புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
90 Posts - 74%
heezulia
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
16 Posts - 13%
Dr.S.Soundarapandian
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
4 Posts - 3%
Anthony raj
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
255 Posts - 76%
heezulia
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
43 Posts - 13%
mohamed nizamudeen
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
8 Posts - 2%
prajai
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
எத்தனை கோடி - சிறுகதை I_vote_lcapஎத்தனை கோடி - சிறுகதை I_voting_barஎத்தனை கோடி - சிறுகதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை கோடி - சிறுகதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 18, 2020 5:24 pm

எத்தனை கோடி - சிறுகதை K3

"அய்யய்யோ'' ரிப்போர்ட்டைப் பார்த்தபடி டாக்டர் நிர்மலா சொன்னாள்.
காயத்ரிக்கு கண்களில் நீர் தளும்பியது. அருகிலிருந்த அம்மாவின்
கையைப் பிடித்துக்கொண்டாள். அம்மாவின் கையும் நடுங்கிக்
கொண்டிருந்தது.

விழுந்து விடுவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு
அடக்கிக்கொண்டாள்.

உண்மையில் அவள் இப்போதுதான் அழுது முடித்து சிரிக்கத்
தொடங்கியிருந்தாள். காதல் கணவனைக் கைப்பிடித்தாலும் பெரிய
குடும்பத்தை விட்டுப் பிரிவது அவ்வளவு எளிதில்லையே?

அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, பாட்டி, தம்பி போதாக்
குறைக்கு நினைத்தால் வந்து நிற்கும் தூரத்திலிருந்த அம்மா வழித்
தாத்தா என அனைவரையும் விட்டுப் பிரிவதென்பது அவ்வளவு
லேசான காரியமில்லை.

ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இன்னொரு நிலத்தில் நடுவது.
அது பூக்குமோ, புதையுமோ யார் அறிவார்? என்னதான் மாமியாருடன்
அன்பான புரிதல் இருந்தாலும் இருபத்தைந்து வருடங்கள் வளர்ந்த,
விளையாடிய, சண்டைபோட்ட, கண்ணீர் சிந்திய, கட்டிப்பிடித்த,
தவறி விழுந்து உதடு பெயர்ந்த அனைத்துக்கும் சாட்சியாய் நின்ற
வீட்டைப் பிரிவது சுலபமில்லையே.

திருவிழாக் கோலமிட்ட வீட்டைவிட்டு கல்யாணத்துக்குக் கிளம்பும்
போதே, இனி இது நமக்கு சொந்தமில்லை என்ற எண்ணம் ஏக்கமாய்
பரவி இதயம் முழுவதையும் அடைத்துக் கொண்டது.

அடைப்பை மீறி வழியும் தண்ணீர் போல லேசாக கண்ணீர் எட்டிப்
பார்த்தது. "எதுக்கும்மா அழற? சந்தோஷமா இருக்கணும்மா'' என்று
உடைந்த குரலில் சொன்ன அம்மாவைக் கண்டதும் கண்ணீர்
கொட்டியது.

ஆயிரம் நாட்கள் காத்திருந்த வைபவமே இவள் திருமணம்.
ஆம், ஆயிரம் இரவுகள் ஏங்கிதான் இவள் திருமணம் நடந்தது.
இவள் பயந்ததுபோல் ஒன்றுமில்லாமல் எல்லாம் சுலபமாகவே
நடந்திருந்தாலும், ஆயிரம் கனவுகளில் இவள் கரம் பிடித்தவனே
இன்றும் அருகில் இருந்தாலும், இன்னும் ஆயிரம் வருடங்கள்
இவனோடு வாழ வேண்டும் என்று ஆசை இருந்தாலும்
அந்த ஒருநாள் இவள் அழுதுகொண்டுதான் இருந்தாள்.

அன்று செய்த சடங்குகளெல்லாம், இவளை உயிருடன் ரத்தமும்
சதையுமாக வைத்துக் கொண்டு இதயத்தை மட்டும் வெட்டி
எடுக்கும் சடங்குகளாகவே இவளுக்குப்பட்டது. அவனை ஏறிட்டுப்
பார்த்தாள், அவன் சந்தோஷமாகத்தான் இருந்தான்.

ஆணுக்கென்ன கவலை? இதுவரை வாழ்க்கையின் அங்கங்களாக
இருந்தவர்களை அழித்து புதிய உலகிற்குள் புகுந்து செல்லும்
கொடுமை அவர்களுக்கு நேரப் போவதே இல்லை. அதனால்
அவர்களுக்கு இந்த வலிகளைப் புரிந்து கொள்ள வழியேயில்லை.

தன் அப்பாவை நினைத்துக் கொண்டாள்.ஒருவேளை தன்
மகளுக்குத் திருமணம் செய்யும்போது இவனுக்கும் புரியுமோ?
ஒருவேளை புரியலாம், ஆனால் புரிவதற்கும் அனுபவிப்பதிற்கும்
தொலைதூர இடைவெளி உள்ளது. என்னதான் புரிந்தாலும் அந்த
இடத்தில் தன்னை நிறுத்திப் பார்க்கும் ஒப்பனையை ஓர் ஆணால்
செய்துவிட முடியாது. அது பெண்களால் மட்டுமே இயலும்.

அவள் கரத்தை அப்பா பிடித்து அவன் கரத்தில் கொடுத்தபோது
உடைந்து அழுத அவளைப் பார்க்க அப்பாவுக்கும் சகிக்காமல்
நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். தன் கண்ணீரை மறைத்துக்
கொள்ள.

கணவன் வீட்டில் முதல்நாள் காய்ச்சிய பாலோடு சேர்ந்து பொங்கிய
கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்தபடி வெளியே வந்தாள்.
தன் வீட்டில் ஒரு நாள் கூட வேலை செய்ய விடாத அம்மாவை
நினைத்துக் கொண்டாள். ஒரு பெண்ணின் வாழ்க்கையில்தான்
ஒரே நாளில் எப்படி அத்தனையும் தலைகீழாக மாறிவிடுகிறது.

சுவை, மணம், வண்ணம், வாழ்க்கை என அனைத்திலுமே தனக்குப்
பிடித்த ஒன்றை விடுத்து அடுத்தவர்களுக்காய் வாழச் சபித்துவிடுகிறது
உலகம். ஆம், சபித்துதான் விடுகிறது, ஒருவேளை வரமாக இருந்தாலும்
அவள் விரும்பிக்கேட்டாலும் அவளை தலைகீழாகப் புரட்டிப்போட்டு
அவள்மீது செலுத்தப்படுவது சாபம்தானே?

திருமணமான இரண்டு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவனோடு
வாழப் பழகியிருந்தாள். மாமியார் வெளியூரில் வேலை பார்ப்பதால்
அவள் ரிடையர் ஆகும் ஒரு வருடம் வரை இவளுக்கு தனிக்குடித்தனம்தான்.

அத்தனை சொந்தங்களை விட்டு வந்தவளுக்கு இந்த தனிமை இன்னும்
அதிக வலியைத் தந்தது. இருப்பினும் கொஞ்ச கொஞ்சமாய் அழுவதை
நிறுத்தியிருந்தாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 18, 2020 5:24 pm

விமன் ஆல்வேஸ் லவ் சர்ப்ரைஸஸ்', என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அதுபோன்ற பேருண்மை எதுவுமேயில்லை. இவளுக்கும் ஒரு மிகப்
பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.

மாதவிடாய் நாள் கடந்தும் வரவில்லை, ஏற்கெனவே திருமணமான
அவள் தோழியிடம் கேட்கும் முன்னரே இவன் கூகுளிடம் கேட்டு
"பிரக்னன்சி டெஸ்ட் கிட்' வாங்கி வந்திருந்தான்.

அதிலும் ரிசல்ட் பாசிட்டிவாக வர அவள் வயிற்றைக் கட்டிக்கொண்டு
மெல்லிய முத்தமிட்ட அவள் கணவனைக் கண்டு, அவனையே கருவில்
சுமக்கப் போவதாய் எண்ணி மகிழ்ந்திருந்தாள்.

தாய்மை போன்ற மாபெரும் பேரு ஏது? இந்தப் பிரபஞ்சத்தின்
ஜனன காரணியே அவள்தானே? சில நேரங்களில் அவள் நினைத்துக்
கொள்வாள் இந்த பிரபஞ்சத்தையே ஒரு தாய்தான்
பெற்றெடுத்திருப்பாளோ என்று எத்தனை ஜனனங்கள் இந்த உலகம்
கண்டிருக்கும்?

அத்தனை உலகங்களையும் ஒருதாய், ஒரே ஒருதாய் தன் கருவில்
சுமக்கிறாள். அந்த உலகத்தின் கண்ணீர், பசி, வலி, சிரிப்பு, காதல்,
அன்பு, முத்தம் என அனைத்தும் இங்குதானே தொடங்குகிறது?
அவை அனைத்தையும் சுமப்பவள்தானே ஒருதாய்? ஒருவேளை
உணர்வுகளால் உலகம் கட்டமைக்கப்பட்டிருந்தால் தாயைப்போல்
உலகம் வேறில்லை.

இந்த நிலையில்தான் கர்ப்பத்தை உறுதிசெய்து ஸ்கேன் எடுத்து
வந்தவளிடம் டாக்டர் நிர்மலா "அய்யய்யோ' என்றாள். வயதானவள்,
அனுபவசாலி தன் தாய்க்கும் பிரசவம் பார்த்தவள் என்ற
நம்பிக்கையிலேயே இவளைப் பார்க்க இரண்டு அம்மாக்களுடன்
மாமியாரைக் கூட்டிக்கொண்டு வந்திருந்தாள் காயத்ரி.

இவர்கள் மூவருமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்க காயத்ரிதான்
மனதை பலப்படுத்திக்கொண்டு "என்னம்மா வந்துருக்கு ஸ்கேன்ல?''
என்று கேட்டாள்.

"என்னம்மா இவ்வளவு பெரிய நீர்க்கட்டி இருக்கே?'' என்று
டாக்டரிடமிருந்து பதில் வந்தது. அது எவ்வளவு பெரியதோ தெரியாது;
ஆனால் ஒரு மாபெரும் நெருப்புக்கட்டி தன் தலையில் விழுந்தது
போல் உணர்ந்தாள். அவளது சந்தோசங்களை ஒரே நொடியில் உடைத்து
எறிந்தது அந்தக்கட்டி.

கண்ணீர் தளும்பும் கண்களைக் காட்ட விரும்பாமல் திருப்பிக்
கொண்டவளுக்கு, "அப்படியே பத்து மாசம் பத்திரமா பாத்துக்கிட்டு
கொண்டாங்க, சிசேரியன் பண்ணி எடுத்துடலாம்'' என்ற வார்த்தைகள்
காதில் நெருப்பையள்ளிப் போட்டதுபோல் இருந்தது.

அதிர்ச்சி மாறாமல் வெளியே வந்தவளுக்கு உலகமே தடுமாறுவதாய்த்
தோன்றியது.

"ஒண்ணும் கவலைப்படாதீங்க, உங்க பேபி இங்க இருக்கு. கட்டி ஒரு
ஓரமாதான் இருக்கு'' என்று இவள் மாமியாரிடம் நர்ஸ் கூறிக்
கொண்டிருந்தது கிணற்றுக்குள் கேட்பதுபோல் தோன்றியதேயன்றி
மனதுக்குள் இறங்கவில்லை.

கண்களில் கண்ணீர் தன்னிச்சையாக வழிந்துகொண்டிருந்ததை
இவள் வீட்டுக்கு வரும் வரை உணரவேயில்லை.

"நீர்க்கட்டியெல்லாம் இருந்தா கன்சீவே ஆக மாட்டாங்கம்மா.
உனக்கு ஆனது பெரிய விஷயம்தான்.''

"கட்டி கருவ தொந்தரவு பண்ணிட்டே இருக்கும்மா. அபார்ட் ஆக சான்ஸ்
அதிகம். கட்டி இருந்துசுன்னாலே பிரச்னைதான். 5 மாசம் வரைக்கும்
பாதுக்காக்கறதே பெரிய விஷயம்...''

"அவ்வளவுதான் நார்மல் டெலிவரியெல்லாம் நெனச்சு கூட பாக்க
முடியாது''.

அடுத்த மாதம் முழுவதும் இவற்றையேதான் கேட்டுக் கொண்டிருந்தாள்.
டாக்டர்கள், நர்சுகள், தெரிந்த அம்மாக்கள், பக்கத்துவீட்டு அக்கா,
பிள்ளை பெற்ற தோழி, தானாக வந்து சேர்ந்த அறிவுரையாளர்கள் என
எல்லோரும் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

ஒரே ஆறுதல் கணவன் மட்டும்தான். அவனோ எதற்கும் கவலை
கொண்டானில்லை. எல்லாவற்றிற்கும் வைத்தியம் இருக்கிறது என்பான்.
உடலுக்கு வைத்தியம் இருக்கும், மனதுக்கு எங்கே போவது?

இவளுக்கோ இதுவரை எந்த அறிகுறியும் தெரிந்ததில்லை. மாதவிடாயில்
எந்த மாற்றமும் இதற்கு முன்பு இருந்ததேயில்லை. அப்படி இருக்கையில்
எப்படி கட்டி வந்தது என்று நினைத்து புலம்புவாள். சில சமயங்களில்
கணவனின் தோளில் சாய்ந்துகொண்டு

"இந்த பாப்பாக்கு மட்டும் எதாவது ஆச்சுன்னா நான் உயிரோடவே
இருக்க மாட்டேன்'' என்று அழுவாள். அவனுக்கு இவளை எப்படிச்
சமாதானம் செய்வதென்றே தெரியாது. எல்லா ஆண்களையும்போல.
கடைசியில் ஓர் உருப்படியான டாக்டரைக் கண்டுபிடித்திருந்தார்கள்.
------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 18, 2020 5:25 pm

உருப்படியாக என்றால் கட்டியைப் பற்றி மறக்குமளவு
குழந்தையைப் பற்றி மட்டும் பேசத் தெரிந்தவளாக இருந்தாள்.
குழந்தைக்காக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஊசி போட
வேண்டியதாயிற்று.

இவளுடைய ஆசைகளெல்லாம் உடைந்து போனதுபோல் இருந்தது.
எல்லா புதுமணமான ஜோடிகளைப் போல கொஞ்ச நாள் தனிமையில்
இருவரும் வாழ வேண்டுமென்று ஆசைப்பட்டிருந்தாள். ஆனால்
இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பில்லை.

"ஒரு அஞ்சு மாசம் பத்திரமா பாத்துக்கங்க'' என்று டாக்டர் கூறியதைக்
கேட்டு இரு வீட்டிலும் அவள் கணவன் உட்பட "அம்மா வீட்டிலேயே இரு''
என்று அனுப்பிவைத்திருந்தனர். அவள் கணவனோ இதற்கெல்லாம்
சிறிதும் கவலைப்படவில்லை.

"நான் தனியாக இருந்துகொள்வேன்'' என்று சொன்னான். இவளுக்கு
மட்டும்தான் அவனைப் பிரிவதில் வருத்தம். எத்தனை ஆசைப்பட்டுக்
கல்யாணம் செய்திருப்பாள்? இனிக்க இனிக்க இவனோடு வாழ
வேண்டுமென்று ஆசைப்பட்டவளைப் பிய்த்தெடுத்துக் கொண்டு
போனதுபோல் இருந்தது.

ஆசையாய் அப்பா வாங்கிக் கொடுத்த பொம்மையை விளையாடும்
முன்பே உடைத்துத் தூக்கி எறிந்ததுபோல சிறு குழந்தையாய் மாறி
அழுதுகொண்டே இருந்தாள்.

"அழாதம்மா அழுதா டயர்ட் ஆயிடும்'' என்று சமாதானம் சொல்லும்
கணவனுக்கு இவள் மனதை புரிந்துகொள்ளத் தெரியவில்லை.
போதாக்குறைக்கு காலை நேர வாந்தியும் சேர்ந்துகொண்டது.

தைராய்டு இருப்பதாகக் கண்டுபிடித்திருந்ததால் காலையில்
ஒரு மாத்திரை சாப்பிட்டு அடுத்த அரைமணிநேரத்திற்கு எதுவும்
சாப்பிடக் கூடாது. இவளோ காலை எழுந்ததும் காபி குடிக்காமல்
இருந்ததேயில்லை. அதுவும் காலை எழுந்ததும் வாய்க்குள் கையை
விட்டு குடலைப் பிடித்து இழுப்பதுபோல் வரும் வாந்தியில் துவண்டு
போய் வந்து மாத்திரையை முழுங்கிவிட்டு அரை மயக்கத்திலேயே
கிடப்பாள்.

அரைமணியில் பலமின்றி நடுங்கும் கைகளோடு காபியைக் குடித்த
பிறகே கொஞ்சம் உயிர் துளிர்த்ததுபோல் இருக்கும். போதாக்குறைக்கு
எதைத் தின்றாலும் நெஞ்சைக்கரித்துக்கொண்டு வரும் ஏப்பத்தில்
நெருப்பில் மிளகாயை வாட்டி தேய்த்ததுபோல் தொண்டையெல்லாம்
எரியும்.

மூன்று மாதத்தில் ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில்குழந்தை நன்றாக
வளர்ந்திருப்பதாக டாக்டரம்மா சொன்னார். காதலுடன் கணவனின்
தோளைக் கட்டிக்கொண்டவளது சந்தோசம் நிலைக்கவில்லை.

அடுத்ததாக எடுத்த நீரிழிவு சோதனையில் இவளுக்கு கர்ப்பகால
நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தது.

"சரியான சீக்காளியா இருக்கேன் நான்'' என விரக்தியாக சிரித்துக்
கொண்டாள்.

"என்னால பிள்ளைக்கு எதுவும் ஆயிடக் கூடாது'' என்று மறுபடி அழத்
தொடங்கினாள். சர்க்கரையைக் கட்டுப்படுத்த தினமும் இன்சுலின்
போடும்படி பணிக்கப்பட்டாள். காலை உணவுக்கு முன்பு தொடையில்
ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். ஒரே ஊசியை ஒருநாளைக்கு
மேல் போட்டால் தொடையைக் கிழித்துக் கொண்டு போவதுபோல்
வலிக்கும்,

அதற்காக எட்டு ரூபாய் ஊசியை ஒரே நாளில் தூக்கிப் போட முடியுமா?
ஒரு ஊசியில் மூன்று நாட்கள் போட்ட பிறகே அதைத் தூக்கிப்
போடுவாள். கொஞ்ச நாட்களில் தொடையெல்லாம் பழைய கந்தல்
துணியாய் பொத்தல் பொத்தலாக ஓட்டை விழுந்துபோனது.
-----------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 18, 2020 5:25 pm

ஆறாவது மாத ஸ்கேனில் கட்டி சிறியதாக தெரிந்தது.
ஏற்கெனவே ஒரு மாதமாக குழந்தை மிதிப்பது தெரிய ஆரம்பித்திருந்தது
. "இந்த புள்ள எல்லாத்தையும் சீக்கிரம் பண்ணுதுங்க'' என்று கணவனிடம்
சொல்லிக்கொண்டாள்.

கொஞ்ச நாளாகவே அவள் சரியாகப் படுப்பதில்லை. ஒரு பக்கமாக
படுத்தால் வயிறு தரையில் படும் என்று ஒரு பக்கமாக தன் தோளை ஊன்றி
வயிறு தரையில் பட்டுவிடாதபடியே படுப்பாள்.

"நல்லாதான் படேன்மா'' என்றால், "இல்லைங்க வயிறு கீழ பட்டா பிள்ளை
வந்து மிதிக்குதுங்க, அதுக்கு வலிக்கும்போல'' என்று சொல்லுவாள்.
"ஏன்மா பாப்பாவைச் சுத்தி தண்ணி இருக்கும்மா, அதெல்லாம் வலிக்காது''
என்று கணவன் சொல்லும் சமாதானங்கள் இவளுக்குப் போதவில்லை.

பிள்ளைகளுக்கு வலிக்கிறதோ இல்லையோ, அம்மாக்களுக்கு வலிக்கத்தானே
செய்யும். குழந்தைகளின் மூளைக்கு வலியைக் கடத்தாத நரம்புகள் கூட
அம்மாவின் மூளைக்கு வலியைக் கடத்தி விடுகின்றன. குழந்தைக்கு
வலிக்கிறதோ இல்லையோ அம்மா துடித்துப் போகிறாள். குழந்தையின்
கண்கள் கலங்கும் முன்னால் அம்மாவுக்குக் கண்ணீர் வந்துவிடுகிறது.

இதெல்லாம் இவ்வுலக நியதி, அதுவே இன்று இவளையும் ஆட்டுவிக்கிறது.
இருந்த நோய்களோடு இடுப்பு வலியும் சேர்ந்து கொண்டது.

ஏழாவது மாதத்திலெல்லாம் நடப்பதே சிரமமாகிப் போனது. வளைகாப்புக்கு
முன்னால் பத்துநாள் மட்டும் கணவனோடு வந்து இருந்து கொண்டாள்.
அவளுக்கு அந்த நாட்களே மொத்த வாழ்க்கையும் வாழ்ந்ததாய் தோன்றியது.
வளைகாப்பு முடிந்த அன்று மாலை அம்மா வீட்டுக்குக் கிளம்பும்போது வீட்டை
திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டாள்.

இன்னும் எட்டு மாதங்களுக்கு இந்தப் பக்கமே வர முடியாது. அதை நினைத்து
கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவனுடன் வாழ்ந்த நாட்களை நினைத்துக்
கொண்டாள். ஆட்டோ போன பாதை இவள் கண்ணீரால் நிரம்பி ஆட்டோ
தடுமாறிக்கொண்டே போனது.

"இது வரைக்கும் எந்த ப்ராப்ளமும் இல்ல, தேர்ட்டி போர் வீக்ஸ் தாண்டிட்டா
எந்த பிரச்னையும் இல்ல'' என்று டாக்டர் சொல்லிவிட கூடுதல் கவனம் இவள்
மீது செலுத்த வேண்டியதாயிற்று. பயத்திலேயே இன்னும் இரண்டு வாரத்தை
கடத்த அதில் இன்சுலின் அளவையும் கூட்டி ஊசியின் வலியை
அதிகரித்திருந்தார். மூச்சு விடுவதே சிரமமாகிப் போக எந்நேரமும் சுளுக்குப்
பிடித்துக்கொண்டதுபோல் வலித்துக்கொண்டே இருந்த இடுப்பில் கைவைத்து
நீவினால் கூட பிள்ளைக்கு வலிக்குமோ என்று யோசித்து வலியைப் பொறுத்துக்
கொண்டாள்.

"புண்ணியாஜனம் பண்ணற வரைக்கும் புது டிரஸ் போடக்கூடாதும்மா..
வேற குழந்தைக்கு போட்டதுதான் போடணும், அதுதான் சாஸ்திரம்''
என்று அம்மா சொல்ல தோழியிடம் சொல்லி அவள் குழந்தையின் உடைகளை
வாங்கி வந்தாள். அவள் போனதும் அந்தப் பிஞ்சு உடைகளை வயிற்றில்
வைத்து. "பாப்பா.. இங்க பாரு உனக்கு டிரஸ், இது பிடிச்சுருக்கா?
இல்ல இதுவா'' என்று குழந்தையிடம் பேசி வயிற்றில் உதைவாங்கி
சந்தோஷமாக சிரித்தாள்.

பெண்களுக்குத்தான் எப்படி உலகம் வயிற்றுக்குள் சுருங்கிப் போய்
விடுகிறது? அவளது பேச்சும் பாடல்களும் குழந்தைக்கு பிடித்ததாகவே
மாறிவிடுகிறது. உணவு, உடை, நடை என்று எல்லாம் மாறி மூச்சு விடும்
போது கூட குழந்தைக்கு வலிக்காமல் மெதுவாக விடப் பழகியிருந்தாள்.

ஒருவழியாக முப்பத்தாறு வாரங்கள் கடந்திருக்க, டாக்டர் கூப்பிட்டு,
"நீ சுகருக்கு இன்சுலின் போடுறதால லாஸ்ட் டூ வீக்ஸ்ல பேபிக்கு சுகர் லோ
ஆயிடும். சோ ஒரு டூ வீக்ஸ் முன்னாலேயே டெலிவரி பிளான் பண்ணிக்கலாம்.
பேபி பொசிஷன்ல இருக்கான்னு பாப்போம், இல்லன்னா சிசேரியன்
பண்ணிக்கலாம்'' என்றார்.

இவளுக்கு குழந்தையை சீக்கிரம் பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம்
ஒரு பக்கம் இருந்தாலும் சிசேரியன் என்றால் செலவு அதிகம் ஆகுமே.
ஏற்கெனவே பெரும் செலவு செய்து கல்யாணம் செய்துவைத்திருந்த
அப்பாவுக்கு மேலும் செலவு கூடாமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்
கொண்டாள்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 18, 2020 5:26 pm

இப்போதெல்லாம் குழந்தை உதைக்காமல் அரைமணி நேரம் கூட
இருப்பதில்லை. அப்போதெல்லாம் சொல்லிக்கொள்வாள்,
"இந்த பிள்ளை போடுற ஆட்டத்துக்கு அதுவே வெளிய வரலாம்'' என்று.

என்னதான் ஆட்டம் போட்டாலும் குழந்தையின் தலை சரியாக
கீழ்நோக்கி வரவில்லை. சிசேரியன்தான் என்று முடிவுசெய்து
இரண்டு, மூன்று தேதிகளை ஒதுக்கி நல்ல நாளாக பார்த்து
டெலிவரிக்கு நேரம் குறிக்க சொன்னார்கள்.

ஒரு வகையில் அவர்கள் அனைவருக்கும் நிம்மதி, ஏற்கெனவே
எதிர்பார்த்த சிசேரியன் என்பதால் கவலை இல்லை, இதே
எதிர்பாராமல் திடீரென சிசேரியனாக இருந்தால் ரிஸ்காகியிருக்கும்
என்று பேசிக்கொண்டனர்.

ஒரு நல்ல நாள் பார்த்து ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து விட்டார்கள்.
ஆபரேஷனுக்கு முந்தைய நாள் முழுவதும் ஏதும் சாப்பிடக்கூடாது
என்று சொல்லியிருந்தனர். ஒருநாள் முழுவதும் சாப்பிடாத
களைப்புடன் இருந்தாலும் எதையும் வெளிக்காட்டாமல்
உற்சாகமாகவே இருந்தாள்.

"சிசேரியன் பண்ணும்போது முதுகுதண்டுல ஊசி போடுவாங்க.
அதுனால எனக்கு ரொம்பநேரம் உக்கார முடியாது'' என்ற
பக்கத்துக்கு வீட்டு அக்காவின் சிரமங்களோ, "கூடுமானவரை
நார்மல் டெலிவரியே ட்ரை பண்ணு காயத்ரி, சிசேரியன் பண்ணினா
பால் சரியா ஊறாது'' என்ற எதிர் வீட்டு அக்காவின் அறிவுரையோ
மனதில் உறுத்திக் கொண்டிருந்தாலும் அதையெல்லாம்
மறக்கடிக்குமளவு குழந்தையின் நினைவு இருந்தது.

"ஏங்க, பையனா பொண்ணா? என்னங்க வேணும்'' என்று கணவனிடம்
இன்னொரு முறை கேட்டாள். "எதுவாயிருந்த என்னம்மா? எனக்கு
குழந்தைதான் வேணும்'' என்று எப்போதும்போல் சொன்னான்.

"நீங்க ஆசைப்பட்டாலும் இனிமே மாத்தவா முடியும்'' என்று சொல்லி
சிரித்துக்கொண்டாள்.

ஆபரேஷனுக்காக பச்சை உடை அணிவிக்கப்பட்டது.
"ஏங்க வாங்க செல்பி எடுத்துக்கலாம்'' என்று சந்தோஷமாக அந்த
உடையுடன் போட்டோ எடுத்துக்கொண்டாள். பிரஷர் பார்க்க,
ஊசிபோட என வந்துகொண்டே இருந்த நர்சுகளுக்கு அவன்
இடையூறாக இருக்க, "அண்ணா கொஞ்சம் வெளிய இருங்கண்ணா,
என்ன உங்க ஒய்ப அனுப்ப மனசே இல்லையா'' என்று கேட்க
"ஆமாம்'' என்று சொல்லி அந்த நர்சுகளிடம் கிண்டலைப் பெற்றுக்
கொண்டான்.

வீல் சேர் வேண்டாமென்று சொல்லி நடந்தே ஆபரேஷன்
தியேட்டருக்குப் போனவளை ஒட்டுமொத்தக் குடும்பமும் கண்ணீரோடு
பார்த்துக் கொண்டிருந்தது.

ஆபரேஷன் தியேட்டருக்குள் நடந்தே போனாள்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் தாங்கிப் பிடிக்க இரண்டு நர்சுகளோடு
சென்று படுக்கையில் படுத்தவளுக்கு கொடுத்த அனஸ்தீசியா
இப்போதுதான் வேலை செய்ய ஆரம்பித்திருந்தது, லேசாக கண்கள்
சொக்கும் நிலையில் இருந்தவளிடம் ஒரு டாக்டர் மெதுவாக வந்து,
"மேடம், நான் இப்ப உடம்பு மரத்துப்போறதுக்காக முதுகுல ஒரு ஊசி
போடப்போறேன். பயப்படாதீங்க'' என்றார். ப

க்கத்து வீட்டு அக்கா சொன்னதெல்லாம் மனதுக்குள் காற்றில்
படபடக்கும் காகிதமாய் லேசான நடுக்கத்தைக் கொடுத்தாலும் தன்
தைரியத்தைக் காட்டிக்கொள்ள, "நான் பயப்படல சார், நீங்க ஊசி
போடுங்க'' என்றாள்.

மனது சொன்னதை வாய் கேட்கவில்லை போலும். இவள் சொன்னதைக்
கேட்டு டாக்டர்கள் லேசாக சிரித்துக்கொண்டனர். வயிற்றுக்குக் கீழே
எதோ சிலீரென்ற உணர்வு தெரிந்தது. இவள் வயிற்றின் மேலே
கைவைத்து யாரோ தள்ள இவளுக்கு கழுத்தில் விண்ணென்ற வலி
கிளம்பியது.

"இதென்ன சிசேரியன் என்று சொல்லி வயிற்றைக் கிழிக்காமலே
குழந்தையை எடுக்கிறார்கள்'' என்று நினைத்துக்கொண்டிருக்கையில்
கழுத்து வலி இன்னும் அதிகரிக்க, பிடித்துக்கொண்ட கழுத்தை விடுவிக்க
சொடுக்கு எடுப்பதுபோல் கழுத்தை இப்படியும் அப்படியும் ஆட்டினாள்,

"வியேஏன்....' என்று குழந்தை அழும் சத்தம். எங்கோ கிணற்றுக்குள்
கேட்பதுபோல் கேட்டது. "என்ன அதற்குள் குழந்தை பிறந்துவிட்டதா?'
என்று ஆச்சரியப்பட்டு முடிப்பதற்குள். கலங்கிய தண்ணீர்போல
தெரிந்த காட்சிகளுக்குள் தலைநீட்டி, மேலேறிய நெற்றியும் அளவான
மீசையுமாய் ஒருவர் எட்டிப்பார்த்து,

"என்ன மேடம் என்ன குழந்தை வேணும்னு ஆசப் பட்டீங்க'' என்று கேட்டார்.
நிஜமாகவே குழந்தை பிறந்துவிட்டதா இல்லையா என்று குழம்பியபடியே
, "எதுவா இருந்தாலும் சரிதான் சார்'' என்றாள்.

சிரித்தபடி, "சும்மா சொல்லுங்க மேடம் என்ன குழந்தை வேணும்னு
ஆசப்பட்டீங்க?'' என்று கேட்டார். இவள் அவசரமாய், "எதுவா இருந்தாலும்
சரிதான் சார். குழந்தையக் காட்டுங்க'' என்று உளறினாள். வாய்விட்டு
சிரித்தபடி "உங்களுக்கு பையன் பிறந்திருக்கான் மேடம்,
குழந்தைய உங்க பேமிலிகிட்ட குடுத்துருக்கோம். நீங்க ரெஸ்ட் எடுங்க''
என்று சொல்லிவிட்டு போனார்.

"எல்லாம் முடிஞ்சது, கங்கிராஜுலேஷன் காயத்ரி'' என்று அழகான
புன்னகையோடு டாக்டரம்மா சொன்னது இவள் காதில் விழுந்தது.
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 18, 2020 5:29 pm

வயிற்றில் பாரம் குறைந்திருந்தது. கனவாகத்தான் இருக்க
வேண்டுமென்று நினைத்துக்கொண்டாள். உடல்தான் எத்தனை
லேசாகிவிட்டிருந்தது? அப்போதுதான் கவனித்தாள் இரண்டு
நர்சுகள் இவள் அருகில் நின்றிருந்தனர்.

இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நினைக்கும்போதே இவள்
பறக்க கணவனும் பின்னாலேயே பறந்துவந்தான். அவன் தடுமாறி
விழப்போக இவள் அவன் கீழே விழாமல் இருக்க கையை நீட்டி
அவன் பேண்டை இறுக்கப் பிடித்துக்கொண்டாள்.

"அக்கா கைய எடுங்கக்கா'' என்று கிணற்றிலிருந்து பேசுவதுபோல்
அருகிலிருந்த நர்சுகளில் ஒருத்தி சொன்னாள். கணவன் அன்போடு
இவளைப் பார்த்து சிரித்தான்.

கையை எடுக்க பிரயத்தனம் செய்தாள். ஆனால் அவளால் கையை
எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்தும் கையை
அசைக்கக்கூட முடியவில்லை. ஒருவழியாக இரண்டு நர்சுகளும்
முயற்சி செய்து கையை விடுவித்தனர்.

அவள் கணவன் அறையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தான்.
"பாத்தியா அந்தண்ணன் எவ்வளவு அழகா குழந்தைய தூக்கி வைக்குற
மாதிரி அவரு ஒய்ப தூக்கி வைச்சாரு'' என்று ஒரு நர்ஸ் சொன்னாள்.

காயத்ரிக்கு "எனக்கு குழந்தைதான் வேணும்'' என்று அவள் கணவன்
சொன்னது நினைவுக்கு வந்தது. அவளுக்கு சந்தோஷம் பொங்கியது,
சாதாரணமாக இருந்திருந்தால் அழுதிருப்பாள். இன்று கண்கள் கூட
மரத்துப்போனதுபோல் இருந்தது.

அதற்குள் இன்னொருத்தி, "அந்தக்கா மட்டும் என்னவாம். இந்த
மயக்கத்துலயும் அவங்க வீட்டுக்காரர கீழ விழாம பிடிச்சுக்கிட்டாங்க''
என்று சொன்னாள்.

இதெல்லாம் கனவில்லை நிஜம்தான் என்பதை வலி உணர்த்தியது.
அடிவயிற்றில் நெருப்பை அள்ளிக் கொட்டியதுபோல் வலித்தது.
கையை இப்போது தூக்க முடிந்தது ஆனால் வலித்த இடத்தை தொட்டுப்
பார்க்க கையை கொண்டு போனதும் உடனே நர்ஸ் ஓடிவந்து
"அக்கா தையல்ல கை வெச்சுடாதீங்கக்கா'' என்று பிடித்துக்கொண்டாள்.

குழந்தையைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்திருந்தார்கள்
அழகாக இருப்பதாகத்தான் தோன்றியது. "யாரை மாதிரி இருக்கிறான்'
என்று நிறைய யோசித்தும் ஒன்றும் பிடிபடவில்லை. அடிவயிற்று வலியைத்
தாண்டி சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.

இப்போது ஐஇமவை விட்டு வெளியே வந்து இரண்டுநாள் ஆயிருந்தது.
குழந்தை அம்மாவும் அப்பாவும் கலந்தபடி இருப்பதாக சொல்லிக்
கொண்டார்கள். இவளுக்கு வலி குறைந்திருந்தது.

ஆயிற்று இரண்டு மாதங்கள், இரவு பகல் தூங்காமல் குழந்தையை
கவனித்ததில் ஆளே கறுத்துப் போய் பாதியாக இளைத்திருந்தாள்
காயத்ரி.

குழந்தை இவளைப் பார்த்து சிரிக்கத் தொடங்கியிருந்தான்.
அதில் இப்போதெல்லாம் கர்ப்பகாலத்தில் கண்ட துன்பங்களெல்லாம்
மறந்துபோனது. "துன்பங்களா அவை இன்பங்கள்'' என்றே சொல்லிக்
கொண்டிருக்கிறாள்.

இவன் சிரிப்புக்காக ஆயிரம் துன்பங்களையும் தாங்க தயாராக
இருந்தாள். ஆயிரமென்ன, எத்தனை கோடி துன்பங்களையும் தாங்குவாள்
அவள். உலக இயக்கத்தின் அச்சாணியான தாய்மையின் ஒரு பாகமல்லவா
அவள்?

இன்று பசியில் அழுத குழந்தை இவள் வந்து தூக்கும்போது, முதன்
முறையாக "ம்ம்மா...' என்று அழுதது. அம்மா உணர்ச்சிவசப்பட்டு
"ஆஹா.. இதற்காகத்தானேடா.. இவ்வளவு கஷ்டப்பட்டா...' என்று சொல்ல
வாய்விட்டு அழுதேவிட்டாள்.

பின்பு பால் கொடுத்தபடி கண்ணீரைத் துடைத்துக் கொண்டு
விசும்பியபடி சொன்னாள்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?....
-
------------------------------------

சத்யா
நன்றி - தினமணி


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 19, 2020 12:15 pm

ம்ம்...ஒவ்வொருவரும் இத்தனை கஷ்டப்பட்டு பெற்று வளர்த்து ஆளாக்குகிறார்கள்... அது பிறகு மறக்கப்படுகிறது புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக