ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» இளையராஜா அவர்களின் அனைத்து பாடல்களையும் எங்கே தரவிறக்கிக்கொள்ள இயலும்? நன்றி!
by மாணிக்கம் நடேசன் Today at 5:36 pm

» சிவப்பு முட்டைகோஸ் உங்கள் ஆயுளை அதிகரிக்கும்
by T.N.Balasubramanian Today at 5:05 pm

» கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை
by ayyasamy ram Today at 3:11 pm

» என் தாயே…(கவிதை)
by ayyasamy ram Today at 3:09 pm

» மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு- 50 தொழிலாளர்கள் பலி
by ayyasamy ram Today at 3:01 pm

» இனி இவற்றை பதிவிறக்கம் செய்யும் போது எச்சரிக்கை அவசியம் - மத்திய அரசு அறிவுறுத்தல்
by ayyasamy ram Today at 2:58 pm

» காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் நட வேண்டும் தெரியுமா?
by ராஜா Today at 2:13 pm

» பெண்ணே நீ சிறுமை கொள்ளாதே
by ranhasan Today at 2:12 pm

» பெட்ரோல் - டீசலை அடுத்து சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு :
by ராஜா Today at 1:53 pm

» தமிழகத்தின் அடையாளமான சேலம் தம்மம்பட்டி மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு!
by ராஜா Today at 1:51 pm

» இடியாப்ப சிக்கலாகி விட்ட கொரோனா வைரஸ்!
by ayyasamy ram Today at 1:47 pm

» வேண்டுமென்றே வதந்தி பரப்புகிறார்கள்: பாடகி ஜானகி வேதனை
by ராஜா Today at 1:44 pm

» பரமக்குடி அதிமுக எம்.எல்.ஏ.,க்கு கொரோனா உறுதி
by ayyasamy ram Today at 1:37 pm

» அமெரிக்காவில் ஒரே நாளில் 50 ஆயிரத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு
by ayyasamy ram Today at 1:34 pm

» அடுப்பு தின்னும் பத்தாண்டுகள்- கவிதை
by ayyasamy ram Today at 1:21 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:30 pm

» உறக்கம் என் எதிரி
by ayyasamy ram Today at 11:23 am

» வேலன்:- சிடி எழுதி முடித்ததும் சிடி வெளிவராமல் தடுக்க-புதியவர்களுக்காக
by velang Today at 8:37 am

» வேலன்:-தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த-Inbox Bear
by velang Today at 8:32 am

» கண்ணதாசனின் டூயட் பாடல்கள்
by ayyasamy ram Today at 8:11 am

» வீட்டுக்குறிப்புகள் -மங்கையர் மலர்
by மாணிக்கம் நடேசன் Today at 8:05 am

» தமிழ் புத்தகங்கள் பகுதி - 1 [20 Books PDF]
by கண்ணன் Today at 7:27 am

» கொரோனா மனிதனால் வெல்லமுடியாத ஒரு நோயல்ல.
by விமந்தனி Today at 1:04 am

» தி பிளூட்ஸ் அண்டர் ப்ளூ ப்ளேம் - ரான்ஹாசன்
by விமந்தனி Today at 12:06 am

» கத்தாழங் காட்டு வழி கள்ளிப்பட்டி ரோட்டு வழி
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» பயனுள்ள செயலிகள்
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» நிவேதிதா ஜெயாநந்தன் நாவல்கள்
by lakshmi palani Yesterday at 6:00 pm

» நீ தூக்கிக் கொண்டு செல்வது எது..?
by T.N.Balasubramanian Yesterday at 5:51 pm

» என்.எல்.சி. அனல் மின் நிலைய விபத்து : பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» ஆயிரம் ஜன்னல் வீடு இது அன்பு வாழும் கூடு
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» சென்னையில் 2015ல் பெய்த மழையை விட அதிக மழை பெய்யும்: சென்னை ஐஐடி எச்சரிக்கை
by ranhasan Yesterday at 3:31 pm

» மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது.!
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» வார்த்தையை சுருக்கி உபயோகிப்பது தேவையா...
by T.N.Balasubramanian Yesterday at 2:18 pm

» யூடியூப் டீச்சர்
by ayyasamy ram Yesterday at 2:16 pm

» அதிர்ஷ்டம் – ஒரு பக்க கதை
by ranhasan Yesterday at 1:59 pm

» ஆல்பிரட் நோபல் - சாதித்து காட்டியவர்
by ayyasamy ram Yesterday at 1:54 pm

» பிரச்சனை யாருக்கும் வரலாமே..!!
by T.N.Balasubramanian Yesterday at 1:53 pm

» வேண்டும் எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 11:44 am

» தைரியமும் சமயோசிதமான புத்தியும் இருந்தால் பிழைத்துக் கொள்ளலாம்...!
by ayyasamy ram Yesterday at 11:30 am

» அன்பைவிட இவ்வுலகில் சுவையானது வேறு எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» அழகாகக் கோபப்படுங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:01 am

» "வாழ்க வளமுடன்" - ஒரு மந்திரச் சொல்..!!
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ”குங்குமம் வைக்கல, வளையல் போடல” - விவாகரத்து கொடுத்துருங்க நீதிபதி
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கதவை உடைத்த போராட்டக்காரர்கள் - துப்பாக்கியை காட்டி மிரட்டிய தம்பதியர் - அமெரிக்காவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:47 am

» அர்னாப் கோஸ்வாமி மீது போலீசாரின் நடவடிக்கைக்கு தடை
by ayyasamy ram Yesterday at 8:14 am

» இந்தியாவில் 4.58 கோடி பெண்கள் மாயம்! ஐ.நா., பகீர் அறிக்கை
by ayyasamy ram Yesterday at 8:12 am

» சீன 'ஏசி, டிவி'க்குக்கு தடை; மத்திய அரசு தீவிரம்
by ayyasamy ram Yesterday at 8:08 am

» மகிழ்ச்சியாக இருப்பதற்கு சாண்டோஸ் கூறும் ஐந்து பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 am

» கவிதை தூறல்
by ayyasamy ram Yesterday at 5:52 am

Admins Online

வராஹ புராணம் !

வராஹ புராணம் ! - Page 2 Empty வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 7:35 pm

First topic message reminder :

வராஹ புராணம் - பகுதி 1

வராஹ புராணம் ! - Page 2 RdH2yquTVGVkzdMiYqQy+0a6a78a6-2d67-4a4a-b8fb-3e3e4a297fa9

யஜ்ஞ வராகம்
============

யஜ்ஞம் = உலகைச் சிருஷ்டிக்கும் சிறந்த சக்தி உடைய எண்ணம். வராகம் = கலவரம். குழப்பங்களிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி. யஜ்ஞம் என்பது யாகம். அதாவது யஜ்ஞத்தின் மூல சிருஷ்டி சக்தியை வெளிப்படுத்த உதவும் ஒரு சமயச்சடங்கு. யஜ்ஞ வராகத்தை விவரிக்க முப்பத்தைந்து வெவ்வேறு வகை பெயர்கள் விளங்குகின்றன. அவையாவன:

1. வேத பாதம் : வராகத்தின் நான்கு பாதங்களும் நான்கு வேதங்கள்.

2. யுபதம்ஷ்ட்ரம் : வராகத்தின் இரண்டு தந்தங்கள். விலங்குகளைப் பலியிட உபயோகப்படுத்தும் மேடை போன்றது.

3. கிரது தந்தம் : ஒரு யஜ்ஞத்தில் செய்யப்பட வேண்டிய அறுபத்து நான்கு பலிகளைக் குறிப்பது கிரது. இவை போன்று வராகத்தின் பற்கள் உள்ளவை.

4. சிதி மூலம் : சிதி என்றால் அக்கினிமேடை (அ) பலிபீடம். வராகம் வாய் பிளத்தல் இதை போன்றதாகும்.

5. அக்கினி ஜிஹ்வ : வராகத்தின் நாக்கு அக்கினி போலுள்ளது.

6. தர்ப்பலோமம் : வராகத்தின் உடல் மீதுள்ள உரோமம் மேடை மீது பரப்பப்படும் தர்ப்பைப் புல் போன்றது.

7. பிரம்ம சீர்ஷம் : வராகத்தின் தலை பிரம்மாவைப் போல் உள்ளது.

8. அஹோர திரிக்ஷானாதாரம் : இரவும், பகலும் வராகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.

9. வேதாங்க ச்ருதி பூஷனம் : அறிவின் பிரிவுகளாகிய ஆறு வேதாங்கங்கள் வராகத்தின் காதணிகள் ஆகும்.

10. ஆஜ்யனசா : நாசித்துவாரங்கள் யாகத்தில் தெளிக்கப்படும் நெய் போன்றுள்ளன.

11. சிருவண் துண்டம் : நீண்டுள்ள மூக்கு யாகத்தில் நெய் ஊற்றப் பயன்படும் கரண்டி போன்றது.

12. சாம கோஷ வன : சாமவேதத்துதிகள் போல் வராகத்தின் குரல்.

13. சத்திய தர்மமாயா : வராகம் முழுவதும் தருமநெறியும், உண்மையும் கொண்டது.

14. கர்மவிகரம் சத்கிருத : புரோகிதர்கள் செய்யும் சடங்குகள் வராகத்தின் சக்தி வாய்ந்த அசைவுகளைப் பெற்றுள்ளன.

15. பிராயச்சித்த நகோகோர : தவத்தின் போது செய்ய வேண்டிய கடினமான சடங்குகளே வராகத்தின் பயங்கர நகங்கள் ஆகும்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down


வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:25 pm

வராஹ புராணம் ! - Page 2 1q54PJVhQlyRmyeiUttm+varaha(1)

ஓம் நமோ வராஹாய!🌸🌸🌸🌸

ப்ரம்மாவின் வேள்வி தீயில் உதித்த எம்பெருமான்கள்

பிரம்மனை காக்கும் பொருட்டு உதித்தவன் வரதன்

தாயார் பிரார்த்தனையின் பொருட்டு அழகை காண்பிக்க உதித்தவன் யக்ஞ்ய வராஹன்

ஸ்ரீ அம்புஜவல்லி ஸமேத ஸ்ரீ பூவராஹ பரப்ரும்மணே நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:


முஸ்தா சூர்ணம்(கோரை கிழங்கு) பிரசாதம்

கோரை கிழங்கு என்பது கோரைப் புல்லிருந்து கிடைக்கும் கிழங்கு

இதையே முஸ்தா என்று வடமொழில் கூறுவர்.


முஸ்தா என்ற சொல்லுக்கு ஒன்று சேர்ந்திருத்தல் என்ற பொருள்.ஒரு கொத்தில் பல கிழங்குகள் ஒன்று சேர்ந்துள்ளதால் (கோரைகிழங்கு)
முஸ்தா என்ற பெயர் வந்த்து.

தண்ணீர் நிறைந்துள்ள கசப்பு நிலங்களில் உண்டாகும் கிழங்கு சிறந்த்து. அதனிலும் சிறந்த்து நாகர முஸ்தகம் என்னும் வகை.

முஸ்தா சூர்ணம் வாயுவை தணிக்க வல்லது என்று
“ராஜவல்லபம்” என்ற நூல் கூறுகின்றது.

கபம், பித்தம், ஜுரம், போன்ற வியாதிகளை போக்க வல்லது என்று
“பாவப்ரகாசம் “ என்ற நூல் தெரிவிக்கின்றது

விடங்கப் பட்டையுடனும், நெல்லிக்கனியுடனும் சேர்த்து சாப்பிட –
பேதி, பாண்டுரோகம், க்ஷயம், குஷ்டம் ஆகிய வியாதிகளை போக்க வல்லது என்று
“ஸப்த கல்பத்ருமம்” என்ற நூல் தெரிவிக்கின்றது


கோரை கிழங்கின் சூரணம் பலவிதமான சரீர வியாதிகளை போக்க வல்லது. கோரை கிழங்கு கசப்பும், காரமும் உடையதால் அதனை நன்றாக இடித்து, வஸ்த்ர காயம் செய்து , சலித்து , கொழவு ஜீனி(நாட்டு சர்க்கரை), நெய்யுடன் கலந்து ஸ்ரீ பூவராஹ பெருமாளுக்கு கண்டருளச் செய்வதால் வியாதிகள் போய் வலிமை உண்டாகும்.

இவ்வாறு பல மருத்துவ அம்சங்களைப் பெற்றிருப்பதாலும் ,இதனை ஸ்ரீ வராஹப்பெருமாள் விரும்பி அமுது செய்வதால் இக்கிழங்குக்கு வராஹம் என்ற பெயரும், இக்கிழங்கினை விரும்பி அமுது செய்யும் வராஹப்பெருமாளுக்கு முஸ்தார: என்ற பெயர் ஏற்பட்டுள்தாக பல வைணவ பெரியோர் அருளிச் செய்வர்.

இங்கு முஸ்தா சூர்ணத்தை ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ர நாதன்
ஸ்ரீ பூவராஹனுக்கு தினமும் திருமஞ்சனம்(அபிஷேகம்) ஆனவுடன் அமுது செய்து க்ஷேத்ரப்பிரசாதமாக விநியோகிக்க படுகின்றது.

இந்த க்ஷேத்ரப்பிரசாதத்தை நாமும் ஸ்வீகரித்து ஆரோக்கியமும்,, ஸ்வரூப ஞானமும் பெற்று ஞானப் பிரான் இன்னருளுக்கு என்றும் இலக்காகி வாழ்ந்திடுவோமாக!!!!!!!!!!!
🌸🌸🌸🌸🌸

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:26 pm

வராஹ புராணம் ! - Page 2 OyBEGtZmReC4KsLJQAyk+images(4)

ரைவ்ய முனிவர் கயா தீர்த்தத்தை அடைந்து தன் இறந்த மூதாதையர்க்குச் சமயச் சடங்குகளைச் (சிரார்த்தம்) செய்து முடித்துவிட்டுத் தவம் செய்ய முற்பட்டார். ரைவ்ய முனிவர் ஆசிரமத்துக்கு ஒருநாள் முனிவர் சனத்குமாரர் வந்தார்.

அவர் திடீரென்று தன் உருவை மிகவும் பெரிதாக்கிக் கொண்டு தோற்றம் அளித்தார். நீ ஏன் என்னைப் பாராட்டினீர் என்று ரைவ்ய முனிவர் பிரம்மபுத்திரன் சனத்குமாரரைக் கேட்டார். அதற்கு அவர் நீ கயா சிரார்த்தம் செய்தாயல்லவா அதற்காக என்றார். அடுத்து சனத்குமாரர் கயாசிரார்த்த மகிமை பற்றி ரைவ்ய முனிவருக்கு விளக்க ஒரு கதை கூறினார். இது விசால மன்னனின் கதை.

விசால மன்னன் செல்வ வளங்களுடன் மகிழ்ச்சியாக வாழந்து வந்தான். எனினும், அவனுக்குப் புத்திரப்பேறு ஏற்படாத குறை இருந்தது. அவனுக்குப் பெரியோர்கள், கயாவுக்குச் சென்று மறைந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யுமாறு அறிவுரை பகர்ந்தனர். அவ்வாறே கயாவுக்குச் சென்று மதச்சடங்குகள் முடிந்தவுடன் அவன் முன் மூன்று உருவங்கள் தோன்றின. ஒன்று வெள்ளையாகவும், மற்ற இரண்டும் சிவப்பு, கருப்பு நிறங்களிலும் தோன்றின. வெள்ளை வண்ண உருவம் ரைவ்யனின் தந்தை; அவர் பாவம் எதுவும் செய்யாததால் தூய வெண்மை நிறத்தில் இருந்தார்.

சிவப்பு நிற உருவம் அவரது பாட்டன், கருப்பு உருவம் முப்பாட்டன் ஆகும்-அவர்கள் தீய வாழ்க்கை வாழ்ந்ததால் அதன் பலனை அனுபவிக்கின்றனர். ரைவ்யன் கயாசிரார்த்தம் அனுஷ்டித்த உடன் அவனுடைய மூதாதையர்கள் பாவங்கள் விடுபட்டு விடுதலை அடைந்தனர். இதன்மூலம் ஒருவர் கயாசிரார்த்தம் செய்வதன் மூலம் அவரது முன்னோர்கள் பாவபலன்களிலிருந்து விடுபடுகின்றனர்.

அது மட்டுமின்றி அத்தகைய கர்மாவைச் செய்பவனுக்குப் புண்ணியம் சேர்கிறது. எனவே ரைவ்ய முனிவர் பாராட்டப்பட்டார். சனத்குமாரர் சென்ற பிறகு ரைவ்ய முனிவர் நாராயணனைக் கதாதரன் (கதை ஏந்தியவர்) உருவில் பிரார்த்திக்க பகவான் அவன் முன்தோன்றி அவன் விரும்பிய மோட்சம் அளித்தார்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:27 pm

வராஹ புராணம் ! - Page 2 Le5k2MohSWlMcamexQr6+75dd82a6-95bd-4850-8bc7-9e90a12d9ff5

வராஹ புராணம் - பகுதி 6
சம்யமானனும் வேடன் நிஷ்தூரகனும்
=============================

ஒழுங்கான, கட்டுப்பாடுமிக்க, தருமநெறி தவறாத சம்யமானன் என்றொரு அந்தணர் இருந்தான். நிஷ்துரகன் என்றொரு வேடனும் அதே சமயத்தில் வாழ்ந்து வந்தான். சம்யமானன் கங்கையில் நீராடச் சென்றான். கங்கைக் கரையில் நிஷ்துரகன் பறவைகளைப் பிடிப்பதை சம்யமானன் கண்டான். சம்யமானன், நிஷ்துரகனிடம் "பறவைகளைக் கொல்லாதே" என அறிவுரை கூறினான். "பறவைகளைக் கொல்ல நான் யார்? எல்லா உயிர்களிலும் தெய்வீக ஆன்மா உள்ளது.

அதை எப்படி என்னால் கொல்ல முடியும்? நான் செய்தேன் என்பது தற்பெருமை, தற்புகழ்ச்சி ஆகும். அப்படிப்பட்டவருக்கு முக்தி ஏற்படாது. பிரம்மன் தான் கர்மா செய்பவன்" என்று வேடன் கூறினான். பின்னர் அவன் தீ மூட்டினான். தீயின் நாக்கில் ஏதாவதொன்றை அணைக்குமாறு கூறினான் வேடன். அந்தணன் அதற்கு முயற்சி செய்ய தீ முழுவதும் அணைந்துவிட்டது. "தீயும், அதன் பல நாக்குகளும் ஒன்றே" என்றான் அந்த வேடன் நிஷ்தூரகன்.

"இரண்டில் ஒன்றை எப்படி வேறுபடுத்தி அறிய முடியும்? எனவே தீயில் ஒரு பகுதியை எப்படி அணைக்க முடியும்? சிருஷ்டியில் அனைத்தும் பிரம்மன் சொரூபமே. தனி ஆன்மாவுக்கு என்ன நேர்ந்தாலும் பிரம்மன் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான் நான் செய்கிறேன் என்ற நினைப்பின்றி ஒருவன் தன்கர்மாவைச் செய்ய வேண்டும்" என்று கூறினான் வேடன். அப்போது விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்து அவனை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது.

ரைவ்யனுக்கும் வாசுவுக்கும் அவர்களுடைய கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. இவ்வாறு ரைவ்யன், வாசு கதை கேட்ட அஷ்வஷிரன் ஐயமும் தீர்ந்தது. அவன் தன் அரசைத் தன் மகன் ஸ்தாவஷிரனிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்ய நைமிசார வனம் சென்றான். நாராயணனை நோக்கித் தவம் செய்து நாராயணனுடன் கலந்து விட்டான். ரைவ்யனும் யாகங்கள் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

தொடரும்...

ஓம் நமோ வராஹாய!🌸🌸🌸🌸🌸


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:28 pm

வராஹ புராணம் ! - Page 2 QLPVXQdcRoiQUCTqsg0R+8c4a0229-db39-4feb-b3d7-3007a878cd40

ஈனமாய் எட்டும் நீக்கி, ஏதம் இன்றி மீது போய்
வானம் ஆள வல்லையேல், வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே!
ஞானமாகி ஞாயிறாகி ஞாலமுற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்தமூர்த்தி, எந்தை பாதம் எண்ணியே..

பொருள் : மிகவும் கொடிய காமம், குரோதம், கஞ்சத்தனம், மோகம், கர்வம், பொறாமை, துவேஷம், அஞ்ஞானம் போன்ற எட்டு குணங்களும் நீங்கி, சம்சார பந்தம் நீங்கி, அனைத்துக்கும் மேலான பரமபதம் அடைந்து வானுலகம் ஆள வேண்டும் என்று நீ விரும்பினால், என் நெஞ்சமே எம்பெருமானை வணங்கி வாழ்த்து. ஞானமாகி, ஞாயிறாகி, பன்றி வடிவில் சென்று உலகை கொணர்ந்த பரம்பொருளை என்றென்றைக்கும் சிந்தித்து இருப்பாயாக... ஓம் நமோ நாராயணாய...

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:30 pm

*வராஹ புராணம் - பகுதி 7

வராஹ புராணம் ! - Page 2 3F1pRlCjS9eDaHRKcn0Q+screen-4

ரைவ்ய முனிவர் கேட்ட கதை
=================

ரைவ்ய முனிவர் கயா தீர்த்தத்தை அடைந்து தன் இறந்த மூதாதையர்க்குச் சமயச் சடங்குகளைச் (சிரார்த்தம்) செய்து முடித்துவிட்டுத் தவம் செய்ய முற்பட்டார். ரைவ்ய முனிவர் ஆசிரமத்துக்கு ஒருநாள் முனிவர் சனத்குமாரர் வந்தார். அவர் திடீரென்று தன் உருவை மிகவும் பெரிதாக்கிக் கொண்டு தோற்றம் அளித்தார். நீ ஏன் என்னைப் பாராட்டினீர் என்று ரைவ்ய முனிவர் பிரம்மபுத்திரன் சனத்குமாரரைக் கேட்டார். அதற்கு அவர் நீ கயா சிரார்த்தம் செய்தாயல்லவா அதற்காக என்றார். அடுத்து சனத்குமாரர் கயாசிரார்த்த மகிமை பற்றி ரைவ்ய முனிவருக்கு விளக்க ஒரு கதை கூறினார். இது விசால மன்னனின் கதை.

தொடரும்...

ஓம் நமோ வராஹாய!
🌸🌸🌸🌸🌸🌸


Last edited by krishnaamma on Wed Jun 03, 2020 9:33 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:32 pm

#ஸ்ரீமுஷ்ணம் / ஸ்ரீ வராஹ க்ஷேத்திரம் என்று  ஸ்ரீமுஷ்ணம் என்று  பூதேவியுடன் வாசம் செய்வதால் பூவராஹர் என்று பெருமாளுக்கு பெயர்.

வராஹ புராணம் ! - Page 2 Mo9Ibha9SnuihgKosclK+9b2295fdbd1328c9d85f354f74ab98db

*உபநிஷத் என்றால் குருவின் அருகில் இருந்து அவர் மூலமாக அறியப்படும் மெய்ஞான உபதேசம் என்று பொருள். ரிபு என்ற முனிவர் 12 ஆண்டுகள் ஸ்ரீவராஹரை நோக்கித் தவமிருந்து தரிசனம் பெருகிறார். அந்த தரிசனத்தின் போது வராஹர் ரிபு முனிவருக்கு அளித்த உபதேசம் 'வராஹோபநிஷத்' என்று கூறப்படுகிறது. இந்த க்ஷேத்திரத்தில் இருக்கும் தீர்த்தங்கள் சிறப்புற்றுத் திகழ்கிறது, அவை, நித்ய புஷ்கரிணி, லக்ஷ்மி நாராயண தீர்த்தம், பூமி தீர்த்தம், சக்ர தீர்த்தம், சங்கு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், வேணு தீர்த்தம் போன்றவையாம்.

*கல்லால மரத்தின் கீழ் இருந்து வேதத்தை அருளிய ஈசனைப் போல இங்கே, நித்ய புஷ்கரிணி தீர்த்தத்தின் அருகில் இருக்கும் அஸ்வத்த மரமானது மிக பழமையானதாக, யுக-யுகாந்தரங்களாக இருப்பதாகவும், அதன் அடியில் இருந்து ஸ்வேத வராஹப் பெருமாள் தேவர்களுக்கு வேதாத்யயனம் செய்து வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே பெருமாளே யக்ஞரூபமாகவும், யக்ஞாங்கமாகவும், யக்ஞத்துக்கு உரியவனாகவும், யக்ஞத்தை புசிப்பவனாகவும், யக்ஞேஸ்வரனாகவும், யக்ஞபலத்தை தருபவனாகவும் இருக்கிறானாம். இம்மரத்தடியில் உட்கார்ந்து வேத பாராயணம், மந்திர ஜபம் போன்றவை செய்தால் அளவற்ற பலன் என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நான்கு பாதங்கள் நான்கு வேதங்களாகவும், வராஹம் எழுப்பும் சப்தம் சாம கோஷமாகவும், அதன் தந்தம் யூபஸ்தம்பமாகவும், நாவே வேள்வித்தீயாகவும், உடலில் இருக்கும் உரோமங்கள் தர்பைப் புல்லாகவும் அதன் உமிழ்நீரானது நெய்யாகவும், மூக்கு சுருவம் என்று சொல்லப்படும் ஹோமக் கரண்டியாகவும், எலும்புகள் மந்திரமாகவும், ரத்தம் சோமரசமாகவும், அதன் பிராணன் அந்தராத்மாவாகவும், இதயம் தக்ஷிணையாகவும், தலை பிரம்மனாகவும், குடல் உத்காதாவாகவும், குறி ஹோதாவாகவும், சரீரம் யக்ஞசாலையாகவும் நடை ஹவ்பகவ்யம் என்றும் வாயு புராணத்தில் கூறப்பட்டிருக்கிறதாம். [இந்த குறிப்பு அங்கிருந்த அர்ச்சகர் சொல்லச் சொல்ல சிறு தாளில் எழுதிக் கொண்டேன், தவறுகள் இருக்கலாம், தெரிந்தவர்கள் பிழைதிருத்தம் செய்தால் நலம்]

கோபாயேத் அநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட: ப்ரள்யோர்மிகோஷ குருபிர் கோணாரவை: குர்குரை
மத் தம்ஷட்ராகுர கோடி-காட-கடநா-நிஷ்கம்ப-நித்யஸ்திதி:
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸெளத் அஸெள் பகவிதீமுஸ்தேவ் விச்வம் பரா:

என்று ஸ்ரீவேதாந்த தேசிகர் தமது தசாவதார ஸ்தோத்ரத்தில் இந்த அவதாரத்தைப் போற்றுகிறாராம். இதன் பொருள், மஹாப் பிரளய காலத்தில் கரைபுரண்டு பொங்கியெழும் சமுத்திரத்தின் அலைகளின் ஓசைபோல் குர்-குர் என்று மூக்கிலிருந்து வரும் சப்தத்தால் இவ்வுலகினைப் பரிசுத்தமாக்கிய பன்றியாக அவதரித்த பெருமான், எல்லா உலகங்களையும் காப்பாற்றக் கூடியவர். மகிமை பொருந்திய இந்த பூமிதேவி அந்த வராஹப் பெருமானின் கோரைப் பல்லின் நடுவில் ஒரு கோரைக் கிழங்கு போல கெட்டியாக அசைவற்று இருத்தப் பெற்றாள். இவ்வாறாக பூமிதேவியே உறைந்திருப்பது இப்பெருமானின் பல் நுனியில் என்றால் அந்த உருவத்தில் பெருமை சொல்லவும் தகுமோ? என்பதாம்.

கலியில் வேங்கடவனே பலப்பிரதாயகன் என்பர். அவனது அஷ்டோத்திரத்திலும் முத்தாய்ப்பாக "ஸ்ரீயக்ஞ வராஹாய நம:" என்ற நாமம் வரும். இவ்வாறான பெருமைசேர் ஸ்வேத வராஹனைத் தொழுது நாமும் .

தொடரும்...


Last edited by krishnaamma on Wed Jun 03, 2020 9:35 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:34 pm

வராஹ புராணம் ! - Page 2 MLro0HKERsu3ioWo5QTW+Sree_Varaha_Puranam-300x450

குட்டி வராஹன் என்று செல்லமாக பெயர் கொண்ட ரேவதி வராஹன்

வைகாசி ஆதிரைநன்னாளில் அவதரித்தவரே,
வையமுய்யநல்வழிகளைகாண்பிப்பவரே!
வைகாசி…
கலைகள்அறுபத்தாறுநன்குஅறிந்தவரே,
அலைபோன்றசம்சாரத்தில்மூழ்கியவரை;
நிலையானபதம்காட்டிஅருள்தனைபுரிபவரே,
தலையால்நின்தாள்நான்பணிந்திடுவேனே!
வைகாசி….
சரணடைந்தவர்கள்மனக்குறைகள்கேட்டு,
மரணபயத்திலிருந்துஅவர்களையும்மீட்டு;
சரணாகதிமார்கத்தைஅவர்க்குஉபதேசிப்பரே,
சரணடைந்தேன்நின்பொற்பாதங்களையே!
வைகாசி…..

ஸ்ரீமுஷ்ணம்

நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முரரிபு "வராஹஸ்ய" பவதி-ங்கிற செளந்தர்யலஹரி தான் ஞாபகம் வருது! துன்பக் கடலில் மூழ்கி இருப்போரை மீட்டு எடுக்கும் வராகத்தின் கோடு...

ஸ்ரீமுஷ்ணம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றில்லையாயினும், மிகவும் சிறப்புள்ள அபிமானத் தலம்!

பூமிதேவி அந்த வராஹப் பெருமானின்

பெருமாளே

யக்ஞரூபமாகவும், யக்ஞாங்கமாகவும்,
யக்ஞத்துக்கு உரியவனாகவும்,
யக்ஞத்தை புசிப்பவனாகவும், யக்ஞேஸ்வரனாகவும்,
யக்ஞபலத்தை தருபவனாகவும்

அவனே யக்ஞம்! அவனே யக்ஞ பலம்! அவனை வணங்குவதே யக்ஞமாகி விட்டதே!

இம்மரத்தடியில் உட்கார்ந்து வேத பாராயணம், மந்திர ஜபம் போன்றவை செய்தால் அளவற்ற பலன் என்று கூறுகிறார்கள்

அதன் தந்தம் யூபஸ்தம்பமாகவும்
குடல் உத்காதாவாகவும

கலியில் வேங்கடவனே பலப்பிரதாயகன் என்பர். அவனது அஷ்டோத்திரத்திலும் முத்தாய்ப்பாக "ஸ்ரீயக்ஞ வராஹாய நம:" என்ற நாமம் வரும்

வேங்கடமும் ஆதி வராகத் தலம் அல்லவா!
அங்கும் முதல் வழிபாடு வராகப் பெருமாளுக்குத் தானே!

ஸ்ரீ வராக உவாச:

ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||

- வராக சரம ஸ்லோகம்

அதாவது, நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு கணமேனும் மகாவிச்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப்பற்றி நினைக்கிறேன்!

இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த பொருளையே தம் திருப்பாவை வாயிலாக பரப்பினாள்.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:37 pm

வராஹ புராணம் ! - Page 2 D4Bp9RFZSKKECd8uPje5+dc99fab6-24f1-494c-aaa4-d6f74ecc50b0

வராஹ புராணம் - பகுதி 8

விசால மன்னன்
=============

விசால மன்னன் செல்வ வளங்களுடன் மகிழ்ச்சியாக வாழந்து வந்தான். எனினும், அவனுக்குப் புத்திரப்பேறு ஏற்படாத குறை இருந்தது. அவனுக்குப் பெரியோர்கள், கயாவுக்குச் சென்று மறைந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யுமாறு அறிவுரை பகர்ந்தனர். அவ்வாறே கயாவுக்குச் சென்று மதச்சடங்குகள் முடிந்தவுடன் அவன் முன் மூன்று உருவங்கள் தோன்றின. ஒன்று வெள்ளையாகவும், மற்ற இரண்டும் சிவப்பு, கருப்பு நிறங்களிலும் தோன்றின. வெள்ளை வண்ண உருவம் ரைவ்யனின் தந்தை; அவர் பாவம் எதுவும் செய்யாததால் தூய வெண்மை நிறத்தில் இருந்தார்.

சிவப்பு நிற உருவம் அவரது பாட்டன், கருப்பு உருவம் முப்பாட்டன் ஆகும் - அவர்கள் தீய வாழ்க்கை வாழ்ந்ததால் அதன் பலனை அனுபவிக்கின்றனர். ரைவ்யன் கயாசிரார்த்தம் அனுஷ்டித்த உடன் அவனுடைய மூதாதையர்கள் பாவங்கள் விடுபட்டு விடுதலை அடைந்தனர். இதன்மூலம் ஒருவர் கயாசிரார்த்தம் செய்வதன் மூலம் அவரது முன்னோர்கள் பாவபலன்களிலிருந்து விடுபடுகின்றனர். அது மட்டுமின்றி அத்தகைய கர்மாவைச் செய்பவனுக்குப் புண்ணியம் சேர்கிறது.

எனவே ரைவ்ய முனிவர் பாராட்டப்பட்டார். சனத்குமாரர் சென்ற பிறகு ரைவ்ய முனிவர் நாராயணனைக் கதாதரன் (கதை ஏந்தியவர்) உருவில் பிரார்த்திக்க பகவான் அவன் முன்தோன்றி அவன் விரும்பிய மோட்சம் அளித்தார்.

இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:38 pm

வராஹ புராணம் ! - Page 2 9wqwwLd0SCiGWK5vVFpp+Sree_Varaha_Puranam-300x450

ஓம் நமோ வராஹாய!

வாழ்வில் #நிம்மதி எப்போது கிடைக்கும்……..???
இதற்கான விடையை ஒரு கதை மூலம் பார்க்கலாம்.

‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.
‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா’ என்று ஞானி கேட்டார்.
‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை.
முறையாக நீதி செலுத்தப்படுகிறது.

நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள்.
ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை.
இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை’ என்றான்.
‘அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு’ என்றார் ஞானி.
‘எடுத்துக் கொள்ளுங்கள்’என்றான் மன்னன்.
‘நீ என்ன செய்வாய்’ என்றார் ஞானி.

‘நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்’ என்றான் அரசன்.
‘எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய்.
உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா.

நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.’ என்றார். சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார்.
அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான்.

அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.
‘அது கிடக்கட்டும்’ என்ற ஞானி ‘நீ இப்போது எப்படி இருக்கிறாய்’ என்று கேட்டார்.
‘நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்’
‘முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா…..???’
‘இல்லை’

‘அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்…..???
இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்…….???’
விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.
‘அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய்.
இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய்.
அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே.

நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும்.
இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும்.

இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்’ என்று கூறி விடைபெற்றார் ஞானி.
ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை .

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:39 pm

வராஹ புராணம் ! - Page 2 Pef5V8pkRg2bMRmhXq1W+461531533ecf1056fc4935b76bd1a871

தாயே, தயை புரிவாயே...

பாரிலுள்ளோர் துயர்துடைக்க,
பாற்கடலில் உதித்தவளே!
பரந்தாமன் பக்கமிருந்து,
பரிந்தெமக்கு அருள்பவளே!

முழுநிலவின் சோதரியே!
முகுந்தனவன் திருமனையே!
அழும்கண்ணீர் ஆறெல்லாம்,
பெருகாது நீதுடைப்பாய்!

தாமரைக் கண்கொண்டு,
பாமரரைப் பார்த்திடுவாய்;
வையத்து நாயகியாய்,
வீழாதே காத்திடுவாய்!

வைகுந்தன் பெருமாட்டி,
வறுமையெலாம் துடைப்பாயே!
பையவந்தமர்ந்தேநீ,
பெருகும் இன்பம் சேர்ப்பாயே!

செல்வச் சீமாட்டிநீ!
செல்லுமிடம் செழித்திடுமே!
நல்வரவால் நலம்தந்து
நயந்தெம்மை மீட்பாயே!

சர்வமங்கள நாயகியே!
சிரித்தே நீவந்திடுவாய்!
சாரங்கன் பத்தினியே!,
சேமமெல்லாம் நிறைத்திடுவாய்!

விஷ்ணு பத்தினியே!
விசால நேத்திரத்தால்,
வினையகலப் பார்ப்பாயே!
வழித்தடைகள் தீர்ப்பாயே!

இனிஎன்ன வேண்டுமென,
எம்தாய்நீ அறிந்திருந்தும்−
ஈதென்ன மவுனமடி?
இதுஉனக்கும் தகுமோடி?

எப்பொழுதோ கொடுவென்று−
எத்தனைநாள், பொறுத்திருப்போம்?
இப்பொழுதே தருவளென்று, நீ
இரங்க, ஏன்மறுப்போம்?

தாயாக தயைபுரிவாய்!
தாங்கும், இருகரம் தருவாய்!
சேயோங்கள் வந்துவிட்டோம்;
சேர்த்தெம்மை நீஅணைப்பாய்!

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Wed Jun 03, 2020 9:40 pm

வராஹ புராணம் ! - Page 2 3luGZiaCRR6Db4fUUwCk+8c4a0229-db39-4feb-b3d7-3007a878cd40

வராஹ புராணம் - பகுதி 9

வாசு மன்னன்
============

வாசு மன்னன் தன்னரசைத் தன் மகன் விவாசனனுக்கு அளித்து, புஷ்கரத்தீர்த்தம் அடைந்து, அங்கு புண்டரீகாக்ஷனை முன்னிட்டு ஒரு யாகம் செய்ய யாகத்தீயிலிருந்து ஓர் உருவம் தோன்றி வாசுவின் முன் நின்று, உங்கள் ஆணை என்ன எனக்கேட்டது. வாசு அந்த உருவத்தைப் பார்த்து நீ யார்? எங்கிருந்து வந்தாய்? என வினவினான். அதற்கு அவ்வுருவம் கூறிய வரலாறு கீழே தரப்பட்டுள்ளது:

முற்பிறவியில் வாசு காசுமீர மன்னனாக இருந்தான். அவன் ஒரு சமயம் வேட்டையாடச் சென்றபோது ஒரு மானைக் கண்டு அதை அம்பெய்தி கொன்று விட்டான். அது உண்மை மானல்ல. ஒரு முனிவர் மான் வடிவில் திரிந்து கொண்டிருந்தார். அதை அறிந்த வாசு தான, தர்மங்களும், மற்ற சமய சடங்குகளும் செய்வதுடன் தவமும் இயற்றினான். முடிவில் வயிற்று வலியால் அவன் மரணமடைந்தான். மரணத்தருவாயில் 'நாராயணா' என்ற பகவான் நாமத்தை உச்சரித்தான்.

பின்னர் யாகத்தீயிலிருந்து தோன்றிய உருவம் தான் ஒரு பிரம்மாராக்ஷசன் என்றது. வாசு மான் வடிவில் இருந்த மானை அதாவது பிராமணனைக் கொன்றதால் அது வாசு மன்னன் உடலில் புகுந்து இருந்ததாகவும், அதுவே அவனது மரணத்தறுவாயில் தண்டனையாக வயிற்றுவலி கொடுத்ததாகவும் கூறிற்று.

வாசுவின் நாராயண நாம உச்சரிப்பால் அவன் விஷ்ணு தூதர்களால் சொர்க்கம் அழைத்துச் செல்லப்பட்டான். விஷ்ணு தூதர்கள் பிரம்ம ராக்ஷசை வாசுவின் உடலிலிருந்து விரட்டி அடித்தனர். வாசு சொர்க்கலோகத்தில் பல ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்தான். மறுபடியும் அவன் காசுமீர் மன்னனாகத் திரும்பவும் அந்த பிரம்மராக்ஷசன் அவன் உடலில் பிரவேசித்தது.

எனினும் வாசு, புண்டரீகாக்ஷனை தியானித்து அவன் நாமங்களை உச்சரித்து யாகம் செய்ய அது விலகியது. இப்போது அதன் பாவங்கள் புண்டரீக நாமங்களைக் கேட்டதன் பயனாக விலகிவிட்டன. அது மறுபடியும் ஒரு தர்மவான் ஆயிற்று. வாசு, பிரம்மராக்ஷசனால் தன் முற்பிறவிகளைப் பற்றி அறிய நேர்ந்ததால் அதற்கொரு வரம் அளித்தான். அதாவது அது தர்மவியாதன் என்ற வேடனாகப் (தருமவானான வேடன்) பிறக்கும்படியான வரம். பின்னர் வாசு வைகுந்தப் பிராப்தி அடைந்தான்.

தொடரும்...

ஓம் நமோ வராஹாய!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Mon Jun 15, 2020 11:56 am

வராஹ புராணம் ! - Page 2 B1c6d910

வராஹ புராணம் - பகுதி 10

#நாரதரின் முற்பிறவி
=============

ஒரு சமயம் நாரதர் பிரியவிரதனைக் காணச் சென்றார். அவனும் முனிவரை வரவேற்று உபசரித்துப் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். அவற்றிற்கெல்லாம் அவர் விடை அளித்த பிறகு சில அபூர்வ, அதசிய நிகழ்ச்சிகள் பற்றிக் கூறுங்கள் என்று வேண்டினான். நாரதர் கூறலானார். சுவேதத்வீபத்தில் ஓர் ஏரி உள்ளது. நாரதர் அங்குச் சென்றபோது அந்த ஏரி மலர்ந்த கமலங்களுடன் விளங்கியது.
மலர்களுக்கு அருகில் ஓர் அழகிய பெண்மணி அமைதியாக நின்று கொண்டிருந்தாள். அவளை யாரென்று அவர் கேட்டார். அதற்கு அவள் பதிலளிக்காமல் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பெண்ணின் உடலிலிருந்து மூன்று ஒளி உருவங்கள் தோன்றி மறைந்தன. நாரதர் திகைத்து நின்றார். அவள் யாரென்று நாரதர் மறுபடியும் கேட்டார்.

அதற்கு அவள் தான் சாவித்திரி என்றும், வேதங்களின் தாய் என்றும் கூறினாள். நாரதரால் அவளை அறிய முடியாதென்றும், அவருடைய அறிவை எல்லாம் தான் கொள்ளை அடித்து விட்டதாகவும் கூறினாள். தன்னிலிருந்து வெளியேறிய மூன்று உருவங்களும் மூன்று வேதங்கள் ஆகும். (மூன்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.)

அப்போது நாரதர் தன் அறிவை எப்படி திரும்பப் பெறுவது, சாவித்திரி நாரதரை அந்த ஏரியில் குளிக்குமாறும், அதனால் அறிவைத் திரும்பப் பெறுவது மட்டுமின்றி, முற்பிறவி செய்திகளும் அறிய முடியும் என்றாள். நாரதர் அவ்வாறே அதில் நீராடி இழந்த அறிவையும், முற்பிறவி பற்றியும் அறிந்திட்டார். பிரியவ்ரதன் அவரை முற்பிறவி வரலாறு கூறுமாறு கேட்டான்.

சத்திய யுகத்தில் நாரதரின் முற்பிறவியில் அவர் பெயர் சாரஸ்வதன் ஆகும். சாரஸ்வதன் அவந்தியில் அமைதியாக வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் அமைதியாக உட்கார்ந்திருந்த போது வாழ்க்கை நிலையில்லாதது, பயனற்றது என்று உணர்ந்தான்.

அனைத்தையும் புத்திரர்களிடம் ஒப்படைத்துவிட்டு தியானம் செய்ய எண்ணினான். அவ்வாறே செய்து நாராயணனைக் குறித்து தவம் செய்ய பகவான் அவன் முன் தோன்றிட தன்னை அவருள் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டிட, பகவான் நீ இன்னும் வாழ வேண்டும் உன்னுடைய பக்தியும், முன்னோர்களுக்கு அளித்த நீரும் என்னை மகிழ்வித்தன. உனக்கு இன்று நாரதன் (நாரதர் - நீர் அளித்தவர்) என்ற பெயர் அளித்து ஆசிர்வதிக்கிறேன் என்றார்.

பகவான் அருளி மறைந்துவிட்டார். சாரஸ்வதன் தவத்தைத் தொடர்ந்தான். அவன் மரணமடைந்து பிறகு பிரம்மலோகத்தில் இருந்து பின்னர் பிரம்ம புத்திரன் நாரதனானான். அடுத்த நாரதர், பிரியவிரதனுக்கு விஷ்ணுவின் புகழ் கொண்ட ஒரு துதியைக் கற்பித்தார். அது பின்வருமாறு:http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Mon Jun 15, 2020 11:57 am

வராஹ புராணம் ! - Page 2 3cac7710


எண்ணற்ற கண்கள் கொண்டவர்க்கு வணக்கம்!
கணக்கற்ற கைகால்கள் உடையவர்க்கு வணக்கம்!

சத்திய யுகத்தில் வெள்ளை உடையிலும், அடுத்த
திரேதா யுகத்தில் குருதிரத்த வண்ணத்திலும், பிறகு
துவாபரயுகத்தில் மஞ்சள்நிற உருவிலும், பின்னர்
கலியுகத்தில் கரிய நிறம் உடையவனாகும் மாறிய
(வண்ணம் நிறைந்த கண்ணனுக்கு வணக்கம்)

வாயிலிருந்து பிராமணர்களையும்
புஜங்களிலிருந்து க்ஷத்திரியர்களையும்
தொடைகளிலிருந்து வைசியர்களையும்
பாதங்களிலிருந்து மற்ற இனத்தவர்களையும்
(படைத்த பிரம்மனுக்கு வணக்கம்)

மன்னிக்க முடியாத ஐந்து பாவங்கள்
1 பிறர் சொத்துக்களை அடைய நினனப்பவர்கள்...
2 திருமணம் ஆன ஆண் பெண்களை அடைய நினனப்பவர்கள்....
3 பெண்களை இழிவாக பேசுபவர்கள்.....
4 கோழை எனும் தெரிந்து அவனிடம் மோதி அந்த அப்பாவியின் சாபத்தை பெறுவது ....
5 தாய் தந்தையின் சாபத்திற்கு ஆளாவது

வாளும், கேடயமும், கதையும், கமலமும்
நாளும் ஏந்திடும் நாரணர்க்கு வணக்கம்.

தொடரும்...

ஓம் நமோ வராஹாய!


Last edited by krishnaamma on Mon Jun 15, 2020 2:01 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma on Mon Jun 15, 2020 11:57 am

வராஹ புராணம் ! - Page 2 4f9df410


எல்லோருக்கும் மரணத்தினைப் பற்றிய முன்னறிவிப்பு வந்ததில்லை. ஆனால் பரீட்சித்து மஹாராஜன் தன் மரணத்தினைப் பற்றி அறிந்தார்.

தான் இறக்கும் வரை உணவு, நீர், துாக்கம் முதலியவற்றைத் தொலைத்தார். பகவானின் உன்னதமான லீலைகளை கேட்டவண்ணம் தம் இன்னுயிரைத் துறந்தார்..!

கேட்டலின் அதுவும் பகவானது பிரபாவங்களைக் கேட்டலின் சக்தி மகத்துவமானது.


பரீட்சித்து மஹராஜன் இப்படி..! நாரதர் தம் தாயின் கருவிலிருந்தபோதே பகவானின் பிரபாவங்களை கேட்டவர்..!


நாரத முனிவர் சிரஞ்சீவி..! சாகாவரம் பெற்றவர்..! ஆனால் அவருக்கும் ஒரு முற்பிறவி உள்ளது..!

அந்த முற்பிறவியில் நாரதரின் தாய் ஒரு வேலைக்காரியாவாள்..! அவள் ரிஷிகள் வாஸம் செய்யும் ஆஸ்ரமத்தில் வேலை செய்து வந்தாள்..!

அந்த ஆஸ்ரம சூழ்நிலை நாரதர் தாயின் கருவிலிருக்கும் போதே ஒரு தெய்வீகமான சூழ்நிலையினை அவருக்கும் அவரது தாய்க்கும் அளித்தது..!


நாரதர் பிறப்பிற்கு பின் அங்குள்ள சிறந்த முனிவர்களால் அவருக்கு நல்லதொரு ஆன்மீக அறிவு புகட்டப்பட்டது..!

சாதாரண பெண்மணியான நாரதரின் தாய்க்கு நாரதர் ஒரே மகன்..!

அவருக்கு ஐந்து வயது கடந்த சமயம் அவளது தாய் பசுவிடமிருந்து பால் கறப்பதற்காக வெளியே சென்றபோது விஷப்பாம்பு ஒன்று கடித்து மாண்டாள்..!


நாரதர் கடினமான காடுகள் மலைகள் பற்பல வனவிலங்குகள் நதிகள் அனைத்தையும் தமக்கு மஹரிஷிகளால புகட்டப்பட்ட ஹரியின் நாமாவினை இசைத்தப்படி கடந்தார்.

அருமையான சூழலில் அமைந்த ஒரு ஆலமரத்தினடியில் அமர்ந்து தம் சத்புத்தியைக் கொண்டு பரமாத்வைத் தியானித்தார்.

நேரிலும் கண்டார். ஒரு முறைதான் ஹரி அவர் முன் தோன்றினார்.

புரணத்துவம் அடையாத பக்திமானும், பௌதீகப் பற்று விடுபடாதவர்களும் என்னைக் காண்பது கடினம் என்றார் பகவான்.

உலகப்பற்றறுத்த நாரதர் ஹரியின் நாமாவினையும், புகழையும், லீலைகளையும் இடைவிடாது பாடியபடி உலகமெங்கும் சுற்றித் திரிந்தார்.

கிருஷ்ணரின் சிந்தினையில் ஆழந்தபடியே அவருக்கு மரணம் சம்பவித்தது.

அவரது ஆத்மா காத்திருந்தது. யுகம் முடிந்தது. ஸ்ரீஹரி பிரளயநீரில் ஆலிலை மேல் சயனித்திருந்த போது, பிரும்மா பகவானுக்குள் கலந்தார்.

பிரும்மாவின் சுவாசத்தில் நாரதரின் ஆவியும் கலந்து ஸ்ரீஹரியிடம் ஐக்கியமானது.

432 கோடி சூரிய ஆண்டு கழிந்தது. பிரும்மா படைப்புத் தொழிலைத் தொடங்கியபோது மரீசி, ஆங்கிரஸ் மற்றும் அத்ரி போன்ற மஹரிஷிகள் உண்டாயினர்.

அவருடன் நாரத மஹாமுனியும் அழிவற்ற ஒரு திவ்யமான சரீரத்தோடு,

ஈரேழு பதினான்கு உலகும் பயணம் செய்யும் ஆற்றலோடு, உடல் மற்றும் ஆத்மா என்ற பாகுபாடு இல்லாத ஒரு புனிதத்தோடு தோன்றினார்.

பிரும்மாவினால் தோன்றியதால் பிரும்மபுத்திரர் ஆனார். ஸ்ரீஹரியின் பேரன் ஆனார்.

அழிவில்லாத ஸ்ரீரஞ்சீவியானார். தெய்வீகமான வீணையின் ஸ்வரத்தோடு பகவானின் புகழை இடையறாது பாடிக்கொண்டிருக்கின்றார்.

அவர் புகழைப்பாடும் பக்தர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கின்றார். அம்மாமுனிவரின் பொற்பாதம் வணங்கி மேலும் காண்போம்…!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61755
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12540

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by ayyasamy ram on Mon Jun 15, 2020 3:54 pm

வராஹ புராணம் ! - Page 2 103459460 வராஹ புராணம் ! - Page 2 3838410834 வராஹ புராணம் ! - Page 2 3838410834
-
வராஹ புராணம் ! - Page 2 59a8e410
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 57885
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12990

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை