ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி

2 posters

Go down

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி Empty கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி

Post by ayyasamy ram Wed Apr 15, 2020 7:22 pm

ஷைலி பட்,
பிபிசி குஜராத்தி

-----------------------------------
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்றை எதிர்த்து மக்கள் போராடி
வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர் என பல
தரப்பினர் இந்த போரில் முன்னணியில் இருக்கிறார்கள். இத்தகைய
சூழலில், சூரத் நகரில் வாழும் மக்களிடையே ஒரு இஸ்லாமியர் மிகவும்
பிரபலமடைந்துள்ளார்.

இந்த கட்டுரை எழுதப்பட்ட நேரத்தில்,சூரத் நகரில், நான்கு பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். அவர்களின் இறுதி
சடங்கை நடத்தினார், அப்துல் மலபாரி என்ற அந்த நபர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர் எந்த மதம் அல்லது
சாதியை சேர்ந்தவராக இருந்தாலும், இவர் இந்த சேவையை
செய்கிறார்.

இறந்தவர்களின் குடும்பத்தினரே, நோய் தொற்று ஏற்படும் என அஞ்சி
அருகில் செல்ல தயங்கும் நிலையில், தனது சேவையை தொடர்ந்து செய்து
வருகிறார் அப்துல்.

30ஆண்டுகால சேவை
"கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக, இவ்வாறு கைவிடப்பட்ட பிணங்களின்
இறுதி சடங்கை செய்து வருகிறேன். சாலையோரங்களில் பிச்சை எடுப்பவர்கள்,
இறக்கும்போது அவர்களுடன் யாரும் இருப்பது இல்லை,

அதேபோல, தற்கொலை செய்து கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு
இறப்பவர்களின் இறுதிச்சடங்கை செய்ய யாருமே முன்வருவதில்லை'' என்று
அவர் கூறினார்.

"இந்த சேவையை கேதார்நாத் வெள்ளம், கட்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும்
சென்னையில் சுனாமி வந்தபோதும் நாங்கள் செய்தோம். இந்த சேவையில்
என்னோடு சேர்ந்து, 35 பேர் தன்னார்வலர்களாக பணியாற்றுகிறார்கள்" என்று
அவர் மேலும் விவரித்தார்.

"கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகத் தொடங்கியதும், சூரத் பேரூராட்சி
அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டார்கள். இந்த வைரஸ் தாக்கத்தால்
உலகளவில் எப்படி ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகின என்று விளக்கினார்கள்.

இவ்வாறான மரணங்கள் சூரத்தில் நடப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதையும், அப்படி
மரணிப்பவர்களின் உடலை குடும்பத்தினரிடம் கொடுக்க முடியாது என்பதை
கூறினார்கள்." என்று அப்துல் குறிப்பிட்டார்.

"எங்களால் இந்த உடல்களை தகனம் செய்யவோ, எரியூட்டவோ முடியுமா என்று
கேட்டார்கள். நாங்கள் உடனடியாக ஒப்புக்கொண்டோம்."

"வெவ்வேறு நேரங்களில் சேவையாற்றும் வகையில், எங்கள் குழுவில் உள்ள 20 பேரின்
பெயர்களை கொடுத்துவிட்டு வந்தோம். எங்களிடம் அனைத்து முக்கிய அதிகாரிகள்
மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் எண்கள் இருப்பதால், அவர்களால் எங்களை
எந்த நேரமும் தொடர்பு கொள்ள முடியும்.

எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தவுடன், சரியான உபகரணங்களுடன்
கிளம்பிவிடுவோம். இணை ஆணையர் ஆஷிஷ் நாயக், இந்த பாதுகாப்பு உபகரணங்களை
எப்படி பயன்படுத்துவது, இறந்தவர்களின் உடல்களை எவ்வாறு மூடவேண்டும், எங்களை
எப்படி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கற்றுத்தந்துள்ளார்." என்கிறார்
அப்துல்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி Empty Re: கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி

Post by ayyasamy ram Wed Apr 15, 2020 7:25 pm

தற்காப்பிற்கு என்ன செய்கிறார்கள்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் இவர்களுக்கு,
கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தங்களின் தற்காப்பு குறித்து
பேசும் அப்துல், "உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள அறிவுரைகளை நாங்கள்
கடைபிடிக்கிறோம். முகக்கவசம், கையுறை, உடலுக்கான பிரத்யேகமாக ஆடை
ஆகியவற்றை அணிந்துகொள்கிறோம்." என்கிறார்.

"இறந்தவர்களின் உடல்களில் ரசாயனம் முழுமையாக தெளிக்கப்பட்டு, பிளாஸ்டிக் கொண்டு
உடல்கள் கட்டப்படுகின்றன. உடல்களை எடுத்து செல்வதற்கென எங்களிடம் ஐந்து வண்டிகள்
உள்ளன. இதில் இரண்டு வண்டிகளை கோவிட்-19 மரணங்களுக்காகவே பிரத்யேகமாக
ஒதுக்கியுள்ளோம். அவற்றையும், தொடர்ந்து கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்கிறோம்."

"ஏக்தா அறக்கட்டளை என்ற எங்களின் இந்த அமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி
வருகிறது. தினமும் சூரத், வைப்பை, பாருச் ஆகிய பகுதிகளில், நாங்கள் 12-13 உடல்களை
தகனம் செய்து வருகிறோம். நதி, ஓடைகளின் கரைகளிலும், ரயில் தண்டவாளங்களில்
வெட்டப்பட்ட நிலையிலும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டவர்களின்
உடல்களையும் நாங்கள் தகனம் செய்கிறோம்.

தினமும் இப்படியான உடல்களை எடுத்து வருவதால், கைக்கவசம், முக்கவசம் ஆகியவற்றை
இந்த உடல்களின் இறுதிச்சடங்கு சமயங்களில் அணிகிறோம்."

"இந்த சேவையில் எங்களுக்கு அரசின் உதவியும் கிடைக்கிறது. துப்புரவு பணியாளர்கள்,
தீயணைப்புத்துறை, சப்-இன்ஸ்பெக்டர்கள் என பலர் எங்களின் அணியில் இருக்கின்றனர்." என்றார்
அவர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி Empty Re: கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி

Post by ayyasamy ram Wed Apr 15, 2020 7:26 pm

பயத்தைவிட வலி அதிகம்

இறந்தவர்களின் குடும்பங்கள் குறித்து பேசுகையில், "ஒருவருக்கு கொரோனா
தொற்று ஏற்பட்டால், அவரின் குடும்பமும் தனிமைப்படுத்தப்படுகிறது. அவர்கள்
பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள சம்ரஸ் என்ற விடுதியில் உருவாக்கப்பட்டுள்ள
தனிமைப்படுத்தும் இடத்தில் இருக்க வைக்கப்படுகிறார்கள்."

"அங்கு 14 நாட்கள் வைக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் இறந்தால், அவரின் இறுதிச்சடங்கில்,
குடும்பத்தினர் பங்கேற்க முடியாது. நாங்கள் இந்த பணியை பல காலமாக செய்து
வருகிறோம்.

ஆனால், கொரோனாவால் ஏற்படும் மரணம் என்பது, பயத்தைவிட வலியை
அதிகமாக கொண்டுள்ளது. இறந்தவருக்கு கடைசி மரியாதை செய்ய, குடும்பத்தினர்
விரும்புவதை பார்க்கும்போது, வருத்தமளிக்கிறது. அந்த இடத்தில் இருக்கவேண்டும்
என குடும்பத்தினர் விரும்புவது இயற்கையான ஒன்று என்றாலும்கூட, இந்த சூழலில்,
அது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது" என்கிறார் அப்துல்.

"குடும்பத்தினர் நிறைய அழுகிறார்கள். இறந்தவர்களை பார்ப்பது குறித்து நிறைய
பேசுகிறார்கள். அவர்களின் பாதுகாப்பிற்காகதான் இவ்வாறு செய்கிறோம் என்பதை
நாங்கள் விளக்குகிறோம். அவர்களின் மத நம்பிக்கைப்படி, முறையே இறுதிச்
சடங்குகளை செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்.

ஆனாலும், அவர்கள் சமாதானம் கொள்வதில்லை. சூரத்தில் இறந்த நான்கு பேரில், மூவர்
இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள்."

"தூரத்து சொந்தங்கள் சில நேரத்தில், சற்று தள்ளி நின்று இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள
அனுமதிக்கப்படுகிறார்கள். அப்படியான சூழல்களில், இறுதி சடங்கு நடக்கும் இடத்திற்கு
அவர்களை நாங்கள் தனியே ஒரு வாகனத்தில் அழைத்து செல்கிறோம். சற்று தள்ளி நின்று
பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிடுகிறோம்."
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி Empty Re: கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி

Post by ayyasamy ram Wed Apr 15, 2020 7:29 pm

'குடும்பத்தைவிட்டு தனியாக இருக்கிறோம்'

இந்த சூழல் குறித்து அறியவந்த போது, உங்களின் குடும்பம் என்ன கூறினார்கள்
என்று நாம் அப்துலிடம் கேட்டபோது, "பார்த்து, பத்திரமாக இருங்கள் என்று மட்டும்
கூறி அனுப்பினார்கள்.

கொரோனா பகுதியில் இருக்கும்போது மட்டுமே நாங்கள் அந்த பாதுகாப்பு உடைகளை
அணிகிறோம். இறுதிச்சடங்கு முடிந்தவுடன், கழற்றிவிடுகிறோம்."
-
கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி _111788592_3a9af2ad-1a9e-43c0-9481-b384df073c01
படத்தின் காப்புரிமைABDUL மல்பரி
-
"வேலை முடிந்த பிறகு, நாங்கள் வெதுவெதுப்பான நீரில் கை, கால்களை கழுவி விட்டு, சு
த்தமான உடைகளை அணிந்துகொள்கிறோம். நாங்கள் இவ்வளவு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் எடுக்கும் சூழலிலும், இது எங்களின் குடும்பத்தினருக்கு ஆபத்தாக அமைய
வாய்ப்புள்ளது. அதனால், இந்த பணிகளை முடித்து வைக்கும் வரை, குடும்பத்தினரின்
பாதுகாப்பிற்காக, அவர்களிடமிருந்து விலகியே வாழ்கிறோம். இந்த சூழல் சுமூகமாகும்
வரையில், எங்களின் குடும்பத்தை பார்க்கவே முடியாது.

எங்களின் அலுவலகத்திலேயே ஓய்வு எடுத்துக்கொள்ளும் வகையில், ஏற்பாடுகள்
செய்யப்பட்டு விட்டன."

மக்களுடன் பழகுவது குறித்து விளக்கும் அவர், " நான் கொரோனாவால் இறப்பவர்களின்
உடல்களை தகனம் செய்வது குறித்து இப்போது மக்களுக்கு தெரியும் என்பதால், சிலர்
என் வாகனத்தில் உட்காருவது இல்லை. சிலர் தூரத்தில் நின்றே சலாம் கூறுகிறார்கள்.
ஆனால், இத்தகைய செயல்கள் என்னை பாதிப்பதில்லை."

அரசிடமிருந்து கிடைக்கும் பொருளாதார உதவிகள் குறித்து கூறிய அப்துல், "அரசு எங்களின்
அமைப்பிலுள்ளவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளது. இந்த நகரத்தில் வாழும் பலரும் கூட
எங்களுக்கு நிதியுதவி செய்வதால். போதுமான அளவு நிதி உள்ளது, எந்த பிரச்னையும் இல்லை."

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சூரத் ஊராட்சியின் இணை ஆணையர் ஆஷிஷ் நாயக்
, "இத்தகைய இக்கட்டான சூழலில், அப்துல் செய்யும் இந்த சேவை என்பது, பெரிய உதவி.
நாங்கள் அவர்களிடம் உதவி என்று கேட்டவுடனேயே அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

அவர்களை நாங்கள் தொடர்பு கொண்ட 10-15 நிமிடங்களில் அவர்கள் எங்களை சந்திக்கிறார்கள்.
இறந்தவரின் உடல் தகனம் அல்லது எரியூட்டப்பட்ட பிறகு, அப்துல் மற்றும் அவரின் குழுவினர்,
இறுதிச்சடங்கு நடந்த முழு இடத்தையும் கிருமி நாசினி கொண்டு, சுத்தம் செய்கிறார்கள்.
அவர்கள் செய்யும் பணி மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று." என்கிறார்.
-
------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி Empty Re: கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Apr 16, 2020 11:53 am

Code:

அரசிடமிருந்து கிடைக்கும் பொருளாதார உதவிகள் குறித்து கூறிய அப்துல், "அரசு எங்களின்
அமைப்பிலுள்ளவர்களுக்கு நிதி உதவி செய்துள்ளது. இந்த நகரத்தில் வாழும் பலரும் கூட
எங்களுக்கு நிதியுதவி செய்வதால். போதுமான அளவு நிதி உள்ளது, எந்த பிரச்னையும் இல்லை."

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய சூரத் ஊராட்சியின் இணை ஆணையர் ஆஷிஷ் நாயக்
, "இத்தகைய இக்கட்டான சூழலில், அப்துல் செய்யும் இந்த சேவை என்பது, பெரிய உதவி.
நாங்கள் அவர்களிடம் உதவி என்று கேட்டவுடனேயே அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.

அவர்களை நாங்கள் தொடர்பு கொண்ட 10-15 நிமிடங்களில் அவர்கள் எங்களை சந்திக்கிறார்கள்.
இறந்தவரின் உடல் தகனம் அல்லது எரியூட்டப்பட்ட பிறகு, அப்துல் மற்றும் அவரின் குழுவினர்,
இறுதிச்சடங்கு நடந்த முழு இடத்தையும் கிருமி நாசினி கொண்டு, சுத்தம் செய்கிறார்கள்.
அவர்கள் செய்யும் பணி மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று." என்கிறார்.



அர்ப்பணிப்புடன் கூடிய மகத்தான பணி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி Empty Re: கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் இந்துகளின் இறுதி சடங்கை நடத்தும் இஸ்லாமியர் - குஜராத் நெகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கொரோனா தொற்றால் இந்தி பட தயாரிப்பாளர் மரணம்
» கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
» புதிய கொரோனா தொற்றால் இந்தியாவுக்கு ஆபத்து: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
» திரும்பிப் பார்க்கிறோம் 2018: நெகிழ்ச்சி - ஐபிஎஸ் மகளுக்கு சல்யூட் அடித்த காவல் துணை ஆணையர், இந்து நண்பனுக்காக மொட்டையடித்து சடங்கு செய்த இஸ்லாமியர்
» குஜராத் கலவரம் இறுதி அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிப்பு: முதல்வர் நரேந்திர மோடி விடுவிப்பு?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum