ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவ செய்திகள்

Go down

தேவ செய்திகள் Empty தேவ செய்திகள்

Post by Admin Fri Sep 26, 2008 3:06 am

நானே துவக்கமும், முடிவுமாயிருக்கிறேன்.

(திருவெளிப்பாடு 1„18)

- ஆம் இதோ இந்தப் புத்தாண்டின் துவக்கமாக மட்டுமின்றி, நம் நல்வாழ்வின் துவக்கமாகவும் திகழ்பவர் ஆண்டவர் இயேசு. பாவிகளையும் தம் நேசர்களாய் பரிவுகொண்டு நற்செய்திகளால் அவர் களை நிரப்பி, நல்வாழ்வு தருபவர் இயேசு.

இதற்குச் சாட்சியாக பவுலைச் சொல்லலாம். தேவ ஆசிர்வாதத்தால் நிரப்பப்பட்ட பவுலின் வரலாறும், தேவன் பவுலின் மூலம் தரும் நற்செய்திகளும் இந்தப் புத்தாண்டில் நமக்கும் புது படிப்பினையாகத்
திகழும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தேவ செய்திகள் Empty ஒரு புதிய திருப்பணியாளர்

Post by Admin Fri Sep 26, 2008 3:06 am

இயேசுவின் நற்செய்திகளை பரப்பிய கிறிஸ்தவர்கள் யாவரும் கொல்லப்படக் கூடியவர்கள் என்ற வெறியோடு வாழ்ந்தவன் சவுல். இளைஞரான ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்படும் போது அதைப் பார்த்து ரசித்து மகிழுமளவுக்கு கிறிஸ்துவை வெறுத்தவன் சவுல். ஆம் கிறிஸ்தவர்கள் அழிக்கப்படவேண்டியவர்கள் என்பது சவுலின் எண்ணம். ஆனால் தேவனின் எண்ணமோ வேறுவிதமாய் இருந்தது
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தேவ செய்திகள் Empty தேவன் செய்த அற்புதம்

Post by Admin Fri Sep 26, 2008 3:06 am

ஒருநாள் சவுல் தமஸ்கு எனும் இடத்திற்கருகிலாக தன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். அவனோடு இன்னும் சிலரும் வந்துகொண்டிருந்தார்கள். அவர்களின் குதிரைகள் எழுப்பிய குளம்படி சப்தங்களைத் தவிர வேறெந்த ஆரவாரமும் இல்லாத, அமைதியான அந்த வெட்ட வெளியில் வந்துகொண்டிருந்த போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

சவுலைச் சுற்றிலும் ஒரு சுடர்மிகு ஒளி வானத்திலிருந்து வீசியது. அவன் கீழே விழுந்தான். அப்போது ஒரு குரலோசை

சவுலே சவுலே நீ ஏன் எனக்கு துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்?

குரலைக் கேட்டு வியந்த சவுல், ஆண்டவரே, நீர் யார்? எனக்கேட்டான். இப்போது வான்குரல் பதில் சொன்னது.

நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே குரலைக் கேட்ட சவுல் வியந்தான். ஆம் கிறிஸ்வத அடியார்களை துன்புறுத்துபவர்கள் தன்னையே துன்புறுத்துகிறவர்கள் என்ற பொருள் இருந்தது அந்த தேவ வார்த்தையில்.

தொடர்ந்து ஒலித்த குரல், சவுலை எழுந்து நேராக நகரத்துக்குப் போ. அங்கு நீ என்ன செய்ய வேண்டுமென்று உனக்குச் சொல்லப்படும் என்றது.

இதற்குப் பின் அவனால் வேறு எதையும் கேட்க முடியவில்லை. பார்க்கவும் முடியவில்லை. உடனிருந்தோர் அவனை நகரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கும் ஒரு அற்புதம் தேவச் சித்தத்தினால் நிகழ்ந்தது.

ஆம் அனனியா என்பவர் மூலம் சவுல் பார்வைப் பெற்றான். இப்போது அவன் பெற்றது கண்பார்வை மட்டுமல்ல, தேவன் இயேசுவை முழுமையாய் புரிந்து கொண்ட ஞானப்பார்வையும்கூட இதன்பின் திரு முழுக்குப் பெற்று புதுவலிமை பெற்ற சவுல் பவுலாய் மாறிப்போனார்.

இயேசுவின் பிற சீடர்களைப் போன்றே பல்வேறு பாடுகளையும் சந்தித்தாலும் இறைபணியில் முழுமையாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட பவுல் மூலமாக ஏராளமான நற்செய்திகள் மனு மக்களுக்கு தரப்பட்டன. பவுலின் நற்செய்திகள் நம் பாவங்கள் கழுவும் தேவனின் செய்திகளாகவே திகழ்கின்றன.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தேவ செய்திகள் Empty பவுல் தந்த நற்செய்திகள்

Post by Admin Fri Sep 26, 2008 3:08 am

கடவுள் அருளும் நற்செய்தி (ரோமர்1„16,17)

இந்த நற்செய்தியைக் குறித்து நான் பெருமைப்படுகிறேன். யூதர்களும் யூதர் அல்லாதவர்களும் கடவுளை நம்பினால் அவர்கள் அனைவரையும் மீட்கும் கடவுளின் ஆற்றல் அது. தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்துமே பற்றுறுதியின் மூலமே நடைபெறுகின்றன.

கடவுளின் திட்டம் (எபேசியர்1„9-11/2„13)

விண்ணகத்திலும் மண்ணகத்திலும் உள்ள அனைத்தும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் மகிழ்ச்சியாயிருக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். அவர் திட்டமிட்டபடி எல்லாம் செய்யப்படுகின்றன. நாம் அனைவரும் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்க வேண்டும். அவருடைய சொந்த மக்களாக வாழ வேண்டும் என்று கடவுள் நம்மைத் தெரிந்துகொண்டார்.

கடவுளின் பார்வையில் குற்றமற்றவர்கள் (ரோமர்3„22-26)

இயேசு கிறிஸ்துவின் மீது கொண்டுள்ள பற்றுறுதியின் மூலமாக மக்களை கடவுள் நீதிமான்களாக்குகிறார். கடவுளின் ஈவு என்னும் கொடையால் நம் செயல்களின் தேவையின்றி கடவுளோடு ஒப்புவராக்குப்பட்டு இருக்கி றோம். இயேசுவின் மீது பற்றுறுதி கொள்கிறவர்களை நல்லவர்களாகவும், குற்றமற்றவர்களாகவும் தந்தையாம் கடவுள் ஏற்றுக் கொள்ளுகிறார்.

புதுவாழ்வு பெறுங்கள் (ரோமர்12„2/ எபேசியர் 4„23)

உங்கள் உள்ளங்களும் சிந்தனைகளும் புதியவைக ளாகட்டும். அப்போது உங்களால் நல்ல நீதியான வாழ்வை வாழ முடியும். கடவுளின் ஆவி உங்கள் வாழ்வுக்கு வழிகாட்டட்டும். அப்போது நீங்கள் உங்கள் தன்னலமான வழிகளைப் பின்பற்ற மாட்டீர்கள். கடவுளின் ஆவி நம் உள்ளத்தில் அன்பு, மகிழ்ச்சி, அமைதியைத் தரும். நாம் அவருடைய ஆவியின் மூலமாகப் புது வாழ்வைப் பெறுகிறோம்.

அன்பு செலுத்துங்கள் (கொலோசையர்3„14/ 1கொரிந்தியர் 13„4-8)

அன்பு நீடிய பொறுமையும், இரக்கமும் உடையது. அன்புக்குப் பொறாமை இல்லை. அன்புக்குப் பெருமை கிடையாது. அன்பு மற்றவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளாது. அன்பு தன்னலமற்றது. அன்பு விரைவில் கோபம் கொள்ளாது. தனக்கு அன்பு உண்மை யைக் கண்டே மகிழ்ச்சியடையும்.

கீழ்ப்படியுங்கள் (எபேசியர் 6„1-4)

பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்படியுங்கள். ஏனெனில் அதுவே செய்யத்தக்க நல்லசெயல். நீ அப்படிச் செய்தால் உனக்கு எல்லா நன்மையும் உண்டாகும். நீ இவ்வுலகில் நெடியகாலம் வாழ்வாய்

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைக் கோபப் படுத்தாதீர்கள். ஆனால் நீங்கள் அவர்களைக் கடவுளின் போதனையிலும் பயிற்சியிலும் வளருங்கள்

மன்னியுங்கள் (கொலோசையர் 3„12,13)

நீங்கள் கடவுளின் மக்கள். அவர் உங்களிடம் அன்பு கொண்டுள்ளார். எனவே நீங்கள் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்ளாதிருங்கள். யாராவது உங்களுக்கு எதிராக குற்றம் செய்துவிட்டால் அதை அவருக்கு மன்னியுங்கள்.

மகிழுங்கள் நன்றி செலுத்துங்கள் (பிலிப்பியர்4„4-7)

எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள். மறுபடியும் சொல்லுகிறேன். மகிழ்ச்சியாக இருங்கள். ஏனெனில் நீங்கள் ஆண்டவருக்குச் சொந்தமானவர்கள். எதைக் குறித்தும் நீங்கள் கவலைக்கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு தேவையானவற்றை இறைவேண்டலின் வாயிலாக கடவுளிடம் கேளுங்கள். எப்பொழுதும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு இறைவேண்டல் செய்யுங்கள். அப்போது உங்கள் இதயங்களையும், எண்ணங்களையும் கடவுளின் அமைதி இயேசு கிறிஸ்துவில் காத்துக்கொள்ளும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

தேவ செய்திகள் Empty Re: தேவ செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum