ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

2 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma Mon Feb 24, 2020 9:36 pm

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் !

இதெல்லாம் ஒருகாலத்தில் வடஇந்திய  உணவுகளாக பார்க்கப்பட்டன. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் நிறைய வீடுகளில் இரவு உணவு சப்பாத்தி என்று ஆகிவிட்டது. அதில் பல்வேறு வகைகளை இங்கு பார்க்கலாம். அத்துடன் அனைவருக்கும் பிடித்தமான, all  time  hit  என்று சொல்லக்கூடிய பூரி  வகைகள் மற்றும் பரோட்டா வகைகளையும் இங்கு பார்க்கலாம் புன்னகை

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! OXgCnH9eQDicDQvJV7Iw+20130616_174332 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 8KIyh7dGQiGBElmtmsw8+IMG-20150910-WA0003

Last edited by krishnaamma on Thu Mar 10, 2022 10:21 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma Mon Feb 24, 2020 9:41 pm

சாதாரண சப்பாத்தி !

தேவையானவை :

1 கப் கோதுமை மாவு
2 கரண்டி எண்ணெய் அல்லது நெய்
உப்பு

செய்முறை:

ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
சப்பாத்தியாக இடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
இருபுறமும் எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி சப்பாத்திகள் செய்யுங்கள்.
மிருதுவான சப்பாத்திகள் தயார்.
ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty மிகவும் மிருதுவான சப்பாத்தி !

Post by krishnaamma Mon Feb 24, 2020 9:41 pm

மிகவும் மிருதுவான சப்பாத்தி !

தேவையானவை :

1 கப் கோதுமை மாவு
1 கரண்டி நல்லெண்ணெய்
2 கரண்டி நெய்
உப்பு

செய்முறை:

ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
சப்பாத்தியாக இடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
ஒரு துணியால் அழுத்திவிடவும்.
அது 'புஸு புஸு' என்று உப்பி வரும்.
இருபுறமும் திருப்பிப்போடவும்.
அதை வெளியே எடுத்து ஒரு தட்டில் போட்டு, இரண்டுபக்கமும் நெய் தடவவும்.
அவ்வளவுதான், மிருதுவான சப்பாத்திகள் தயார்.
ஏதாவது ஒரு சைடிஷ் செய்து , அத்துடன் சப்பாத்தியை பரிமாறவும்.

Last edited by krishnaamma on Sat Mar 07, 2020 8:12 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty சுக்கா ரொட்டி !

Post by krishnaamma Mon Feb 24, 2020 9:42 pm

சுக்கா ரொட்டி !

தேவையானவை :

1 கப் கோதுமை மாவு
2 கரண்டி நல்லெண்ணெய்

செய்முறை:
ஒரு பேசினில் கோதுமை மாவு போடவும்.
உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.
நன்றாக கலக்கவும்.
தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்.
அரை மணி நேரம் அப்படியே வைத்துவிடவும்.
பிறகு சிறிது சிறிதாக உருட்டிக்கொள்ளவும்.
சப்பாத்தியாக இடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை போடவும்.
கல் சூடானதும், ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் போடவும்.
சப்பாத்தியை தவாவில் வைத்த பிறகு, 2-3 முறை திரும்பவும்.
இப்போது அதை நேரடியாக நெருப்பில் காட்டவும்.
அப்பளம் சுடுவது போல இரண்டுபக்கமும் சுட்டு எடுக்கவும்.
கருகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
அதை நெருப்பிலிருந்து அகற்றி சைட் டிஷ் உடன் உடனே பரிமாறவும்.
சப்பாத்தி சூடாக இருக்கும்போது இதை நீங்கள் சாப்பிட வேண்டும்.
இதில் எண்ணெய் இல்லை; என்றாலும் இது 'மெத் மெத்' என்று இருக்கும்.
எண்ணெய் இல்லதாதால் , வழக்கம் போல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Feb 25, 2020 10:51 am

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 3838410834 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 103459460 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma Wed Feb 26, 2020 8:33 pm

நன்றி ஐயா, வெகுநாட்களாக இந்தப்பக்கம் நான் வரவில்லை...........இனி கொஞ்சம் கொஞ்சமாக போடவேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty வெந்தயக் கீரை சப்பாத்தி / மேத்தி பரோட்டா

Post by krishnaamma Thu Mar 05, 2020 9:20 am

வெந்தயக் கீரை சப்பாத்தி / மேத்தி பரோட்டா

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் பொடி - அரை டீஸ்பூன்,
வெந்தயக் கீரை - 2 கட்டு ( நன்கு வளர்ந்த வெந்தயக் கீரைதான் இதற்கு வேண்டும் )
வறட்டு மிளகாய் பொடி - ஒரு டீஸ்பூன், (தேவையானால் )
பச்சை மிளகாய் 8 - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

வெந்தயக் கீரையை இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி எல்லாம் சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
இப்பொழுது ஆய்ந்த கீரையைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் பவுன் நிறமாக எடுங்கள்.
சுவையான மேத்தி பரோட்டா தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள கெட்டித்தயிர் மற்றும் ஏதாவது ஊறுகாய் போதும்.

குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by krishnaamma Thu Mar 05, 2020 9:21 am

பழ.முத்துராமலிங்கம் wrote:சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 3838410834 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 103459460 சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1313812

நன்றி ஐயா, என்னுடைய அந்த திரி பார்த்திர்களா ஐயா?...உங்களுக்காகவே போட்டேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty கொத்துமல்லி சப்பாத்தி !

Post by krishnaamma Thu Mar 05, 2020 9:26 am

கொத்துமல்லி சப்பாத்தி !

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,
கொத்துமல்லி - 2 கட்டு
பச்சை மிளகாய் 8 - 10
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

கொத்துமல்லியை  இலைகளாக ஆய்ந்து கொண்டு, தண்ணீரில் அலசி, வடியவிடுங்கள்.
தனியே ஒரு கிண்ணத்தில், உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
மற்றும் ஒரு பேசினில், ஒரு டீஸ்பூன் நெய் + ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, கோதுமை மாவு சேர்த்து, தண்ணீர் விடாமல் நன்கு கலக்கவும்.
இப்பொழுது ஆய்ந்த கொத்துமல்லியைப் போட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
உப்பு மிளகாய் கலவையையும் சேர்த்து நன்கு பிசையவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்.
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, பச்சை பசேல் என்கிற கொத்துமல்லி சப்பாத்தி தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.

குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty காலிஃப்ளவர் பரோட்டா !

Post by krishnaamma Thu Mar 05, 2020 5:11 pm

காலிஃப்ளவர் பரோட்டா !

உலகத்திலேயே மிகவும் சுவையான பரோட்டா ஒன்று உண்டு என்றால் அது இது தான் என்பது என் அபிப்பிராயம். அத்தனை நன்றாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் பரோட்டா புன்னகை

தேவையானவை:

கோதுமை மாவு - 2 கப்,
பொடியாக துருவிய காலிஃப்ளவர் - 2 கப்
பச்சை மிளகாய் 8 - 10
கரம் மசாலா 1  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை நன்கு கசக்கிப் பிசையவும்.
அதில் இப்பொழுது பொடியாக துருவிய காலிஃப்ளவர் மற்றும் கரம் மசாலா போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
இப்பொழுது , கொஞ்சம் கொஞ்சமாக கோதுமை மாவை போட்டு கலக்கவும்.
தண்ணீர் துளியும் விடவேண்டாம்.
பூவில் இருக்கும் ஈரமே போதும்.
அநேகமாய் இரண்டு கப் மாவும் கலக்க வரும்.
ஒருவேளை, எல்லா மாவும் போட்டு பின் தண்ணீர் தேவையானால் கொஞ்சமே கொஞ்சம் விட்டுக்கொள்ளுங்கள். புன்னகை
மாவு நன்கு கெட்டியாக, சப்பாத்தி மாவுபோல் இருக்க வேண்டும்.
அப்படியே ஒரு பத்து நிமிடங்கள் மூடி வைத்திருங்கள்.
பிறகு பிசைந்த மாவை சிறிய சப்பாத்திகளாக இட்டு , தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய்-நெய் கலவையை விட்டு இரண்டு பக்கங்களும் கருகாமல் எடுங்கள்.
சுவையான, அருமையான காலிஃப்ளவர் பரோட்டா  தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே வேண்டாம், தேவையானால் கெட்டித்தயிர் போதும்.

குறிப்பு: எண்ணெய்-நெய் கலவை - தோசை மற்றும் சப்பாத்தி செய்வதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் கால் கப் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். அருமையாக, மணமாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி ! Empty Re: சப்பாத்தி, பூரி பரோட்டா வகைகள் ! - சௌதி 'கர கர' சப்பாத்தி !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum