ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by ranhasan Thu May 28, 2020 2:53 pm

இந்த பதிவில் என் இளமைக்கால ஈகரை பற்றி இங்கிருக்கும் அன்பு உள்ளங்களுக்கு பகிர விழைகிறேன்...

சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஈகரை எப்படி இருந்தது தெரியுமா?

(எல்லோரும் அண்ணாந்து மேலே பாருங்கள் பிளாஷ் பேக் சொல்ல போறேன்)

ஈகரைனா அரட்டை, ஈகரைனா குதூகலம், ஈகரைனா அடாவடி, ஈகரைனா திருவிழா - அப்படி இருக்கும்.  என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் 1f607

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனிதனின் ஆர்வம், கற்பனை, பொறுமை, ஈடுபாடு, உரையாடல், சகிப்புத்தன்மை போன்ற பல நற்குணங்கள் காணாமல் போனது தவிர்க்க இயலாததாகியது...
தற்போது தட்டச்சு செய்வதற்கே மக்கள் சோம்பல் கொள்கின்றனர். ஒரு நிமிடத்திற்கு மேலுள்ள காணொளியை பார்ப்பதற்கே பொறுமையற்ற மனநிலை. படித்தவற்றை கலந்துரையாடக்கூட நேரமில்லாது ஓட்டம் பிடிக்கும் மனது. இன்று எந்த ஒரு படைப்பையும், உருவாக்கத்திறனையும், கவிதையையும் ஒரு மீம் கொண்டு அசிங்கப்படுத்தவே அனைவரும் நினைக்கின்றனர். அதனை கூர்ந்து படிக்கக்கூட யாரும் நினைப்பதில்லை.
குடும்பத்தில் கூட உரையாடல்களை குறைத்து எதை தேடுகிறோம், எதற்க்காக தேடுகிறோம் என்று அறியாமல் கைபேசியை கைக்குழந்தையாய் அரவணைத்தபடி பொழுதை கடத்துகிறோம்.

சரி ஈகரையில் இளமைக்காலத்திற்கு வருவோம்.

பத்து வருடங்கள் முன்பு ஈகரையில் கலந்துரையாடல்களை சிறிது புரட்டி பார்த்தால் நிமிடத்திற்கு அத்தனை புதிய பதிவுகள், பின்னூட்டங்கள், மேற்கோள்கள், கிண்டல்கள், கேளிக்கைகள் என காட்டாறாய் பதிவுகள் ஓடிக்கொண்டிருந்தன... பின்னூட்டங்கள் இல்லா பதிவுகள் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.
அப்போது ஈகரையில் கவிதை தொடர் மழையாய் கொட்டிய தருணம். ஒரு சில தலைப்புகளை நானே கொடுத்து உறுப்பினர்களிடம் உடனே கவிதை பதிவிட சொல்லுவேன், சொல்லிய நிமிடத்தில் கவிதைகளாய் வந்து கொட்டும். கவிதைக்கடந்து தமிழை செம்மைப்படுத்தும் நோக்கோடு வந்த கட்டுரைகள் பல. தற்போதைய மீம்கள் பத்து வருடங்கள் முன்பே பரவிக்கிடந்தது ஈகரையில்தான்.

ஈகரையில் எங்கள் உறவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது... கணினி கடந்து எங்கள் சொந்த விசேஷங்களுக்கு நேரில் சென்று கலந்துகொள்ளுமளவுக்கு அது விரிவடைந்திருந்தது. ஒருவர் வருத்தத்துடன் பதிவிட்டால் உடனே ஆறுதலுடன் அரவணைக்கும் கைகள் ஆயிரம் அப்போது...

உதவி வேண்டின் அதை உடன் செய்ய துடித்தோர் ஏராளம்.

சண்டையின் போது சமாதானம் செய்ய ஒரு கூட்டமே இருந்தது.. அரட்டையிலும், கேலி கிண்டல்களிலும் எங்கள் உருவாக்கத்திறனை பட்டை தீட்டியது ஈகரை மட்டுமே.
அத்தனை பேரும் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் எனினும் ஈகரையே கதி என்று சதா சர்வ காலமும் அரட்டையில் கழித்தோம். இதனால் அலுவலகத்தில் மாட்டிக்கொண்ட அனுபவமும் பல உண்டு. இருந்த போதும் சிறிய விடுப்பிற்கு பின் மீண்டும் ஈகரையில் இணைந்துவிடுவோம். இப்போது குடும்பம் குழந்தை என்று ஒவ்வொருவரும் ஒவ்வொருபுறம் பிரிந்துவிட்டோம், எங்களை இணைத்த ஈகரையில் இப்போது பழைய தோழர்கள் அதிகமில்லை...நான் கூட சில வருடங்கள் கழித்துதான் ஈகரை வந்துள்ளேன்.

காலத்தின் ஓட்டத்தில் என்றுதான் இந்த மனக்குதிரை இளைப்பாறுமோ?

இப்போதிருக்கும் உறுப்பினர்களுக்கு ஒரு வேண்டுகோள், தங்களால் முடிந்த அளவிற்கு ஈகரையில் உங்கள் பங்களிப்பை நல்குங்கள்.

இப்பதிவினை படித்த அனைவருக்கும் நன்றி..

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Boxrun3
with regards ரான்ஹாசன்

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Hஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Sஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by T.N.Balasubramanian Thu May 28, 2020 6:51 pm

வாங்க ஹாசன், சுகமா?
ஆம் அந்த கால ஈகரை வேறு, இப்போதுள்ள ஈகரை வேறு.
முக்கியமான சிலர் வாராது இருப்பதாலோ?
முகநூலில் தினம் தினம் வருபவர்கள் ஈகரை பக்கம் வருவதில்லை.
ஈகரையில் பிறந்த தின வாழ்த்துகள் கூறினாலும் 
மறுமொழி இடுவதில்லை.ஆனால் முகநூலில் 
மும்முரமாக மறுமொழி இடுகிறார்கள்.
கவிதைகள் பதிவு போட்டாலும் படத்திற்கு கவிதைகள் கேட்டாலும் 
ஓரிரு மறுமொழி அல்லது மறுமொழிகள் வருவதில்லை.
கவிதைகள் இல்லாத ஈகரை சஹாராவாக தெரிகிறது.
10 ஆண்டுகளாக வந்து கொண்டு பதிவிடுவார்கள் 2 /3 பேர்களே.
அந்த காலங்களில் கவிதை என்று கூகிளில் தேடினால் ஈகரை பெயர் வரும்.
அலெக்சா ரேட்டிங்கும் நன்றாக இருந்தது 
கட்டுரை போட்டி /கவிதை போட்டி என பல போட்டிகள் உண்டு.
சரிந்ததற்கு சொல்ல முடியாத  காரணங்கள் பல உண்டு.

போகட்டும் பழையன கழிந்து புதியன புகட்டும்.
மூன்று வருடங்களுக்கு முன் நீங்கள் பதிவிட்ட படி 
நீங்கள் , உங்களை "ஆட்டோ இல்லை அவசரகால ஆம்புலன்ஸ்"
என்பதற்கிணங்க வந்துள்ளீர்.
கவிதைகளை ஆரம்பிக்கலாமே.
யாப்பிலக்கண விதி முறைப்படி கவிதை எழுதும் ஜெகதீசன் அய்யா அவர்கள் உள்ளார்.

தொடர்ந்து இருங்கள் -உங்கள் உதவி தேவை.
நன்றி 

ரமணியன் 

@ranhasan

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by ayyasamy ram Thu May 28, 2020 8:18 pm

போகட்டும் பழையன கழிந்து புதியன புகட்டும்.
-
:நல்வரவு: :நல்வரவு:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by ranhasan Fri May 29, 2020 1:43 pm

T.N.Balasubramanian wrote:வாங்க ஹாசன், சுகமா?
ஆம் அந்த கால ஈகரை வேறு, இப்போதுள்ள ஈகரை வேறு.
முக்கியமான சிலர் வாராது இருப்பதாலோ?
முகநூலில் தினம் தினம் வருபவர்கள் ஈகரை பக்கம் வருவதில்லை.
ஈகரையில் பிறந்த தின வாழ்த்துகள் கூறினாலும் 
மறுமொழி இடுவதில்லை.ஆனால் முகநூலில் 
மும்முரமாக மறுமொழி இடுகிறார்கள்.
கவிதைகள் பதிவு போட்டாலும் படத்திற்கு கவிதைகள் கேட்டாலும் 
ஓரிரு மறுமொழி அல்லது மறுமொழிகள் வருவதில்லை.
கவிதைகள் இல்லாத ஈகரை சஹாராவாக தெரிகிறது.
10 ஆண்டுகளாக வந்து கொண்டு பதிவிடுவார்கள் 2 /3 பேர்களே.
அந்த காலங்களில் கவிதை என்று கூகிளில் தேடினால் ஈகரை பெயர் வரும்.
அலெக்சா ரேட்டிங்கும் நன்றாக இருந்தது 
கட்டுரை போட்டி /கவிதை போட்டி என பல போட்டிகள் உண்டு.
சரிந்ததற்கு சொல்ல முடியாத  காரணங்கள் பல உண்டு.

போகட்டும் பழையன கழிந்து புதியன புகட்டும்.
மூன்று வருடங்களுக்கு முன் நீங்கள் பதிவிட்ட படி 
நீங்கள் , உங்களை "ஆட்டோ இல்லை அவசரகால ஆம்புலன்ஸ்"
என்பதற்கிணங்க வந்துள்ளீர்.
கவிதைகளை ஆரம்பிக்கலாமே.
யாப்பிலக்கண விதி முறைப்படி கவிதை எழுதும் ஜெகதீசன் அய்யா அவர்கள் உள்ளார்.

தொடர்ந்து இருங்கள் -உங்கள் உதவி தேவை.
நன்றி 

ரமணியன் 

@ranhasan
மேற்கோள் செய்த பதிவு: 1320881
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை, ஓய்வாய் அமர்ந்து பார்க்கும் வேலைக்கு நான் ஓய்வறிவித்துவிட்டு ஓடி ஓடி உழைக்கும் வேலையை விரும்பி ஏற்றுக்கொண்டேன். அதனால் கணினியில் அமர்வதே எப்போதாவதுதான். இருப்பினும் கூடியமட்டும் ஈகரையில் இணைந்து எனது பங்களிப்பை முடிந்தவரை அளிப்பேன். என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் 1f64f

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Boxrun3
with regards ரான்ஹாசன்

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Hஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Sஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by T.N.Balasubramanian Fri May 29, 2020 6:16 pm

நன்றி ஹாசன்.
உங்கள் இளமை கால ஈகரை.
இளைஞர்கள்/இளைஞிகளும்    ஆபீஸ் வேலையும் பார்த்துக்கொண்டு 
ஈகரையில் இணைவதற்கு நேரம் ஏற்படுத்திக்கொண்டனர்.
பத்தாண்டுகளில் அவர்களுக்கும் வயது கூடி 
வேலையில் தேவைப்படுகின்ற கூடுதல் அர்ப்பணிப்பு 
குடும்ப பாரம் /புதிதாக ஏற்பட்ட குடும்ப கவனிப்புகள் 
போட்டிகள் /பரிசுகள் அறிவிப்பின்மை முதலியவைகளும் 
காரணமாக கூறலாம்.
இப்போது பதிவிடும் பதிவர்கள் -- முதியோர்கள், வாழ்வின் 
இலையுதிர் காலத்தில் இருப்பவர்கள் .இயன்றவரை ஈகரைக்கு 
 சத்து உணவை கொடுக்கும் சாமானியர்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by விமந்தனி Fri Jun 19, 2020 10:29 pm

நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by T.N.Balasubramanian Sat Jun 20, 2020 1:14 pm

விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1322490

:நல்வரவு: :நல்வரவு: :வணக்கம்: :வணக்கம்:

அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்  

idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by krishnaamma Sat Jun 20, 2020 1:52 pm

Yes, that is why I am not replayed in this thread....புன்னகை...sariyaanathum vandhu badhil podugiren haasan புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by ranhasan Sat Jun 20, 2020 1:56 pm

பேரழகியும் ஒரு நாள் பொலிவிழப்பாள், ஞானியும் ஒரு நாள் தன்னிலை மறப்பான், எல்லாவற்றிக்கும் ஏற்றமும் உண்டு சரிவும் உண்டு. இருக்கும் வரை இணைந்திருப்போம் அவ்வளவுதான்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Boxrun3
with regards ரான்ஹாசன்

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Hஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Sஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Aஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by விமந்தனி Sun Jun 21, 2020 12:53 am

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:நிஜம்!
ஈகரை அனுபவங்கள் வாழ்வில் நிகழ்ந்த இன்னொரு அழகான காலகட்டம். மறக்க இயலாத தருணங்கள்.
ம்ம்....... அது ஒரு கனாக்காலம் என்று சொல்லத்தோன்றுகிறது.
மேற்கோள் செய்த பதிவு: 1322490

:நல்வரவு: :நல்வரவு: :வணக்கம்: :வணக்கம்:

அப்போது வந்துகொண்டு இருந்த பதிவர்கள் எல்லோரும் தொடர்ந்து வந்திருந்தால் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கமாட்டோம் என்பதை நீங்களும் ஆமோதிப்பீர்கள் என எண்ணுகிறேன்..வராத முக்கியஸ்தர்கள் அதிகம் வருகின்ற முக்கியஸ்தர்கள் குறைவே .
ரமணியன்  

idhan naduvil padhivukal thamizhagamal sadhi seikindrana. (Gmail-compose-copy and paste)
எத்தனை பேர் absent

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன் Empty Re: என் இளமைக்கால ஈகரை - ரான்ஹாசன்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum