புதிய பதிவுகள்
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
56 Posts - 45%
ayyasamy ram
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
52 Posts - 42%
mohamed nizamudeen
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
3 Posts - 2%
prajai
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
2 Posts - 2%
Manimegala
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
2 Posts - 2%
Saravananj
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
418 Posts - 48%
heezulia
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
292 Posts - 34%
Dr.S.Soundarapandian
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
28 Posts - 3%
prajai
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அரவான் கதை   Poll_c10அரவான் கதை   Poll_m10அரவான் கதை   Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரவான் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2020 7:27 pm

அரவான் கதை   Aravan%2B1


முன்பெல்லாம் கிராமங்களில் திரெளபதி அம்மன் கோயில்களில்
கோடைகாலத்தில் திருவிழா நடக்கும் அப்போது அந்தக்
கோயில்களில் உடுக்கடித்துக்கொண்டு அரவான் கதை
சொல்வார்கள்.

நள்ளிரவில் பாதி தூக்கத்தில் எழுந்து இந்த உடுக்கு ஓசையைக்
கேட்டால் அடிவயிற்றைக் கலக்கும். இப்போதெல்லாம் கிராம
கோயில்களில் அதுபோல திருவிழாக்கள் உண்டா என்பது
தெரியவில்லை. போகட்டும், யார் இந்த அரவான்?

மகாபாரதம் அனைவருக்கும் தெரிந்த கதை; அதிலும் இப்போது
இருவேறு தொலைக் காட்சிகளில் மகாபாரதம் காண்பிக்கப்பட்டு
வருகிறது. மகாபாரதக் கதையில் அரவான் என்பவன் ஒரு சிறிய
ஆனால் ஆணிவேர் போன்ற கதாபாத்திரம்.

இப்போதெல்லாம் விழுப்புரம் அருகே கூத்தாண்டவர் கோயில்
விழாவுக்காக இந்தியா முழுவதிலுமிருந்து அரவாணிகள் வந்து
குவிந்தனர் என்று செய்தி சொல்லுகிறார்கள்.

அவர்களுடைய முக்கிய கடவுளாகக் கருதப்படுபவர் இந்த அரவான்.
இவர் அர்ஜுனனுக்கும் நாக இளவரசி உலுப்பி என்பாருக்கும் பிறந்த
மகன். அப்படி இந்த அரவான் செய்ததுதான் என்ன?

மகாபாரதப் போர் துவங்குமுன்பாக தங்கள் வெற்றிக்காக சர்வ
லட்சணங்களும், வீரமும் ஒருங்கே பொருந்திய ஒருவனை பலி
கொடுக்க வேண்டுமெனும் சூழ்நிலையில், அரவான் தானே முதல்
பலியாக ஆக சம்மதம் தந்தான்.

அப்படி அரவான் தன்னை களபலி கொடுக்க முன்வந்த காரணத்தால்
அவனுக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மூன்று வரங்களை அளித்தார்.
அதன்படி அரவான் தான் இறக்குமுன் திருமணம் செய்துகொள்ள
வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். அதன்படி பகவான்
ஸ்ரீகிருஷ்ணரே ஒரு மோகினி வடிவம் கொண்டு அவன் வேண்டுதலை
நிறைவேற்றினார்.

போரில் அரவான் களபலியானதும் மோகினி விதவையாகி
விடுகிறாள். இதைத்தான் அரவாணிகள் கூவாகம் திருவிழாவில்
அரவான் இறப்பையும், அதைத்தொடர்ந்து தாங்கள் விதவைக் கோலம்
பூணுவதையும் செய்து காட்டுகிறார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அரவானுக்குக் கொடுத்த மற்றொரு வரத்தின்
மூலம் வெட்டுண்ட அவனுடைய தலையிலுள்ள கண்கள் மகாபாரதப்
போர் முழுவதையும் பார்க்கும் சக்தியைக் கொடுத்தார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2020 7:27 pm


திரெளபதி அம்மன் கோயில்களில் ஒரு கம்பத்தின் மீது
வைக்கப்பட்டுள்ள ஒரு தலையைப் பார்க்கலாம், அதுதான் அரவான்
தலை. கிராமங்களில் அரவான் தலையை மரத்தால் செய்து வைத்துக்
கொள்வார்கள்,

அந்தத் தலை அவர்களைத் தீமைகளிலிருந்து காக்கும் என்பது
நம்பிக்கை.

திரெளபதி அம்மன் கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும் அரவான்
தலையின் முகத்தில் பெரிய மீசை, உருண்டையான கண்கள், பெரிய
காதுகள் ஆகியவற்றுடன் காணப்படுவார்.

தலையில் ஒரு மகுடம், நெற்றியில் பரந்த நாமம், காதில் தொங்கும்
காதணிகள் இவற்றையும் பார்க்கலாம். மகுடத்தின் மீது ஒரு நாகம்
படமெடுத்து ஆடுவது போன்ற தோற்றம் காணப்படும்.

சில இடங்களில் அரவானின் வாயில் இரு புறமும் இரு கோரைப்
பற்கள் இருக்கும். திருவிழா காலங்களில் அரவான் தலை
ஊர்வலமாக தாரை தப்பட்டைகள் முழங்க எடுத்துச் செல்லப்படும்.

இரவில் அரவான் கதை நடக்கும்போது மக்கள் கூட்டமாக வந்து
கேட்பார்கள்.

அரவானுடைய தியாக வரலாற்றை முதன் முதலாக
தமிழிலக்கியத்தில் பெருந்தேவனார் எழுதிய
“பாரத வெண்பா”வில் குறிப்பிடுகிறார்.

இது ஒன்பதாம் நூற்றாண்டு இலக்கியம். இது தவிர வில்லிபுத்தூரார்
பாரதக் கதையிலும் அரவான் கதை சொல்லப்படுகிறது.
தற்காலத்தில் கூத்தாண்டவர் திருவிழா பற்றிய செய்திகளிலும்
அரவான் பற்றிய செய்திகள் உண்டு.

முற்காலத்தில் சினிமா, தொலைக்காட்சி போன்ற நவீன சாதனங்கள்
இல்லாத காலத்தில் கிராமங்களில் தெருக்கூத்துதான் பொழுதுபோக்கு.
நமது தமிழ்நாட்டு கிராமியக் கலைகளில் இந்த கூத்துக்கு நல்ல மதிப்பு
உண்டு. அந்த கூத்துகளில் அரவான் களபலியையும், அதைத்
தொடர்ந்து ஒப்பாரியும் கேட்க முடியும்.

கோடை நாட்களில் வயல் வேலைகள் இல்லாத போது திரெளபதி
அம்மன் கோயில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது.
அரவான் இறந்த பின்னும் மகாபாரத போரைக் கண்களால் கண்டான்
என்பதுதான் சில கூத்துக்களில் கருப்பொருளாக இருந்திருக்கிறது.

முற்காலத்தில் போர்கள் நடக்கும்போது படைவீரர்களாகச் செல்வோரில்
சிலர் பெற்றோர், மனைவிமார்கள் ஆகியோர் வருத்தப்பட வைத்து
விட்டுத்தான் போருக்குச் செல்வர். அப்படிச் செல்பவர்கள் போரில்
மாண்டுபோய்விட்டால், அந்தக் குடும்பத்தார் படும் வேதனையைத்தான்
அரவான் கதை மக்கள் உள்ளங்களில் ஆழமாகப் பதிவிடுகிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82727
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 27, 2020 7:28 pm



துருபதனின் மகளான திரெளபதியை போட்டியில் வென்ற அர்ஜுனன்
திருமணம் செய்து கொள்ள எண்ணி தன் தாயிடம் வந்து தான் ஒன்றை
வென்று வந்திருக்கிறேன் என்று சொல்ல, அந்த பொருள் எதுவென
தெரியாத குந்தி சொன்னாள்

அதனை நீங்கள் ஐவரும் சமமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று
சொன்னாள்; அதன் பயனாய் பாஞ்சாலி ஐவருக்கும் துணையானாள்.

அர்ஜுனனின் இந்தச் செயல் விதிமீறிய செயல் என்பதால் அவன்
தலைநகர் இந்திரபிரஸ்தத்திலிருந்து ஓராண்டுகள் தலயாத்திரை
செய்யவேண்டுமென்று பெரியவர்கள் சொல்ல அர்ஜுனனும் பாரத
வர்ஷத்தின் வடகிழக்குப் பகுதிக்குச் சென்றான்.

அங்கு நாக வம்சத்து இளவரசி உலுப்பி எனும் பெண் மீது அர்ஜுனன்
காதல் கொள்கிறான். அங்கு இருவரும் திருமணம் செய்து கொண்டு
, ஒரு மகனைப் பெற்றெடுத்தனர். அவன்தான் அரவான்.

அவனையும் உலுப்பியையும் அங்கேயே விட்டுவிட்டு அர்ஜுனன்
தன் புனித யாத்திரையை மேலும் தொடர்ந்தான். அரவானோ
தன் தாயின் அரவணைப்பில் நாகலோகத்திலேயே வளர்ந்து
வந்தான்.

மகாபாரதப் போர் துவங்கியபோது அர்ஜுனன் தன் மகன் அரவானைப்
போரில் உதவ அழைத்ததனால் அரவான் போரில் கலந்துகொள்ள
வந்து சேர்ந்தார். தமிழ்நாட்டில் மட்டும்தான் அரவான் போருக்கு
களபலியாக பலிகொடுக்கப்பட்டார் என்று கூறுகிறது.

ஆனால் வேறு பல மகாபாரதக் கதைகளில் அரவான் எட்டு நாட்கள்
போரிட்டதாகக் கூறப்படுகிறது. எட்டாம் நாள் போரில் துரியோதனன்
ஏவிவிட அலம்பூசன் எனும் அரக்கனால் அரவான் கொல்லப்பட்டதாக
வரலாறு இருக்கிறது.

இந்தக் “களபலி” பற்றி சொல்லப்படும் கதை இதுதான்.
போர் துவங்குவதற்கு முன்பாக துரியோதனன் களபலி கொடுக்க
நாளையும் ஆளையும் தீர்மானிக்க எதிரியான ஜோசியத்தில்
வல்லவனான சகாதேவனிடம் வந்து ஆலோசனை கேட்டு
களபலிக்கான நேரத்தை முடிவு செய்து கொள்கிறான். களபலிக்கு
அர்ஜுனனின் மகன் அரவானே தகுந்தவன் எனக் கருதி அவனிடம்
பேசி துரியோதனன் அவன் சம்மதத்தைப் பெற்று விடுகிறான்.

துரியனின் இந்த சதியை அறிந்து கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் அரவான்
கெளரவர்கள் வலையில் விழுந்துவிடாமல் பாண்டவர்களுக்காக
உயிர்த்தியாகம் செய்யும்படியாக ஒரு திட்டம் தீட்டிவிடுகிறார்.

அதன்படி தருமனிடம் சென்று களபலி பற்றி சொல்லி இந்தப் பலிக்குத்
தகுந்தவர்கள் நான்கு பேர். அதில் தானும் ஒருவர் என்கிறார்
கண்ணன். மற்ற மூவர் சால்யன், இவர் துரியனுடன் இருப்பவன்,
மற்றொருவன் அர்ஜுனன், அடுத்தவன் அர்ஜுனனின் மகன் அரவான்
என்கிறார்.

இதில் அரவானே சரியான தேர்வு என்று முடிவு செய்து அவனையே
பலி கொடுக்க சம்மதம் பெறுகின்றனர்.

இப்படியாக அந்த வீர நாகர் குல இளைஞன் மகாபாரதப் போரில்
களப்பலி ஆகிறான்.

இவனுடைய வீரம், தியாகம் இவை போற்றப்படுகின்றன.
இந்தக் கதையில் பல்வேறு குழப்பங்களும், மாறுபாடான
வரலாறுகளும் குறுக்கிட்டாலும், அரவான் எனும் இளைஞனின்
தீரமிக்க தியாகம் வெளிப்படுகிறது.

அவன் வீரத்தினைப் புகழ்வோம். தியாகத்தினை மதிப்போம்.
அதுதான் நாம் செய்யக்கூடிய செயல்.
-
-------------------------------
நன்றி- பாரதி இலக்கியப் பயிலகம்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக