வைக்கிறேன்'னு பிள்ளையாரே சொல்லிட்டார். அப்படியிருக்க, விக்னத்தை உண்டுபண்ணிட்டதா சொல்லிட்டியே... அவ்ளோதான்!'' என்று மெள்ள புன்னகைத்தார் ஸ்வாமிகள்.

தெய்வத்திடம் நாம் வைக்கிற நியாயமான பிரார்த்தனை கள் ஒருநாளும் வீண் போகாது! நாம் எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்தபடி நடக்காவிட்டாலும்கூட, ஏதோவொரு நாளில்... நிறைவேறியே தீரும்! இதை உணர்ந்து, தெளிந்து வணங்கும் நாளெல்லாம் திருநாள்தான்!



மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 1:17 am

அது 1965. சென்னைக்கு பாதயாத்திரை செய்த காஞ்சி மகாபெரியவர், வழியில் சுங்குவார்சத்திரத்தில் தங்கினார். அவரைப் பார்க்க சென்னை அன்பர்கள் பலர் இருந்தனர்.

அவர்களில் ஹிந்தி தெரிந்த அன்பர் ஒருவரை அழைத்தார் மகாபெரியவர். ராமேஸ்வரத்தில் உள்ள காமகோடி பீட மடத்துக்கு வரும் வடநாட்டு யாத்ரீகர்கள் பாராயணம் செய்ய, துளஸிதாசரின் 'அனுமன் சாலீஸா'வை அச்சடித்துக் கொடுக்க விரும்புவதாகத் தெரிவித்து, அதற்காக உதவும்படி அந்த அன்பரிடம் கூறினார். அந்த அன்பரும் அனுமன் சாலீஸாவைப் படித்துக் காட்டினார். அப்போது, மடத்தின் சிப்பந்தி ஒருவர் ''ராமேஸ்வரத்தில் உள்ள அனுமன்தான் 1964 டிசம்பரில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இருந்து ஜோதிர்லிங்கங்களைக் காப்பாற்றினார்'' என்றார்.

அப்போது அந்த அன்பர் மகாபெரியவரிடம் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

''பெரியவா... ரொம்ப நாளாவே ஒரு சந்தேகம். நான் வடக்கே சோம்நாத், ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர்ன்னு ஜோதிர்லிங்க தரிசனத்துக்குப் போயிருக்கேன். அங்கெல்லாம், ஜோதிர்லிங்கம்னா என்னன்னு கேட்டா, ''அப்னே ஆப் ஹுவா!''ன்னு தானாகவே உண்டானது... 'சுயம்பு'ன்னு சொன்னா! ராமேஸ்வரமும் ஜோதிர்லிங்கங்கள்ல ஒண்ணுதான். ஆனா, அந்த லிங்கம் ஸ்ரீராமராலே பிரதிஷ்டை செய்யப் பட்டது இல்லயா... அப்படின்னா அதை சுயம்புன்னு சொல்ல முடியாது. அதனால, ஜோதிர்லிங்கம்னா வேற ஏதோ பொருள் இருக்கணுமே...''

அதற்கு ஸ்வாமிகள், ''ஜ்வாலாமுகியை பார்த்திருக் கியா?'' என்று கேட்டார். ''நான் பார்த்ததில்லை. ஆனால், அங்கே எப்போதும் குண்டத்தில் அக்னி எரிந்து கொண்டிருக்குமாம். ஆதிசங்கர பகவத்பாதர் அதை அம்பிகை ரூபமாவே துதித்திருக்கிறாராம்!'' என்றார் அவர்.

அதற்கு ஸ்வாமிகள், ''சரிதான். ஆனா அங்கே ஒரு குண்டம் மட்டு மில்லே... பல அக்னி குண்டங்கள் எரிந்துகொண்டிருக்கும். அது கந்தக பூமியானதால் அவ்வாறு அமைந்திருக்கிறது. வடலூரில் பூஜை எப்படி நடக்கிறது பார்த்திருக்கிறாயா?'' என்று கேட்டுவிட்டு, அருகே இருந்த கண்ணன் என்பவரிடம் அதைப் பற்றிச் சொல்லச் சொன்னார்.

''வடலூரில் ஒரு விளக்கை ஏற்றிவைத்து, அதற்குப் பின்னால் ஒரு கண்ணாடியை வைத்து, அந்த விளக்குக்கும் அதன் பிரதி பிம்பத்துக்கும் பூஜை செய்கிறார்கள்'' என்றார் கண்ணன்.

உடனே அந்த அன்பரிடம் சொன்னார் மகாபெரியவர்...

''அரச மரத்தைப் பற்றி ஒரு ஸ்லோகம் உண்டே தெரியுமா?

மூலதோ ப்ரம்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே|
அக்ரதோ சிவரூபாய வ்ருக்ஷராஜாய தே நமபாடகன்|

அரச மரத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபமாகவும், நடுப்பாகம் விஷ்ணு ரூபமாகவும், மேல்பாகம் சிவரூபமாகவும் இருக்கிறது...

விளக்கு எரியும்போது பார்த்திருக்கிறாயா? அந்த ஜோதியில் தெரியற மஞ்சள் நிறம் பிரம்மாவின் நிறம்... நடுவில் கறுப்பு விஷ்ணுவின் நிறம்... மேலே சிவப்பு சிவனுடையது. ஆகவே ஜோதி மும்மூர்த்தி சொரூபம். சிவலிங்கமும் அப்படியே. சாதாரணமாக எல்லோரும் நினைப்பது போல, அது சிவ சொரூபம் மட்டுமல்ல... லிங்கத்தின் அடிப்பகுதி பிரம்ம பாகம். நடுப் பீடம் விஷ்ணு பாகம். மேலே லிங்கமாக இருப்பது சிவனுடைய பாகம். அந்தக் காலத்தில் ரிஷிகள் அங்கங்கே ஜ்வாலாமுகி போல, இயற்கையாய் ஏற்பட்ட ஜோதியையோ, அல்லது வடலூரில் இருப்பதுபோல செயற்கையான தீப ஜோதியையோ வழிபட்டிருக்கிறார்கள். அந்த வழிபாடு தொடர்ந்து நடைபெற, அதையே லிங்கத்தில் பிரதிஷ்டை செய்து ஜோதிர் லிங்கமாக முன்னோர்கள் ஆராதித்தார்கள். ஜோதிதான் லிங்கம்... லிங்கம்தான் ஜோதி'' என விளக்கி, ஆசியளித்தார் மகாஸ்வாமிகள்.

- ஜானகிராமன்.



மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 07, 2010 1:19 am

கடற்கரையில் ஒதுங்கிய ரத்னகிரீஸ்வரர்!


சென்னை- பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில், கரை ஒதுங்கிய லிங்கத் திருமேனியைக் கண்ட அன்பர்களுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மகாபெரியவருக்கு மனதார நன்றியை சமர்ப்பித்தவர்கள், 'சம்போ மகாதேவா' என்று ஈசனை கைதொழுதார்கள்! காஞ்சி மகாபெரியவரின் வாக்கும் பலித்தது!

ஆமாம்! சுமார் 45 வருடங்களுக்கு முன் சென்னை- பெசன்ட்நகருக்கு விஜயம் செய்திருந்தார் மகா ஸ்வாமிகள். அப்போது, அய்யன் மலை (திருச்சி மாவட்டம், குளித்தலைக்கு அருகே உள்ள இந்தத் தலத்தை ரத்தினமலை என்றும் அழைப்பர்) ஸ்ரீரத்னகிரீஸ்வரரை குலதெய்வமாகக் கொண்ட அன்பர்கள் சிலர் அவரிடம், ''ஸ்வாமி... பெசன்ட்நகரில் ரத்னகிரீஸ்வரருக்கு ஒரு கோயில் கட்ட எண்ணியுள்ளோம். அதற்கு நீங்கள் அனுக்கிரஹம் செய்ய வேண்டும்!'' என்று வேண்டினர். அவர்களிடம், ''பெசன்ட் நகர் சமுத்திரத்தில் ரத்னகிரீஸ்வரர் கிடைப்பார். அவரை ஸ்தாபிச்சி கோயில் கட்டுங்கோ!'' என்று அருள் புரிந்திருந்தார் ஸ்வாமிகள்.

அவரது வாக்குப்படியே சிவலிங்கம் ஒன்று கரை ஒதுங்க... அன்பர்களுக்கு ஆனந்தம்! 1.10.1968- அன்று (புரட்டாசி மாதம்) சிருங்கேரி ஆச்சார்யர் ஸ்ரீஅபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகளால் பூமி பூஜை செய்யப்பட்டு, ஓலைக்குடிசையில் குடியேறினார் ஸ்ரீரத்னகிரீஸ்வரர். காலப்போக்கில், இறையருளாலும் அன்பர்களது முயற்சியாலும் குடிசை, அழகிய திருக்கோயிலாகப் பரிணமிக்க... ஸ்ரீரத்னகிரீஸ்வரரின் அருட்கடாட்சம் இன்றும் தொடர்கிறது!

காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னிலையில், 1998-ஆம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீசத்ய விநாயகர், ஸ்ரீரமணரால் பூஜிக்கப்பட்ட மூர்த்தியாம்! இங்கே பிரதோஷ வழிபாடுகள் விமரிசையாக நடைபெறுகின்றன. பிரதோஷத் திருநாளில், ஸ்ரீபிரதோஷ நாயகருக்கு பிரார்த்தனை மாலை சாற்றி வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இன்னும் பிற வேண்டுதல்களுக்காக 'பிடி அரிசி' காணிக்கை செலுத்தியும், வில்வ மாலை சமர்ப்பித்தும் ஸ்ரீரத்னகிரீஸ்வரரை வணங்கிச் செல்கிறார்கள்.

பக்தர்கள் செலுத்தும் பிடி அரிசியை, பிரதோஷம் மற்றும் பிற பண்டிகை நாட்களில் தயிர்சாதமாகவும், வெண்பொங்கலாகவும் சமைத்து ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து பிரசாதமாக விநியோகிக்கிறார்கள்.

உற்ஸவ மூர்த்தியும் மூலவருடன் கருவறையிலேயே அமைந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்பு. இங்கே அருள்பாலிக்கும் அம்பிகை சுருண்ட கேசம் கொண்டவள் ஆதலால், ஸ்ரீஅராளகேசி என்ற திருநாமத்துடன் திகழ்கிறாள்.

ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீதுர்கை ஆகியோரும் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். நவக்கிரகங்களையும் தரிசிக்கலாம். பிராகாரத்தின் உள்ளேயே நான்கு வில்வ மரங்களும், அரசமரமும் உள்ளன. நினைத்ததை நிறைவேற்றும் ஸ்ரீரத்னகிரீஸ்வரரை கார்த்திகை சோமவாரத்தில் தரிசித்து, கவலைகள் நீங்கப் பெறலாம்.



மனவருத்தம் போக்கிய மகாபெரியவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக