ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வால்மீகி ராமாயணம்

Go down

வால்மீகி ராமாயணம் Empty வால்மீகி ராமாயணம்

Post by ayyasamy ram Wed Apr 01, 2020 7:54 pm

வால்மீகி ராமாயணம் 9709484021584950732724944500lava%20kusa
-


நடந்ததையும், நடக்க இருப்பதையும், பிரம்மனின் அருளால்
முழுமையாக அறியப் பெற்ற வால்மீகி, நடந்த
நிகழ்ச்சிகளையும் கூறி, நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை
‘உத்தர காண்ட’த்தில் கூறி, ‘ராமாயண’ காவியத்தை
இயற்ற முனைந்தார்.

சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்ட 24 ஆயிரம்
ஸ்லோகங்களை, 500 சர்க்கங்களில், ஆறு காண்டங்களாகவும்,
அதற்கு மேல் ‘உத்தர காண்ட’மாகவும் அவர் இயற்றினார்.

இப்படிக் காவியம் இயற்றிய பிறகு, ‘எந்த திறமைசாலி இதை
எல்லோருக்கும் எடுத்து சொல்லப் போகிறான்?’ என்ற கேள்வி
அவர் மனதில் எழுந்தது.

அப்போது ரிஷிகுமாரர்களின் கோலத்தில் அந்த ஆசிரமத்தில்
இருந்த லவன், குசன் ஆகிய இரு சிறுவர்கள் அவருடைய
பாதங்களில் விழுந்து வணங்கி நின்றார்கள்.

தர்மத்தை அறிந்தவர்களும், அரசகுமாரர்களும், சகோதரர்களுமான
அந்த இரு சிறுவர்கள், வேதங்களை நன்கு கற்றவர்களாகவும்
இருந்தார்கள். மகிமை பொருந்திய வால்மீகி முனிவர், ராமரின்
சரித்திரமாகவும், சீதையின் மகத்தான வரலாறாகவும், ராவண
வதம் பற்றிய விவரங்களைக் கூறுவதாகவும் சொல்லி தான்
இயற்றிய ‘ராமாயண’ காவியத்தை அந்த இரு சிறுவர்களுக்கும்
கற்பித்தார்.

நல்ல அங்க லட்சணங்களும், இனிய சுபாவமும், கம்பீரமும் கூடிய
அந்த இரு சிறுவர்கள், தங்களுடைய இனிமையான குரலில் அந்த
காவியத்தை இசைத்தார்கள்.

பின்னர் ரிஷிகளும், நல்லோரும் கூடியிருந்த இடங்களில்,
வால்மீகியால் உபதேசிக்கப்பட்ட ‘ராமாயண’ காவியத்தை
லவனும், குசனும் பாடிக்கொண்டு செல்லும்போதெல்லாம்,
பல மகரிஷிகள் இந்த இரு சிறுவர்களின் பாட்டின் மூலமாக,
கவிதையில் அமைந்த ராமரின் சரிதையைக் கேட்டு மெய்
சிலிர்த்தார்கள்.

தங்களிடமிருந்த மரவுரிகள், கமண்டலங்கள், காஷாய வஸ்திரங்கள்
போன்றவற்றை அந்த சிறுவர்களுக்கு பரிசுகளாக வழங்கி,
அவர்களை அந்த ரிஷிகள் மனமார வாழ்த்தினார்கள்.
--------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வால்மீகி ராமாயணம் Empty Re: வால்மீகி ராமாயணம்

Post by ayyasamy ram Wed Apr 01, 2020 7:55 pm

வால்மீகி ராமாயணம் 13725139711584950743689430079valmiki
-


செய்தி பரவியது. நகர தெருக்களில் மக்கள் இது பற்றி பேச
ஆரம்பித்தார்கள். இப்படி பலரும் பாராட்டிய சிறுவர்களின்
பாடலை பற்றிய தகவல் ராமரை எட்ட, அவர்களை
அரண்மனைக்கு அழைத்து வருமாறு அவர் உத்தரவிட்டார்.

சகோதரர்களால் சூழப்பட்டு, தங்கத்தினாலான அரியாசனத்தில்
வீற்றிருந்த சக்கரவர்த்தி ராமர் முன்பும் மிகவும் எளிய
கோலத்தில் ரிஷிகுமாரர்களாக காட்சியளித்த லவனும், குசனும்
வந்து நின்றார்கள்.

‘தெய்வீக ஒளி வீசுகிற இந்த இரு சிறுவர்களும் தாங்கள்
இசைத்து வரும் காவியத்தை இங்கே பாடட்டும். அனைவரும்
கேட்போம்’ என்று ராமர் கூற, பெரும் உற்சாகத்தோடு
அச்சிறுவர்கள் வால்மீகி இயற்றிய காவியத்தைப் பாடத்
தொடங்கினார்கள்.

‘முனிகுமாரர்களாக இருந்தும், அரச லட்சணங்கள் அனைத்தும்
பொருந்தி யவர்களாகத் திகழும் இந்த இரு சிறுவர்களும்
இசைக்கப் போகும் காவியத்தைக் கேட்பது, எனக்கே கூட
நன்மையைத் தரும்’ என்று கூறிய ராமர், அவர்கள் பாடப் பாட
கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய சிம்மாசனத்திலிருந்தும்,
அதை எட்டும் படிகளிலிருந்தும் இறங்கி வந்து, சபையோருடன்
அமர்ந்து அந்த காவியத்தைக் கேட்டார்.

‘ராமாயண’ காவியத் தொடக்கத்தை பொறுத்தவரையில்
வால்மீகியிடமிருந்து கம்பர், துளசிதாஸர் இருவரும் மாறு
படுகிறார்கள். ‘கம்பராமாயண’த்தில் வால்மீகியின்
காவியத்தை ஒட்டியே தனது காப்பியத்தை இயற்றி இருப்பதாக
கம்பர் கூறியிருக்கிறார்.

ஆனால், வால்மீகி ராமாயணம் இயற்றுவதற்கு தூண்டுகோலாக
அமைந்த நிகழ்ச்சிகள், கம்ப ‘ராமாயண’த்தில்
கூறப்படவில்லை. லவ-குச சகோதரர்கள் ராம சபையிலேயே
ராமர் சரிதையை பாடியதாகவும் கம்பர் சொல்லவில்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வால்மீகி ராமாயணம் Empty Re: வால்மீகி ராமாயணம்

Post by ayyasamy ram Wed Apr 01, 2020 7:56 pm

வால்மீகி ராமாயணம் 17298806291584950760245331636Rmamar_anu
-


‘கோசல நாட்டை உயர்வு செய்யும் சரயு நதியின் சிறப்பு,
கோசல நாட்டின் வளம், அயோத்தி நகரத்தின் மேன்மை –
ஆகியவற்றை வால்மீகி ராமாயணத்தில் இல்லாத அளவுக்கு
வர்ணித்து, தனது காப்பியத்தை தொடங்குகிறார் கம்பர்.

துளசிதாஸரின் ‘ராமசரித மானஸ’ த்தின் தொடக்கமோ,
வால்மீகி ராமாயணத்திலிருந்து பெரிதும் மாறுபடுகிறது.
அதன்படி ‘யாக்ஞ்வல்க்யர் என்கிற மகரிஷி, பரத்வாஜ
ரிஷிக்கு, பரமசிவன், பார்வதி உரையாடலை கூறுகிறார்.

பரமசிவன் பெரும் ராமபக்தர். பரம்பொருளே ராமராக
அவதாரம் எடுத்திருக்கிறது என்று சிவன், பார்வதியிடம்
சொல்கிறார். பார்வதி சந்தேகம் கொள்கிறாள்.

ராமரின் சக்தியை அறிவதற்காக, சீதை உருவில் ராமர்
எதிரில் அவள் தோற்றமளிக்கிறாள். ராமரோ சற்றும்
சலனமில்லாமல் வந்தவள் உமையவள் என்று அறிந்து,
வணங்கி நிற்கிறார்.

ராமரின் பெருமைகளை உணர்ந்து கொண்ட பார்வதி,
சிவனிடம் திரும்ப, அவர் ‘ஒரு தோற்றத்திற்காகவே
இருந்தாலும், நீ சீதையின் உருவத்தை ஏற்றதால்,
நான் உன்னை தொடமாட்டேன்’
என்கிறார்.

இதன் பிறகுதான் ‘தட்சன்’ நடத்திய யாகத்திற்கு
உமையவள் செல்வது; அங்கு பரமசிவனுக்கு அவமதிப்பு
நேரிடுவது; யாகம் அழிவது போன்ற நிகழ்ச்சிகளும் –
தன்னையே அக்னியில் அர்ப்பணித்து, பார்வதி ‘ஹிமவான்’
மகளாகப் பிறப்பதும் நிகழ்கின்றன.

ஹிமவான் மகளாகத் தோன்றிய பார்வதியை, சிவன்
மணக்கிறார். அதன் பின்னர் ஒரு சமயம் பார்வதி, எப்போதும்
‘ராமா, ராமா’ என்று ஜபித்துக்கொண்டிருக்கிறீர்களே,
அந்த ராமரின் வரலாற்றை எனக்குக் கூறுங்கள்’ என்று
சிவனிடம் கேட்கிறாள்.

விஷ்ணுவின் அவதாரங்கள் சிலவற்றை முதலில் வர்ணித்த
பரமசிவன், ராமரின் சரித்திரத்தைப் பார்வதிக்கு எடுத்துக்
கூறத் தொடங்குகிறார். இந்த வகையில் தொடங்குகிறது.
துளசிதாஸர் எழுதிய ‘ராமசரித மானஸம்’ என்கிற
ராமாயணம்.

மீண்டும் வால்மீகிக்கு வருவோம். லவ, குச சகோதரர்கள்
அரச லட்சணங்கள் பொருந்தியவர்கள். ராமரை போன்றே
தோற்றமுடையவர்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும்,
அவர்கள் யார் என்பது வால்மீகி ராமாயணத்தில்
தொடக்கத்தில் கூறப்படவில்லை.
-
------------------------------
மூத்த பத்திரிகையாளர் சுதாங்கனின் ‘திருமால் பெருமை’ –27
நன்றி-தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82825
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வால்மீகி ராமாயணம் Empty Re: வால்மீகி ராமாயணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum