புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
25 Posts - 38%
heezulia
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
4 Posts - 6%
Raji@123
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
2 Posts - 3%
prajai
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
2 Posts - 3%
M. Priya
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
8 Posts - 2%
prajai
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_m10பரீட்சை 'டிப்ஸ்'! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரீட்சை 'டிப்ஸ்'!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jan 09, 2010 2:20 pm

தொகுப்பு: லட்சுமிகிருபா

பொதுத் தேர்வு வெகு அருகில். இனி, வீடே பரபரப்பாகி விடும். அம்மா லீவு போட்டு டியூஷன் எடுப்பதும், அப்பா விடிகாலையில் எழுந்து காபி கலக்கித் தருவதுமாக..

இத்தனை மெனக்கெடுதலும் எதற்காக? பிள்ளை மார்க்குகளை குவிக்க வேண்டும் என்பதற்காகத்தானே! அதற்குத்தான் இங்கே வழிகாட்டியிருக்கிறார், சென்னை, செயின்ட் ஜான்'ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் டாக்டர் கிஷோர்குமார்..


பரீட்சை 'டிப்ஸ்'! Exam_1902_B

"முதலில் தேர்வு எழுதும் பிள்ளைகளுக்கான டிப்ஸ்களைச் சொல்கிறேன்..

எப்படி படிப்பது?

* மனசு உற்சாகமாக இருக்கிறபோது, படிக்கிற விஷயங்களை புத்தி அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். எனவே, உற்சாகமான மனநிலையில் இருக்கும்போது படிக்க உட்காருங்கள்.

* 'எவ்வளவு சின்ஸியரா படிச்சாலும், பரீட்சை ஹால்ல வெச்சு சுத்தமா மறந்து போயிடுதே..' - இது பல மாணவர்களின் கவலை. எதையுமே புரிந்து கொண்டு படித்தால் மறக்கவே மறக்காது. கணிதமாக இருந்தால் ஃபார்முலாவை எழுதிப் பாருங்கள். அறிவியல் பாடமாக இருந்தால் வரைந்து பழகுங்கள். வாய் விட்டுப் பலமுறை சொல்லி, மனதில் பதியவைத்து, பிறகு மனப்பாடம் செய்யுங்கள்.

* ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தி ஒப்பிட்டுப் படிப்பதை வழக்கமாக்குங்கள். மறதியை விரட்டும் அற்புத டெக்னிக் இது.

* தினமும் மாலை 2 மணி நேரமாவது படியுங்கள். ஒரு பாடத்தை அதிகபட்சம் 40 நிமிடம் படிக்கலாம். பிறகு, 10 நிமிட இடைவெளி விட்டு, வேறொரு பாடத்தை எடுத்து வைத்துப் படிக்க வேண்டும். அப்போதுதான் படித்தது மனதில் தங்கும். ஒருவரது தொடர்ந்த கிரகிக்கும் திறன் என்பது 40 நிமிடங்கள் மட்டுமே!

பரீட்சை 'டிப்ஸ்'! Exams1902_B2

* எந்தெந்தக் கேள்விகள்.. எந்தெந்த மதிப்பெண்களில் கேட்கப்படும் என்பதை அனுமானிப்பதற்கு, மாதிரி வினாத்தாள்கள் பெரிதும் உதவும். ஐந்து ஆண்டுகள் வரையிலான வினாத்தாள்களை வைத்துப் பயிற்சி எடுங்கள்.

* ஒரு கேள்வித்தாளை வைத்துக் கொண்டு மாடல் எக்ஸாம் எழுதிப் பார்ப்பது, தேர்வின்போது 'டைம் மேனேஜ்மென்ட்' செய்வதற்குப் பெரிதும் உதவும்.

* சப்-ஹெட்டிங்குகளை சிறு குறிப்பு போல் எடுத்துக் கொண்டு, எழுதியும் படித்தும் பார்க்க வேண்டும்.

* இரவில்.. அதிகாலையில்.. என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் படித்துப் பழகியிருப்பீர்கள். பிறர் சொல்கிறார்கள் என்பதற்காக அந்த நேரத்தை மாற்ற வேண்டாம். புதிதாக அதிக நேரம் படிக்கத் துவங்குகிறவர்கள் எனில், அதிகாலை நேரம்தான் சிறப்பானது.

* 'ஸ்டடி ஹாலிடேஸை' வீணாக்காமல் படித்தால் விடிய விடியப் படிக்கும் அவசியம் இல்லை. அயர்ச்சியும் ஏற்படாது.

* தியானம் அல்லது இறை வழிபாட்டில் சிறிது நேரம் ஈடுபடுங்கள். இரண்டுமே உங்களுக்குள் புத்துணர்வு பிளஸ் தன்னம்பிக்கையை அள்ளித் தரும்.

* பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன், ப்ரீ-போர்டு எக்ஸாம் வைப்பார்கள். இதைப் பொதுத் தேர்வாகக் கருதி தயாரானாலே, தேர்வு ஜுரத்தில் இருந்து விடுபட்டு விடலாம்.

* தேர்வுக்கு முந்தின நாள், விடிய விடியப் படிப்பதோ.. அதிக நேரம் கண் விழிப்பதோ கூடவே கூடாது.

பரீட்சை ஹாலில்..

* தேர்வு மையத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே சென்று விடுங்கள். நம்மூர் டிராஃபிக் பற்றிப் புதிதாகச் சொல்ல வேண்டுமா என்ன?

* பழகிய பேனாவாலேயே எழுதுங்கள். கூடுதலாக பேனா, பென்சில் வைத்திருப்பது நல்லது. அந்தப் பேனாவையும் நன்றாகப் பழக்கியே எடுத்துச் செல்லுங்கள்.

* வினாத்தாளைக் கையில் வாங்கியதுமே ஒன்றுக்கு இருமுறை பதற்றமே இல்லாமல் முழு கவனத்துடன் அதை வாசியுங்கள்.

* தெரிந்த கேள்விகளுக்கு முதலில் விடை எழுதுங்கள். எந்தப் பிரிவு என்பதையும் கேள்வி எண்ணையும் தெளிவாகக் குறிப்பிடுங்கள்.

* கேள்வியை நன்றாகப் புரிந்து, உள்வாங்கிக் கொண்டு பதில் எழுதுங்கள்.
* நன்கு இடம் விட்டு தெளிவாக எழுதுங்கள்.

* தேவையான இடங்களில் அண்டர் லைன் செய்ய, கறுப்பு ஸ்கெட்ச் பேனாவைப் பயன்படுத்துங்கள்.

* வினாத்தாளில் சொல்லப்பட்டுள்ள வரிகளுக்கு மிகாமல் பதில் தர வேண்டியது மிகவும் அவசியம்.

* முதல் தேர்வு எழுதி முடித்ததும் கிடைக்கிற உற்சாகம் கடுகளவும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கடைசித் தேர்வு வரை அதே உற்சாகம்.. அதே உத்வேகம் என்று இருங்கள்.

* தேர்வு என்பது ஒரு சவால். அதை எந்த பயமும் இன்றி குதூகலத்துடன் சந்திக்கத் தயாராகுங்கள். வெற்றி உங்கள் வசம்தான்!

இனி.. பெற்றோருக்கான டிப்ஸ்..

* தேர்வுக்குத் தயாராகும் பிள்ளைகளை திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். வீடு மாற்றுதல், சுண்ணாம்பு அடித்தல்.. உள்ளிட்ட வேலைகளை தள்ளிப் போடுங்கள்.

* கலை, ஓவியம், விளையாட்டு.. போன்றவற்றில் உங்கள் பிள்ளையின் கவனம் சிதறலாம். நீங்கள்தான் பக்குவமாகப் புரிய வைக்க வேண்டும்.

* வழக்கத்தை விட அதிக 'ஸ்ட்ரெய்ன்' எடுத்துப் படிப்பதால், சீக்கிரமே சோர்வடைந்து விடுவார்கள். எனவே, சத்தான உணவையே கொடுங்கள். முக்கியமாக, நேரம் தவறாமல் சாப்பிட வைக்கிற பொறுப்பு உங்களிடம்தான் உள்ளது.

* புரதச் சத்துள்ள பருப்பு வகைகள், காய்கறிகள், கீரை வகைகள் (வல்லாரை கீரை ஞாபக சக்தியைத் தர வல்லது) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

* அவர்களுக்கு திடீரென ஏதேனும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் 'இந்த நேரம் பார்த்து இப்படி ஆகிடுச்சே..' என்று புலம்ப வேண்டாம். 'முதல்ல ரெஸ்ட் எடு. உடம்பு சரியான பிறகு படிச்சுக்கலாம்' என்று சொல்லுங்கள்.

* படிக்கிற பிள்ளைகளின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு 'அதை முடிச்சிட்டியா? இதுதானே படிக்கிற?' என்றெல்லாம் கேட்பதை விடவும், ஏதேனும் கை வேலை செய்தபடியோ, புத்தகம் படித்தவாறோ சும்மா அவர்களுக்கு 'கம்பெனி' கொடுப்பது அதிக பலன் தரும்.

* நீங்களும் வீட்டில் உள்ள அனைவரும் தருகிற ஊக்கமும் நம்பிக்கை வார்த்தைகளும்தான் பிள்ளைகளுக்கு கூடுதல் சக்தியைத் தரும். எனவே, கொஞ்சம்கூட சோர்ந்து போகாமல் தொடர்ந்து அவர்களை உற்சாகப்படுத்துங்கள்.


ஆல் தி பெஸ்ட்!


vikatan பரீட்சை 'டிப்ஸ்'! 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக