புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
284 Posts - 45%
heezulia
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
20 Posts - 3%
prajai
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10எடை கூட்டும் உணவுகள் ! Poll_m10எடை கூட்டும் உணவுகள் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடை கூட்டும் உணவுகள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Mar 2020 - 21:24

எடை கூட்டும் உணவுகள் !

இனிய நண்பர்களே! இந்த உலகில், உடலைப் பருமனாய் வளர்த்து, கழிவுகளைச் சேர்த்து, வாழ்க்கையை எப்படியாவது ஓட்ட வேண்டும் என்று யாரும் தீர்மானமாக இருப்பதில்லை. நாம் எல்லோரும் குண்டு தன்மையில் சிக்காமல் இருக்கவே விரும்புகிறோம். ஆனால், வழி தெரியாமல்தான் முழிக்கின்றோம். நண்பர்களே! நாம் குண்டாவதைத் தவிர்க்கும் செயல்களை செய்தாலே போதும், வெற்றி கிடைக்கும். அந்த விதத்தில் நம்மை குண்டாக்கும் உணவுகளை கண்டறிந்து தவிர்த்தால் குண்டாக மாட்டோம். நண்பர்களே! இந்த அத்தியாயத்தில் கெட்ட கொழுப்பை உண்டாக்கும் உணவுகள் பற்றி இனி பார்ப்போம்.

உடலை குண்டாக்கும் கெட்ட கொழுப்பு உணவுகள்:

1. துரித உணவுகள்: துரித உணவுகள் (Fast food) மற்ற எல்லா உணவுகளை விட மிக அதிகமான கெட்ட கொழுப்பை உண்டாக்கும் தன்மை கொண்டவை ஆகும். துரித உணவுகளை அதி விரைவாக சூடாக்குவதால் உயிர்ச் சத்துக்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிந்ரதுவிடுகின்றன. ஆக, சத்துக்களும் சுவையும் அற்ற இவ்வித உணவுகளை நாம் விரும்பி சாப்பிட செயற்கை இரசாயண சுவையூட்டிகளான அஜினோமோட்டோ மற்றும் சமயல் சோடா ஆகியவற்றை சேர்த்து ஆவி பறக்க கொடுக்கிறார்கள்.

உண்மையில் இவ்வித உணவுகளை சூடு ஆறியபின் வாயில் வைக்க சகிகாது. அப்போது தெரியும் அதன் உணமைத் தரம். நண்பர்களே! எந்த ஒரு உணவையும் பக்குவமாய் சமைத்தால் உணவின் பாகுத்தன்மை (Colloidal property) கெடாமல் உயிர்ப்புத் தன்மை காக்கப்பட்டு உயிர்ச் சத்துக்கள் கெடாமல் உணவு தரமாக செரிக்க வழி கிடைக்கும்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Mar 2020 - 21:24

2. மாவுச் சத்து உணவுகள்: நம் உழைப்பு தேவைக்கும் அதிகமான மாவுச் சத்து எடுத்துக்கொள்ளும் போது, நம் உழைப்புக்கு வேண்டிய சக்தியை கொடுத்தது போக மீதம் உள்ள மாவுச் சத்தெல்லாம் கொழுப்பாக மாறிவிடும். செயற்கை இனிப்புகளை உள்ளடக்கிய அல்வா, சாக்ரின், செயற்கை குளிர் பாணங்கள், வெள்ளைச் சர்க்கரை மற்றும் முழுமையல்லாத மாவுச் சத்துக்களை உள்ளடக்கிய மைதா (பரோட்டா) உணவுகள், வெள்ளை இரவை, வெள்ளை சேமியா, நூடுல்ஸ், ஆகியவை அனைத்தும் கெட்ட கொழுப்பாகவே மாறும். இவைகளில் உயிர்ச் சத்துக்களும் (Vitamins) தாதுச் சத்துகளும் (Minerals) நீக்கப்படுவதால் கெட்ட குலுக்கோஸாக மாறி பின் கொட்ட கொழுப்பாக மாறி விடுகின்றன.

3. பச்சை மிளகாய்: பச்சை மிளகாயை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது நம் இரைப்பை அமிலத்தன்மை அடைந்து, கல்லீரலைக் கெடுத்து, கொழுப்பு மற்றும் புரதச் செரிமானத்தைக் கெடுத்துவிடுகிறது. இதன் விளைவாக கெட்ட கொழுப்பு உற்பத்தி அதிகமாகிறது. இன்னொரு புரம் பச்சை மிளகாய் நம் நரம்புகளை நீர்த்துப் போகவைத்து, கெட்ட கொழுப்பு தேங்கும் இடங்களை மூளைக்கு தெரிவிக்க முடியாமல் போகிறது.

4. புளிப்பு உணவுகள்:புளிப்புச்சுவை அதிகம் கொண்ட உணவுகள் கல்லீரலை அதிகம் தூண்டி பித்தத்தை கெடுத்து விடுவதால் கொழுப்புச் செரிமானம் பாதிப்படைகிற்து. குறிப்பாக அசைவ உணவு எடுத்துக் கொள்ளும் போது புளிப்புச் சுவையை குறைவாக எடுத்ததுக் கொள்வது நல்லது. குறிப்பாக மாங்காய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுநல்லது. அசைவம் சுலபமாகச் செரிக்க காரத்தையும் (குறிப்பாக மிளகுக்காரம்) துவர்ப்பையும் சேர்த்துக் கொள்வது பயன் தரும்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Mar 2020 - 21:25

5. மாறுதல் செய்யப்பட்ட கொழுப்பு உணவுகள் (Trans fat) : செயற்கை முறையில் மாற்றம் செய்யப்பட்ட கொழுப்பு உணவுகளான வனஸ்பதி (டால்டா), பனீர் (Paneer), ஐஸ்கிரீம், பதப்படுத்திய (Processed) கொழுப்பு உணவுகள், கொழுப்பு நீக்கிய பதப்படுத்திய பால் ஆகியவை இரைப்பை மற்றும் கல்லீரலைக் கெடுத்து கெட்ட கொழுப்பு உற்பத்தியை அதிகரிக்கிறது.

6. வறுத்த உணவுகள்: நம் உணவை சாலடாக (Salad) சாப்பிட்டால் தரமாக செரித்துவிடும். அதையே இலேசாக வேகவைத்து சாப்பிட்டால் செரித்துவிடும் ஆனால் கொஞ்சம் உயிர்ச் சத்துக்கள் போய்விடும். உணவை அதிகமாக வேகவைத்தால் உயிர்ச் சத்துக்கள் அனைத்தும் அழிந்துவிடும். இதே உணவை எண்ணையில் பொறித்து சாப்பிட்டால் உயிர்ச் சத்துக்கள் அழிவதுமட்டும்ல்லாமல் உணவின் கொழுப்பு அனைத்தும் கெட்ட கொழுப்பாக மாறிவிடும். ஆகவே, நம் உணவை அதிகம் எண்ணையில் பொறிக்காமல் குறைவாக வதக்கி சாப்பிடுவது நல்லது.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Mar 2020 - 21:25

7. உருளைக் கிழங்கு: உருளைக்கிழங்கு குளிர் பிரதேசங்களில் (Temperate region) நெருப்பாக வளரும் ஒரு மாவுச் சத்து உணவாகும். அந்த பிரதேசங்களில் வாழும் மக்கள் இதை மாவுச் சத்து உணவாக மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். அது அவர்களுக்கு அந்தக் குளிர் சூழலில் ஒருவித வெப்பத்தை அளிப்பதால், அது அவர்களுக்கு உகந்த உணவாக இருக்கும். அதுவே, நம்மைப்போல் வெப்ப நாடுகளில் வாழ்பவர்கள், இதை எடுத்துக்கொண்டால் நம் உடலை மேலும் உஷ்ணப்படுத்தி கல்லீரலைக் கெடுத்து, கொழுப்புச் செரிமானத்தையும் கொடுத்துவிடும்.

மேலும், நம்மவர்கள் அரிசி அல்லது கோதுமை உணவில் உள்ள மாவுச் சத்தோடு உருளைக்கிழங்கில் உள்ள மாவுச் சத்தையும் அதிகப்படியாக எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் நம் உழைப்புக்கு அதிகப்படியான மாவுச் சத்தானது அதிகப்படியான கொழுப்பாக மாறி குண்டாக வழிவகுக்கிறது. வெப்பப் பிரதேசங்களில் உருளைக்கிழங்கானது வாய்வை உண்டாக்கும் தன்மை கொண்டது. உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி சமைப்பதாலும், வறுவலாக உண்பதாலும் கண்டிப்பாக வாய்வை உண்டுபன்னுகிறது. நண்பர்க்ளே! உருளைக்கிழங்கின் மேல் உண்டான ஆசையை விட்டால் குண்டாவது குறையும்.

8. நொறுக்குத்தீனிகள்: நொறுக்குத்தீனிகள் மொறுமொறுப்பாக இருப்பதால் நம் வயிற்றில் உள்ள ஈரப்பதத்தை காலி செய்து மண்ணீரல் செரிமானத்தைக் கெடுத்துவிடும். இதனால், கல்லீரலூக்கு கிடைக்க வேண்டிய மண்ணீரல் செரிமான சக்தியானது குறைந்து கொழுப்புச் செரிமானம் பாதிப்படைகிறது. முடிவாக, நொறுக்குத்தீணீகளில் உள்ள கொழுப்புப் பொருள் யாவும் கெட்டக் கொழுப்பாக மாறிவிடுகின்றன.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Mar 2020 - 21:26

9. குளிர் உணவுகள்:ஐஸ்கிரீம், மில்க் ஷேக், குளிர் நீர் (Ice water), குளிர் பதன உணவுகள் மற்றும் குளிர் பாணங்கள் ஆகியன மண்ணீரல் செரிமானத்தைக் கெடுத்து, கல்லீரலுக்கு கிடைக்க வேண்டிய சக்தி குறைவதால் கெட்டகொழுப்பு உருவாக வழியாகிறது.

10. தயிர்: குண்டாக வேண்டாம் என்று நினைப்பவர்கள் தயிரை அறவே விட்டுப்பாருங்கள், நீங்கள் மேலும் குண்டாகமாட்டீர்கள். தயிரானது செரிக்க 18 மணி நேரம் ஆகும். ஆகவே, தயிரை பகலில் மட்டுமே சாப்பிடலாம். இரவில் சாப்பிடும் தயிரானது செரிப்பதற்குள் பெருங்குடலை அடைந்து, செரிமானம் ஆகாததால் மலச்சிக்கலாக தேங்கிவிடுவது நிகழ்கிறது. செரிக்காத தயிர் புளித்து, நுரைத்து, வாய்வாகி, கெட்ட கொழுப்புடன் சேர்ந்து உடலை குண்டாக்கிவிடுகிறது.

11. அதிகத் தண்ணீர்: தாகம் எடுக்காத போது தேவையில்லாமல் எடுத்துக் கொள்ளும் தண்ணீரானது செரிமான நொதிகளை நீர்த்துப்போக வைத்து செரிமானத்தை கெடுத்து கெட்ட கொழுப்பு உற்பத்திக்கு வழி வகுக்கிறது. சாப்பிடும் போது தண்ணீர் அருந்தாமல் இருப்பது நல்லது. அதே போல், சாப்பிடு அரை மணி நேரம் தண்ணீர் அருந்தாமல் இருப்பதும் நல்லது. தாகத்திற்கு மட்டும் தண்ணீரும், பசிக்கு உணவும் எடுத்துக்கொள்ளும் போது கண்டிப்பாக குண்டாக மாட்டோம்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue 3 Mar 2020 - 21:27

12. ஊறுகாய்: உப்பும் புளிப்பும் அதிகம் உள்ள ஊறுகாயானது அதிகப்படியாக நொதிகளைச் சுரக்கச் செய்து செரிமானம் முடியும் முன்னே காலி செய்ய வழிகாண்கிறது. ஊறுகாய் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது அதிக அளவில் உணவினை எடுக்கவைத்து, உழைப்புக்கு மிஞ்சிய உணவை கொழுப்பாக மாற்றிவிடுகிறது.

13. கடலைப் பருப்பு: தோல் நீக்கிய கொண்டைக்கடலையானது வாய்வையே உண்டுபன்னும். இதை பருப்பு வடையாக சாப்பிடும் போது இன்னும் மோசம். வாய்வானது கல்லீரலைக் கெடுத்து கொழுப்புச் செரிமானத்தை பாதித்துவிடும். கடலைப்பருப்புக்கு பதில் வாய்வு உண்டாக்காத பாசிப்பருப்பை தாளாரமாக சாப்பிடலாம்.

14. பிஸ்கெட் மற்றும் சாக்லேட்: பிஸ்கட் மற்றும் சாக்லேட் ஆகிய இரண்டும் மன்னீரல் மற்றும் கல்லீரல் செரிமானத்தைக் கெடுத்து உடற்கழிவு தேக்கத்திற்கு வழிவகுக்கும். பிஸ்கட் வயிற்று மந்தத்தையும், உப்புசத்தையும் தரக்கூடியது. சாக்லேட் பித்தத்தைக் கெடுத்து உடலை வறட்சியாக்கி இரத்தத்தை முறிக்கச் செய்யும். இதனால் கெட்ட கொழுப்புச் சேரும் தன்மையைத் தரும்.

நண்பர்களே! கெட்ட கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து நல்லக் கொழுப்பு உணவுகளைத் தெரிவு செய்து உடல் பருசாமனைத் தவிர்த்து, இலகுவான இரத்தக் குழாய், மென்மையான நரம்பு மற்றும் பலபலப்பான தோல் ஆகியவற்றை பெற்று அரோக்கியமாய் வாழுங்கள்.

தீதும் நன்றும் பிறர் தர வாரா, ஆகையால்,

தீயதை விட்டு நல்லதைத் தேர்வு செய்வோம்.


ஆதாரம் : தன்னம்பிக்கை மாத இதழ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக