புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
87 Posts - 66%
heezulia
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
29 Posts - 22%
mohamed nizamudeen
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
4 Posts - 3%
E KUMARAN
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
1 Post - 1%
Shivanya
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
423 Posts - 76%
heezulia
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
19 Posts - 3%
Dr.S.Soundarapandian
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
8 Posts - 1%
E KUMARAN
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
8 Posts - 1%
prajai
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_m10கனகதாரா !! Short story by Krishnaamma  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனகதாரா !! Short story by Krishnaamma

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2020 6:55 pm

டிவி இல் வந்த அந்த செய்தியைக் கேட்டதும் எனக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது.எல்லோருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அது என்ன செய்தி என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது. அது தான் உத்திரப்பிரதேசத்தில், சோன்பத்ரா என்கிற இடத்தில் ஒரு தங்க மலை (வாவ்) கண்டுபிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த பதினைந்து வருடங்களாக புவி இயல் ஆய்வு மையம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தி உள்ளதாகவும், அது வெட்டி எடுக்கப்படப்போவதாகவும் வந்த செய்தி. ஜாலி ஜாலி ஜாலி

ஆஹா!... என்னடா இது இந்தியாவிற்கு வந்த சோதனை என்று தான் எப்பொழுதும் சொல்வோம். ஆனால் இந்த முறை, ஆஹா....என்னடா இது இந்தியாவிற்கு வந்த வாழ்வு என்று சொல்லி ஆனந்தக் கூத்தாடத் தோன்றியது. மோடி அவர்கள் நாடு நாடாக சென்று நம் நாட்டில் முதலீடு செய்ய சொல்லி கோரிக்கை வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு தங்கமலை கிடைத்தால்??????....

ஆஹா ..இந்தியா கண்டிப்பாக இன்னும் இரண்டொரு வருடங்களில் உலகிலேயே முதன்மையான நாடாக மாபெரும் வல்லரசாக உருவெடுத்துவிடும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. உங்களுக்கெல்லாம் பதினைந்து லக்ஷம் தானே வங்கி கணக்கில் போடுவதாக சொன்னேன், இதோ எடுத்துக்கொள்ளுங்கள் ஆளுக்கு ஒரு கிலோ தங்கம் என்று சொன்னாலும் சொல்வார் நம் அன்பு பிரதமர்.

ஆமாம் முப்பது லக்ஷம் டன்கள் தங்கம் என்றால் சும்மாவா??? யோசிக்கும்போதே நம் நாட்டின் "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" என்று சிவாஜி கணேசன் போல பாடவேண்டும் போலவும், "காசு பணம், துட்டு மணி மணி " என்று ஆடவேண்டும் போலவும் தோன்றுகிறது.

இவ்வாறு நினைத்துப் பார்க்கவும் இயலாத ஒரு பொக்கிஷம் நமக்கு கிடைத்தால் என்னென்ன நடக்கும்?....கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம் வாருங்கள். 'ஒரு இரண்டு மாதத்ததுக்கு பிறகு' என்று படங்களில் போடுவது போல ஒரு இரண்டு மாதங்கள் போகட்டும்.

காலாற ரோட்டில் நடக்கலாம் என்று வீட்டை விட்டு இறங்கினேன்; என்ன ஆச்சர்யம், அவ்வளவு சுத்தமான ரோடு என்னை வரவேற்றது. ரோட்டின் இரண்டு பக்கங்களும் இருந்த கடைகள் அத்தனையும், காய்கறி கடை உள்பட, குளிரூட்டப்பட்ட கடைகளாக மாறி இருந்தன. தெருவில் ஒரு ஹாரன் சத்தம் இல்லை, மக்கள் அனைவரும் பொறுமையாக தங்கள் தங்கள் வாகனங்களை செலுத்திக்கொண்டிருந்தார்கள். நான் சௌதி இல் இருந்தபோது, இது போன்ற காட்சிகளைக் கண்டு ஏங்கி இருக்கிறேன், நம் நாட்டில் இப்படி என்று வரும்?....நம் காலத்தில் அதை பார்ப்போமா என்று.... அதை இன்று மிகவும் சந்தோஷத்துடன் கண்டேன்.

கொஞ்ச தூரத்தில் மெக் டொனல்ஸ் மற்றும் KFC கடைகள் இருந்தன. அவற்றைக் கடக்கும்போது ஏதோ வித்தியாசம் தோன்றியது எனக்கு. என்னதான் அது என்று பார்க்க உள்ளே சென்றேன், அவற்றின் தோற்றமே ரம்யமாய் இருந்தது. 'ஆ அ ப் லோட்டு சலேன்' (Aa ab lot chalen ) என்கிற ஹிந்தி படத்தில் ஐஸ்வர்யா ராய் குட்டி குட்டி யாக உடையணிந்து பேரர் வேலை பார்ப்பங்களே , அதே போல வெள்ளை வெளேர் என்று இருக்கும் அமெரிக்க பெண்மணிகள் உலாத்திக்கொண்டிருந்தார்கள்.

வருபவர்களை வரவேற்று உணவளித்துக்கொண்டிருந்தார்கள். இது என்ன கூத்து என்று அருகே சென்று விசாரித்தேன். அழகான தமிழில் எனக்கு வணக்கம் சொல்லி, என்தேவையைக் கேட்டனர். அசந்து போனேன். என்ன இது எங்க ஆட்கள் தானே உங்கள் நாட்டில் வேலை தேடி ஓடினார்கள், நீங்கள் எப்படி இங்கு அதுவும் எங்கள் மொழி இல் பேசிக்கொண்டு என்று நான் இழுத்ததும், "அதெல்லாம் அந்தக்காலம். இப்பொழுது
EAST YA WEST INDIA IS THE BEST ! என்று சொல்லக்கூடிய காலம் வந்துவிட்டது அம்மா " என்று சொல்லி இன்பமாய் நகைத்தாள்.

இந்த வேலை செய்து கொண்டு உனக்கு சிரிப்பு வேறயா என்று நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டு அவள் மேலும் என்ன சொல்லப்போகிறாள் என்று கேட்க ஆர்வமாய் புன்னகையுடன் காத்திருந்தேன். அவளே தொடர்ந்தாள். இந்தியாவில் தங்க மலை கிடைத்ததும் எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது. உலகம் முழுவதிலிருந்தும் இந்தியாவை விட்டு சுகபோக வாழ்வுக்காக வெளியேறிய அனைவரும் மீண்டும் சீக்கிரம் இந்தியா வர துடித்தனர். ஆனால் அத்தனை பேர் உடனடியாக இங்குவந்தால் நாடு தாங்காது என்று நினைத்த உங்கள் பிரதமர் ஒரே ஒரு உத்தரவால் அதை தடை செய்தார். ஆமாம், "நாங்கள் இந்தியாவின் உள்கட்டமைப்புகளை சரி செய்துகொள்ளவும், எங்களை நிலை நிறுத்திக்கொள்ளவும் கொஞ்ச கால அவகாசம் தேவைப்படுகிறது, அதுவரை நீங்கள் இங்கு வந்து போகலாமே தவிர, இங்கேயே திரும்ப வருவது சாத்தியம் இல்லை" என்று சொல்லவிட்டார். வேண்டுமானால் அமெரிக்கர்களுக்கு இங்கு வேலை வாய்ப்பு தருகிறோம் என்று சொன்னார். அதனால் தான், நாங்கள் நிறைய பேர் "கிராஷ் கோர்ஸ் "
இல் சேர்ந்து, உங்கள் மொழிகளை கற்றுக்கொண்டு இங்கு வேலைக்கு வந்தோம்.

க்ஷண நேரத்தில் டாலரின் மதிப்பு இப்படி விழுந்து விடும் என்று நாங்கள் , அமெரிக்கர்கள் கனவிலும் நினைத்ததில்லை.....ஹூம்....70 ரூபாய்கள் கொடுத்து ஒரு டாலர் வாங்கியது போக, இப்பொழுது உங்கள் இந்திய ரூபாய் ஒன்று வாங்கவேண்டுமானால் நாங்கள் 100 டாலர்கள் தரவேண்டி உள்ளது. உலகத்தில் சக்தி வாய்ந்த பணமாக இந்திய ரூபாய் மாறிவிட்டது.... அதனால் விழுந்த அடியால் தான் உங்கள் நாட்டவர்கள் அனைவருக்கு அங்கு இருப்பது மிகவும் கஷ்டம் என்று நினைத்து இங்கு வருவதாக முடிவெடுத்தார்கள். ஆனால், அது முடியவில்லை. எனவே தான் நாங்கள் வந்தோம். இன்னும் நீங்கள் போகப் போக பார்ப்பீர்கள் நாங்கள் எங்கெல்லாம் வேலைக்கு ஒப்புக்கொள்வோம் என்று " என பெருமூச்சுடன் சொன்னாள்.

கேட்க கேட்க எனக்கு மிகவும் ஆனந்தமாக இருந்தது. சரி சரி நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, வந்ததற்காக ஒரு French Fries மாத்திரம் வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன்.

அடுத்ததே கொஞ்ச தூரத்தில் இருந்த GRT மற்றும் கஸானா நகை கடைகள் எப்படி இந்த தங்க மலையை சமாளித்தன , அக்ஷய திரிதியை வேறு வருகிறதே ...வியாபாரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று போனேன். கடைக்கு பத்தடி இருக்கும்பொழுதே இரண்டு ஆட்கள் வாங்கம்மா வாங்க எங்க கடைக்கு வாங்க என்று வாய் எல்லாம் பல்லாக அழைத்தார்கள். அவர்களை பார்க்கும்பொழுது எனக்கு, மதிய வேளைகளில் உணவுக்காக ஹோட்டலின் முன்பு நிற்கும் ஆட்கள் தான் நினைவுக்கு வந்தனர்.

அடாடா.... இவர்களின் நிலைமை இப்படியானதே என்று நினைத்துக்கொண்டே கதையை நெருங்கினேன். பார்த்தால், கடை மேனேஜரும் மற்றும் ஒருவரும் ஒரு நோட்டுப் புத்தகத்துடன் ஒரு சின்ன குடையை நிறுத்தி வைத்துக்கொண்டு இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து இருந்தார்கள் .....கடைக்கு வெளியே...மனம் காய்கறி கடையையும் இதையும் ஒப்பிட்டுப்பார்த்தது மகிழ்ந்தது.

என்னைப் பார்த்ததும் அந்த மானேஜர் படு பாவியமாய், " வாங்கம்மா, என்ன நகை வேண்டும் , உள்ளே போய் பொறுமையாய் பார்க்கலாம், வாங்க" என்றார். நான் உடனே, " இல்ல இந்த நேரத்தில் கூட்டம் அதிகம் இருக்குமே" என்று சொல்லிக்கொண்டே கடைக்குள் நோட்டம் விட்டேன்........அதிர்ந்து போனேன்...கடைக்குள் ஒருவர் கூட இல்லை, சிர்ப்பந்திகள் கூட குறைவாகத் தான் இருந்தார்கள்.

அதற்கு அவர், அழாத குறையாக "என்னது கூட்டமா?.... என்னமா இது ஒன்னும் தெரியாதது போல பேசுகிறீர்கள், கூட்டம் வந்து எத்தனை மாசம் ஆச்சு....ஹூம்... அது ஒரு காலம்..என்று இரண்டொரு வினாடிகள் பழைய நினைவுகளில் முழ்கினார்...உடனே சுதாதரித்துக் கொண்டு, அதெல்லாம் இப்போ எதற்கம்மா, வாங்க உங்களுக்கு என்ன வேண்டும் என்று பாருங்கள், நிறைய OFFER இருக்கு என்றார்.

அவர் சொன்ன OFFER கள்: நீங்கள் எத்தனை கிராம் நகை வாங்குகிறீர்களா, அத்தனை கிராம் நகை இலவசம். அதாவது BUY ONE GET ONE FREE போல. என்றார். ஆனால் குறைந்த பக்ஷம் நீங்கள் 2500 க்காவது வாங்க வேண்டும் என்றார்.

என்ன 2500 க்கா? என்றேன்....மேலும் கவலையுடன் நான் எப்படி சார் ஒரே டிசைனில் இரண்டு நகை வைத்துக்கொள்வது என்று கேட்டேன். அவர் அதற்கு , "ஏம்மா எனக்கு பெண்களைத் தெரியாதா?... அதே எடைக்கு வேறு நகைகள் எடுத்துக் கொள்ளுங்கள் " என்றார்.

"2500 க்கு நீங்கள் வாங்கினால் கணக்குப்படி 5000 த்துக்கு வியாபாரம் ஆனது போல் தானே, அதனால் எங்களுக்கு நல்லபடி இந்த மாத சம்பளம் வந்துவிடும்" என்றார்

ம்ம்.. சரி அடுத்த OFFER என்ன என்று கேட்டேன். அதற்கு அவர், " நீங்கள் ஒருவேளை சின்ன சின்ன ஐட்டம்கள் அதாவது தோடு மூக்குத்தி போல வாங்கினால் BUY FOUR GET ONE FREE என்பது போல எடுத்துக் கொள்ளலாம். வாருங்கள்" என்று சொன்னார். இதுவே வெள்ளிக்கும் பொருந்தும் என்றும் சொன்னார்.

எனக்கு ரொம்ப ஜாலியாக இருந்தது. எத்தனை எத்தனை மக்கள் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்கள் இந்த பவுனை வாங்க, இப்பொழுது வந்தீர்களா வழிக்கு என்று மனதில் தோன்றியது. அதற்குள் கவலைப்பட்ட அந்த மேனேஜர், " அம்மா, உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் OFFER தருகிறேன், அதாவது, நீங்கள் வாங்கும் அளவுக்கான தங்கத்தை நான் தங்க பிஸ்கெட்டாக வேண்டுமானாலும் தருகிறேன் , அல்லது காயின் போல வேண்டும் என்றாலும் தருகிறேன். நீங்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும், மீண்டும் வந்து நகை வாங்கிக்கொள்ளலாம் .....நோ கூலி, நோ சேதாரம் ...ஹி...ஹி...உள்ளே போகலாமா , வாங்க" என்று சொன்னார்.

நான் மேலும் தயங்குவதைப் பார்த்து, மணியைப் பார்த்துவிட்டு, பாருங்கம்மா இன்னும் போணி கூட ஆகலை, இந்தவாராமும் இப்படி ஆச்சுதுன்னா, என்னை வேலையை விட்டே எடுத்துடுவாங்க...பிள்ளைக்கு குட்டிக் காரணமா " என்று ஆரம்பித்துவிட்டார்....

எனக்கு சங்கடமாய் இருந்தாலும், கஸானாவில் இருந்து ஒரு ஆள் எங்களையே பார்த்து க்கொண்டிருந்தார், என்னைப்பார்த்து சிநேகமாய் சிரித்தது போல இருந்தது எனக்கு. எனவே, இவரிடம் நான் இன்னும் ரெண்டு கடை பார்த்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு தப்பித்து அங்கு போனேன்.

" இப்பவே இப்படி இருக்கே இன்னும் அக்ஷய திரியைக்கு என்ன ஆகுமோ?..இதுவரை ஒருவர் கூட நகை வாங்க புக் பண்ணலை" என்று புலம்புவது காதில் விழுந்தது.

அவருக்கு மிகவும் சந்தோஷம், நான் இங்கிருந்து அங்கு வருவதை பார்த்ததும். அவரும் இவரைப்போலவே வாய் எல்லாம் பல்லாக, " ஹி ..ஹி..ஹி... வாங்க வாங்க , இங்கு அந்த கடையை விட கவர்ச்சியான OFFER கள் இருக்கும் மா, உங்களுக்கு மிகவும் பிடிக்கும் " என்றார்.

அங்கு என்ன OFFER என்றால், இன்று ஒருமுறை நகை வாங்கினால் அதில் பாதி பணத்தை தந்தால் போதும், ஆனால் அடுத்த 100 நாட்களுக்குள் நீங்கள் அதே அளவுள்ள நகைகளை மீண்டும் இரண்டு முறை வாங்க வேண்டும்... ம்ம்... நீங்கள் நினைப்பது சரிதான், பிட்ஸாவுக்கு தரும் அதே OFFER தான் இது...."என்ன கொடுமை இது சரவணா?" என்று நினைத்தது என் மனது. அவரே தொடர்ந்தார், ஒருவேளை தங்கத்தின் விலை ஏறினால் அல்லது குறைந்தால்,....கவலைப்படாதீர்கள் கண்டிப்பாக ஏறாது, குறைந்தால் நாங்கள் அந்த குறைந்த விலைக்கே எல்லா நகையையும் தந்துவிடுவோம்.... கடைசி முறை நீங்கள் வரும்பொழுது அட்ஜஸ்ட் செய்து பணம் வாங்கிக்கொள்வோம் " . வாங்க உள்ளே போகலாம் என்றார் மறுபடியும்.

நான் தயங்குவதைப் பார்த்து, என்ன ஆச்சு மேடம், உங்களுக்காக மற்றும் ஒரு OFFER , நீங்கள் எந்த கல் வைத்த நகை வாங்கினாலும், கல் வெயிட்டை கழித்துவிட்டே எடை போட்டுத்தருகிறோம். வெள்ளிக்கும் இதே தான் வாருங்கள் என்றார்.

நான் யோசித்துப் பார்த்தேன், இவர்கள் சொல்லும் பணத்திற்கு எத்தனை கிராம் நகை வாங்குவது?...கிலோ கணக்கில் அல்லவா வாங்க வேண்டும்....அதனால், நீங்கள் இன்னும் புதிதாக ஐட்டம்கள் சேர்த்தால் மட்டுமே உங்களுக்கு அக்ஷய திரிதியைக்கு வியாபாரம் ஆகும். எனவே, அந்தக்காலம் போல தங்கத்தில், சாப்பாட்டு தட்டு, தங்க விளக்கு, தங்கக்குடம், அழகுமிகு டப்பாக்கள் என பலதும் செய்துவையுங்கள் என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன்.

அதே போல வெள்ளி யிலும் மகாராஜாக்கள் காலம் போல, நாற்காலி, மேசை, அலங்கார மேசை, மேல் தொங்கும் விளக்குகள் என்று செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

உற்சாக மிகுதியால் ஏதோ சத்தமாக பேசி விட்டேன் போல் இருக்கிறது, "என்ன ஆச்சு, சுமதி, யாரிடம் பேசுகிறாய் ? " என்று கேட்டுக்கொண்டு என்கணவர் வந்துவிட்டார். நீ எதைப்பார்த்து சிரிக்க்கிறாய்?...தூங்குகிறாய் என்றல்லவா நினைத்தேன்? " என்றார். பிறகுதான் தெரிந்தது நான் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி இருக்கிறேன் என்று. அந்த செய்தி இந்த தாக்கம் எனக்கு இப்படி ஒரு கனவு வந்திருக்கிறது. என் கனவை சொன்னதும், "என்றாலும் ரொம்பத்தான் ஆசை உனக்கு" என்று சிரித்துக்கொண்டே சொன்னார் இவர். புன்னகை

ஷேர் மார்க்கெட் பற்றியோ ரியல் எஸ்டேட் பற்றியோ எனக்கு அவ்வளவாகத் தெரியாததால் நீங்க யாரவது யோசித்து அல்லது நீங்கள் உறங்கும்போது கனவாக வந்ததை இங்கே வடிக்கலாம் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Feb 22, 2020 7:08 pm

நல்ல கற்பனைதான்
மதியத்தில் சாப்பிட்டு விட்டு படுத்தால் இப்பிடித்தான்.அதுவும் கையில் புத்தகம் பேப்பர் இருந்தால் கேட்கவே வேண்டாம்.
இன்னும் கொஞ்சம் தூங்கி இருந்து அப்பிடியே நல்லி /குமரன் சில்க்ஸ் போயிருந்தால்
உண்மையான தங்க ஜரிகையில் புடவைகள் டிஷ்யூ புடவைகள் கிடைத்திருக்கும்.
அதற்குள் அவசரப்பட்டு எழுப்பிவிட்டாரே கணவர்.
ஆண்களே எப்போதும் இப்பிடித்தான். சுத்த மோசம்.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2020 7:31 pm

T.N.Balasubramanian wrote:நல்ல கற்பனைதான்
மதியத்தில் சாப்பிட்டு விட்டு படுத்தால் இப்பிடித்தான்.அதுவும் கையில் புத்தகம் பேப்பர் இருந்தால் கேட்கவே வேண்டாம்.
இன்னும் கொஞ்சம் தூங்கி இருந்து அப்பிடியே நல்லி /குமரன் சில்க்ஸ் போயிருந்தால்
உண்மையான தங்க ஜரிகையில் புடவைகள் டிஷ்யூ புடவைகள் கிடைத்திருக்கும்.
அதற்குள் அவசரப்பட்டு எழுப்பிவிட்டாரே கணவர்.
ஆண்களே எப்போதும் இப்பிடித்தான். சுத்த மோசம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1313612

ஹா ...ஹா...ஹா.... மிக்க நன்றி ஐயா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 26, 2020 10:19 pm

இத்தனைபேர் படித்துளீர்கள்...............ஒரு வரி பதில் போட மனம் இல்லியா????? சோகம்........... பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 27, 2020 7:24 am

நல்ல கற்பனை ... கனகதாரா !! Short story by Krishnaamma  3838410834 கனகதாரா !! Short story by Krishnaamma  3838410834 கனகதாரா !! Short story by Krishnaamma  3838410834
-
ஒரு நகைச்சுவை
---------------
ஒரு பிச்சைக்காரன் மதியம் சாப்பிட்டு விட்டு பாழைடைந்த
வீட்டு திண்ணையில் உறங்கினான்.
-
அவனுக்கும் கனவு வந்தது.
-
ஐயா தர்மம் போடுங்க என்று கேட்டால் ஒரு ரூபாய்
அல்லது இரண்டு ரூபாய் போடுவார்கள். ஆனால்
விலைவாசி ஏறி விட்டதால், இப்போதெல்லாம்
பிச்சை எடுப்பவர் ஒரு டீ குடிக்க காசு கொடுங்கன்னு
கேட்பது உண்டு.
-
டீயின் விலை ரூ 10 அல்லது ரூ12 என்று ஆகி விட்ட நிலையில்
அதற்கு குறைந்த தொகையை தர்மம் போட்டால் வாங்க
மாட்டார் போலிருக்கிறது என்று சிலர் தயங்குவதும் உண்டு...!!
-
சரி, அவனுக்கு என்ன கனவு வந்தது?
-
தர்மம் செய்ய கையில் பணத்துடன் பலரும் க்யூவில் நிற்கிறார்கள்.
அவசரமாக வந்த ஒருவர் க்யூவின் இடையில் புக பார்க்கிறார்.
பிச்சைக்காரனுக்கு கோவம் வந்தது...

இடையில் புக முயன்றவரைப் பார்த்து, ‘க்யூவின் கடைசியில்
நின்று வரிசையாக வா’ எனக் கூறினான்...!!
-
ம்...ம்...கனவு கலைந்து விட்டது..!?

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 28, 2020 10:56 am

எனக்கு இதுபோல பெரிய கனவு எல்லாம் வந்தது இல்ல

நீங்கள் கூறிய மலையின் பத்திரம் என் பெயரில் இருப்பது போல ஒரு சிறிய கனவு வந்தது

avatar
Guest
Guest

PostGuest Fri Feb 28, 2020 4:56 pm

இனிமேல் தலைப்பை படிக்காமல் உள்ளே சென்று செய்தியை படிக்கவும்.கனவு வராது.
இப்போதெல்லாம் ட்ரெண்ட், செய்திக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லாமல் ஊடகங்களில் பதிவிடுவது.

கனகதாரா !! Short story by Krishnaamma  3838410834 கதை
கனகதாரா !! Short story by Krishnaamma  3838410834 கனவு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 28, 2020 7:41 pm

SK wrote:எனக்கு இதுபோல பெரிய கனவு எல்லாம் வந்தது இல்ல

நீங்கள் கூறிய மலையின் பத்திரம் என் பெயரில் இருப்பது போல ஒரு சிறிய கனவு வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1314022

பத்திரம் பத்திரம் .......காணாமல் போய் விட போகிறது, SK .
இந்த தங்க மலை ரகசியம் என்னவென்றால்
காணாமல் போனவர்களும் தானாக வந்துவிடுவார்கள்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 29, 2020 11:32 am

ayyasamy ram wrote:நல்ல கற்பனை ... கனகதாரா !! Short story by Krishnaamma  3838410834  கனகதாரா !! Short story by Krishnaamma  3838410834  கனகதாரா !! Short story by Krishnaamma  3838410834
-
ஒரு நகைச்சுவை
---------------
ஒரு பிச்சைக்காரன் மதியம் சாப்பிட்டு விட்டு பாழைடைந்த
வீட்டு திண்ணையில் உறங்கினான்.
-
அவனுக்கும் கனவு வந்தது.
-
ஐயா தர்மம் போடுங்க என்று கேட்டால் ஒரு ரூபாய்
அல்லது இரண்டு ரூபாய் போடுவார்கள். ஆனால்
விலைவாசி ஏறி விட்டதால், இப்போதெல்லாம்
பிச்சை எடுப்பவர் ஒரு டீ குடிக்க காசு கொடுங்கன்னு
கேட்பது உண்டு.
-
டீயின் விலை ரூ 10 அல்லது ரூ12 என்று ஆகி விட்ட நிலையில்
அதற்கு குறைந்த தொகையை தர்மம் போட்டால் வாங்க
மாட்டார் போலிருக்கிறது என்று சிலர் தயங்குவதும் உண்டு...!!
-
சரி, அவனுக்கு என்ன கனவு வந்தது?
-
தர்மம் செய்ய கையில் பணத்துடன் பலரும் க்யூவில் நிற்கிறார்கள்.
அவசரமாக வந்த ஒருவர் க்யூவின் இடையில் புக பார்க்கிறார்.
பிச்சைக்காரனுக்கு கோவம் வந்தது...

இடையில் புக முயன்றவரைப் பார்த்து, ‘க்யூவின் கடைசியில்
நின்று வரிசையாக வா’ எனக் கூறினான்...!!
-
ம்...ம்...கனவு கலைந்து விட்டது..!?

மேற்கோள் செய்த பதிவு: 1313949

ஹா...ஹா..ஹா... என்ன ஓர் ஒழுக்கம் அவனுக்கு.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...ஐ லைக் தட் ! அன்பு மலர் ..........வி. பொ.பா. அண்ணா ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 29, 2020 11:33 am

SK wrote:எனக்கு இதுபோல பெரிய கனவு எல்லாம் வந்தது இல்ல

நீங்கள் கூறிய மலையின் பத்திரம் என் பெயரில் இருப்பது போல ஒரு சிறிய கனவு வந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1314022

செந்தில், பத்திரம் , பத்திரம் ..... ஜாலி ஜாலி ஜாலி ........வி. பொ.பா. செந்தில் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக