ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_c10பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_m10பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_c10 
heezulia
பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_c10பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_m10பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_c10 
mohamed nizamudeen
பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_c10பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_m10பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!

2 posters

Go down

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Empty Re: பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!

Post by ayyasamy ram Sun Apr 05, 2020 4:01 pm

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Gallerye_084145400_2515539
-

* கொரோனா கொலை வெறி நடத்தி வரும் இக்காலம், மக்களுக்கு
சோகம், மனஅழுத்தம், குழப்பம், வீண் கோபம், இயலாமை
அதிகரிப்பு என, நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி விட்டது.

இதிலிருந்து விடுபட, நமக்கு நெருங்கிய நம்பிக்கையான
மனிதர்களிடம் மனம் விட்டு பேசலாம் குடும்பத்தினருடன்
நேரத்தை செலவிடலாம். நீண்ட நேரம் முடங்கி கிடக்காமல்,
சிறிது நேரம் சமூக ஊடகங்களில் உங்கள் அன்புக்குரியவர்களுடன்
உரையாடலாம்

* இக்காலத்தில், நீங்கள் கண்டிப்பாக உங்கள் வீடுகளிலேயே,
தங்கி இருக்க வேண்டும். கொரோனாவை எதிர்த்து போராட
உடம்பு சிறப்பாக செயல்பட வேண்டும். இதற்கு போதுமான
நோய் எதிர்ப்பு சக்தி தேவை.

அதிகமான பழங்கள், காய்கறிகள் அடங்கிய உணவுகளை
உட்கொள்ளுங்கள். உடற்பயிற்சியை தடையின்றி தொடர
வேண்டும்

* மன அழுத்தத்திற்கு புகைப்பதும், மது அருந்துவதும் தான்
தீர்வு என்று கருதினால், ஆபத்தை சந்திப்பீர்கள். அவை இன்னும்,
உங்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

இதற்கு அலைபேசி மூலம் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை
பெறலாம். உடல், மன ரீதியான பயிற்சி அவசியம்

* சர்வதேச அளவில் நெருக்கடியான நிலை உருவாகும் போது,
வதந்திகளும் கட்டுக்கடங்காமல் பரவும். அதிலும், சமூக
வலைதளங்களில் சொல்லவே வேண்டாம். வதந்திகள்
தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே, கொரோனா பற்றியும் அதன் பாதிப்பு குறித்தும் சரியான
தகவல்களை அறிவது முக்கியம். வதந்திகளை நம்பாமல்,
பத்திரிகைகளில் வரும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும்,
கருத்தில் கொள்ளுங்கள்.

உலக சுகாதார நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனங்களுடன்
இணைந்திருக்கலாம் என, உலக சுகாதார நிறுவன விஞ்ஞானிகள்
தெரிவித்து உள்ளனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Empty Re: பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!

Post by ayyasamy ram Sun Apr 05, 2020 4:02 pm



இது தான் கொரோனா குடும்பம்

ரஸ்தாலி, பூவன், மொரீஸ், கற்பூர வள்ளி, செவ்வாழை என,
வாழையில் பல வகைகள் உள்ளன. அதேபோன்று, கொரோனா
என்பது ஒரு வைரஸ் குடும்பம். இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ்
வகைகள் பல. தற்போது புதிதாக தோன்றியிருப்பது தான்,
கோவிட் - 19.

இதற்கு முன் இக்குடும்பத்தில் பிறந்த வைரஸ்களில்,
'சார்ஸ் - கோவ் (SARS-COV), மெர்ஸ் - கோவ் (MERS-COV)'
வைரஸ்களும் மனிதனுக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தியவை.

கோவிட்-19: இவ்வைரஸ், 2019 டிசம்பர், இறுதியில், சீனாவின்
வூகான் மாகாணத்தில் தோன்றி, பூமியை பந்தாடி வருகிறது.
கொரோனா குடும்பத்தில் தோன்றிய கொடூர வைரஸ் இது.

உலக அளவில் அதிகம் உயிரை பலி கொண்ட பட்டியலில், 2வது
இடத்தில் உள்ளது. விரைவில், முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு
உள்ளது. கொரோனா குடும்பத்தில், புதிதாக தோன்றி இருப்பதால்
நோவல், அதாவது, நுாதனமான, கோரோனா வைரஸ் என,
அழைக்கின்றனர்.

'சார்ஸ்' வைரஸ் போன்று, கோவிட்-19, சுவாச கோளாறை
ஏற்படுத்துவதால், 'சார்ஸ் - 2' என்றும் விஞ்ஞானிகள்
பெயரிட்டுள்ளனர். ஆனால், சார்ஸை விட மின்னல் வேகத்தில்
பரவும் தன்மை உடையதாகவும், கொடியதாகவும் விளங்குகிறது.

இந்த கொலைவெறி வைரஸ், சீனாவில் தோன்றியதால்,
அந்நாட்டுக்கு எரிச்சலுாட்டும் வகையில், கோவிட்-19ஐ,
'சீன வைரஸ்' என, அமெரிக்க அதிபர் டிரம்ப் கிண்டலாக
குறிப்பிடுவதை வழக்கத்தில் வைத்துள்ளார்.

சார்ஸ் - கோவ்:
இதன் பிறப்பிடமும் சீனா தான். அந்நாட்டின்
தெற்கு பகுதியில், 2002ல் தோன்றியது. 2003ல், 26 நாடுகளில்
பாதிப்பை ஏற்படுத்தியது. 8,௦௦௦ பேர் வரை இறந்தனர்.
இது, தீவிர சுவாசக்கோளாறு பிரச்னையை ஏற்படுத்தி, மரண
பயத்தை காட்டும்.

2003க்கு பிறகு பெரிய அளவில் தென்படவில்லை.
கோவிட் - 19 பற்றிய பெரும்பாலான ஆராய்ச்சிகள்,
சார்ஸ் வைரஸை மையப்படுத்தி தான் நடக்கின்றன.
இது, பூனையிடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.

மெர்ஸ் - கோவ்:

மத்திய, கிழக்கு நாடுகளில் பாதிப்பை விளைவித்த வைரஸ்
இது. கோவிட் - 19, சார்ஸ் போன்று கொடுமையானதாக
இல்லாவிட்டாலும், இருமல், சளி உள்ளிட்ட பாதிப்பை
ஏற்படுத்தக்கூடியது. 2012ல், சவுதி அரேபியாவில் தோன்றியது.

அங்கிருந்து, கத்தார், எகிப்து, துருக்கி, பிரிட்டன், வங்கதேசம்,
தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பை
ஏற்படுத்தியது.

துவக்க காலத்தில், சவுதி வைரஸ் என்றும் இதை அழைத்தனர்.
இது, ஒட்டகத்திடம் இருந்து மனிதனுக்கு தொற்றியது.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Empty Re: பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!

Post by ayyasamy ram Sun Apr 05, 2020 4:04 pm

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Gallerye_084156223_2515539
குழந்தைகளை கவனிங்க...

* இக்கால கட்டத்தில் குழந்தைகளும் மன ரீதியான
பாதிப்புகளை சந்திக்கலாம். அவர்கள் எப்போதுமே,
பெரியவர்களின் அன்பை எதிர்பார்ப்பவர்கள். அவர்களிடம்
முன்பை விட கூடுதல் அன்பு, கவனம் செலுத்த வேண்டும்

* குழந்தைகளை தனிமைப்படுத்தக் கூடாது. அவர்கள்
பேசுவதை கனிவோடு கேட்க வேண்டும். கோபப்படாமல்
கையாள வேண்டும். முடிந்தால் அவர்களுடன் விளையாட
வேண்டும். இது, உங்கள் கவலையையும் போக்கும்

* தற்போது நடந்து கொண்டிருப்பவற்றை உண்மை
தன்மையோடு எடுத்துரைக்க வேண்டும். மேலும் கொரோனா
தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
என்பதை, அவர்களின் வயதிற்கு ஏற்ப, புரியும் வகையில்
விளக்க வேண்டும்.

இன்னும் ஜாக்கிரதை தேவை

* கொரோனா வைரஸ் வயது வேறுபாடு இன்றி,
அனைவரையும் தாக்கும் தன்மை உடையது. எனவே,
குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருமே
மெத்தனத்தை மூட்டை கட்ட வேண்டும்.

* இறப்பு விகிதத்தை கணக்கிடும் போது, 60 வயதை கடந்த
முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,
நீங்கள் முதியவர் என்றால், உங்களை தனிமைப்படுத்துவது
முக்கியம்.

* சில தொற்றா நோய்களால் அவதிப்படுவோரும்,
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக
ரத்தக்கொதிப்பு, இருதய நோய், பக்கவாதம், புற்றுநோய்,
சர்க்கரை நோய் மற்றும் நாள்பட்ட சுவாச கோளாறால்
பாதிக்கப்பட்டவர்கள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

தொற்றா நோயாளிகளுக்கு, 'டிப்ஸ்'

* எக்காரணத்திற்காகவும், நீங்கள் எடுக்கும் மருந்துகளை
நிறுத்தக் கூடாது. மருத்துவரின் ஆலோசனையை கடை
பிடிக்க வேண்டும்.

* ஒரு மாதம் அல்லது அதற்கும் கூடுதலான காலத்திற்கு
தேவைப்படும், மருந்து, மாத்திரைகளை கைவசம்
வைத்திருக்க வேண்டும்.

* சளி, இருமல், காய்ச்சல் இருப்பவர்களிடம் இருந்து
கண்டிப்பாக, ஒரு மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க
வேண்டும். மனம், உடல் நலனை பேண வேண்டும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Empty Re: பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!

Post by ayyasamy ram Sun Apr 05, 2020 4:05 pm


கொரோனாவின் காலம்

--
பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Gallerye_084202344_2515539
கொரோனா எந்த பொருட்களில், எவ்வளவு நேரம் இருக்கும்
என்பது புதிராக உள்ளது. இதுபற்றி, மருத்துவ இதழ் ஒன்றில்
வெளியான, ஆராய்ச்சி கட்டுரையை, ஜான் ஹாக்கின்ஸ்
பல்கலை கொரோனா ஆராய்ச்சி குழு வெளியிட்டுள்ளது.

காற்றிலும், 3 மணி நேரம் இதனால் மிதக்க முடியும் என்பது
அதிர்ச்சி தகவல்.

பிளாஸ்டிக் - 72 மணி நேரம்

எஃகு பொருட்கள் - 48 மணி நேரம்

அட்டைகள் - 24 மணி நேரம்

தாமிரம் - 4 மணி நேரம்

காற்று - 3 மணி நேரம்

கை கழுவினால் போதுமா

நாமெல்லாம் ஊரடங்கில் உள்ளோம். அத்தியாவசிய தேவைக்கு
வெளியில் சென்று, வீடு திரும்பும் போது, கட்டாயம் கைகளை
சோப்பை பயன்படுத்தி, 20 நொடிகள் கழுவ வேண்டும்.

ஆனால், இது மட்டும் போதாது. முன்னதாக, வீட்டிற்குள் வரும்
போது, கதவு கைப்பிடியை நிச்சயம் பிடிப்போம். ஒருவேளை
நம் கையில் கொரோனா வைரஸ் இருந்தால், அதில் தங்கிவிடும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் இன்னொருவர் அந்த கைப்பிடியை
பிடித்தால், அவருக்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே, நாம்
அடிக்கடி தொடும் கதவு கைப்பிடி, மேஜை, நாற்காலி, சுவிட்ச்,
அலைபேசி, தொலைபேசி, கணினி கீ போர்டு, கழிப்பறை,
பக்கெட், குழாய் மற்றும் வீடுகளை அவ்வப்போது, கிருமி
நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும், என்கின்றனர் உலக
சுகாதார நிறுவன விஞ்ஞானிகள்.

புகைபிடிப்பவர்களே கவனம்...

புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்... அப்படியென்றால்,
கோரோனாவிடம் எச்சரிக்கை வேண்டும். நீங்கள் விரல்களால்
சிகரெட்டை பிடித்து, உதட்டில் வைத்து புகைக்கும் போது, கைகளில்
இருந்து எளிதில் வாய்க்கு கொரோனா வைரஸ் சென்று விடும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்களாக இருந்தால், ஏற்கனவே நுரையீரல்
பாதிப்பு இருக்கும். கொரோனாவும் நுரையீரலையே தாக்கும்
என்பதால், பாதிப்பு தீவிரமாக இருக்கும். எனவே, புகைப்பிடிக்கும்
பழக்கத்தை இத்தோடு நிறுத்துவது நல்லது.

நன்றி- தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84876
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Empty Re: பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Apr 05, 2020 4:31 pm

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! 3838410834 பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! 103459460 பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்! Empty Re: பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum