ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வராஹ புராணம் !

3 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 7:35 pm

First topic message reminder :

வராஹ புராணம் - பகுதி 1

வராஹ புராணம் ! - Page 2 RdH2yquTVGVkzdMiYqQy+0a6a78a6-2d67-4a4a-b8fb-3e3e4a297fa9

யஜ்ஞ வராகம்
============

யஜ்ஞம் = உலகைச் சிருஷ்டிக்கும் சிறந்த சக்தி உடைய எண்ணம். வராகம் = கலவரம். குழப்பங்களிலிருந்து உலகை உயர்த்தும் சக்தி. யஜ்ஞம் என்பது யாகம். அதாவது யஜ்ஞத்தின் மூல சிருஷ்டி சக்தியை வெளிப்படுத்த உதவும் ஒரு சமயச்சடங்கு. யஜ்ஞ வராகத்தை விவரிக்க முப்பத்தைந்து வெவ்வேறு வகை பெயர்கள் விளங்குகின்றன. அவையாவன:

1. வேத பாதம் : வராகத்தின் நான்கு பாதங்களும் நான்கு வேதங்கள்.

2. யுபதம்ஷ்ட்ரம் : வராகத்தின் இரண்டு தந்தங்கள். விலங்குகளைப் பலியிட உபயோகப்படுத்தும் மேடை போன்றது.

3. கிரது தந்தம் : ஒரு யஜ்ஞத்தில் செய்யப்பட வேண்டிய அறுபத்து நான்கு பலிகளைக் குறிப்பது கிரது. இவை போன்று வராகத்தின் பற்கள் உள்ளவை.

4. சிதி மூலம் : சிதி என்றால் அக்கினிமேடை (அ) பலிபீடம். வராகம் வாய் பிளத்தல் இதை போன்றதாகும்.

5. அக்கினி ஜிஹ்வ : வராகத்தின் நாக்கு அக்கினி போலுள்ளது.

6. தர்ப்பலோமம் : வராகத்தின் உடல் மீதுள்ள உரோமம் மேடை மீது பரப்பப்படும் தர்ப்பைப் புல் போன்றது.

7. பிரம்ம சீர்ஷம் : வராகத்தின் தலை பிரம்மாவைப் போல் உள்ளது.

8. அஹோர திரிக்ஷானாதாரம் : இரவும், பகலும் வராகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.

9. வேதாங்க ச்ருதி பூஷனம் : அறிவின் பிரிவுகளாகிய ஆறு வேதாங்கங்கள் வராகத்தின் காதணிகள் ஆகும்.

10. ஆஜ்யனசா : நாசித்துவாரங்கள் யாகத்தில் தெளிக்கப்படும் நெய் போன்றுள்ளன.

11. சிருவண் துண்டம் : நீண்டுள்ள மூக்கு யாகத்தில் நெய் ஊற்றப் பயன்படும் கரண்டி போன்றது.

12. சாம கோஷ வன : சாமவேதத்துதிகள் போல் வராகத்தின் குரல்.

13. சத்திய தர்மமாயா : வராகம் முழுவதும் தருமநெறியும், உண்மையும் கொண்டது.

14. கர்மவிகரம் சத்கிருத : புரோகிதர்கள் செய்யும் சடங்குகள் வராகத்தின் சக்தி வாய்ந்த அசைவுகளைப் பெற்றுள்ளன.

15. பிராயச்சித்த நகோகோர : தவத்தின் போது செய்ய வேண்டிய கடினமான சடங்குகளே வராகத்தின் பயங்கர நகங்கள் ஆகும்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by T.N.Balasubramanian Wed Jun 03, 2020 8:55 pm

வராக புராணம் அபாரம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:16 pm

வராஹ புராணம் ! - Page 2 0JioUVJQxen5sKw3UP3G+3cac77a6-554c-4d30-ae94-80959a91b75c

வராஹ புராணம் - பகுதி 4
=======
அஷ்வஷிரன்
============

பூமித்தாய் வராகத்திடம் நாராயணனும், பிரம்மனும் ஒன்றே என்பது பற்றி விளக்கம் கேட்க எல்லா வகையிலும் ஒத்தவையே. ஆனால், நாராயணனை நேராகப் பார்ப்பது கடினமாகும். அவருடைய அவதாரத்தின் மூலமே காணமுடியும். பிரம்மன் நாராயணனின் ஒரு வடிவமே.

அதேபோல் தான் சிவனும். நிலம், நீர் போன்ற ஐம்பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். விசுவரூபம், விசுவாத்மா நாராயணன் அன்றி வேறில்லை. அஷ்வஷிரன் என்ற தருமநெறி தவறாத மன்னன் கபிலரிடம், "நாராயணனைப் பூசிப்பது எவ்வாறு?" என்று கேட்டான்.

இங்கு இரண்டு நாராயணர்கள் உள்ளனர். யாராவது ஒருவரை நீ பூசிக்கலாம் என்றார் (கபிலரும் நாராயணரின் அம்சமே).

அப்போது அஷ்வஷிரன் "நீ எப்படி நாராயணனாக முடியும்? நான்கு கைகளோ கருடனோ இல்லை. இரண்டு கைகள் மட்டுமே உள்ளன." "திரும்பவும் என்னைப் பார்" என்று கபிலர் கூறிட அஷ்வஷிரன் கபிலரில் நான்கு கைகளும், கூடிய நாராயணனைக் கண்டான்.

"ஆனால், நாராயணன் கமலமலர் மேல் உட்கார்ந்திருப்பார்; சிவனும், பிரம்மாவும் அவரது பாகங்கள். அவர்கள் எங்கே?" "இப்போது பார்" என்று கபிலர் கூற, அங்கு நாராயணர் தாமரைமீது அமர்ந்திருந்தார். பிரம்மா, சிவன் இருவரும் கமலாசனராய் காணப்பட்டனர். "ஏன் எல்லா நேரத்திலும் நாராயணனைக் காணமுடியவில்லை" என்று கேட்டான்.

அதற்குக் கபிலர், "நாராயணரை எப்போதுமே காண நினைக்காதே. அவர் தன்னைத் தான் தெளிவாக்குவார். அவதாரம் எடுப்பவர், அவரைப் பறவை, விலங்குகளிலும் காணலாம். உன்னில் அவரைக் காணலாம். எதிலும், எங்கும் காணலாம். உணரலாம், உண்மையான ஞானம் பெற்றால் எதிலும் நாராயணனைக் காணலாம்."

"அறிவா? செயலா? எது சிறந்தது? உயர்ந்தது?" என்று மன்னன் அஷ்வஷிரன் கேட்டான். அதனை உணர்த்த கபிலர் ரைவ்யன், வாசு கதையைக் கூறினார்.

தொடரும்...

ஓம் நமோ வராஹாய! ......

🌸🌸🌸🌸🌸🌸


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:20 pm

T.N.Balasubramanian wrote:வராக புராணம் அபாரம்.

ரமணியன்

மிக்க நன்றி ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:22 pm

வராஹ புராணம் ! - Page 2 LxUbBodCQoulVHSKx9xH+product1520424050

பூமித்தாய் வராகத்திடம் நாராயணனும், பிரம்மனும் ஒன்றே என்பது பற்றி விளக்கம் கேட்க எல்லா வகையிலும் ஒத்தவையே.

ஆனால், நாராயணனை நேராகப் பார்ப்பது கடினமாகும். அவருடைய அவதாரத்தின் மூலமே காணமுடியும். பிரம்மன் நாராயணனின் ஒரு வடிவமே. அதேபோல் தான் சிவனும். நிலம், நீர் போன்ற ஐம்பூதங்களிலும் நாராயணனைக் காணலாம். விசுவரூபம், விசுவாத்மா நாராயணன் அன்றி வேறில்லை. அஷ்வஷிரன் என்ற தருமநெறி தவறாத மன்னன் கபிலரிடம், நாராயணனைப் பூசிப்பது எவ்வாறு? என்று கேட்டான்.

இங்கு இரண்டு நாராயணர்கள் உள்ளனர். யாராவது ஒருவரை நீ பூசிக்கலாம் என்றார் (கபிலரும் நாராயணரின் அம்சமே) அப்போது அஷ்வஷிரன் நீ எப்படி நாராயணனாக முடியும். நான்கு கைகளோ கருடனோ இல்லை. இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. திரும்பவும் என்னைப் பார் என்று கபிலர் கூறிட அஷ்வஷிரன் கபிலரில் நான்கு கைகளும், கூடிய நாராயணனைக் கண்டான்.

ஆனால், நாராயணன் கமல மலர் மேல் உட்கார்ந்திருப்பார்; சிவனும், பிரம்மாவும் அவரது பாகங்கள். அவர்கள் எங்கே? இப்போது பார் என்று கபிலர் கூற, அங்கு நாராயணர் தாமரைமீது அமர்ந்திருந்தார். பிரம்மா, சிவன் இருவரும் கமலாசனராய் காணப்பட்டனர். ஏன் எல்லா நேரத்திலும் நாராயணனைக் காணமுடியவில்லை என்று கேட்டான்.

அதற்குக் கபிலர், நாராயணரை எப்போதுமே காண நினைக்காதே. அவர் தன்னைத் தான் தெளிவாக்குவார். அவதாரம் எடுப்பவர்; அவரைப் பறவை, விலங்குகளிலும் காணலாம். உன்னில் அவரைக் காணலாம். எதிலும், எங்கும் காணலாம். உணரலாம், உண்மையான ஞானம் பெற்றால் எதிலும் நாராயணனைக் காணலாம்.

நாராயணரை எப்போதுமே காண நினைக்காதே. அவர் தன்னைத் தான் தெளிவாக்குவார். அவதாரம் எடுப்பவர்; அவரைப் பறவை, விலங்குகளிலும் காணலாம். உன்னில் அவரைக் காணலாம். எதிலும், எங்கும் காணலாம். உணரலாம், உண்மையான ஞானம் பெற்றால் எதிலும் நாராயணனைக் காணலாம்.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:23 pm

வராஹ புராணம் ! - Page 2 KFZwYX5BR9GumNS2AFxG+4f9df472-220d-4f48-9820-4aceb096a491

*வராஹ புராணம் - பகுதி 5

பிரம்மாவின் வழிவந்தவன் மன்னன் வாசு. வாசு ஒருமுறை தேவகுரு பிரகஸ்பதியைக் காணச் சென்றான். வழியில் சித்திரரதன் என்னும் வித்யாதரன் எதிர்ப்பட்டான். சித்திரரதன் வாசுவிடம் பிரம்மா தேவர்களுக்கான ஒரு சபையை (கூட்டம்) ஏற்பாடு செய்திருப்பதாகவும், முனிவர்களும், பிருகஸ்பதியும் கூட அதில் பங்கு பெறச் சென்றிருப்பதாகவும் கூறினான். வாசுவும் அங்குச் சென்றான். கூட்டம் முடிந்து பிருகஸ்பதி வருவதற்காகக் காத்திருந்தான்.

ரைவ்ய முனிவரும் பிருகஸ்பதியைக் காண வந்திருந்தார். கூட்டம் முடிந்து வெளியே வந்த பிரகஸ்பதி இருவரையும் கண்டார். "என்ன வேண்டும்! நான் என்ன செய்ய வேண்டும்?" என்று பிருகஸ்பதி கேட்டார். அப்போது வாசுவும், ரைவ்ய முனிவரும் "ஞானமா? செயலா? எது உயர்ந்தது? சிறந்தது?" என்று கேட்க, அப்போது பிருகஸ்பதி அதை உணர்த்த ஒரு கதை சொல்ல ஆரம்பித்தார்.

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:25 pm

வராஹ புராணம் ! - Page 2 1q54PJVhQlyRmyeiUttm+varaha(1)

ஓம் நமோ வராஹாய!🌸🌸🌸🌸

ப்ரம்மாவின் வேள்வி தீயில் உதித்த எம்பெருமான்கள்

பிரம்மனை காக்கும் பொருட்டு உதித்தவன் வரதன்

தாயார் பிரார்த்தனையின் பொருட்டு அழகை காண்பிக்க உதித்தவன் யக்ஞ்ய வராஹன்

ஸ்ரீ அம்புஜவல்லி ஸமேத ஸ்ரீ பூவராஹ பரப்ரும்மணே நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:


முஸ்தா சூர்ணம்(கோரை கிழங்கு) பிரசாதம்

கோரை கிழங்கு என்பது கோரைப் புல்லிருந்து கிடைக்கும் கிழங்கு

இதையே முஸ்தா என்று வடமொழில் கூறுவர்.


முஸ்தா என்ற சொல்லுக்கு ஒன்று சேர்ந்திருத்தல் என்ற பொருள்.ஒரு கொத்தில் பல கிழங்குகள் ஒன்று சேர்ந்துள்ளதால் (கோரைகிழங்கு)
முஸ்தா என்ற பெயர் வந்த்து.

தண்ணீர் நிறைந்துள்ள கசப்பு நிலங்களில் உண்டாகும் கிழங்கு சிறந்த்து. அதனிலும் சிறந்த்து நாகர முஸ்தகம் என்னும் வகை.

முஸ்தா சூர்ணம் வாயுவை தணிக்க வல்லது என்று
“ராஜவல்லபம்” என்ற நூல் கூறுகின்றது.

கபம், பித்தம், ஜுரம், போன்ற வியாதிகளை போக்க வல்லது என்று
“பாவப்ரகாசம் “ என்ற நூல் தெரிவிக்கின்றது

விடங்கப் பட்டையுடனும், நெல்லிக்கனியுடனும் சேர்த்து சாப்பிட –
பேதி, பாண்டுரோகம், க்ஷயம், குஷ்டம் ஆகிய வியாதிகளை போக்க வல்லது என்று
“ஸப்த கல்பத்ருமம்” என்ற நூல் தெரிவிக்கின்றது


கோரை கிழங்கின் சூரணம் பலவிதமான சரீர வியாதிகளை போக்க வல்லது. கோரை கிழங்கு கசப்பும், காரமும் உடையதால் அதனை நன்றாக இடித்து, வஸ்த்ர காயம் செய்து , சலித்து , கொழவு ஜீனி(நாட்டு சர்க்கரை), நெய்யுடன் கலந்து ஸ்ரீ பூவராஹ பெருமாளுக்கு கண்டருளச் செய்வதால் வியாதிகள் போய் வலிமை உண்டாகும்.

இவ்வாறு பல மருத்துவ அம்சங்களைப் பெற்றிருப்பதாலும் ,இதனை ஸ்ரீ வராஹப்பெருமாள் விரும்பி அமுது செய்வதால் இக்கிழங்குக்கு வராஹம் என்ற பெயரும், இக்கிழங்கினை விரும்பி அமுது செய்யும் வராஹப்பெருமாளுக்கு முஸ்தார: என்ற பெயர் ஏற்பட்டுள்தாக பல வைணவ பெரியோர் அருளிச் செய்வர்.

இங்கு முஸ்தா சூர்ணத்தை ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ர நாதன்
ஸ்ரீ பூவராஹனுக்கு தினமும் திருமஞ்சனம்(அபிஷேகம்) ஆனவுடன் அமுது செய்து க்ஷேத்ரப்பிரசாதமாக விநியோகிக்க படுகின்றது.

இந்த க்ஷேத்ரப்பிரசாதத்தை நாமும் ஸ்வீகரித்து ஆரோக்கியமும்,, ஸ்வரூப ஞானமும் பெற்று ஞானப் பிரான் இன்னருளுக்கு என்றும் இலக்காகி வாழ்ந்திடுவோமாக!!!!!!!!!!!
🌸🌸🌸🌸🌸

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:26 pm

வராஹ புராணம் ! - Page 2 OyBEGtZmReC4KsLJQAyk+images(4)

ரைவ்ய முனிவர் கயா தீர்த்தத்தை அடைந்து தன் இறந்த மூதாதையர்க்குச் சமயச் சடங்குகளைச் (சிரார்த்தம்) செய்து முடித்துவிட்டுத் தவம் செய்ய முற்பட்டார். ரைவ்ய முனிவர் ஆசிரமத்துக்கு ஒருநாள் முனிவர் சனத்குமாரர் வந்தார்.

அவர் திடீரென்று தன் உருவை மிகவும் பெரிதாக்கிக் கொண்டு தோற்றம் அளித்தார். நீ ஏன் என்னைப் பாராட்டினீர் என்று ரைவ்ய முனிவர் பிரம்மபுத்திரன் சனத்குமாரரைக் கேட்டார். அதற்கு அவர் நீ கயா சிரார்த்தம் செய்தாயல்லவா அதற்காக என்றார். அடுத்து சனத்குமாரர் கயாசிரார்த்த மகிமை பற்றி ரைவ்ய முனிவருக்கு விளக்க ஒரு கதை கூறினார். இது விசால மன்னனின் கதை.

விசால மன்னன் செல்வ வளங்களுடன் மகிழ்ச்சியாக வாழந்து வந்தான். எனினும், அவனுக்குப் புத்திரப்பேறு ஏற்படாத குறை இருந்தது. அவனுக்குப் பெரியோர்கள், கயாவுக்குச் சென்று மறைந்த முன்னோர்களுக்குச் சிரார்த்தம் செய்யுமாறு அறிவுரை பகர்ந்தனர். அவ்வாறே கயாவுக்குச் சென்று மதச்சடங்குகள் முடிந்தவுடன் அவன் முன் மூன்று உருவங்கள் தோன்றின. ஒன்று வெள்ளையாகவும், மற்ற இரண்டும் சிவப்பு, கருப்பு நிறங்களிலும் தோன்றின. வெள்ளை வண்ண உருவம் ரைவ்யனின் தந்தை; அவர் பாவம் எதுவும் செய்யாததால் தூய வெண்மை நிறத்தில் இருந்தார்.

சிவப்பு நிற உருவம் அவரது பாட்டன், கருப்பு உருவம் முப்பாட்டன் ஆகும்-அவர்கள் தீய வாழ்க்கை வாழ்ந்ததால் அதன் பலனை அனுபவிக்கின்றனர். ரைவ்யன் கயாசிரார்த்தம் அனுஷ்டித்த உடன் அவனுடைய மூதாதையர்கள் பாவங்கள் விடுபட்டு விடுதலை அடைந்தனர். இதன்மூலம் ஒருவர் கயாசிரார்த்தம் செய்வதன் மூலம் அவரது முன்னோர்கள் பாவபலன்களிலிருந்து விடுபடுகின்றனர்.

அது மட்டுமின்றி அத்தகைய கர்மாவைச் செய்பவனுக்குப் புண்ணியம் சேர்கிறது. எனவே ரைவ்ய முனிவர் பாராட்டப்பட்டார். சனத்குமாரர் சென்ற பிறகு ரைவ்ய முனிவர் நாராயணனைக் கதாதரன் (கதை ஏந்தியவர்) உருவில் பிரார்த்திக்க பகவான் அவன் முன்தோன்றி அவன் விரும்பிய மோட்சம் அளித்தார்.

தொடரும்....


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:27 pm

வராஹ புராணம் ! - Page 2 Le5k2MohSWlMcamexQr6+75dd82a6-95bd-4850-8bc7-9e90a12d9ff5

வராஹ புராணம் - பகுதி 6
சம்யமானனும் வேடன் நிஷ்தூரகனும்
=============================

ஒழுங்கான, கட்டுப்பாடுமிக்க, தருமநெறி தவறாத சம்யமானன் என்றொரு அந்தணர் இருந்தான். நிஷ்துரகன் என்றொரு வேடனும் அதே சமயத்தில் வாழ்ந்து வந்தான். சம்யமானன் கங்கையில் நீராடச் சென்றான். கங்கைக் கரையில் நிஷ்துரகன் பறவைகளைப் பிடிப்பதை சம்யமானன் கண்டான். சம்யமானன், நிஷ்துரகனிடம் "பறவைகளைக் கொல்லாதே" என அறிவுரை கூறினான். "பறவைகளைக் கொல்ல நான் யார்? எல்லா உயிர்களிலும் தெய்வீக ஆன்மா உள்ளது.

அதை எப்படி என்னால் கொல்ல முடியும்? நான் செய்தேன் என்பது தற்பெருமை, தற்புகழ்ச்சி ஆகும். அப்படிப்பட்டவருக்கு முக்தி ஏற்படாது. பிரம்மன் தான் கர்மா செய்பவன்" என்று வேடன் கூறினான். பின்னர் அவன் தீ மூட்டினான். தீயின் நாக்கில் ஏதாவதொன்றை அணைக்குமாறு கூறினான் வேடன். அந்தணன் அதற்கு முயற்சி செய்ய தீ முழுவதும் அணைந்துவிட்டது. "தீயும், அதன் பல நாக்குகளும் ஒன்றே" என்றான் அந்த வேடன் நிஷ்தூரகன்.

"இரண்டில் ஒன்றை எப்படி வேறுபடுத்தி அறிய முடியும்? எனவே தீயில் ஒரு பகுதியை எப்படி அணைக்க முடியும்? சிருஷ்டியில் அனைத்தும் பிரம்மன் சொரூபமே. தனி ஆன்மாவுக்கு என்ன நேர்ந்தாலும் பிரம்மன் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான் நான் செய்கிறேன் என்ற நினைப்பின்றி ஒருவன் தன்கர்மாவைச் செய்ய வேண்டும்" என்று கூறினான் வேடன். அப்போது விண்ணிலிருந்து ஒரு விமானம் வந்து அவனை நேரே சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றது.

ரைவ்யனுக்கும் வாசுவுக்கும் அவர்களுடைய கேள்விக்கான விடை கிடைத்து விட்டது. இவ்வாறு ரைவ்யன், வாசு கதை கேட்ட அஷ்வஷிரன் ஐயமும் தீர்ந்தது. அவன் தன் அரசைத் தன் மகன் ஸ்தாவஷிரனிடம் ஒப்படைத்துவிட்டு தவம் செய்ய நைமிசார வனம் சென்றான். நாராயணனை நோக்கித் தவம் செய்து நாராயணனுடன் கலந்து விட்டான். ரைவ்யனும் யாகங்கள் செய்வதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

தொடரும்...

ஓம் நமோ வராஹாய!🌸🌸🌸🌸🌸


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:28 pm

வராஹ புராணம் ! - Page 2 QLPVXQdcRoiQUCTqsg0R+8c4a0229-db39-4feb-b3d7-3007a878cd40

ஈனமாய் எட்டும் நீக்கி, ஏதம் இன்றி மீது போய்
வானம் ஆள வல்லையேல், வணங்கி வாழ்த்து என் நெஞ்சமே!
ஞானமாகி ஞாயிறாகி ஞாலமுற்றும் ஓர் எயிற்று
ஏனமாய் இடந்தமூர்த்தி, எந்தை பாதம் எண்ணியே..

பொருள் : மிகவும் கொடிய காமம், குரோதம், கஞ்சத்தனம், மோகம், கர்வம், பொறாமை, துவேஷம், அஞ்ஞானம் போன்ற எட்டு குணங்களும் நீங்கி, சம்சார பந்தம் நீங்கி, அனைத்துக்கும் மேலான பரமபதம் அடைந்து வானுலகம் ஆள வேண்டும் என்று நீ விரும்பினால், என் நெஞ்சமே எம்பெருமானை வணங்கி வாழ்த்து. ஞானமாகி, ஞாயிறாகி, பன்றி வடிவில் சென்று உலகை கொணர்ந்த பரம்பொருளை என்றென்றைக்கும் சிந்தித்து இருப்பாயாக... ஓம் நமோ நாராயணாய...

தொடரும்...


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by krishnaamma Wed Jun 03, 2020 9:30 pm

*வராஹ புராணம் - பகுதி 7

வராஹ புராணம் ! - Page 2 3F1pRlCjS9eDaHRKcn0Q+screen-4

ரைவ்ய முனிவர் கேட்ட கதை
=================

ரைவ்ய முனிவர் கயா தீர்த்தத்தை அடைந்து தன் இறந்த மூதாதையர்க்குச் சமயச் சடங்குகளைச் (சிரார்த்தம்) செய்து முடித்துவிட்டுத் தவம் செய்ய முற்பட்டார். ரைவ்ய முனிவர் ஆசிரமத்துக்கு ஒருநாள் முனிவர் சனத்குமாரர் வந்தார். அவர் திடீரென்று தன் உருவை மிகவும் பெரிதாக்கிக் கொண்டு தோற்றம் அளித்தார். நீ ஏன் என்னைப் பாராட்டினீர் என்று ரைவ்ய முனிவர் பிரம்மபுத்திரன் சனத்குமாரரைக் கேட்டார். அதற்கு அவர் நீ கயா சிரார்த்தம் செய்தாயல்லவா அதற்காக என்றார். அடுத்து சனத்குமாரர் கயாசிரார்த்த மகிமை பற்றி ரைவ்ய முனிவருக்கு விளக்க ஒரு கதை கூறினார். இது விசால மன்னனின் கதை.

தொடரும்...

ஓம் நமோ வராஹாய!
🌸🌸🌸🌸🌸🌸


Last edited by krishnaamma on Wed Jun 03, 2020 9:33 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வராஹ புராணம் ! - Page 2 Empty Re: வராஹ புராணம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum