ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை வளர்ப்பு

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

குழந்தை வளர்ப்பு - Page 2 Empty குழந்தை வளர்ப்பு

Post by தாமு Thu Jan 07, 2010 6:29 am

First topic message reminder :

எண்ணிக்கையில் என்ன இருக்கிறது?





குழந்தை வளர்ப்பு - Page 2 Ht115


"நாம் இருவர் நமக்கிருவர்" "நாம் ஒருவர், நமக்கு ஒருவர்" என்பனவற்றை எல்லாம் மீறி "நாமே குழந்தை நமக்கெதற்கு குழந்தை" என்ற அளவிற்குக் குடும்பக் கட்டுப்பாடு வாசகங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தங்களது முழு கவனிப்பும், அன்பும் பராமரிப்பும் ஒரு குழந் தைக்குத் திருப்தியாகக் கிடைத்தாலே போதும் என்ற மனோநிலை பல பெற்றோர்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது. பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து, அது பெற்றோரை, குழந்தைகளை எப்படி பாதிக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பேசுவோமா?
ஒரு குழந்தை இருந்தால்

வீட்டின் ஒரே குழந்தையாக இருந்தால் அக்குழந்தை பலவித சலுகைகளை அனுபவிக்கலாம். இரண்டு, மூன்று குழந்தைகளாகப் பிறந் தவர்களோடு ஒப்பிடும்போது, ஒற்றைக் குழந்தையின் புத்திசாலித்தனமும் அதிகமாக இருக்குமாம். பெற்றோரது முழுமையான பாசமும், கவனிப்பும் குழந்தைக்குத் திருப்தியாகக் கிடைக்கும். ஒற்றைக் குழந்தையாகப் பிறப்பவர்கள், பிற்காலத்தில் சமுதாய அந்தஸ்து பெருமளவு ஏதேனும் ஒரு துறையில் பிரபலமாகத் திகழ்வதாகவும் ஒரு கருத்து உண்டு.

இப்படிப் பிறக்கும் குழந்தைகள் ஓரளவு விவரம் தெரியும் வரை தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வார்கள். பெற்றோர் தான் இந்த உணர்வை வளர விடாமல் அவர்களுக்குச் சரியாக எல்லா விஷயங்களிலும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

இரண்டு குழந்தை இருந்தால்

வீட்டில் இரண்டு குழந்தை இருக்கும் பட்சத்தில் அவை ஒன்றாக வளர, பொழுதைக் கழிக்க வாய்ப்புகள் அதிகம். இளைய குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பை மூத்த குழந்தையிடம் ஒப்படைப்பதன் மூலம் அதன் மனத்தில் பெருமிதத்துடன் கூடிய பொறுப்புணர்ச்சியை ஏற்படுத்தலாம்.

அதிக வயது வித்தியாசம் இல்லாத போது இரண்டு குழந்தைகளுக்கும் சிறிய விஷயங்களில் கூட சண்டை வரக் கூடும். இப்படிப்பட்ட ச ண்டைகளில் பெற்றோர் தலையிடக் கூடாது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள், பாரபட்சமின்றி, இரு குழந்தைகளோடும் சமமான நேரம் ஒதுக்க வேண்டியது பெற்றோரது கடமை.



குழந்தைகளைத் தூங்கவைக்க............





குழந்தை வளர்ப்பு - Page 2 Ht125 பத்துமாதம் சுமந்து பெறுவது கூட பெண்களுக்குப் பெரிய விஷயமல்ல. குழந்தை பிறந்து ஒரு வருடம் வரை அதனுடைய ஒவ்வொரு செயலுமே தாய்மார்களுக்குக் போராட்டம்தான். குறிப்பாகக் குழந்தைகளின் தூக்கம். குழந்தையின் தூங்கும் நேரம் பழக்கமாகும்வரை தாய்மார்களுக்குத் தூக்கமில்லாத பகல்களும், இரவுகளுமே மிஞ்சும். குழந்தைகளைத் தூங்க வைக்க தாய்மார்களுக்கு சில யோசனைகள்........! குழந்தை பிறந்த முதல் சில மாதங்கள் வரை, அதற்கு இரவு, பகல் வித்தியாசம் தெரியாது.
எப்போது தூங்கும், எப்போது விழிக்கும் எனச் சொல்ல முடியாது. மாதங்கள் போகப் போகத்தான் இது சரியாகும். ஆறாவது மாதத்திலிருந்து சில குழந்தைகள் இரவு வேளைகளில் தூக்கமில்லாமல் அழலாம். பசி மற்றும் படுக்கையை நனைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களிலும் அடிக்கடி எழுந்திருக்கலாம். இந்தச் சந்தர்ப்பங்களில்தான் குழந்தை தூங்கும் நேரத்தைத் தாய்மார்கள் முறைப்படுத்த வேண்டும். தூக்கம் என்பது இரவு நேரச் செயல், அதாவது எந்தவித விளையாட்டும் இல்லாத நேரம் என அதற்கு உணர்த்த வேண்டும்.

குழந்தை விழித்துக் கொண்டிருக்கும் பகல் வேளைகளில் நிறைய வேடிக்கைகள் காட்டவும் இரவில் அதைத் தவிர்க்கவும் உங்களுக்கு வசதியான நேரத்ததில் குழந்தையைத் தூங்க வைத்துப் பழகுங்கள்.

சாப்பாடு ஊட்டியபிறகு சிறிது நேரம் குழந்தையை ஓய்வெடுக்க விடுங்கள். பிறகு பவுடர் போட்டு தளர்வான ஆடைகளை மாற்றிவிடவும். இது தூங்குவதற்கான இரவு நேரம் என்ற எண்ணத்தை குழந்தையின் மனத்தில் ஏற்படுத்தும்.

குழந்தையை அணைத்தபடியோ தொட்டிலில் விட்டபடியோ தாலாட்டு பாடிக்கொண்டு அல்லது இதமான இசையை ஒலிக்க விட்டுத் தூங்கச் செய்யவும். குழந்தை தூங்கும் அறை அதிக வெளிச்சமில்லாததாக இருக்க வேண்டும்.

சில குழந்தைகள் சாப்பாட்டு நேரத்தில் தூங்கிவிடும். பாதி தூக்கத்தில் எழுப்ப மனமின்றி தாய்மார்களும் அப்படியே விட்டு விடுவதுண்டு, பிறகு பசியெடுத்து விழித்துக் கொள்ளும். குழந்தைக்கு உணவூட்டி, உடனடியாக மறுபடியும் தூங்க வைத்து விடவும். பாதி தூக்கத்தில் எழுந்திருக்கும்போது விளையாட்டு காட்ட வேண்டாம்.

தூக்கமே இல்லாமல் அழும் பட்சத்தில் குழந்தையின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதா எனவும் பார்க்கவும். தூக்கத்தில் குழந்தை சிணுங்கினாலோ, அசைந்தாலோ ஓடிப் போய்த் தூக்க வேண்டாம். சில நிமிடங்களில் அது தானாகவே தூங்கிவிடும். அப்படித் தூங்காவிட்டால் அதனருகில் உட்கார்ந்து மென்மையாகத் தடவிக் கொடுத்து, நெற்றி கழுத்துப் பகுதியில் வருடினால் தூங்கிவிடும்.

குழந்தை பிறந்த அடுத்த மாதத்திலிருந்தே அதன் தூக்கப் பழக்கத்தை முறைப்படுத்தலாம். தினம் ஒரே நேரம் தூங்கும் பழக்கத்தை அதற்கு ஏற்படுத்தவும். எப்படியோ தூங்கினால் போதுமென ஒவ்வொரு நேரம் தூங்க வைக்க வேண்டாம்.
குழந்தை தானாகத் தூங்கட்டும் என்று விட வேண்டாம். சாப்பாடு கொடுத்த சில நிமிடங்களில் தூங்க வைப்பதே சிறந்தது. தூங்குமிடம் காற்றோட்டமாக, அமைதியானதாக இருக்க வேண்டும். பாதித் தூக்கத்தில் குழந்தையை அணைக்க வேண்டாம். குழந்தையின் தூக்கம் கெடும்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


குழந்தை வளர்ப்பு - Page 2 Empty Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு Thu Jan 07, 2010 6:47 am

குழந்தைகள் திடீரென்று அழுதால்





குழந்தை வளர்ப்பு - Page 2 Ht239 1. குழந்தைகள் திடீரென்று அழுதால் ஏதாவது பூச்சி கடித்திருக்கும். குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. குழந்தைகளுக்கு கூடுமானவரையில் லைட் கலர் ஆடையை அணிவிப்பது நல்லது. அதில் பூச்சி , எறும்பு இருந்தால் உடனே தெரியும்.

2. உடனே பக்கத்தில் உள்ள அனைத்து துணிகளையும் நல்ல உதரி போடுங்கள். ஏதும் எறும்பு இருக்கான்னும் பார்க்கவும்.

3. காசு சில்லரை காசுகள் குழந்தைகள் உள்ள இடத்தில் ஆங்காங்கே வைக்காதீர்கள். அது போல பெரிய குழந்தைகளிடம் காசு கொடுத்தாலும் குழந்தைகளிடம் கொடுத்து விளையாட கொடுப்பார்கள். இதனால் குழந்தைகள் அதை எடுத்து வாயில் போட்டு கொண்டால் பல விபரீதம் நடக்க வாய்ப்பிருக்கு.

4. வயிற்று வலியா இருந்தாலும் அழுவார்கள், அதற்கு வயிற்றில் எண்ணை தடவிவிட்டு, கொதித்து ஆறிய வெண்ணீரை பாலைடயிலோ (அ) ஸ்பூனாலோ ஊற்றி விடுங்கள் கொஞ்சம நேரத்தில் சரியாகிடும்.

5. ஆகையால் தான் நல்ல சப்போட் கொடுத்து அடக்கமா தூங்க வைத்து அழக்குங்கள்.

6. ஒரே தூக்கி பழக்க படுத்தி கையிலேயே வைத்து தூக்கி பழக்க படுத்தியவர்கள் கொஞ்சம் அவர்களை விட்டு நகர்ந்தாலும் உடனே வீல்லென்று சத்தம் வரும்.

7. அடுத்து அடுத்து இரண்டு குழந்தை உள்ள வீட்டில் பெரிய குழந்தை கூட சின்ன குழந்தையையே கொஞ்சுகிறார்களே என்ற பொறாமையில் கைய கால கூட இழுத்து விட்டு விடுவார்கள்.அதையும் ஜாக்கிரதையா கண்காணிக்கனும்.

8. குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கு கிறார்களோ அவ்வளவு நல்லது. அதற்குன்னு வயிற்றுக்கு கொடுக்காமல் அப்படியே விடக்கூடாது. ஒரு மணி நேர்த்திற்கு ஒரு முறை பார்த்து காலை சுரன்டி விட்டால் (அ) காது மடலை லேசாக தொட்டால் கொஞ்சம் எழுந்திருப்பர்கல் வயிற்றை நிறைத்து மறு படி ஏப்பம் விட வைத்து தூங்க போடவும்.

9. பாத்ரூம் (ஒன், டு) போய் விட்டால் கூட அழுவார்கள் அதையும் அப்ப அப்ப செக் பண்ணி மாற்றி விடுங்கள்.

10. குழந்தைகளை பேனுக்கு நேரா படுக்க வைக்காதீர்கள்.எப்போதும் கொஞ்சம் சரிவலாக படுக்க வையுங்கள்.அப்படி நேராக படுக்க வைத்தால் நெஞ்சின் மேல் ஒரு டவலை மடித்து மேலே வையுங்கள்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தை வளர்ப்பு - Page 2 Empty Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு Thu Jan 07, 2010 6:48 am

குழந்தைக்குப் பரீட்சையா?





குழந்தை வளர்ப்பு - Page 2 Ht253 உங்கள் குழந்தைப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறதா? அதற்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம்? உங்கள் அணுகுமுறை எப்படியிருக்க வேண்டும், இதோ சில யோசனைகள்.

பரீட்சை நெருங்க நெருங்க எல்லாக் குழந்தைகளுக்குமே பயம் ஆரம்பிக்கும். அது அனாவசியமானது என்று நீங்கள் தான் குழந்தைக்கு உணர்த்த வேண்டும்.

குழந்தைக்குப் படிக்க நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் உள்ள இடமாகப் பார்த்துக் கொடுங்கள்.

குழந்தைக்குப் பரீட்சை முடிகிறவரை நீங்கள் சில விஷயங்களைத் தியாகம் செய்தாக வேண்டும். உதாரணத்திற்கு விருந்தினர் வருகை, அரட்டை, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற சில விஷயங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வையுங்கள்.

குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக் கூடிய நல்ல, போஷாக்கான உணவாகக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் அனுசரணையாகப் பேசுங்கள். உன்னால் முடியும். நீ கட்டாயம் நல்ல மதிப்பெண்களை வாங்குவாய் என்று ஊக்கம் கொடுங்கள். அதை விட்டு விட்டு மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு உங்கள் குழந்தையை மட்டம் தட்டாதீர்கள்.

சதா சர்வ காலமும் குழந்தையைப் படி படி என்று கட்டாயப்படுத்தாதீர்கள். காலையிலும், மாலையிலும் குறிப்பிட்ட நேரம் படிக்க அனுமதியுங்கள். மற்றபடி அவர்கள் ரிலாக்ஸ் செய்து கொள்வதற்கும் விளையாடுவதற்கும் போதுமான நேரத்தை ஒதுக்கிக் கொடுங்கள்.

குழந்தைக்கு மந்தமாக இருக்கும் பாடத்தை அதன் குரலாலேயே சொல்ல வைத்து டேப் ரெக்கார்டரில் பதிவு செய்து விடுங்கள். நேரம் கிடைக்கிற போதெல்லாம் அதை உங்கள் குழந்தை கேட்கும் படி செய்யுங்கள். இந்த முறையிலான பாடம் அதற்கு விரைவில் மனப்பாடமாகும்.

பரீட்சையில் நல்ல இடத்தில் தேறினால் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கித் தருவதாக வாக்குக் கொடுங்கள். அதை நிறைவேற்றவும் செய்யுங்கள்.

அனாவசிய வேலைகளை வாங்காதீர்கள்.

அதிகாலையில் சீக்கிரம் கண்விழித்துப் படிக்கிற பழக்கத்தை உங்கள் குழந்தைக்கு ஏற்படுத்துங்கள். அதிகாலைக் காற்றில் ஓசோன் அதிகமிருப்பதால் குழந்தையின் நினைவாற்றலுக்கு அது உதவும்.

உங்கள் குழந்தையை தனியே படின்னு விடுவதைவிட அதே வகுப்பு படிக்கும் நான்கைந்து குழந்தைகளைச் சேர்ந்து படிக்க வைக்கலாம். போட்டி போட்டுக் கொண்டு படிப்பார்கள்.

ஒரு வேளை உங்கள் குழந்தை எதிர்பார்த்த அளவுக்கு அதிக மதிப்பெண்கள் வாங்கிவிட்டாலோ, பரீட்சையில் தேறாவிட்டாலோ அளவுக்கு மீறிக் கண்டிக்காதீர்கள். அடுத்த முறை சரி செய்து விட தைரியம் சொல்லுங்கள்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தை வளர்ப்பு - Page 2 Empty Re: குழந்தை வளர்ப்பு

Post by தாமு Thu Jan 07, 2010 6:49 am

குழந்தைகளின் பெற்றோருக்கு

குழந்தை பிறந்தவுடன் நான்கு நிமிடத்திற்குள் அழ வேண்டும். அழுவதன் மூலம் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக மூளையை சென்றடைகிறது. குழந்தை 6 முதல் 8 வாரத்திற்குள் முகம் பார்த்து சிரிக்கவேண்டும். 12 முதல் 15 வாரத்திற்குள் தலை நிற்கவேண்டும். 20 வாரத்தில் குப்புறப்படுக்கவேண்டும். 6 மாதத்திற்குள் உட்காரவேண்டும். 8 மாதத்தில் நடப்பதற்கும், ஒரு வருடத்திற்குள் யார் துணையுமின்றி நடக்கவேண்டும்.

இந்த வளர்ச்சி சீராக இருக்கும் பட்சத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி பெறும். இதில் ஏதும் மாறுதல் இருக்கும்பட்சத்தில் மனவளர்ச்சி பாதிப்பு ஏற்படும். எனவே மருத்துவரை அணுகி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளித்தால் குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

குழந்தை வளர்ப்பு - Page 2 Empty Re: குழந்தை வளர்ப்பு

Post by உமா Thu Jul 28, 2011 1:54 pm

அனைத்து தொகுப்புக்கும் மிக்க நன்றி தாமு அண்ணா...தற்போது படிக்க நேரமில்லை...அனைத்தையும் பிரிண்ட் எடுத்துக்கொண்டேன்....வீட்டில் சென்று இரவு படிக்க.....
நன்றி நன்றி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

குழந்தை வளர்ப்பு - Page 2 Empty Re: குழந்தை வளர்ப்பு

Post by ஸ்ரீஜா Thu Jul 28, 2011 2:02 pm

அனைத்து விஷயங்களும் அருமை தாமு அண்ணா ......... நன்றி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

குழந்தை வளர்ப்பு - Page 2 Empty Re: குழந்தை வளர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum