புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_lcapவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_voting_barவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
விகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_lcapவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_voting_barவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
விகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_lcapவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_voting_barவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
விகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_lcapவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_voting_barவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
விகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_lcapவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_voting_barவிகடக் கூத்தாடிய விச்வக்சேனர் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun May 17, 2020 3:16 pm

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர் Scan_0001
விகடக் கூத்தாடிய விச்வக்சேனர் Scan_0001_0001
-


நம்மிடம் இருக்கும் ஒரு பொருள் பறிபோய்விட்டால் அதைப்
போராடிப் பெற முயல்வோம். மன்னர்கள் தம் பொருளை
இழந்தால் யுத்தம் நிகழ்த்தி அப்பொருளைக்
கைப்பற்றுவார்கள். ஆனால் விச்வக்சேனர் என்பவர் ஒரு
பொருளைக் கைப்பற்ற விகடக் கூத்தாடினார்.
அது என்ன என்று பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.

விஷ்வக்சேனர் என்பவர் ஆதிசேஷன் , கருடன் போல்
நித்யத்துவம் வாய்ந்தவர். துலா மாசம் பூராட நட்சத்திரத்தில்
பிறந்தவர் இவர். இவரின் மனைவி பெயர் சூத்ரவதி. இவர்
எல்லாத் திசைகளிலும் விஷ்ணுவின் படைகளுக்கு சேனைத்
தலைவராக விளங்குபவர்.

அதனால் இவரை சேனை முதலி, சேனாதிபதி ஆழ்வான்
அப்பிடின்னு அழைக்கப்படுகின்றார்.

நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர்.
பராசரபட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர்.
சடகோபரே இவரோட அம்சமாகத்தான் அவதரித்தார்.
பெருமாள் என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து
செயல்படுத்தக்கூடிய வலிமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர்.

இத்தனை பெருமை உடைய இவரை விஷ்ணு லெக்ஷ்மிக்கு
அடுத்தபடியா நாம வணங்குறோம். இன்னும் இவர் கையில்
ஒரு பிரம்பு ஒன்று இருக்கும். செங்கோல் போன்ற இதை
ஏந்தித்தான் இவர் பெருமாளை வணங்கவரும் கூட்டத்தைக்
கட்டுப்படுத்துவாராம்.

அதுவும் எப்பிடி தெரியுமா ? தேவர்கள், முனிவர்கள்,
யக்ஷர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள்,
மருத கணங்கள், வித்யாதரர்கள், ஆழ்வார்கள்,
அடியார்கள்னு பொங்கிப் பெருகும் பக்த கூட்டத்தை
பிரம்பை சாட்டை மாதிரி சொடுக்கி ஒழுங்குபடுத்துவாராம்.

சுருக்கமா சொன்னா முப்பத்து முக்கோடி தேவர்களும்
இவரைப் பணிவார்களாம். அப்படிப்பேர்ப்பட்ட இவர் ஒரு
வெண்தலை கபாலத்துக்கிட்ட விளையாட்டுக்காட்ட
வேண்டிய அவசியமும் நேர்ந்துச்சு.

ஒரு முறை சலந்திரன் என்னும் அரக்கனை அழிக்க
விஷ்ணுவுக்கு ஈஸ்வரன் ஒரு சக்ராயுதத்தைக்
கொடுத்திருந்தார். அந்த சக்ராயுதத்தை விஷ்ணு வீரபத்திரர்
மேலே ஏதோ ஒரு கோபத்துல ஏவினார்.

வீரபத்திரர் கபாலங்களைக் கோத்து மாலையா
அணிந்திருப்பார். அதுல ஒரு வெண் தலை கபாலம் என்ன
பண்ணுச்சு தெரியுமா.

விஷ்ணு ஏவின சக்ராயுதத்தை டபக்குன்னு வாயை அகலமா
திறந்து முழுங்கிடுச்சு. அஹா அதை வைச்சுத்தானே காத்தல்
தொழிலை செய்துக்கிட்டு வந்தார் விஷ்ணு.

அது இல்லாமல் என்ன செய்றது. இந்த வெண் தலை கபாலம்
முழுங்கிடுச்சே. என்று யோசனையில் ஆழ்ந்தார் விஷ்ணு.

விஷ்ணு என்ன நினைச்சாலும் அது விஷ்வக்சேனருக்குத்
தெரிஞ்சிடும்தானே. அதுனால அவருக்கு அந்தச் சக்கரம்
இல்லாம விஷ்ணு என்ன செய்வார்னு கவலை வந்திருச்சு.

ஒரு தரம் வயிரவரோட சூலத்துலேருந்து விஷ்வக்சேனரை
விஷ்ணு காப்பாத்தி இருந்தாரு. அதுனால என்னவாவது
செஞ்சு அந்த சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவுக்குத் தரணும்னு
விஷ்வக்சேனர் ஆசைப்பட்டாரு.

அதுனால நேரே வீரபத்திரர் கோயிலுக்குப் போனாரு.
ஆனா அங்கே காவல் காக்குற பானுகம்பன் போன்றவங்க
விடல. பிடிச்சி வெளியே தள்ளினாங்க. ஆனாலும்
விஷ்வக்சேனர் மனம் சோர்ந்து போயிடல. கோயிலுக்கு
உள்ளேதானே போய் வீரபத்திரரை பார்க்க முடியாது.
அதுனால ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை பண்ணி அவரை
வீரபத்திரரா நினைச்சு வழிபட்டார்.

இவரோட பக்தியைப் பார்த்த வீரபத்திரர் இவர் முன்னே
தோன்றி ”என்ன வேணும் விஷ்வக்சேனா ”அப்பிடின்னு
கேட்டார்.

“சுவாமி, விஷ்ணுவோட சக்ராயுதம் வேணும்.” என்றார்
விஷ்வக்சேனர்.

“அப்பிடியா அதெல்லாம் என் கையில இல்லப்பா. இதோ
இந்த மாலையில் இருக்குல ஒரு வெண் தலை கபாலம்.
அது குறும்பு பிடிச்சது. அந்த சக்ராயுதத்தை இதுதான்
முழுங்கி வைச்சிருக்கு . அதுகிட்ட கேளு , திருப்பித்தந்தா
வாங்கிக்க “ அப்பிடின்னு சொல்லிட்டாரு வீரபத்திரர்.

”என்னது .. வெண் தலை கபாலத்துக்கிட்ட வாங்கிக்கிறதா.
சரியாப்போச்சு. அதே குறும்பு பிடிச்சது. பிடிவாதம் பிடிச்சது.
முழுங்குனதை திருப்பக் குடுக்குமா என்ன ?” அப்பிடின்னு
யோசிச்சபடி இருந்தார் விஷ்வக்சேனர்.

மனசுல அவருக்கு திடீர்னு ஒரு எண்ணம் உதிச்சிது.
’சண்டைபோட்டோ, பிடுங்கியோ அந்த வெண் தலை
கபாலத்துக்கிட்டேருந்து சக்ராயுதத்தை எடுக்கமுடியாது.
அது வழியிலேயே நாமளும் குறும்புத்தனம் பண்ணுவோம்.
அப்ப திரும்பித் தந்துடும்.’ அப்பிடின்னு நினைச்ச அவரு
உடனே தன்னோட உடம்பை அஷ்ட கோணலா மாத்துனாரு.

அதைப் பார்த்த மத்த கபாலமெல்லாம் திகைச்சுப் போய்
சிரிச்சுதுங்க. ஆனால் அந்த சுட்டித்தனமான வெண் தலை
கபாலம் மட்டும் வாயே திறக்கல. திரும்ப கைகாலை முறுக்கி
உடம்பை அஷ்டகோணலாக்கி கோமாளி மாதிரி ஆடி
நின்னார். அப்பவும் வெண் தலை கபாலத்துக்கிட்ட லேசான
சிரிப்பு மட்டுமே வந்துச்சே தவிர அந்த சக்ராயுதத்தை தராம
அழுத்தமா இருந்துச்சு.

மத்த கபாலங்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சிக்கிட்டே
இருந்துச்சுங்க.

மூன்றாவது தரமா அவர் தன்னோட மூஞ்சியை அஷ்ட
கோணலாக்கி கண் வாய் மூக்கு அவ்வளவையும் அங்கேயும்
இங்கேயும் திருகி அகட விகடம் செய்தார்.

“ஹாஹ்ஹாஹ்ஹா “ன்னு ஒரு பெருஞ்சிரிப்புச் சத்தம்
கேட்டுச்சு. தன்னை மறந்து அந்த வெண் தலை கபாலம்
தன் வாயில் பிடிச்சிருந்த சக்ராயுதத்தை நழுவவிட்டுட்டு
சிரிச்சிக்கிட்டே இருந்துச்சு.

மத்த கபாலங்களோ கேக்க வேண்டாம். ஒன்னோடொன்னு
மோதிக் குலுங்கிக் குலுங்கிச் சிரிச்சுதுங்க.

’இதுதாண்டா வாய்ப்பு’ன்னு விஷ்வக்சேனர் அந்த
சக்ராயுதத்தை எடுக்குறதுக்குள்ள அங்கே வந்த குட்டி
விநாயகர் எடுத்துக்கிட்டாரு. என்னடா இது சோதனைன்னு
விஷ்வக்சேனர் விழிக்க இன்னொருதரம்

”இதே மாதிரி எனக்காக இன்னொருதரம் விகடக் கூத்தாடுனா
தரேன் “ என்று விநாயகர் ஒப்புக்கொள்ள அவருக்காகவும்
ஒருதரம் உடம்பு கைகால் முகம் கண் வாய் எல்லாவற்றையும்
அஷ்டகோணலாக்கி விகடக் கூத்தாடி சிரிக்கச் செஞ்சாரு
விஷ்வக்சேனர்.

கைதட்டி சிரித்து மகிழ்ந்த விநாயகர் அந்த சக்ராயுதத்தை
விஷ்வக்சேனரிடம் கொடுக்க அதை எடுத்து வந்து
விஷ்ணுவிடம் சமர்ப்பிக்கிறார் விஷ்வக்சேனர்.

இதுனால சந்தோஷமான விஷ்ணு விஷ்வக்சேனரை
சேனாதிபதியாக்கி அவரைத் தன்னோட தலைமைத் தளபதியா
நியமிச்சார்.

ரத்தம், சத்தம், யுத்தம் எதுவுமில்லாம சிரிச்சிக்கிட்டேயும்
ஒரு காரியத்தை சாதிக்கலாம் என்பதை விஷ்வக்சேனரோட
இந்தக் கதை நமக்கு உணர்த்துகிறதுதானே குழந்தைகளே.
-
---------------------
Thenammai Lakshmanan
டிஸ்கி 1 :-
இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில்
5. 7. 2019 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது.
நன்றி தினமலர் சிறுவர் மலர்,

தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும்
ஓவியர் ரஜனி & எடிட்டர் தேவராஜன் ஷண்முகம் சார்.
----


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 17, 2020 8:47 pm

விகடக் கூத்தாடிய விச்வக்சேனர் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக