ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

Go down

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Empty டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

Post by ayyasamy ram Sun Feb 02, 2020 8:34 am

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு _110707272_51csls7wh-l._sx331_bo1204203200_

மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து
Sebastian & Sons என்ற பெயரில் பிரபல கர்நாடக இசைக்
கலைஞர் டிஎம் கிருஷ்ணா எழுதியுள்ள புத்தகத்தின் வெளியீட்டு
விழாவிற்கு அளித்த அனுமதியை கலாக்ஷேத்ரா திரும்பப்
பெற்றுள்ளது.

புத்தகத்தில் சர்ச்சைக்குரிய பகுதிகள் இருப்பதால் இந்த முடிவு
எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மிருதங்கம் செய்யும் கலைஞர்கள் குறித்து டி.எம். கிருஷ்ணா
Sebastian & Sons என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எ
ழுதியிருக்கிறார். இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்யும்
கலைஞர்களுக்கும் மிருதங்கம் வாசிக்கும் கலைஞர்களுக்கும்
இடையிலான சங்கடமான உறவு குறித்து விரிவாகப் பேசுகிறது.

மிருதங்கம் பெரும்பாலும் மாட்டுத் தோலில் செய்யப்படும்
நிலையில், மிருதங்கம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் மாட்டைப்
புனிதமாகக் கருதுவதால், இந்த உறவு மிகச் சிக்கலான
ஒன்றாகவும் இருக்கிறது.

செபாஸ்டியன் என்பவரை முன்னிறுத்தி, மிருதங்கம் செய்யும்
கலை, மிருதங்கம் செய்பவருக்கும் வாசிப்பவருக்கும்
இடையிலான உறவு, வாசிப்பவர் கொண்டாடப்படும் நிலையில்,
செய்பவர் ஒடுக்கப்பட்டவராக, அங்கீகாரமற்றவராக இருப்பது
ஆகியவை குறித்து இந்த புத்தகத்தை எழுதியிருந்தார்
டி.எம். கிருஷ்ணா.

இந்தப் புத்தகம் வரும் பிப்ரவரி 2ஆம் தேதியன்று
சென்னையிலுள்ள கலாக்ஷேத்ரா ஃபவுண்டேஷனில் உள்ள
ருக்மிணி அரங்கத்தில் வெளியிடப்படுவதாக இருந்தது.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வரலாற்றாசிரியர்
ராஜ் மோகன் காந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்
தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பதாக
இருந்தது.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Empty Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

Post by ayyasamy ram Sun Feb 02, 2020 8:35 am

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு _110707269_5f4c386d-61c3-4a22-b9c1-42fa1b93a593
இந்த நிலையில், இந்தப் புத்தகம் குறித்து இன்று ஆங்கில
நாளிதழ் ஒன்றில் அறிமுகக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்
கிருஷ்ணா. அதில் புத்தகம் மாட்டுத் தோலால் செய்யப்படுவது
குறித்தும், பல்வேறு இசைக் கலைஞர்கள் அதனால் எதிர்
கொண்ட மன ரீதியான சிக்கல்கள் குறித்தும்
விவரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தப் புத்தகத்தை வெளியிட
கொடுக்கப்பட்டிருந்த அனுமதியை கலாக்ஷேத்ரா ரத்து
செய்துள்ளது. இது தொடர்பாக, டி.எம். கிருஷ்ணாவுக்கு
அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "இது ஒரு அரசு நிறுவனமாக
இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக
ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே
அனுமதிக்க முடியாது.


இன்றைய செய்தித் தாள்களில் வெளிவந்த புத்தக
மதிப்புரைகளில் சில பகுதிகளைப் பார்த்தால், இந்தப் புத்தகம்
சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தொட்டுச் செல்வது தெரிகிறது.

மேலும் நிறைய அரசியல் கருத்துகளும் உள்ளன.
புத்தக வெளியீட்டு விழாவிற்காக அரங்கத்தை அளிக்க ஒப்புக்
கொண்டபோது, இந்த விவகாரத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள்
குறித்து எங்களுக்குத் தெரியாது.

ஆகையால் புத்தக வெளியீட்டு விழாவிற்காக எங்கள்
அரங்கத்தை பயன்படுத்திக்கொள்ள அளிக்கப்பட்ட
அனுமதியை ரத்துசெய்கிறோம்" எனக் கூறப்பட்டிருந்தது.

"காலையில் அவர்களுக்கு போன் செய்யச் சொன்னதாகச்
சொன்னார்கள். ஆனால், அதற்குள் மின்னஞ்சலில் அனுமதி ரத்து
குறித்த கடிதம் வந்துவிட்டது.

முடிவெடுத்துவிட்ட நிலையில், அவர்களிடம் நான் விவாதிக்க
விரும்பவில்லை" என பிபிசியிடம் கூறினார் டி.எம். கிருஷ்ணா.

"இந்த நிகழ்வு என்பது மிருதங்கம் செய்பவர்களைக் கொண்டாடும்
நிகழ்வு. இதற்கு அனுமதி மறுப்பது வருத்தம் அளிக்கிறது.
இந்தப் புத்தகம் மிருதங்கம் செய்பவர்களின் நிதர்சனம் குறித்துப்
பேசுகிறது.

நீங்கள் நாதம், நாதம் என்று சொல்கிறீர்களே..
அந்த நாதம் மாட்டைக் கொன்று அதன் தோலை எடுத்து
மிருதங்கம் செய்தால்தான் கிடைக்கும். இந்த வேலையைச்
செய்பவர்கள் பற்றி உங்கள் கருத்து என்ன?" எனக் கேள்வி
எழுப்புகிறார் டி.எம். கிருஷ்ணா.

தற்போது புத்தக வெளியீட்டு விழா நிகழ்வு ஏசியன் காலேஜ்
ஆஃப் ஜர்னலிசத்தில் உள்ள அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.

"இந்தப் புத்தகத்திற்காக நான் நான்கு வருடங்கள் வேலை
பார்த்தேன். மிருதங்கம் செய்வது மிகவும் கடினமான காரியம்.
மாட்டைக் கொல்லலாமா என்று நீங்கள் பேசும்போது,
மாட்டைக் கொன்றால்தான் மிருதங்கம் கிடைக்கும் என்ற
நிதர்சனத்திற்கு என்ன பதில்?

இனிமேல் மிருதங்கமே வேண்டாம் என முடிவெடுத்துவிடப்
போகிறோமா? மிருதங்கம் செய்யும் கலைஞர்களை
கௌரவப்படுத்தும் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டது
மிகுந்த வருத்தமளிக்கிறது" என்றார் அவர்.

இந்த விவகாரம் தொடர்பாக கலாக்ஷேத்ராவின் கருத்தை
அறிய மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
-
----------------------------
பிபிசி-தமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Empty Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

Post by ayyasamy ram Sun Feb 02, 2020 8:40 am



கலாஷேத்ராவின் இந்த ‘திடீர்’ அனுமதி ரத்திற்கும்,
அதற்கான விளக்க அறிக்கைக்கும் எதிர்ப்புகள்
கிளம்பியுள்ளன.


இது குறித்து மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்,
“கலாஷேத்ராவின் முக்கியப் பணி கலையையும்,
கலாச்சாரத்தையும் ஊக்கப்படுத்துவதே ஆகும்.

இந்த புத்தகம் மிருதங்கம் செய்யும் தலித் மக்களின்
வாழ்க்கையைப் பற்றியும் ஒரு செவ்வியல் கலைக்கு
அவர்கள் அளிக்கும் பங்களிப்பு பற்றியும் பேசுகிறது.

டிஎம் கிருஷ்ணா அவர்களது பங்களிப்பை ஒப்புக்
கொள்கிறார். சமூக, அரசியல், கலாச்சார ரீதியாக
இந்த புத்தகம் எந்த வகையில் ஒற்றுமையை குலைக்கிறது
என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிகழ்வை ரத்து செய்ததன் மூலம் கலாஷேத்ரா தனது
சமூக வண்ணத்தைக் காட்டிக்கொண்டுள்ளது”
என்று
கூறியுள்ளார்.
-
தமிழ் சமயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Empty Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

Post by ayyasamy ram Sun Feb 02, 2020 8:42 am

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
---
டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு 220px-Rukmini_Devi
-

கலாசேத்திரா (Kalakshetra) என்பது இந்தியக் கலையை,
குறிப்பாக பரதநாட்டியம் மற்றும் இசையைப் போற்றி
வளர்க்கும் பொருட்டு 1936 இல் ருக்மிணிதேவி அருண்டேலினால்
ஆரம்பிக்கப்பட்ட ஒரு கவின் கலைக் கல்லூரியாகும்.

ஒரே ஒரு மாணவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கலைக்கல்லூரியில்
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் உலகெங்கணும்
இருந்து இங்கு தங்கி கலை பயில்கின்றார்கள்.

அருண்டேலின் வழிகாட்டலே கலாக்ஷேத்திராவின் வளர்ச்சிக்கு
முக்கிய காரணியாக விளங்கியது.

1962 இலிருந்து கலாசேத்திரா சென்னையில் திருவான்மியூரில்
புதிய வளாகத்தில் இயங்கத்தொடங்கியது.

1993 இல், இந்திய நாடாளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட
ஒரு தீர்மானத்தின் படி கலாசேத்திரா இந்தியாவின்
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனமாக
அங்கீகரிக்கப்பட்டது
-
-------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83989
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Empty Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

Post by Guest Sun Feb 02, 2020 1:54 pm

"இது ஒரு அரசு நிறுவனமாக
இருப்பதால் அரசியல் ரீதியாக, கலாச்சார ரீதியாக, சமூக
ரீதியாக ஒற்றுமையைக் குலைக்கும் எந்த நிகழ்வையும் இங்கே
அனுமதிக்க முடியாது.

இந்த நிகழ்வை ரத்து செய்ததன் மூலம் கலாஷேத்ரா தனது
சமூக வண்ணத்தைக் காட்டிக்கொண்டுள்ளது”

O my கடவுளே!
avatar
Guest
Guest


Back to top Go down

டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு Empty Re: டிஎம் கிருஷ்ணா எழுதிய மிருதங்கம் செய்வோர் பற்றிய நூல் வெளியீடு: கலாக்ஷேத்ராவில் அனுமதி மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum