புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
32 Posts - 42%
heezulia
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
2 Posts - 3%
prajai
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
398 Posts - 49%
heezulia
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
26 Posts - 3%
prajai
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_m10பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீ


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jan 07, 2010 11:54 pm

அன்புச் சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இஸ்லாத்தில் பிரிவுகள் ஓர் ஆய்வு

ஆதம் (அலை) படைக்கப்பட்டது முதல் உலக அழிவுநாள் வரை சற்றும் தடம்புரலாமல், இசகு பிசகாமல் செல்லக்கூடிய ஒரு கொள்கை பிரிவினை கொள்கைதான். வாருங்கள் இதன் வரலாற்றை காண்போம்!

மனிதன் நிலத்தில் காலடி பதிப்பதற்கு முன் ஏற்பட்ட பிரிவுகள்
· ஆதம் நபி படைக்கப்பட்டதும் அவருக்கு அனைத்து படைப்பினங்களும் சஸ்தா செய்ய அழைப்பு விடுக்கப்பட்டதும் ஷைத்தான் மட்டும் தனித்து நின்று அல்லாஹ்வுக்கு கட்டுப்பட மறுத்தான் பிரிந்து நின்றான் இது முதல் பிரிவு!

· சுவனத்தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தை நெருங்காதீர்கள் என்று அல்லாஹ் கட்டளை விடுத்ததும் ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) தவறிழைத்து அல்லாஹ் விடமிருந்து பிரிந்து நின்றனர்.

· அல்லாஹ்வின் சபையில் ஒற்றுமையாக இருந்த ஆதம் (மனிதன்), மலக்குமார்கள், இப்லிஷ் (ஜின் கூட்டங்கள்) பிரிந்தன. அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்ட மலக்குமார்கள் மட்டும் அல்லாஹ்விடமே தங்கிவிட்டனர் காரணம் அவர்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்தவர்களாக இருக்கின்றனர். (சுப்ஹானல்லாஹ்) மாறாக மனிதனோ, இப்லிஷ் (ஜின் கூட்டங்களோ தங்கள் இறைவனை அஞ்சும் விதமாக அஞ்சவில்லை! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவுன்)


ஆதம் நபியின் சந்ததியினர் இடையே ஏற்பட்ட பிரிவுகள்
ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) ஆகியோருக்கு பிறந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரையொருவர் பகைத்துக்கொண்டு கொலைகளில் ஈடுபட்டனர் இது நம்முடைய ஆதிகுடும்பத்தில் ஏற்பட்ட முதல் பிரிவு ஆகும்! இதோ உங்கள் பார்வைக்கு ஓர் இறை வசனம்
நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னை நோக்கி நீட்டினாலும் கூட நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை ஓங்கமாட்டேன். இவ்வுலகில் உள்ளோர் அனைவரையும் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனை நான் அஞ்சுகிறேன். (அல்குர்அன் 5:28)

இந்த நபிமொழியில் உள்ள படிப்பினையை அறியமுடிகிறதா? ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனை கொல்ல முற்படுகிறான் ஆனால் தாம் கொல்லப்படுவோம் என்பதை அறிந்தும் அந்த சகோதரன் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்கிறார்! அல்லாஹ்வின் மீது இவருக்கு உள்ள பயம் உங்களுக்கு உள்ளதா?


நபிமார்களின் காலத்தில் ஏற்பட்ட பிரிவுகள்
நபிமார்களான நூஹ் (அலை), இப்ராஹீம் (அலை) யுசுப் (அலை) முதல் நபிகள் நாயகம் (ஸல்) வரை அனுப்பப்பட்ட இலட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்களும் உண்மையைத் தவிர வேறு எதனையும் போதிக்கவில்லை ஆனால் இவர்களை ஏற்றுக்கொண்ட சமுதாயத்திற்கும் ஏற்றுக்கொள்ள தயங்கிய சமுதாயத்திற்கும் இடையே பிரிவு ஏற்பட்டது அதன் விளைவுகளாக புதுப்புது மதங்கள், சாதிகள், போலி தெய்வங்கள் உருவாக்கப்பட்டன. அல்லாஹ் அருளிய இஸ்லாம் அப்போதும் நிலைத்து நின்றது உலக அழிவு நாள்வரை இறைவனின் அருளால் தனித்தே நிற்கும்!


ஒரு நபியின் பிரிவும் அவர் பெற்ற தண்டனையும்
நபி யுனுஸ் (அலை) தம் சமுதாயத்திடம் நன்மையை எத்திவைத்தார் வரவிருக்கும் அல்லாஹ்வின் தண்டனை பற்றி முன்னெச்சரிக்கையை அறிவித்தார் ஆனால் அவர் சமுதாயம் திருந்தவில்லை உடனே நபி யுனுஸ் (அலை) தம் சமுதாயத்தின் மீது கோபம் கொண்டு அவர்களை விட்டுப் பிரிந்து சென்றார் ஆனால் அவர் பிரிந்த உடனேயே அல்லாஹ் அவருயை சமுதாயத்திற்கு நேர்வழிகாட்டினான் அவர்கள் தங்களை சுதாரித்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டனர். ஆனால் கோபம் கொண்டு மக்களைப் பிரிந்த நபி யுனுஸ் (அலை) அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார் மீனுடைய வயிற்றுக்குள் தள்ளப்பட்டு வேதனைக்குள்ளானார் இறுதியில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு பெற்று திருந்திக்கொண்டார். ஆதாரம் இதோ!

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம். (அல்குர்ஆன் 21-86, 87)


இறுதி நபியின் மறைவுக்குப் பின் சத்திய சஹாபாக்களிடம் ஏற்பட்ட பிரிவுகள்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நேரடிப்பார்வையில் இருந்த சத்திய சஹாபாக்கள் ஓருடல் ஈருயிராகவும் வாழ்ந்துவந்தார்களே ஆனால் அந்த மாநபி மரணமடைந்த பின் ஆட்சித்தலைமைக்கு ஆசைப்பட்டு தங்களுக்குள் பிரிந்து நின்றார்களே இதுவும் ஒருவகை பிரிவுதானே! மாநபியின் நேரடிப்பார்வையில் இருந்த இவர்கள் தங்களுக்குள் கருத்துவேறுபாடு கொள்ளாமல் தங்களுக்குள் பின்னிப் பிணைந்து வாழந்திருந்தால் இன்றைக்கு இஸ்லாத்தில் ஷியா பிரிவும், சன்னி பிரிவும் தோன்றியிருக்குமா? இதோ கீழ்கண்ட நபிமொழிக்கு இவர்கள் கட்டுப்படவில்லையே!

உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழுதார்கள். பிறகு சொற்பொழிவு மேடைக்கு (மிம்பர்) வந்து 'உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது ('அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு 'பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது 'பூமியின் திறவுகோல்கள்' கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணைவைப்பவர்களாக ஆம்விடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகச் செல்வங்களுக்காக நீங்கள் ஒருவரோடுவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்' என்றார்கள். (புகாரி 6690 Volume:7 Book:83)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மறுமை நாளில் என் தோழர்களில் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தைவிட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் 'இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்' என்பேன். அதற்கு இறைவன் 'உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்றார்கள்' என்று சொல்வான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புகாரி 6585 Volume:7 Book:83)


நல்ல அறிஞர்கள் மரணித்தபின் ஏற்பட்ட மார்க்கப் பிரிவுகள்
நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலிருந்தே இறுதிவடிவம் பெற்ற இஸ்லாம் உலகில் பரவ ஆரம்பித்தது ஆங்காங்கே மக்கள் உண்மையை உணர ஆரம்பித்தனர். நபிகளாருக்குப் பின் தலைசிறந்த மார்க்க அறிஞர்களும் இமாம்களும் மார்க்கத்தை போதித்தனர் ஆனால் மக்களோ இந்த நல்ல அறிஞர்களும் இமாம்களும் மரணித்தவுடன் அவர்களில் சிலர் சிலரை அவ்லியாக்களாகவும் மற்றும் சிலர் சிலரை தலைவர்களாக ஏற்றனர் இதன் விலைவுகள் தர்காஹ் வழிபாடு, ஹனபி, ஷாஃபி மத்ஹபுகள் போன்றவை.


வழிகெட்ட தலைவர்களால் ஏற்பட்ட மார்க்க பிரிவுகள்
சிலர் வழிகெட்ட தலைவர்களை பின்பற்றினர் அவர்களோ முழுமையடைந்த மார்க்கதின் உன்னத 5 அடிப்படைக் கோட்பாடுகளில் புதிய கோட்பாடுகளை கலந்து ஷியா பிரிவு, தப்லீக் பிரிவு கொள்கைகளை உருவாக்கினர். சிந்தித்துப்பாருங்கள்! மக்களை சீர்த்திருத்த மார்க்கம் வந்ததா அல்லது மார்க்கத்தை சீர்திருத்த மக்கள் வந்தார்களா? என்னய்யா கொடுமை இது!


விஞ்ஞான தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் மார்க்கப் பிரிவு
மாற்றுமதத்திலிருந்தவர்கள் முஸ்லிம்களானார்கள் ஆனால் அவர்களுக்கு நேர்வழியை எடுத்துக்கூற போதிய வழிகாட்டல்கள் இல்லாததால் தங்கள் பழைய வழியை இஸ்லாத்திற்குள் புகுத்த ஆரம்பித்தனர். இவ்வாறு உருவானவைகள்தான் இன்றைக்கு நம் பகுதி மக்களிடம் உள்ள புதுப்புது அநாச்சாரங்கள். இவைகளை அன்றைக்கே கலைந்திருக்கலாம் ஆனால் தற்போது நம்மிடம் உள்ளது போன்ற விஞ்ஞான தொழில்நுட்பமும், வழிகெட்ட மக்களை நாள்தோறும் சந்தித்து நல்லறிவை எத்திவைக்கும் சூழலும் இல்லாததால் மக்கள் தரம்புரண்டார்கள். இது அவர்களது விதியாகவே நாம் கருத வேண்டும் மாறாக அன்றைய மார்க்க அறிஞர்களின் தவறு என கூற இயலாது பாவம் அவர்கள் நெடுந்தூரம் குதிரைகளில் பயணித்த மனிதர்கள்தானே!.



விஞ்ஞான தொழில்நுட்ப காலத்தில் மார்க்கப் பிரிவு
விஞ்ஞானம் தொழில்நுட்பமும் வளர்ந்தது, தொலைக்காட்சியும், கணிணியும் உதையமானது இதற்கிடையில் ஏகத்துவவாதிகளும் விழித்துக்கொண்டு அயராது வீரியமிக்க பிரச்சாரம் செய்தார்கள் முடிவு பட்டிதொட்டி எங்கும் மார்க்கம் பரவியது இதுதான் இஸ்லாம் என்பது மக்களுக்கு புரிய ஆரம்பித்தது ஆனால் இந்த விஞ்ஞானம் ஏகத்துவவாதிகளின் மத்தியில் பிளவையும் பிரிவையும் ஏற்படுத்தியது. மார்க்க்ததில் புதுமையை புகுத்தாதீர்கள் என்று கூறிய ஒருசாரார் பிறையை விஞ்ஞானத்தில் தீர்மானித்தனர், இதனால் மனம் நொந்துபோன மற்றொரு சாரார் குர்ஆன்-ஹதீஸ்களைத் தவிர வேறு எதையும் பின்பற்றமாட்டோம் மார்க்கத்தில் புதுமையை புகுத்தமாட்டோம் என்று கூறி அவர்களை விட்டும் பிரிந்தனர். ஏகத்துவத்தின் முதல் பிரிவு இதுவாகத்தான் இருக்கும்!


ஜமாஅத்துக்கள் உதயம்
சத்தியத்தை எடுத்துக்கூற வீரியமிக்க மார்க்க அறிஞர்களும் அவர்களுக்கு உறுதுணையாக கொள்கைச் சகோதரர்களும் அவர்களுக்கு மத்தியில் பல்வேறு கருத்து மோதல்கள் தலைதூக்க விளைவோ மேலும் சில ஜமாஅத் உட்பிரிவுகள். சிலர் அரசியலிலும் சிலர் ஆன்மீகத்திலும் வேகம் காட்டினர் இன்றைக்கு விளைவோ உங்கள் கண் முன்னே! கொள்கையில் பிரிந்த சகோதரர்கள் ஒருவருக்கொருவர் குற்றம் குறை கண்டுபிடித்து வசைபாட ஆரம்பித்தனர் விளைவுகளோ ஆளுக்கொரு ஜமாஅத், ஆளுக்கொரு தலைவன்.



இணைவைப்பு ஜமாஅத்துகளுடன் என்ன செய்வது?
இஸ்லாம் என்பது ஒன்றே! இதன் முதல் முக்கிய கோட்பாடாகிய தவ்ஹீது ஒரு கடவுளை மட்டுமே வணங்குமாறும் ஏனைய நபிமார்களை பின்பற்றுமாறும் கூறுகிறது ஆனால் இந்த கொள்கைக்கு மாற்றமாக அல்லாஹ்வுடன் வேறு ஒன்றை இணையாக்கி நபிமார்களை புரக்கணிக்கும் விதமாக நடந்துக்கொள்ளும் கப்ருவணங்கிகளுடன் எவ்வாறு இணைவது? இவர்கள் தாங்களாகவே முன்வந்து கப்ருகளை வணங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தாலே தவிர ஒற்றுமைக்கு வழி பிறக்காது! இப்படிப்பட்ட நிலையில் இந்த கப்ருவணங்கிகள் தங்கள் மறுமைக்கு தாங்களே பொறுப்பாளர்களாகிறார்கள் மாறாக முதல் கலிமாவை ஏற்றுக்கொண்ட ஏகத்துவவாதிகள் எவ்விதத்திலும் பொறுப்பாகமாட்டார்கள்! இதோ ஆதாரம்

இன்னும் அல்லாஹ்வுக்கும் வழிபடுங்கள். (அவன்) தூதருக்கும் வழிபடுங்கள். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். (இதனை) நீங்கள் புறக்கணித்துவிட்டால், (நம் கட்டளைகளைத்) தெளிவாக எடுத்து விளக்குவது மட்டுமே நம் தூதர்மீது கடமையாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 5:92)


நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். அல்குர்ஆன் 6:153

ஏகத்துவவாதிகளின் ஒற்றுமைக்கு தீர்வு என்ன?

· முதலில் ஒவ்வொருவரும் தங்களின் மறுமை வெற்றிக்காக ஒருவரையொருவர் வசைபாடுவதை நிறுத்த வேண்டும்.

· தவறு செய்யக்கூடிய எந்த சகோதரனாக இருந்தாலும் கண்ணியமான முறையில் ஆதாரத்தின் அடிப்படையில் அவரை அணுக வேண்டுமே தவிர கேவலமான வார்த்தைகளால் ஒருவரையொருவர் நோகடிக்கும் போக்கை அறவே ஒழித்துக்கட்ட வேண்டும்!

· மறுமைக்காக தங்களுக்குள் உள்ள கருத்து மோதல்களை அலசிப்பார்த்து தாங்கள் எடுத்து வைக்கும் வாதம் மார்க்க வரம்புக்கு உட்பட்டதா! நேர்மையானதா என்பதை தாங்களே உணர வேண்டும் தங்கள் வாதம் மார்கத்திற்கு புரம்பாணவையாக இருந்தால் தாங்களே முன்வந்து அவைகளை உதரித்தள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

· அல்லாஹ்வுக்காகவும் அவனது தூதருக்காகவும் தங்களிடம் ஏதாவது தவறான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் இருந்தால் அவைகளை திருத்திக்கொள்ள வேண்டும். மேலும் நபிகளார் காட்டிய வழியில் ஒப்பந்தங்களையும் வகுத்து ஒற்றுமைக்கான கரம் நீட்ட வேண்டும்!

· ஒரு ஏகத்துவ சகோதரனுக்கு துன்பம் ஏற்பட்டால் மற்றொரு ஏகத்துவ சகோதரன் உதவ முன்வர வேண்டும் இது ஜமாஅத் தலைவர்கள் மத்தியில் முதலில் நடைபெற வேண்டும். ஒரு ஜமாஅத் உண்மைக்காக கலத்தில் இறங்கினால் மற்றொரு ஜமாஅத் வேடிக்கை பார்ப்பதை விட்டுவிட்டு அணியணியாக கலத்தில் இறங்க வேண்டும்!

· எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் மீது பயம் இருக்க வேண்டும், நபிகளார் (ஸல்) காட்டிய வழியை பின்பற்றும் உறுதி இருக்க வேண்டும்!

· இறுதியாக மறுமையில் முஸ்லிம்கள் அனைவரும் சுவனத்திற்கு செல்ல வேண்டும் என்ற அபரிமிதமான ஆசை வேண்டும் அதற்காக தன்னலம் விட்டு பிறர்நலம் பேணும் உன்னதமான உத்திகளை கையாள வேண்டும்!

மக்கள் எதில் கருத்து வேறுபட்டுள்ளனரோ அவற்றை நீர் தெளிவுபடுத்த வேண்டு மென்பதற்காகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அருளாகவும் தான் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்". (அல்குர்ஆன் 16:64)


":உமது இறைவன் மேல் ஆணையாக! தங்களிடையே பிணக்கு ஏற்படும்போது உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் அளித்த தீர்ப்பில் எந்தக் குறையும் காணாமல் முழுமையாகக் கட்டுப்பட்டால் தவிர அவர்கள் மூஃமின்களாக மாட்டார்கள்". (4:65)

அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள் நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள் (அல்குர்ஆன் 3:132)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு விஷயத்தில் முடிவு செய்து விட்டால் சுய விருப்பம் கொள்ளமூஃமினான ஆணுக்கோ,மூஃமினான பெண்ணுக்கோ உரிமையில்லை. யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கிறாரோ அவர் பகிரங்கமாக வழி கெட்டுவிட்டார். (அல்குர்ஆன் 33:36)

அல்லாஹ்வின் பக்கமும் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவனது தூதரின்பாலும் அழைக்கப்படும்போது நாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் என்பதுதான் மூஃமின்களின் பதிலாக இருக்க வேண்டும். மேலும் அவர்களே வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24:51)

முடிவுரை
கவலைப்படாதீர்கள் தோழர்களே இவர்கள் இணையவில்லை என்றால் என்ன! நாம் நல் அமல்களை செய்து நம்மால் ஆன மார்க்கப்பணிகளை செய்துவருவோம்! மஹ்ஷரின் கேள்விக் கணக்குகளுக்குப் பின்னர் அல்லாஹ் தான் நாடினால் நமக்கு நல்லருள் புரிந்து சுவனத்தை அளிப்பான் அங்கு நாம் ஒற்றுமையாக இருப்போம்! அந்த சந்தோஷமாவது நமக்கு அல்லாஹ் கொடுப்பானல்லவா? கவலை விடுங்கள் இன்றே மார்க்கப் பணிக்கு உங்களாலான ஒத்துழைப்புகளை கொடுத்து நன்மையை அள்ளிக்கொள்ளுங்கள்! அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று ) இருப்பார்கள் (அல்குர்ஆன் 15-45)

(அவர்களை நோக்கி) சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள் (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 15-46)

மேலும் அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம், (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள் (அல்குர்ஆன் 15-47)

அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது, அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர் (அல்குர்ஆன் 15-48)

(நபியே!) என் அடியார்களிடம் அறிவிப்பீராக! ”நிச்சயமாக நான மிக்க மன்னிப்போனாகவும், மிக்க அன்புடையேவனாகவும் இருக்கிறேன் (அல்குர்ஆன் 15-49)

குறிப்பு

தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக் கொள்வோம் திருந்திக்கொள்வோம்! அல்ஹம்துலில்லாஹ்




அஸ்ஸலாமு அழைக்கும்.

பிரிந்துப் போன சமுதாயத்தை எவ்வாறு ஒன்றிணைப்பது

அல் குரான் -2 ;38 எனது நேர்வழியை பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை .அவர்கள் கவலைப படவும் மாட்டார்கள்.

அல் குரான் -3 ;103 அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்து கொள்ளுங்கள்.பிரிந்து விடாதீர்கள்!நீங்கள் பகைவர்களாக இருந்த நி லையில் அல்லாஹ் உங்களுக்கு செய்த அருளை நினைத்து பாருங்கள்.அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான்.எனவே அவனது அருளால் சஹோதரர்கள் ஆகிவிட்டீர்கள் .நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள் அதிலிருந்து உங்களை காப்பாற்றினான் .நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறு தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான் .

அல் குரான் -3 ;19 அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே .வேதம் கொடுக்கப்பட்டோர் தம்மிடம் விளக்கம் வந்ததன் பின் தமக்கிடையே ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே முரண் பட்டனர் .அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போரை அல்லாஹ் விரைந்து விசாரிப்பான் .

அல் குரான் -3 ;105 ,106 தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டு பிரிந்து விட்டோரை போல் ஆகாதீர்கள் !அவர்களுக்கேகடும் வேதனை உண்டு .அந்நாளில் சில முகங்கள் வெண்மையாக திகழும் .வேறு சில முகங்கள் கருத்திருக்கும்.நம்பிக்கை கொண்ட பின் மறுத்து விட்டீர்களா ? நீங்கள் மறுத்துக் கொண்டிருந்ததனால் இவ்வேதனையை அனுபவியுங்கள் !என்று முகங்கள் கருத்தவர்களிடம் (கூறப்படும் ) .

அல் குரான் -3 ;113 ,114 அவர்கள் அனைவரும் சமமாக இல்லை .வேதமுடையோரில் நேரான சமுதாயமும் உள்ளது.அவர்கள் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர்,சஜ்தா செய்கின்றனர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர் .நன்மையை ஏவுகின்றனர் தீமையை
தடுக்கின்றனர்.நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர்.அவர்களே நல்லோர்.
அல் குரான் -4 ;59 ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும் ,இத்துதரிடமும்
கொண்டு செல்லுங்கள் !இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமும் ஆகும்.

அல் குரான் -42 ;21 அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆகும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா?தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையிலே முடிவு செய்யப்பட்டிருக்கும் .




From: "ibnuhassan@mail.com"
To: fromgn@googlegroups.com
Sent: Tue, December 29, 2009 11:01:45 PM
Subject: பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்

ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை;
பிரிவுகளால் விளையும் விபரீதங்கள்

முஹிப்புல் இஸ்லாம்
(இறைத்தூதர் நுஹுக்கு எதை அவன் அறிவு றுத்தினானோ -அதையே (அந்த இஸ்லாத்தை யே) உங்களுக்கும் (அந்த அல்லாஹ்) மார்க் கமாக்கியிருக்கின்றான்.
(நபியே!) நாம் உமக்கு வஹியாக அறிவித்த தும் (இறைத்தூதர்கள்) இமாஹீம், மூஸா ஈஸா ஆகியோருக்கும் (இறைக் கட்டளை யாக) அறிவுறுத்தியதும்,
(இஸ்லாம்) மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள். அதிலிருந்து நீங்கள் பிரிந்துவிடாதீர்கள் என் பதுதான்.

இணை வைப்போரை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ-அது அவர்களுக் குப் பெரும் சுமையாக இருக்கிறது. தனக்கு விருப்பம் உள்ளவர்களை அல்லாஹ் நேர்வழிக்குரி யவர்களாய் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்.அவனை முன்னோக்கி வருவோர்க்கு தன்னி டம் வரும் நேர்வழியை அவன் காண்பிக்கின் றான். அல்குர்ஆன்: 42:13.

பிரிவுகளின் விபரீதங்கள்:
கடந்த 1000 ஆண்டுகளாய் முஸ்லிம்கள் பிரிவிலும், பிளவிலும் சிக்கித் தவிக்கிறார் கள்.

பிரிவுகள் பெயரால் மார்க்க மோசடிகள், பிரிவுகள் பெயரால் மார்க்க மீறல்கள்ளூ பிரிவு பெயரால் மாபாதகங்கள்ளூ பிரிவுகள் பெய ரால் வழிகேடுகள்….
பிரிவுகளால் முஸ்லிம்களுக்குள் மோதல் கள், பொருள் இழப்புக்கள், உயிர் சேதங்கள், பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங் களையும் அளவிட இயலாது சொல்லியும் மாளாது எழுத்தி லும் வடிக்க முடியாது.
எனினும் பிரிவுகள் துவங்கியதிலிருந்து இன்றளவும் பிரிவின் பிடியிலிருந்து எந்த மனிதனும், குறிப்பாய் எந்த முஸ்லிமும் விடுபட்டதாய் தெரியவில்லை..

ஒற்றுமை வீழ்த்தப்பட்டுவிட்டது. பிரிவுகள் கொழுத்த வருகின்றன. ஒற்றுமை ஏற்பட வழி யே இல்லையா? மானுட ஒற்றுமை சாத்தி யமே இல்லாததா?- மனிதநேய விரும்பி களின் ஏக்கம் விரிந்து செல்கிறது. இதுகாலம் ஒற்றுமை ஏற்பட யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. வேதனைக்குரிய கசப்பான உண்மை.

பிரிவுகள் பெயரால் நேர்வழி வழிகேடாக வும், வழிகேடு நேர்வழியாகவும் சித்தரிக்கப் படுகின்றன. விட்டில்களாய் பிரிவுகளில் விழு ந்து விடுகிறார்கள். முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
பிரிவுகளின் நிரந்தர முற்றுப்புள்ளி இஸ்லாம். இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் மானுட ஒற்றுமை. முஸ்லிம்கள் மட்டுமின்றி மானுடத்தை ஒன்றிணைக்கும் இறையருளி;ய வாழ்க்கை நெறி, வாழும் நெறியே இஸ்லாம். இதை இன்றளவும் முஸ்லிம்கள் சரியாக உணரவும் இல்லை. முஸ்லிம்களுக்கு உணர் த்தப் படவும் இல்லை.
பிரிவுகளின் விபரீத விளைவுகளையும், கேடுகளையும் மற்ற மனிதர்களுக்கு உண ர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் மிக் கோரே முஸ்லிம்கள் – என்ன செய்கிறார்கள்?
ஏதேனும் ஒரு பிரிவைச் சார்ந்து இருப்பதே சாலச் சிறந்தது என்ற தவறான முடிவில் இருக்கிறார்கள். இன்றைய முஸ்லிம்கள் பிரிவுகளால் விளையும் விபரீதங்களைக் கண்ணாரக் கண்டும், சுயமே அனுபவித்தும் பிரிவுகளின் உடும்புப் பிடியிலிருந்து யாரும் விடுபடவில்லை. விடுபட முயல்வோரும் ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவுக்குத் தாவி விடுகிறார்கள்.. பிரிவுகளின் கொடூரப் பிடியி லிருந்து யாராலும் முற்றாக விடுபட முடிய வில்லை.

பிரிவுத் தாவல்:
அரசியல்வாதிகள் அடிக்கடி கட்சி மாறிக் கொண்டிருப்பது போல் ஒரு பிரிவில் அதிரு ப்தி ஏற்படும்போது அடுத்த பிரிவுக்கு மாறிவி டுகிறார்கள். இவர்கள் அரசியல்வாதிகளை யும் தோற்;கடித்து வருகிறார்கள். ஆம்! அந்த அரசியல்வாதிகளைக் காட்டிலும் துரிதமாய் அதிவேகமாய்.
ஒரு பிரிவிலிருந்து வேறொரு பிரிவுக்கு
ஒரு அணியிலிருந்து இன்னொரு அணிக்கு
ஒரு அமைப்பிலிருந்து மற்றொரு அமைப் புக்கு
ஒரு இயக்கம் விட்டு அடுத்த இயக்கத் துக்கு
ஒரு ஜமாஅத்தை விடுத்து அடுத்த ஜமா அத்திற்கு என
பிரிதல், பிரித்தல்
பிளவுபடல், பிளவு படுத்துதல்
வெகு விமரிசையாக அரங்கேறி வருகிறது.
பிரிவுகளால் உலக அளவில் முஸ்லிம் கள் அனுபவித்து வரும் துன்பங்களையும், துயரங்களையும் சொல்லியும் மாளாதுளூ எழுதி னும் ஓயாது.
இதனால் முஸ்லிம்கள் மாற்றார்களின் இழி சொல்லிலி ருந்தும் பழி சொல்லிலிருந் தும் தப்ப முடியவி ல்லை . தவறிழைக்கும் முஸ்லிம்களுக்கு இது தேவைதான். இருந் தும் முஸ்லிம்களுக்கு இன்னும் ரோஷம் பிற க்கவில்லை. இழித்தலும் பழித்தலும் முஸ் லிம்களோடு நிற்கவில்லை. முஸ்லிம்கள் மீது பாய்ந்து வரும் கண்டனங்களும், விமர்சனங் களும் அதைவிட வேகமாய் இஸ்லாத்தின் மீது பாய்ந்து வருகிறதே! முஸ்லிம்கள் செய் யும் தவறுக்கு இஸ்லாம் பலியாக்கப்படு கிறதே!

ஓ என்னரும் முஸ்லிம் பொதுமக்களே! இஸ்லாத்தின் மீது இத்தகைய பழி சுமத்தப் பட்டுள்ளது? கவனித்தீர்களா? இதுபோன்ற பழிகளுக்கும், இஸ்லாத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? நிச்சயம் இல்லை.
எனதருமை முஸ்லிம் பொதுமக்களே! சிந்திக்க வேண்டாமா? இஸ்லாத்திற்கு நற் பெயரைத் தேடித்தர வேண்டிய முஸ்லிம்கள் பிரிவினைவாதிகளாய் மாறியதால், அவப் பெ யரை அள்ளி, அள்ளி குவித்துக் கொண்டிருக் கிறீர்கள். பிரிவினைவாதிகளால் வரிந்து திணி க்கப்பட்ட பிரிவினை இஸ்லாத்துக்கு இழுக் கைத் தேடித்தருகிறது என்றால்…..
பிரிவினைவாதிகளே! இஸ்லாத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கம் சாதரணமானதா? இதுபோன்ற பழிக்கும் இஸ்லா த்துக்கும் ஏதே னும் தொடர்புண்டா?

பிரிவுகளின் எதிர்வினை:
பிரிவுக்கும் பிளவுக்கும் முற்றுப்புள்ளியான இஸ்லாம் பிரிவினைவாதிகளின் தவறுக்கு எவ்வாறு பொறுப்பேற்கும்? பிரிவினைவாதிகள் உங்களால் ஏற்பட்ட பழியை நீங்கள் தான் துடைத்தெறிய வேண்டும். நீங்கள் ஏற்றிரு க்கும் இறை யருளிய வாழ்க்கை நெறி இஸ் லாத்துக்கு நீங்கள் நற் பெயரைத் தேடித் தரா விட்டாலும் பரவாயில்லை. அவப் பெயரைத் தேடித்தராமல் இருக்க வேண்டும். அப்போது தான் பிரிவினை வாதிகளான போலி முஸ்லிம் கள் உண்மை முஸ்லிம்களாய் உயர்வடைய முடியும்.

அறிஞர்கள், தத்துவ ஞானிகள் உதிர்த்த தத்துவங்கள், சித்தார்த்தங்கள் எதுவும் மானு டத்தை ஒன்றுபடுத்த வல்லை ஒன்றுபடுத்தவும் முடியாது. மாறாக மனிதர்களைப் பிரிவு களாக்கின. பிரிவுகளாக்கியும் வருகின்றனளூ குழுக் களாகவும், அணிகளாகவும் பிரித்தனளூ பிரித்தும் வருகன் றன.
பிரிவுகளாலும், பிளவுகளாலும் விளையும் அத்துணை விபரீதங்களையும், மாபாதகங்க ளையும் மனிதர்கள் சந்தித்தார்கள் சந்தித் தும் வருகிறார்கள். (பிரிவுகளில் சிக்கி பிரிந்து கிடக்கும் இன்றைய முஸ்லிம்களும் இதிலி ருந்து விடுபடவில்லைளூ விடுபடவும் முடிய வில்லை)

மானுட அமைதி, மானுட ஒருமைப்பாடு, மானுட சமத்துவம் பிரிவுகளாலும் அணிகளா லும் அடித்துச் செல்லப்படுகின் றன. பிரிவினை த்துயர் மனிதர்களை வாட்டியெடுத்து வருகி றது பிரிவுகளின் உடும்பு பிடியிலிருந்து விடு படும் வழ யறி யாது மனிதர்கள் தவித்தார்கள்ளூ தவிக்கிறார்கள். நபித்துவத்துக்கு முன் அரப கத்தின் நிலை மட்டுமல்ல உலக மக்கள் அனைவரும் அணிகளாகவும், குழுக்களாக் களாகவும் பிளவு பட்டிருந்தார்கள். மனிதர் கள்-மதம், நாடு, மொழி, இனம், நிறம், குலம்… இத்யாதி-இத்யாதி-என பிரிவிலும், பிளவிலும் அணிகளாகவும், குழுக்களாகவும் பிளக்கப் பட்டிருந்தார்கள்
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அனைத்தின் படைப்பாளன்-வல்லவன் அல் லாஹ் இஸ்லாத்தை நிறைவு செய்ய நாடி னான். நபி(ஸல்) அவர்களை இறுதி இறைத் தூதராக தெரிவு செய்தான். நபி(ஸல்) அவர்க ளுக்கு அல் குர்ஆன் இறுதி நெறிநூலாய்; அரு ளப்பட்டது.
நிரந்தர முற்றுப்புள்ளி:
அல்லாஹ்வின் மேற்பார்வையில் நபி(ஸல்) அவர்கள் அல்குர்ஆனுக்கு வாழ்வி அன்பு மலர் அன்பு மலர் நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக