ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

2 posters

Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

Post by krishnaamma Tue Apr 28, 2020 11:41 am

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி, நேரடி ஒளிபரப்பை கீழுள்ள யூ டியூப்  மூலம்  காணலாம் !



இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! SyQX37fTCKAAA6XFaPIA+Ramanujacharya-Jayanti


இராமானுஜர் திருவடிகளே சரணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


Last edited by krishnaamma on Tue Apr 28, 2020 6:26 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty Re: இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

Post by krishnaamma Tue Apr 28, 2020 11:43 am

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Ssr78i1TVWyAw5XceTC8+ramanuja

ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர்  பூத உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறார்கள். இந்த பூத உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் கொண்டு அபிசேகம் செய்து வருகிறார்கள்

இந்த செய்தி திருச்சியில் உள்ள இந்துக்களுக்கே தெரியாது. ..

ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை. அப்படியே ஸ்ரீராமனுஜர் சன்னதியை பார்ப்பவர்கள்
ஸ்ரீராமானுஜர் பூத உடல் என்று அறிவது இல்லை, சன்னதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து போகிறார்கள். தானான திருமேனி (இராமனுஜர் பூத உடல்) இராமானுஜர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை (பூத உடலை) பிரதிஷ்டை செய்தார்கள்.

இராமானுஜர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். உயிர் பிரிந்த உடனே
தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள்.

நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.

இதன் பின்பு இராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.

தொடரும்....


Last edited by krishnaamma on Tue Apr 28, 2020 11:45 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty Re: இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

Post by krishnaamma Tue Apr 28, 2020 11:43 am

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! OZDsM4v3RfOHVa6w2qiE+LRG_20190509121723501864

ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்:
இராமானுசன் என்தன் மாநிதி
என்றும் இராமனுசன் என்தன் சேமவைப்பு என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே இராமனுசரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுஜரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம் இவரின் திருமேனியில் தலைமுடி கைநகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுஜரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர்.

உய்ய ஒரே வழி....
உடையவர் திருவடி.... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty இன்று ராமானுஜர் ஜெயந்தி

Post by ayyasamy ram Tue Apr 28, 2020 2:43 pm

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Tamil_News_large_2529622
-

ஆதிசேஷன் அவதாரமென்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர்,
வைணவத்தில் புரட்சிசெய்த அருளாளர். சென்னை அருகேயுள்ள
ஸ்ரீபெரும்புதூரில், அசூரிகேசவ சோமயாஜி-காந்திமதி தம்பதிக்கு
பிங்கள ஆண்டு (கி.பி 1017-ஆம் ஆண்டு) சித்திரை மாதம்,
வளர்பிறை, பஞ்சமி திதி, வியாழக்கிழமை, திருவாதிரைத்
திருநாளில் அவதரித்த ராமானுஜர், தனது 120-ஆவது வயதில்
திருநாடு (பரமபதம்) எழுந்தருளினார்.

அவரது திருமேனி ஸ்ரீரங்கம் கோயிலில் வசந்த மண்டபத்தில்
அடக்கம் செய்யப்பட்டது.

ஆனால், அத்திருமேனி மறுநாள் மேலெழுந்து வந்தது. அதனால்
தானான திருமேனி என்று போற்றுவர். யோக நிஷ்டையில்
அமர்ந்தவாறு காட்சியளிக்கும் அவரது திருமேனிக்கு ஒவ்வொரு
வருடமும் சித்திரை மற்றும் ஐப்பசி மாதத்தில் குங்குமப்பூ மற்றும்
பச்சைக்கற்பூரம் கலந்த தைலம் பூசப் படுகிறது.

வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை. தனிச்சன்னிதியில்
வடக்கு திசைநோக்கி அமர்ந்திருக்கும் அவரது தோற்றம்
பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் திருக்கோலத்தில் உள்ளது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம்
ஸ்ரீரங்கநாதர் கோயிலில் ஸ்ரீராமானுஜருக்கு அனைத்து
வழிபாடுகளும் நடந்த பின்பே அரங்கனுக்கு வழிபாடுகள்
நடைபெறுகின்றன என்பது தனிச்சிறப்பு.
---
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty Re: இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

Post by ayyasamy ram Tue Apr 28, 2020 2:46 pm

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Gallerye_095029696_2529622
-
குருவிடம் மந்திர உபதேசம் பெற வேண்டி பலமுறை முயன்றார்
ராமானுஜர் கடும் அலைக்கழிப்புக்குப்பின், இந்த மந்திரத்தை
யாருக்கும் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் எட்டெழுத்து
மந்திரத்தை குரு உபதேசித்தார்.

திருக்கோஷ்டியூர் நம்பி உபதேசித்த அந்த மந்திரத்தை, தான்
மட்டும் ஜெபித்து வைகுண்டம் செல்வது முறையல்ல என்றெண்ணிய
ராமானுஜர், குருவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி, தான்
நரகம் சென்றாலும் பரவாயில்லை மக்கள் அனைவரும் வைகுந்தம்
செல்லும் பாக்கியத்தை அடையவேண்டுமென்று, அனைவரையும்
கூட்டி, திருக்கோஷ்டியூர் கோயில் கோபுரத்தின்மீதேறி
ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை உரத்த குரலில்
கூறியருளினார்.

இதனையறிந்த அவரின் குருநாதர் ஸ்ரீராமானுஜரை அழைத்து,
நீ குருவின் கட்டளையை மீறிவிட்டாய் கொடுத்த வாக்குறுதியை
மதிக்காததால் நீ நரகம் செல்வாய் என்று சாபம் கொடுத்தார்.

ஆனால் ராமானுஜர் தன் இறுதிக்காலம் வரை வைணவத்திற்குத்
தொண்டு செய்து இறையடி சேர்ந்தார்.

மத, இன வேறுபாடுகளைப் பொருட்படுத்தாதவர் அவர்
மேலக்கோட்டை என்ற திருநாராயணபுரத்தில், ஒதுக்கி
வைக்கப்பட்ட மக்களை அழைத்துக் கொண்டு கோயில்ப்பிரவேசம்
செய்ய உறுதுணை புரிந்த புரட்சியாளர்.

வைணவன் என்றால் உயர்ந்தவன்; அவனுக்கு ஜாதி, மதம்
இல்லையென்று சொல்லி, தாழ்ந்த குலம் என்று அக்காலத்தில்
சொல்லப்பட்டவர்கள் தோள்மீது கை போட்டுக்கொண்டு,
வீதியில் நடந்துவந்த நிகழ்ச்சியும் உண்டு.

அவரது சேவையையும், வைணவத்தில் செய்த புரட்சியையும்
கண்டு மகிழ்ந்த பெருமாள். அவருக்குத் தொண்டுசெய்ய
விரும்பி ஒரு திருவிளையாடலையும் புரிந்தார்.

ஒரு சமயம் ராமானுஜர் தனது பிரதம சீடன் நம்பியுடன்
திருவனந்தபுரம் சென்று அனந்தபத்மநாபனை தரிசித்தார்.
அங்கும் வைணவ சம்பிரதாய பூஜை முறையை நடைமுறைப்
படுத்த நினைத்தார். அதற்காக அத்தலத்தில் தங்கினார்.

அவரது செயல்முறைகளையறிந்த அக்கோயிலில் பூஜிப்பவர்கள்.
தங்கள் பாரம்பரியமான பூஜைமுறைகளை மாற்றாமலிருக்கும்படி
பெருமாளிடம் வேண்டினார்கள்.

அவர்களுக்கு இரங்கினார் பெருமாள். அன்றிரவு ராமானுஜர்
தன் சீடருடன் ஒரு மண்டபத்தில் உறங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது பெருமாள் கருடனை அழைத்து ராமானுஜரின்
உறக்கம் கலையாமல் தூக்கிச் சென்று திருக்குறுங்குடியில்
விடச்சொன்னார். அப்படியே செய்தார் கருடன்.
---


Last edited by ayyasamy ram on Tue Apr 28, 2020 2:49 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty Re: இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

Post by ayyasamy ram Tue Apr 28, 2020 2:49 pm

காலை கண்விழித்தபோது ராமானுஜர் தான் திருக்குறுங்குடி
தலத்தில் இருப்பதை அறிந்தார் எல்லாம் பகவான் செயல் எ
ன்று பெருமாளை வணங்கினார்.

தன்னுடன் படுத்துறங்கிய சீடன் வடுக நம்பியும் அங்குதான்
இருப்பான் என்றெண்ணிய ராமானுஜர் வடுகநம்பியை
அழைத்தார். அப்போது, திருக்குறுங்குடி அழகியநம்பி பெருமாள்,
சீடர் உருவத்தில் வந்து ராமானுஜர் முன் கைகூட்டிப் பணிந்து
நின்றார்.

நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் ராமானுஜர் நீராடி வந்தபின்
வழக்கம்போல் சீடனுக்கு திருநாமம் இட்டு, அவன் முகத்தைப்
பார்த்து நம்பி உன்முகம் தெய்வாம்சம் பொருந்தித் திகழ்கிறது
உன்னில் நான் பெருமாளையே காண்கிறேன். இன்று நான்
உனக்கிட்ட திருநாமம் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது
என்றார்.

பின்னர், கூடையிலிருந்த மலரையெடுத்து வடுகநம்பியின்
காதுகளில் வைத்தார் நம்பி இப்பொழுது உன் அழகு மேன்
மேலும் சிறந்து காணப்படுகிறது என்று மகிழ்ந்தார்.

இருவரும் கோயிலுக்குப் புறப்பட்டார்கள். கொடிமரம் அருகே
சென்று கொண்டிருக்கும் போது, சீடரான நம்பி திடீரென்று
மாயமாகி விட்டார். மூலஸ்தானம் சென்ற ராமானுஜர் அழகிய
நம்பி பெருமாள் நெற்றியில், வடுக நம்பிக்கு தானிட்ட
திருநாமமும், காதுகளில் வைத்த பூவும் அழகாகத் திகழ்வதைக்
கண்டார்.

அப்போதுதான் தன் சீடன் வடுகநம்பியாக வந்தது பெருமாளே
என்பதையறிந்து சிலிர்த்தார். பெருமாளே, இத்தனை நாட்களாக
எனக்கு சீடராக வந்து தொண்டு செய்தீரே என்று மனமுருகி
வழிபட்டார்.

பெருமாளை ராமானுஜ நம்பி என்று பெயரிட்டு அழைத்தார்.
பெருமாளும் யாம் ஏற்றோம் என்றார். குரு சிஷ்ய பாரம்பரியம்
உலகில் பரவ வேண்டுமென்றே யாம் சீடனாக வந்தோம் என்று
அருள்வாக்கு மொழிந்தார் பெருமாள்

சிலநாட்கள் கழித்து உண்மையான சீடன் வடுகநம்பி
ராமானுஜர் இருப்பிடம் தேடி வந்துசேர்ந்தார்.

ராமானுஜரை கருடன் திருவனந்தபுரத்திலிருந்து தூக்கிவந்து
கிடத்திய பாறை திருப்பரிவட்டப்பாறை என்று போற்றப்படுகிறது.
திருக்குறுங்குடி கோயிலிலிருந்து சுமார் பன்னிரண்டு
கிலோமீட்டர் தூரத்தில் இப்பாறை உள்ளது.

தகுந்த குருவைத்தேடி அலையும் அன்பர்கள் இங்குவந்து
ராமானுஜரை தரிசித்தால் குருவின் திருவருள் கிட்டும் என்பர்.

ராமானுஜர் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் தங்கியிருந்தபோது
ஸ்ரீரங்கநாதர் கோயிலில் நடைபெறும் பூஜைமுறைகளில்
சீர்த்திருத்தம் செய்தார். அதுவே இன்றளவும்
கடைப்பிடிக்கப்படுகிறது.
-
---------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty Re: இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

Post by krishnaamma Tue Apr 28, 2020 6:25 pm

ஏற்கனவே உள்ள திரியுடன் இந்த திரியையும் இணைக்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty Re: இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

Post by krishnaamma Tue Apr 28, 2020 7:00 pm

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! ItyF0bftSWClsL4ufeNw+13d4cb81-b9ce-4777-8bd2-1bdecbc0e5fa


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி ! Empty Re: இன்று ஸ்ரீ இராமானுஜர் ஜெயந்தி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum