ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வராஹ புராணம் !

3 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

வராஹ புராணம் ! - Page 4 Empty வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 10:05 am

First topic message reminder :

வராஹ புராணம் - பகுதி 1

வராஹ புராணம் ! - Page 4 RdH2yquTVGVkzdMiYqQy+0a6a78a6-2d67-4a4a-b8fb-3e3e4a297fa9

யஜ்ஞ வராகம்
============

யஜ்ஞம் = உலகைச் சிருஷ்டிக்கும் சிறந்த சக்தி உடைய எண்ணம். வராகம் = கலவரம். குழப்பங்களிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி. யஜ்ஞம் என்பது யாகம். அதாவது யஜ்ஞத்தின் மூல சிருஷ்டி சக்தியை வெளிப்படுத்த உதவும் ஒரு சமயச்சடங்கு. யஜ்ஞ வராகத்தை விவரிக்க முப்பத்தைந்து வெவ்வேறு வகை பெயர்கள் விளங்குகின்றன. அவையாவன:

1. வேத பாதம் : வராகத்தின் நான்கு பாதங்களும் நான்கு வேதங்கள்.

2. யுபதம்ஷ்ட்ரம் : வராகத்தின் இரண்டு தந்தங்கள். விலங்குகளைப் பலியிட உபயோகப்படுத்தும் மேடை போன்றது.

3. கிரது தந்தம் : ஒரு யஜ்ஞத்தில் செய்யப்பட வேண்டிய அறுபத்து நான்கு பலிகளைக் குறிப்பது கிரது. இவை போன்று வராகத்தின் பற்கள் உள்ளவை.

4. சிதி மூலம் : சிதி என்றால் அக்கினிமேடை (அ) பலிபீடம். வராகம் வாய் பிளத்தல் இதை போன்றதாகும்.

5. அக்கினி ஜிஹ்வ : வராகத்தின் நாக்கு அக்கினி போலுள்ளது.

6. தர்ப்பலோமம் : வராகத்தின் உடல் மீதுள்ள உரோமம் மேடை மீது பரப்பப்படும் தர்ப்பைப் புல் போன்றது.

7. பிரம்ம சீர்ஷம் : வராகத்தின் தலை பிரம்மாவைப் போல் உள்ளது.

8. அஹோர திரிக்ஷானாதாரம் : இரவும், பகலும் வராகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.

9. வேதாங்க ச்ருதி பூஷனம் : அறிவின் பிரிவுகளாகிய ஆறு வேதாங்கங்கள் வராகத்தின் காதணிகள் ஆகும்.

10. ஆஜ்யனசா : நாசித்துவாரங்கள் யாகத்தில் தெளிக்கப்படும் நெய் போன்றுள்ளன.

11. சிருவண் துண்டம் : நீண்டுள்ள மூக்கு யாகத்தில் நெய் ஊற்றப் பயன்படும் கரண்டி போன்றது.

12. சாம கோஷ வன : சாமவேதத்துதிகள் போல் வராகத்தின் குரல்.

13. சத்திய தர்மமாயா : வராகம் முழுவதும் தருமநெறியும், உண்மையும் கொண்டது.

14. கர்மவிகரம் சத்கிருத : புரோகிதர்கள் செய்யும் சடங்குகள் வராகத்தின் சக்தி வாய்ந்த அசைவுகளைப் பெற்றுள்ளன.

15. பிராயச்சித்த நகோகோர : தவத்தின் போது செய்ய வேண்டிய கடினமான சடங்குகளே வராகத்தின் பயங்கர நகங்கள் ஆகும்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வராஹ புராணம் ! - Page 4 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Mon Jun 15, 2020 6:49 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 4 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Mon Jun 15, 2020 7:30 am

வராஹ புராணம் ! - Page 4 89768910

வராஹ புராணம் - பகுதி 11

வைஷ்ணவி தேவி
==============

யுகமுடிவில் அண்டம் அழியும் போது பூலோகத்தில் மக்களும், புவர் லோகத்தில் பறவைகளும், சுவர்லோகத்தில் நெறிமிக்கவர்களும், மெச்சத் தக்கவர்களும், மஹர் லோகத்தில் பெரிய ரிஷிகளும் இருந்தனர். பூமியில் வைஷ்ணவிதேவி மணம் செய்து கொள்ளாமல், மந்தர மலையில் தியானத்தை (தவத்தை) ஆரம்பித்தாள். ஒருநாள் அவளது ஒன்றிய மனவமைதி குலைந்தது. இதனால் லக்ஷக்கணக்கான பெண்கள் தோன்றினர்.

அவர்களுக்காக தேவி ஓர் அரண்மனையை அமைத்திட அதிலிருந்து, நட்சத்திரங்களிடையே சந்திரன் ஆண்டு வந்தாள். பிரம்மலோகம் சென்று கொண்டிருந்த நாரதன் அழகிய அரண்மனையையும், வைஷ்ணவிதேவி, மற்ற பரிவாரங்களையும் கண்டு நின்றார். அவர் மனதில் மகிஷாசுரன் நினைவு வந்தது. அவனை அழிக்கும் வழியும் தோன்றியது.

நாரதன் மகிஷாசுரன் வசிக்கும் பெருநகர்க்குச் சென்று, அவனைக் கண்டு வைஷ்ணவி தேவியின் அழகைப் பற்றி விவரித்தார். அதுகேட்ட அசுரன் அவளே தனக்கேற்ற மனைவி என்று அவன் அவளை மணக்க விரும்புவதாகக் கூறி சம்மதம் பெற்றுவர, ஒரு தூதுவனை அனுப்பினான். அவனுடன் ஒரு சேனையையும் அனுப்பிவைத்தான். சேனைத்தலைவன் விரூபாஷன்.

தேவர்களும் வைஷ்ணவி தேவிக்கு உதவியாக வந்தனர். எனினும், அரக்கனே வென்றான். அடுத்து, வித்யுத் பிரமா என்னும் தூதுவன் வைஷ்ணவியிடம் சென்று அரக்கனின் எண்ணத்தைக் கூறினார். அத்துடன் மகிஷாசுரன் வரலாற்றையும் எடுத்துரைத்தான். பயங்கர அசுரன் விப்ரசித்தியின் மகள் மஹிஷ்மதி என்ற அழகி. அவள் ஒரு நாள் ஓர் அழகிய பள்ளத்தாக்கில் உலாவச் சென்றாள்.

அங்கு ஓர் ஆசிரமத்தைக் கண்டாள். அதைத் தான் பெற எண்ணி அதிலுள்ளவரை வெருளச் செய்து அகற்ற எண்ணி பெண் எருமை வடிவில் அதனுள் நுழைய, உண்மையை அறிந்த முனிவர் அவளை நூறாண்டுகாலம் எருமையாக இருக்கச் சபித்தார். மஹிஷ்மதி தன் தவறுக்கு மனம் வருந்தி முனிவரிடம் மன்னிப்புக் கேட்டுச் சாபத்தை நீக்க அருள வேண்டினாள்.

ஆனால், முனிவர் சாபத்தின் கடுமையைக் குறைத்து அவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கும் வரையில் பெண் எருமையாக இருக்குமாறு செய்தார். இந்தப் பெண் எருமை நர்மதைக் கரையில் வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகள் கழிய அந்நதி நீர் சிந்துத்தீப முனிவரால் சக்தி வாய்ந்ததாயிற்று. இந்தப் பெண் எருமை அந்நதியின் புண்ணிய நீரில் குளித்தது. அதற்கு ஓர் மகன் பிறந்தான். அவனே மகிஷாசுரன்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 4 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Mon Jun 15, 2020 7:31 am

வராஹ புராணம் ! - Page 4 Unname10

இந்த மகிஷாசுரனே இப்போது வைஷ்ணவி தேவியை அடைய தூது அனுப்பினான். ஆனால், வைஷ்ணவி தேவியோ தானோ, மற்றும் தன் தோழியர்களில் எவருமோ, மஹிஷாசுரனை மணக்கும் பேச்சுக்கு இடமே இல்லை என்றாள். இதனால் வைஷ்ணவி தேவியும் அவள் தோழியரும் அரக்கரின் சேனையை எதிர்க்க மாபெரும் போர் நடந்தது. தேவி பத்து காளிகளும், அவற்றில் ஆயுதங்களும் கொண்டு போரிட்டாள்.

மகிஷாசுரன் தானே போரில் போர் புரியவர, நெடுநாட்கள் வரை போர் நிகழ இறுதியில் மகிஷாசுரன் தோற்று ஓடலாயினான். அத்தேவியும் அவனைத் தொடர்ந்து சென்று ஷதஸ்சிருங்க மலையில் மகிஷாசுரனைப் பணியச் செய்து அவன் தலையை ஈட்டியால் வெட்டினாள். அரக்கன் அருள்மிகு வைஷ்ணவி தேவியால் கொல்லப்பட்டதால் சொர்க்கவாசம் பெற்றான். தேவர்கள் துயர் நீங்கிட தேவியின் புகழைப் பலபடப் பாடித் துதித்தனர். இது தேவி மகிமை கூறும் ஸ்தோத்திரம் அதாவது துதியாகும். இதை தினமும் படித்தால் பாவங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். இந்த மகிஷாசுரமர்த்தன வரலாறு மார்க்கண்டேய புராணம் போன்றவற்றிலும் சொல்லப்பட்டிருக்கிறது. அதன்படி மகிஷாசுரனைக் கொன்ற தேவி துர்க்கை எனப்படுகிறாள்.

சகல செல்வங்களை அள்ளித்தரும் வைஷ்ணவி தேவி மந்திரம்

மகாவிஷ்ணுவின் சக்தி சொரூபமாக ஆவிர்ப்பவித்த அருள்தான் வைஷ்ணவி தேவி. வைஷ்ணவி தேவிக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து, வைஷ்ணவியை வழிபாடு செய்து வந்தால், சகல ஐஸ்வரியங்களும் உங்கள் இல்லத்தில் குடிகொள்ளும்.  செல்வ வளம் தரும் அன்னையாக வைஷ்ணவி தேவி பார்க்கப்படுகிறாள். சகல சவுபாக்கியங்களுடன், செல்வ வளம் பெற விரும்புபவர்கள் வழிபட வேண்டிய  தெய்வம் இவள். குறிப்பாக தங்கத்தை அளவின்றி கிடைக்கச் செய்பவள். அம்பாளின் கைகளில் இருந்து பிறந்தவள்.

காயத்ரி மந்திரம் :

ஓம் ச்யாம வர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவீ ப்ரசோதயாத்

தொடரும்...

ஓம் நமோ வராஹாய!

🌸🌸🌸🌸🌸🌸


Last edited by krishnaamma on Mon Jun 15, 2020 7:37 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 4 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Mon Jun 15, 2020 7:32 am

வராஹ புராணம் ! - Page 4 Tn_13010

வைஷ்ணவி அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.
விஷ்ணுவின் சக்தியான இவர் நீல நிறமானவர். ஆறு கரங்களைக் கொண்டிருப்பார். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றைய கரங்களில் கதா, தாமரை என்பன காணப்படும். இடது கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்டுவதாகவும் மற்றையன சங்கு, சக்கரம் ஏந்தியவாறும் காணப்படும். வைஷ்ணவி அழகிய கண்களையும், முகத்தினையும், மார்பினையும் கொண்டிருப்பார். மஞ்சள் ஆடை அணிந்திருப்பார். விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்.
தியான சுலோகம்
சக்ரம் கண்டாம் கபாலம்ச சங்கம்ச தத்திகண:
தமால ச்யாமளா த்யேயோ வைஷ்ணவி விப்ரமோஜ்வகை.

மந்திரம்

ஓம் வை வைஷ்ணவ்யை நம:
ஓம் ரூம் ஸாம் வைஷ்ணவீ கன்யகாயை நம:

காயத்ரி மந்திரம்

ஓம் ச்யாம வர்ணாய வித்மஹே
சக்ர ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி ப்ரசோதயாத் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 4 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Mon Jun 15, 2020 7:41 am

வராஹ புராணம் ! - Page 4 75dd8210

வராஹ புராணம் - பகுதி 12

ருத்ராணி தேவியும் ருரு அரக்கனும்
====================

தேவி ருத்ராணி (துர்க்கை) நீலகிரி மலையில் தவம் செய்து கொண்டிருந்தாள். அவ்வமயம் கடல் நீருக்கு நடுவில் அரண்மனை கட்டிக் கொண்டு அட்டகாசம் புரிந்து வந்தான் அரக்கன் ருரு. அவன் கடின தவம் செய்து பிரம்மனிடம் ஒரு வரம் பெற்றான். அதன்படி அவன் இறந்தாலும் அவன் தலை தரையில் விழக்கூடாது என்ற வரம்பெற்ற அதன் மூவுலகையும் வென்றான்.

இந்திரனைத் துரத்தி அமராவதி நகரைக் கைப்பற்றினான். இந்திரனும், மற்ற தேவர்களும் நீலகிரி மலையை அடைந்து தேவி ருத்ராணியைத் துதி செய்தனர். அப்போது அன்னை ருத்ராதேவி, அவர்களைக் காத்திடுவதாக வாக்களித்தாள். அவள் உடனே கர்ச்சித்து பயங்கரமாகச் சிரிக்க பயங்கர தேவதைகள் தோன்றினர். அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அரக்கர்களுக்கும், தேவியின் தோழியர்களுக்கும் இடையே பயங்கரப் போர் நடந்தது. அரக்கர்கள் எதிர் நிற்க முடியாமல் தோற்று ஓடினர். அன்னை ருத்ராணி அரக்கன் ருருவைத் தானே கொன்றாள். அவனுடைய தலையைத் திரிசூலத்தில் தாங்கி தூக்கி நின்றாள். இவ்வடிவில் தேவிருத்ராணி சாமுண்டி எனப்பட்டாள்.

தேவர்கள் கிரிபிரகாரஸ்துதி கொண்டு தேவியைப் புகழ்ந்து பாடினர். இந்த மந்திரத்தைக் கொண்டு கலைமகள், வைஷ்ணவிதேவி, ருத்ராணி தேவியரைத் துதி செய்து மகிழ்விக்கலாம். அவ்வாறு செய்தால் தடைகள் நீங்கும். பாவங்கள் தொலையும். ருத்ராணி, வைஷ்ணவிதேவி உருவங்களில் சிவபெருமானும் பிரசன்னமாகி இருக்கிறார்.

🌺ஸ்ரீ ருத்ராணி பீடம் 🌺
ஸ்ரீ மஹா காளி -
உஜ்ஜையினி -
மத்திய ப்ரதேஷம்


தொடரும்...

ஓம் நமோ வராஹாய!🌸🌸🌸🌸🌸


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 4 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Mon Jun 15, 2020 8:17 am

வராஹ புராணம் - பகுதி 13

நக்ன கபாலிக விரதம்
===================

ருத்திரனைத் திருப்தி செய்ய மூன்று முக்கிய விரதங்கள் உள்ளன. அவை கபாலிக விரதம், பாப்ரவ்யவிரதம், சுத்த சைவ விரதம் என்பன. கபாலிக விரதம் பற்றி இனிக் காண்போம். பிரம்மா, சிவன் இருவருக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஆனால், பிரம்மா சிவனைத் தோற்றுவித்த பிறகு ருத்திரனைத் தோள்களில் தூக்கிக் கொண்டு ஐந்தாவது தலையில் உள்ள வாயால் ருத்ரனைத் துதி செய்ய அதில் கபாலி என்ற பெயர் இருந்தது. தன்னை அவமதிப்பதற்காகவே பிரம்மா, கபாலி என்ற சொல்லைப் பயன்படுத்தினார் என்ற கோபம் கொண்ட ருத்திரன் பிரம்மாவின் ஒரு தலையை இடது கைபெருவிரலால் அகற்றினான். பிரம்மா நான்முகன் (சதுர்முகன்) ஆனான்.

அகற்றப்பட்ட அத்தலை சிவனின் கையிலேயே ஒட்டிக் கொண்டது. பலவகை முயற்சிகளுக்குப் பிறகு ருத்திரன் பிரம்மாவிடமே வந்து தன்கையை விட்டு அத்தலை அகல உபாயம் கேட்டார். பிரம்மா ருத்திரனை கபாலிக விரதம் அனுஷ்டிக்குமாறு கூறினார். (இதனால் சிவன் பிரம்ம ஹத்ய தோஷம் பெற்றார்.)

மந்தர மலைக்கு ருத்திரன் சென்று அத்தலையை மூன்று பகுதியாக்கினார். தலைமுடியை முப்புரியாக்கித் தன் உடலில் பூணூலாகத் தரித்துக் கொண்டார். பல புனிதத் தலங்களுக்குச் சென்று புனித நீராடித் தியானம் செய்யலானார். இறுதியில் அவர் அப்பூணூலையும், மற்ற உடைகளையும் அகற்றி நிர்வாணமானார் (அ) நக்னமானார். இந்நிலையில் ருத்திரன் காசியை (வாரணாசியை) அடைந்தார். அங்கு கங்கை நீரில் மூழ்கி எழ அவர் கையிலிருந்த கபாலம் விடுபட்டது. அத்தகைய பெருமை பெற்றது வாரணாசி நகரம். அப்போது பிரம்மா தோõன்றி ருத்திரன் ஆற்றிய விரதம் இனி நக்ன கபாலி விரதம் எனப்படும் என்றார். இந்த விரதத்தை அனுஷ்டித்தால் கோரியவை கிடைக்கும். பிரம்மஹத்ய தோஷமும் நீங்கும்.

தொடரும்...

ஓம் நமோ வராஹாய!🌸🌸🌸🌸🌸


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 4 Empty Re: வராஹ புராணம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum