ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!

2 posters

Go down

கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை! Empty கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!

Post by ayyasamy ram Sat May 23, 2020 7:33 pm



சூழ்நிலை இது தான். தலைவி தலைவனை விரும்புகிறாள்,
ஆனால் அருகில் சென்று அணைத்திடவும் முடியவில்லை,
விட்டு செல் என்று விலகிடவும் மனம் வரவில்லை.

அந்த இடத்தில் ஒரு பெண்ணின் மனம் தவிக்கும் தவிப்பை
மிக அழகாக கூறியிருப்பார்.

வரம் கிடைத்தும் நான்
தவற விட்டேன்
மன்னிப்பாயா?

உனக்கென கரை தாண்டி வந்தவள் நான்
தவித்திருந்தேன் கரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என்று.

தாமரை மேம்க்கு மட்டும் எங்கிருந்து தான் வார்த்தைகள்
கிடைக்குமோ தெரியாது. காதலை பாடல் வரிகளில் கொட்டி
கொட்டி வைத்திருப்பார்.

கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம்
குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள்

விலையில்லா ஆயுள் வரம்
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உன்னை நோக்கியே என்னை ஈர்க்கிறாய்
மேலும் மேலும் உருகி உருகி

உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?
தடுமாறிப்போனேன் அன்றே
உன்னைப்பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றைக்
கண்டேன் நெஞ்சின் ஓரம்

ஏன் உன்னைப் பார்த்தேன் என்றே
உள்ளம் கேள்விக்கேட்கும்ஆனாலும்
நெஞ்சில் அந்த நேரத்தை நேசிக்கும்.

ஆணின் காதலை இப்படி எல்லாம் அவன் கண் வழியே
பார்த்து ரசித்து எழுத முடியுமா என்று வியந்ததுண்டு.

தேடுறேன் அவள, தனியா எங்கே போனாளோ.

இந்த வார்த்தை ரொம்ப எளிமையான ஒன்றாக தெரிந்தாலும்
அந்த ஒற்றை வரிக்குள் ஒரு ஆணின் ஒட்டு மொத்த காதல்
வலியையும் சொல்லியிருப்பார்.

“பெண்ணே உன்மேல் பிழை”

“அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல”

“அங்கே தொலைந்தவன் நானே”

“உனையன்றி எனக்கு ஏது… எதிர்காலமே…”

“மனம் எங்கும் அவள் ஞாபகம்”

எங்க தான் ஸ்டாக் வச்சிருக்காங்களோ தெரியல.
நம்மையும் அறியாமல் வருடி செல்லும் அந்த வரிகள்.

உன்னை தாண்டி போகும் போது
போகும் போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே
உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும்
அர்த்தங்கள் சேர்ந்திடுதே…

என் காலை நேரம் என் மாலை வானம்
நீயின்றி காய்ந்திடுதே…
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே

அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே

துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ… பேரழகே..

உனையன்றி எனக்கு ஏது… எதிர்காலமே…
நடந்தாலும் முன்னே
கடந்தாலும் பின்னே
மனம் எங்கும் அவள் ஞாபகம்.

அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
பூலோகத்தின் கடைசிநாள் இன்றுதானோ என்பதுபோல்
பேசிப்பேசித் தீர்த்தபின்னும் ஏதோ ஒன்று குறையுதே
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை! Empty Re: கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!

Post by ayyasamy ram Sat May 23, 2020 7:34 pm

கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்த்தும்
சளிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

இந்த மாதிரி காதல் பண்ண தெரிஞ்ச பசங்க உங்கள்
கண்ணில் பட்டால் உடனே எபன் விலாசத்தை பரிசளிக்க
வேண்டாம்னு சொல்ல வந்தேன்.

அனல் மேலே பனித்துளி பாடல் ஒன்றை விவரிக்காமல்
செல்ல முடியாது.

அந்த பாடலில் வரும் வார்த்தைகள் தினசரி உரையாடலில்
பயன்படுத்தவே மாட்டோம்.

எந்தக்காற்றின் அளாவலில்?

இந்த துவக்கம் என்னை தொட்ட ஒன்று.

தலைவி தலைவனிடம் தன்னை விட்டுக்கொடுக்கும் நேரம் அது.

மிக அழகாக விவரித்திருப்பார்.

அனல் மேலே பனித்துளி
அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவைதானே இவள் இனி
இவை தானே இவள் இனி

இந்த ஒரு வரியிலே இனி வரப்போகும் காட்சிகள் என்ன
என்பதை சொல்லி, இனி அந்த,

இரு இரு உயிர் தத்தளிக்கையில்

வழிசொல்லுமா கலங்கரையே என கேள்வி
கேட்டிருப்பது எல்லாம் காதலின் உச்சம்.

ராவி நீரில் கமலம் போலாடி மெல்ல
கனவுகள் வருதே கண்ணின் வழியே
என் தோள் மீது நீ
ஆ குளிர்காய்கின்ற தீ

“நெடுந்தூர பயணத்தில் அவனோடு” என்ற கனவு எந்த
பெண்ணிற்கு தான் இல்லை? அந்த பயணத்தின்
ஸ்பரிசங்களை இப்படி எல்லாமா எழுத முடியும்?

மறுவார்த்தை பேசாதே பாடலை சேர்க்காமல் எப்படி
முடிக்க முடியும் தாமரை அவர்களின் பயணத்தை?

மறவாதே மனம்
மடிந்தாலும் வரும்
முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

உயிரோடு முன்பே கலந்தாய்
உயிரோடு முன்பே கலந்தாய்
எப்படி இப்படி எல்லாம்?

உண்மையிலே பசங்க இப்படி எல்லாம் காதல் கவிதைகள்
எழுதி குடுப்பாங்களா? இல்ல எல்லாம் படத்துக்கு மட்டும்
தானா? அது சரி எல்லாரும் தாமரை மேம் ஆகிட முடியுமா
என்ன?

பதில் நானும் தருமுன்பே
கனவாகி கலைந்தாய்
பிடிவாதம் பிடி
சினம் தீரும் அடி

எங்கேயோ தனியா ஸ்டோர் ரூம் ஏதும் வச்சிருக்காங்களா?
தினம் பயன்படுத்தும் வார்த்தைகளை தாமரை அவர்களின்
கண் மூலம் பார்த்தால் காதலாக தான் தெரியும்.

வெறும் நான்கு படத்தின் பாடல்களில் சில வரிகளை
மேற்கோள் காட்டியதிலே காதல் மழையில் நனைந்து
விட்டேன் நான்.

தந்தை மகள், தாய் மகன் உறவையும் அழகாக சொல்லுவார்.

“நீ அடம் பிடித்தாலும் அடங்கி போகின்றேன்”

அப்பாக்கள் என்றாலே அப்படி தானே, வெளியில் எத்தனை
ஆளுமை கொண்டிருந்தாலும் மகளிடம் அடங்கிப் போகாத
அப்பா உண்டோ?

“பருவங்கள் மாறி வர வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை உன்னில் கண்டேனே..!!”

இந்த பாடலுக்கு பின் தமிழ்நாட்டில் பெரும்பாலான
அப்பாக்கள் காலர் டியூன், ஹலோ டியூனை எல்லாம்
மாற்றி விட்டார்கள். அப்படி ஒரு புரட்சி.

“முகம் வெள்ளை தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே

இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே”

என்னே அழகு!!!! என்னமா எழுதுறாங்க?

தாமரை அவர்களைப் பற்றி கேட்டால் ஒரு பாடலில் அந்த
கடலை அடக்கிவிட முடியாது.
அன்பில் தொடங்கி அன்பில் தான் முடிக்க முடியும்.
-----------------------------------

எபனேசர் எலிசபெத், ஆசிரியை
நன்றி- கோரா-பதில்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை! Empty Re: கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!

Post by velang Sun May 24, 2020 7:14 am

அன்பு திரைப்படத்தில் தவமின்றி கிடைத்த வரமே..அருமையான பாடல்...நான் ரிங்டோனாக அதைத்தான் வைத்துள்ளேன்.

velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை! Empty Re: கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!

Post by ayyasamy ram Sun May 24, 2020 9:49 am


தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே


படம் : அன்பு
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன், சதனா ஷர்கம்

-
------------------------------

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

ஓ… இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஓ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா வேண்டாமா…

கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேர
வேண்டாமா வேண்டாமா

கை கோர்க்கும் போதெல்லாம் கைரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும்

பகல் எல்லாம் இரவாகி போனால் என்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டால் என்ன

நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும்
தருவாயா தருவாயா

கண்ணென்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா வருவாயா

விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்

மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்

இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்….

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை! Empty Re: கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!

Post by velang Mon May 25, 2020 6:34 pm

ayyasamy ram wrote:
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே


படம் : அன்பு
இசை : வித்யாஷாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன், சதனா ஷர்கம்

-நன்றி sir
------------------------------

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே
தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

ஓ… இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஓ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா வேண்டாமா…

கடிகாரம் இல்லாத ஊர் பார்த்து குடியேர
வேண்டாமா வேண்டாமா

கை கோர்க்கும் போதெல்லாம் கைரேகை தேயட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும்

பகல் எல்லாம் இரவாகி போனால் என்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டால் என்ன

நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இடம் வேண்டும் சுகமாகவும் வேண்டும்
தருவாயா தருவாயா

கண்ணென்ற போர்வைக்குள் கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா வருவாயா

விழுந்தாலும் உன் கண்ணில் கனவாக நான் விழுவேன்
எழுந்தாலும் உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்

மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்

இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்….

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே
---
மேற்கோள் செய்த பதிவு: 1320643
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை! Empty Re: கவிஞர் தாமரை எழுதிய பாடல்களில் பிடித்தவை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum