ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by ayyasamy ram Sat Jun 06, 2020 6:58 pm

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் 29136997_1447507295377421_805609721540116480_o.jpg?_nc_cat=109&_nc_sid=110474&_nc_ohc=uic8L911vXsAX-SXr7H&_nc_ht=scontent.fmaa3-1

1967 சொல்ல சொல்ல இனிக்குதடா   கந்தன் கருணை
1967 திருப்பரங்குன்றத்தில் நீ கந்தன் கருணை
1963 சரவண பொய்கையில் இது சத்தியம்
1965 அழகன் முருகனிடம் பஞ்சவர்ணக்கிளி
1964 தேவியர் இருவர் முருகனுக்கு கலைக்கோயில்
1965 செந்தூர் முருகன் கோயிலிலே சாந்தி
1965 வெள்ளிக்கிழமை விடியும் வேளை   நீ
1972 திருப்புகழை பாட பாட கௌரி கல்யாணம்
1966 திருத்தணி முருகா நீலகிரி எக்ஸ்ப்ரஸ்
1967 குறிஞ்சியிலே பூ மலர்ந்து கந்தன் கருணை
1967 வெள்ளிமலை பொதிகை மலை கந்தன் கருணை
1978 பத்துதிருமலை முத்துக்குமரனை வருவான் வடிவேலன்
1969 மருதமலை மீதிலே துணைவன்
1967 ஆறுமுகா சரவணா கந்தன் கருணை
1977 ஓம் என்ற மந்திரம் முருகன் அடிமை
1977 பூமி எல்லாம் காத்து நிக்கும் முருகன் அடிமை
1977 தாய் காத்த பிள்ளை எனை முருகன் அடிமை
1977 ஓம் முருகா ஓம் முருகா முருகன் அடிமை
1977 சத்தியம் சிவம் எனும் முருகன் அடிமை
1977 அம்மையானவன் எனக்கு முருகன் அடிமை
? வாசவன் முருகா கிழக்கும் மேற்கும் சந்திக்கின்றன
1983 கந்த சஷ்டி சஷ்டி விரதம்
1983 யாருக்கு முருகா உன் சஷ்டி விரதம்
1969 வேலோடு விளையாடும் சித்ராங்கி
1982 கண்கண்ட தெய்வமே கீழ்வானம் சிவக்கும்
1987 முத்துக்குமரனை வேலுண்டு வினையில்லை
1983 வந்தேன் முருகா பத்துமலை யாமிருக்க பயமேன்
1983 கூப்பிட்ட குரலுக்கு யாமிருக்க பயமேன்
1983 யாமிருக்க பயமேன் யாமிருக்க பயமேன்
1980 வடிவேலனே சிவபாலனே


Last edited by ayyasamy ram on Tue Jun 23, 2020 10:21 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty Re: திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by ayyasamy ram Tue Jun 23, 2020 10:12 pm


படம்: இது சத்தியம்
இசை: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
பாடியவர்: பி.சுசீலா
பாடல்: கண்ணதாசன்
-------------------
-
சரவணப் பொய்கையில் நீராடி

துணை தந்தருள் என்றேன் முருகனிடம்!
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை!
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை!!
(சரவணப் பொய்கையில் நீராடி)

நல்லவர் என்றும் நல்லவரே!
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே!!
நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்!!
(சரவணப் பொய்கையில் நீராடி)
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty Re: திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by ayyasamy ram Tue Jun 23, 2020 10:19 pm

படம்: குமாஸ்தாவின் மகள்
இசை: குன்னக்குடி
குரல்: சூலமங்கலம் சகோதரிகள்
வரி: பூவை செங்குட்டுவன்

-
-------------------------------

எழுதி எழுதிப் பழகி வந்தேன்

எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான்
பாடு பாடு என்று சொன்னான்
(எழுதி எழுதி)

திருச்செந்தூர் வடிவேலும் திருத்தணிகை மாமயிலும்
சங்கத் தமிழில் கந்தன் புகழைப் பாடச் சொல்லிக் கேட்டு வரும்!
கந்தன் புகழைக் கேட்டுக் கேட்டு வேலும் மயிலும் ஆடி வரும்!
(எழுதி எழுதி)

பழமுதிர்சோலைப் பன்னீரும், சுவாமிமலை திருநீறும்
வள்ளிக் கணவன் முருகன் பெயரைப் பாடச் சொல்லி அருள் கூறும்!
வண்ணக் கவிதை பாடப் பாட, வாழ்வும் வளமும் தேடி வரும்!
(எழுதி எழுதி)

பழனிமலைப் பஞ்சாம்ருதமும், பரங்குன்றச் சந்தனமும்
உள்ளம் தன்னில் இன்பம் தந்து, குமரன் அருளைப் பாடி வரும்!
பிள்ளைத் தமிழை அள்ளித் தந்து, பேரும் புகழும் சேர்த்து விடும்!
(எழுதி எழுதி)
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty Re: திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by ayyasamy ram Tue Jun 23, 2020 10:22 pm



திருத்தணி முருகா! தென்னவர் தலைவா!
சேவலும் மயிலும் காவலில் வருமா!
தேன் பரங்குன்றம் செந்தூர் மன்றம்!
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்!

வடிவேல் சேவை
நினைந்தாள் பாவை!
காணும் கண்ணில் எங்கும்
கண்டாள் உந்தன் தேவை!

கந்த வேளை எந்த வேளும்
வெல்லுவதில்லை!
உந்தன் பேரை அன்றி வேறு
சொல்லுவதில்லை!

உன்னை எண்ணும் உள்ளம் ஏதும்
கொள்ளுவதில்லை!
இன்று நாளை என்றும் துன்பம்
அண்டுவதில்லை!

மலையும் நீயே! கடலும் நீயே!
வானும் நீயே! நிலமும் நீயே!

பஞ்ச பூதம் ஒன்று கூடும் மன்றம்
வந்த பேர்க்கு வாழ்வு நல்கும் குன்றம்!
மங்கல குங்குமம் கிண்கிணி மங்கலம்
ஓம் எனும் மந்திரம் யாவையும் சங்கமம்!

ஆதியாகி அந்தமாகி நீதியாகி நெஞ்சமாகி
அலைகள் கலகலென இலைகள் சலசலென
மலைகள் மடமடென உலகம் இசை பொழிய
வரு முருகா! ஒரு முருகா! திரு முருகா!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty Re: திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by ayyasamy ram Wed Jun 24, 2020 6:01 am


படம்- கந்தன் கருணை
பாடல் - கண்ணதாசன்
இசை- கே,வி,மகாதேவன்
பாடியவர்- பி.சுசீலா

-
------------------------

குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே

குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே

தந்தான தனா தன தந்தினா
தந்தான தனா தன தந்தினா


வெள்ளி மலை மான்களெல்லாம்
துள்ளுதடி வலையிலே
விளங்கி வந்த சங்கு நாதம்
முழங்குதடி மலையிலே
வெள்ளி மலை மான்களெல்லாம்
துள்ளுதடி வலையிலே
விளங்கி வந்த சங்கு நாதம்
முழங்குதடி மலையிலே

பால் மணக்குது பழம் மணக்குது
பறவை கூடும் வனத்திலே
தேன் இருக்குது தினை இருக்குது
வேடுவர் தினை புனத்திலே
பால் மணக்குது பழம் மணக்குது
பறவை கூடும் வனத்திலே
தேன் இருக்குது தினை இருக்குது
வேடுவர் தினை புனத்திலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே

தந்தான தனா தன தந்தினா
தந்தான தனா தன தந்தினா


மயிலிருக்குது குயிலிருக்குது
வள்ளி மலை நிலத்திலே
வேல் இருக்குது வில் இருக்குது
வஞ்சியரின் முகத்திலே
மயிலிருக்குது குயிலிருக்குது
வள்ளி மலை நிலத்திலே
வேல் இருக்குது வில் இருக்குது
வஞ்சியரின் முகத்திலே

முத்து மாலை பவள மாலை
மின்னுதடி கழுத்திலே
மூன்று காலம் உணர்ந்து சொல்லும்
திறமிருக்கு மனத்திலே
முத்து மாலை பவள மாலை
மின்னுதடி கழுத்திலே

மூன்று காலம் உணர்ந்து சொல்லும்
திறமிருக்கு மனத்திலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
குறு குறுத்த வண்டு ரெண்டு
பறக்குதடி முன்னாலே
குறிஞ்சியிலே பூ மலர்ந்து
குலுங்குதடி தன்னாலே
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty Re: திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by ayyasamy ram Wed Jun 24, 2020 6:03 am

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty Re: திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by ayyasamy ram Wed Jun 24, 2020 6:08 am

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா


அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா


அறுபடை வீடு கொண்ட திருமுருகா

பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன் முருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா


வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு...
அந்த வெள்ளிப் பனித் தலையர்
கொடுத்ததற்கு... ஆ...

வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு
அந்த வெள்ளிப் பனித் தலையர்
கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு
நீ அமர்ந்த பழனி ஒரு படை வீடு

அறுபடை வீடு கொண்ட திருமுருகா


ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை

அறுபடை வீடு கொண்ட திருமுருகா


தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள
படை வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள
படை வீடு

அறுபடை வீடு கொண்ட திருமுருகா


குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும்
நினைவோடு
குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும்
நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ண திருப்பரங்குன்றம் என்னும்
படை வீடு
வண்ண திருப்பரங்குன்றம் என்னும்
படை வீடு முருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா


தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி
தன்னை மணந்து
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி
தன்னை மணந்து
காவல் புரிய என்று அமர்ந்த மலை
காவல் புரிய என்று அமர்ந்த மலை
எங்கள் கன்னித் தமிழர்
திருத் தணிகை மலை
தணிகை மலை திருத் தணிகை மலை

அறுபடை வீடு கொண்ட திருமுருகா


கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு...
அடியவர்க்கு...
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை
மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை...
முருகா...

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
முருகா... முருகா...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty Re: திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by ayyasamy ram Wed Jun 24, 2020 6:12 am

படம்- கந்தன் கருணை
பாடல் - பூவை செங்குட்டுவன்
இசை - கே.வி.மகாதேவன்
பாடியவர்கள்- ராஜலட்சுமி & பி.சுசீலா

-
-------------------------------
-
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் ( இசை )

திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழநியிலே இருக்கும் கந்த பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்

பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்

இசை சரணம் - 2
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு
சிறப்புடனே கந்தக் கோட்டமுண்டு உன்
சிங்கார மயிலாட தோட்டமுண்டு

உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை
அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
இருவர் திருச்செந்தூரிலே வேலாடும் உன்
திருப்புகழ் பாடியே கடலாடும்
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
-



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள் Empty Re: திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum