ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்!

Go down

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Empty கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்!

Post by ayyasamy ram Sat Apr 18, 2020 6:12 am

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Ghill88844

ஒரு படத்தை வெற்றி பெற வைக்க எனக்குத் தெரியும்.
தூள் பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் தரணி இதுபோல
பேட்டியளித்தார்.

இதைச் சொல்வதற்கு அவருக்கு முழுத்தகுதியும் இருந்தது.
2001-ல் ஆரம்பித்து அடுத்த மூன்று வருடங்களில்
தில், தூள், கில்லி என மூன்று சூப்பர் படங்களை அளித்திருந்தார்.

2004, ஏப்ரல் 17, சனிக்கிழமையன்று வெளியானது கில்லி படம்.
ஒக்கடு என்கிற தெலுங்குப் படத்தின் ரீமேக். பகவதி, திருமலை
என அதற்கு முன்பு விஜய் நடித்த ஆக்‌ஷன் படங்கள் ஓரளவு வெற்றி
பெற்றாலும் கில்லி படம் விஜய்யின் புகழை ஒரே நாளில் உயர்த்தியது.

விஜய்யின் திரையுலக வாழ்க்கைக்கு எப்படி பூவே உனக்காக மிகப்
பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதோ அதேபோல கில்லி,
விஜய்யை சூப்பர் ஸ்டார் நிலைக்குக் கொண்டு சென்றது. 90களில்
பார்த்த விஜய் அல்ல இவர் என்கிற புதிய அடையாளத்தை அளித்தது.

* மகேஷ் பாபு நடித்து ஹிட் ஆன ஒக்கடு படத்தின் தமிழ் ரீமேக்
உரிமையும் விஜய்யின் கால்ஷீட்டும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்திடம்
இருந்தன. ஒக்கடு படம் பார்த்த விஜய், இதை தரணி ரீமேக் செய்வாரா
என்று ரத்னத்திடம் கேட்டுள்ளார்.

ஒக்கடு படம் பார்த்த தரணியும் ரீமேக்குக்குச் சம்மதம் அளித்தார்.
ஆனாலும் ஹைதராபாத் சென்று இந்தப் படத்துக்குக் கிடைக்கும்
வரவேற்பு, இயக்குநரின் கருத்துகளை அறிய விரும்பியுள்ளார்.
எல்லாவற்றையும் முழுவதுமாகத் தெரிந்துகொண்ட பிறகுதான்
விஜய்யிடம் கதை சொல்லியுள்ளார்.

* இயக்குநர் தரணி வசம் மூன்று கதைகள் இருந்துள்ளன.
கபடி கதை, லைட்ஹவுஸில் ஒளிந்திருக்கும் கதாநாயகி பற்றிய கதை,
சேஸிங் காட்சிகள் கொண்ட ஒரு கதை. இந்த மூன்றுமே ஒக்கடுவில்
இருந்ததால் ரீமேக் செய்ய முடிவெடுத்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Empty Re: கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்!

Post by ayyasamy ram Sat Apr 18, 2020 6:17 am

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Ghill8881


* ரீமேக் தானே செய்யப் போகிறோம். எதற்காக கதையெல்லாம் சொல்கிறீர்கள் என்று கதை சொல்லப் போன தரணியிடம் கேட்டுள்ளார் விஜய். ஆனால் படம் பார்த்துவிட்டு தனக்குத் தோன்றிய மாற்றங்களையெல்லாம் கூறியுள்ளார் தரணி. முக்கியமாக ஒக்கடு படத்தில் இடம்பெற்ற இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளை மாற்றினார் தரணி. இந்த மாற்றங்கள் பிடிக்கவில்லையென்றால் ஒக்கடு கதையை யாரை வைத்து வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார். விஜய்க்கு தரணி சொன்ன மாற்றங்கள் பிடித்ததால் தொடங்கியது கில்லி படப்பிடிப்பு.

* கபடிக் காட்சிகள் நிறைய வருவதால் நிறைய கபடி ஆட்டங்களை நேரில் சென்று பார்த்துள்ளார் விஜய்யும் தரணியும். கபடி ராஜேந்திரன், குணசேகரன் என இரு பயிற்சியாளர்கள் விஜய்க்கும் அவருடைய நண்பர்களுக்கும் கபடி தொடர்பான பயிற்சிகளை விஜயா வாகினி ஸ்டூடியோவில் தினமும் அளித்துள்ளார்கள்.

* மதுரை மீனாட்சி கோயிலில் எடுக்கப்பட்ட காட்சியை மிகவும் ரகசியமாக, மதுரை விஜய் ரசிகர்களுக்கே தெரியாமல் எடுத்துள்ளார்கள். அந்தக் காட்சியை எடுக்கும்போது கூட்டம் சேர்ந்துவிட்டால் காட்சியின் அழகே கெட்டுவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Ghill888_prakash_raj

* ஒக்கடு படத்தில் உள்ள பிரகாஷ் ராஜின் முத்துபாண்டி கதாபாத்திரத்தைத் தமிழில் ஓரளவு மாற்றியிருப்பார் தரணி. சாதாரணமாக தரணி சொல்லச் சொன்ன, ஹாய் செல்லம் என்கிற வசனத்தைத் தனது பாணியில் சொல்லி, அதையே முத்திரை வசனமாக மாற்றிவிட்டார் பிரகாஷ் ராஜ். ஒக்கடுக்கு எப்படிச் சிறப்பு சேர்த்தாரோ அதேபோல கில்லியிலும் அசத்தி, தன்னிகரற்ற வில்லனாக பிரகாஷ் ராஜ் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட மற்றொரு படம் - கில்லி.

* வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது த்ரிஷாவுக்கு. படம் முழுக்க ஓடவேண்டும், சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டும் என அதிக உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது. கில்லியில் விஜய்க்கு அற்புதமான ஜோடியாக அமைந்தார் த்ரிஷா. இதற்குப் பிறகு அடுத்த நான்கு வருடங்களில் மூன்று படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தார்கள்.

* ஒக்கடுக்கும் கில்லிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் - நகைச்சுவைக் காட்சிகள். விஜய்யின் நண்பர்கள், விஜய் தங்கை, அம்மா கதாபாத்திரங்களால் படத்தில் ஏராளமான நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Empty Re: கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்!

Post by ayyasamy ram Sat Apr 18, 2020 6:18 am


-
விஜய்யின் நண்பராக ஓட்டேரி நரியாக நடித்து அசத்தியவர் தாமு.
ஒக்கடு படத்தில் இந்தக் கதாபாத்திரம் கிடையாது. அப்போது ஜேஜே படத்தில்
நடித்து வந்த தாமு நீளமாக முடியை வளர்த்து வந்தார். அதைப் பார்த்த தரணி,
ஹேர் ஸ்டைலிஸ்டை வைத்து தலைமுடியை வாரி இரண்டு பின்னல் போட்டு
நடுவில் ஒரு குச்சியை சொருக வைத்துள்ளார்.

சென்னையில் ஓட்டேரி நரி என்கிற பெயரில் ஒருவர் வாழ்ந்துள்ளார். அவரைப்
போல நான் இருக்கிறேன் என தன்னுடைய புதிய ஹேர்ஸ்டைலைப் பார்த்து
தாமு கூற அதுவே அக்கதாபாத்திரத்தின் பெயராகிவிட்டது. விஜய்யுடன் பல
படங்களில் நடித்தாலும் இந்தப் படத்தில் நடித்த பிறகு என்னை எங்குப்
பார்த்தாலும் நரி என்றே அழைக்கிறார் விஜய் என்கிறார் தாமு.

* தரணி இயக்கிய தில், தூள் படங்களுக்கு வசனம் எழுதியவர் இயக்குநர் பரதன்.
கில்லியிலும் வசனம் எழுதினார். தரணியும் பரதனும் ஹைதரபாத் சென்று ஒக்கடு
படத்துக்கு எங்கெல்லாம் கைத்தட்டல்கள் கிடைக்கின்றன என்று கவனித்து பிறகு
இயக்குநரிடம் பேசியுள்ளார்கள்.
பிறகுதான் கில்லி படத்துக்குக் கதை எழுதியுள்ளார்கள்.

அப்புல இருக்கிறவன் டவுன்ல வரதும், டவுன்ல இருகிறவன் அப்புல வரதும் ஒன்னும்
பெரிசு இல்லை. எதிரியை எப்படி ஆப்பு வைச்சிட்டு ஜெயிக்கிறதுதான் மேட்டரு...,
தம்மாதுண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கைய உன் மேல வை... போன்ற
வசனங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.

கில்லி படத்துக்குப் பிறகு விஜய் நடித்த மதுர படத்துக்கும் பரதன் தான் வசனம்
எழுதினார். அடுத்ததாக விஜய் நடிப்பில் அழகிய தமிழ் மகன், பைரவா என இரு
படங்களை இயக்கியுள்ளார்.

* அது வித்யாசகர் காலம்m. தில் படத்தின் வெற்றிக்குப் பிறகு வித்யாசகர்
பாடல்களுக்கு அதிக கிராக்கி இருந்தன. இந்தப் படத்தில் பாடல்கள் மூலம்
படத்துக்கு மேலும் சுவாரசியத்தைக் கூட்டினார் வித்யாசகர். அப்படிப் போடு பாடல்,
படத்தை எங்கேயோ கொண்டு சென்று நிறுத்தியது. பின்னணி இசையிலும் தன்
பங்களிப்பைச் சிறப்பாகச் செய்தார் வித்யாசகர்.


Last edited by ayyasamy ram on Sat Apr 18, 2020 6:24 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Empty Re: கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்!

Post by ayyasamy ram Sat Apr 18, 2020 6:19 am


-* 2001-ல் வெளியான ப்ரண்ட்ஸ் படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு
இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருந்தார் விஜய். கில்லிக்கு
முன்பு புதிய கீதை, உதயா என மோசமான தோல்விப் படங்களில்
நடித்திருந்தார்.

அத்தனைக் காயங்களையும் கில்லி போக்கியது. இதன்பிறகு காதல் படங்களை
கிட்டத்தட்ட அடியோடு குறைத்துக்கொண்டு ஆக்‌ஷன் படங்களில் மட்டும் விஜய்
நடிப்பதற்கு கில்லியின் மாபெரும் வெற்றி முக்கியக் காரணம்.

* கில்லி படத்தின் இன்னொரு சிறப்பம்சம் - கதையைத் தாண்டி வேறு எந்தப்
புரட்சிகரமான கருத்துகளும் வசனங்களும் படத்தில் இருக்காது. பிரகாஷ்
ராஜிடமிருந்து த்ரிஷாவை விஜய் மீட்பதைத் தவிர வேறு எந்த அரசியல்
வசனங்களோ சமூகத்தைத் திருத்தக் கூடிய காட்சிகளோ இல்லாத ஒரு படமாக
ஜொலித்தது கில்லி.

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Ghill88812

* கில்லி படத் தலைப்பை ரஜினியிடம் தரணி சொல்லியிருக்கிறார் தரணி. படத்தின்
பாதி வெற்றி தலைப்பிலேயே உள்ளது என்று பாராட்டியுள்ளார் ரஜினி. படத்தைப் பார்த்த
இயக்குநர் பாக்யராஜ், இதுபோல ரீமேக்கில் காட்சிகளை மாற்றுவதற்குத் தைரியம்
வேண்டும். தவறாக ஆகியிருந்தால் உன் வாழ்க்கையே வீணாகியிருக்கும் என்று
பாராட்டியுள்ளார்.

* ரஜினி நடித்த படையப்பா படத்தின் வசூல் சாதனைகளைப் பின்னுக்குத் தள்ளியது
கில்லி. தமிழ்ப் படங்களில் முதல்முதலாக ரூ. 50 கோடி வசூலித்ததும் கில்லி தான்.

-எழில்
நன்றி- தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்! Empty Re: கில்லி வெளிவந்து 16 வருடங்கள்: விஜய் ரசிகர்களின் செல்லம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum